சிறுமை
3:127 لِيَقْطَعَ طَرَفًا مِّنَ الَّذِيْنَ كَفَرُوْۤا اَوْ يَكْبِتَهُمْ فَيَنْقَلِبُوْا خَآٮِٕبِيْنَ
3:127. (அல்லாஹ் உதவிபுரிந்ததன் நோக்கம்) நிராகரிப்போரில் ஒரு பகுதியினரை அழிப்பதற்காக அல்லது அவர்களைச் சிறுமைப்படுத்துவதற்காகவுமேயாகும்; அப்போது அவர்கள் தோல்வியடைந்தோராய் திரும்பிச் சென்றுவிடுவர்.
6:124 وَاِذَا جَآءَتْهُمْ اٰيَةٌ قَالُوْا لَنْ نُّـؤْمِنَ حَتّٰى نُؤْتٰى مِثْلَ مَاۤ اُوْتِىَ رُسُلُ اللّٰهِؔۘؕ اَللّٰهُ اَعْلَمُ حَيْثُ يَجْعَلُ رِسٰلَـتَهٗ ؕ سَيُصِيْبُ الَّذِيْنَ اَجْرَمُوْا صَغَارٌ عِنْدَ اللّٰهِ وَعَذَابٌ شَدِيْدٌۢ بِمَا كَانُوْا يَمْكُرُوْنَ
6:124. அவர்களுக்கு ஏதாவது ஓர் அத்தாட்சி வந்தால் - அவர்கள், "அல்லாஹ்வின் தூதர்களுக்குக் கொடுக்கப்பட்டதுபோல் எங்களுக்கும் கொடுக்கப்படாதவரையில் நாங்கள் நம்பிக்கை கொள்ளவேமாட்டோம்" என்று கூறுகிறார்கள்; அல்லாஹ் தனது தூதை எங்கு வைக்க வேண்டும் (எவருக்குக் கொடுக்கவேண்டும்) என்பதை மிக அறிந்தவன்; குற்றம் செய்துகொண்டிருந்தோரை - அவர்கள் சதிசெய்துகொண்டிருந்த காரணத்தால் அல்லாஹ்விடமிருந்து சிறுமையும் கொடிய வேதனையும் வந்தடையும்.
7:13 قَالَ فَاهْبِطْ مِنْهَا فَمَا يَكُوْنُ لَـكَ اَنْ تَتَكَبَّرَ فِيْهَا فَاخْرُجْ اِنَّكَ مِنَ الصّٰغِرِيْنَ
7:13. "இதிலிருந்து நீ இறங்கிவிடு! இங்கே நீ பெருமையடிப்பது தகாது. ஆதலால், (இங்கிருந்து) நீ வெளியேறு - நிச்சயமாக நீ சிறுமை அடைந்தோரில் ஒருவனாகிவிட்டாய்" என்று (அல்லாஹ்) கூறினான்.
7:119 فَغُلِبُوْا هُنَالِكَ وَانْقَلَبُوْا صٰغِرِيْنَۚ
7:119. அங்கேயே தோற்கடிக்கப்பட்டார்கள்; இன்னும், அவர்கள் சிறுமை அடைந்தவர்களாகவும் திரும்பினர்.
12:32 قَالَتْ فَذٰلِكُنَّ الَّذِىْ لُمْتُنَّنِىْ فِيْهِؕ وَ لَـقَدْ رَاوَدْتُّهٗ عَنْ نَّـفْسِهٖ فَاسْتَعْصَمَؕ وَلَٮِٕنْ لَّمْ يَفْعَلْ مَاۤ اٰمُرُهٗ لَـيُسْجَنَنَّ وَلَيَكُوْنًا مِّنَ الصّٰغِرِيْنَ
12:32. அதற்கவள், "நீங்கள் எவர் சம்பந்தமாக என்னை நிந்தித்தீர்களோ, அவர்தாம் இவர்; நிச்சயமாக நான் அவரை - அவர் விருப்பத்திற்கு மாறாக - என் விருப்பத்திற்கு இணங்கும்படி (மயக்கி) அழைத்தேன்; ஆனால், அவர் தம்மைக் காத்துக்கொண்டார்; இனியும், அவர் நான் இடும் கட்டளைக்கிணங்கி நடந்துகொள்ளாவிட்டால், சிறையிலடைக்கப்படுவார்; மேலும், அவர் சிறுமை அடைந்தவர்களில் ஒருவராகவும் ஆகிவிடுவார்" என்று சொன்னாள்.
20:134 وَلَوْ اَنَّاۤ اَهْلَكْنٰهُمْ بِعَذَابٍ مِّنْ قَبْلِهٖ لَـقَالُوْا رَبَّنَا لَوْلَاۤ اَرْسَلْتَ اِلَـيْنَا رَسُوْلًا فَنَتَّبِعَ اٰيٰتِكَ مِنْ قَبْلِ اَنْ نَّذِلَّ وَنَخْزٰى
20:134. இன்னும், (நம் தூதர்) வருவதற்கு முன், நாம் இவர்களை வேதனை செய்து அழித்திருந்தால், அவர்கள், "எங்கள் இறைவா! நீ எங்களுக்கு ஒரு தூதரை அனுப்பியிருக்க வேண்டாமா? (அவ்வாறு அனுப்பியிருந்தால்,) நாங்கள் சிறுமைப்படுவதற்கும், கேவலப்படுவதற்கும் முன் உன் வசனங்களைப் பின்பற்றியிருப்போமே!" என்று கூறுவார்கள்.
