சூனியம்
2:102 وَاتَّبَعُوْا مَا تَتْلُوا الشَّيٰطِيْنُ عَلٰى مُلْكِ سُلَيْمٰنَۚ وَمَا کَفَرَ سُلَيْمٰنُ وَلٰـكِنَّ الشَّيٰـطِيْنَ كَفَرُوْا يُعَلِّمُوْنَ النَّاسَ السِّحْرَ وَمَآ اُنْزِلَ عَلَى الْمَلَـکَيْنِ بِبَابِلَ هَارُوْتَ وَمَارُوْتَؕ وَمَا يُعَلِّمٰنِ مِنْ اَحَدٍ حَتّٰى يَقُوْلَاۤ اِنَّمَا نَحْنُ فِتْنَةٌ فَلَا تَكْفُرْؕ فَيَتَعَلَّمُوْنَ مِنْهُمَا مَا يُفَرِّقُوْنَ بِهٖ بَيْنَ الْمَرْءِ وَ زَوْجِهٖؕ وَمَا هُمْ بِضَآرِّيْنَ بِهٖ مِنْ اَحَدٍ اِلَّا بِاِذْنِ اللّٰهِؕ وَيَتَعَلَّمُوْنَ مَا يَضُرُّهُمْ وَلَا يَنْفَعُهُمْؕ وَلَقَدْ عَلِمُوْا لَمَنِ اشْتَرٰٮهُ مَا لَهٗ فِى الْاٰخِرَةِ مِنْ خَلَاقٍؕ وَلَبِئْسَ مَا شَرَوْا بِهٖۤ اَنْفُسَهُمْؕ لَوْ کَانُوْا يَعْلَمُوْنَ
2:102. மேலும், அவர்கள் ஸுலைமானின் ஆட்சிக்கு எதிராக ஷைத்தான்கள் ஓதியவற்றையே பின்பற்றினார்கள்; ஆனால், ஸுலைமான் நிராகரிக்கவில்லை; ஷைத்தான்கள்தாம் நிராகரித்தனர்; அவர்கள்தாம் மனிதர்களுக்குச் சூனியத்தைக் கற்றுக்கொடுத்தார்கள்; இன்னும், பாபிலோ(ன் என்னும் ஊரி)னில் ஹாரூத், மாரூத் என்ற இரண்டு வானவர்களுக்கு இறக்கப்பட்டதையும் (தவறான வழியில் பிரயோகிக்கக் கற்றுக்கொடுத்தார்கள்). ஆனால், அவர்கள் இருவரும் "நிச்சயமாக நாங்கள் சோதனையாக இருக்கிறோம்; (இதைக் கற்று) நீ நிராகரிப்பவனாகிவிடாதே!" என்று சொல்லி எச்சரிக்காத வரையில், எவருக்கும் இந்த சூனியத்தைக் கற்றுக்கொடுக்கவில்லை; அப்படியிருந்தும் கணவனுக்கும், அவன் மனைவிக்குமிடையே பிரிவை உண்டாக்கும் செயலை அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டார்கள்; எனினும், அல்லாஹ்வின் கட்டளையின்றி அவர்கள் எவருக்கும் எத்தகைய தீங்கும் இதன் மூலம் இழைக்கமுடியாது; தங்களுக்குத் தீங்கிழைப்பதையும், எவ்வித நன்மையும் தராததையுமே கற்றுக்கொண்டார்கள்; இதனை (சூனியத்தை) விலைகொடுத்து வாங்கிக் கொண்டவர்களுக்கு மறுமையில் யாதொரு பாக்கியமும் இல்லை என்பதை அவர்கள் அறிந்துள்ளார்கள்; அவர்கள் தங்கள் ஆத்மாக்களை விற்றுப் பெற்றுக்கொண்டது கெட்டதாகும்; இதை அவர்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?
