சுத்தம்
2:25   وَبَشِّرِ الَّذِيْنَ اٰمَنُوْا وَ عَمِلُوا الصّٰلِحٰتِ اَنَّ لَهُمْ جَنّٰتٍ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ‌ؕ ڪُلَّمَا رُزِقُوْا مِنْهَا مِنْ ثَمَرَةٍ رِّزْقًا ‌ۙ قَالُوْا هٰذَا الَّذِىْ رُزِقْنَا مِنْ قَبْلُ وَاُتُوْا بِهٖ مُتَشَابِهًا ‌ؕ وَلَهُمْ فِیْهَاۤ اَزْوَاجٌ مُّطَهَّرَةٌ ‌ۙ وَّهُمْ فِيْهَا خٰلِدُوْنَ‏
2:25. ஆனால், நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்வோருக்கு நற்செய்தி கூறுவீராக! சதா ஓடிக் கொண்டிருக்கும் ஆறுகளைக் கொண்ட சுவனச் சோலைகள் அவர்களுக்காக உண்டு; அவர்களுக்கு அங்கிருந்து ஏதாவது கனி உணவாகக் கொடுக்கப்படும்போதெல்லாம், "இதுவே முன்னரும் நமக்கு (உலகில்) கொடுக்கப்பட்டிருக்கிறது" என்று கூறுவார்கள்; ஆனால், இதே தோற்றமுடையதுதான் அவர்களுக்கு (உலகத்தில்) கொடுக்கப்பட்டிருந்தன; இன்னும், அவர்களுக்கு அங்கு தூய துணைவியரும் உண்டு; மேலும், அவர்கள் அங்கே நிரந்தரமாக இருப்பார்கள்.
2:57   وَظَلَّلْنَا عَلَيْکُمُ الْغَمَامَ وَاَنْزَلْنَا عَلَيْكُمُ الْمَنَّ وَالسَّلْوٰى‌ؕ كُلُوْا مِنْ طَيِّبٰتِ مَا رَزَقْنٰكُمْ‌ؕ وَمَا ظَلَمُوْنَا وَلٰـكِنْ كَانُوْآ اَنْفُسَهُمْ يَظْلِمُوْنَ‏
2:57. இன்னும், உங்கள் மீது மேகம் நிழலிடச் செய்தோம்; மேலும், 'மன்னு ஸல்வா' (எனும் உணவை) உங்களுக்காக இறக்கிவைத்து, "உங்களுக்கு நாம் வழங்கியுள்ள நல்லவற்றிலிருந்து புசியுங்கள்" (என்றோம்); எனினும், அவர்கள் நமக்குத் தீங்கு செய்துவிடவில்லை; மாறாக, தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டார்கள்.
2:125   وَاِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِّلنَّاسِ وَاَمْنًا ؕ وَاتَّخِذُوْا مِنْ مَّقَامِ اِبْرٰهٖمَ مُصَلًّى‌ ؕ وَعَهِدْنَآ اِلٰٓى اِبْرٰهٖمَ وَاِسْمٰعِيْلَ اَنْ طَهِّرَا بَيْتِىَ لِلطَّآٮِٕفِيْنَ وَالْعٰكِفِيْنَ وَالرُّکَّعِ السُّجُوْدِ‏
2:125. (இதையும் எண்ணிப்பாருங்கள்: "கஃபா என்னும்) அந்த ஆலயத்தை நாம் மக்கள் ஒன்று கூடும் இடமாகவும், இன்னும் பாதுகாப்பான இடமாகவும் ஆக்கினோம்: இப்ராஹீம் நின்ற இடத்தை தொழும் இடமாக ஆக்கிக் கொள்ளுங்கள்" (என்றும் நாம் சொன்னோம்); இன்னும், "என் ஆலயத்தை சுற்றிவருபவர்கள், தங்கி இருப்பவர்கள், ருகூஉ செய்பவர்கள், ஸஜ்தா செய்பவர்கள் ஆகியோருக்காக நீங்களிருவரும் தூய்மையாக வைத்திருக்கவேண்டும்" என்று இப்ராஹீமிடமிருந்தும், இஸ்மாயீலிடமிருந்தும் நாம் உறுதிமொழி வாங்கினோம்.
2:168   يٰٓاَيُّهَا النَّاسُ كُلُوْا مِمَّا فِى الْاَرْضِ حَلٰلًا طَيِّبًا  ۖ وَّلَا تَتَّبِعُوْا خُطُوٰتِ الشَّيْطٰنِؕ اِنَّهٗ لَـكُمْ عَدُوٌّ مُّبِيْنٌ‏
2:168. மனிதர்களே! பூமியிலுள்ள பொருட்களில், அனுமதிக்கப்பட்ட நல்லவற்றை உண்ணுங்கள்; ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள் - நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்கமான பகைவனாவான்.
2:172   يٰٓاَ يُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا کُلُوْا مِنْ طَيِّبٰتِ مَا رَزَقْنٰكُمْ وَاشْكُرُوْا لِلّٰهِ اِنْ کُنْتُمْ اِيَّاهُ تَعْبُدُوْنَ‏
2:172. நம்பிக்கைக் கொண்டவர்களே! நாம் உங்களுக்கு அளித்துள்ளவற்றில் தூய்மையானவற்றையே உண்ணுங்கள்; நீங்கள் அல்லாஹ்வுக்கு - (வணக்கத்திற்குரியவனான) அவனையே வணங்குபவர்களாக இருந்தால் - நீங்கள் நன்றி செலுத்துங்கள்.
2:222   وَ يَسْــٴَــلُوْنَكَ عَنِ الْمَحِيْضِ‌ۙ قُلْ هُوَ اَذًى فَاعْتَزِلُوْا النِّسَآءَ فِى الْمَحِيْضِ‌ۙ وَلَا تَقْرَبُوْهُنَّ حَتّٰى يَطْهُرْنَ‌‌ۚ فَاِذَا تَطَهَّرْنَ فَاْتُوْهُنَّ مِنْ حَيْثُ اَمَرَكُمُ اللّٰهُ‌ؕ اِنَّ اللّٰهَ يُحِبُّ التَّوَّابِيْنَ وَيُحِبُّ الْمُتَطَهِّرِيْنَ‏
2:222. மாதவிடாய் பற்றியும் உம்மிடம் வினவுகிறார்கள்; நீர் கூறும்: "அது ஓர் உபாதையாகும்; ஆகவே, மாதவிடாயின்போது பெண்களை விட்டும் விலகியிருங்கள்; அவர்கள் சுத்தமாகும் வரை அவர்களை நெருங்காதீர்கள். அவர்கள் சுத்தமாகிவிட்டால் அல்லாஹ் எப்படிக் கட்டளையிட்டிருக்கின்றானோ அதன்படி அவர்களிடம் செல்லுங்கள். பாவங்களைவிட்டு மீள்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கின்றான்; இன்னும், தூய்மையாக இருப்போரையும் நேசிக்கின்றான்."
