சாந்தி
6:54   وَاِذَا جَآءَكَ الَّذِيْنَ يُؤْمِنُوْنَ بِاٰيٰتِنَا فَقُلْ سَلٰمٌ عَلَيْكُمْ‌ كَتَبَ رَبُّكُمْ عَلٰى نَفْسِهِ الرَّحْمَةَ‌ ۙ اَنَّهٗ مَنْ عَمِلَ مِنْكُمْ سُوْٓءًۢا بِجَهَالَةٍ ثُمَّ تَابَ مِنْۢ بَعْدِهٖ وَاَصْلَحَۙ فَاَنَّهٗ غَفُوْرٌ رَّحِيْمٌ‏
6:54. நம் வசனங்களை நம்பியவர்கள் உம்மிடம் வந்தால், "உங்கள் மீது சாந்தி உண்டாவதாக!" என்று (நபியே!) நீர் கூறும்; உங்கள் இறைவன் கிருபை செய்வதைத் தன் மீது கடமையாக்கிக் கொண்டான்; உங்களில் எவரேனும் அறியாமையினால் (யாதொரு) தீமையைச் செய்துவிட்டு, பிறகு அதற்குப் பின், (பாவத்தை விட்டும்) வருந்தி (அதிலிருந்து விலகி) சீர்திருத்திக் கொண்டாரோ, (அவருடைய குற்றங்களை அல்லாஹ் மன்னித்து விடுவான்; ஏனென்றால்,) நிச்சயமாக அவன் மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் இருக்கின்றான்.
6:127   لَهُمْ دَارُ السَّلٰمِ عِنْدَ رَبِّهِمْ‌ وَهُوَ وَلِيُّهُمْ بِمَا كَانُوْا يَعْمَلُوْنَ‏
6:127. அவர்களுக்காக அவர்களுடைய இறைவனிடம் 'சாந்தி இல்லம்' (சுவர்க்கம்) உண்டு; அவர்கள் செய்துகொண்டிருந்த (நன்மையான) வற்றின் காரணமாக அவன் அவர்களுடைய உற்ற நேசனாகவும் இருக்கிறான்.
7:46   وَبَيْنَهُمَا حِجَابٌ‌ۚ وَعَلَى الْاَعْرَافِ رِجَالٌ يَّعْرِفُوْنَ كُلًّاۢ بِسِيْمٰٮهُمْ‌ ۚ وَنَادَوْا اَصْحٰبَ الْجَـنَّةِ اَنْ سَلٰمٌ عَلَيْكُمْ‌ لَمْ يَدْخُلُوْهَا وَهُمْ يَطْمَعُوْنَ‏
7:46. (நரகவாசிகள், சுவர்க்கவாசிகள் ஆகிய) இவர்களுக்கிடையே ஒரு திரை(யான மதில்) இருக்கும்; (அதன்) சிகரங்களில் சில மனிதர்கள் இருப்பார்கள்; (நரகவாசிகள், சுவர்க்கவாசிகள்) ஒவ்வொருவரையும் அவர்களுடைய அடையாளத்தைக்கொண்டு அவர்கள் அறிந்துகொள்வார்கள்; அவர்கள் சுவர்க்கவாசிகளை அழைத்து "உங்கள் மீது சாந்தி உண்டாகுக!" என்று கூறுவார்கள்; அவர்கள் இன்னும் அதில் நுழையவில்லை - அவர்கள் (அதில் நுழைய) ஆவலுடன் இருக்கின்றார்கள்.
10:10   دَعْوٰٮهُمْ فِيْهَا سُبْحٰنَكَ اللّٰهُمَّ وَ تَحِيَّـتُهُمْ فِيْهَا سَلٰمٌ‌ۚ وَاٰخِرُ دَعْوٰٮهُمْ اَنِ الْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَ‏
10:10. அதில் அவர்களுடைய பிரார்த்தனையாகிறது; "அல்லாஹ்வே! நீ மிகப்பரிசுத்தமானவன்" என்பதாகும்; அதில் (தம் தோழர்களைச் சந்திக்கும் போது) அவர்களுடைய முகமன், "ஸலாமுன் (சாந்தி உண்டாவதாக!)" என்பதாகும்; "எல்லாப் புகழும் அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே" என்பது அவர்களது பிரார்த்தனையின் முடிவாகவும் இருக்கும்.
