சந்தேகம்
2:2 ذٰ لِكَ الْڪِتٰبُ لَا رَيْبَۛ فِيْهِۛ هُدًى لِّلْمُتَّقِيْنَۙ
2:2. இது வேதமாகும்; இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை; இறையச்சமுடையோருக்கு நேர்வழி காட்டும்.
2:23 وَاِنْ کُنْتُمْ فِىْ رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلٰى عَبْدِنَا فَاْتُوْا بِسُوْرَةٍ مِّنْ مِّثْلِهٖ وَادْعُوْا شُهَدَآءَكُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ
2:23. இன்னும், (முஹம்மது என்னும்) நம் அடியாருக்கு நாம் அருளியுள்ள (வேதத்)தில் நீங்கள் சந்தேகம் உடையவர்களாக இருப்பீர்களானால், (அந்த சந்தேகத்தில்) உண்மையாளர்களாகவும் இருப்பீர்களானால் அல்லாஹ்வைத் தவிர உங்கள் உதவியாளர்களை அழைத்து இது போன்ற ஓர் அத்தியாயமேனும் கொண்டு வாருங்கள்.
2:147 اَلْحَـقُّ مِنْ رَّبِّكَ فَلَا تَكُوْنَنَّ مِنَ الْمُمْتَرِيْنَ
2:147. (கிப்லாவைப் பற்றிய) இவ்வுண்மை உம் இறைவனிடமிருந்துள்ளதாகும்; ஆகவே, (அதனைச்) சந்தேகிப்போரில் ஒருவராக நீர் ஆகிவிட வேண்டாம்.
2:282 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا تَدَايَنْتُمْ بِدَيْنٍ اِلٰٓى اَجَلٍ مُّسَمًّى فَاكْتُبُوْهُ ؕ وَلْيَكْتُبْ بَّيْنَكُمْ كَاتِبٌۢ بِالْعَدْلِ وَلَا يَاْبَ كَاتِبٌ اَنْ يَّكْتُبَ كَمَا عَلَّمَهُ اللّٰهُ فَلْيَكْتُبْ ۚوَلْيُمْلِلِ الَّذِىْ عَلَيْهِ الْحَـقُّ وَلْيَتَّقِ اللّٰهَ رَبَّهٗ وَلَا يَبْخَسْ مِنْهُ شَيْئًا ؕ فَاِنْ كَانَ الَّذِىْ عَلَيْهِ الْحَـقُّ سَفِيْهًا اَوْ ضَعِيْفًا اَوْ لَا يَسْتَطِيْعُ اَنْ يُّمِلَّ هُوَ فَلْيُمْلِلْ وَلِيُّهٗ بِالْعَدْلِؕ وَاسْتَشْهِدُوْا شَهِيْدَيْنِ مِنْ رِّجَالِكُمْۚ فَاِنْ لَّمْ يَكُوْنَا رَجُلَيْنِ فَرَجُلٌ وَّامْرَاَتٰنِ مِمَّنْ تَرْضَوْنَ مِنَ الشُّهَدَآءِ اَنْ تَضِلَّ اِحْدٰٮهُمَا فَتُذَكِّرَ اِحْدٰٮهُمَا الْاُخْرٰىؕ وَ لَا يَاْبَ الشُّهَدَآءُ اِذَا مَا دُعُوْا ؕ وَلَا تَسْــٴَــمُوْۤا اَنْ تَكْتُبُوْهُ صَغِيْرًا اَوْ كَبِيْرًا اِلٰٓى اَجَلِهٖؕ ذٰ لِكُمْ اَقْسَطُ عِنْدَ اللّٰهِ وَاَقْوَمُ لِلشَّهَادَةِ وَاَدْنٰۤى اَلَّا تَرْتَابُوْٓا اِلَّاۤ اَنْ تَكُوْنَ تِجَارَةً حَاضِرَةً تُدِيْرُوْنَهَا بَيْنَكُمْ فَلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ اَلَّا تَكْتُبُوْهَا ؕ وَاَشْهِدُوْۤا اِذَا تَبَايَعْتُمْ وَلَا يُضَآرَّ كَاتِبٌ وَّلَا شَهِيْدٌ ؕ وَاِنْ تَفْعَلُوْا فَاِنَّهٗ فُسُوْقٌ ۢ بِكُمْ ؕ وَ اتَّقُوا اللّٰهَ ؕ وَيُعَلِّمُكُمُ اللّٰهُ ؕ وَاللّٰهُ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ
2:282. நம்பிக்கை கொண்டோரே! ஒரு குறிப்பிட்ட தவணையின் மீது உங்களுக்குள் கடன் கொடுக்கல் வாங்கல் செய்துகொண்டால், அதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள்; எழுதுபவன் உங்களிடையே நீதியுடன் எழுதட்டும்; எழுதுபவன் எழுதுவதற்கு மறுக்கக்கூடாது; (நீதமாக எழுதுமாறு) அல்லாஹ் அவனுக்குக் கற்றுக்கொடுத்தபடி அவன் எழுதட்டும்; இன்னும், யார் மீது (திருப்பிக் கொடுக்கவேண்டிய கடன்) பொறுப்பு இருக்கிறதோ அவனே (பத்திரத்தின்) வாசகத்தைச் சொல்லட்டும்; அவன் தனது இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளட்டும்; மேலும், அ(வன் வாங்கிய)தில் எதையும் குறைத்துவிடக்கூடாது; இன்னும், யார் மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண்டிய) பொறுப்பு இருக்கிறதோ அவன் அறிவு குறைந்தவனாகவோ, அல்லது பலவீனனாகவோ, அல்லது வாசகத்தைக் கூற இயலாதவனாகவோ இருப்பின் அவனுடைய பொறுப்பாளர் நீதமாக வாசகங்களைச் சொல்லட்டும்; தவிர, (நீங்கள் சாட்சியாக ஏற்கக்கூடிய) உங்கள் ஆண்களில் இருவரை சாட்சிகளாக்கிக் கொள்ளுங்கள்; ஆண்கள் இருவர் கிடைக்காவிட்டால், சாட்சிகளில் நீங்கள் பொருந்தக் கூடியவர்களிலிருந்து ஆடவர் ஒருவரையும், பெண்கள் இருவரையும் சாட்சிகளாக எடுத்துக்கொள்ளுங்கள்; (பெண்கள் இருவர்) ஏனென்றால், அவ்விருவரில் ஒருத்தி மறந்து விட்டால், இருவரில் மற்றவள் நினைவூட்டும் பொருட்டேயாகும்; அன்றியும், (சாட்சியம் கூற) சாட்சிகள் அழைக்கப்பட்டால் அவர்கள் மறுக்கலாகாது; தவிர, (கொடுக்கல், வாங்கல்) சிறிதோ, பெரிதோ அதை, அதன் காலவரையறையுடன் எழுதுவதில் அலட்சியமாக இருக்காதீர்கள்; இதுவே அல்லாஹ்விடம் மிகவும் நீதமானதாகும்; சாட்சியத்திற்கு உறுதியுண்டாக்குவதற்காகவும், இன்னும் இது உங்களுக்கு சந்தேகங்கள் ஏற்படாமல் இருக்க சிறந்த வழியாகவும் இருக்கும்; எனினும், உங்களுக்கிடையே உடனுக்குடன் நடைபெறும் வியாபாரமாக இருந்தால் தவிர அதை எழுதிக் கொள்ளாமல் இருப்பது உங்கள்மீது குற்றமில்லை; ஆனால், (அவ்வாறு) நீங்கள் வியாபாரம் செய்யும் போதும் சாட்சிகளை வைத்துக்கொள்ளுங்கள்-- அன்றியும் எழுதுபவனுக்கும், சாட்சிக்கும் (உங்களுக்கு சாதகமாக இருப்பதற்காகவோ, வேறு காரணத்திற்காகவோ) எவ்வித இடையூறும் அளிக்கப்படக்கூடாது; நீங்கள் அப்படிச் செய்வீர்களாயின் அது உங்கள்மீது நிச்சயமாக பாவமாகும்: அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்: அல்லாஹ்தான் உங்களுக்கு (நேரிய இவ்விதி முறைகளைக்) கற்றுக்கொடுக்கின்றான்; தவிர, அல்லாஹ்வே எல்லாப்பொருட்களையும் பற்றி நன்கறிபவன்.
