ஞானம்
2:32 قَالُوْا سُبْحٰنَكَ لَا عِلْمَ لَنَآ اِلَّا مَا عَلَّمْتَنَا ؕ اِنَّكَ اَنْتَ الْعَلِيْمُ الْحَكِيْمُ
2:32. அவர்கள் "(இறைவா!) நீயே தூயவன்; நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப் பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை; நிச்சயமாக நீயே அறிந்தவன்; விவேகமிக்கோன்" எனக் கூறினார்கள்.
2:129 رَبَّنَا وَابْعَثْ فِيْهِمْ رَسُوْلًا مِّنْهُمْ يَتْلُوْا عَلَيْهِمْ اٰيٰتِكَ وَيُعَلِّمُهُمُ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَ يُزَكِّيْهِمْؕ اِنَّكَ اَنْتَ الْعَزِيْزُ الْحَكِيْمُ
2:129. "எங்கள் இறைவனே! அவர்களிடையே உன்னுடைய வசனங்களை ஓதிக்காண்பித்து, அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக்கொடுத்து, அவர்களைத் தூய்மைப்படுத்தக் கூடிய ஒரு தூதரை அவர்களிலிருந்தே நீ அனுப்புவாயாக! நிச்சயமாக நீயே வல்லமை மிக்கோனுமாகவும், ஞானமுடையோனாகவும் இருக்கின்றாய்" (என்றும் பிரார்த்தித்தார்).
2:151 كَمَآ اَرْسَلْنَا فِيْکُمْ رَسُوْلًا مِّنْکُمْ يَتْلُوْا عَلَيْكُمْ اٰيٰتِنَا وَيُزَكِّيْکُمْ وَيُعَلِّمُکُمُ الْكِتٰبَ وَالْحِکْمَةَ وَيُعَلِّمُكُمْ مَّا لَمْ تَكُوْنُوْا تَعْلَمُوْنَ ؕۛ
2:151. இதே போன்று, நாம் உங்களிடையே, உங்களிலிருந்தே ஒரு தூதரை நம் வசனங்களை உங்களுக்கு ஓதிக்காண்பிப்பதற்காகவும்; உங்களைத் தூய்மைப்படுத்துவதற்காகவும்; உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக்கொடுப்பதற்காகவும்; இன்னும், உங்களுக்குத் தெரியாமல் இருந்தவற்றை உங்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காகவும் அனுப்பியுள்ளோம்.
2:209 فَاِنْ زَلَـلْتُمْ مِّنْۢ بَعْدِ مَا جَآءَتْکُمُ الْبَيِّنٰتُ فَاعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ عَزِيْزٌ حَکِيْمٌ
2:209. தெளிவான அத்தாட்சிகள் உங்களிடம் வந்த பின்னரும், நீங்கள் சறுகிவிடுவீர்களானால்- நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கவன்; ஞானமுள்ளவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
2:220 فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِؕ وَيَسْــٴَــلُوْنَكَ عَنِ الْيَتٰمٰىؕ قُلْ اِصْلَاحٌ لَّهُمْ خَيْرٌ ؕ وَاِنْ تُخَالِطُوْهُمْ فَاِخْوَانُكُمْؕ وَاللّٰهُ يَعْلَمُ الْمُفْسِدَ مِنَ الْمُصْلِحِؕ وَلَوْ شَآءَ اللّٰهُ لَاَعْنَتَكُمْؕ اِنَّ اللّٰهَ عَزِيْزٌ حَكِيْمٌ
2:220. (மேற்கூறிய இரண்டும்) இவ்வுலகிலும், மறுமையிலும் (என்ன பலன்களைத் தரும் என்பதைப் பற்றி நீங்கள் தெளிவுபெறுவதற்காக தன் வசனங்களை இவ்வாறு விளக்குகின்றான்;) அநாதைகளைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறுவீராக!: "அவர்களுக்குரிய சீர்திருத்தத்தைச் செய்தல் மிகவும் நல்லது; நீங்கள் அவர்களுடன் கலந்து (வாழ்வதாக) இருந்தால் அவர்கள் உங்கள் சகோதரர்களேயாவார்கள்; இன்னும், சீர்திருத்துபவனிலிருந்து குழப்பம் உண்டாக்குபவனை அல்லாஹ் நன்கறிவான்; அல்லாஹ் நாடியிருந்தால் உங்களைக் கஷ்டத்திற்குள்ளாக்கியிருப்பான்; நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்."
