சமாதானம்
2:182 فَمَنْ خَافَ مِنْ مُّوْصٍ جَنَفًا اَوْ اِثْمًا فَاَصْلَحَ بَيْنَهُمْ فَلَاۤ اِثْمَ عَلَيْهِؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ
2:182. ஆனால், மரண சாஸனம் செய்பவரிடம் (பாரபட்சம் போன்ற) அநீதியையோ அல்லது பாவத்தையோ அஞ்சி ஒருவர் (சம்பந்தப்பட்டவர்களிடையே) சமாதானம் செய்தால் அவர் மீது குற்றமில்லை; நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும் நிகரற்ற அன்புடையோனுமாகவும் இருக்கின்றான்.
2:224 وَلَا تَجْعَلُوا اللّٰهَ عُرْضَةً لِّاَيْمَانِکُمْ اَنْ تَبَرُّوْا وَتَتَّقُوْا وَتُصْلِحُوْا بَيْنَ النَّاسِؕ وَاللّٰهُ سَمِيْعٌ عَلِيْمٌ
2:224. இன்னும், (அல்லாஹ்வின் மீது நீங்கள் செய்யும்) உங்களுடைய சத்தியத்தின் காரணமாக நீங்கள் நன்மை செய்வதற்கும், (அல்லாஹ்வை) அஞ்சுவதற்கும், மனிதர்களிடையே சமாதானம் செய்து வைப்பதற்கும் அல்லாஹ்வை ஒரு தடையாக ஆக்கிவிடாதீர்கள்; அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.
4:128 وَاِنِ امْرَاَةٌ خَافَتْ مِنْۢ بَعْلِهَا نُشُوْزًا اَوْ اِعْرَاضًا فَلَا جُنَاحَ عَلَيْهِمَاۤ اَنْ يُّصْلِحَا بَيْنَهُمَا صُلْحًا ؕ وَالصُّلْحُ خَيْرٌ ؕ وَاُحْضِرَتِ الْاَنْفُسُ الشُّحَّ ؕ وَاِنْ تُحْسِنُوْا وَتَتَّقُوْا فَاِنَّ اللّٰهَ كَانَ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرًا
4:128. ஒரு பெண் தன் கணவனிடமிருந்து வெறுப்பையோ அல்லது புறக்கணிப்பையோ பயந்தால், அவர்கள் இருவரும் தங்களுக்குள் ஏதேனும் ஒரு சமாதானத்தை ஏற்படுத்திக் கொள்வது அவ்விருவர் மீது குற்றமில்லை; (அத்தகைய) சமாதானமே மேலானது; இன்னும், (மனித) மனங்கள் கஞ்சத்தனத்திற்கு உட்பட்டவையாகின்றன; (அவ்வாறு உட்படாமல்) ஒருவருக்கொருவர் உபகாரம் செய்து, (அல்லாஹ்வுக்குப்) பயந்தீர்களானால் நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.
4:129 وَلَنْ تَسْتَطِيْعُوْۤا اَنْ تَعْدِلُوْا بَيْنَ النِّسَآءِ وَلَوْ حَرَصْتُمْ فَلَا تَمِيْلُوْا كُلَّ الْمَيْلِ فَتَذَرُوْهَا كَالْمُعَلَّقَةِ ؕ وَاِنْ تُصْلِحُوْا وَتَتَّقُوْا فَاِنَّ اللّٰهَ كَانَ غَفُوْرًا رَّحِيْمًا
4:129. (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் எவ்வளவு தான் விரும்பினாலும், மனைவியரிடையே நீங்கள் நீதம் செலுத்திட ஒருக்காலும் சக்திபெறமாட்டீர்கள்; ஆனால், (ஒரே மனைவியின் பக்கம்) முற்றிலும் சாய்ந்து (மற்ற) அவளை (அந்தரத்தில்) தொங்கவிடப்பட்டவள் போன்று விட்டுவிடாதீர்கள்; நீங்கள் சுமூகமாக நடந்துகொண்டு (அல்லாஹ்வை) பயந்துகொள்வீர்களானால், நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான்.
6:54 وَاِذَا جَآءَكَ الَّذِيْنَ يُؤْمِنُوْنَ بِاٰيٰتِنَا فَقُلْ سَلٰمٌ عَلَيْكُمْ كَتَبَ رَبُّكُمْ عَلٰى نَفْسِهِ الرَّحْمَةَ ۙ اَنَّهٗ مَنْ عَمِلَ مِنْكُمْ سُوْٓءًۢا بِجَهَالَةٍ ثُمَّ تَابَ مِنْۢ بَعْدِهٖ وَاَصْلَحَۙ فَاَنَّهٗ غَفُوْرٌ رَّحِيْمٌ
6:54. நம் வசனங்களை நம்பியவர்கள் உம்மிடம் வந்தால், "உங்கள் மீது சாந்தி உண்டாவதாக!" என்று (நபியே!) நீர் கூறும்; உங்கள் இறைவன் கிருபை செய்வதைத் தன் மீது கடமையாக்கிக் கொண்டான்; உங்களில் எவரேனும் அறியாமையினால் (யாதொரு) தீமையைச் செய்துவிட்டு, பிறகு அதற்குப் பின், (பாவத்தை விட்டும்) வருந்தி (அதிலிருந்து விலகி) சீர்திருத்திக் கொண்டாரோ, (அவருடைய குற்றங்களை அல்லாஹ் மன்னித்து விடுவான்; ஏனென்றால்,) நிச்சயமாக அவன் மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் இருக்கின்றான்.