3:25 فَكَيْفَ اِذَا جَمَعْنٰهُمْ لِيَوْمٍ لَّا رَيْبَ فِيْهِ وَوُفِّيَتْ كُلُّ نَفْسٍ مَّا كَسَبَتْ وَهُمْ لَا يُظْلَمُوْنَ
3:25. எவ்வித சந்தேகமுமில்லாத அந்த (இறுதி) நாளில் அவர்களை நாம் ஒன்று சேர்த்து, ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அது சம்பாதித்ததற்கு உரியதை முழுமையாகக் கொடுக்கப்படும்போது, (அவர்களுடைய நிலை) எப்படியிருக்கும்? அவர்கள் அநியாயம் செய்யப்படமாட்டார்கள்.
3:154 ثُمَّ اَنْزَلَ عَلَيْكُمْ مِّنْۢ بَعْدِ الْغَمِّ اَمَنَةً نُّعَاسًا يَّغْشٰى طَآٮِٕفَةً مِّنْكُمْۙ وَطَآٮِٕفَةٌ قَدْ اَهَمَّتْهُمْ اَنْفُسُهُمْ يَظُنُّوْنَ بِاللّٰهِ غَيْرَ الْحَـقِّ ظَنَّ الْجَـاهِلِيَّةِؕ يَقُوْلُوْنَ هَلْ لَّنَا مِنَ الْاَمْرِ مِنْ شَىْءٍؕ قُلْ اِنَّ الْاَمْرَ كُلَّهٗ لِلّٰهِؕ يُخْفُوْنَ فِىْۤ اَنْفُسِهِمْ مَّا لَا يُبْدُوْنَ لَكَؕ يَقُوْلُوْنَ لَوْ كَانَ لَنَا مِنَ الْاَمْرِ شَىْءٌ مَّا قُتِلْنَا هٰهُنَا ؕ قُلْ لَّوْ كُنْتُمْ فِىْ بُيُوْتِكُمْ لَبَرَزَ الَّذِيْنَ كُتِبَ عَلَيْهِمُ الْقَتْلُ اِلٰى مَضَاجِعِهِمْۚ وَلِيَبْتَلِىَ اللّٰهُ مَا فِىْ صُدُوْرِكُمْ وَلِيُمَحِّصَ مَا فِىْ قُلُوْبِكُمْؕ وَاللّٰهُ عَلِيْمٌۢ بِذَاتِ الصُّدُوْرِ
3:154. பிறகு, அத்துக்கத்திற்குப் பின் அவன் உங்களுக்கு அமைதி அளிப்பதற்காக, சிறு தூக்கத்தை இறக்கிவைத்தான்; உங்களில் ஒரு பிரிவினரை அது சூழ்ந்துகொண்டது; மற்றொரு கூட்டத்தினரோ - அவர்களுடைய மனங்கள் அவர்களுக்கு கவலையை உண்டு பண்ணிவிட்டன; அவர்கள் அறியாமைக்கால எண்ணம் போன்று, உண்மைக்கு மாறாக அல்லாஹ்வைப் பற்றி சந்தேகம் கொள்ளலாயினர்; (அதனால்,) அவர்கள் கூறினார்கள்: "இ(ப்போர்)க் காரியத்தில் நமக்கு சாதகமாக ஏதேனும் உண்டா?" (என்று, அதற்கு) "நிச்சயமாக இக்காரியம் முழுவதும் அல்லாஹ்வுக்கே உரியது" என்று (நபியே!) நீர் கூறுவீராக! அவர்கள் உம்மிடம் வெளிப்படையாகக் கூற முடியாத ஒன்றைத் தம் நெஞ்சங்களில் மறைத்துவைத்திருக்கின்றனர்; அவர்கள் (தமக்குள்) கூறிக்கொள்கிறார்கள்: "இக்காரியத்தில் நமக்கு ஏதேனும் சாதகமாக இருந்திருந்தால், நாம் இங்கு கொல்லப்பட்டு இருக்கமாட்டோம்!" "நீங்கள் உங்கள் வீடுகளில் இருந்திருந்தாலும், எவர் விஷயத்தில் கொல்லப்படுவது விதிக்கப்பட்டுவிட்டதோ அவர்கள் தாம் கொல்லப்படும் இடத்திற்கு வந்தே இருப்பார்கள்!" என்று (நபியே) நீர் கூறும்; (இவ்வாறு ஏற்பட்டது) உங்கள் நெஞ்சங்களிலுள்ளவற்றை அல்லாஹ் சோதிப்பதற்காகவும், உங்கள் இதயங்களில் உள்ளவற்றை (அகற்றிச்) சுத்தப்படுத்துவதற்காகவும் (ஆகும்); இன்னும், அல்லாஹ் உள்ளங்களில் உள்ளவற்றை அறிபவன்.
4:87 اللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَؕ لَيَجْمَعَنَّكُمْ اِلٰى يَوْمِ الْقِيٰمَةِ لَا رَيْبَ فِيْهِؕ وَمَنْ اَصْدَقُ مِنَ اللّٰهِ حَدِيْثًا
4:87. அல்லாஹ் - அவனைத் தவிர (வணக்கத்திற்குரியவன்) வேறு கடவுள் இல்லை; நிச்சயமாக உங்கள் அனைவரையும் மறுமை நாளில் அவன் ஒன்று சேர்ப்பான் - இதில் சந்தேகமில்லை; மேலும், அல்லாஹ்வை விட சொல்லில் மிக்க உண்மையாளன் யார்?
4:157 وَّقَوْلِهِمْ اِنَّا قَتَلْنَا الْمَسِيْحَ عِيْسَى ابْنَ مَرْيَمَ رَسُوْلَ اللّٰهِ ۚ وَمَا قَتَلُوْهُ وَمَا صَلَبُوْهُ وَلٰـكِنْ شُبِّهَ لَهُمْ ؕ وَاِنَّ الَّذِيْنَ اخْتَلَـفُوْا فِيْهِ لَفِىْ شَكٍّ مِّنْهُ ؕ مَا لَهُمْ بِهٖ مِنْ عِلْمٍ اِلَّا اتِّبَاعَ الظَّنِّ ۚ وَمَا قَتَلُوْهُ يَقِيْنًا ۢ ۙ
4:157. இன்னும், "நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரர் ஈஸா மஸீஹை நாங்கள் கொன்றுவிட்டோம்" என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்); அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை; அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை; ஆனால், அவர்களுக்கு (அவரைப்போன்ற) ஒருவர் ஒப்பாக்கப்பட்டார்; மேலும், இ(வ்விஷயத்)தில் அபிப்பிராயபேதம் கொண்டவர்கள் அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள்; வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது; மேலும், உறுதியாக அவர்கள் அவரைக் கொல்லவே இல்லை.
6:2 هُوَ الَّذِىْ خَلَقَكُمْ مِّنْ طِيْنٍ ثُمَّ قَضٰۤى اَجَلًا ؕ وَاَجَلٌ مُّسَمًّى عِنْدَهٗ ثُمَّ اَنْـتُمْ تَمْتَرُوْنَ
6:2. அவன்தான் உங்களைக் களிமண்ணிலிருந்து படைத்துப் பின்னர், (உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட) தவணையையும் நிர்ணயம் செய்துள்ளான்; இன்னும், (உங்களைக் கேள்வி-கணக்கிற்கு எழுப்புவதற்காக) குறிக்கப்பட்ட தவணையும் அவனிடமே உள்ளது; பின்னரும் நீங்கள் சந்தேகப்படுகிறீர்கள்.