2:228 وَالْمُطَلَّقٰتُ يَتَرَ بَّصْنَ بِاَنْفُسِهِنَّ ثَلٰثَةَ قُرُوْٓءٍ ؕ وَلَا يَحِلُّ لَهُنَّ اَنْ يَّكْتُمْنَ مَا خَلَقَ اللّٰهُ فِىْٓ اَرْحَامِهِنَّ اِنْ كُنَّ يُؤْمِنَّ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِؕ وَبُعُوْلَتُهُنَّ اَحَقُّ بِرَدِّهِنَّ فِىْ ذٰ لِكَ اِنْ اَرَادُوْٓا اِصْلَاحًا ؕ وَلَهُنَّ مِثْلُ الَّذِىْ عَلَيْهِنَّ بِالْمَعْرُوْفِ وَلِلرِّجَالِ عَلَيْهِنَّ دَرَجَةٌ ؕ وَاللّٰهُ عَزِيْزٌ حَكِيْمٌ
2:228. விவாகரத்து கூறப்பட்ட பெண்கள், தங்களுக்கு மூன்று மாதவிடாய்கள் ஆகும் வரை பொறுத்து இருக்கவேண்டும்; அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்புவார்களாயின். அவர்களுடைய கர்ப்பக்கோளறைகளில், அல்லாஹ் படைத்திருப்பதை மறைப்பதற்கு அவர்களுக்கு அனுமதி இல்லை; ஆனால், அவர்களுடைய கணவர்கள் (அவர்களைத் திரும்ப அழைத்துக்கொள்வதன் மூலம்) இணக்கத்தை நாடினால் (அத்தவணைக்குள்) அவர்களை (மனைவியராக)த் திருப்பிக்கொள்ள அவர்களுக்கு அதிக உரிமையுண்டு; பெண்களுக்குக் கடமைகள் இருப்பதுபோல், அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன; ஆயினும், ஆண்களுக்கு அவர்கள்மீது ஒருபடி உயர்வுண்டு; மேலும், அல்லாஹ் வல்லமையும், ஞானமும் மிக்கோனாக இருக்கின்றான்.
2:231 وَاِذَا طَلَّقْتُمُ النِّسَآءَ فَبَلَغْنَ اَجَلَهُنَّ فَاَمْسِكُوْهُنَّ بِمَعْرُوْفٍ اَوْ سَرِّحُوْهُنَّ بِمَعْرُوْفٍ وَلَا تُمْسِكُوْهُنَّ ضِرَارًا لِّتَعْتَدُوْا ۚ وَمَنْ يَّفْعَلْ ذٰ لِكَ فَقَدْ ظَلَمَ نَفْسَهٗ ؕ وَلَا تَتَّخِذُوْٓا اٰيٰتِ اللّٰهِ هُزُوًا وَّاذْكُرُوْا نِعْمَتَ اللّٰهِ عَلَيْكُمْ وَمَآ اَنْزَلَ عَلَيْكُمْ مِّنَ الْكِتٰبِ وَالْحِكْمَةِ يَعِظُكُمْ بِهٖؕ وَاتَّقُوا اللّٰهَ وَاعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ
2:231. நீங்கள் பெண்களை (மீளக்கூடிய) விவாகரத்து (தலாக்) கூறி, அவர்கள் தங்களது தவணையை அடைந்துவிட்டால் அவர்களை முறைப்படி (மனைவியராக) தடுத்து வைத்துக்கொள்ளுங்கள்; அல்லது, (தவணை முடிந்ததும்) நல்ல முறையில் அவர்களை விடுவித்து விடுங்கள்; ஆனால், துன்புறுத்தி வரம்புமீறுவதற்காக அவர்களைத் தடுத்து வைத்துக்கொள்ளாதீர்கள்; எவர் இவ்வாறு செய்கிறாரோ திட்டமாக அவர் தமக்குத்தாமே அநீதி இழைத்துக்கொண்டார்; எனவே, அல்லாஹ்வின் வசனங்களை கேலிக்குரியதாக ஆக்கிவிடாதீர்கள்; உங்கள்மீதுள்ள அல்லாஹ்வின் அருட்கொடையையும், உங்கள்மீது அவன் இறக்கிய வேதத்தையும், ஞானத்தையும் நினைவுகூருங்கள்; இதனைக் கொண்டு அவன் உங்களுக்கு உபதேசிக்கிறான்; அல்லாஹ்வை அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் நன்கறிபவனாக இருக்கின்றான் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