5:110 اِذْ قَالَ اللّٰهُ يٰعِيْسَى ابْنَ مَرْيَمَ اذْكُرْ نِعْمَتِىْ عَلَيْكَ وَعَلٰى وَالِدَتِكَ ۘ اِذْ اَيَّدْتُّكَ بِرُوْحِ الْقُدُسِ تُكَلِّمُ النَّاسَ فِىْ الْمَهْدِ وَكَهْلًا ۚوَاِذْ عَلَّمْتُكَ الْـكِتٰبَ وَالْحِكْمَةَ وَالتَّوْرٰٮةَ وَالْاِنْجِيْلَ ۚ وَاِذْ تَخْلُقُ مِنَ الطِّيْنِ كَهَيْـــٴَــةِ الطَّيْرِ بِاِذْنِىْ فَتَـنْفُخُ فِيْهَا فَتَكُوْنُ طَيْرًۢا بِاِذْنِىْ وَ تُبْرِئُ الْاَكْمَهَ وَالْاَبْرَصَ بِاِذْنِىْ ۚ وَاِذْ تُخْرِجُ الْمَوْتٰى بِاِذْنِىْ ۚ وَاِذْ كَفَفْتُ بَنِىْۤ اِسْرَآءِيْلَ عَنْكَ اِذْ جِئْتَهُمْ بِالْبَيِّنٰتِ فَقَالَ الَّذِيْنَ كَفَرُوْا مِنْهُمْ اِنْ هٰذَاۤ اِلَّا سِحْرٌ مُّبِيْنٌ
5:110. "மர்யமுடைய மகன் ஈஸாவே! உம்மீதும் உம் தாயார் மீதும் (நான் அருளிய) அருட்கொடையை நினைவு கூரும்! பரிசுத்த ஆன்மாவைக் கொண்டு உம்மை பலப்படுத்தியபோது நீர் தொட்டிலிலும், வாலிபப் பருவத்திலும் மனிதர்களிடம் பேசியதையும், இன்னும் நான் உமக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இன்ஜீலையும் கற்றுக் கொடுத்ததையும் (நினைத்துப் பாரும்)! இன்னும், நீர் களிமண்ணினால் என் உத்தரவைக் கொண்டு பறவை வடிவத்தைப் போல் உண்டாக்கி அதில் நீர் ஊதியபோது, அது என் உத்தரவைக் கொண்டு பறவையாகியதை; இன்னும், என் உத்தரவைக் கொண்டு பிறவிக் குருடனையும், வெண்குஷ்டக்காரனையும் சுகப்படுத்தியதையும், (நினைத்துப் பாரும்!); இறந்தோரை என் உத்தரவுக் கொண்டு (உயிர்ப்பித்து) வெளிப்படுத்தியதையும், (நினைத்துப் பாரும்!); அன்றியும், (இஸ்ராயீலின் சந்ததியினராகிய) அவர்களிடம் நீர் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தபோது, அவர்களில் நிராகரித்தவர்கள், 'இது தெளிவான சூனியத்தைத் தவிர வேறு இல்லை!' என்று கூறியபோது (அந்த) இஸ்ராயீலின் மக்க(ளின் தீங்குக)ளை உம்மைவிட்டும் நான் தடுத்துவிட்டதையும் நினைத்துப் பாரும்!" என்று (ஈஸாவை அழைத்து) அல்லாஹ் கூறியதை (நபியே! நீர் நினைவு கூர்வீராக)!"
6:7 وَلَوْ نَزَّلْنَا عَلَيْكَ كِتٰبًا فِىْ قِرْطَاسٍ فَلَمَسُوْهُ بِاَيْدِيْهِمْ لَقَالَ الَّذِيْنَ كَفَرُوْۤا اِنْ هٰذَاۤ اِلَّا سِحْرٌ مُّبِيْنٌ
6:7. காகிதத்தில் (எழுதப்பட்ட) ஒரு வேதத்தையே நாம் உம்மீது இறக்கிவைத்து, அதனை அவர்கள் தம் கைகளால் தொட்டுப்பார்த்த போதிலும், "இது பகிரங்கமான சூனியத்தைத் தவிர வேறில்லை" என்று அந்நிராகரிப்போர் நிச்சயமாகச் சொல்வார்கள்.
7:101 تِلْكَ الْقُرٰى نَقُصُّ عَلَيْكَ مِنْ اَنْۢبَآٮِٕهَا ۚ وَلَقَدْ جَآءَتْهُمْ رُسُلُهُمْ بِالْبَيِّنٰتِ ۚ فَمَا كَانُوْا لِيُؤْمِنُوْا بِمَا كَذَّبُوْا مِنْ قَبْلُ ؕ كَذٰلِكَ يَطْبَعُ اللّٰهُ عَلٰى قُلُوْبِ الْكٰفِرِيْنَ
7:101. (நபியே!) இந்த ஊர்கள் - அவற்றின் செய்திகளிலிருந்து நாம் உமக்குக் கூறுகிறோம்; நிச்சயமாக அவர்களின் தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டுவந்தார்கள்; எனினும், அவர்கள் முன்னால் பொய்யாக்கிக் கொண்டிருந்த காரணத்தினால் நம்பிக்கை கொள்பவர்களாக இல்லை; இவ்வாறே அல்லாஹ் நிராகரிப்பவர்களின் இதயங்கள் மீது முத்திரையிட்டுவிடுகிறான்.
7:109 قَالَ الْمَلَاُ مِنْ قَوْمِ فِرْعَوْنَ اِنَّ هٰذَا لَسٰحِرٌ عَلِيْمٌ ۙ
7:109. ஃபிர்அவ்னின் சமூகத்தாரைச் சேர்ந்த தலைவர்கள், "இவர் நிச்சயமாக மிக அறிந்த சூனியக்காரரே" என்று கூறினார்கள்.
7:112 يَاْتُوْكَ بِكُلِّ سٰحِرٍ عَلِيْمٍ
7:112. "அவர்கள் நன்கறிந்த ஒவ்வொரு சூனியக்காரரையும் உம்மிடம் கொண்டுவருவார்கள்" (என்று கூறினார்கள்).
7:113 وَجَآءَ السَّحَرَةُ فِرْعَوْنَ قَالُوْۤا اِنَّ لَـنَا لَاَجْرًا اِنْ كُنَّا نَحْنُ الْغٰلِبِيْنَ
7:113. அவ்வாறே ஃபிர்அவ்னிடத்தில் சூனியக்காரர்கள் வந்தார்கள்; அவர்கள், "நாங்கள் (மூஸாவை) வென்றுவிட்டால், நிச்சயமாக எங்களுக்கு (அதற்குரிய) வெகுமதி கிடைக்குமா?" என்று கேட்டார்கள்.