27:34 قَالَتْ اِنَّ الْمُلُوْكَ اِذَا دَخَلُوْا قَرْيَةً اَفْسَدُوْهَا وَجَعَلُوْۤا اَعِزَّةَ اَهْلِهَاۤ اَذِلَّةً ۚ وَكَذٰلِكَ يَفْعَلُوْنَ
27:34. அவள் கூறினாள்: "நிச்சயமாக அரசர்கள் ஒரு நகரத்துள் (படையெடுத்து) நுழைவார்களானால், அதனைப் பாழாக்கிவிடுகிறார்கள்; அதிலுள்ள கண்ணியமுள்ளவர்களை, சிறுமைப்படுத்திவிடுகிறார்கள்; அவ்வாறுதான் இவர்களும் செய்வார்கள்."
27:37 اِرْجِعْ اِلَيْهِمْ فَلَنَاْتِيَنَّهُمْ بِجُنُوْدٍ لَّا قِبَلَ لَهُمْ بِهَا وَلَـنُخْرِجَنَّهُمْ مِّنْهَاۤ اَذِلَّةً وَّهُمْ صٰغِرُوْنَ
27:37. "அவர்களிடமே திரும்பிச் செல்க! நிச்சயமாக நாம் அவர்களால் எதிர்க்க முடியாத (பலமுள்ள ஒரு பெரும்) படைகளுடன் அவர்களிடம் வருவோம்; இன்னும், அவர்கள் சிறுமையடைந்தவர்களாயிருக்கும் நிலையில் கேவலமானவர்களாக அதைவிட்டும் அவர்களைத் திண்ணமாக நாம் வெளியேற்றுவோம்."
37:18 قُلْ نَعَمْ وَاَنْـتُمْ دٰخِرُوْنَۚ
37:18. "ஆம்! (உங்கள் செயல்களின் காரணமாக) நீங்கள் சிறுமையடைந்தவர்களாக (எழுப்பப்படு)வீர்கள்" என்று (நபியே!) நீர் கூறும்.
40:60 وَقَالَ رَبُّكُمُ ادْعُوْنِىْۤ اَسْتَجِبْ لَـكُمْؕ اِنَّ الَّذِيْنَ يَسْتَكْبِرُوْنَ عَنْ عِبَادَتِىْ سَيَدْخُلُوْنَ جَهَنَّمَ دَاخِرِيْنَ
40:60. உங்கள் இறைவன் கூறுகிறான்: "என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள்; நான் உங்கள் (பிரார்த்தனை)களுக்குப் பதிலளிக்கிறேன். நிச்சயமாக எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் சிறுமையடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள்."
42:45 وَتَرٰٮهُمْ يُعْرَضُوْنَ عَلَيْهَا خٰشِعِيْنَ مِنَ الذُّلِّ يَنْظُرُوْنَ مِنْ طَرْفٍ خَفِىٍّ ؕ وَقَالَ الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنَّ الْخٰسِرِيْنَ الَّذِيْنَ خَسِرُوْۤا اَنْفُسَهُمْ وَاَهْلِيْهِمْ يَوْمَ الْقِيٰمَةِ ؕ اَلَاۤ اِنَّ الظّٰلِمِيْنَ فِىْ عَذَابٍ مُّقِيْمٍ
42:45. மேலும், சிறுமையினால் பணிந்தவர்களாகவும், (மறைவாகக்) கடைக்கண்ணால் பார்த்த வண்ணமாகவும் அவர்கள் அ(ந் நரகத்)தின் முன் கொண்டுவரப்படுவதை நீர் காண்பீர்: (அவ்வேளை) நம்பிக்கை கொண்டவர்கள் கூறுவார்கள்: "எவர்கள் தங்களுக்கும், தம் குடும்பத்தாருக்கும் நஷ்டத்தைத் தேடிக்கொண்டார்களோ, மறுமைநாளில் நிச்சயமாக அவர்கள் முற்றிலும் நஷ்டவாளிகள் தாம்." அறிந்துகொள்க! நிச்சயமாக அநியாயக்காரர்கள் நிலையான வேதனையில் இருப்பார்கள்.
67:4 ثُمَّ ارْجِعِ الْبَصَرَ كَرَّتَيْنِ يَنْقَلِبْ اِلَيْكَ الْبَصَرُ خَاسِئًا وَّهُوَ حَسِيْرٌ
67:4. பின்னர், இருமுறை உன் பார்வையை மீட்டிப் பார்! உன் பார்வை களைத்து, சிறுமையடைந்து உன்னிடம் திரும்பும்.
89:16 وَاَمَّاۤ اِذَا مَا ابْتَلٰٮهُ فَقَدَرَ عَلَيْهِ رِزْقَهٗ ۙ فَيَقُوْلُ رَبِّىْۤ اَهَانَنِۚ
89:16. எனினும் அவனை, அவன் (இறைவன்) சோதித்து அவனுடைய உணவை அவன் மீது நெருக்கடியாக்கினால், அவன், "என் இறைவன் என்னைச் சிறுமைப்படுத்திவிட்டான்" எனக் கூறுகின்றான்.