6:12 قُلْ لِّمَنْ مَّا فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِؕ قُلْ لِّلّٰهِؕ كَتَبَ عَلٰى نَفْسِهِ الرَّحْمَةَ ؕ لَيَجْمَعَنَّكُمْ اِلٰى يَوْمِ الْقِيٰمَةِ لَا رَيْبَ فِيْهِ ؕ اَلَّذِيْنَ خَسِرُوْۤا اَنْفُسَهُمْ فَهُمْ لَا يُؤْمِنُوْنَ
6:12. "வானங்களிலும், பூமியிலுமுள்ளவை யாருக்குச் சொந்தம்?" என்று (நபியே!) நீர் அவர்களைக் கேளும்; (அவர்கள் என்ன பதில் கூற முடியும்? எனவே,) "எல்லாம் அல்லாஹ்வுக்கே சொந்தம்!" என்று கூறுவீராக! அவன் தன் மீது கருணையை கடமையாக்கிக் கொண்டான்; நிச்சயமாக மறுமை நாளில் உங்களையெல்லாம் அவன் ஒன்று சேர்ப்பான்; இதில் எவ்வித சந்தேகமும் இல்லை; எவர்கள் தமக்குத்தாமே நஷ்டத்தை உண்டு பண்ணிக் கொண்டார்களோ, அவர்கள் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள்.
6:114 اَفَغَيْرَ اللّٰهِ اَبْتَغِىْ حَكَمًا وَّهُوَ الَّذِىْۤ اَنْزَلَ اِلَيْكُمُ الْـكِتٰبَ مُفَصَّلاً ؕ وَالَّذِيْنَ اٰتَيْنٰهُمُ الْـكِتٰبَ يَعْلَمُوْنَ اَنَّهٗ مُنَزَّلٌ مِّنْ رَّبِّكَ بِالْحَـقِّ فَلَا تَكُوْنَنَّ مِنَ الْمُمْتَرِيْنَ
6:114. (நபியே! நீர் கூறும்): அல்லாஹ் அல்லாதவனையா (தீர்ப்பளிக்கும்) நீதிபதியாக நான் தேடுவேன்? அவன்தான் உங்களுக்கு வேதத்தை தெளிவுபடுத்தப்பட்டதாக இறக்கியுள்ளான்; எவர்களுக்கு நாம் வேதத்தைக் கொடுத்திருக்கின்றோமோ அவர்கள் நிச்சயமாக இது (குர்ஆன்) உம்முடைய இறைவனிடமிருந்து உண்மையைக் கொண்டு இறக்கப்பட்டுள்ளது என்பதை அறிவார்கள்; எனவே, நீர் சந்தேகம் கொள்பவர்களில் ஒருவராகிவிடாதீர்.
9:45 اِنَّمَا يَسْتَاْذِنُكَ الَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ وَارْتَابَتْ قُلُوْبُهُمْ فَهُمْ فِىْ رَيْبِهِمْ يَتَرَدَّدُوْنَ
9:45. (போரில் கலந்து கொள்ளாதிருக்க) உம்மிடம் அனுமதி கேட்பவர்கள் எல்லாம் அல்லாஹ்வின் மீதும், இறுதிநாள் மீதும் நம்பிக்கை கொள்ளாதவர்கள்தாம்; அவர்களுடைய இதயங்கள் சந்தேகத்தில் ஆழ்ந்துவிட்டன; ஆகவே, அவர்கள் தம் சந்தேகத்திலேயே தடுமாறிக்கொண்டிருக்கின்றனர்.
10:37 وَمَا كَانَ هٰذَا الْقُرْاٰنُ اَنْ يُّفْتَـرٰى مِنْ دُوْنِ اللّٰهِ وَلٰـكِنْ تَصْدِيْقَ الَّذِىْ بَيْنَ يَدَيْهِ وَتَفْصِيْلَ الْكِتٰبِ لَا رَيْبَ فِيْهِ مِنْ رَّبِّ الْعٰلَمِيْنَ
10:37. இந்தக் குர்ஆன் அல்லாஹ் அல்லாதவர்களிடமிருந்து கற்பனை செய்யப்பட்டதன்று; (அல்லாஹ்வே அதை அருளினான்;) அன்றியும், அது முன்னர் (அருளப்பட்டு) உள்ளதை மெய்ப்படுத்துவதாகவும், வேதத்தை விவரிப்பதாகவும் இருக்கிறது; (ஆகவே,) அகிலத்தாரின் இறைவனிடமிருந்துள்ள இதில் எவ்வித சந்தேகமுமில்லை.
10:94 فَاِنْ كُنْتَ فِىْ شَكٍّ مِّمَّاۤ اَنْزَلْنَاۤ اِلَيْكَ فَسْــٴَــلِ الَّذِيْنَ يَقْرَءُوْنَ الْكِتٰبَ مِنْ قَبْلِكَۚ لَقَدْ جَآءَكَ الْحَقُّ مِنْ رَّبِّكَ فَلَا تَكُوْنَنَّ مِنَ الْمُمْتَرِيْنَۙ
10:94. (நபியே) நாம் உம்மீது இறக்கியுள்ள (வேதத்)தில் சந்தேகம் கொள்வீராயின், உமக்கு முன்னர் உள்ள வேதத்தை ஓதுகிறார்களே அவர்களிடம் கேட்டுப்பார்ப்பீராக! நிச்சயமாக உம் இறைவனிடமிருந்து உமக்குச் சத்திய (வேத)ம் வந்துள்ளது - எனவே, சந்தேகம் கொள்பவர்களில் நீர் திண்ணமாக ஆகிவிடவேண்டாம்.
10:104 قُلْ يٰۤاَيُّهَا النَّاسُ اِنْ كُنْتُمْ فِىْ شَكٍّ مِّنْ دِيْنِىْ فَلَاۤ اَعْبُدُ الَّذِيْنَ تَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ وَلٰـكِنْ اَعْبُدُ اللّٰهَ الَّذِىْ يَتَوَفّٰٮكُمْ ۖۚ وَاُمِرْتُ اَنْ اَكُوْنَ مِنَ الْمُؤْمِنِيْنَۙ
10:104. "மனிதர்களே! நீங்கள் என் மார்க்கத்தில் சந்தேகம் கொண்டிருந்தால், அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குபவர்களை நான் வணங்கமாட்டேன்; ஆனால் உங்க(ளுடைய உயிர்க)ளைக் கைப்பற்றும் அல்லாஹ்வையே நான் வணங்குகிறேன்; நான் நம்பிக்கையாளர்களில் ஒருவனாக இருக்குமாறு ஏவப்பட்டுள்ளேன்" என்று (நபியே!) நீர் கூறுவீராக!
11:17 اَفَمَنْ كَانَ عَلٰى بَيِّنَةٍ مِّنْ رَّبِّهٖ وَيَتْلُوْهُ شَاهِدٌ مِّنْهُ وَمِنْ قَبْلِهٖ كِتٰبُ مُوْسٰٓى اِمَامًا وَّرَحْمَةً ؕ اُولٰٓٮِٕكَ يُؤْمِنُوْنَ بِهٖ ؕ وَمَنْ يَّكْفُرْ بِهٖ مِنَ الْاَحْزَابِ فَالنَّارُ مَوْعِدُهٗ ۚ فَلَا تَكُ فِىْ مِرْيَةٍ مِّنْهُ اِنَّهُ الْحَـقُّ مِنْ رَّبِّكَ وَلٰـكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا يُؤْمِنُوْنَ
11:17. தன்னுடைய இறைவனிடமிருந்துள்ள (குர்ஆன் எனும்) தெளிவான ஆதாரத்தின்மீது இருந்து, அவனிலிருந்து (-இறைவனிடமிருந்து அதனை மெய்ப்பிக்கும்) சாட்சியும் அதனைத் தொடர, இன்னும், (குர்ஆனாகிய) அதற்கு முன்னால் உள்ள மூஸாவுடைய வேதம் வழிகாட்டியாகவும், அருளாகவும் கிடைக்கப் பெற்றிருக்கும் ஒருவரா (இவை கிடைக்கப் பெறாதவருக்குச் சமமாவார்? 'இல்லை'); அவர்கள்தான் இதனை நம்புவார்கள்: ஆனால், (இக்)கூட்டத்தார்களில் எவர் இதை நிராகரிக்கிறாரோ அவருக்கு வாக்களிக்கப்பட்டுள்ள இடம் (நரக)நெருப்பேயாகும்; ஆதலால், (நபியே!) இதைப் பற்றி நீர் சந்தேகத்திலிருக்கவேண்டாம்; இ(வ்வேதமான)து நிச்சயமாக உம் இறைவனிடமிருந்து வந்த உண்மையாகும்; எனினும், மனிதர்களில் பெரும்பாலோர் நம்பிக்கை கொள்வதில்லை.
