சொத்துரிமை
2:180 كُتِبَ عَلَيْكُمْ اِذَا حَضَرَ اَحَدَكُمُ الْمَوْتُ اِنْ تَرَكَ خَيْرَا ۖۚ اۨلْوَصِيَّةُ لِلْوَالِدَيْنِ وَالْاَقْرَبِيْنَ بِالْمَعْرُوْفِۚ حَقًّا عَلَى الْمُتَّقِيْنَؕ
2:180. உங்களில் எவருக்கு மரணம் நெருங்கி விடுகிறதோ அவர் ஏதேனும் பொருள் விட்டுச் செல்பவராக இருப்பின், அவர் (தம்) பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் முறைப்படி மரண சாஸனம் செய்வது விதியாக்கப்பட்டிருக்கிறது; (இது) இறையச்சமுடையோர் மீது கடமையாகும்.
4:11 يُوْصِيْكُمُ اللّٰهُ فِىْۤ اَوْلَادِكُمْ لِلذَّكَرِ مِثْلُ حَظِّ الْاُنْثَيَيْنِ ۚ فَاِنْ كُنَّ نِسَآءً فَوْقَ اثْنَتَيْنِ فَلَهُنَّ ثُلُثَا مَا تَرَكَ ۚ وَاِنْ كَانَتْ وَاحِدَةً فَلَهَا النِّصْفُ ؕ وَلِاَ بَوَيْهِ لِكُلِّ وَاحِدٍ مِّنْهُمَا السُّدُسُ مِمَّا تَرَكَ اِنْ كَانَ لَهٗ وَلَدٌ ۚ فَاِنْ لَّمْ يَكُنْ لَّهٗ وَلَدٌ وَّوَرِثَهٗۤ اَبَوٰهُ فَلِاُمِّهِ الثُّلُثُ ؕ فَاِنْ كَانَ لَهٗۤ اِخْوَةٌ فَلِاُمِّهِ السُّدُسُ مِنْۢ بَعْدِ وَصِيَّةٍ يُّوْصِىْ بِهَاۤ اَوْ دَيْنٍ ؕ اٰبَآؤُكُمْ وَاَبْنَآؤُكُمْ ۚ لَا تَدْرُوْنَ اَيُّهُمْ اَقْرَبُ لَـكُمْ نَفْعًا ؕ فَرِيْضَةً مِّنَ اللّٰهِ ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَلِيْمًا حَكِيْمًا
4:11. உங்கள் மக்களில் ஓர் ஆணுக்கு, இரண்டு பெண்களுக்குக் கிடைக்கும் பங்குபோன்றது கிடைக்கும் என்று அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கின்றான்; அவர்கள் (இரு பெண்களாக அல்லது) இரண்டுக்கு மேற்பட்ட பெண்களாக இருந்தால் (இறந்த) அவர் விட்டுச்சென்றதிலிருந்து மூன்றில் இரண்டு (பாகம்) அவர்களுக்கு உண்டு; ஒரே பெண்ணாக இருந்தால் அவளுக்கு பாதி (சொத்து) உண்டு; (இறந்த) அவருக்கு குழந்தைகள் இருக்குமானால் விட்டுச்சென்றதில் ஆறில் ஒரு பாகம் (அவரது) பெற்றோர் ஒவ்வொருவருக்கும் உண்டு; ஆனால், அவருக்கு குழந்தை இல்லாதிருந்து பெற்றோர் மாத்திரமே வாரிசாக இருந்தால் அவருடைய தாய்க்கு மூன்றில் ஒரு பாகம் (மீதி தந்தைக்கு உரியதாகும்); இறந்தவருக்கு சகோதரர்கள் இருந்தால், அவர் தாய்க்கு ஆறில் ஒரு பாகம்தான் (மீதி தந்தைக்குச் சேரும்; இவ்வாறு பிரித்துக்கொடுப்பது) அவர் செய்துள்ள மரண சாசனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னர்தான்; உங்கள் தந்தையரோ, இன்னும் உங்கள் குழந்தைகளோ இவர்களில் யார் உங்களுக்குப் பயனளிப்பதில் மிக நெருக்கமாக இருப்பவர்கள் என்று நீங்கள் அறியமாட்டீர்கள்; (ஆகையினால், இந்த பாகப்பிரிவினை) அல்லாஹ்விடமிருந்து வந்த கட்டளையாகும்; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும், மிக்க ஞானமுடையவனாகவும் இருக்கிறான்.
