சிந்தித்தல் - உணர்தல் - புரிந்து கொள்ளுதல்
2:44   اَتَاْمُرُوْنَ النَّاسَ بِالْبِرِّ وَتَنْسَوْنَ اَنْفُسَكُمْ وَاَنْتُمْ تَتْلُوْنَ الْكِتٰبَ‌ؕ اَفَلَا تَعْقِلُوْنَ‏
2:44. நீங்கள் வேதத்தை ஓதிக்கொண்டே, உங்களை நீங்கள் மறந்துவிட்டு, மனிதர்களை நன்மை செய்யுமாறு ஏவுகிறீர்களா? நீங்கள் புரிந்துகொள்ள வேண்டாமா?
2:73   فَقُلْنَا اضْرِبُوْهُ بِبَعْضِهَا ‌ؕ كَذٰلِكَ يُحْىِ اللّٰهُ الْمَوْتٰى ۙ وَيُرِيْکُمْ اٰيٰتِهٖ لَعَلَّكُمْ تَعْقِلُوْنَ‏
2:73. ஆகவே, "(அறுக்கப்பட்ட அப்பசுவாகிய) அதன் சில (பாகத்)தைக் கொண்டு அ(க்கொலையுண்டவனின் சடலத்)தில் அடியுங்கள்" என்று நாம் சொன்னோம்; இவ்வாறே அல்லாஹ் இறந்தவர்களை உயிர்ப்பிக்கிறான்; நீங்கள் அறிவுபெறும் பொருட்டுத் தன் அத்தாட்சிகளையும் அவன் (இவ்வாறு) உங்களுக்குக் காட்டுகிறான்.
2:76   وَاِذَا لَـقُوْا الَّذِيْنَ اٰمَنُوْا قَالُوْآ اٰمَنَّا  ۖۚ وَاِذَا خَلَا بَعْضُهُمْ اِلٰى بَعْضٍ قَالُوْآ اَ تُحَدِّثُوْنَهُمْ بِمَا فَتَحَ اللّٰهُ عَلَيْكُمْ لِيُحَآجُّوْكُمْ بِهٖ عِنْدَ رَبِّكُمْ‌ؕ اَفَلَا تَعْقِلُوْنَ‏
2:76. மேலும், அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களைச் சந்திக்கும்போது, "நாங்களும் நம்பிக்கை கொண்டிருக்கிறோம்" என்று சொல்கிறார்கள்; ஆனால், அவர்களுள் சிலர் (அவர்களுள்) சிலருடன் தனித்திடும்போது, "உங்கள் இறைவன் முன் உங்களுக்கு எதிராக அவர்கள் வாதாடுவதற்காக, அல்லாஹ் உங்களுக்கு அறிவித்துத் தந்த (தவ்ராத்)தை அவர்களுக்கு எடுத்துச் சொல்கிறீர்களா? (இதை) நீங்கள் உணரமாட்டீர்களா?" என்று (யூதர்கள் சிலர்) கூறுகின்றனர்.
2:164   اِنَّ فِىْ خَلْقِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَاخْتِلَافِ الَّيْلِ وَالنَّهَارِ وَالْفُلْكِ الَّتِىْ تَجْرِىْ فِى الْبَحْرِ بِمَا يَنْفَعُ النَّاسَ وَمَآ اَنْزَلَ اللّٰهُ مِنَ السَّمَآءِ مِنْ مَّآءٍ فَاَحْيَا بِهِ الْاَرْضَ بَعْدَ مَوْتِهَا وَبَثَّ فِيْهَا مِنْ کُلِّ دَآ بَّةٍ وَّتَصْرِيْفِ الرِّيٰحِ وَالسَّحَابِ الْمُسَخَّرِ بَيْنَ السَّمَآءِ وَالْاَرْضِ لَاٰيٰتٍ لِّقَوْمٍ يَّعْقِلُوْنَ‏
2:164. நிச்சயமாக வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும், இரவும் பகலும் மாறிமாறி வருவதிலும்; மனிதர்களுக்குப் பயன் தருவதைக் கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும்; வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்கி அதன் மூலமாக பூமி இறந்தபின் அதை உயிர்ப்பிப்பதிலும்; அதன் மூலம் ஒவ்வொரு விதமான உயிரினத்தையும் பரவவிட்டிருப்பதிலும், காற்றுகளை மாறிமாறி வீசச்செய்வதிலும்; வானத்திற்கும், பூமிக்குமிடையே கட்டுப்பட்டிருக்கும் மேகங்களிலும் - விளங்கும் மக்களுக்கு (அல்லாஹ்வுடைய வல்லமையையும், கருணையையும் எடுத்துக்காட்டும்) சான்றுகள் உள்ளன.
2:170   وَاِذَا قِيْلَ لَهُمُ اتَّبِعُوْا مَآ اَنْزَلَ اللّٰهُ قَالُوْا بَلْ نَـتَّبِعُ مَآ اَلْفَيْنَا عَلَيْهِ اٰبَآءَنَا ؕ اَوَلَوْ كَانَ اٰبَآؤُهُمْ لَا يَعْقِلُوْنَ شَيْئًا وَّلَا يَهْتَدُوْنَ‏
2:170. மேலும், "அல்லாஹ் இறக்கிவைத்த இ(வ்வேதத்)தைப் பின்பற்றுங்கள்" என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் "அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்களை எதன் மீது கண்டோமோ, அதையே நாங்களும் பின்பற்றுகிறோம்" என்று கூறுகிறார்கள்; என்ன! அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழி பெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா?