7:116 قَالَ اَلْقُوْا ۚ فَلَمَّاۤ اَلْقَوْا سَحَرُوْۤا اَعْيُنَ النَّاسِ وَاسْتَرْهَبُوْهُمْ وَجَآءُوْ بِسِحْرٍ عَظِيْمٍ
7:116. அதற்கு (மூஸா), "நீங்கள் (முதலில்) போடுங்கள்" என்று கூறினார்; அவ்வாறே அவர்கள் போட்டபோது, மக்களின் கண்களை மருட்டி அவர்களைத் திடுக்கிடும்படியும் செய்துவிட்டனர்; இன்னும், மகத்தான சூனியத்தைக் கொண்டுவந்தனர்.
7:120 وَ اُلْقِىَ السَّحَرَةُ سٰجِدِيْنَ ۙ
7:120. அன்றியும், அந்தச் சூனியக்காரர்கள் ஸஜ்தாவில் வீழ்ந்தார்கள்.
10:2 اَكَانَ لِلنَّاسِ عَجَبًا اَنْ اَوْحَيْنَاۤ اِلٰى رَجُلٍ مِّنْهُمْ اَنْ اَنْذِرِ النَّاسَ وَبَشِّرِ الَّذِيْنَ اٰمَنُوْۤا اَنَّ لَهُمْ قَدَمَ صِدْقٍ عِنْدَ رَبِّهِمْؔؕ قَالَ الْكٰفِرُوْنَ اِنَّ هٰذَا لَسٰحِرٌ مُّبِيْنٌ
10:2. மனிதர்களை அச்சமூட்டி எச்சரிப்பீராக (என்றும்)! நம்பிக்கை கொண்டவர்களுக்கு - அவர்களுடைய இறைவனிடம் நிச்சயமாக அவர்களுக்கு பெரும் பதவி கிடைக்கும் என்று நன்மாராயம் கூறுவீராக! என்றும் அவர்களிலிருந்தே நாம் ஒரு மனிதருக்கு 'வஹீ' அறிவித்தது மக்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதா? நிராகரிப்பவர்கள், "நிச்சயமாக இவர் பகிரங்கமான சூனியக்காரரே" என்று கூறுகின்றனர்.
10:76 فَلَمَّا جَآءَهُمُ الْحَـقُّ مِنْ عِنْدِنَا قَالُوْۤا اِنَّ هٰذَا لَسِحْرٌ مُّبِيْنٌ
10:76. நம்மிடமிருந்து அவர்களுக்குச் சத்தியம் வந்தபோது, "நிச்சயமாக இது தெளிவான சூனியமேயாகும்" என்று கூறினார்கள்.
10:77 قَالَ مُوْسٰٓى اَتَقُوْلُوْنَ لِلْحَقِّ لَمَّا جَآءَكُمْ ؕ اَسِحْرٌ هٰذَا ؕ وَلَا يُفْلِحُ السَّاحِرُوْنَ
10:77. (அதற்கு) மூஸா: "உண்மையைப் பற்றி - அது உங்களிடம் வந்தபொழுது நீங்கள் இவ்வாறு கூறலாமா? இது சூனியமா? மேலும் சூனியக்காரர்கள் வெற்றிபெறவே மாட்டார்கள்" என்று கூறினார்.
10:79 وَقَالَ فِرْعَوْنُ ائْتُوْنِىْ بِكُلِّ سٰحِرٍ عَلِيْمٍ
10:79. ஃபிர்அவுன் (தன் கூட்டத்தாரிடம்): "தேர்ச்சி பெற்ற சூனியக்காரர் ஒவ்வொருவரையும் என்னிடம் கொண்டுவாருங்கள்" எனக் கூறினான்.
10:80 فَلَمَّا جَآءَ السَّحَرَةُ قَالَ لَهُمْ مُّوْسٰۤى اَلْقُوْا مَاۤ اَنْتُمْ مُّلْقُوْنَ
10:80. அதன்படி சூனியக்காரர்கள் வந்ததும், "நீங்கள் (சூனியம் செய்ய) போடக்கூடியதைப் போடுங்கள்" என்று மூஸா அவர்களிடம் கூறினார்.
10:81 فَلَمَّاۤ اَلْقَوْا قَالَ مُوْسٰى مَا جِئْتُمْ بِهِۙ السِّحْرُؕ اِنَّ اللّٰهَ سَيُبْطِلُهٗ ؕ اِنَّ اللّٰهَ لَا يُصْلِحُ عَمَلَ الْمُفْسِدِيْنَ
10:81. அவ்வாறு அவர்கள் போட்டபோது, மூஸா: "நீங்கள் கொண்டுவந்தவை (அனைத்தும்) சூனியமே; நிச்சயமாக அல்லாஹ் விரைவிலேயே இவற்றை அழித்துவிடுவான்; அல்லாஹ் குழப்பவாதிகளின் செயலை நிச்சயமாக சீர்படுத்தமாட்டான்" என்று கூறினார்.
11:7 وَ هُوَ الَّذِىْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ فِىْ سِتَّةِ اَ يَّامٍ وَّكَانَ عَرْشُهٗ عَلَى الْمَآءِ لِيَبْلُوَكُمْ اَيُّكُمْ اَحْسَنُ عَمَلًا ؕ وَلَٮِٕنْ قُلْتَ اِنَّكُمْ مَّبْعُوْثُوْنَ مِنْۢ بَعْدِ الْمَوْتِ لَيَـقُوْلَنَّ الَّذِيْنَ كَفَرُوْۤا اِنْ هٰذَاۤ اِلَّا سِحْرٌ مُّبِيْنٌ
11:7. மேலும், அவன்தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான்; அவனுடைய 'அர்ஷ்' (அரியாசனம்) நீரின் மேல் இருந்தது; உங்களில் யார் செயலால் அழகானவர்? என்பதைச் சோதிக்கும் பொருட்டு (இவற்றைப் படைத்தான்; இன்னும், நபியே! அவர்களிடம்) "நிச்சயமாக நீங்கள் மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவீர்கள்" என்று நீர் கூறினால் (அதற்கு) நிராகரித்தவர்கள், "இது தெளிவான சூனியத்தைத் தவிர வேறில்லை" என்று நிச்சயமாகக் கூறுவார்கள்.
