சிரம் பணிதல்
7:120 وَ اُلْقِىَ السَّحَرَةُ سٰجِدِيْنَ ۙ
7:120. அன்றியும், அந்தச் சூனியக்காரர்கள் ஸஜ்தாவில் வீழ்ந்தார்கள்.
12:4 اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ لِىْ سٰجِدِيْنَ
12:4. யூஸுஃப் தம் தந்தையிடம், "என் அருமைத் தந்தையே! நிச்சயமாக நான், பதினோரு நட்சத்திரங்களையும், சூரியனையும், சந்திரனையும் (கனவில்) கண்டேன்; (இவை யாவும்) எனக்குச் சிரம் பணிபவையாக அவற்றை நான் கண்டேன்" என்று கூறியபொழுது.
12:100 وَرَفَعَ اَبَوَيْهِ عَلَى الْعَرْشِ وَخَرُّوْا لَهٗ سُجَّدًاۚ وَقَالَ يٰۤاَبَتِ هٰذَا تَاْوِيْلُ رُءْيَاىَ مِنْ قَبْلُقَدْ جَعَلَهَا رَبِّىْ حَقًّاؕ وَقَدْ اَحْسَنَ بِىْۤ اِذْ اَخْرَجَنِىْ مِنَ السِّجْنِ وَجَآءَ بِكُمْ مِّنَ الْبَدْوِ مِنْۢ بَعْدِ اَنْ نَّزَغَ الشَّيْطٰنُ بَيْنِىْ وَبَيْنَ اِخْوَتِىْؕ اِنَّ رَبِّىْ لَطِيْفٌ لِّمَا يَشَآءُؕ اِنَّهٗ هُوَ الْعَلِيْمُ الْحَكِيْمُ
12:100. இன்னும், அவர் தம் தாய், தந்தையரைச் சிம்மாசனத்தின்மீது உயர்த்தி (அமர்த்தி)னார்; அவர்கள் (எல்லோரும் அக்காலத்திய முறைப்படி) அவருக்கு (மரியாதை செலுத்தியவர்களாகச்) சிரம்பணிந்து வீழ்ந்தனர்: அப்போது அவர் (தம் தந்தையை நோக்கி), "என் தந்தையே! இதுதான் என்னுடைய முந்தைய கனவின் விளக்கமாகும்; அதனை என் இறைவன் உண்மையாக்கிவிட்டான்: மேலும், அவன் என்னைச் சிறைச்சாலையிலிருந்து வெளியாக்கியதுடன், எனக்கும் என் சகோதரர்களுக்குமிடையில் ஷைத்தான் பிரிவினையை உண்டு பண்ணிவிட்ட பின்னர், உங்களைக் கிராமத்திலிருந்து கொண்டுவந்ததன் மூலம், அவன் நிச்சயமாக எனக்குப் பேருபகாரம் செய்துள்ளான்; நிச்சயமாக என் இறைவன், தான் நாடியவற்றை மிக நுட்பமாகச் செய்கிறவன்; நிச்சயமாக அவன் (யாவற்றையும்) நன்கறிந்தவன்; மிக்க ஞானமுள்ளவன்" என்று கூறினார்.
15:29 فَاِذَا سَوَّيْتُهٗ وَنَفَخْتُ فِيْهِ مِنْ رُّوْحِىْ فَقَعُوْا لَهٗ سٰجِدِيْنَ
15:29. "அவரை நான் செவ்வையாக உருவாக்கி, அவரில் என் ஆன்மாவிலிருந்து ஊதியதும், 'அவருக்குப் பணிந்துவிடுங்கள்' (என்றும் கூறியதை நினைவுகூர்வீராக)!"
15:30 فَسَجَدَ الْمَلٰۤٮِٕكَةُ كُلُّهُمْ اَجْمَعُوْنَۙ
15:30. அவ்வாறே வானவர்கள் - அவர்கள் எல்லோரும் பணிந்தார்கள்.
15:31 اِلَّاۤ اِبْلِيْسَؕ اَبٰٓى اَنْ يَّكُوْنَ مَعَ السّٰجِدِيْنَ
15:31. இப்லீஸைத் தவிர: அவன் பணிந்தவர்களுடன் சேர்ந்திட மறுத்துவிட்டான்.
15:32 قَالَ يٰۤاِبْلِيْسُ مَا لَـكَ اَلَّا تَكُوْنَ مَعَ السّٰجِدِيْنَ
15:32. "இப்லீஸே! பணிந்தவர்களுடனே நீயும் சேராமல் (விலகி) இருந்ததற்குக் காரணம் என்ன?" என்று (இறைவன்) கேட்டான்.
15:33 قَالَ لَمْ اَكُنْ لِّاَسْجُدَ لِبَشَرٍ خَلَقْتَهٗ مِنْ صَلْصَالٍ مِّنْ حَمَاٍ مَّسْنُوْنٍ
15:33. அதற்கு இப்லீஸ், "ஓசை தரும், மாற்றமடைந்த கறுப்பான களிமண்ணிலிருந்து, நீ படைத்துள்ள (ஒரு) மனிதனுக்கு நான் பணிவதற்கில்லை!" என்று கூறினான்.