2:260 وَاِذْ قَالَ اِبْرٰهٖمُ رَبِّ اَرِنِىْ كَيْفَ تُحْىِ الْمَوْتٰى ؕ قَالَ اَوَلَمْ تُؤْمِنْؕ قَالَ بَلٰى وَلٰـكِنْ لِّيَطْمَٮِٕنَّ قَلْبِىْؕ قَالَ فَخُذْ اَرْبَعَةً مِّنَ الطَّيْرِ فَصُرْهُنَّ اِلَيْكَ ثُمَّ اجْعَلْ عَلٰى كُلِّ جَبَلٍ مِّنْهُنَّ جُزْءًا ثُمَّ ادْعُهُنَّ يَاْتِيْنَكَ سَعْيًا ؕ وَاعْلَمْ اَنَّ اللّٰهَ عَزِيْزٌ حَكِيْمٌ
2:260. இன்னும், இப்ராஹீம்: "என் இறைவா! இறந்தவர்களை நீ எவ்வாறு உயிர்ப்பிக்கிறாய் என்பதை எனக்குக் காண்பிப்பாயாக!" என வேண்டியபோது, அவன் "நீர் (இதை) நம்பவில்லையா?" எனக் கேட்டான்; "அவ்வாறல்ல! (நான் நம்புகிறேன்); ஆனால், என் இதயம் அமைதி பெறுவதற்காக (இவ்வாறு கேட்கிறேன்)" எனக் கூறினார்: "(அப்படியாயின்,) பறவைகளிலிருந்து நான்கைப் பிடித்து, அவற்றைத் துண்டு துண்டாக வெட்டி உம்மிடம் வைத்துக்கொள்ளும்; பின்னர், அவற்றின் ஒவ்வொரு பாகத்தையும் மலையின் மீது வைத்துவிடும்; பின், அவற்றைக் கூப்பிடும்; அவை உம்மிடம் வேகமாய் வரும்; நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், ஞானம் மிக்கவன் என்பதை அறிந்து கொள்ளும்" என்று (அல்லாஹ்) கூறினான்.
2:269 يُؤْتِى الْحِكْمَةَ مَنْ يَّشَآءُ ۚ وَمَنْ يُّؤْتَ الْحِكْمَةَ فَقَدْ اُوْتِىَ خَيْرًا كَثِيْرًا ؕ وَمَا يَذَّكَّرُ اِلَّاۤ اُولُوا الْاَلْبَابِ
2:269. தான் நாடியவருக்கு அவன் ஞானத்தைக் கொடுக்கின்றான்; (இத்தகு) ஞானம் எவருக்குக் கொடுக்கப்படுகிறதோ, அவர் அதிகமான நன்மைகள் கொடுக்கப்பட்டவராக நிச்சயமாக ஆகிவிடுகிறார்; எனினும், அறிவுடையோர் தவிர (வேறு யாரும் இதைச்) சிந்திப்பதில்லை.
3:6 هُوَ الَّذِىْ يُصَوِّرُكُمْ فِى الْاَرْحَامِ كَيْفَ يَشَآءُ ؕ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُ
3:6. அவன்தான் கர்ப்பக்கோளறைகளில், தான் நாடியபடி உங்களை வடிவமைக்கிறான்; அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறில்லை; அவன் யாவரையும் மிகைத்தோனாகவும், விவேகம் மிக்கோனாகவும் இருக்கின்றான்.
3:18 شَهِدَ اللّٰهُ اَنَّهٗ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَۙ وَالْمَلٰٓٮِٕكَةُ وَاُولُوا الْعِلْمِ قَآٮِٕمًا ۢ بِالْقِسْطِؕ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُؕ
3:18. அல்லாஹ், நீதியை நிலைநிறுத்தியவனாக உள்ள நிலையில் அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை என்று சாட்சி கூறுகிறான்; மேலும், வானவர் (மலக்கு)களும் அறிவுடையோரும் (இவ்வாறே சாட்சி கூறுகின்றனர்); அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் (வேறு) யாருமில்லை; அவன் மிகைத்தவன், ஞானமிக்கவன்.