2:232   وَاِذَا طَلَّقْتُمُ النِّسَآءَ فَبَلَغْنَ اَجَلَهُنَّ فَلَا تَعْضُلُوْهُنَّ اَنْ يَّنْكِحْنَ اَزْوَاجَهُنَّ اِذَا تَرَاضَوْا بَيْنَهُمْ بِالْمَعْرُوْفِ‌ؕ ذٰ لِكَ يُوْعَظُ بِهٖ مَنْ كَانَ مِنْكُمْ يُؤْمِنُ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِؕ ذٰ لِكُمْ اَزْکٰى لَـكُمْ وَاَطْهَرُؕ‌ وَاللّٰهُ يَعْلَمُ وَاَنْـتُمْ لَا تَعْلَمُوْنَ‏
2:232. இன்னும், (உங்களின்) மனைவியரை நீங்கள் (மீட்டுக் கொள்ளக்கூடிய) விவாகரத்துச் செய்து தம்முடைய தவணையை அவர்கள் அடைந்து (அதாவது அத்தவணையைப் பூர்த்தியாக்கி, திருமண பந்தத்திலிருந்து விடுபட்டு) விட்டால், பின்னர் (மீட்டுக் கொள்ளக்கூடிய விவாகரத்து சொன்ன முந்தைய) தம் கணவன்மார்களை அவர்கள் தமக்கிடையே நல்ல முறையில் திருப்தி கொண்டால், (மீண்டும்) அவர்கள் திருமணம் செய்துகொள்வதைத் தடுக்காதீர்கள்; உங்களில் யார் அல்லாஹ்வின் மீதும், இறுதிநாள் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளார்களோ, அவர்களுக்கு இதைக் கொண்டு உபதேசிக்கப்படுகிறது; இ(தன்படி நடப்ப)து உங்களுக்கு பரிசுத்தமானதும், தூய்மையானதும் ஆகும். (இதன் நலன்களை) அல்லாஹ் அறிவான்; நீங்கள் அறியமாட்டீர்கள்.
2:267   يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اَنْفِقُوْا مِنْ طَيِّبٰتِ مَا كَسَبْتُمْ وَمِمَّاۤ اَخْرَجْنَا لَـكُمْ مِّنَ الْاَرْضِ وَلَا تَيَمَّمُوا الْخَبِيْثَ مِنْهُ تُنْفِقُوْنَ وَلَسْتُمْ بِاٰخِذِيْهِ اِلَّاۤ اَنْ تُغْمِضُوْا فِيْهِ‌ؕ وَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ غَنِىٌّ حَمِيْدٌ‏
2:267. நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்ததில் நல்லவற்றிலிருந்தும், பூமியிலிருந்து நாம் உங்களுக்கு வெளிப்படுத்திய (தானியங்கள், கனிவகைகள் போன்ற) வற்றிலிருந்தும், செலவு செய்யுங்கள்; அன்றியும், அதிலிருந்து கெட்டதை (தானதர்மங்களில்) செலவழிக்க நாடாதீர்கள்; ஏனெனில், (அத்தகைய பொருளை வேறெவரும் உங்களுக்குக் கொடுத்தால் வெறுப்புடன்,) கண் மூடிக்கொண்டேயல்லாது அதை நீங்கள் வாங்க மாட்டீர்கள்! நிச்சயமாக அல்லாஹ் (எவரிடத்தும், எந்தத்) தேவையுமற்றவனாகவும், புகழுக்குரியவனுமாகவும் இருக்கின்றான் என்பதை நீங்கள் நன்கறிந்துகொள்ளுங்கள்.
3:15   قُلْ اَؤُنَبِّئُكُمْ بِخَيْرٍ مِّنْ ذٰ لِكُمْ‌ؕ لِلَّذِيْنَ اتَّقَوْا عِنْدَ رَبِّهِمْ جَنّٰتٌ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَا وَاَزْوَاجٌ مُّطَهَّرَةٌ وَّرِضْوَانٌ مِّنَ اللّٰهِ‌ؕ وَاللّٰهُ بَصِيْرٌۢ بِالْعِبَادِ‌ۚ‏
3:15. (நபியே!) நீர் கூறும்: "அவற்றைவிட சிறந்ததை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?" இறையச்சமுடையவர்களுக்கு, அவர்களுடைய இறைவனிடத்தில் சுவனபதிகள் உண்டு; அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கின்றன; அதில் (அவர்கள்) நிரந்தரமாக இருப்பார்கள்; (அங்கு அவர்களுக்குத்) தூய துணைகளும் அல்லாஹ்வின் பொருத்தமும் உண்டு; அல்லாஹ் தன் அடியார்களைப் பார்க்கிறவன்.
3:38   هُنَالِكَ دَعَا زَكَرِيَّا رَبَّهٗ‌ ‌ۚ قَالَ رَبِّ هَبْ لِىْ مِنْ لَّدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً‌ ‌ ۚ اِنَّكَ سَمِيْعُ الدُّعَآءِ‏
3:38. அந்த இடத்திலேயே ஜகரிய்யா தம் இறைவனிடம் பிரார்த்தனை செய்தவராகக் கூறினார்: "இறைவனே! உன்னிடமிருந்து எனக்கொரு பரிசுத்தமான சந்ததியை அளிப்பாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவியேற்கிறவன்."
3:55   اِذْ قَالَ اللّٰهُ يٰعِيْسٰۤى اِنِّىْ مُتَوَفِّيْكَ وَرَافِعُكَ اِلَىَّ وَمُطَهِّرُكَ مِنَ الَّذِيْنَ كَفَرُوْا وَجَاعِلُ الَّذِيْنَ اتَّبَعُوْكَ فَوْقَ الَّذِيْنَ كَفَرُوْۤا اِلٰى يَوْمِ الْقِيٰمَةِ ‌‌ۚ ثُمَّ اِلَىَّ مَرْجِعُكُمْ فَاَحْكُمُ بَيْنَكُمْ فِيْمَا كُنْتُمْ فِيْهِ تَخْتَلِفُوْنَ‏
3:55. "ஈசாவே! நிச்சயமாக நான் உம்மைக் கைப்பற்றுகிறவனாகவும், இன்னும் என்னளவில் உம்மை உயர்த்திக்கொள்கிறவனாகவும் நிராகரித்துக் கொண்டிருப்போரிலிருந்து உம்மைத் தூய்மைப்படுத்துகிறவனாகவும், மேலும் உம்மைப் பின்பற்றுவோரை மறுமைநாள் வரை நிராகரிப்போரைவிட மேலாக்கிவைக்கிறவனாகவும் இருக்கிறேன்; பின்னர், உங்களுடைய திரும்புதல் என்னிடமே இருக்கிறது; அப்போது எதில் நீங்கள் மாறுபட்டிருந்தீர்களோ அதில் நான் உங்களிடையே தீர்ப்பளிப்பேன்" என்று அல்லாஹ் கூறியதை (நபியே! நினைவுகூர்வீராக)!