2:171   وَمَثَلُ الَّذِيْنَ کَفَرُوْا كَمَثَلِ الَّذِىْ يَنْعِقُ بِمَا لَا يَسْمَعُ اِلَّا دُعَآءً وَّنِدَآءً ؕ صُمٌّۢ بُكْمٌ عُمْـىٌ فَهُمْ لَا يَعْقِلُوْنَ‏
2:171. (அந்த) நிராகரிப்பாளர்களுக்கு உதாரணம்: வெறும் கூப்பாட்டையும், கூச்சலையும் தவிர வேறெதையும் கேட்காத (கால்நடைகளைக்) கூவி அழைப்பவனின் உதாரணத்தைப் போன்றிருக்கிறது; அவர்கள் செவிடர்களாகவும், ஊமையர்களாகவும், குருடர்களாகவும் இருக்கின்றனர்; அவர்கள் (எதனையும்) உணர்ந்துகொள்ள மாட்டார்கள்.
2:242   كَذٰلِكَ يُبَيِّنُ اللّٰهُ لَـکُمْ اٰيٰتِهٖ لَعَلَّكُمْ تَعْقِلُوْنَ‏
2:242. நீங்கள் விளங்கிக்கொள்வதற்காக அல்லாஹ் உங்களுக்குத் தன்னுடைய வசனங்களை இவ்வாறு விளக்குகின்றான்.
3:65   يٰۤـاَهْلَ الْكِتٰبِ لِمَ تُحَآجُّوْنَ فِىْۤ اِبْرٰهِيْمَ وَمَاۤ اُنْزِلَتِ التَّوْرٰٮةُ وَالْاِنْجِيْلُ اِلَّا مِنْۢ بَعْدِهٖؕ اَفَلَا تَعْقِلُوْنَ‏
3:65. வேதத்தையுடையோரே! இப்ராஹீமைப் பற்றி (அவர் யூதரா, கிறிஸ்தவரா என்று வீணாக) ஏன் தர்க்கித்துக் கொண்டிருக்கிறீர்கள்? அவருக்குப் பின்னரேயன்றி தவ்ராத்தும், இன்ஜீலும் இறக்கப்படவில்லை; (இதைக் கூட) நீங்கள் விளங்கிக்கொள்ள மாட்டீர்களா?
3:118   يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَتَّخِذُوْا بِطَانَةً مِّنْ دُوْنِكُمْ لَا يَاْلُوْنَكُمْ خَبَالًا ؕ وَدُّوْا مَا عَنِتُّمْ‌ۚ قَدْ بَدَتِ الْبَغْضَآءُ مِنْ اَفْوَاهِهِمْ  ۖۚ وَمَا تُخْفِىْ صُدُوْرُهُمْ اَكْبَرُ‌ؕ قَدْ بَيَّنَّا لَـكُمُ الْاٰيٰتِ‌ اِنْ كُنْتُمْ تَعْقِلُوْنَ‏
3:118. நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் உங்கள் மார்க்கத்தைச் சார்ந்தோர்களைத் தவிர வேறெவரையும் உங்களின் அந்தரங்கக் கூட்டாளிகளாக ஆக்கிக்கொள்ளாதீர்கள்: ஏனெனில், பிறர் உங்களுக்குத் தீமைசெய்வதில் சிறிதும் குறைவு செய்யமாட்டார்கள்; நீங்கள் துன்புறுவதை அவர்கள் விரும்புவார்கள்; அவர்கள் வாய்களிலிருந்தே பகைமை வெளியாகிவிட்டது; அவர்களின் நெஞ்சங்கள் மறைத்துவைத்திருப்பதோ மிகப்பெரியதாகும்; நிச்சயமாக நாம் (இது பற்றிய) வசனங்களை உங்களுக்குத் தெளிவுபடுத்திவிட்டோம்; நீங்கள் விளங்கிக்கொள்பவர்களாக இருந்தால் (இதை அறிந்துகொள்வீர்கள்).
5:58   وَ اِذَا نَادَيْتُمْ اِلَى الصَّلٰوةِ اتَّخَذُوْهَا هُزُوًا وَّلَعِبًا‌ ؕ ذٰ لِكَ بِاَنَّهُمْ قَوْمٌ لَّا يَعْقِلُوْنَ‏
5:58. இன்னும், நீங்கள் தொழுகைக்கு அழைத்தால், அதனை அவர்கள் பரிகாசமாகவும், விளையாட்டாகவும் எடுத்துக்கொள்கிறார்கள்; அது (ஏனெனில்) அவர்கள் அறிவில்லாத கூட்டத்தினர் என்பதினால்தான்.
5:103   مَا جَعَلَ اللّٰهُ مِنْۢ بَحِيْرَةٍ وَّلَا سَآٮِٕبَةٍ وَّلَا وَصِيْلَةٍ وَّلَا حَامٍ‌ ۙ وَّلٰـكِنَّ الَّذِيْنَ كَفَرُوْا يَفْتَرُوْنَ عَلَى اللّٰهِ الْـكَذِبَ‌ ؕ وَاَكْثَرُهُمْ لَا يَعْقِلُوْنَ‏
5:103. பஹீரா (காது கிழிக்கப்பட்ட பெண் ஒட்டகம்), ஸாயிபா (சுதந்திரமாக மேய விடப்படும் பெண் ஒட்டகம்), வஸீலா (இரட்டைக் குட்டிகளை ஈன்றதற்காக, சில நிலைகளில் விக்கிரகங்களுக்கு நேர்ந்து விடப்பட்ட ஆடுகள்), ஹாம் (வேலையெதுவும் வாங்கப்படாமல் சுதந்திரமாக திரியும்படி விடப்படும் ஆண் ஒட்டகம் முதலிய) இவைகளெல்லாம் (மார்க்கச் சின்னங்களாக) அல்லாஹ் ஏற்படுத்தவில்லை. ஆனால், நிராகரித்தோர் தாம் அல்லாஹ்வின் மீது பொய்யைக் கற்பனை செய்து கூறுகின்றனர்; மேலும், அவர்களில் பெரும்பாலோர் விளங்க மாட்டார்கள்.