15:15 لَـقَالُوْۤا اِنَّمَا سُكِّرَتْ اَبْصَارُنَا بَلْ نَحْنُ قَوْمٌ مَّسْحُوْرُوْنَ
15:15. (பார்க்க முடியாது, தடுக்கப்பட்டு) "மயக்கப்பட்டதெல்லாம் எங்களுடைய பார்வைகள்தான்; (அது மட்டும்) அல்ல, நாங்கள் சூனியம் செய்யப்பட்ட ஒரு கூட்டமாகிவிட்டோம்" என்று நிச்சயமாகக் கூறுவார்கள்.
17:47 نَحْنُ اَعْلَمُ بِمَا يَسْتَمِعُوْنَ بِهٖۤ اِذْ يَسْتَمِعُوْنَ اِلَيْكَ وَاِذْ هُمْ نَجْوٰٓى اِذْ يَقُوْلُ الظّٰلِمُوْنَ اِنْ تَتَّبِعُوْنَ اِلَّا رَجُلًا مَّسْحُوْرًا
17:47. (நபியே!) அவர்கள் உமக்குச் செவிசாய்த்தால், எதற்கு (என்ன நோக்கத்துடன்) செவிசாய்க்கின்றார்கள் என்பதையும், அவர்கள் (தமக்குள்) இரகசியமாக ஆலோசனை செய்யும்போது, "சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரையே அன்றி (வேறெவரையும்) நீங்கள் பின்பற்றவில்லை" என்று (தங்களுக்குள்) அந்த அநியாயக்காரர்கள் சொல்வதையும் நாம் நன்கறிவோம்.
20:57 قَالَ اَجِئْتَنَا لِتُخْرِجَنَا مِنْ اَرْضِنَا بِسِحْرِكَ يٰمُوْسٰى
20:57. "மூஸாவே! நீர் உம் சூனியத்தைக் கொண்டு எங்களை எங்கள் நாட்டைவிட்டு வெளியேற்றுவதற்காகவா நம்மிடம் வந்தீர்?" என்று கூறினான்.
20:58 فَلَنَاْتِيَنَّكَ بِسِحْرٍ مِّثْلِهٖ فَاجْعَلْ بَيْنَنَا وَبَيْنَكَ مَوْعِدًا لَّا نُخْلِفُهٗ نَحْنُ وَلَاۤ اَنْتَ مَكَانًـا سُوًى
20:58. "அவ்வாறாயின், இதைப் போன்ற சூனியத்தை நாங்களும் உமக்குத் திடனாகக் கொண்டு வருவோம்; ஆகவே, நாங்களோ அல்லது நீரோ மாற்றம் செய்ய முடியாதபடி நமக்கும் உமக்குமிடையே ஒரு தவணையை (எல்லோரும் வந்து காணக்கூடிய) ஒரு சரியான தளத்தில் ஏற்படுத்தும்" (என்றான்).
20:63 قَالُوْۤا اِنْ هٰذٰٮنِ لَسٰحِرٰنِ يُرِيْدٰنِ اَنْ يُّخْرِجٰكُمْ مِّنْ اَرْضِكُمْ بِسِحْرِهِمَا وَيَذْهَبَا بِطَرِيْقَتِكُمُ الْمُثْلٰى
20:63. (மக்களை நோக்கி,) "நிச்சயமாக இவ்விருவரும் சூனியக்காரர்களே! தம் இருவருடைய சூனியத்தைக் கொண்டு உங்களை உங்களுடைய நாட்டை விட்டு வெளியேற்றவும், சிறப்பான உங்களுடைய (மார்க்க) பாதையைப் போக்கி விடவுமே இவ்விருவரும் விரும்புகிறார்கள்" என்று அவர்கள் கூறினார்கள்.
20:66 قَالَ بَلْ اَلْقُوْاۚ فَاِذَا حِبَالُهُمْ وَعِصِيُّهُمْ يُخَيَّلُ اِلَيْهِ مِنْ سِحْرِهِمْ اَنَّهَا تَسْعٰى
20:66. அதற்கவர்: "அவ்வாறன்று! நீங்களே (முதலில்) எறியுங்கள்" என்று கூறினார்; (அவர்கள் எறியவே) அவர்களுடைய கயிறுகளும் அவர்களுடைய தடிகளும் அவர்களின் சூனியத்தால் (பாம்புகளாகி) நிச்சயமாக நெளிந்தோடுவது போல் அவருக்குத் தோன்றியது.