4:43   يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَقْرَبُوا الصَّلٰوةَ وَاَنْـتُمْ سُكَارٰى حَتّٰى تَعْلَمُوْا مَا تَقُوْلُوْنَ وَلَا جُنُبًا اِلَّا عَابِرِىْ سَبِيْلٍ حَتّٰى تَغْتَسِلُوْا‌ ؕ وَاِنْ كُنْتُمْ مَّرْضٰۤى اَوْ عَلٰى سَفَرٍ اَوْ جَآءَ اَحَدٌ مِّنْكُمْ مِّنَ الْغَآٮِٕطِ اَوْ لٰمَسْتُمُ النِّسَآءَ فَلَمْ تَجِدُوْا مَآءً فَتَيَمَّمُوْا صَعِيْدًا طَيِّبًا فَامْسَحُوْا بِوُجُوْهِكُمْ وَاَيْدِيْكُمْ‌ ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَفُوًّا غَفُوْرًا‏
4:43. நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் போதையில் இருக்கும்போது, நீங்கள் கூறுவது இன்னது என்று நீங்கள் அறிந்துகொள்ளும் வரை தொழுகைக்கு நெருங்காதீர்கள்; அன்றியும், குளிப்பு கடமையாக இருக்கும்போது குளிக்கும் வரை (பள்ளிக்குச் செல்லாதீர்கள்; பள்ளிவாசல் வழியாக) பாதையைக் கடந்து சென்றால் தவிர; இன்னும், நீங்கள் நோயாளிகளாகவோ பயணத்திலோ இருந்தால், அல்லது மலஜலம் கழிக்குமிடத்திலிருந்து வந்தால் அல்லது பெண்களைத் தீண்டியோ இருந்து (சுத்தம் செய்துகொள்ள) தண்ணீரைப் பெறாவிடின் சுத்தமான மண்ணைத் தொட்டு உங்களுடைய முகங்களையும், உங்களுடைய கைகளையும் தடவி (தயம்மும் செய்து) கொள்ளுங்கள்; (இதன் பின் தொழலாம்;) நிச்சயமாக அல்லாஹ் பிழை பொறுப்பவனாகவும், மன்னிப்பவனாகவும் இருக்கின்றான்.
4:57   وَالَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ سَنُدْخِلُهُمْ جَنّٰتٍ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَاۤ اَبَدًا‌ ؕ لَـهُمْ فِيْهَاۤ اَزْوَاجٌ مُّطَهَّرَةٌ  وَّنُدْخِلُهُمْ ظِلًّا ظَلِيْلًا‏
4:57. (அவர்களில்) எவர்கள் நம்பிக்கை கொண்டு நன்மையான காரியங்களைச் செய்கின்றார்களோ, அவர்களை சுவனபதிகளில் புகுத்துவோம்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பர்; அங்கு அவர்களுக்குப் பரிசுத்தமான துணைவியருண்டு; அவர்களை அடர்ந்த நிழலிலும் நுழையச் செய்வோம்.
4:160   فَبِظُلْمٍ مِّنَ الَّذِيْنَ هَادُوْا حَرَّمْنَا عَلَيْهِمْ طَيِّبٰتٍ اُحِلَّتْ لَهُمْ وَبِصَدِّهِمْ عَنْ سَبِيْلِ اللّٰهِ كَثِيْرًا ۙ‏
4:160. எனவே, யூதர்களாக இருந்த அவர்களுடைய அக்கிரமத்தின் காரணமாக அவர்களுக்கு (முன்னர்) ஆகுமாக்கப்பட்டிருந்த நல்லவற்றை அவர்களுக்கு நாம் தடை செய்துவிட்டோம்; இன்னும், அவர்கள் அநேகரை அல்லாஹ்வின் பாதையில் செல்லவிடாது தடுத்துக்கொண்டிருந்ததனாலும் (அவர்களுக்கு இவ்வாறு தடைசெய்தோம்).
5:6   يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا قُمْتُمْ اِلَى الصَّلٰوةِ فَاغْسِلُوْا وُجُوْهَكُمْ وَاَيْدِيَكُمْ اِلَى الْمَرَافِقِ وَامْسَحُوْا بِرُءُوْسِكُمْ وَاَرْجُلَكُمْ اِلَى الْـكَعْبَيْنِ‌ ؕ وَاِنْ كُنْتُمْ جُنُبًا فَاطَّهَّرُوْا‌ ؕ وَاِنْ كُنْتُمْ مَّرْضَىٰۤ اَوْ عَلٰى سَفَرٍ اَوْ جَآءَ اَحَدٌ مِّنْكُمْ مِّنَ الْغَآٮِٕطِ اَوْ لٰمَسْتُمُ النِّسَآءَ فَلَمْ تَجِدُوْا مَآءً فَتَيَمَّمُوْا صَعِيْدًا طَيِّبًا فَامْسَحُوْا بِوُجُوْهِكُمْ وَاَيْدِيْكُمْ مِّنْهُ‌ ؕ مَا يُرِيْدُ اللّٰهُ لِيَجْعَلَ عَلَيْكُمْ مِّنْ حَرَجٍ وَّلٰـكِنْ يُّرِيْدُ لِيُطَهِّرَكُمْ وَ لِيُتِمَّ نِعْمَتَهٗ عَلَيْكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ‏
5:6. நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் தொழுகைக்குத் தயாராகும்போது, (முன்னதாக) உங்கள் முகங்களையும், முழங்கைகள்வரை உங்கள் கைகளையும் கழுவிக்கொள்ளுங்கள்; உங்களுடைய தலைகளை (ஈரக்கையால்) தடவி (மஸ்ஹு செய்து) கொள்ளுங்கள்; உங்கள் கால்களை கணுக்கால் வரை(க் கழுவிக் கொள்ளுங்கள்); நீங்கள் பெருந்தொடக்குடையோராக (குளிக்க கடமைப்பட்டோராக) இருந்தால் (குளித்து) தூய்மையாக்கிக்கொள்ளுங்கள்; தவிர, நீங்கள் நோயாளிகளாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால், அல்லது உங்களில் எவரும் மல ஜலம் கழித்துவந்தாலும், அல்லது நீங்கள் பெண்களைத் தீண்டி (உடல் உறவுகொண்டு) இருந்தாலும், (உங்களைச் சுத்தப்படுத்திக்கொள்ள) நீங்கள் தண்ணீரைப் பெறாவிட்டால், சுத்தமான மண்ணை நீங்கள் நாடி (இரு கைகளால் அடித்து) அதிலிருந்து உங்கள் முகங்களையும், உங்களுடைய கைகளையும் தடவி (தயம்மும் செய்து) கொள்ளுங்கள்; அல்லாஹ் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் கொடுக்க விரும்பவில்லை; ஆனால், அவன் உங்களைத் தூய்மைப்படுத்தவும்; இன்னும், நீங்கள் அவனுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு, தனது அருட்கொடையை உங்கள்மீது முழுமையாக்கவும் விரும்புகிறான்.
5:45   وَكَتَبْنَا عَلَيْهِمْ فِيْهَاۤ اَنَّ النَّفْسَ بِالنَّفْسِۙ وَالْعَيْنَ بِالْعَيْنِ وَالْاَنْفَ بِالْاَنْفِ وَالْاُذُنَ بِالْاُذُنِ وَالسِّنَّ بِالسِّنِّۙ وَالْجُرُوْحَ قِصَاصٌ‌ؕ فَمَنْ تَصَدَّقَ بِهٖ فَهُوَ كَفَّارَةٌ لَّهٗ ‌ؕ وَمَنْ لَّمْ يَحْكُمْ بِمَاۤ اَنْزَلَ اللّٰهُ فَاُولٰٓٮِٕكَ هُمُ الظّٰلِمُوْنَ‏
5:45. அவர்களுக்கு நாம் அதில், "உயிருக்கு உயிர், கண்ணுக்குக் கண், மூக்குக்கு மூக்கு, காதுக்குக் காது, பல்லுக்குப் பல் ஆகவும், காயங்களுக்கு(ச் சமமான காயங்களாகவும்) பழிவாங்கப்படும்" என்று விதித்திருந்தோம்; எனினும், ஒருவர் இதனை (பழி வாங்குவதை மன்னித்து) தர்மமாக விட்டுவிட்டால், அது அவரு(டைய பாவங்களு)க்குப் பரிகாரமாகும்; எவர்கள் அல்லாஹ் இறக்கிவைத்த (வேதக் கட்டளைப்)படி தீர்ப்பு வழங்கவில்லையோ - நிச்சயமாக அவர்கள்தாம் அநியாயக்காரர்கள்.