6:32   وَ مَا الْحَيٰوةُ الدُّنْيَاۤ اِلَّا لَعِبٌ وَّلَهْوٌ‌ ؕ وَلَـلدَّارُ الْاٰخِرَةُ خَيْرٌ لِّـلَّذِيْنَ يَتَّقُوْنَ‌ؕ اَفَلَا تَعْقِلُوْنَ‏
6:32. உலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை; (இறைவனை) அஞ்சுபவர்களுக்கு நிச்சயமாக மறுமை வீடே மிகவும் மேலானதாகும். நீங்கள் இதைப் புரிந்துகொள்ள வேண்டாமா?
6:151   قُلْ تَعَالَوْا اَتْلُ مَا حَرَّمَ رَبُّكُمْ عَلَيْكُمْ‌ اَلَّا تُشْرِكُوْا بِهٖ شَيْـٴًـــــا وَّبِالْوَالِدَيْنِ اِحْسَانًا‌ ۚ وَلَا تَقْتُلُوْۤا اَوْلَادَكُمْ مِّنْ اِمْلَاقٍ‌ؕ نَحْنُ نَرْزُقُكُمْ وَاِيَّاهُمْ‌ ۚ وَلَا تَقْرَبُوا الْفَوَاحِشَ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ‌ ۚ وَلَا تَقْتُلُوا النَّفْسَ الَّتِىْ حَرَّمَ اللّٰهُ اِلَّا بِالْحَـقِّ‌ ؕ ذٰ لِكُمْ وَصّٰٮكُمْ بِهٖ لَعَلَّكُمْ تَعْقِلُوْنَ‏
6:151. வாருங்கள்! உங்கள் இறைவன் உங்கள் மீது விலக்கியிருப்பவற்றை(யும், ஏவியிருப்பவற்றையும்) நான் ஓதிக்காண்பிக்கிறேன்: எப்பொருளையும் அவனுக்கு இணையாக்காதீர்கள்; பெற்றோருக்கு நன்மைசெய்யுங்கள்; வறுமையின் காரணமாக உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்; ஏனெனில், உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம்; மானக்கேடான காரியங்களை அதில் வெளிப்படையானவற்றையும், இரகசியமானவற்றையும் நீங்கள் நெருங்காதீர்கள்; அல்லாஹ் தடுத்துள்ள எந்த ஓர் ஆத்மாவையும், (நியாயமான) உரிமையின்றிக் கொலை செய்யாதீர்கள்: இவற்றை நீங்கள் விளங்கிக்கொள்வதற்காக (இறைவன்) உங்களுக்கு (இவ்வாறு) ஏவுகிறான்.
7:169   فَخَلَفَ مِنْۢ بَعْدِهِمْ خَلْفٌ وَّرِثُوا الْكِتٰبَ يَاْخُذُوْنَ عَرَضَ هٰذَا الْاَدْنٰى وَيَقُوْلُوْنَ سَيُغْفَرُ لَـنَا‌ ۚ وَاِنْ يَّاْتِهِمْ عَرَضٌ مِّثْلُهٗ يَاْخُذُوْهُ‌ ؕ اَلَمْ يُؤْخَذْ عَلَيْهِمْ مِّيْثَاقُ الْـكِتٰبِ اَنْ لَّا يَقُوْلُوْا عَلَى اللّٰهِ اِلَّا الْحَـقَّ وَدَرَسُوْا مَا فِيْهِ‌ ؕ وَالدَّارُ الْاٰخِرَةُ خَيْرٌ لِّـلَّذِيْنَ يَتَّقُوْنَ‌ ؕ اَفَلَا تَعْقِلُوْنَ‏
7:169. அவர்களுக்குப் பின்னால் தீயமக்கள் (அவர்களுக்குப்) பகரமாக வந்தனர்; அவர்கள் வேதத்திற்கும் வாரிசுகள் ஆனார்கள்; இவ்வுலகின் அற்பப் பொருட்களைப் பெற்றுக்கொண்டு (அதற்குத் தகுந்தபடி வேதத்தை மாற்றிக் கொண்டார்கள்); 'எங்களுக்கு மன்னிப்பு அளிக்கப்படும்' என்றும் கூறிக்கொள்கிறார்கள்; இது போன்று வேறோர் அற்பப்பொருள் அவர்களுக்கு வந்துவிட்டால், அதையும் எடுத்துக் கொள்வார்கள். அல்லாஹ்வின் மீது உண்மையேயன்றி வேறொன்றும் கூறலாகாது என்று வேதத்தின் மூலம் அவர்களிடம் உறுதிமொழி வாங்கப்படவில்லையா? (இன்னும்,) அதிலுள்ளதை (போதனைகளை) அவர்கள் ஓதியும் உள்ளார்கள். (அல்லாஹ்வை) அஞ்சுபவர்களுக்கு மறுமையின் வீடே மேலானதாகும்; நீங்கள் விளங்கிக்கொள்ள வேண்டாமா?
8:22   اِنَّ شَرَّ الدَّوَآبِّ عِنْدَ اللّٰهِ الصُّمُّ الْبُكْمُ الَّذِيْنَ لَا يَعْقِلُوْنَ‏
8:22. நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உயிரினங்களில் மிகக் கேவலமானவர்கள் (உண்மையை) அறிந்து கொள்ளாச் செவிடர்களும், ஊமைகளும்தான்.