10:25   وَاللّٰهُ يَدْعُوْۤا اِلٰى دَارِ السَّلٰمِؕ وَيَهْدِىْ مَنْ يَّشَآءُ اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ‏
10:25. மேலும், அல்லாஹ் (உங்களை) அமைதி வீட்டின்பால் அழைக்கின்றான்; அவன் தான் நாடியவரை நேரான வழியில் செலுத்துகிறான்.
11:48   قِيْلَ يٰـنُوْحُ اهْبِطْ بِسَلٰمٍ مِّنَّا وَبَرَكٰتٍ عَلَيْكَ وَعَلٰٓى اُمَمٍ مِّمَّنْ مَّعَكَ‌ؕ وَاُمَمٌ سَنُمَتِّعُهُمْ ثُمَّ يَمَسُّهُمْ مِّنَّا عَذَابٌ اَلِيْمٌ‏
11:48. "நூஹே! உம்மீதும், உம்மோடு இருக்கின்ற சமூகத்தவர்கள் மீதும் நம்முடைய சாந்தியுடனும், பாக்கியங்களுடனும் நீர் இறங்குவீராக! இன்னும், சில சமூகத்தவர்கள் - அவர்களை நாம் சுகம் அனுபவிக்கச் செய்வோம்; பின்னர், நம்மிடமிருந்து நோவினைதரும் வேதனை அவர்களைத் தீண்டும்" என்று கூறப்பட்டது.
11:69   وَلَقَدْ جَآءَتْ رُسُلُنَاۤ اِبْرٰهِيْمَ بِالْبُشْرٰى قَالُوْا سَلٰمًا‌ ؕ قَالَ سَلٰمٌ‌ فَمَا لَبِثَ اَنْ جَآءَ بِعِجْلٍ حَنِيْذٍ‏
11:69. நிச்சயமாக நம் தூதர்கள் (வானவர்கள்) இப்ராஹீமுக்கு நற்செய்தி கொண்டு வந்து "சாந்தி உண்டாவதாக!" என்று கூறினார்கள்; (அதற்கு "உங்களின் மீதும்) சாந்தி உண்டாவதாக!" என்று அவர் சொன்னார்; (அதன் பின்னர் அவர்கள் உண்பதற்காக) பொரித்த கன்றை (அதன் இறைச்சியைக்) கொண்டு வருவதில் தாமதிக்கவில்லை.
13:24   سَلٰمٌ عَلَيْكُمْ بِمَا صَبَرْتُمْ‌ فَنِعْمَ عُقْبَى الدَّارِؕ‏
13:24. "நீங்கள் பொறுமையைக் கடைப்பிடித்ததற்காக, உங்கள்மீது சாந்தி உண்டாவதாக! எனவே, மறுமையின் வீடு (உங்களுக்கு) மிகவும் நல்லதாயிற்று!" (என்று கூறுவார்கள்).
14:23   وَاُدْخِلَ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ جَنّٰتٍ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَا بِاِذْنِ رَبِّهِمْ‌ؕ تَحِيَّتُهُمْ فِيْهَا سَلٰمٌ‏
14:23. இன்னும், எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் செய்கிறார்களோ அவர்கள் சுவனபதிகளில் புகுத்தப்படுவார்கள்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; தங்கள் இறைவனுடைய அனுமதியைக் கொண்டு அவர்கள் நிரந்தரமாக அவற்றில் தங்கியிருப்பார்கள்; அதில் அவர்களுடைய காணிக்கையாவது "(உங்கள் மீது) சாந்தி உண்டாகுக!" என்பதாகும்.
15:46   اُدْخُلُوْهَا بِسَلٰمٍ اٰمِنِيْنَ‏
15:46. (அவர்களை நோக்கி) "சாந்தியுடனும், அச்சமற்றவர்களாகவும் நீங்கள் இதில் நுழையுங்கள்" (என்று கூறப்படும்).
15:52   اِذْ دَخَلُوْا عَلَيْهِ فَقَالُوْا سَلٰمًاؕ قَالَ اِنَّا مِنْكُمْ وَجِلُوْنَ‏
15:52. அவர்கள் அவரிடம் வந்து, "உங்களுக்குச் சாந்தி உண்டாவதாக!" என்று சொன்னபோது அவர், "நாம் உங்களைப் பற்றி பயப்படுகிறோம்" என்று கூறினார்.