5:87   يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تُحَرِّمُوْا طَيِّبٰتِ مَاۤ اَحَلَّ اللّٰهُ لَـكُمْ وَلَا تَعْتَدُوْا‌ ؕ اِنَّ اللّٰهَ لَا يُحِبُّ الْمُعْتَدِيْنَ‏
5:87. நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ் உங்களுக்கு ஆகுமாக்கியுள்ள, பரிசுத்தமான பொருட்களை விலக்கப்பட்டவையாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்; இன்னும், வரம்பு மீறாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை.
5:88   وَكُلُوْا مِمَّا رَزَقَكُمُ اللّٰهُ حَلٰلًا طَيِّبًا‌ وَّ اتَّقُوا اللّٰهَ الَّذِىْۤ اَنْـتُمْ بِهٖ مُؤْمِنُوْنَ‏
5:88. அல்லாஹ் உங்களுக்கு அளித்தவற்றிலிருந்து ஆகுமான நல்லவற்றைப் புசியுங்கள்; நீங்கள் நம்பிக்கை கொண்டிருக்கும் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்.
6:79   اِنِّىْ وَجَّهْتُ وَجْهِىَ لِلَّذِىْ فَطَرَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ حَنِيْفًا‌ وَّمَاۤ اَنَا مِنَ الْمُشْرِكِيْنَ‌ۚ‏
6:79. "வானங்களையும், பூமியையும் படைத்தவன் பக்கமே நான் என் முகத்தைத் திருப்பிக் கொண்டேன்; (நான் சத்திய வழியின்பால்) சாய்ந்தவனாக இருக்கும் நிலையில்; இன்னும், நான் இணைவைப்போரில் (ஒருவனாக) இல்லை" (என்று கூறினார்).
7:21   وَقَاسَمَهُمَاۤ اِنِّىْ لَـكُمَا لَمِنَ النّٰصِحِيْنَۙ‏
7:21. "நிச்சயமாக நான் உங்களிருவருக்கும் உபதேசம் செய்பவர்களில் (ஒருவனாக) இருக்கிறேன்" என்று சத்தியமும் செய்தான்.
7:32   قُلْ مَنْ حَرَّمَ زِيْنَةَ اللّٰهِ الَّتِىْۤ اَخْرَجَ لِعِبَادِهٖ وَالطَّيِّبٰتِ مِنَ الرِّزْقِ‌ؕ قُلْ هِىَ لِلَّذِيْنَ اٰمَنُوْا فِى الْحَيٰوةِ الدُّنْيَا خَالِصَةً يَّوْمَ الْقِيٰمَةِ‌ؕ كَذٰلِكَ نُفَصِّلُ الْاٰيٰتِ لِقَوْمٍ يَّعْلَمُوْنَ‏
7:32. (நபியே!) நீர் கேட்பீராக: "அல்லாஹ் தன் அடியார்களுக்காக வெளிப்படுத்தியுள்ள அலங்காரத்தையும், உணவு வகைகளில் தூய்மையானவற்றையும் தடுத்தது யார்?" இன்னும் கூறும்: "அவை இவ்வுலக வாழ்க்கையிலும், குறிப்பாக மறுமை நாளிலும் நம்பிக்கை கொண்டவர்களுக்கு உரியன. இவ்வாறு நாம் நம் வசனங்களை அறியக்கூடிய சமுதாயத்திற்கு விவரிக்கின்றோம்."
7:160   وَقَطَّعْنٰهُمُ اثْنَتَىْ عَشْرَةَ اَسْبَاطًا اُمَمًا‌ ؕ وَاَوْحَيْنَاۤ اِلٰى مُوْسٰٓى اِذِ اسْتَسْقٰٮهُ قَوْمُهٗۤ اَنِ اضْرِبْ بِّعَصَاكَ الْحَجَرَ‌ ۚ فَانْۢبَجَسَتْ مِنْهُ اثْنَتَا عَشْرَةَ عَيْنًا‌ ؕ قَدْ عَلِمَ كُلُّ اُنَاسٍ مَّشْرَبَهُمْ‌ؕ وَظَلَّلْنَا عَلَيْهِمُ الْغَمَامَ وَاَنْزَلْنَا عَلَيْهِمُ الْمَنَّ وَالسَّلْوٰىؕ كُلُوْا مِنْ طَيِّبٰتِ مَا رَزَقْنٰكُمْ‌ؕ وَ مَا ظَلَمُوْنَا وَلٰـكِنْ كَانُوْۤا اَنْفُسَهُمْ يَظْلِمُوْنَ‏
7:160. (மூஸாவின் கூட்டத்தாராகிய) அவர்களை நாம் பன்னிரண்டு பிரிவினர்களாக - கூட்டங்களாகப் பிரித்தோம்; மூஸாவுக்கு, அவருடைய சமூகத்தினர் அவரிடம் அவர்கள் தண்ணீர் கேட்டபோது, "உம்முடைய கைத்தடியால் அக்கல்லை அடிப்பீராக!" என்று நாம் 'வஹீ' அறிவித்தோம்; (அவர் அவ்வாறு அடித்ததும்) அதிலிருந்து பன்னிரண்டு ஊற்றுகள் பொங்கிவந்தன; அவர்களில் ஒவ்வொரு வகுப்பாரும் தாம் (நீர்) அருந்தும் ஊற்றை அறிந்துகொண்டார்கள்; மேலும், அவர்கள் மீது மேகம் நிழலிடும்படிச் செய்தோம்; அவர்களுக்கு 'மன்னு ஸல்வா'வையும் (மேலான உணவாக) இறக்கிவைத்து, "நாம் உங்களுக்கு அளித்துள்ள தூயவற்றிலிருந்து புசியுங்கள்!" (என்று சொன்னோம்; அவ்வாறிருந்தும், அவர்கள் அல்லாஹ்வுக்கு மாறுசெய்தார்கள்); அவர்கள் நமக்கு அநியாயம் செய்யவில்லை; எனினும், அவர்கள் தமக்குத்தாமே அநியாயம் செய்துகொண்டிருந்தனர்.
8:26   وَاذْكُرُوْۤا اِذْ اَنْـتُمْ قَلِيْلٌ مُّسْتَضْعَفُوْنَ فِى الْاَرْضِ تَخَافُوْنَ اَنْ يَّتَخَطَّفَكُمُ النَّاسُ فَاٰوٰٮكُمْ وَاَيَّدَكُمْ بِنَصْرِهٖ وَرَزَقَكُمْ مِّنَ الطَّيِّبٰتِ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ‏
8:26. நீங்கள் பூமியில் (மக்காவில்) சிறு தொகையினராகவும், பலவீனமானவர்களாகவும் இருந்த நிலையில், உங்களை (எந்த நேரத்திலும்) மனிதர்கள் இறாஞ்சிக்கொண்டு சென்றுவிடுவார்கள் என்று நீங்கள் பயப்பட்டுக் கொண்டிருந்தபோது, அவன் உங்களுக்கு (மதீனாவில்) புகலிடம் அளித்துத் தன் உதவியைக்கொண்டு உங்களைப் பலப்படுத்தினான்; இன்னும், நல்லவற்றிலிருந்து உங்களுக்கு உணவளித்ததையும் நினைவு கூருங்கள்; நீங்கள் (அவனுக்கு) நன்றி செலுத்துவதற்காக.