11:22 لَا جَرَمَ اَ نَّهُمْ فِى الْاٰخِرَةِ هُمُ الْاَخْسَرُوْنَ
11:22. நிச்சயமாக இவர்கள் மறுமையில் பெரும் நஷ்டமடைந்தவர்களாக இருப்பார்கள் என்பதில் (சிறிதும்) சந்தேகமில்லை.
11:62 قَالُوْا يٰصٰلِحُ قَدْ كُنْتَ فِيْنَا مَرْجُوًّا قَبْلَ هٰذَآ اَتَـنْهٰٮنَاۤ اَنْ نَّـعْبُدَ مَا يَعْبُدُ اٰبَآؤُنَا وَاِنَّنَا لَفِىْ شَكٍّ مِّمَّا تَدْعُوْنَاۤ اِلَيْهِ مُرِيْبٍ
11:62. அதற்கு அவர்கள், "ஸாலிஹே! இதற்கு முன்னரெல்லாம் நீர் எங்களிடையே நம்பிக்கைக்குரியவராக இருந்தீர்; எங்களுடைய மூதாதையர்கள் எதை வணங்கினார்களோ அதை வணங்குவதை விட்டும் எங்களைத் தடுக்கின்றீரா? மேலும், நீர் எங்களை எதன் பக்கம் அழைக்கிறீரோ அதைப் பற்றி நிச்சயமாக நாங்கள் பெரும் சந்தேகத்தில் இருக்கிறோம்" என்று கூறினார்கள்.
11:109 فَلَا تَكُ فِىْ مِرْيَةٍ مِّمَّا يَعْبُدُ هٰٓؤُلَاۤءِ ؕ مَا يَعْبُدُوْنَ اِلَّا كَمَا يَعْبُدُ اٰبَآؤُهُمْ مِّنْ قَبْلُؕ وَاِنَّا لَمُوَفُّوْهُمْ نَصِيْبَهُمْ غَيْرَ مَنْقُوْصٍ
11:109. (நபியே!) இவர்கள் வணங்குபவை பற்றி நீர் சந்தேகத்தில் இருக்க வேண்டாம்: (இவர்களுக்கு) முன்னர் இவர்களுடைய மூதாதையர் வணங்கி வந்த பிரகாரமேதான் இவர்களும் வணங்குகிறார்கள்; நிச்சயமாக (தண்டனைக்குரிய) இவர்களின் பங்கைக் குறைவின்றி, முழுமையாக நாம் இவர்களுக்குக் கொடுக்கக்கூடியவர்கள்.
11:110 وَلَقَدْ اٰتَيْنَا مُوْسَى الْكِتٰبَ فَاخْتُلِفَ فِيْهِ ؕ وَ لَوْلَا كَلِمَةٌ سَبَقَتْ مِنْ رَّبِّكَ لَـقُضِىَ بَيْنَهُمْ ؕ وَاِنَّهُمْ لَفِىْ شَكٍّ مِّنْهُ مُرِيْبٍ
11:110. நிச்சயமாக நாம் மூஸாவுக்கு வேதத்தைக் கொடுத்தோம்; அதில் கருத்து வேறுபாடு கொள்ளப்பட்டது; உமது இறைவனிடமிருந்து வாக்கு முந்தியிருக்காவிட்டால் இவர்கள் மத்தியிலே முடிவு செய்யப்பட்டிருக்கும்; நிச்சயமாக இவர்கள் இதை (குர்ஆனை)ப் பற்றி பெரும் சந்தேகத்திலேயே இருக்கின்றனர்.
14:9 اَلَمْ يَاْتِكُمْ نَبَـؤُا الَّذِيْنَ مِنْ قَبْلِكُمْ قَوْمِ نُوْحٍ وَّعَادٍ وَّثَمُوْدَ ۛؕ وَالَّذِيْنَ مِنْۢ بَعْدِهِمْ ۛؕ لَا يَعْلَمُهُمْ اِلَّا اللّٰهُؕ جَآءَتْهُمْ رُسُلُهُمْ بِالْبَيِّنٰتِ فَرَدُّوْۤا اَيْدِيَهُمْ فِىْۤ اَفْوَاهِهِمْ وَقَالُوْۤا اِنَّا كَفَرْنَا بِمَاۤ اُرْسِلْـتُمْ بِهٖ وَاِنَّا لَفِىْ شَكٍّ مِّمَّا تَدْعُوْنَـنَاۤ اِلَيْهِ مُرِيْبٍ
14:9. உங்களுக்குமுன் சென்றுபோன நூஹ், ஆது, ஸமூது போன்ற சமூகத்தாரின் செய்தியும் அவர்களுக்குப்பின் வந்தவர்களுடைய செய்தியும் உங்களுக்கு வரவில்லையா? அவர்களை அல்லாஹ்வைத் தவிர (வேறு) எவரும் அறியார்; அவர்களிடத்தில் (அல்லாஹ் அனுப்பிய) அவர்களுடைய தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டுவந்தார்கள்; தங்கள் கைகளை தங்கள் வாய்களின் பக்கம் கொண்டுசென்று, "நீங்கள் எதைக்கொண்டு அனுப்பப்பட்டிருக்கின்றீர்களோ அ(த்தூ)தை நிச்சயமாக நாங்கள் நிராகரிக்கின்றோம்; அன்றியும், நீங்கள் எங்களை எதன்பால் அழைக்கிறீர்களோ, அதைப்பற்றியும் நாங்கள் பெரும் சந்தேகத்தில் இருக்கின்றோம்" என்று கூறினார்கள்.
14:10 قَالَتْ رُسُلُهُمْ اَفِى اللّٰهِ شَكٌّ فَاطِرِ السَّمٰوٰتِ وَالْاَرْضِؕ يَدْعُوْكُمْ لِيَـغْفِرَ لَـكُمْ مِّنْ ذُنُوْبِكُمْ وَيُؤَخِّرَكُمْ اِلٰٓى اَجَلٍ مُّسَمًّىؕ قَالُوْۤا اِنْ اَنْتُمْ اِلَّا بَشَرٌ مِّثْلُنَاؕ تُرِيْدُوْنَ اَنْ تَصُدُّوْنَا عَمَّا كَانَ يَعْبُدُ اٰبَآؤُنَا فَاْتُوْنَا بِسُلْطٰنٍ مُّبِيْنٍ
14:10. அதற்கு அவர்களுடைய தூதர்கள், "வானங்களையும் பூமியையும் படைத்த அல்லாஹ்வைப் பற்றியா (உங்களுக்கு) சந்தேகம்? அவன் உங்களுடைய பாவங்களை மன்னிப்பதற்காக உங்களை அழைக்கின்றான்; (அத்துடன்) ஒரு குறிப்பிட்ட தவணை வரை உங்களுக்கு (உலகில்) அவகாசம் அளிக்கவும் (அழைக்கின்றான்)" என்று கூறினார்கள். (அப்போது) அவர்கள், "நீங்கள் எங்களைப் போன்ற மனிதர்களே அன்றி (வேறு) இல்லை; எங்களுடைய மூதாதையர்கள் வணங்கிக் கொண்டிருந்தவற்றை விட்டும் எங்களைத் தடுத்துவிட நீங்கள் விரும்புகிறீர்கள்? அப்படியானால், எங்களுக்குத் தெளிவான ஆதாரத்தைக் கொண்டு வாருங்கள்" எனக் கூறினார்கள்.