16:32   الَّذِيْنَ تَتَوَفّٰٮهُمُ الْمَلٰۤٮِٕكَةُ طَيِّبِيْنَ‌ ۙ يَقُوْلُوْنَ سَلٰمٌ عَلَيْكُمُۙ ادْخُلُوا الْجَـنَّةَ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ‏
16:32. (நிராகரிப்பை விட்டும்) தூயவர்களாக இருக்கும் நிலையில் வானவர்கள் அவர்(களுடைய உயிர்)களைக் கைப்பற்றுவார்கள்; அவர்களிடம்: "ஸலாமுன் அலைக்கும் (உங்கள் மீது சாந்தி உண்டாவதாக!); நீங்கள் செய்துகொண்டிருந்த (நற்) செயல்களுக்காக சுவனபதியில் நுழையுங்கள்" என்று அவர்கள் (அம்மலக்குகள்) சொல்வார்கள்.
19:15   وَسَلٰمٌ عَلَيْهِ يَوْمَ وُلِدَ وَيَوْمَ يَمُوْتُ وَيَوْمَ يُبْعَثُ حَيًّا‏
19:15. ஆகவே, அவர் பிறந்த நாளிலும், அவர் இறக்கும் நாளிலும், (மறுமையில்) அவர் உயிர் பெற்றெழும் நாளிலும் அவர் மீது சாந்தி உண்டாவதாக!
19:33   وَالسَّلٰمُ عَلَىَّ يَوْمَ وُلِدْتُّ وَيَوْمَ اَمُوْتُ وَيَوْمَ اُبْعَثُ حَيًّا‏
19:33. "இன்னும், நான் பிறந்த நாளிலும், நான் இறக்கும் நாளிலும், (மறுமையில்) நான் உயிர் பெற்று எழுப்பப்படும் நாளிலும் என் மீது சாந்தி நிலைத்திருக்கும்" என்றும் (அக் குழந்தை) கூறியது.
19:62   لَّا يَسْمَعُوْنَ فِيْهَا لَـغْوًا اِلَّا سَلٰمًا‌ؕ وَلَهُمْ رِزْقُهُمْ فِيْهَا بُكْرَةً وَّعَشِيًّا‏
19:62. அவற்றில் 'ஸலாம்' (சாந்தி) என்பதைத் தவிர அவர்கள் வீணான எதையும் செவியுற மாட்டார்கள்; இன்னும், அங்கே அவர்களுக்குக் காலையிலும், மாலையிலும் அவர்களுடைய உணவு இருக்கிறது.
20:47   فَاْتِيٰهُ فَقُوْلَاۤ اِنَّا رَسُوْلَا رَبِّكَ فَاَرْسِلْ مَعَنَا بَنِىْۤ اِسْرَآءِيْلَ ۙ وَلَا تُعَذِّبْهُمْ‌ ؕ قَدْ جِئْنٰكَ بِاٰيَةٍ مِّنْ رَّبِّكَ‌ ؕ وَالسَّلٰمُ عَلٰى مَنِ اتَّبَعَ الْهُدٰى‏
20:47. ஆகவே, நீங்கள் இருவரும் அவனிடம் சென்று "நாங்கள் இருவரும் உன்னுடைய இறைவனின் தூதர்கள்: இஸ்ராயீலின் சந்ததிகளை எங்களுடன் அனுப்பிவிடு! மேலும், அவர்களை வேதனைப்படுத்தாதே! திட்டமாக நாங்கள் உன் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியை உனக்குக் கொண்டு வந்திருக்கிறோம்; இன்னும், எவர் நேர்வழியைப் பின்பற்றுகிறாரோ அவர் மீது (சாந்தி) 'ஸலாம் உண்டாவதாக' என்று சொல்லுங்கள்" (என்று அல்லாஹ் கட்டளையிட்டான்).
21:69   قُلْنَا يٰنَارُ كُوْنِىْ بَرْدًا وَّسَلٰمًا عَلٰٓى اِبْرٰهِيْمَۙ‏
21:69. (இப்ராஹீமை தீக்கிடங்கில் எறிந்தபோது,) "நெருப்பே! இப்ராஹீம் மீது நீ குளிர்ச்சியாகவும், சுகமளிக்கக் கூடியதாகவும் ஆகிவிடு!" என்று நாம் கூறினோம்.