10:16   قُلْ لَّوْ شَآءَ اللّٰهُ مَا تَلَوْتُهٗ عَلَيْكُمْ وَلَاۤ اَدْرٰٮكُمْ بِهٖ ‌ۖ  فَقَدْ لَبِثْتُ فِيْكُمْ عُمُرًا مِّنْ قَبْلِهٖ ؕ اَفَلَا تَعْقِلُوْنَ‏
10:16. "(இதை நான் உங்களுக்கு ஓதிக்காட்டக்கூடாது என்று) அல்லாஹ் நாடியிருந்தால், இதனை நான் உங்களிடம் ஓதிக்காண்பித்திருக்கமாட்டேன்; மேலும், அதைப்பற்றி உங்களுக்கு அவன் அறிவித்திருக்கமாட்டான்: நிச்சயமாக நான் இதற்கு முன்னர், உங்களிடையே நீண்டகாலம் வசித்திருக்கிறேன்; இதை நீங்கள் விளங்கிக் கொள்ளவேண்டாமா?" என்று (நபியே!) நீர் கூறுவீராக!
10:42   وَمِنْهُمْ مَّنْ يَّسْتَمِعُوْنَ اِلَيْكَ‌ؕ اَفَاَنْتَ تُسْمِعُ الصُّمَّ وَلَوْ كَانُوْا لَا يَعْقِلُوْنَ‏
10:42. இன்னும், உமக்குச் செவிமடுப்பவர்களும் அவர்களில் இருக்கின்றனர்; எதுவுமே விளங்கிக்கொள்ள இயலாச் செவிடர்களை நீர் கேட்கும்படிச் செய்யமுடியுமா?
10:100   وَمَا كَانَ لِنَفْسٍ اَنْ تُؤْمِنَ اِلَّا بِاِذْنِ اللّٰهِ‌ؕ وَيَجْعَلُ الرِّجْسَ عَلَى الَّذِيْنَ لَا يَعْقِلُوْنَ‏
10:100. எந்த ஓர் ஆத்மாவிற்கும் அல்லாஹ்வின் கட்டளையின்றி அது நம்பிக்கை கொள்ள முடியாது; மேலும், (இதனை) விளங்காதவர்கள் மீது வேதனையை அவன் ஏற்படுத்துகிறான்.
11:51   يٰقَوْمِ لَاۤ اَسْــٴَــلُكُمْ عَلَيْهِ اَجْرًا‌ ؕ اِنْ اَجْرِىَ اِلَّا عَلَى الَّذِىْ فَطَرَنِىْ ؕ اَفَلَا تَعْقِلُوْنَ‏
11:51. "என் சமூகத்தாரே! இதற்காக நான் உங்களிடம் ஒரு கூலியும் கேட்கவில்லை; எனக்குரிய கூலி எல்லாம் என்னைப் படைத்தவனிடமே இருக்கிறது - நீங்கள் (இதை) விளங்கிக்கொள்ளமாட்டீர்களா?" (என்றும்,)
12:2   اِنَّاۤ اَنْزَلْنٰهُ قُرْءٰنًا عَرَبِيًّا لَّعَلَّكُمْ تَعْقِلُوْنَ‏
12:2. நீங்கள் விளங்கிக்கொள்வதற்காக, இதனை அரபி (மொழி)யிலான குர்ஆனாக நிச்சயமாக நாமே இறக்கிவைத்தோம்.
12:109   وَمَاۤ اَرْسَلْنَا مِنْ قَبْلِكَ اِلَّا رِجَالًا نُّوْحِىْۤ اِلَيْهِمْ مِّنْ اَهْلِ الْقُرٰى‌ؕ اَفَلَمْ يَسِيْرُوْا فِى الْاَرْضِ فَيَنْظُرُوْا كَيْفَ كَانَ عَاقِبَةُ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْؕ وَلَدَارُ الْاٰخِرَةِ خَيْرٌ لِّـلَّذِيْنَ اتَّقَوْا ‌ؕ اَفَلَا تَعْقِلُوْنَ‏
12:109. (நபியே!) உமக்கு முன்னர், பல ஊர்வாசிகளிலிருந்தும் மனிதர்களைத்தவிர (வேறு எவரையும்) தூதர்களாக நாம் அனுப்பவில்லை; அவர்களுக்கு நாம் 'வஹீ' மூலம் (நம் கட்டளைகளை) அறிவித்தோம்; இவர்கள் பூமியில் பயணம் செய்து இவர்களுக்கு முன் இருந்தவர்களின் முடிவு எப்படியிருந்தது என்பதைப் பார்க்கவில்லையா? மறுமை வீடுதான் (அல்லாஹ்வை) அஞ்சுபவர்களுக்கு மிகவும் மேலானதாகும்; (இதனை) நீங்கள் (சிந்தித்து) விளங்கிக்கொள்ள வேண்டாமா?
13:4   وَ فِى الْاَرْضِ قِطَعٌ مُّتَجٰوِرٰتٌ وَّجَنّٰتٌ مِّنْ اَعْنَابٍ وَّزَرْعٌ وَّنَخِيْلٌ صِنْوَانٌ وَّغَيْرُ صِنْوَانٍ يُّسْقٰى بِمَآءٍ وَّاحِدٍ وَنُفَضِّلُ بَعْضَهَا عَلٰى بَعْضٍ فِى الْاُكُلِ‌ؕ اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيٰتٍ لِّـقَوْمٍ يَّعْقِلُوْنَ‏
13:4. இன்னும், பூமியில் அருகருகே இணைந்தாற்போல் பல பகுதிகள் உள்ளன; இன்னும் திராட்சைத் தோட்டங்களும், விளைநிலங்களும், கிளைகள் உள்ளதும், கிளைகள் இல்லாததுமான பேரீச்சையும் உள்ளன; (இவையனைத்திற்கும்) ஒரே தண்ணீர் கொண்டுதான் பாய்ச்சப்படுகிறது; (எனினும்,) அவற்றில் சிலவற்றை வேறு சிலவற்றைவிட சுவையில் நாம் மேன்மையாக்கியிருக்கின்றோம்; நிச்சயமாக இவற்றில் விளங்குகின்ற சமூகத்தாருக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
16:12   وَسَخَّرَ لَـكُمُ الَّيْلَ وَالنَّهَارَۙ وَالشَّمْسَ وَالْقَمَرَ‌ؕ وَالنُّجُوْمُ مُسَخَّرٰتٌۢ بِاَمْرِهٖؕ اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيٰتٍ لِّـقَوْمٍ يَّعْقِلُوْنَۙ‏
16:12. இன்னும், அவனே இரவையும் பகலையும் சூரியனையும் சந்திரனையும், உங்கள் நலன்களுக்கு வசப்படுத்திக் கொடுத்துள்ளான்; அவ்வாறே நட்சத்திரங்களும் அவன் கட்டளைப்படியே வசப்படுத்தப்பட்டுள்ளன; நிச்சயமாக இதிலும் விளங்கும் கூட்டத்தாருக்குத் தக்க அத்தாட்சிகள் இருக்கின்றன.