16:23 لَا جَرَمَ اَنَّ اللّٰهَ يَعْلَمُ مَا يُسِرُّوْنَ وَمَا يُعْلِنُوْنَؕ اِنَّهٗ لَا يُحِبُّ الْمُسْتَكْبِرِيْنَ
16:23. சந்தேகமின்றி அல்லாஹ், அவர்கள் மறைத்து வைத்திருப்பதையும், அவர்கள் பகிரங்கப்படுத்துவதையும் நிச்சயமாக அறிவான்; (ஆணவம் கொண்டு) பெருமையடிப்பவர்களை அவன் நிச்சயமாக நேசிப்பதில்லை.
16:62 وَيَجْعَلُوْنَ لِلّٰهِ مَا يَكْرَهُوْنَ وَتَصِفُ اَلْسِنَـتُهُمُ الْـكَذِبَ اَنَّ لَهُمُ الْحُسْنٰىؕ لَا جَرَمَ اَنَّ لَهُمُ النَّارَ وَ اَنَّهُمْ مُّفْرَطُوْنَ
16:62. இன்னும், தாங்கள் விரும்பாதவைகளை (பெண் மக்களை) அல்லாஹ்வுக்கு உண்டென்று (கற்பனையாக) ஏற்படுத்துகிறார்கள்; நிச்சயமாகத் தங்களுக்கு (இதனால்) நன்மையே கிட்டுமென அவர்களுடைய நாவுகள் பொய்யுரைக்கின்றன; நிச்சயமாக அவர்களுக்கு (நரக) நெருப்புதான் இருக்கிறது; இன்னும், நிச்சயமாக அவர்கள் அதில் முற்படுத்தப்படுவார்கள் என்பதிலும் சந்தேகமில்லை.
16:109 لَا جَرَمَ اَنَّهُمْ فِى الْاٰخِرَةِ هُمُ الْخٰسِرُوْنَ
16:109. இவர்கள்தாம் மறுமையில் முற்றிலும் நஷ்டமடைந்தவர்கள் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
17:99 اَوَلَمْ يَرَوْا اَنَّ اللّٰهَ الَّذِىْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ قَادِرٌ عَلٰٓى اَنْ يَّخْلُقَ مِثْلَهُمْ وَجَعَلَ لَهُمْ اَجَلًا لَّا رَيْبَ فِيْهِ ؕ فَاَبَى الظّٰلِمُوْنَ اِلَّا كُفُوْرًا
17:99. நிச்சயமாக வானங்களையும், பூமியையும் படைத்தவனாகிய அல்லாஹ் அவர்களைப் போன்றதைப் படைக்க ஆற்றலுடையவன் என்பதை அவர்கள் அறியவில்லையா? இன்னும், அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தவணையையும் ஏற்படுத்தியிருக்கிறான்; இதில் சந்தேகமில்லை; எனினும், அக்கிரமக்காரர்கள் (இவ்வுண்மையை) நிராகரிக்காமல் இல்லை.
18:21 وَكَذٰلِكَ اَعْثَرْنَا عَلَيْهِمْ لِيَـعْلَمُوْۤا اَنَّ وَعْدَ اللّٰهِ حَقٌّ وَّاَنَّ السَّاعَةَ لَا رَيْبَ فِيْهَا ۚ اِذْ يَتَـنَازَعُوْنَ بَيْنَهُمْ اَمْرَهُمْ فَقَالُوا ابْنُوْا عَلَيْهِمْ بُنْيَانًـا ؕ رَبُّهُمْ اَعْلَمُ بِهِمْؕ قَالَ الَّذِيْنَ غَلَبُوْا عَلٰٓى اَمْرِهِمْ لَـنَـتَّخِذَنَّ عَلَيْهِمْ مَّسْجِدًا
18:21. இன்னும், நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது என்றும், நிச்சயமாக மறுமை வருவதிலும் எவ்வித சந்தேகமுமில்லை என்றும் அவர்கள் அறிந்துகொள்வதற்காகவே, இவ்வாறு அவர்களைப் பற்றிய (விஷயத்)தை வெளியாக்கினோம்; (அப் பட்டணவாசிகளோ) இவர்கள் விஷயத்தில் தங்களுக்கிடையே தர்க்கித்துக் கொண்டிருந்தபோது, "இவர்கள் இருந்த இடத்தின் மீது ஒரு கட்டடத்தைக் கட்டுங்கள்; இவர்களைப் பற்றி இவர்களுடைய இறைவனே நன்கறிவான்" என்றனர். இ(வ்விவாதத்)தில் எவர்களுடைய கருத்து மிகைத்ததோ அவர்கள்: "நிச்சயமாக அவர்கள்மீது ஒரு வழிபாட்டுத் தலத்தை அமைப்போம்" என்று கூறினார்கள்.
19:34 ذٰ لِكَ عِيْسَى ابْنُ مَرْيَمَ ۚ قَوْلَ الْحَـقِّ الَّذِىْ فِيْهِ يَمْتَرُوْنَ
19:34. இவர் தாம் மர்யமுடைய புதல்வர் ஈஸா (ஆவார்): எதைக் குறித்து அவர்கள் சந்தேகம் கொண்டிருக்கிறார்களோ அது பற்றிய உண்மையான சொல் (இதுவே ஆகும்).
22:5 يٰۤـاَيُّهَا النَّاسُ اِنْ كُنْـتُمْ فِىْ رَيْبٍ مِّنَ الْبَـعْثِ فَاِنَّـا خَلَقْنٰكُمْ مِّنْ تُرَابٍ ثُمَّ مِنْ نُّـطْفَةٍ ثُمَّ مِنْ عَلَقَةٍ ثُمَّ مِنْ مُّضْغَةٍ مُّخَلَّقَةٍ وَّغَيْرِ مُخَلَّقَةٍ لِّـنُبَيِّنَ لَـكُمْ ؕ وَنُقِرُّ فِى الْاَرْحَامِ مَا نَشَآءُ اِلٰٓى اَجَلٍ مُّسَمًّى ثُمَّ نُخْرِجُكُمْ طِفْلًا ثُمَّ لِتَبْلُغُوْۤا اَشُدَّكُمْ ۚ وَمِنْكُمْ مَّنْ يُّتَوَفّٰى وَمِنْكُمْ مَّنْ يُّرَدُّ اِلٰٓى اَرْذَلِ الْعُمُرِ لِكَيْلَا يَعْلَمَ مِنْۢ بَعْدِ عِلْمٍ شَيْــٴًـــا ؕ وَتَرَى الْاَرْضَ هَامِدَةً فَاِذَاۤ اَنْزَلْنَا عَلَيْهَا الْمَآءَ اهْتَزَّتْ وَرَبَتْ وَاَنْۢبَـتَتْ مِنْ كُلِّ زَوْجٍۢ بَهِيْجٍ
22:5. மனிதர்களே! (இறுதித் தீர்ப்புக்காக) மீண்டும் எழுப்பப்படுவது பற்றி நீங்கள் சந்தேகத்தில் இருந்தீர்களானால் - (அறிந்து கொள்ளுங்கள்!) நிச்சயமாக உங்களை (முதலில்) மண்ணிலிருந்தும், பின்னர் இந்திரியத்திலிருந்தும், பின்பு இரத்தக்கட்டியிலிருந்தும்; பின்பு உருவாக்கப்பட்டதும், உருவாக்கப்படாததுமான தசைக்கட்டியிலிருந்தும் நாம் படைத்தோம்; உங்களுக்கு விளக்குவதற்காகவே (இதனை விவரிக்கிறோம்); மேலும், நாம் நாடியவற்றை ஒரு குறிப்பிட்ட காலம் வரை கர்ப்பப்பையில் தங்கச் செய்கிறோம்; பின்பு, உங்களைக் குழந்தையாக வெளிப்படுத்துகிறோம்; பின்பு, நீங்கள் உங்கள் வாலிபத்தை அடைகிறீர்கள்; அன்றியும், (இதனிடையில்) உங்களில் சிலர் மரணிப்பவர்களும் இருக்கிறார்கள்; (ஜீவித்து) அறிவுபெற்ற பின்னர் ஒன்றுமே அறியாதவர்களைப் போல் ஆகிவிடக்கூடிய தளர்ந்த வயது வரை விட்டுவைக்கப்படுபவர்களும் இருக்கிறார்கள்; இன்னும், நீங்கள் (தரிசாய்க் கிடக்கும்) வறண்ட பூமியைப் பார்க்கின்றீர்கள்; அதன் மீது நாம் (மழை) நீரைப் பெய்யச் செய்வோமானால் அது பசுமையாகி, வளர்ந்து, அழகான (ஜோடி ஜோடியாகப்) பல்வகைப் புற்பூண்டுகளை முளைப்பிக்கிறது.