8:69   فَكُلُوْا مِمَّا غَنِمْتُمْ حَلٰلاً طَيِّبًا ۖ  وَّاتَّقُوا اللّٰهَ‌ ؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ‏
8:69. ஆகவே, போரில் நீங்கள் அடைந்த வெற்றிப் பொருட்களில் அனுமதிக்கப்பட்ட தூய்மையானதைப் புசியுங்கள்; அல்லாஹ்வுக்கே அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடையோனாகவும் இருக்கின்றான்.
9:72   وَعَدَ اللّٰهُ الْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنٰتِ جَنّٰتٍ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَا وَمَسٰكِنَ طَيِّبَةً فِىْ جَنّٰتِ عَدْنٍ‌ ؕ وَرِضْوَانٌ مِّنَ اللّٰهِ اَكْبَرُ‌ ؕ ذٰ لِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيْمُ‏
9:72. நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும், நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் அல்லாஹ் சுவனபதிகளை வாக்களித்துள்ளான்: அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கின்றன; அவற்றில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்; (அந்த) நித்திய சுவனபதிகளில் தூய்மையான குடியிருப்புகளையும் (அவன் வாக்களித்துள்ளான்); அல்லாஹ்வின் திருப்திதான் மிகப்பெரியது; அதுதான் மகத்தான வெற்றி.
10:22   هُوَ الَّذِىْ يُسَيِّرُكُمْ فِى الْبَرِّ وَالْبَحْرِ‌ؕ حَتّٰۤى اِذَا كُنْتُمْ فِى الْفُلْكِ ۚ وَ جَرَيْنَ بِهِمْ بِرِيْحٍ طَيِّبَةٍ وَّفَرِحُوْا بِهَا جَآءَتْهَا رِيْحٌ عَاصِفٌ وَّجَآءَهُمُ الْمَوْجُ مِنْ كُلِّ مَكَانٍ وَّظَنُّوْۤا اَنَّهُمْ اُحِيْطَ بِهِمْ‌ ۙ دَعَوُا اللّٰهَ مُخْلِصِيْنَ لَـهُ الدِّيْنَۙ  لَٮِٕنْ اَنْجَيْتَـنَا مِنْ هٰذِهٖ لَنَكُوْنَنَّ مِنَ الشّٰكِرِيْنَ‏
10:22. அவனே உங்களைத் தரையிலும், கடலிலும் பயணம் செய்யவைக்கிறான்; (சில சமயம்) நீங்கள் கப்பலில் இருக்கும்போது நல்ல காற்றினால் (கப்பலிலுள்ள) அவர்களை அவை (சுமந்து) செல்கின்றன; அதனைக்கொண்டு அவர்கள் மகிழ்ச்சியடைந்திருக்கும் பொழுது, புயல் காற்று வீசி எல்லாப்பக்கங்களிலிருந்தும் அவர்கள் மீது அலைகள் மோதும்போது "நிச்சயமாக அலைகளால் சூழப்பட்டோம் (தப்ப வழியில்லையே!)" என்று அவர்கள் எண்ணுகிறார்கள், அச்சமயத்தில், "நீ எங்களை இதிலிருந்து காப்பாற்றிவிட்டால், மெய்யாகவே நாங்கள் நன்றி செலுத்துபவர்களாக இருப்போம்" என்று அல்லாஹ்வை - அவனுக்கே வணக்கத்தைக் கலப்பற்றவர்களாக ஆக்கிப் பிரார்த்திக்கின்றார்கள்.
10:93   وَلَقَدْ بَوَّاْنَا بَنِىْۤ اِسْرَآءِيْلَ مُبَوَّاَ صِدْقٍ وَّرَزَقْنٰهُمْ مِّنَ الطَّيِّبٰتِ‌ۚ فَمَا اخْتَلَفُوْا حَتّٰى جَآءَهُمُ الْعِلْمُ‌ؕ اِنَّ رَبَّكَ يَقْضِىْ بَيْنَهُمْ يَوْمَ الْقِيٰمَةِ فِيْمَا كَانُوْا فِيْهِ يَخْتَلِفُوْنَ‏
10:93. நிச்சயமாக நாம் இஸ்ராயீலின் சந்ததியினரை, தகுந்த இருப்பிடத்தில் இருத்தி, நல்லவற்றிலிருந்து அவர்களுக்கு நாம் உணவளித்தோம்; எனினும், (வேதத்தினுடைய உண்மையான) ஞானம் அவர்களிடம் வரும்வரையில் அவர்கள் மாறுபடவில்லை; நிச்சயமாக உம் இறைவன், அவர்கள் எதுபற்றி மாறுபட்டிருந்தார்களோ, அ(து விஷயத்)தில் மறுமைநாளில் அவர்களிடையே தீர்ப்பளிப்பான்.
11:78   وَجَآءَهٗ قَوْمُهٗ يُهْرَعُوْنَ اِلَيْهِ ؕ وَمِنْ قَبْلُ كَانُوْا يَعْمَلُوْنَ السَّيِّاٰتِ ‌ؕ قَالَ يٰقَوْمِ هٰٓؤُلَاۤءِ بَنٰتِىْ هُنَّ اَطْهَرُ لَـكُمْ‌ ۚ فَاتَّقُوْا اللّٰهَ وَلَا تُخْزُوْنِ فِىْ ضَيْفِىْ ؕ اَلَيْسَ مِنْكُمْ رَجُلٌ رَّشِيْدٌ‏
11:78. அவருடைய சமூகத்தார் அவரின்பால் விரைந்தவர்களாக அவரிடம் வந்தார்கள்; இன்னும், முன்னிருந்தே அவர்கள் தீயவற்றையே செய்து கொண்டிருந்தார்கள். (லூத் நபி, அவர்களை நோக்கி) "என் சமூகத்தாரே! இதோ இவர்கள் என் புதல்விகள்; இவர்கள் உங்களுக்கு(த் திருமணத்திற்கு)ப் பரிசுத்தமானவர்கள். எனவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். இன்னும், என் விருந்தினர் விஷயத்தில் என்னை நீங்கள் அவமானப்படுத்தாதீர்கள். நல்ல மனிதர் ஒருவர்(கூட) உங்களில் இல்லையா?" என்று கூறினார்.
14:24   اَلَمْ تَرَ كَيْفَ ضَرَبَ اللّٰهُ مَثَلًا كَلِمَةً طَيِّبَةً كَشَجَرَةٍ طَيِّبَةٍ اَصْلُهَا ثَابِتٌ وَّفَرْعُهَا فِى السَّمَآءِۙ‏
14:24. (நபியே!) நல்வாக்கியத்திற்கு அல்லாஹ் எவ்வாறு உதாரணம் கூறுகிறான் என்பதை நீர் கவனிக்கவில்லையா? அது ஒரு நன்மரத்தைப் போன்றது; அதனுடைய வேர் (பூமியில் ஆழமாகப்) பதிந்ததாகவும், அதன் கிளைகள் வானளாவியும் இருக்கிறது.
