சனிக்கிழமை
2:65 وَلَقَدْ عَلِمْتُمُ الَّذِيْنَ اعْتَدَوْا مِنْكُمْ فِىْ السَّبْتِ فَقُلْنَا لَهُمْ كُوْنُوْا قِرَدَةً خٰسِـِٕیْنَۚ
2:65. உங்கள் முன்னோர்களிலிருந்து சனிக்கிழமை அன்று வரம்பு மீறியவர்களைப் பற்றி நீங்கள் உறுதியாக அறிவீர்கள்; அதனால், நாம் அவர்களை நோக்கி, "சிறுமையடைந்த குரங்குகளாகிவிடுங்கள்" என்று கூறினோம்.
4:47 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ اٰمِنُوْا بِمَا نَزَّلْنَا مُصَدِّقًا لِّمَا مَعَكُمْ مِّنْ قَبْلِ اَنْ نَّـطْمِسَ وُجُوْهًا فَنَرُدَّهَا عَلٰٓى اَدْبَارِهَاۤ اَوْ نَلْعَنَهُمْ كَمَا لَعَنَّاۤ اَصْحٰبَ السَّبْتِؕ وَكَانَ اَمْرُ اللّٰهِ مَفْعُوْلًا
4:47. வேதம் வழங்கப்பட்டவர்களே! நாம் முகங்களை மாற்றி, அவற்றைப் பின்புறமாகத் திருப்பிவிடுவதற்கு முன்னே, அல்லது சனிக்கிழமையுடையோரை நாம் சபித்ததுபோன்று அவர்களைச் சபிக்கும் முன்னே, உங்களிடமுள்ள (வேதத்)தை உண்மைப்படுத்துகின்ற நாம் இறக்கிய (இவ்வேதத்)தை (குர்ஆனை) நம்புங்கள்; அல்லாஹ்வின் கட்டளை நிறைவேற்றப்பட்டேதீரும்.
4:154 وَرَفَعْنَا فَوْقَهُمُ الطُّوْرَ بِمِيْثَاقِهِمْ وَقُلْنَا لَهُمُ ادْخُلُوا الْبَابَ سُجَّدًا وَّقُلْنَا لَهُمْ لَا تَعْدُوْا فِى السَّبْتِ وَاَخَذْنَا مِنْهُمْ مِّيْثَاقًا غَلِيْظًا
4:154. மேலும், அவர்களிடம் வாக்குறுதி வாங்கும் பொருட்டு, அவர்கள்மேல் தூர் (ஸினாய்) மலையை உயர்த்தினோம்; இன்னும், "இந்த வாசலில் தலை குனிந்து (தாழ்மையாக) நுழையுங்கள்!" என்று சொன்னோம்; மேலும், "(மீன் வேட்டையாடி) சனிக்கிழமையில் வரம்பு மீறாதீர்கள்" என்றும் அவர்களுக்குக் கூறினோம்; இன்னும், அவர்களிடமிருந்து மிக உறுதியான வாக்குறுதியையும் வாங்கினோம்.
7:163 وَسْــٴَــلْهُمْ عَنِ الْـقَرْيَةِ الَّتِىْ كَانَتْ حَاضِرَةَ الْبَحْرِۘ اِذْ يَعْدُوْنَ فِى السَّبْتِ اِذْ تَاْتِيْهِمْ حِيْتَانُهُمْ يَوْمَ سَبْتِهِمْ شُرَّعًا وَّيَوْمَ لَا يَسْبِتُوْنَ ۙ لَا تَاْتِيْهِمْ ۛۚ كَذٰلِكَ ۛۚ نَبْلُوْهُمْ بِمَا كَانُوْا يَفْسُقُوْنَ
7:163. (நபியே!) கடலோரத்திலிருந்த ஓர் ஊர் (மக்களைப்) பற்றி நீர் அவர்களைக் கேளும்; அவர்கள் சனிக்கிழமையன்று வரம்புமீறி (மீன் வேட்டையாடி)க் கொண்டிருந்தார்கள்; ஏனென்றால், அவர்களுடைய சனிக்கிழமையன்று நீரின் மேல் மட்டத்தில் அவர்கள் முன்னே மீன்கள் வந்தன; ஆனால், சனிக்கிழமையல்லாத நாட்களில் அவர்களிடம் (அவ்வாறு வெளியாகி) வருவதில்லை; அவர்கள் செய்துகொண்டிருந்த பாவத்தின் காரணமாக அவர்களை நாம் இவ்வாறு சோதனைக்குள்ளாக்கினோம்.
16:124 اِنَّمَا جُعِلَ السَّبْتُ عَلَى الَّذِيْنَ اخْتَلَفُوْا فِيْهِؕ وَاِنَّ رَبَّكَ لَيَحْكُمُ بَيْنَهُمْ يَوْمَ الْقِيٰمَةِ فِيْمَا كَانُوْا فِيْهِ يَخْتَلِفُوْنَ
16:124. சனிக்கிழமை (ஓய்வுநாள்) என்று ஏற்படுத்தப்பட்டதெல்லாம், அதைப்பற்றி எவர்கள் மாறுபட்டு(த் தர்க்கித்து)க் கொண்டிருந்தார்களோ, அவர்களுக்குத்தான்; நிச்சயமாக உம் இறைவன் மறுமைநாளில், அவர்கள் மாறுபட்டு(த் தர்க்கித்து)க் கொண்டிருந்தவைபற்றி அவர்களுக்கிடையே தீர்ப்புச் செய்வான்.