20:69 وَاَ لْقِ مَا فِىْ يَمِيْنِكَ تَلْقَفْ مَا صَنَعُوْا ؕاِنَّمَا صَنَعُوْا كَيْدُ سٰحِرٍ ؕ وَلَا يُفْلِحُ السّٰحِرُ حَيْثُ اَتٰى
20:69. "இன்னும், உம் வலது கையில் இருப்பதை நீர் (கீழே) எறியும்; அவர்கள் செய்த (சூனியங்கள் யா)வற்றை(யும்) அது விழுங்கிவிடும்; அவர்கள் செய்தது சூனியக்காரனின் சூழ்ச்சியே ஆகும்; ஆகவே, சூனியக்காரன் எங்கு வந்தாலும் வெற்றி பெற மாட்டான்" (என்றும் கூறினோம்).
20:70 فَاُلْقِىَ السَّحَرَةُ سُجَّدًا قَالُوْۤا اٰمَنَّا بِرَبِّ هٰرُوْنَ وَمُوْسٰى
20:70. (மூஸா வெற்றி பெற்றதும்) சூனியக்காரர்கள் ஸுஜூது செய்தவர்களாக வீழ்த்தப்பட்டு "ஹாரூனுடைய, மூஸாவுடைய இறைவன் மீதே நாங்கள் நம்பிக்கை கொள்கிறோம்" என்று கூறினார்கள்.
20:71 قَالَ اٰمَنْتُمْ لَهٗ قَبْلَ اَنْ اٰذَنَ لَـكُمْؕ اِنَّهٗ لَـكَبِيْرُكُمُ الَّذِىْ عَلَّمَكُمُ السِّحْرَۚ فَلَاُقَطِّعَنَّ اَيْدِيَكُمْ وَاَرْجُلَكُمْ مِّنْ خِلَافٍ وَّلَاُصَلِّبَـنَّكُمْ فِىْ جُذُوْعِ النَّخْلِ وَلَـتَعْلَمُنَّ اَيُّنَاۤ اَشَدُّ عَذَابًا وَّاَبْقٰى
20:71. "நான் உங்களுக்கு அனுமதியளிக்கும் முன்னரே நீங்கள் அவர்மீது நம்பிக்கை கொண்டுவிட்டீர்களா? நிச்சயமாக அவர் உங்களுக்குச் சூனியத்தைக் கற்றுக்கொடுத்த உங்களுடைய தலைவர் (போல் தோன்றுகிறது); எனவே, நான் உங்களை மாறுகை, மாறுகால் வாங்கி, பேரீச்ச மரங்களின் அடிப்பாகங்களில் உங்களைக் கழுவேற்றுவேன்; மேலும், வேதனை கொடுப்பதில் நம்மில் கடுமையானவர் யார்? அதில் நிலையாக இருப்பவரும் யார்? என்பதை நிச்சயமாக நீங்கள் அறிந்து கொள்வீர்கள்" என்று அவன் (ஃபிர்அவ்ன்) கூறினான்.
20:73 اِنَّاۤ اٰمَنَّا بِرَبِّنَا لِيَـغْفِرَ لَـنَا خَطٰيٰنَا وَمَاۤ اَكْرَهْتَـنَا عَلَيْهِ مِنَ السِّحْرِؕ وَاللّٰهُ خَيْرٌ وَّاَبْقٰى
20:73. எங்களின் தவறுகளையும், இன்னும் சூனியத்திலிருந்து எதனைச் செய்வதின் மீது எங்களை நீ கட்டாயப்படுத்தினாயோ அக்குற்றத்தையும் எங்களுக்கு மன்னிப்பதற்காக, எங்கள் இறைவன் மீது நிச்சயமாக நாங்கள் நம்பிக்கை கொண்டோம்; மேலும், அல்லாஹ்தான் மிக்க மேலானவனாகவும், நிலைத்திருப்பவனாகவும் இருக்கின்றான்" (என்று கூறினார்கள்).
21:3 لَاهِيَةً قُلُوْبُهُمْ ؕ وَاَسَرُّوا النَّجْوَىۖ الَّذِيْنَ ظَلَمُوْا ۖ هَلْ هٰذَاۤ اِلَّا بَشَرٌ مِّثْلُكُمْ ۚ اَفَتَاْتُوْنَ السِّحْرَ وَاَنْتُمْ تُبْصِرُوْنَ
21:3. அவர்களுடைய உள்ளங்கள் அலட்சியமாக இருக்கின்றன; இன்னும், இத்தகைய அநியாயக்காரர்கள் தம்மிடையே இரகசியமாக, "இவர் உங்களைப்போன்ற ஒரு மனிதரே அன்றி வேறில்லை; நீங்கள் நன்கு பார்த்துக்கொண்டே (அவருடைய) சூனியத்தின்பால் வருகிறீர்களா?" என்று கூறிக் கொள்கின்றனர்.
25:8 اَوْ يُلْقٰٓى اِلَيْهِ كَنْزٌ اَوْ تَكُوْنُ لَهٗ جَنَّةٌ يَّاْكُلُ مِنْهَا ؕ وَقَالَ الظّٰلِمُوْنَ اِنْ تَتَّبِعُوْنَ اِلَّا رَجُلًا مَّسْحُوْرًا
25:8. "அல்லது, இவருக்கு ஒரு புதையல் போடப்பட்டிருக்க வேண்டாமா? அல்லது, எதிலிருந்து அவர் உண்பாரோ அவ்விதத் தோட்டம், அவருக்கு உண்டாகியிருக்கவேண்டாமா?" (என்றும் கூறுகின்றனர்;) அன்றியும், இந்த அநியாயக்காரர்கள்: (நம்பிக்கையாளர்களை நோக்கி) "சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரையே அன்றி வேறெவரையும் நீங்கள் பின்பற்றவில்லை" என்று கூறுகிறார்கள்.