16:32   الَّذِيْنَ تَتَوَفّٰٮهُمُ الْمَلٰۤٮِٕكَةُ طَيِّبِيْنَ‌ ۙ يَقُوْلُوْنَ سَلٰمٌ عَلَيْكُمُۙ ادْخُلُوا الْجَـنَّةَ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ‏
16:32. (நிராகரிப்பை விட்டும்) தூயவர்களாக இருக்கும் நிலையில் வானவர்கள் அவர்(களுடைய உயிர்)களைக் கைப்பற்றுவார்கள்; அவர்களிடம்: "ஸலாமுன் அலைக்கும் (உங்கள் மீது சாந்தி உண்டாவதாக!); நீங்கள் செய்துகொண்டிருந்த (நற்) செயல்களுக்காக சுவனபதியில் நுழையுங்கள்" என்று அவர்கள் (அம்மலக்குகள்) சொல்வார்கள்.
16:72   وَاللّٰهُ جَعَلَ لَـكُمْ مِّنْ اَنْفُسِكُمْ اَزْوَاجًا وَّ جَعَلَ لَـكُمْ مِّنْ اَزْوَاجِكُمْ بَنِيْنَ وَحَفَدَةً وَّرَزَقَكُمْ مِّنَ الطَّيِّبٰتِ‌ؕ اَفَبِالْبَاطِلِ يُؤْمِنُوْنَ وَبِنِعْمَتِ اللّٰهِ هُمْ يَكْفُرُوْنَۙ‏
16:72. இன்னும், அல்லாஹ் உங்களுக்காக உங்களிலிருந்தே மனைவியரை ஏற்படுத்தியிருக்கிறான்; உங்களுக்கு உங்கள் மனைவியரிலிருந்து சந்ததிகளையும், பேரன் பேத்திகளையும் ஏற்படுத்தி, உங்களுக்கு நல்ல பொருட்களிலிருந்து ஆகாரமும் அளிக்கிறான்; அப்படியிருந்தும், (தாமே கற்பனை செய்துகொண்ட) பொய்யானதின் மீது நம்பிக்கை கொண்டு அல்லாஹ்வின் அருட்கொடையை இவர்கள் நிராகரிக்கிறார்களா?
16:97   مَنْ عَمِلَ صَالِحًـا مِّنْ ذَكَرٍ اَوْ اُنْثٰى وَهُوَ مُؤْمِنٌ فَلَـنُحْيِيَنَّهٗ حَيٰوةً طَيِّبَةً‌ ۚ وَلَـنَجْزِيَـنَّهُمْ اَجْرَهُمْ بِاَحْسَنِ مَا كَانُوْا يَعْمَلُوْنَ‏
16:97. ஆணாயினும், பெண்ணாயினும் அவர் நம்பிக்கையாளராக இருக்கும் நிலையில் இருந்து யார் (சன்மார்க்கத்திற்கு இணக்கமான) நற்செயல்களைச் செய்தாலும், நிச்சயமாக நாம் அவர்களை (இவ்வுலகில்) மணமிக்க தூய வாழ்க்கையில் வாழச் செய்வோம்; இன்னும், (மறுமையில்) அவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிலிருந்து மிகவும் அழகான கூலியை நிச்சயமாக நாம் கொடுப்போம்.
16:114   فَكُلُوْا مِمَّا رَزَقَكُمُ اللّٰهُ حَلٰلًا طَيِّبًا وَّاشْكُرُوْا نِعْمَتَ اللّٰهِ اِنْ كُنْـتُمْ اِيَّاهُ تَعْبُدُوْنَ‏
16:114. ஆகவே, (நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ் உங்களுக்கு அளித்துள்ளவற்றிலிருந்து ஆகுமான நல்லவற்றையே நீங்கள் புசியுங்கள்; நீங்கள் அவனையே வணங்குபவர்களாக இருப்பின் அல்லாஹ்வின் அருட்கொடைக்கு நன்றி செலுத்துங்கள்.
17:70   وَلَـقَدْ كَرَّمْنَا بَنِىْۤ اٰدَمَ وَحَمَلْنٰهُمْ فِى الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنٰهُمْ مِّنَ الطَّيِّبٰتِ وَفَضَّلْنٰهُمْ عَلٰى كَثِيْرٍ مِّمَّنْ خَلَقْنَا تَفْضِيْلًا‏
17:70. நிச்சயமாக, நாம் ஆதமுடைய சந்ததியைக் கண்ணியப்படுத்தினோம்; இன்னும், கடலிலும், கரையிலும் அவர்களைச் சுமந்து, அவர்களுக்காக நல்ல உணவும் மற்றும் பொருட்களையும் அளித்து, நாம் படைத்துள்ள படைப்புகள் பலவற்றையும்விட அவர்களை (தகுதியால்) மேன்மைப்படுத்தினோம்.
20:81   كُلُوْا مِنْ طَيِّبٰتِ مَا رَزَقْنٰكُمْ وَلَا تَطْغَوْا فِيْهِ فَيَحِلَّ عَلَيْكُمْ غَضَبِىْ‌ۚ وَمَنْ يَّحْلِلْ عَلَيْهِ غَضَبِىْ فَقَدْ هَوٰى‏
20:81. நாம் உங்களுக்கு அளித்துள்ள தூய்மையானவற்றிலிருந்து உண்ணுங்கள்; (அதற்கு நன்றி செலுத்தாமல்) அதில் நீங்கள் வரம்பு மீறாதீர்கள்: (அப்படி செய்வீர்களானால்) உங்கள் மீது என் கோபம் இறங்கிவிடும்; மேலும், எவன் மீது என் கோபம் இறங்குகிறதோ, அவன் நிச்சயமாக (நரகத்தில்) வீழ்வான்.
22:24   وَهُدُوْۤا اِلَى الطَّيِّبِ مِنَ الْقَوْلِ‌ ۖۚ وَهُدُوْۤا اِلٰى صِرَاطِ الْحَمِيْدِ‏
22:24. ஏனெனில், அவர்கள் (கலிமா தய்யிபா எனும்) பரிசுத்தமான சொல்லின் பக்கம் (இம்மையில்) வழிகாட்டப்பட்டிருந்தார்கள்; இன்னும், புகழுக்குரிய (இறை)வனின் பாதையின் பக்கமும் அவர்கள் செலுத்தப்பட்டிருந்தார்கள்.
22:26   وَاِذْ بَوَّاْنَا لِاِبْرٰهِيْمَ مَكَانَ الْبَيْتِ اَنْ لَّا تُشْرِكْ بِىْ شَيْـٴًـــا وَّطَهِّرْ بَيْتِىَ لِلطَّآٮِٕفِيْنَ وَالْقَآٮِٕمِيْنَ وَ الرُّكَّعِ السُّجُوْدِ‏
22:26. நாம் இப்ராஹீமுக்குப் புனித ஆலயத்தின் இடத்தை நிர்ணயித்து, "நீர் எனக்கு எவரையும் இணைவைக்காதீர்; என்னுடைய (இந்த) ஆலயத்தைச் சுற்றி வருவோருக்கும், அதில் நிற்போருக்கும், ருகூஉ, ஸுஜூது செய்(து தொழு)வோருக்கும் தூய்மையாக்கி வைப்பீராக!" என்று சொன்னதை (நபியே! நினைவு கூர்வீராக!).
23:51   يٰۤـاَيُّهَا الرُّسُلُ كُلُوْا مِنَ الطَّيِّبٰتِ وَاعْمَلُوْا صَالِحًـا‌ ؕ اِنِّىْ بِمَا تَعْمَلُوْنَ عَلِيْمٌ ؕ‏
23:51. (நம் தூதர்கள் ஒவ்வொருவரிடத்திலும்:) "தூதர்களே! நல்லவற்றிலிருந்து நீங்கள் உண்ணுங்கள், இன்னும், நற்செயலைச் செய்யுங்கள்; நிச்சயமாக நீங்கள் செய்பவற்றை நான் நன்கு அறிபவன்" (என்றும்).