3:48 وَيُعَلِّمُهُ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَالتَّوْرٰٮةَ وَالْاِنْجِيْلَۚ
3:48. இன்னும், அவருக்கு அவன் வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இன்ஜீலையும் கற்றுக்கொடுப்பான்.
3:58 ذٰ لِكَ نَـتْلُوْهُ عَلَيْكَ مِنَ الْاٰيٰتِ وَ الذِّكْرِ الْحَكِيْمِ
3:58. (நபியே!) நாம் உம்மீது ஓதிக்காட்டும் இவை (நமது) வசனங்களாகவும், ஞானம் மிக்க அறிவுரையாகவும் இருக்கின்றன.
3:62 اِنَّ هٰذَا لَهُوَ الْقَصَصُ الْحَـقُّ ۚ وَمَا مِنْ اِلٰهٍ اِلَّا اللّٰهُؕ وَاِنَّ اللّٰهَ لَهُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُ
3:62. நிச்சயமாக இதுதான் உண்மையான வரலாறு; அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை; நிச்சயமாக அல்லாஹ் - அவன் யாவரையும் மிகைத்தோன், மிக்க ஞானமுடையோன்.
3:81 وَاِذْ اَخَذَ اللّٰهُ مِيْثَاقَ النَّبِيّٖنَ لَمَاۤ اٰتَيْتُكُمْ مِّنْ كِتٰبٍ وَّحِكْمَةٍ ثُمَّ جَآءَكُمْ رَسُوْلٌ مُّصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَـتُؤْمِنُنَّ بِهٖ وَلَـتَـنْصُرُنَّهٗ ؕ قَالَ ءَاَقْرَرْتُمْ وَاَخَذْتُمْ عَلٰى ذٰ لِكُمْ اِصْرِىْؕ قَالُوْۤا اَقْرَرْنَا ؕ قَالَ فَاشْهَدُوْا وَاَنَا مَعَكُمْ مِّنَ الشّٰهِدِيْنَ
3:81. இன்னும், (நினைவுகூருங்கள்;) நபிமார்களிடம் உறுதிமொழி வாங்கியபோது, "நான் உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கொடுத்திருக்கின்றேன்; பின்னர், உங்களிடம் இருப்பதை மெய்ப்பிக்கும் தூதர் வருவார்; நீங்கள் அவர்மீது திடமாக நம்பிக்கை கொண்டு அவருக்கு உறுதியாக உதவி செய்வீர்களாக!" (எனக் கூறினான்): "நீங்கள் (இதை) உறுதிப்படுத்துகிறீர்களா? என்னுடைய இந்த உடன்படிக்கையை ஏற்றுக்கொள்கிறீர்களா?" என்றும் கேட்டான்; "நாங்கள் (அதனை ஏற்று) உறுதிப்படுத்துகிறோம்" என்று கூறினார்கள்; (அதற்கு அல்லாஹ்) "நீங்கள் சாட்சியாக இருங்கள்; நானும் உங்களுடன் சாட்சியாளர்களில் (ஒருவனாக) இருக்கிறேன்" என்று கூறினான்.
3:126 وَمَا جَعَلَهُ اللّٰهُ اِلَّا بُشْرٰى لَـكُمْ وَلِتَطْمَٮِٕنَّ قُلُوْبُكُمْ بِهٖؕ وَمَا النَّصْرُ اِلَّا مِنْ عِنْدِ اللّٰهِ الْعَزِيْزِ الْحَكِيْمِۙ
3:126. உங்களுக்கு ஒரு நற்செய்தியாகவும், உங்கள் இதயங்கள் இதன் மூலம் அமைதி பெறுவதற்காகவுமேயன்றி அல்லாஹ் அதை ஆக்கவில்லை; மிகைத்தவனும், ஞானமிக்கவனுமாகிய அல்லாஹ்விடத்திலல்லாமல் வேறு உதவி இல்லை.