25:63   وَعِبَادُ الرَّحْمٰنِ الَّذِيْنَ يَمْشُوْنَ عَلَى الْاَرْضِ هَوْنًا وَّاِذَا خَاطَبَهُمُ الْجٰهِلُوْنَ قَالُوْا سَلٰمًا‏
25:63. இன்னும், அளவற்ற அருளாளனுடைய அடியார்கள் (யாரென்றால்) அவர்கள்தாம் பூமியில் பணிவுடன் நடப்பார்கள்; மூடர்கள் அவர்களுடன் பேச(வா)தாட முற்பட்டால், "சாந்தியுண்டாகட்டும்" என்று சொல்லி (விலகிப் போய்)விடுவார்கள்.
25:75   اُولٰٓٮِٕكَ يُجْزَوْنَ الْغُرْفَةَ بِمَا صَبَرُوْا وَيُلَقَّوْنَ فِيْهَا تَحِيَّةً وَّسَلٰمًا ۙ‏
25:75. பொறுமையுடனிருந்த காரணத்தால், இவர்களுக்கு (சுவர்க்கபதியில்) உன்னதமான மாளிகை நற்கூலியாக அளிக்கப்படும்; வாழ்த்தும், ஸலாமும் கொண்டு அவர்கள் வரவேற்கப்படுவார்கள்.
27:59   قُلِ الْحَمْدُ لِلّٰهِ وَسَلٰمٌ عَلٰى عِبَادِهِ الَّذِيْنَ اصْطَفٰىؕ ءٰۤللّٰهُ خَيْرٌ اَمَّا يُشْرِكُوْنَؕ‏
27:59. (நபியே!) நீர் கூறுவீராக: "எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது; இன்னும், அவன் தேர்ந்தெடுத்துக் கொண்ட அவனுடைய அடியார்கள் மீது சாந்தி உண்டாவதாக! அல்லாஹ் மேலானவனா? அல்லது அவர்கள் (அவனுக்கு) இணையாக்குபவை (மேலானவை)யா?"
28:5   وَنُرِيْدُ اَنْ نَّمُنَّ عَلَى الَّذِيْنَ اسْتُضْعِفُوْا فِى الْاَرْضِ وَنَجْعَلَهُمْ اَٮِٕمَّةً وَّنَجْعَلَهُمُ الْوٰرِثِيْنَۙ‏
28:5. ஆயினும், (எகிப்திய) பூமியில் பலவீனப்படுத்தப்பட்டோருக்கு நாம் உபகாரம் செய்யவும், அவர்களைத் தலைவர்களாக்கிவிடவும், அவர்களை (நாட்டுக்கு) வாரிசுகளாக்கவும் நாம் நாடினோம்.
33:44   تَحِيَّتُهُمْ يَوْمَ يَلْقَوْنَهٗ سَلٰمٌ ۖۚ وَاَعَدَّ لَهُمْ اَجْرًا كَرِيْمًا‏
33:44. அவனை அவர்கள் சந்திக்கும் நாளில் அவர்களுக்குரிய காணிக்கை (உங்களுக்கு) "சாந்தி உண்டாவதாக" என்பதாகும்; மேலும், அவர்களுக்காக கண்ணியமான (நற்)கூலியையும் அவன் சித்தப்படுத்தியிருக்கின்றான்.
36:58   سَلٰمٌ قَوْلًا مِّنْ رَّبٍّ رَّحِيْمٍ‏
36:58. 'சாந்தி' என்று, நிகரற்ற அன்புடையோனுமான இறைவனிடமிருந்து சொல்லுதல் உண்டு.
37:79   سَلٰمٌ عَلٰى نُوْحٍ فِى الْعٰلَمِيْنَ‏
37:79. அகிலத்தாரில் நூஹ் மீது சாந்தி (ஸலாம்) உண்டாவதாக!
37:109   سَلٰمٌ عَلٰٓى اِبْرٰهِيْمَ‏
37:109. இப்ராஹீம் மீது சாந்தி உண்டாவதாக!
37:120   سَلٰمٌ عَلٰى مُوْسٰى وَهٰرُوْنَ‏
37:120. மூஸாவின் மீதும் ஹாரூனின் மீதும் சாந்தி உண்டாவதாக!
37:130   سَلٰمٌ عَلٰٓى اِلْ يَاسِيْنَ‏
37:130. இல்யாஸீன் மீது சாந்தி உண்டாவதாக!
37:181   وَسَلٰمٌ عَلَى الْمُرْسَلِيْنَ‌ۚ‏
37:181. மேலும், (அவன்) தூதர்கள் மீது சாந்தி உண்டாவதாக!
