சூதாட்டம்
2:219 يَسْــٴَــلُوْنَكَ عَنِ الْخَمْرِ وَالْمَيْسِرِؕ قُلْ فِيْهِمَآ اِثْمٌ کَبِيْرٌ وَّمَنَافِعُ لِلنَّاسِ وَاِثْمُهُمَآ اَکْبَرُ مِنْ نَّفْعِهِمَا ؕ وَيَسْــٴَــلُوْنَكَ مَاذَا يُنْفِقُوْنَؕ قُلِ الْعَفْوَؕ كَذٰلِكَ يُبَيِّنُ اللّٰهُ لَـكُمُ الْاٰيٰتِ لَعَلَّکُمْ تَتَفَكَّرُوْنَۙ
2:219. (நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். நீர் கூறும்: "அவ்விரண்டிலும் பெரும்பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு, (அவற்றில் சில) பலன்களுமுண்டு; ஆனால், அவ்விரண்டிலும் உள்ள பாவம் - அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது;" (நபியே! தர்மத்திற்காக) "எதைச் செலவு செய்யவேண்டும்?" என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; "(உங்கள் தேவைக்கு வேண்டியது போக) மீதமானவற்றைச் செலவு செய்யுங்கள்" என்று கூறுவீராக! சிந்திப்பதற்காக அல்லாஹ் (தன்) வசனங்களை இவ்வாறு விவரிக்கின்றான்.
5:90 يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالْاَنْصَابُ وَالْاَزْلَامُ رِجْسٌ مِّنْ عَمَلِ الشَّيْطٰنِ فَاجْتَنِبُوْهُ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ
5:90. நம்பிக்கை கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், (வணக்கத்திற்காக நட்டுவைக்கப்பட்டிருக்கும்) சிலைகளும், குறிபார்க்கும் அம்புகளும் ஷைத்தானின் செயலிலுள்ள அருவருக்கத் தக்கவையாகும்; ஆகவே, இவற்றைத் தவிர்த்துக்கொள்ளுங்கள் - அதனால், நீங்கள் வெற்றியடைவீர்கள்.
5:91 اِنَّمَا يُرِيْدُ الشَّيْطٰنُ اَنْ يُّوْقِعَ بَيْنَكُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَآءَ فِى الْخَمْرِ وَالْمَيْسِرِ وَيَصُدَّكُمْ عَنْ ذِكْرِ اللّٰهِ وَعَنِ الصَّلٰوةِ ۚ فَهَلْ اَنْـتُمْ مُّنْتَهُوْنَ
5:91. நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டுபண்ணவும், அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்துவிடுவதையுமேயாகும்; எனவே அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்வீர்களா?