4:11 يُوْصِيْكُمُ اللّٰهُ فِىْۤ اَوْلَادِكُمْ لِلذَّكَرِ مِثْلُ حَظِّ الْاُنْثَيَيْنِ ۚ فَاِنْ كُنَّ نِسَآءً فَوْقَ اثْنَتَيْنِ فَلَهُنَّ ثُلُثَا مَا تَرَكَ ۚ وَاِنْ كَانَتْ وَاحِدَةً فَلَهَا النِّصْفُ ؕ وَلِاَ بَوَيْهِ لِكُلِّ وَاحِدٍ مِّنْهُمَا السُّدُسُ مِمَّا تَرَكَ اِنْ كَانَ لَهٗ وَلَدٌ ۚ فَاِنْ لَّمْ يَكُنْ لَّهٗ وَلَدٌ وَّوَرِثَهٗۤ اَبَوٰهُ فَلِاُمِّهِ الثُّلُثُ ؕ فَاِنْ كَانَ لَهٗۤ اِخْوَةٌ فَلِاُمِّهِ السُّدُسُ مِنْۢ بَعْدِ وَصِيَّةٍ يُّوْصِىْ بِهَاۤ اَوْ دَيْنٍ ؕ اٰبَآؤُكُمْ وَاَبْنَآؤُكُمْ ۚ لَا تَدْرُوْنَ اَيُّهُمْ اَقْرَبُ لَـكُمْ نَفْعًا ؕ فَرِيْضَةً مِّنَ اللّٰهِ ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَلِيْمًا حَكِيْمًا
4:11. உங்கள் மக்களில் ஓர் ஆணுக்கு, இரண்டு பெண்களுக்குக் கிடைக்கும் பங்குபோன்றது கிடைக்கும் என்று அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கின்றான்; அவர்கள் (இரு பெண்களாக அல்லது) இரண்டுக்கு மேற்பட்ட பெண்களாக இருந்தால் (இறந்த) அவர் விட்டுச்சென்றதிலிருந்து மூன்றில் இரண்டு (பாகம்) அவர்களுக்கு உண்டு; ஒரே பெண்ணாக இருந்தால் அவளுக்கு பாதி (சொத்து) உண்டு; (இறந்த) அவருக்கு குழந்தைகள் இருக்குமானால் விட்டுச்சென்றதில் ஆறில் ஒரு பாகம் (அவரது) பெற்றோர் ஒவ்வொருவருக்கும் உண்டு; ஆனால், அவருக்கு குழந்தை இல்லாதிருந்து பெற்றோர் மாத்திரமே வாரிசாக இருந்தால் அவருடைய தாய்க்கு மூன்றில் ஒரு பாகம் (மீதி தந்தைக்கு உரியதாகும்); இறந்தவருக்கு சகோதரர்கள் இருந்தால், அவர் தாய்க்கு ஆறில் ஒரு பாகம்தான் (மீதி தந்தைக்குச் சேரும்; இவ்வாறு பிரித்துக்கொடுப்பது) அவர் செய்துள்ள மரண சாசனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னர்தான்; உங்கள் தந்தையரோ, இன்னும் உங்கள் குழந்தைகளோ இவர்களில் யார் உங்களுக்குப் பயனளிப்பதில் மிக நெருக்கமாக இருப்பவர்கள் என்று நீங்கள் அறியமாட்டீர்கள்; (ஆகையினால், இந்த பாகப்பிரிவினை) அல்லாஹ்விடமிருந்து வந்த கட்டளையாகும்; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும், மிக்க ஞானமுடையவனாகவும் இருக்கிறான்.
4:17 اِنَّمَا التَّوْبَةُ عَلَى اللّٰهِ لِلَّذِيْنَ يَعْمَلُوْنَ السُّوْٓءَ بِجَهَالَةٍ ثُمَّ يَتُوْبُوْنَ مِنْ قَرِيْبٍ فَاُولٰٓٮِٕكَ يَتُوْبُ اللّٰهُ عَلَيْهِمْؕ وَكَانَ اللّٰهُ عَلِيْمًا حَكِيْمًا
4:17. எவர்கள் அறியாமையினால் தீமை செய்துவிட்டு பின்னர் விரைவில் மன்னிப்புத் தேடிக்கொள்கிறார்களோ அவர்களுக்குத்தான் அல்லாஹ்விடத்தில் மன்னிப்பு உண்டு; அல்லாஹ் அவர்களை மன்னிப்பான்; இன்னும், அல்லாஹ் நன்கறிந்தோனும் ஞானம் உடையோனுமாக இருக்கிறான்.