22:7 وَّاَنَّ السَّاعَةَ اٰتِيَةٌ لَّا رَيْبَ فِيْهَا ۙ وَاَنَّ اللّٰهَ يَـبْعَثُ مَنْ فِى الْقُبُوْرِ
22:7. (மறுமைநாளுக்குரிய) அவ்வேளை நிச்சயமாக வரும்; இதில் சந்தேகமே இல்லை; சமாதிகளில் இருப்போரை நிச்சயமாக அல்லாஹ் (உயிர் கொடுத்து) எழுப்புவான்.
22:55 وَلَا يَزَالُ الَّذِيْنَ كَفَرُوْا فِىْ مِرْيَةٍ مِّنْهُ حَتّٰى تَاْتِيَهُمُ السَّاعَةُ بَغْتَةً اَوْ يَاْتِيَهُمْ عَذَابُ يَوْمٍ عَقِيْمٍ
22:55. நிராகரித்தவர்கள் மறுமை நாள் திடீரென அவர்களிடம் வரும் வரை, அல்லது மலட்டு நாளின் வேதனை அவர்களிடம் வரும் வரை அதுபற்றி சந்தேகத்திலேயே நிலைத்திருப்பார்கள்.
24:50 اَفِىْ قُلُوْبِهِمْ مَّرَضٌ اَمِ ارْتَابُوْۤا اَمْ يَخَافُوْنَ اَنْ يَّحِيْفَ اللّٰهُ عَلَيْهِمْ وَرَسُوْلُهٗؕ بَلْ اُولٰٓٮِٕكَ هُمُ الظّٰلِمُوْنَ
24:50. அவர்களுடைய இதயங்களில் நோய் இருக்கிறதா? அல்லது (அவரைப் பற்றி) அவர்கள் சந்தேகப்படுகிறார்களா? அல்லது அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் தங்களுக்கு அநியாயம் செய்வார்கள் என்று அஞ்சுகிறார்களா? அல்ல! அவர்களே அநியாயக்காரர்கள்.
27:66 بَلِ ادّٰرَكَ عِلْمُهُمْ فِى الْاٰخِرَةِ بَلْ هُمْ فِىْ شَكٍّ مِّنْهَا بَلْ هُمْ مِّنْهَا عَمُوْنَ
27:66. ஆனால், மறுமையைப் பற்றிய அவர்களுடைய அறிவோ முடிவுபெற்றுவிட்டது; அவர்கள் அதில் (பின்னும்) சந்தேகத்திலேயே இருக்கின்றனர்; அதுமட்டுமா? அதைப்பற்றி அவர்கள் குருடர்களாகவே இருக்கின்றனர்.
32:2 تَنْزِيْلُ الْكِتٰبِ لَا رَيْبَ فِيْهِ مِنْ رَّبِّ الْعٰلَمِيْنَؕ
32:2. அகிலத்தாரின் இறைவனிடம் இருந்து (இவ்) வேதம் அருளப்பட்டுள்ளது; இதில் எவ்வித சந்தேகமுமில்லை.
32:23 وَلَقَدْ اٰتَيْنَا مُوْسَى الْكِتٰبَ فَلَا تَكُنْ فِىْ مِرْيَةٍ مِّنْ لِّقَآٮِٕهٖ وَجَعَلْنٰهُ هُدًى لِّبَنِىْۤ اِسْرَآءِيْلَۚ
32:23. நிச்சயமாக நாம் மூஸாவுக்கு (அவ்) வேதத்தைக் கொடுத்தோம்; எனவே, (நபியே!) அவர் அதைப் பெற்றதைப் பற்றி நீர் சந்தேகப்படாதீர்; நாம் அதனை இஸ்ராயீலின் சந்ததிக்கு வழிகாட்டியாகவும் ஆக்கினோம்.
34:21 وَمَا كَانَ لَهٗ عَلَيْهِمْ مِّنْ سُلْطٰنٍ اِلَّا لِنَعْلَمَ مَنْ يُّـؤْمِنُ بِالْاٰخِرَةِ مِمَّنْ هُوَ مِنْهَا فِىْ شَكٍّ ؕ وَ رَبُّكَ عَلٰى كُلِّ شَىْءٍ حَفِيْظٌ
34:21. எனினும், அவர்கள்மீது அவனுக்கு யாதோர் அதிகாரமும் இருக்கவில்லை - ஆயினும், மறுமையை நம்புகிறவரை, எவர் (மறுமையை நம்பாது) அ(து வருவ)தைப்பற்றி சந்தேகத்திலிருக்கிறாரோ அவரைவிட்டும் நாம் (பிரித்து) அறி(வித்து விடு)வதற்காகவே (இது நடந்தது); மேலும், உம்முடைய இறைவன் அனைத்துப் பொருட்களையும் பாதுகாப்போனாக இருக்கின்றான்.
34:54 وَحِيْلَ بَيْنَهُمْ وَبَيْنَ مَا يَشْتَهُوْنَ كَمَا فُعِلَ بِاَشْيَاعِهِمْ مِّنْ قَبْلُؕ اِنَّهُمْ كَانُوْا فِىْ شَكٍّ مُّرِيْبٍ
34:54. மேலும், அவர்களுடைய கூட்டத்தாருக்கு முன்னர் செய்யப்பட்டதுபோல், அவர்களுக்கும் அவர்கள் விரும்பம் கொண்டிருந்தவற்றுக்கும் இடையே திரைபோடப்படும்; நிச்சயமாக அவர்கள் ஆழ்ந்த சந்தேகத்திலேயே இருந்தார்கள்.
38:8 ءَاُنْزِلَ عَلَيْهِ الذِّكْرُ مِنْۢ بَيْنِنَاؕ بَلْ هُمْ فِىْ شَكٍّ مِّنْ ذِكْرِىْۚ بَلْ لَّمَّا يَذُوْقُوْا عَذَابِؕ
38:8. "நம்மிடையில் இவர் மீதுதானா உபதேசம் இறக்கப்பட்டது?" (என்றும் கூறுகிறார்கள்.) அவ்வாறல்ல! அவர்கள் எனது போதனையில் சந்தேகத்தில் இருக்கின்றனர்; அவ்வாறல்ல! இன்னும் அவர்கள் என் வேதனையை அனுபவித்ததில்லை.
40:34 وَلَقَدْ جَآءَكُمْ يُوْسُفُ مِنْ قَبْلُ بِالْبَيِّنٰتِ فَمَا زِلْـتُمْ فِىْ شَكٍّ مِّمَّا جَآءَكُمْ بِهٖ ؕ حَتّٰٓى اِذَا هَلَكَ قُلْتُمْ لَنْ يَّبْعَثَ اللّٰهُ مِنْۢ بَعْدِهٖ رَسُوْلًا ؕ كَذٰلِكَ يُضِلُّ اللّٰهُ مَنْ هُوَ مُسْرِفٌ مُّرْتَابٌ ۚ ۖ
40:34. "மேலும், முற்காலத்தில் திட்டமாக யூஸுஃப் தெளிவான அத்தாட்சிகளுடன் உங்களிடம் வந்தார்; எனினும், அவர் உங்களிடம் கொண்டுவந்ததைப் பற்றி நீங்கள் சந்தேகத்திலேயே இருந்தீர்கள்; இறுதியில், அவர் இறந்தபோது 'அவருக்குப்பின் எந்தத் தூதரையும் அல்லாஹ் அனுப்பவே மாட்டான்' என்றும் கூறினீர்கள்; இவ்வாறே, எவர் வரம்புமீறிச் சந்தேகிக்கிறாரோ அவரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுகிறான்."