25:47 وَهُوَ الَّذِىْ جَعَلَ لَـكُمُ الَّيْلَ لِبَاسًا وَّالنَّوْمَ سُبَاتًا وَّجَعَلَ النَّهَارَ نُشُوْرًا
25:47. அவன்தான் உங்களுக்கு இரவை ஆடையாகவும், நித்திரையை இளைப்பாறுதலாகவும் ஆக்கியிருக்கின்றான்; இன்னும், அவனே பகலை (உழைப்பிற்கு ஏற்றவாறு) மீண்டும் எழுவதற்காக ஆக்கியிருக்கிறான்.
26:34 قَالَ لِلْمَلَاِ حَوْلَهٗۤ اِنَّ هٰذَا لَسٰحِرٌ عَلِيْمٌۙ
26:34. (ஃபிர்அவ்ன் ) தன்னைச் சுற்றியிருந்த பிரதானிகளை நோக்கி, "இவர் நிச்சயமாக திறமை மிக்க சூனியக்காரரே!" என்று கூறினான்.
26:35 يُّرِيْدُ اَنْ يُّخْرِجَكُمْ مِّنْ اَرْضِكُمْ بِسِحْرِهٖ ۖ فَمَاذَا تَاْمُرُوْنَ
26:35. "இவர் தம் சூனியத்தைக் கொண்டு உங்களை உங்கள் பூமியை விட்டும் வெளியேற்ற நாடுகிறார்; எனவே, (இதைப் பற்றி) நீங்கள் என்ன கட்டளையிடுகிறீர்கள்?" (என்று கேட்டான்).
26:37 يَاْتُوْكَ بِكُلِّ سَحَّارٍ عَلِيْمٍ
26:37. "அவர்கள் கற்றறிந்த ஒவ்வொரு சூனியக்காரனையும் உம்மிடம் கொண்டு வருவார்கள்" (என்றும் கூறினார்கள்.)
26:38 فَجُمِعَ السَّحَرَةُ لِمِيْقَاتِ يَوْمٍ مَّعْلُوْمٍۙ
26:38. சூனியக்காரர்கள் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட வேளையில் ஒன்று திரட்டப்பட்டார்கள்.
26:40 لَعَلَّنَا نَـتَّبِعُ السَّحَرَةَ اِنْ كَانُوْا هُمُ الْغٰلِبِيْنَ
26:40. "ஏனென்றால், சூனியக்காரர்கள் வெற்றி அடைந்தால், நாம் அவர்களைப் பின்பற்றக்கூடும்" (என்றும் கூறப்பட்டது).
26:41 فَلَمَّا جَآءَ السَّحَرَةُ قَالُوْا لِفِرْعَوْنَ اَٮِٕنَّ لَـنَا لَاَجْرًا اِنْ كُنَّا نَحْنُ الْغٰلِبِيْنَ
26:41. ஆகவே, சூனியக்காரர்கள் வந்தபோது அவர்கள் ஃபிர்அவ்னை நோக்கி, "திண்ணமாக நாங்கள் வெற்றியாளர்களாகிவிட்டால், நிச்சயமாக எங்களுக்கு (அதற்குரிய) கூலி உண்டா?" என்று கேட்டார்கள்.
26:49 قَالَ اٰمَنْتُمْ لَهٗ قَبْلَ اَنْ اٰذَنَ لَـكُمْۚ اِنَّهٗ لَـكَبِيْرُكُمُ الَّذِىْ عَلَّمَكُمُ السِّحْرَۚ فَلَسَوْفَ تَعْلَمُوْنَ ۙ لَاُقَطِّعَنَّ اَيْدِيَكُمْ وَاَرْجُلَـكُمْ مِّنْ خِلَافٍ وَّلَاُصَلِّبَنَّكُمْ اَجْمَعِيْنَۚ
26:49. (அதற்கு ஃபிர்அவ்ன் அவர்களை நோக்கி) "உங்களுக்கு நான் அனுமதி கொடுப்பதற்கு முன்னரே நீங்கள் அவரை நம்பிக்கை கொண்டு விட்டீர்களா? நிச்சயமாக இவர், உங்களுக்குச் சூனியத்தைக் கற்றுக்கொடுத்த உங்களைவிடப் பெரியவராக இருக்கிறார்; ஆகவே, வெகுசீக்கிரம் நீங்கள் (இதன் விளைவைத்) தெரிந்து கொள்வீர்கள்: நிச்சயமாக நான் மாறுகை, மாறுகால் வாங்கி உங்கள் யாவரையும் சிலுவையில் அறைந்து (கொன்று) விடுவேன்" எனக் கூறினான்.
26:153 قَالُوْۤا اِنَّمَاۤ اَنْتَ مِنَ الْمُسَحَّرِيْنَۚ
26:153. அதற்கு அவர்கள்: "நிச்சயமாக நீர் சூனியம் செய்யப்பட்டவர்களில் இருக்கிறீர்" என்று சொன்னார்கள்.
26:185 قَالُوْۤا اِنَّمَاۤ اَنْتَ مِنَ الْمُسَحَّرِيْنَۙ
26:185. அவர்கள் சொன்னார்கள்: "நிச்சயமாக நீர் சூனியம் செய்யப்பட்டவர்களில் இருக்கின்றீர்."