4:24 وَّالْمُحْصَنٰتُ مِنَ النِّسَآءِ اِلَّا مَا مَلَـكَتْ اَيْمَانُكُمْۚ كِتٰبَ اللّٰهِ عَلَيْكُمْۚ وَاُحِلَّ لَـكُمْ مَّا وَرَآءَ ذٰ لِكُمْ اَنْ تَبْتَـغُوْا بِاَمْوَالِكُمْ مُّحْصِنِيْنَ غَيْرَ مُسَافِحِيْنَ ؕ فَمَا اسْتَمْتَعْتُمْ بِهٖ مِنْهُنَّ فَاٰ تُوْهُنَّ اُجُوْرَهُنَّ فَرِيْضَةً ؕ وَلَا جُنَاحَ عَلَيْكُمْ فِيْمَا تَرٰضَيْـتُمْ بِهٖ مِنْۢ بَعْدِ الْـفَرِيْضَةِ ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَلِيْمًا حَكِيْمًا
4:24. இன்னும், அடிமைப் பெண்களைத் தவிர, கணவனுள்ள பெண்களும் - (அவர்களை நீங்கள் மணமுடிப்பது விலக்கப்பட்டுள்ளது: இவை அனைத்தும்) அல்லாஹ் உங்கள் மீது விதியாக்கியவையாகும்; இன்னும், இவர்களைத் தவிர, மற்ற பெண்களை (நீங்கள்) விபசாரம் செய்யாதவர்களாக, (அவர்களைத் தக்கமுறையில்) திருமணம் செய்பவர்களாக இருந்தால், அவர்களுக்கு உங்கள் செல்வங்களிலிருந்து (மஹராக) கொடுத்து (திருமணம் செய்யத்) தேடிக்கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது; எனவே, அவர்களிடமிருந்து எதை நீங்கள் (திருமணத்தின் மூலம்) இன்பம் அனுபவித்தீர்களோ (அதற்காக) அவர்களுக்குரிய மஹரை அவர்களிடம் கட்டாயமாகக் கொடுத்துவிடுங்கள்; எனினும், (மஹரை) நிர்ணயித்தபின் (அதைக் கூட்டவோ அல்லது குறைக்கவோ) நீங்கள் ஒருவருக்கொருவர் சம்மதித்துக்கொண்டால் உங்கள் மீது குற்றமாகாது; நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தோனும் ஞானமுடையோனுமாக இருக்கிறான்.
4:26 يُرِيْدُ اللّٰهُ لِيُبَيِّنَ لَـكُمْ وَيَهْدِيَكُمْ سُنَنَ الَّذِيْنَ مِنْ قَبْلِكُمْ وَيَتُوْبَ عَلَيْكُمْ ؕ وَاللّٰهُ عَلِيْمٌ حَكِيْمٌ
4:26. அல்லாஹ் (தன்னுடைய சட்டங்களை) உங்களுக்குத் தெளிவாக்கவும், உங்களுக்கு முன் இருந்த (நல்ல)வர்கள் சென்ற (நேரான) வழிகளில் உங்களைச் செலுத்தவும், உங்களுக்குப் பாவமன்னிப்பு அளிக்கவுமே விரும்புகிறான்; இன்னும், அல்லாஹ் நன்கு அறிந்தோனாகவும், ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.
4:54 اَمْ يَحْسُدُوْنَ النَّاسَ عَلٰى مَاۤ اٰتٰٮهُمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖۚ فَقَدْ اٰتَيْنَاۤ اٰلَ اِبْرٰهِيْمَ الْـكِتٰبَ وَالْحِكْمَةَ وَاٰتَيْنٰهُمْ مُّلْكًا عَظِيْمًا
4:54. அல்லாஹ் தன் அருளினால் மனிதர்களுக்கு வழங்கியவற்றின் மீது இவர்கள் பொறாமை கொள்கின்றார்களா? இன்னும் நாம், நிச்சயமாக இப்ராஹீமின் சந்ததியினருக்கு வேதத்தையும், ஞானத்தையும் கொடுத்தோம்; அத்துடன் மாபெரும் அரசாங்கத்தையும் அவர்களுக்குக் கொடுத்தோம்.
4:56 اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا بِاٰيٰتِنَا سَوْفَ نُصْلِيْهِمْ نَارًا ؕ كُلَّمَا نَضِجَتْ جُلُوْدُهُمْ بَدَّلْنٰهُمْ جُلُوْدًا غَيْرَهَا لِيَذُوْقُوا الْعَذَابَ ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَزِيْزًا حَكِيْمًا
4:56. யார் நம் வசனங்களை நிராகரிக்கின்றார்களோ, அவர்களை நாம் நரகத்தில் புகுத்திவிடுவோம்; அவர்களுடைய தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் அவையல்லா (வேறு) தோல்களை, அவர்கள் வேதனையை (பூரணமாக) அனுபவிப்பதற்கென, அவர்களுக்கு நாம் மாற்றிக்கொண்டே இருப்போம்: நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான்.