16:68   وَاَوْحٰى رَبُّكَ اِلَى النَّحْلِ اَنِ اتَّخِذِىْ مِنَ الْجِبَالِ بُيُوْتًا وَّمِنَ الشَّجَرِ وَمِمَّا يَعْرِشُوْنَۙ‏
16:68. உம் இறைவன் தேனீக்களுக்கு அதன் உள்ளுணர்வை அளித்தான்: "நீ மலைகளிலும், மரங்களிலும், (மனிதர்களாகிய) அவர்கள் கட்டுபவைகளிலும் கூடுகளை அமைத்துக்கொள்" (என்றும்).
21:10   لَقَدْ اَنْزَلْنَاۤ اِلَيْكُمْ كِتٰبًا فِيْهِ ذِكْرُكُمْ‌ؕ اَفَلَا تَعْقِلُوْنَ‏
21:10. உங்களுக்கு நிச்சயமாக நாம் ஒரு வேதத்தை அருளியிருக்கின்றோம்; அதில் உங்களுக்கு அறிவுரை இருக்கின்றது; நீங்கள் விளங்கிக் கொள்ளமாட்டீர்களா?
21:67   اُفٍّ لَّـكُمْ وَلِمَا تَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ‌ؕ اَفَلَا تَعْقِلُوْنَ‏
21:67. "சீச்சீ! உங்களுக்கும், நீங்கள் வணங்கும் அல்லாஹ் அல்லாதவற்றுக்கும் (கேடுதான்); நீங்கள் இதனை அறிந்து கொள்ளவில்லையா?" (என்று இப்ராஹீம் கூறினார்).
22:46   اَفَلَمْ يَسِيْرُوْا فِى الْاَرْضِ فَتَكُوْنَ لَهُمْ قُلُوْبٌ يَّعْقِلُوْنَ بِهَاۤ اَوْ اٰذَانٌ يَّسْمَعُوْنَ بِهَا‌ ۚ فَاِنَّهَا لَا تَعْمَى الْاَبْصَارُ وَلٰـكِنْ تَعْمَى الْـقُلُوْبُ الَّتِىْ فِى الصُّدُوْرِ‏
22:46. அவர்கள் பூமியில் பயணம் செய்து (இவற்றைப்) பார்க்கவில்லையா? (அவ்வாறு பார்த்திருந்தால்) அவர்களுக்கு விளங்கிக்கொள்ளக்கூடிய உள்ளங்களும், (நல்லவற்றைச்) செவியேற்கும் காதுகளும் உண்டாகியிருக்கும்; நிச்சயமாக (புறக்) கண்கள் குருடாகவில்லை; எனினும், நெஞ்சுக்குள்ளே இருக்கும் இதயங்கள் (அகக் கண்கள்)தாம் குருடாகின்றன.
23:80   وَهُوَ الَّذِىْ يُحْىٖ وَيُمِيْتُ وَلَـهُ اخْتِلَافُ الَّيْلِ وَالنَّهَارِ‌ؕ اَفَلَا تَعْقِلُوْنَ‏
23:80. அவனே உயிர் கொடுக்கிறான்; இன்னும், அவனே மரணிக்கச் செய்கிறான்; மற்றும் இரவும், பகலும் மாறி மாறி வருவதும் அவனுக்குரியதே! (இவற்றை) நீங்கள் விளங்கிக் கொள்ளமாட்டீர்களா?