27:13 فَلَمَّا جَآءَتْهُمْ اٰيٰتُنَا مُبْصِرَةً قَالُوْا هٰذَا سِحْرٌ مُّبِيْنٌۚ
27:13. இவ்வாறு, நம்முடைய அத்தாட்சிகள் (யாவரும்) பார்க்கக் கூடியவையாக அவர்களிடம் வந்தபோது, அவர்கள் "இது தெளிவான சூனியமேயாகும்" என்று கூறினார்கள்.
28:36 فَلَمَّا جَآءَهُمْ مُّوْسٰى بِاٰيٰتِنَا بَيِّنٰتٍ قَالُوْا مَا هٰذَاۤ اِلَّا سِحْرٌ مُّفْتَـرًى وَمَا سَمِعْنَا بِهٰذَا فِىْۤ اٰبَآٮِٕنَا الْاَوَّلِيْنَ
28:36. ஆகவே, மூஸா அவர்களிடம் நம்முடைய தெளிவான அத்தாட்சிகளுடன் வந்தபோது, அவர்கள், "இது இட்டுக்கட்டப்பட்ட சூனியமே அன்றி வேறில்லை; இன்னும், நம்முடைய முன்னோர்களான நம் மூதாதையர்களிடத்திலும் இதை நாம் கேள்விப்பட்டதில்லை" என்று கூறினார்கள்.
28:48 فَلَمَّا جَآءَهُمُ الْحَـقُّ مِنْ عِنْدِنَا قَالُوْا لَوْلَاۤ اُوْتِىَ مِثْلَ مَاۤ اُوْتِىَ مُوْسٰى ؕ اَوَلَمْ يَكْفُرُوْا بِمَاۤ اُوْتِىَ مُوْسٰى مِنْ قَبْلُ ۚ قَالُوْا سِحْرٰنِ تَظَاهَرَا وَقَالُوْۤا اِنَّا بِكُلٍّ كٰفِرُوْنَ
28:48. எனினும், (இப்பொழுது) நம்மிடமிருந்து சத்திய (மார்க்க)ம் அவர்களிடம் வந்தபோது, "மூஸாவுக்குக் கொடுக்கப்பட்டது போன்று இவருக்கு ஏன் கொடுக்கப்படவில்லை" என்று கேட்கிறார்கள்; இதற்கு முன்னர் மூஸாவுக்குக் கொடுக்கப்பட்டதையும் அவர்(களின் மூதாதையர்)கள் நிராகரிக்கவில்லையா? இன்னும், அவர்கள் கூறுகிறார்கள்: "(குர்ஆனும், தவ்ராத்தும்) ஒன்றையொன்று உறுதிப்படுத்தும் இரண்டு சூனிய (மந்திர)ங்களே!" என்று; இன்னும், அவர்கள் கூறுகிறார்கள்: "நிச்சயமாக நாங்கள் (இவை) அனைத்தையும் நிராகரிக்கிறோம்" என்று.
34:43 وَاِذَا تُتْلٰى عَلَيْهِمْ اٰيٰتُنَا بَيِّنٰتٍ قَالُوْا مَا هٰذَاۤ اِلَّا رَجُلٌ يُّرِيْدُ اَنْ يَّصُدَّكُمْ عَمَّا كَانَ يَعْبُدُ اٰبَآؤُكُمْ ۚ وَقَالُوْا مَا هٰذَاۤ اِلَّاۤ اِفْكٌ مُّفْتَـرً ىؕ وَقَالَ الَّذِيْنَ كَفَرُوْا لِلْحَقِّ لَمَّا جَآءَهُمْ ۙ اِنْ هٰذَاۤ اِلَّا سِحْرٌ مُّبِيْنٌ
34:43. நம்முடைய தெளிவான வசனங்கள் அவர்களுக்கு ஓதிக்காண்பிக்கப்பட்டால் அவர்கள், "இவர் (ஒரு சாதாரண) மனிதரே அன்றி வேறில்லை; உங்கள் மூதாதையர்கள் வணங்கிக் கொண்டிருந்தவற்றைவிட்டும் உங்களைத் தடுத்துவிடவே இவர் விரும்புகிறார்" என்று கூறுகிறார்கள்; இன்னும், "அவர்கள் இது இட்டுக்கட்டப்பட்ட பொய்யேயன்றி வேறில்லை" என்றும் கூறுகின்றனர்; மேலும் உண்மை அவர்களிடத்தில் வந்தபோது, "இது வெளிப்படையான சூனியமேயன்றி வேறில்லை" என்றும் நிராகரித்தவர்கள் கூறுகிறார்கள்.
37:15 وَقَالُوْۤا اِنْ هٰذَاۤ اِلَّا سِحْرٌ مُّبِيْنٌ ۖۚ
37:15. "இது பகிரங்கமான சூனியமேயன்றி வேறில்லை" என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
38:4 وَعَجِبُوْۤا اَنْ جَآءَهُمْ مُّنْذِرٌ مِّنْهُمْ وَقَالَ الْكٰفِرُوْنَ هٰذَا سٰحِرٌ كَذَّابٌ ۖۚ
38:4. அன்றியும், தங்களிடமிருந்தே அச்சமூட்டி எச்சரிப்பவர் தங்களிடம் வந்ததைப் பற்றி ஆச்சரியமடைந்தனர்; "இவர் ஒரு சூனியக்காரப் பொய்யர்!" என்றும் நிராகரித்தவர்கள் கூறினர்.