40:59 اِنَّ السَّاعَةَ لَاٰتِيَةٌ لَّا رَيْبَ فِيْهَا وَلٰـكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا يُؤْمِنُوْنَ
40:59. மறுமை நாள் நிச்சயமாக வந்தே தீரும்; அதில் சந்தேகமே இல்லை; எனினும், மனிதர்களில் பெரும்பாலோர் நம்பிக்கை கொள்வதில்லை.
41:45 وَلَقَدْ اٰتَيْنَا مُوْسَى الْكِتٰبَ فَاخْتُلِفَ فِيْهِؕ وَلَوْلَا كَلِمَةٌ سَبَقَتْ مِنْ رَّبِّكَ لَـقُضِىَ بَيْنَهُمْؕ وَاِنَّهُمْ لَفِىْ شَكٍّ مِّنْهُ مُرِيْبٍ
41:45. நிச்சயமாக நாம் மூஸாவுக்கு வேதத்தைக் கொடுத்தோம்; ஆனால், அதில் மாறுபாடுகள் செய்யப்பட்டுவிட்டன; அன்றியும், உமது இறைவனிடமிருந்து ஏற்கனவே வாக்கு ஏற்படாது போயிருந்தால், அவர்களுக்கிடையே தீர்ப்பு அளிக்கப்பட்டே இருக்கும்; நிச்சயமாக அவர்களும் ஆழ்ந்த சந்தேகத்திலேயே இருக்கின்றனர்.
41:54 اَلَاۤ اِنَّهُمْ فِىْ مِرْيَةٍ مِّنْ لِّقَآءِ رَبِّهِمْؕ اَلَاۤ اِنَّهٗ بِكُلِّ شَىْءٍ مُّحِيْطٌ
41:54. அறிந்துகொள்க! நிச்சயமாக அவர்கள் தங்கள் இறைவனைச் சந்திப்பதைக் குறித்து சந்தேகத்தில் இருக்கிறார்கள். அறிந்துகொள்க! நிச்சயமாக அவன் எல்லாப் பொருட்களையும் சூழ்ந்து (அறிந்தவனாக) இருக்கிறான்.
42:7 وَكَذٰلِكَ اَوْحَيْنَاۤ اِلَيْكَ قُرْاٰنًا عَرَبِيًّا لِّـتُـنْذِرَ اُمَّ الْقُرٰى وَمَنْ حَوْلَهَا وَتُنْذِرَ يَوْمَ الْجَمْعِ لَا رَيْبَ فِيْهِؕ فَرِيْقٌ فِى الْجَنَّةِ وَفَرِيْقٌ فِى السَّعِيْرِ
42:7. அவ்வாறே, நகரங்களின் தாய்க்கும் (மக்காவுக்கும்) அதனைச் சுற்றியுள்ளவர்களுக்கும்; நீர் அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும், எவ்வித சந்தேகமுமின்றி (யாவரும்) ஒன்றுசேர்க்கப்படும் நாளைப்பற்றி எச்சரிப்பதற்காகவும், அரபிமொழியிலான இந்தக் குர்ஆனை நாம் உமக்கு வஹீ அறிவித்தோம்; ஒரு கூட்டம் சுவர்க்கத்திலும் ஒரு கூட்டம் நரகத்திலும் இருக்கும்.
42:14 وَمَا تَفَرَّقُوْۤا اِلَّا مِنْۢ بَعْدِ مَا جَآءَهُمُ الْعِلْمُ بَغْيًاۢ بَيْنَهُمْؕ وَلَوْلَا كَلِمَةٌ سَبَقَتْ مِنْ رَّبِّكَ اِلٰٓى اَجَلٍ مُّسَمًّى لَّقُضِىَ بَيْنَهُمْؕ وَ اِنَّ الَّذِيْنَ اُوْرِثُوا الْكِتٰبَ مِنْۢ بَعْدِهِمْ لَفِىْ شَكٍّ مِّنْهُ مُرِيْبٍ
42:14. அவர்கள், தங்களிடம் ஞானம் (வேதம்) வந்த பின்னர், தங்களுக்கிடையேயுள்ள பொறாமையின் காரணமாகவே அன்றி, அவர்கள் பிரிந்து போகவில்லை; (அவர்கள் பற்றிய தீர்ப்பு) ஒரு குறிப்பிட்ட தவணையில் என்று உம்முடைய இறைவனின் வாக்கு முன்னரே ஏற்பட்டிருக்காவிடில், அவர்களிடையே (இதற்குள்) நிச்சயமாகத் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும்; அன்றியும், அவர்களுக்குப் பின்னர் யார் வேதத்திற்கு வாரிசாக்கப்பட்டார்களோ நிச்சயமாக அவர்களும் இதில் பெரும் சந்தேகத்தில் இருக்கின்றனர்.
43:61 وَاِنَّهٗ لَعِلْمٌ لِّلسَّاعَةِ فَلَا تَمْتَرُنَّ بِهَا وَاتَّبِعُوْنِؕ هٰذَا صِرَاطٌ مُّسْتَقِيْمٌ
43:61. "நிச்சயமாக அவர் (ஈஸா) மறுமைநாளின் அத்தாட்சியாவார்; ஆகவே, நிச்சயமாக நீங்கள் இதில் சந்தேகப்பட வேண்டாம்; மேலும், என்னையே பின்பற்றுங்கள்; இதுவே நேரான வழி" (என்று நபியே! நீர் கூறுவீராக)!
44:9 بَلْ هُمْ فِىْ شَكٍّ يَّلْعَبُوْنَ
44:9. ஆனால், அவர்கள் சந்தேகத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
45:26 قُلِ اللّٰهُ يُحْيِيْكُمْ ثُمَّ يُمِيْتُكُمْ ثُمَّ يَجْمَعُكُمْ اِلٰى يَوْمِ الْقِيٰمَةِ لَا رَيْبَ فِيْهِ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُوْنَ
45:26. "அல்லாஹ் உங்களுக்கு உயிர் கொடுக்கிறான்; பின்னர், அவனே உங்களை மரணம் அடையச் செய்கிறான்; பின்னர், மறுமை நாளன்று அவன் உங்களை ஒன்று சேர்ப்பான்; இதில் சந்தேகமேயில்லை; எனினும், மனிதர்களில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள்" என்று (நபியே!) நீர் கூறும்.
45:32 وَاِذَا قِيْلَ اِنَّ وَعْدَ اللّٰهِ حَقٌّ وَّالسَّاعَةُ لَا رَيْبَ فِيْهَا قُلْتُمْ مَّا نَدْرِىْ مَا السَّاعَةُ ۙ اِنْ نَّـظُنُّ اِلَّا ظَنًّا وَّمَا نَحْنُ بِمُسْتَيْقِنِيْنَ
45:32. மேலும், "நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது; மறுமைநாள் அது பற்றியும் சந்தேகமில்லை" என்று கூறப்பட்டபோது: "மறுமைநாள் என்ன என்று நாங்கள் அறிய மாட்டோம்; அது ஒரு வெறும் (கற்பனையான) எண்ணம் என்றே நாங்கள் கருதுகிறோம்; எனவே, (அதை) நாங்கள் உறுதியென நம்புபவர்களல்லர்" என்று நீங்கள் கூறினீர்கள்.