4:12 وَلَـكُمْ نِصْفُ مَا تَرَكَ اَزْوَاجُكُمْ اِنْ لَّمْ يَكُنْ لَّهُنَّ وَلَدٌ ۚ فَاِنْ كَانَ لَهُنَّ وَلَدٌ فَلَـكُمُ الرُّبُعُ مِمَّا تَرَكْنَ مِنْۢ بَعْدِ وَصِيَّةٍ يُّوْصِيْنَ بِهَاۤ اَوْ دَ يْنٍ ؕ وَلَهُنَّ الرُّبُعُ مِمَّا تَرَكْتُمْ اِنْ لَّمْ يَكُنْ لَّكُمْ وَلَدٌ ۚ فَاِنْ كَانَ لَـكُمْ وَلَدٌ فَلَهُنَّ الثُّمُنُ مِمَّا تَرَكْتُمْ مِّنْۢ بَعْدِ وَصِيَّةٍ تُوْصُوْنَ بِهَاۤ اَوْ دَ يْنٍ ؕ وَاِنْ كَانَ رَجُلٌ يُّوْرَثُ كَلٰلَةً اَوِ امْرَاَةٌ وَّلَهٗۤ اَخٌ اَوْ اُخْتٌ فَلِكُلِّ وَاحِدٍ مِّنْهُمَا السُّدُسُ ۚ فَاِنْ كَانُوْۤا اَكْثَرَ مِنْ ذٰ لِكَ فَهُمْ شُرَكَآءُ فِى الثُّلُثِ مِنْۢ بَعْدِ وَصِيَّةٍ يُّوْصٰى بِهَاۤ اَوْ دَ يْنٍ ۙ غَيْرَ مُضَآرٍّ ۚ وَصِيَّةً مِّنَ اللّٰهِ ؕ وَاللّٰهُ عَلِيْمٌ حَلِيْمٌ ؕ
4:12. இன்னும், உங்கள் மனைவியர் விட்டுச் சென்றதில் - அவர்களுக்குப் பிள்ளை இல்லாதிருந்தால் உங்களுக்குப் பாதிபாகம் உண்டு; அவர்களுக்குப் பிள்ளை இருந்தால், அவர்கள் விட்டுச் சென்றதிலிருந்து உங்களுக்குக் கால்பாகம் தான்; (இதுவும்) அவர்கள் செய்திருக்கின்ற மரண சாசனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னர் தான் - தவிர, உங்களுக்குப் பிள்ளை இல்லாதிருப்பின் நீங்கள் விட்டுச்சென்றதிலிருந்து, அவர்களுக்குக் கால்பாகம் தான், உங்களுக்குப் பிள்ளையிருந்தால் அப்போது, அவர்களுக்கு நீங்கள் விட்டுச்சென்றதில் எட்டில் ஒருபாகம் தான், (இதுவும்) நீங்கள் செய்திருக்கும் மரண சாசனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னரே தான்; அனந்தரம்கொள்ளப்படுகின்ற வாரிசுகள் இல்லாத ஓர் ஆணோ அல்லது ஒரு பெண்ணோ (இறந்து) - இவர்களுக்கு ஒரு சகோதரனோ அல்லது சகோதரியோ இருந்தால் - அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒருபாகம் உண்டு; ஆனால், இதற்கு அதிகமாக இருந்தால் அவர்கள் மூன்றில் ஒரு பாகத்தில் கூட்டாளிகளாவார்கள்; (இதுவும்) அவர்களின் மரண சாசனமும், கடனும் நிறைவேற்றிய பின்னர்தான்; ஆனால், (மரண சாஸனம் வாரிசுகள் எவருக்கும்) பாதிப்பு ஏற்படாத வகையில் (செய்யப்பட வேண்டும்; இது) அல்லாஹ்வின் கட்டளையாகும்; இன்னும், அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும், மிக்க சகிப்புத்தன்மையுடையவனாகவும் இருக்கின்றான்.
4:19 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا يَحِلُّ لَـكُمْ اَنْ تَرِثُوا النِّسَآءَ كَرْهًا ؕ وَلَا تَعْضُلُوْهُنَّ لِتَذْهَبُوْا بِبَعْضِ مَاۤ اٰتَيْتُمُوْهُنَّ اِلَّاۤ اَنْ يَّاْتِيْنَ بِفَاحِشَةٍ مُّبَيِّنَةٍ ۚ وَعَاشِرُوْهُنَّ بِالْمَعْرُوْفِ ۚ فَاِنْ كَرِهْتُمُوْهُنَّ فَعَسٰۤى اَنْ تَكْرَهُوْا شَيْــٴًـــا وَّيَجْعَلَ اللّٰهُ فِيْهِ خَيْرًا كَثِيْرًا
4:19. நம்பிக்கை கொண்டவர்களே! பெண்களை (அவர்கள் மனப்பொருத்தம் இல்லாத நிலையில்) நீங்கள் பலவந்தப்படுத்தி அனந்தரம் கொள்வது உங்களுக்கு ஆகுமானதல்ல; பகிரங்கமான யாதொரு மானக்கேடான செயலை செய்தாலன்றி, அவர்களுக்கு நீங்கள் கொடுத்ததிலிருந்து சிலவற்றை எடுத்துக்கொள்வதற்காக அவர்களைத் தடுத்துவைக்காதீர்கள்; இன்னும், அவர்களுடன் நல்லமுறையில் நடந்துகொள்ளுங்கள்; நீங்கள் அவர்களை வெறுத்தால் (அது சரியில்லை; ஏனெனில்,) நீங்கள் ஒன்றை வெறுக்கக்கூடும், அதில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை ஏற்படுத்திவிடலாம்.
