செல்வந்தர்கள்
2:273   لِلْفُقَرَآءِ الَّذِيْنَ اُحْصِرُوْا فِىْ سَبِيْلِ اللّٰهِ لَا يَسْتَطِيْعُوْنَ ضَرْبًا فِى الْاَرْضِ يَحْسَبُهُمُ الْجَاهِلُ اَغْنِيَآءَ مِنَ التَّعَفُّفِ‌ۚ تَعْرِفُهُمْ بِسِيْمٰهُمْ‌ۚ لَا يَسْــٴَــلُوْنَ النَّاسَ اِلْحَــافًا ‌ؕ وَمَا تُنْفِقُوْا مِنْ خَيْرٍ فَاِنَّ اللّٰهَ بِهٖ عَلِيْمٌ‏
2:273. பூமியில் நடமாடி (தம் வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்ற) எதுவும் செய்ய முடியாத அளவுக்கு, அல்லாஹ்வின் பாதையில் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட ஏழைகளுக்குத் தான் (உங்களுடைய தான தர்மங்கள்) உரியவையாகும்; (பிறரிடம் யாசிக்காத) அவர்களுடைய பேணுதலைக் கண்டு, அறியாதவன் அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக்கொள்கிறான்; அவர்களுடைய அடையாளங்களால் அவர்களை நீர் அறிந்து கொள்ளலாம்; அவர்கள் மனிதர்களிடம் வருந்தி எதையும் கேட்கமாட்டார்கள்; (இத்தகையோருக்காக) நல்லதிலிருந்து நீங்கள் எதைச் செலவு செய்தாலும், அதை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிகின்றான்.
4:6   وَابْتَلُوا الْيَتٰمٰى حَتّٰىۤ اِذَا بَلَغُوا النِّكَاحَ‌ ۚ فَاِنْ اٰنَسْتُمْ مِّنْهُمْ رُشْدًا فَادْفَعُوْۤا اِلَيْهِمْ اَمْوَالَهُمْ‌ۚ وَلَا تَاْكُلُوْهَاۤ اِسْرَافًا وَّبِدَارًا اَنْ يَّكْبَرُوْا‌ ؕ وَمَنْ كَانَ غَنِيًّا فَلْيَسْتَعْفِفْ‌ ۚ وَمَنْ كَانَ فَقِيْرًا فَلْيَاْكُلْ بِالْمَعْرُوْفِ‌ ؕ فَاِذَا دَفَعْتُمْ اِلَيْهِمْ اَمْوَالَهُمْ فَاَشْهِدُوْا عَلَيْهِمْ‌ ؕ وَكَفٰى بِاللّٰهِ حَسِيْبًا‏
4:6. அநாதைகளை அவர்கள் திருமணத்திற்குரிய பருவத்தை அடையும் வரை (அவர்கள் முன்னேற்றம் கருதி) சோதித்துக்கொண்டிருங்கள்; (தங்கள் சொத்தை நிர்வகிக்கும்) பகுத்தறிவை அவர்களிடம் நீங்கள் கண்டால் அவர்களிடம் அவர்கள் சொத்தை ஒப்படைத்துவிடுங்கள்; அவர்கள் பெரியவர்களாகி (தம் பொருள்களைத் திரும்பப் பெற்று)விடுவார்கள் என்று அவற்றை அவசரமாகவும், வீண்விரயமாகவும் சாப்பிடாதீர்கள்; இன்னும், (அவ்வநாதைகளின் பொறுப்பாளர்) செல்வந்தராக இருந்தால் (அச்சொத்திலிருந்து ஊதியம் பெறுவதைத்) தவிர்த்துக்கொள்ளட்டும்; ஆனால், அவர் ஏழையாக இருந்தால் நியாயமான அளவு (அதிலிருந்து) சாப்பிட்டுக்கொள்ளவும்; மேலும், அவர்களுடைய பொருட்களை அவர்களிடம் ஒப்படைக்கும்போது, அவர்கள்மீது சாட்சிகளை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்; கணக்கெடுப்பதில் அல்லாஹ்வே போதுமானவன்.