49:15 اِنَّمَا الْمُؤْمِنُوْنَ الَّذِيْنَ اٰمَنُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهٖ ثُمَّ لَمْ يَرْتَابُوْا وَجَاهَدُوْا بِاَمْوَالِهِمْ وَاَنْفُسِهِمْ فِىْ سَبِيْلِ اللّٰهِ ؕ اُولٰٓٮِٕكَ هُمُ الصّٰدِقُوْنَ
49:15. நிச்சயமாக (உண்மையான) நம்பிக்கையாளர்கள் யார் என்றால், அவர்கள் அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர் மீதும் நம்பிக்கை கொண்டு, பின்னர் (அது பற்றி அவர்கள் எத்தகைய) சந்தேகமும் கொள்ளாது, தம் செல்வங்களைக் கொண்டும், தம் உயிர்களைக் கொண்டும் அல்லாஹ்வின் பாதையில் தியாகம் செய்வார்கள்; இத்தகையவர்கள்தாம் உண்மையாளர்கள்.
50:15 اَفَعَيِيْنَا بِالْخَـلْقِ الْاَوَّلِؕ بَلْ هُمْ فِىْ لَبْسٍ مِّنْ خَلْقٍ جَدِيْدٍ
50:15. எனவே, (எல்லாவற்றையும்) முதலாவதாகப் படைப்பதில் நாம் சோர்வடைந்துவிட்டோமா? இல்லை! எனினும், இவர்கள் (நாம்) புதிதாகப் படைப்பதைப் பற்றிச் சந்தேகத்தில் இருக்கின்றனர்.
57:14 يُنَادُوْنَهُمْ اَلَمْ نَكُنْ مَّعَكُمْؕ قَالُوْا بَلٰى وَلٰـكِنَّكُمْ فَتَنْتُمْ اَنْفُسَكُمْ وَ تَرَبَّصْتُمْ وَارْتَبْتُمْ وَغَرَّتْكُمُ الْاَمَانِىُّ حَتّٰى جَآءَ اَمْرُ اللّٰهِ وَ غَرَّكُمْ بِاللّٰهِ الْغَرُوْرُ
57:14. இவர்கள் (நம்பிக்கையாளர்களைப் பார்த்து) "நாங்கள் உங்களுடன் இருக்கவில்லையா?" என்று சப்தமிட்டுக் கூறுவார்கள்; "மெய்தான்; எனினும், நீங்களே உங்களைச் சோதனையில் ஆழ்த்திவிட்டீர்கள்; (எங்கள் அழிவை) நீங்கள் எதிர்பார்த்தீர்கள்; (இந்நாளைப் பற்றி) சந்தேகமும் கொண்டிருந்தீர்கள்; அல்லாஹ்வின் கட்டளை வரும் வரையில் (உங்களுடைய) வீண் ஆசைகள் உங்களை மயக்கிவிட்டன; அன்றியும், மயக்குபவன் (ஆன ஷைத்தான்) அல்லாஹ்வைப் பற்றி உங்களை மயக்கியும் விட்டான்" என்றும் (நம்பிக்கையாளர்கள்) கூறுவார்கள்.
65:4 وَالّٰٓـىٴِْ يَٮِٕسْنَ مِنَ الْمَحِيْضِ مِنْ نِّسَآٮِٕكُمْ اِنِ ارْتَبْتُمْ فَعِدَّتُهُنَّ ثَلٰثَةُ اَشْهُرٍ وَّالّٰٓـىٴِْ لَمْ يَحِضْنَ ؕ وَاُولَاتُ الْاَحْمَالِ اَجَلُهُنَّ اَنْ يَّضَعْنَ حَمْلَهُنَّ ؕ وَمَنْ يَّـتَّـقِ اللّٰهَ يَجْعَلْ لَّهٗ مِنْ اَمْرِهٖ یُسْرًا
65:4. மேலும், உங்கள் பெண்களில், எவரும் மாதவிடாயின் நம்பிக்கையிழந்து (அவர்களுடைய இத்தாவைக் கணக்கிடுவது பற்றி) நீங்கள் சந்தேகப்பட்டால், அவர்களில் மாதவிடாயே ஏற்படாதவர்களுக்கும், இத்தா(வின் தவணை) மூன்று மாதங்களாகும்; தவிர, கர்ப்பமுடையவர்கள் - அவர்களுடைய (இத்தாவின்) தவணை அவர்கள் பிரசவிக்கும் வரையாகும்; மேலும், எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறாரோ அவருக்கு அவருடைய காரியத்தை அவன் எளிதாக்குகிறான்.
74:31 وَمَا جَعَلْنَاۤ اَصْحٰبَ النَّارِ اِلَّا مَلٰٓٮِٕكَةً وَّمَا جَعَلْنَا عِدَّتَهُمْ اِلَّا فِتْنَةً لِّلَّذِيْنَ كَفَرُوْا ۙ لِيَسْتَيْقِنَ الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ وَيَزْدَادَ الَّذِيْنَ اٰمَنُوْۤا اِيْمَانًا وَّلَا يَرْتَابَ الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ وَالْمُؤْمِنُوْنَۙ وَلِيَقُوْلَ الَّذِيْنَ فِىْ قُلُوْبِهِمْ مَّرَضٌ وَّالْكٰفِرُوْنَ مَاذَاۤ اَرَادَ اللّٰهُ بِهٰذَا مَثَلًا ؕ كَذٰلِكَ يُضِلُّ اللّٰهُ مَنْ يَّشَآءُ وَيَهْدِىْ مَنْ يَّشَآءُ ؕ وَمَا يَعْلَمُ جُنُوْدَ رَبِّكَ اِلَّا هُوَ ؕ وَمَا هِىَ اِلَّا ذِكْرٰى لِلْبَشَرِ
74:31. அன்றியும், நரகக் காவலாளிகளை வானவர்கள் அல்லாமல் நாம் ஆக்கவில்லை; நிராகரித்தவர்களுக்கு அவர்களுடைய எண்ணிக்கையை ஒரு சோதனையாகவே ஆக்கினோம்; வேதம் கொடுக்கப்பட்டவர்கள் உறுதிகொள்வதற்கும், நம்பிக்கைகொண்டவர்கள் நம்பிக்கையை அதிகரித்துக்கொள்வதற்கும், வேதம் கொடுக்கப்பட்டவர்களும் நம்பிக்கையாளர்களும் சந்தேகம் கொள்ளாமல் இருப்பதற்கும் (நாம் இவ்வாறு ஆக்கினோம்); எனினும், எவர்களுடைய இதயங்களில் நோய் இருக்கிறதோ அவர்களும், நிராகரிப்பாளர்களும் "அல்லாஹ் (பத்தொன்பது எனும்) இந்த (எண்ணிக்கையின்) உதாரணத்தைக் கொண்டு எ(ன்ன கருத்)தை நாடினான்?" எனக் கேட்பதற்காகவுமே (இவ்வாறு ஆக்கினோம்); இவ்வாறே அல்லாஹ், தான் நாடியவர்களை வழிகேட்டிலும் விடுகிறான்; இன்னும், தான் நாடியவர்களை நேர்வழியிலும் செலுத்துகிறான்; அன்றியும், உம்முடைய இறைவனின் படைகளை அவனைத் தவிர (மற்றெவரும்) அறியமாட்டார்கள்; அது (ஸகர் பற்றிய செய்தி) மனிதர்களுக்கு (நினைவூட்டும்) உபதேசமேயன்றி வேறில்லை.
114:4 مِنْ شَرِّ الْوَسْوَاسِ ۙ الْخَـنَّاسِ ۙ
114:4. பதுங்கியிருந்து வீண் சந்தேகங்களை உண்டாக்குபவனின் தீங்கைவிட்டும் (இறைவனிடத்தில் நான் பாதுகாவல் தேடுகிறேன்).
114:5 الَّذِىْ يُوَسْوِسُ فِىْ صُدُوْرِ النَّاسِۙ
114:5. அவன் எத்தகையவனென்றால், மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களை உண்டாக்குகிறான்.