சிலை வணக்கம்
5:90   يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالْاَنْصَابُ وَالْاَزْلَامُ رِجْسٌ مِّنْ عَمَلِ الشَّيْطٰنِ فَاجْتَنِبُوْهُ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ‏
5:90. நம்பிக்கை கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், (வணக்கத்திற்காக நட்டுவைக்கப்பட்டிருக்கும்) சிலைகளும், குறிபார்க்கும் அம்புகளும் ஷைத்தானின் செயலிலுள்ள அருவருக்கத் தக்கவையாகும்; ஆகவே, இவற்றைத் தவிர்த்துக்கொள்ளுங்கள் - அதனால், நீங்கள் வெற்றியடைவீர்கள்.
14:35   وَاِذْ قَالَ اِبْرٰهِيْمُ رَبِّ اجْعَلْ هٰذَا الْبَلَدَ اٰمِنًا وَّاجْنُبْنِىْ وَبَنِىَّ اَنْ نَّـعْبُدَ الْاَصْنَامَؕ‏
14:35. "என் இறைவனே! இந்த ஊரை (மக்காவை) சமாதானமுள்ளதாய், அச்சம் தீர்ந்ததாய் ஆக்குவாயாக! என்னையும், என் மக்களையும் சிலைகளை நாங்கள் வணங்குவதிலிருந்து காப்பாற்றுவாயாக!" என்று இப்ராஹீம் கூறியதை (நபியே! நீர் அவர்களுக்கு நினைவுகூரும்).
26:71   قَالُوْا نَـعْبُدُ اَصْنَامًا فَنَظَلُّ لَهَا عٰكِفِيْنَ‏
26:71. அவர்கள்: "நாங்கள் சிலைகளை வணங்குகிறோம்; நாம் அவற்றின் வணக்கத்திலேயே நிலைத்திருக்கிறோம்" என்று கூறினார்கள்.
29:17   اِنَّمَا تَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ اَوْثَانًا وَّتَخْلُقُوْنَ اِفْكًا‌ ؕ اِنَّ الَّذِيْنَ تَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ لَا يَمْلِكُوْنَ لَـكُمْ رِزْقًا فَابْتَغُوْا عِنْدَ اللّٰهِ الرِّزْقَ وَاعْبُدُوْهُ وَاشْكُرُوْا لَهٗ ؕ اِلَيْهِ تُرْجَعُوْنَ‏
29:17. அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குவதெல்லாம் சிலைகளைத்தான்; மேலும், நீங்கள் பொய்யாகப் படைத்துக்கொண்டீர்கள்; நிச்சயமாக, அல்லாஹ்வைத் தவிர நீங்கள் வணங்கிவருபவை உங்களுக்கு உணவளிக்க சக்திபெறமாட்டா? ஆதலால், நீங்கள் அல்லாஹ்விடமே உணவைத் தேடுங்கள்; அவனையே வணங்குங்கள்; அவனுக்கே நன்றிசெலுத்துங்கள்; அவனிடத்திலேயே நீங்கள் திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள்.