24:26   اَلْخَبِيْثٰتُ لِلْخَبِيْثِيْنَ وَالْخَبِيْثُوْنَ لِلْخَبِيْثٰتِ‌ۚ وَالطَّيِّبٰتُ لِلطَّيِّبِيْنَ وَالطَّيِّبُوْنَ لِلطَّيِّبٰتِ‌ۚ اُولٰٓٮِٕكَ مُبَرَّءُوْنَ مِمَّا يَقُوْلُوْنَ‌ؕ لَهُمْ مَّغْفِرَةٌ وَّرِزْقٌ كَرِيْمٌ‏
24:26. கெட்ட பெண்கள், கெட்ட ஆண்களுக்கும்; கெட்ட ஆண்கள், கெட்ட பெண்களுக்கும்: இன்னும், நல்ல பெண்கள், நல்ல ஆண்களுக்கும்; நல்ல ஆண்கள், நல்ல பெண்களுக்கும் தகுதியானவர்கள்: அவர்கள் கூறுவதைவிட்டும் இவர்கள் தூய்மையானவர்கள்; இவர்களுக்கு மன்னிப்பும், கண்ணியமான உணவும் உண்டு.
24:61   لَـيْسَ عَلَى الْاَعْمٰى حَرَجٌ وَّلَا عَلَى الْاَعْرَجِ حَرَجٌ وَّلَا عَلَى الْمَرِيْضِ حَرَجٌ وَّلَا عَلٰٓى اَنْفُسِكُمْ اَنْ تَاْكُلُوْا مِنْۢ بُيُوْتِكُمْ اَوْ بُيُوْتِ اٰبَآٮِٕكُمْ اَوْ بُيُوْتِ اُمَّهٰتِكُمْ اَوْ بُيُوْتِ اِخْوَانِكُمْ اَوْ بُيُوْتِ اَخَوٰتِكُمْ اَوْ بُيُوْتِ اَعْمَامِكُمْ اَوْ بُيُوْتِ عَمّٰتِكُمْ اَوْ بُيُوْتِ اَخْوَالِكُمْ اَوْ بُيُوْتِ خٰلٰتِكُمْ اَوْ مَا مَلَكْتُمْ مَّفَاتِحَهٗۤ اَوْ صَدِيْقِكُمْ‌ؕ لَـيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ اَنْ تَاْكُلُوْا جَمِيْعًا اَوْ اَشْتَاتًا‌ ؕ فَاِذَا دَخَلْتُمْ بُيُوْتًا فَسَلِّمُوْا عَلٰٓى اَنْفُسِكُمْ تَحِيَّةً مِّنْ عِنْدِ اللّٰهِ مُبٰرَكَةً طَيِّبَةً‌  ؕ كَذٰلِكَ يُبَيِّنُ اللّٰهُ لَـكُمُ الْاٰيٰتِ لَعَلَّكُمْ تَعْقِلُوْنَ‏
24:61. (நம்பிக்கையாளர்களே! உங்களுடன் சேர்ந்து உணவருந்துவதில்) குருடர் மீதும் குற்றமில்லை, முடவர் மீதும் குற்றமில்லை, நோயாளியின் மீதும் குற்றமில்லை; நீங்கள் உங்கள் சொந்த வீடுகளிலோ, அல்லது உங்கள் தந்தைமார் வீடுகளிலோ, அல்லது தாய்மார் வீடுகளிலோ, அல்லது சகோதரர்கள் வீடுகளிலோ, அல்லது சகோதரிகள் வீடுகளிலோ, அல்லது உங்கள் தந்தையின் சகோதரர்கள் வீடுகளிலோ, அல்லது உங்கள் தந்தையின் சகோதரிகள் வீடுகளிலோ, அல்லது உங்கள் தாயின் சகோதரர்கள் வீடுகளிலோ, அல்லது உங்கள் தாயின் சகோதரிகள் வீடுகளிலோ, அல்லது எந்த வீட்டினுடைய சாவிகள் உங்கள் வசம் இருக்கிறதோ (அதிலும்), அல்லது உங்கள் தோழரிடத்திலோ நீங்கள் உண்பது உங்கள் மீது குற்றமில்லை; நீங்கள் சேர்ந்தோ அல்லது தனித்தனியாகவோ புசிப்பது உங்கள் மீது குற்றமாகாது; ஆனால், நீங்கள் எந்த வீட்டில் பிரவேசித்தாலும் அல்லாஹ்விடமிருந்துள்ள பாக்கியமிக்க பரிசுத்தமான காணிக்கையாக (அஸ்ஸலாமு அலைக்கும் என்று) நீங்கள் உங்களுக்குள் முகமன் கூறிக்கொள்ளுங்கள்: நீங்கள் விளங்கிக்கொள்வதற்காக, இவ்வாறு அல்லாஹ் உங்களுக்கு(த் தன்) வசனங்களை விவரிக்கிறான்.
33:53   يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَدْخُلُوْا بُيُوْتَ النَّبِىِّ اِلَّاۤ اَنْ يُّؤْذَنَ لَـكُمْ اِلٰى طَعَامٍ غَيْرَ نٰظِرِيْنَ اِنٰٮهُ وَلٰـكِنْ اِذَا دُعِيْتُمْ فَادْخُلُوْا فَاِذَا طَعِمْتُمْ فَانْتَشِرُوْا وَلَا مُسْتَاْنِسِيْنَ لِحَـدِيْثٍ ؕ اِنَّ ذٰلِكُمْ كَانَ يُؤْذِى النَّبِىَّ فَيَسْتَحْىٖ مِنْكُمْ وَاللّٰهُ لَا يَسْتَحْىٖ مِنَ الْحَـقِّ ؕ وَاِذَا سَاَ لْتُمُوْهُنَّ مَتَاعًا فَسْــٴَــــلُوْهُنَّ مِنْ وَّرَآءِ حِجَابٍ ؕ ذٰ لِكُمْ اَطْهَرُ لِقُلُوْبِكُمْ وَقُلُوْبِهِنَّ ؕ وَمَا كَانَ لَـكُمْ اَنْ تُؤْذُوْا رَسُوْلَ اللّٰهِ وَلَاۤ اَنْ تَـنْكِحُوْۤا اَزْوَاجَهٗ مِنْۢ بَعْدِهٖۤ اَبَدًا ؕ اِنَّ ذٰ لِكُمْ كَانَ عِنْدَ اللّٰهِ عَظِيْمًا‏
33:53. நம்பிக்கை கொண்டோரே! உணவின்பால் (அதை உண்ண) உங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டாலன்றி, அது சமையலாவதை எதிர்பார்த்து (முன்னதாகவே) நபியுடைய வீடுகளில் பிரவேசிக்காதீர்கள்; ஆனால், நீங்கள் அழைக்கப்பட்டீர்களானால் (அங்கே) பிரவேசியுங்கள்; அன்றியும், நீங்கள் உணவருந்திவிட்டால் (உடனே) கலைந்து போய்விடுங்கள்; பேச்சில் மூழ்கி விடாதீர்கள்; நிச்சயமாக இது நபியை நோவினை செய்வதாக இருக்கிறது; இதனை உங்களிடம் கூற அவர் வெட்கப்படுகிறார்; ஆனால், உண்மையைக் கூற அல்லாஹ் வெட்கப்படுவதில்லை; (நபியுடைய மனைவியர்களாகிய) அவர்களிடம் ஏதாவது ஒரு பொருளை (அவசியப்பட்டு)க் கேட்டால், திரைக்கு அப்பாலிருந்தே அவர்களைக் கேளுங்கள்; அதுவே, உங்களுடைய இதயங்களுக்கும், அவர்களுடைய இதயங்களுக்கும் தூய்மையானதாகும்; அல்லாஹ்வின் தூதரை நோவினை செய்வது உங்களுக்கு தகுமானதல்ல; அன்றியும், அவருடைய மனைவிகளை அவருக்குப் பின்னர் நீங்கள் மணப்பது ஒருபோதும் கூடாது; நிச்சயமாக இது அல்லாஹ்விடத்தில் (பாவத்தால்) மகத்தானதாக இருக்கிறது.