4:92 وَمَا كَانَ لِمُؤْمِنٍ اَنْ يَّقْتُلَ مُؤْمِنًا اِلَّا خَطَـــٴًــا ۚ وَمَنْ قَتَلَ مُؤْمِنًا خَطَـــٴًــا فَتَحْرِيْرُ رَقَبَةٍ مُّؤْمِنَةٍ وَّدِيَةٌ مُّسَلَّمَةٌ اِلٰٓى اَهْلِهٖۤ اِلَّاۤ اَنْ يَّصَّدَّقُوْا ؕ فَاِنْ كَانَ مِنْ قَوْمٍ عَدُوٍّ لَّـكُمْ وَهُوَ مُؤْمِنٌ فَتَحْرِيْرُ رَقَبَةٍ مُّؤْمِنَةٍ ؕ وَاِنْ كَانَ مِنْ قَوْمٍۢ بَيْنَكُمْ وَبَيْنَهُمْ مِّيْثَاقٌ فَدِيَةٌ مُّسَلَّمَةٌ اِلٰٓى اَهْلِهٖ وَ تَحْرِيْرُ رَقَبَةٍ مُّؤْمِنَةٍ ۚ فَمَنْ لَّمْ يَجِدْ فَصِيَامُ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ تَوْبَةً مِّنَ اللّٰهِ ؕ وَكَانَ اللّٰهُ عَلِيْمًا حَكِيْمًا
4:92. தவறாக அன்றி, ஒரு நம்பிக்கையாளனுக்கு பிறிதொரு நம்பிக்கையாளனைக் கொலைசெய்வது ஆகுமானதல்ல: உங்களில் எவரேனும் ஒரு நம்பிக்கையாளனைத் தவறாகக் கொலை செய்துவிட்டால், அதற்குப் பரிகாரமாக நம்பிக்கை கொண்ட ஓர் அடிமையை விடுதலை செய்தலாகும்; இன்னும், அவனுடைய குடும்பத்தார்பால் நஷ்டஈடும் ஒப்படைத்தலாகும்; (அவனுடைய குடும்பத்தாராகிய) அவர்கள் (நஷ்டஈட்டுத் தொகையை மன்னித்து அதை) தர்மமாக விட்டாலொழிய; (கொல்லப்பட்ட) அவன் உங்கள் விரோதியின் சமூகத்தாரில் உள்ளவனாகவும், நம்பிக்கையாளனாகவும் இருந்தால், நம்பிக்கை கொண்ட ஓர் அடிமையை விடுதலை செய்தலாகும்; உங்களுக்கும், எவர்களுக்கும் மத்தியில் (சமாதான) உடன்படிக்கை ஏற்பட்டுள்ளதோ அந்தச் சமூகத்தாரில் உள்ளவனாக இருந்தால், அவனுடைய குடும்பத்தாரிடம் நஷ்டஈடு ஒப்படைக்கப்படுதலாகும்; இன்னும், நம்பிக்கை கொண்ட ஓர் அடிமையை விடுதலை செய்யவும் வேண்டும்; (இவ்வாறு செய்யும் வசதியை) யார் பெறவில்லையோ அவர் அல்லாஹ்விடம் மன்னிப்புப் பெறுவதற்காகத் தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்புவைக்க வேண்டும்: அல்லாஹ் நன்கு அறிந்தவனாகவும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
4:104 وَلَا تَهِنُوْا فِى ابْتِغَآءِ الْقَوْمِ ؕ اِنْ تَكُوْنُوْا تَاْلَمُوْنَ فَاِنَّهُمْ يَاْلَمُوْنَ كَمَا تَاْلَمُوْنَ ۚ وَتَرْجُوْنَ مِنَ اللّٰهِ مَا لَا يَرْجُوْنَ ؕ وَ كَانَ اللّٰهُ عَلِيْمًا حَكِيْمًا
4:104. மேலும், (பகைக்) கூட்டத்தைத் தேடிச்செல்வதில் நீங்கள் சோர்வடையாதீர்கள்; நீங்கள் (போரில்) துன்பமடைந்திருப்பீர்களானால் நீங்கள் துன்பமடைவதுபோன்றே, நிச்சயமாக அவர்களும் துன்பமடைகிறார்கள்; அல்லாஹ்விடமிருந்து அவர்கள் எதிர்பார்க்காததை (நற்கூலியை) நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்; அல்லாஹ் மிக அறிந்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