8:61 وَاِنْ جَنَحُوْا لِلسَّلْمِ فَاجْنَحْ لَهَا وَتَوَكَّلْ عَلَى اللّٰهِؕ اِنَّهٗ هُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ
8:61. அவர்கள் சமாதானத்தின் பக்கம் சாய்ந்து (இணங்கி) வந்தால், நீரும் அதன் பக்கம் சாய்வீராக! மேலும், அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக! நிச்சயமாக அவனே (எல்லாவற்றையும்) செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.
16:28 الَّذِيْنَ تَتَوَفّٰٮهُمُ الْمَلٰۤٮِٕكَةُ ظَالِمِىْۤ اَنْفُسِهِمْ فَاَلْقَوُا السَّلَمَ مَا كُنَّا نَـعْمَلُ مِنْ سُوْۤءٍؕ بَلٰٓى اِنَّ اللّٰهَ عَلِيْمٌۢ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ
16:28. அவர்கள் தமக்குத்தாமே அநியாயம் செய்து கொண்டவர்களாக இருக்கும் நிலையில் வானவர்கள் அவர்(களுடைய உயிர்)களைக் கைப்பற்றுவார்கள்: அப்போது அவர்கள், "நாங்கள் எந்த விதமான தீமையும் செய்யவில்லையே!" என்று (கீழ்ப்படிந்தவர்களாக வானவர்களிடம்) சமாதானம் கோருவார்கள்; "அவ்வாறில்லை! நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்துகொண்டிருந்தவற்றை நன்கறிந்தவன்" (என்று வானவர்கள் பதிலளிப்பார்கள்).
42:40 وَجَزٰٓؤُا سَيِّئَةٍ سَيِّئَةٌ مِّثْلُهَاۚ فَمَنْ عَفَا وَاَصْلَحَ فَاَجْرُهٗ عَلَى اللّٰهِؕ اِنَّهٗ لَا يُحِبُّ الظّٰلِمِيْنَ
42:40. இன்னும், தீமைக்குக் கூலி அதைப்போன்ற தீமையேயாகும்; ஆனால், எவர் (அதனை) மன்னித்துச் சமாதானம் செய்கிறாரோ அவருக்குரிய (நற்)கூலி அல்லாஹ்விடம் இருக்கிறது; நிச்சயமாக அவன் அநியாயம் செய்பவர்களை நேசிக்க மாட்டான்.
47:35 فَلَا تَهِنُوْا وَتَدْعُوْۤا اِلَى السَّلْمِۖ وَاَنْـتُمُ الْاَعْلَوْنَۖ وَاللّٰهُ مَعَكُمْ وَلَنْ يَّتِـرَكُمْ اَعْمَالَـكُمْ
47:35. (நம்பிக்கையாளர்களே! போரில்) நீங்கள் தைரியமிழந்து சமாதானத்தைக் கோராதீர்கள்; (ஏனென்றால்,) நீங்கள்தாம் மேலோங்குபவர்கள்: அல்லாஹ் உங்களுடனேயே இருக்கின்றான்; மேலும், அவன் உங்கள் (நற்)செயல்களை உங்களுக்கு (ஒரு போதும்) குறைத்துவிட மாட்டான்.
49:9 وَاِنْ طَآٮِٕفَتٰنِ مِنَ الْمُؤْمِنِيْنَ اقْتَتَلُوْا فَاَصْلِحُوْا بَيْنَهُمَاۚ فَاِنْۢ بَغَتْ اِحْدٰٮهُمَا عَلَى الْاُخْرٰى فَقَاتِلُوا الَّتِىْ تَبْغِىْ حَتّٰى تَفِىْٓءَ اِلٰٓى اَمْرِ اللّٰهِ ۚ فَاِنْ فَآءَتْ فَاَصْلِحُوْا بَيْنَهُمَا بِالْعَدْلِ وَاَقْسِطُوْا ؕ اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُقْسِطِيْنَ
49:9. நம்பிக்கையாளர்களில் இருசாரார் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டால், அவ்விரு சாராருக்கிடையில் சமாதானம் உண்டாக்குங்கள்; பின்னர், அவர்களில் ஒருசாரார் மற்றவர்மீது அக்கிரமம் செய்தால், அக்கிரமம் செய்வோர் அல்லாஹ்வுடைய கட்டளையின்பால் திரும்பும் வரையில், (அவர்களுடன்) போர் செய்யுங்கள்; அவ்வாறு, அவர்கள் (அல்லாஹ்வின் பால்) திரும்பி விட்டால், நியாயமாக அவ்விரு சாராரிடையே சமாதானம் உண்டாக்குங்கள்; (இதில்) நீங்கள் நீதியுடன் நடந்துகொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீதியாளர்களை நேசிக்கின்றான்.
49:10 اِنَّمَا الْمُؤْمِنُوْنَ اِخْوَةٌ فَاَصْلِحُوْا بَيْنَ اَخَوَيْكُمْوَاتَّقُوا اللّٰهَ لَعَلَّكُمْ تُرْحَمُوْنَ
49:10. நிச்சயமாக நம்பிக்கையாளர்கள் (யாவரும்) சகோதரர்களே; ஆகவே, உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள்; இன்னும், உங்கள் மீது கிருபை செய்யப்படும் பொருட்டு நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள்.