24:61   لَـيْسَ عَلَى الْاَعْمٰى حَرَجٌ وَّلَا عَلَى الْاَعْرَجِ حَرَجٌ وَّلَا عَلَى الْمَرِيْضِ حَرَجٌ وَّلَا عَلٰٓى اَنْفُسِكُمْ اَنْ تَاْكُلُوْا مِنْۢ بُيُوْتِكُمْ اَوْ بُيُوْتِ اٰبَآٮِٕكُمْ اَوْ بُيُوْتِ اُمَّهٰتِكُمْ اَوْ بُيُوْتِ اِخْوَانِكُمْ اَوْ بُيُوْتِ اَخَوٰتِكُمْ اَوْ بُيُوْتِ اَعْمَامِكُمْ اَوْ بُيُوْتِ عَمّٰتِكُمْ اَوْ بُيُوْتِ اَخْوَالِكُمْ اَوْ بُيُوْتِ خٰلٰتِكُمْ اَوْ مَا مَلَكْتُمْ مَّفَاتِحَهٗۤ اَوْ صَدِيْقِكُمْ‌ؕ لَـيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ اَنْ تَاْكُلُوْا جَمِيْعًا اَوْ اَشْتَاتًا‌ ؕ فَاِذَا دَخَلْتُمْ بُيُوْتًا فَسَلِّمُوْا عَلٰٓى اَنْفُسِكُمْ تَحِيَّةً مِّنْ عِنْدِ اللّٰهِ مُبٰرَكَةً طَيِّبَةً‌  ؕ كَذٰلِكَ يُبَيِّنُ اللّٰهُ لَـكُمُ الْاٰيٰتِ لَعَلَّكُمْ تَعْقِلُوْنَ‏
24:61. (நம்பிக்கையாளர்களே! உங்களுடன் சேர்ந்து உணவருந்துவதில்) குருடர் மீதும் குற்றமில்லை, முடவர் மீதும் குற்றமில்லை, நோயாளியின் மீதும் குற்றமில்லை; நீங்கள் உங்கள் சொந்த வீடுகளிலோ, அல்லது உங்கள் தந்தைமார் வீடுகளிலோ, அல்லது தாய்மார் வீடுகளிலோ, அல்லது சகோதரர்கள் வீடுகளிலோ, அல்லது சகோதரிகள் வீடுகளிலோ, அல்லது உங்கள் தந்தையின் சகோதரர்கள் வீடுகளிலோ, அல்லது உங்கள் தந்தையின் சகோதரிகள் வீடுகளிலோ, அல்லது உங்கள் தாயின் சகோதரர்கள் வீடுகளிலோ, அல்லது உங்கள் தாயின் சகோதரிகள் வீடுகளிலோ, அல்லது எந்த வீட்டினுடைய சாவிகள் உங்கள் வசம் இருக்கிறதோ (அதிலும்), அல்லது உங்கள் தோழரிடத்திலோ நீங்கள் உண்பது உங்கள் மீது குற்றமில்லை; நீங்கள் சேர்ந்தோ அல்லது தனித்தனியாகவோ புசிப்பது உங்கள் மீது குற்றமாகாது; ஆனால், நீங்கள் எந்த வீட்டில் பிரவேசித்தாலும் அல்லாஹ்விடமிருந்துள்ள பாக்கியமிக்க பரிசுத்தமான காணிக்கையாக (அஸ்ஸலாமு அலைக்கும் என்று) நீங்கள் உங்களுக்குள் முகமன் கூறிக்கொள்ளுங்கள்: நீங்கள் விளங்கிக்கொள்வதற்காக, இவ்வாறு அல்லாஹ் உங்களுக்கு(த் தன்) வசனங்களை விவரிக்கிறான்.
25:44   اَمْ تَحْسَبُ اَنَّ اَكْثَرَهُمْ يَسْمَعُوْنَ اَوْ يَعْقِلُوْنَ‌ ؕ اِنْ هُمْ اِلَّا كَالْاَنْعَامِ‌ بَلْ هُمْ اَضَلُّ سَبِيْلًا‏
25:44. அல்லது, நிச்சயமாக அவர்களில் பெரும்பாலோர் (உம் உபதேசத்தைக்) கேட்கிறார்கள்; அல்லது, விளங்கிக்கொள்கிறார்கள் என்று நீர் நினைக்கின்றீரா? அவர்கள் கால்நடைகளைப் போன்றவர்களேயன்றி வேறில்லை; அன்றியும் (அவற்றை விடவும்) அவர்கள் மிகவும் வழி கெட்டவர்கள்.
26:28   قَالَ رَبُّ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ وَمَا بَيْنَهُمَا ؕ اِنْ كُنْتُمْ تَعْقِلُوْنَ‏
26:28. (அதற்கு மூஸா:) "நீங்கள் விளங்கிக்கொள்பவர்களாக இருப்பீர்களாயின், (அவனே) கிழக்கிற்கும், மேற்கிற்கும், இன்னும் இவ்விரண்டிற்குமிடையே இருப்பவற்றிற்கும் இறைவன் ஆவான்" எனக் கூறினார்.
28:60   وَمَاۤ اُوْتِيْتُمْ مِّنْ شَىْءٍ فَمَتَاعُ الْحَيٰوةِ الدُّنْيَا وَزِيْنَـتُهَا‌ ۚ وَمَا عِنْدَ اللّٰهِ خَيْرٌ وَّاَبْقٰى‌ ؕ اَفَلَا تَعْقِلُوْنَ‏
28:60. மேலும், உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருப்பவையெல்லாம் (அற்பமாகிய) இவ்வுலக வாழ்க்கையின் சுகமும், அதனுடைய அலங்காரமும்தான்; ஆனால், அல்லாஹ்விடத்தில் இருப்பவை மிகவும் மேலானவையாகவும், நிலையானவையாகவும் இருக்கின்றன; (இதை) நீங்கள் அறிந்துகொள்ளமாட்டீர்களா?
29:35   وَلَقَدْ تَّرَكْنَا مِنْهَاۤ اٰيَةًۢ بَيِّنَةً لِّـقَوْمٍ يَّعْقِلُوْنَ‏
29:35. (அவ்வாறே, அவ்வூரார் அழிந்தனர்.) அறிவுள்ள சமூகத்தாருக்கு இதிலிருந்தும் நாம் ஒரு தெளிவான அத்தாட்சியை விட்டுவைத்துள்ளோம்.
29:43   وَتِلْكَ الْاَمْثَالُ نَضْرِبُهَا لِلنَّاسِ‌ۚ وَمَا يَعْقِلُهَاۤ اِلَّا الْعٰلِمُوْنَ‏
29:43. இவ்வுதாரணங்கள் - மனிதர்களுக்காக இவற்றை நாம் கூறுகிறோம்; ஆனால், அறிவுடையவர்களைத் தவிர வேறெவரும் இதனை விளங்கிக்கொள்ளமாட்டார்கள்.