39:73   وَسِيْقَ الَّذِيْنَ اتَّقَوْا رَبَّهُمْ اِلَى الْجَـنَّةِ زُمَرًا‌ؕ حَتّٰٓى اِذَا جَآءُوْهَا وَفُتِحَتْ اَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا سَلٰمٌ عَلَيْكُمْ طِبْتُمْ فَادْخُلُوْهَا خٰلِدِيْنَ‏
39:73. தம் இறைவனுக்கு அஞ்சியவர்கள் கூட்டங்கூட்டமாக சுவர்க்கத்தின்பால் கொண்டு வரப்படுவார்கள்; அங்கு அவர்கள் வந்ததும், அதன் வாசல்கள் திறக்கப்படும்; அதன் காவலர்கள் அவர்களை நோக்கி: "உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்; நீங்கள் மணம் பெற்றவர்கள்; எனவே, நிரந்தரமானவர்களாகத் தங்கியிருக்கும் நிலையில் அதில் பிரவேசியுங்கள்" என்று கூறுவார்கள்.
43:89   فَاصْفَحْ عَنْهُمْ وَقُلْ سَلٰمٌ‌ؕ فَسَوْفَ يَعْلَمُوْنَ‏
43:89. ஆகவே, நீர் அவர்களைப் புறக்கணித்து (உங்களுக்கு) 'சலாம்' என்று கூறிவிடும்! பின்னர் அவர்கள் (இதன் உண்மையை) அறிந்து கொள்வார்கள்.
50:34   اۨدْخُلُوْهَا بِسَلٰمٍ‌ؕ ذٰلِكَ يَوْمُ الْخُلُوْدِ‏
50:34. சாந்தியுடன் இச்சுவர்க்கத்தில் பிரவேசியுங்கள்: இதுதான் நிரந்தரமான நாளாகும் (என்று கூறப்படும்).
51:25   اِذْ دَخَلُوْا عَلَيْهِ فَقَالُوْا سَلٰمًا‌ؕ قَالَ سَلٰمٌ ۚ قَوْمٌ مُّنْكَرُوْنَ‌‏
51:25. அவர்கள் அவரிடம் பிரவேசித்தபோது, (அவரை நோக்கி: "உங்கள் மீது) சாந்தி உண்டாவதாக!" என்று கூறினார்கள்; (அதற்கவர்), "(உங்கள் மீது) சாந்தி உண்டாவதாக!" என்று கூறினார்; இவர்கள் (நமக்கு) அறிமுகமில்லா சமூகத்தாராக இருக்கின்றார்களே (என்று எண்ணிக் கொண்டார்).
56:26   اِلَّا قِيْلًا سَلٰمًا سَلٰمًا‏
56:26. "ஸலாம், ஸலாம்" (சாந்தி, சாந்தி) என்னும் சொல்லைத் தவிர.
56:91   فَسَلٰمٌ لَّكَ مِنْ اَصْحٰبِ الْيَمِيْنِؕ‏
56:91. "வலப்புறத்தோரிலிருந்து உமக்கு ஸலாம் (சாந்தி) உண்டாவதாக!" (என்று கூறப்படும்).
59:23   هُوَ اللّٰهُ الَّذِىْ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ‌ۚ اَلْمَلِكُ الْقُدُّوْسُ السَّلٰمُ الْمُؤْمِنُ الْمُهَيْمِنُ الْعَزِيْزُ الْجَـبَّارُ الْمُتَكَبِّرُ‌ؕ سُبْحٰنَ اللّٰهِ عَمَّا يُشْرِكُوْنَ‏
59:23. அவனே அல்லாஹ்; வணக்கத்திற்குரிய இறைவன் அவனைத் தவிர வேறு யாரும் இல்லை; அவனே பேரரசன்; மிகப் பரிசுத்தமானவன்; சாந்தியளிப்பவன்; தஞ்சமளிப்பவன்; பாதுகாப்பவன்; (யாவரையும்) மிகைப்பவன்; அடக்கியாள்பவன்; பெருமைக்குரியவன்; அவர்கள் இணை வைப்பவற்றை விட்டும் அல்லாஹ் மிகத் தூய்மையானவன்.
97:5   سَلٰمٌ   ۛهِىَ حَتّٰى مَطْلَعِ الْفَجْرِ‏
97:5. சாந்தி (நிலவியிருக்கும்); அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும்.