35:10   مَنْ كَانَ يُرِيْدُ الْعِزَّةَ فَلِلّٰهِ الْعِزَّةُ جَمِيْعًا ؕ اِلَيْهِ يَصْعَدُ الْـكَلِمُ الطَّيِّبُ وَالْعَمَلُ الصَّالِحُ يَرْفَعُهٗ ؕ وَ الَّذِيْنَ يَمْكُرُوْنَ السَّيِّاٰتِ لَهُمْ عَذَابٌ شَدِيْدٌ  ؕ وَمَكْرُ اُولٰٓٮِٕكَ هُوَ يَبُوْرُ‏
35:10. எவர் கண்ணியத்தை நாடுகிறாரோ கண்ணியம் யாவும் அல்லாஹ்வுக்கே உரியதாகும் (என்பதை அவர் அறிந்து கொள்ளட்டும்); தூய்மையான வாக்குகளெல்லாம் அவன் பக்கமே மேலேறிச் செல்கின்றன; நற்செயல் அதனை உயர்த்துகிறது; அன்றியும், எவர்கள் தீமைகளைச் செய்ய சதிசெய்கிறார்களோ அவர்களுக்குக் கடினமான வேதனையுண்டு; இன்னும், இவர்களுடைய சதித்திட்டம் அழிந்து போகும்.
40:64   اَللّٰهُ الَّذِىْ جَعَلَ لَـكُمُ الْاَرْضَ قَرَارًا وَّالسَّمَآءَ بِنَآءً وَّصَوَّرَكُمْ فَاَحْسَنَ صُوَرَكُمْ وَرَزَقَكُمْ مِّنَ الطَّيِّبٰتِ ؕ ذٰ لِكُمُ اللّٰهُ رَبُّكُمْ ‌ ۖۚ فَتَبٰـرَكَ اللّٰهُ رَبُّ الْعٰلَمِيْنَ‏
40:64. அல்லாஹ்தான் உங்களுக்கு இப்பூமியைத் தங்குமிடமாகவும், வானத்தை ஒரு விதானமாகவும் உண்டாக்கியிருக்கிறான்; மேலும், அவன்தான் உங்களை உருவாக்கி, உங்கள் உருவங்களை அழகாக்கி, நல்லவற்றிலிருந்து உங்களுக்கு உணவும் அளித்தான்; அவன்தான் அல்லாஹ்; உங்களுடைய இறைவன்; அகிலத்தாருக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ் மிகப் பாக்கியமுடையவன்.
45:16   وَلَقَدْ اٰتَيْنَا بَنِىْۤ اِسْرَآءِيْلَ الْكِتٰبَ وَالْحُكْمَ وَالنُّبُوَّةَ وَرَزَقْنٰهُمْ مِّنَ الطَّيِّبٰتِ وَفَضَّلْنٰهُمْ عَلَى الْعٰلَمِيْنَ‌ۚ‏
45:16. நிச்சயமாக நாம், இஸ்ராயீலின் சந்ததியினருக்கு வேதத்தையும், அதிகாரத்தையும், நபித்துவத்தையும் கொடுத்தோம்; அவர்களுக்கு நல்லவற்றிலிருந்து உணவுமளித்தோம்; அன்றியும், அகிலத்தாரில் அவர்களை மேன்மையாக்கினோம்.
46:20   وَيَوْمَ يُعْرَضُ الَّذِيْنَ كَفَرُوْا عَلَى النَّارِ ؕ اَذْهَبْتُمْ طَيِّبٰـتِكُمْ فِىْ حَيَاتِكُمُ الدُّنْيَا وَاسْتَمْتَعْتُمْ بِهَا ‌ۚ فَالْيَوْمَ تُجْزَوْنَ عَذَابَ الْهُوْنِ بِمَا كُنْـتُمْ تَسْتَكْبِرُوْنَ فِى الْاَرْضِ بِغَيْرِ الْحَقِّ وَبِمَا كُنْتُمْ تَفْسُقُوْنَ‏
46:20. அன்றியும், (நரக) நெருப்பின் முன் நிராகரிப்பவர்கள் கொண்டுவரப்படும் நாளில், "உங்களுடைய நல்லவைகளை உங்களுடைய உலக வாழ்க்கையிலேயே நீங்கள் போக்கிவிட்டீர்கள்; இன்னும், அவற்றைக்கொண்டு சுகம் அனுபவித்தீர்கள்; ஆகவே, நீங்கள் பூமியில் அநியாயமாகப் பெருமையடித்துக்கொண்டும், பாவம் செய்துகொண்டும் இருந்த காரணத்தால், இழிவுதரும் வேதனையை இன்று நீங்கள் கூலியாகக் கொடுக்கப்படுகிறீர்கள்" (என்று அவர்களுக்குக் கூறப்படும்).
58:12   يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا نَاجَيْتُمُ الرَّسُوْلَ فَقَدِّمُوْا بَيْنَ يَدَىْ نَجْوٰٮكُمْ صَدَقَةً  ‌ؕ ذٰ لِكَ خَيْرٌ لَّكُمْ وَاَطْهَرُ ‌ؕ فَاِنْ لَّمْ تَجِدُوْا فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ‏
58:12. நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் (நம்) தூதருடன் இரகசியம் பேசினால், உங்கள் இரகசியத்திற்கு முன்னர் ஏதேனும் தானதர்மத்தை முற்படுத்துங்கள்; இது உங்களுக்கு நன்மையாகவும், (உள்ளத்திற்குத்) தூய்மையாகவும் இருக்கும்; ஆனால், (தான தர்மம் செய்வதற்கு) நீங்கள் (வசதி) பெற்றிராவிடின், நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன்.
74:4   وَثِيَابَكَ فَطَهِّرْۙ‏
74:4. உம் ஆடைகளைத் தூய்மையாக ஆக்கி வைத்துக்கொள்வீராக!
80:14   مَّرْفُوْعَةٍ مُّطَهَّرَةٍ ۭۙ‏
80:14. உயர்வாக்கப்பட்டது; பரிசுத்தமாக்கப்பட்டது.
98:2   رَسُوْلٌ مِّنَ اللّٰهِ يَتْلُوْا صُحُفًا مُّطَهَّرَةً ۙ‏
98:2. (அத்தெளிவான ஆதாரம் -) அல்லாஹ்விடமிருந்து வந்த தூதர், (அவர்களுக்கு) பரிசுத்தமான ஆகமங்களை ஓதிக்காண்பிக்கிறார் (என்பது).