4:135   يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا كُوْنُوْا قَوَّامِيْنَ بِالْقِسْطِ شُهَدَآءَ لِلّٰهِ وَلَوْ عَلٰٓى اَنْفُسِكُمْ اَوِ الْوَالِدَيْنِ وَالْاَقْرَبِيْنَ‌ ؕ اِنْ يَّكُنْ غَنِيًّا اَوْ فَقِيْرًا فَاللّٰهُ اَوْلٰى بِهِمَا‌ فَلَا تَتَّبِعُوا الْهَوٰٓى اَنْ تَعْدِلُوْا ‌ۚ وَاِنْ تَلْوٗۤا اَوْ تُعْرِضُوْا فَاِنَّ اللّٰهَ كَانَ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرًا‏
4:135. நம்பிக்கையாளர்களே! நீங்கள் நீதியின்மீது நிலைத்திருப்பவர்களாக, அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாக இருங்கள்; (அச்சாட்சி) உங்களுக்கோ அல்லது (உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினர்களுக்கோ விரோதமாக இருப்பினும் சரியே! (நீங்கள் யாருக்காக சாட்சியம் கூறுகிறீர்களோ) அவர் செல்வந்தராக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும் (உண்மையான சாட்சியம் கூறுங்கள்); ஏனெனில், அல்லாஹ் அவ்விருவருக்கும் (அவர்களைக் காப்பதற்கு) மிக உரியவன்; எனவே, நியாயம் வழங்குவதில் மனோ இச்சையைப் பின்பற்றி விடாதீர்கள், மேலும், நீங்கள் மாற்றிக்கூறினாலும் அல்லது (சாட்சிக் கூறுவதைப்) புறக்கணித்தாலும், நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.
9:28   يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنَّمَا الْمُشْرِكُوْنَ نَجَسٌ فَلَا يَقْرَبُوا الْمَسْجِدَ الْحَـرَامَ بَعْدَ عَامِهِمْ هٰذَا‌ ۚ وَ اِنْ خِفْتُمْ عَيْلَةً فَسَوْفَ يُغْنِيْكُمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖۤ اِنْ شَآءَ‌ ؕ اِنَّ اللّٰهَ عَلِيْمٌ حَكِيْمٌ‏
9:28. நம்பிக்கை கொண்டவர்களே! நிச்சயமாக இணைவைப்பவர்களெல்லாம் அசுத்தமானவர்களே. ஆதலால், அவர்களின் இவ்வாண்டிற்குப் பின்னர் (கஃபா என்னும்) மஸ்ஜிதுல் ஹராமை அவர்கள் நெருங்கக்கூடாது. (அதனால், உங்களுக்கு) வறுமையை நீங்கள் பயந்தீர்களாயின் அல்லாஹ் - அவன் நாடினால் - விரைவில் தன் அருளால் உங்களைச் செல்வந்தர்களாக்கி விடுவான். நிச்சயமாக அல்லாஹ், எல்லாம் அறிந்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
9:86   وَاِذَاۤ اُنْزِلَتْ سُوْرَةٌ اَنْ اٰمِنُوْا بِاللّٰهِ وَجَاهِدُوْا مَعَ رَسُوْلِهِ اسْتَـاْذَنَكَ اُولُوا الطَّوْلِ مِنْهُمْ وَقَالُوْا ذَرْنَا نَكُنْ مَّعَ الْقٰعِدِيْنَ‏
9:86. மேலும், "அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு, அவனுடைய தூதருடன் சேர்ந்து போர் புரியுங்கள்" என்று ஏதாவது ஓர் அத்தியாயம் இறக்கப்பட்டால், அவர்களில் வசதி படைத்தவர்கள் உம்மிடம் அனுமதி கோரி, "எங்களை விட்டு விடுங்கள்; நாங்கள் (போருக்கு வராமல்) தங்கியிருப்போருடன் இருந்து கொள்கிறோம்" என்றும் கூறுகின்றனர்.