4:32 وَلَا تَتَمَنَّوْا مَا فَضَّلَ اللّٰهُ بِهٖ بَعْضَكُمْ عَلٰى بَعْضٍ ؕ لِلرِّجَالِ نَصِيْبٌ مِّمَّا اكْتَسَبُوْا ؕ وَلِلنِّسَآءِ نَصِيْبٌ مِّمَّا اكْتَسَبْنَ ؕ وَسْئَـلُوا اللّٰهَ مِنْ فَضْلِهٖ ؕ اِنَّ اللّٰهَ كَانَ بِكُلِّ شَىْءٍ عَلِيْمًا
4:32. மேலும், எதன் மூலம் உங்களில் சிலரை, வேறு சிலரைவிட அல்லாஹ் மேன்மையாக்கி இருக்கின்றானோ, அதனை (அடைய வேண்டுமென்று) பேராசை கொள்ளாதீர்கள்; ஆண்களுக்கு, அவர்கள் சம்பாதித்ததில் (உரிய) பங்குண்டு; (அவ்வாறே) பெண்களுக்கும், அவர்கள் சம்பாதித்ததில் (உரிய) பங்குண்டு; எனவே, அல்லாஹ்விடம் அவன் அருளைக் கேளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.
4:33 وَلِكُلٍّ جَعَلْنَا مَوَالِىَ مِمَّا تَرَكَ الْوَالِدٰنِ وَالْاَقْرَبُوْنَ ؕ وَالَّذِيْنَ عَقَدَتْ اَيْمَانُكُمْ فَاٰ تُوْهُمْ نَصِيْبَهُمْؕ اِنَّ اللّٰهَ كَانَ عَلٰى كُلِّ شَىْءٍ شَهِيْدًا
4:33. இன்னும், பெற்றோரும், உறவினர்களும் விட்டுச் செல்கின்ற (செல்வத்)திலிருந்து (விகிதப்படி அதையடையும்) வாரிசுகளை, ஒவ்வொருவருக்கும், நாம் ஏற்படுத்தியுள்ளோம்; அவ்வாறே, நீங்கள் உடன்படிக்கை செய்துகொண்டோருக்கும் அவர்களுடைய பாகத்தை அவர்களுக்குக் கொடுத்துவிடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் சாட்சியாளனாக இருக்கின்றான்.
5:106 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا شَهَادَةُ بَيْنِكُمْ اِذَا حَضَرَ اَحَدَكُمُ الْمَوْتُ حِيْنَ الْوَصِيَّةِ اثْـنٰنِ ذَوَا عَدْلٍ مِّنْكُمْ اَوْ اٰخَرَانِ مِنْ غَيْـرِكُمْ اِنْ اَنْـتُمْ ضَرَبْتُمْ فِى الْاَرْضِ فَاَصَابَتْكُمْ مُّصِيْبَةُ الْمَوْتِ ؕ تَحْبِسُوْنَهُمَا مِنْۢ بَعْدِ الصَّلٰوةِ فَيُقْسِمٰنِ بِاللّٰهِ اِنِ ارْتَبْتُمْ لَا نَشْتَرِىْ بِهٖ ثَمَنًا وَّلَوْ كَانَ ذَا قُرْبٰى ۙ وَلَا نَـكْتُمُ شَهَادَةَ ۙ اللّٰهِ اِنَّاۤ اِذًا لَّمِنَ الْاٰثِمِيْنَ
5:106. நம்பிக்கை கொண்டவர்களே! உங்களில் யாருக்கேனும் மரணம் சமீபித்து, அவர் மரண சாஸனம் செய்யும் நேரத்தில் உங்களிலிருந்து நீதியுடைய இருவர் உங்களுக்கு மத்தியில் சாட்சியாக இருக்கவேண்டும்; அல்லது உங்களில் எவரும் பூமியில் பயணம் செய்து கொண்டிருக்கும்போது மரணத்துன்பம் ஏற்பட்டால் உங்களையல்லாத வேறிருவர் (சாட்சியாக) இருக்கட்டும்; (இவர்கள் மீது) உங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால் இவ்விருவரையும் தொழுகைக்குப் பின் தடுத்து வைத்துக்கொள்ளவும்: இவ்விருவரும் அதனை சொற்ப கிரயத்திற்கு நாங்கள் விற்று விடமாட்டோம்! (எவருக்கு சாட்சியம் கூறுகின்றோமோ) அவர்கள், (எங்களுடைய) பந்துக்களாக இருந்த போதிலும், சரியே! இன்னும், நாங்கள் அல்லாஹ்வின் சாட்சியத்தை மறைக்கவும் மாட்டோம்! (அவ்வாறு செய்திருந்தால்) அப்பொழுது நிச்சயமாக பாவிகளில் உள்ளவர்களாகிவிடுவோம்!" என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யவேண்டும்.