29:63   وَلَٮِٕنْ سَاَلْتَهُمْ مَّنْ نَّزَّلَ مِنَ السَّمَآءِ مَآءً فَاَحْيَا بِهِ الْاَرْضَ مِنْۢ بَعْدِ مَوْتِهَا لَيَقُوْلُنَّ اللّٰهُ‌ؕ قُلِ الْحَمْدُ لِلّٰهِ‌ؕ بَلْ اَكْثَرُهُمْ لَا يَعْقِلُوْنَ‏
29:63. இன்னும் அவர்களிடம் "வானத்திலிருந்து நீரை இறக்கி, பிறகு அதனைக்கொண்டு இப்பூமியை - அது (காய்ந்து) செத்தபின் உயிர்ப்பிப்பவன் யார்?" என்று நீர் கேட்பீராகில், "அல்லாஹ்" என்றே இவர்கள் திட்டமாகக் கூறுவார்கள்; (அதற்கு) "புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது" என்று நீர் கூறுவீராக! எனினும், இவர்களில் பெரும்பாலோர் விளங்கமாட்டார்கள்.
30:24   وَمِنْ اٰيٰتِهٖ يُرِيْكُمُ الْبَرْقَ خَوْفًا وَّطَمَعًا وَّيُنَزِّلُ مِنَ السَّمَآءِ مَآءً فَيُحْىٖ بِهِ الْاَرْضَ بَعْدَ مَوْتِهَا ‌ؕ اِنَّ فِىْ ذٰلِكَ لَاٰيٰتٍ لِّقَوْمٍ يَّعْقِلُوْنَ‏
30:24. அச்சமும், ஆசையும் ஏற்படும்படி அவன் உங்களுக்கு மின்னலைக் காட்டுவதும், பிறகு வானத்திலிருந்து மழை பொழியச் செய்து, அதைக் கொண்டு பூமியை - அது (வறண்டு) இறந்த பின்னர் - உயிர்ப்பிப்பதும் அவனுடைய அத்தாட்சிகளினின்றும் உள்ளன; நிச்சயமாக அதில் விளங்குகின்ற சமூகத்திற்கு அத்தாட்சிகள் இருக்கின்றன.
30:28   ضَرَبَ لَكُمْ مَّثَلًا مِّنْ اَنْفُسِكُمْ‌ؕ هَلْ لَّكُمْ مِّنْ مَّا مَلَـكَتْ اَيْمَانُكُمْ مِّنْ شُرَكَآءَ فِىْ مَا رَزَقْنٰكُمْ فَاَنْتُمْ فِيْهِ سَوَآءٌ تَخَافُوْنَهُمْ كَخِيْفَتِكُمْ اَنْفُسَكُمْ‌ؕ كَذٰلِكَ نُفَصِّلُ الْاٰيٰتِ لِقَوْمٍ يَّعْقِلُوْنَ‏
30:28. உங்களிலிருந்தே அவன் உங்களுக்காக ஓர் உதாரணத்தை எடுத்துக்கூறுகிறான்: உங்களுக்கு நாம் வழங்கியவற்றில் உங்களுடைய அடிமைகளிலிருந்து உங்களுக்குக் கூட்டாளிகள் (இருப்பதை நீங்கள் விரும்புவது) உண்டா? நீங்களும் (அவர்களும்) அதில் சமமாக இருந்து, உங்களை(ப் போன்ற சுதந்திரமான பங்காளிகளின் விருப்பு - வெறுப்புகளை) நீங்கள் பயப்படுவது போல் (அடிமைக் கூட்டாளிகளான) இவர்களை நீங்கள் பயப்படுவீர்களா? இவ்வாறாகவே, நாம் நம் அத்தாட்சிகளை விளங்கும் சமூகத்திற்கு விவரிக்கிறோம்.
36:62   وَلَقَدْ اَضَلَّ مِنْكُمْ جِبِلًّا كَثِيْرًا‌ ؕ اَفَلَمْ تَكُوْنُوْا تَعْقِلُوْنَ‏
36:62. அவ்வாறிருந்தும், நிச்சயமாக அவன் உங்களில் மிகுதியான மக்களை வழிகெடுத்துவிட்டான்; இதை நீங்கள் அறிந்துகொள்ளவில்லையா?
36:68   وَمَنْ نُّعَمِّرْهُ نُـنَكِّسْهُ فِى الْخَـلْقِ‌ؕ اَفَلَا يَعْقِلُوْنَ‏
36:68. மேலும், எவரை நாம் வயோதிகமாக்குகிறோமோ, அவரைப் படைப்பில் நாம் தலைகீழாக்கிவிடுகிறோம்; (இளமைக்குப் பின் முதுமையையும், சக்திக்குப் பின் பலவீனத்தையும் உண்டாக்குகிறோம்;) அவர்கள் இதை விளங்கிக்கொள்ளவேண்டாமா?
37:138   وَبِالَّيْلِ‌ؕ اَفَلَا تَعْقِلُوْنَ‌‏
37:138. இன்னும், இரவிலும் கூட(ச் செல்கிறீர்கள்; இதைக் கொண்டு) நீங்கள் நல்லறிவு பெறமாட்டீர்களா?
39:43   اَمِ اتَّخَذُوْا مِنْ دُوْنِ اللّٰهِ شُفَعَآءَ‌ ؕ قُلْ اَوَلَوْ كَانُوْا لَا يَمْلِكُوْنَ شَيْـٴًـــا وَّلَا يَعْقِلُوْنَ‏
39:43. அவர்கள் அல்லாஹ் அல்லாதவற்றை(த் தங்களுக்குப்) பரிந்துபேசுபவர்களாக எடுத்துக் கொண்டார்களா? (நபியே!) நீர் கூறுவீராக! "அவை எப்பொருளுக்கும் அதிகாரம் இல்லாதவையாகவும், (எதனையும்) விளங்காதவையாகவும் இருந்தாலுமா?" (என்று.)