34:34   وَمَاۤ اَرْسَلْنَا فِىْ قَرْيَةٍ مِّنْ نَّذِيْرٍ اِلَّا قَالَ مُتْـرَفُوْهَاۤ ۙاِنَّا بِمَاۤ اُرْسِلْـتُمْ بِهٖ كٰفِرُوْنَ‏
34:34. அன்றியும், அச்சமூட்டி எச்சரிப்போரை நாம் (எந்த) ஓர் ஊருக்கு அனுப்பியபோதும், அங்கிருந்த செல்வந்தர்கள்: "நிச்சயமாக நாங்கள், நீங்கள் எதைக் கொண்டு அனுப்பப்பட்டிருக்கின்றீர்களோ, அதை நிராகரிக்கின்றோம்" என்று கூறாமல் இருக்கவில்லை.
43:23   وَكَذٰلِكَ مَاۤ اَرْسَلْنَا مِنْ قَبْلِكَ فِىْ قَرْيَةٍ مِّنْ نَّذِيْرٍ اِلَّا قَالَ مُتْرَفُوْهَاۤ اِنَّا وَجَدْنَاۤ اٰبَآءَنَا عَلٰٓى اُمَّةٍ وَّاِنَّا عَلٰٓى اٰثٰرِهِمْ مُّقْتَدُوْنَ‏
43:23. இவ்வாறே உமக்கு முன்னரும் நாம் அச்சமூட்டி எச்சரிப்பவரை எந்த ஊருக்கு அனுப்பினாலும் அதனுடைய செல்வந்தர்கள்: "நிச்சயமாக நாங்கள் எங்கள் மூதாதையரை ஒரு மார்க்கத்தில் கண்டோம்; நிச்சயமாக நாங்கள் அவர்களின் அடிச்சுவடுகளையே பின்பற்றுபவர்களாக இருக்கிறோம்" என்று கூறாதிருக்கவில்லை.
59:7   مَاۤ اَفَآءَ اللّٰهُ عَلٰى رَسُوْلِهٖ مِنْ اَهْلِ الْقُرٰى فَلِلّٰهِ وَلِلرَّسُوْلِ وَلِذِى الْقُرْبٰى وَالْيَتٰمٰى وَالْمَسٰكِيْنِ وَابْنِ السَّبِيْلِۙ كَىْ لَا يَكُوْنَ دُوْلَةًۢ بَيْنَ الْاَغْنِيَآءِ مِنْكُمْ‌ ؕ وَمَاۤ اٰتٰٮكُمُ الرَّسُوْلُ فَخُذُوْهُ وَ مَا نَهٰٮكُمْ عَنْهُ فَانْتَهُوْا‌ ۚ وَاتَّقُوا اللّٰهَ ‌ؕ اِنَّ اللّٰهَ شَدِيْدُ الْعِقَابِ‌ۘ‏
59:7. (வெற்றி கொள்ளப்படும் அனைத்து) ஊரார்களிடமிருந்து அல்லாஹ் தன் தூதருக்கு மீட்டுக் கொடுத்தவை - அல்லாஹ்வுக்கும், (அவன்) தூதருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கருக்கும் உரியதாகும்; உங்களிலுள்ள செல்வந்தர்களுக்குள்ளேயே (செல்வம்) சுற்றிக் கொண்டிருக்காமல் இருப்பதற்காக (இவ்வாறு பங்கிட்டுக்கொடுக்கக் கட்டளையிடப்பட்டுள்ளது); மேலும், (நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுத்தாரோ அதை எடுத்துக்கொள்ளுங்கள்; இன்னும், எதை விட்டும் உங்களை விலக்கினாரோ (அதை விட்டும்) விலகிக்கொள்ளுங்கள்; மேலும், அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வதில் மிகக் கடினமானவன்.