40:24 اِلٰى فِرْعَوْنَ وَ هَامٰنَ وَقَارُوْنَ فَقَالُوْا سٰحِرٌ كَذَّابٌ
40:24. ஃபிர்அவ்ன், ஹாமான், காரூன் ஆகியவர்களிடம்; ஆனால், அவர்களோ "(இவர்) பொய்யுரைப்பவர், சூனியக்காரர்" என்று கூறினர்.
43:49 وَقَالُوْا يٰۤاَيُّهَ السَّاحِرُ ادْعُ لَنَا رَبَّكَ بِمَا عَهِدَ عِنْدَكَۚ اِنَّنَا لَمُهْتَدُوْنَ
43:49. மேலும், அவர்கள்: "சூனியக்காரரே! (உம் இறைவன்) உம்மிடம் வாக்குறுதி அளித்த காரணத்தால், நீர் எங்களுக்காக உம்முடைய இறைவனை அழை(த்துப் பிரார்த்தனை செய்)யும்; நிச்சயமாக நாங்கள் நேர்வழியைப் பெற்று விடுவோம்" என்று கூறினார்கள்.
46:7 وَاِذَا تُتْلٰى عَلَيْهِمْ اٰيٰتُنَا بَيِّنٰتٍ قَالَ الَّذِيْنَ كَفَرُوْا لِلْحَقِّ لَمَّا جَآءَهُمْۙ هٰذَا سِحْرٌ مُّبِيْنٌؕ
46:7. மேலும், நம்முடைய தெளிவான வசனங்கள் அவர்களுக்கு ஓதிக்காண்பிக்கப்பட்டால், தங்களிடம் வந்த அந்த உண்மையை நிராகரித்துவிட்டார்களே அவர்கள், "இது தெளிவான சூனியமே!" என்றும் கூறுகிறார்கள்.
51:39 فَتَوَلّٰى بِرُكْنِهٖ وَقَالَ سٰحِرٌ اَوْ مَجْنُوْنٌ
51:39. அவன் தன் (ஆட்சி, செல்வம், படைகள் ஆகியவற்றின்) பலத்தின் காரணமாக (அவரைப்) புறக்கணித்து, "இவர் ஒரு சூனியக்காரர், அல்லது பைத்தியக்காரர்" என்று கூறினான்.
51:52 كَذٰلِكَ مَاۤ اَتَى الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ مِّنْ رَّسُوْلٍ اِلَّا قَالُوْا سَاحِرٌ اَوْ مَجْنُوْنٌۚ
51:52. இவ்வாறே, இவர்களுக்கு முன்னிருந்தவர்களிடம் (நம்) தூதர்களிலிருந்து ஒருவர் வரும்போதெல்லாம், அவர்கள் (அவரை) சூனியக்காரர், அல்லது பைத்தியக்காரர் என்று கூறாமல் இருந்ததில்லை.
52:15 اَفَسِحْرٌ هٰذَاۤ اَمْ اَنْتُمْ لَا تُبْصِرُوْنَۚ
52:15. இது சூனியம்தானா? அல்லது நீங்கள் பார்க்க முடியாது (குருடர்களாக) ஆகிவிட்டீர்களா?
54:2 وَاِنْ يَّرَوْا اٰيَةً يُّعْرِضُوْا وَيَقُوْلُوْا سِحْرٌ مُّسْتَمِرٌّ
54:2. எனினும், அவர்கள் ஓர் அத்தாட்சியைப் பார்த்தால், (அதைப்) புறக்கணித்துவிடுகிறார்கள்; "இது வழமையாக நடைபெறும் சூனியம்தான்" என்றும் கூறுகிறார்கள்.
61:6 وَاِذْ قَالَ عِيْسَى ابْنُ مَرْيَمَ يٰبَنِىْۤ اِسْرَآءِيْلَ اِنِّىْ رَسُوْلُ اللّٰهِ اِلَيْكُمْ مُّصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَىَّ مِنَ التَّوْرٰٮةِ وَمُبَشِّرًۢا بِرَسُوْلٍ يَّاْتِىْ مِنْۢ بَعْدِى اسْمُهٗۤ اَحْمَدُؕ فَلَمَّا جَآءَهُمْ بِالْبَيِّنٰتِ قَالُوْا هٰذَا سِحْرٌ مُّبِيْنٌ
61:6. மேலும், மர்யமின் குமாரர் ஈஸா: "இஸ்ராயீல் மக்களே! எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை மெய்ப்பிப்பவனாகவும்; எனக்குப் பின்னர் வரவிருக்கும் 'அஹ்மது' என்னும் பெயருடைய தூதரைப்பற்றி நன்மாராயம் கூறுபவனாகவும் இருக்கும் நிலையில், நிச்சயமாக நான் அல்லாஹ்வின் தூதனாக உங்களிடம் வந்துள்ளேன்" என்று கூறியவேளையை (நபியே! நீர் நினைவுகூர்வீராக!); எனினும், அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளை அவர் கொண்டுவந்தபோது அவர்கள், "இது தெளிவான சூனியமாகும்" என்று கூறினார்கள்.
74:24 فَقَالَ اِنْ هٰذَاۤ اِلَّا سِحْرٌ يُّؤْثَرُۙ
74:24. அப்பால் அவன் கூறினான்: "இது (பிறரிடமிருந்து கற்றுப்) பேசப்படும் சூனியமே அன்றி வேறில்லை."