40:67   هُوَ الَّذِىْ خَلَقَكُمْ مِّنْ تُرَابٍ ثُمَّ مِنْ نُّطْفَةٍ ثُمَّ مِنْ عَلَقَةٍ ثُمَّ يُخْرِجُكُمْ طِفْلًا ثُمَّ لِتَبْلُغُوْۤا اَشُدَّكُمْ ثُمَّ لِتَكُوْنُوْا شُيُوْخًا ؕ وَمِنْكُمْ مَّنْ يُّتَوَفّٰى مِنْ قَبْلُ وَلِتَبْلُغُوْۤا اَجَلًا مُّسَمًّى وَّلَعَلَّكُمْ تَعْقِلُوْنَ‏
40:67. அவன்தான் உங்களை மண்ணிலிருந்து படைத்தான்; பின் இந்திரியத்திலிருந்தும், பின் இரத்தக் கட்டியிலிருந்தும் (உருவாக்கி), உங்களைக் குழந்தையாக வெளியாக்குகிறான்; பின் நீங்கள் உங்கள் வாலிபத்தை அடைந்து, பின்னர் முதியோராகுகிறீர்கள்; இதற்கு முன்னர் இறந்து விடுவோரும் உங்களில் இருக்கின்றனர்; இன்னும், நீங்கள் ஒரு குறிப்பிட்ட தவணையை அடைவீர்கள்; (இதிலிருந்து) நீங்கள் விளங்கிக் கொள்ளும் பொருட்டு (இதை அறிந்து கொள்ளுங்கள்).
43:3   اِنَّا جَعَلْنٰهُ قُرْءٰنًا عَرَبِيًّا لَّعَلَّكُمْ تَعْقِلُوْنَ‌ۚ‏
43:3. நீங்கள் அறிந்துகொள்வதற்காக, இதனை நாம் அரபி மொழியிலான குர்ஆனாக நிச்சயமாக ஆக்கியிருக்கிறோம்.
45:5   وَاخْتِلَافِ الَّيْلِ وَالنَّهَارِ وَمَاۤ اَنْزَلَ اللّٰهُ مِنَ السَّمَآءِ مِنْ رِّزْقٍ فَاَحْيَا بِهِ الْاَرْضَ بَعْدَ مَوْتِهَا وَ تَصْرِيْفِ الرِّيٰحِ اٰيٰتٌ لِّقَوْمٍ يَّعْقِلُوْنَ‏
45:5. மேலும், இரவு பகல் மாறி மாறி வருவதிலும், வானத்திலிருந்தும் அருள் மழையை அல்லாஹ் இறக்கிவைத்து, இறந்துபோன பூமியை அதைக் கொண்டு உயிர்ப்பிப்பதிலும், காற்றுகளை மாறி மாறி வீசச் செய்வதிலும் அறிவுடைய சமூகத்தாருக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன.
49:4   اِنَّ الَّذِيْنَ يُنَادُوْنَكَ مِنْ وَّرَآءِ الْحُجُرٰتِ اَكْثَرُهُمْ لَا يَعْقِلُوْنَ‏
49:4. (நபியே!) நிச்சயமாக, எவர்கள் (உம்) அறைகளுக்கு வெளியே இருந்து உம்மை (உரக்க) அழைக்கின்றார்களோ, அவர்களில் பெரும்பாலோர் விளங்கிக் கொள்ளாதவர்களே!
57:17   اِعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ يُحْىِ الْاَرْضَ بَعْدَ مَوْتِهَا‌ؕ قَدْ بَيَّنَّا لَكُمُ الْاٰيٰتِ لَعَلَّكُمْ تَعْقِلُوْنَ‏
57:17. அறிந்துகொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் பூமியை அது (வரண்டு) இறந்ததன் பின் உயிர்ப்பிக்கிறான்; நீங்கள் விளங்கிக்கொள்வதற்காக நாம் இவ்வசனங்களை உங்களுக்குத் தெளிவாக விவரிக்கின்றோம்.
59:14   لَا يُقَاتِلُوْنَكُمْ جَمِيْعًا اِلَّا فِىْ قُرًى مُّحَصَّنَةٍ اَوْ مِنْ وَّرَآءِ جُدُرٍؕ بَاْسُهُمْ بَيْنَهُمْ شَدِيْدٌ ‌ؕ تَحْسَبُهُمْ جَمِيْعًا وَّقُلُوْبُهُمْ شَتّٰى‌ؕ ذٰلِكَ بِاَنَّهُمْ قَوْمٌ لَّا يَعْقِلُوْنَ‌ۚ‏
59:14. கோட்டைகளால் அரண் செய்யப்பட்ட ஊர்களிலோ அல்லது மதில்களுக்கு அப்பால் இருந்துகொண்டோ அல்லாமல், அவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து உங்களுடன் போரிடமாட்டார்கள்; அவர்களுக்குள்ளேயே அவர்களுடைய போர் மிகக் கடுமையானது; (இந்நிலையில்) அவர்கள் யாவரும் ஒன்றுபட்டிருப்பதாக நீர் எண்ணுகிறீர்; (ஆனால்,) அவர்களுடைய இதயங்கள் சிதறிக் கிடக்கின்றன; இதற்குக் காரணம்: மெய்யாகவே அவர்கள் அறிவற்ற சமூகத்தார் என்பதுதான்.
67:10   وَقَالُوْا لَوْ كُنَّا نَسْمَعُ اَوْ نَعْقِلُ مَا كُنَّا فِىْۤ اَصْحٰبِ السَّعِيْرِ‏
67:10. இன்னும், அவர்கள் கூறுவார்கள்: "நாங்கள் (அவர் போதனையைச்) செவியுற்றோ அல்லது சிந்தித்தோ இருந்திருந்தோமானால் நாங்கள் நரகவாசிகளில் இருந்திருக்கமாட்டோம்."