4:113 وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَيْكَ وَرَحْمَتُهٗ لَهَمَّتْ طَّآٮِٕفَةٌ مِّنْهُمْ اَنْ يُّضِلُّوْكَ ؕ وَمَا يُضِلُّوْنَ اِلَّاۤ اَنْفُسَهُمْ وَمَا يَضُرُّوْنَكَ مِنْ شَىْءٍ ؕ وَاَنْزَلَ اللّٰهُ عَلَيْكَ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَعَلَّمَكَ مَا لَمْ تَكُنْ تَعْلَمُؕ وَكَانَ فَضْلُ اللّٰهِ عَلَيْكَ عَظِيْمًا
4:113. (நபியே!) உம் மீது அல்லாஹ்வின் அருளும், அவனுடைய கிருபையும் இல்லாதிருந்தால், அவர்களில் ஒரு கூட்டத்தார் உம்மை வழிகெடுக்க முயன்றிருப்பார்கள்; ஆனால், அவர்கள் தங்களையே அன்றி (உம்மை) வழிகெடுக்க முடியாது; இன்னும், உமக்கு எந்த விதமான தீங்கையும் செய்துவிடமுடியாது; மேலும், அல்லாஹ் உம்மீது வேதத்தையும், ஞானத்தையும் இறக்கியுள்ளான்; நீர் அறியாதிருந்தவற்றையும் அவன் உமக்குக் கற்றுக்கொடுத்தான்; உம்மீது அல்லாஹ்வின் அருள் மகத்தானதாகவே இருக்கின்றது.
4:130 وَاِنْ يَّتَفَرَّقَا يُغْنِ اللّٰهُ كُلًّا مِّنْ سَعَتِهٖ ؕ وَكَانَ اللّٰهُ وَاسِعًا حَكِيْمًا
4:130. (இணைந்து வாழ முடியாமல் சுமூகமாக) அவர்கள் இருவரும் பிரிந்துவிட்டால், (அவர்களில்) ஒவ்வொருவரையும் தன்னுடைய அருளால் (ஒருவர் மற்றவரைவிட்டும்) தேவையற்றவராக அல்லாஹ் ஆக்கிவிடுவான். அல்லாஹ் விசாலமானவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
4:158 بَلْ رَّفَعَهُ اللّٰهُ اِلَيْهِ ؕ وَكَانَ اللّٰهُ عَزِيْزًا حَكِيْمًا
4:158. ஆனால், அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக்கொண்டான்; இன்னும், அல்லாஹ் வல்லமை மிக்கோனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.
4:165 رُسُلًا مُّبَشِّرِيْنَ وَمُنْذِرِيْنَ لِئَلَّا يَكُوْنَ لِلنَّاسِ عَلَى اللّٰهِ حُجَّةٌ ۢ بَعْدَ الرُّسُلِ ؕ وَكَانَ اللّٰهُ عَزِيْزًا حَكِيْمًا
4:165. இந்தத் தூதர்களுக்குப் பிறகு அல்லாஹ்வுக்கு எதிராக மக்களுக்கு (சாதகமாக) ஆதாரம் எதுவும் ஏற்படாமல் இருக்கும்பொருட்டு, தூதர்கள் (பலரையும்) நன்மாராயம் கூறுபவர்களாகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களாகவும் (அல்லாஹ் அனுப்பினான்); மேலும், அல்லாஹ் (யாவற்றையும்) மிகைத்தவனாகவும், ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான்.
4:170 يٰۤـاَيُّهَا النَّاسُ قَدْ جَآءَكُمُ الرَّسُوْلُ بِالْحَـقِّ مِنْ رَّبِّكُمْ فَاٰمِنُوْا خَيْرًا لَّـكُمْ ؕ وَاِنْ تَكْفُرُوْا فَاِنَّ لِلّٰهِ مَا فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ وَكَانَ اللّٰهُ عَلِيْمًا حَكِيْمًا
4:170. மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து சத்தியத்துடன் (அனுப்பப்பட்ட இத்) தூதர் உங்களிடம் வந்துள்ளார்; (அவர் மீது) நம்பிக்கை கொள்ளுங்கள்; (இது) உங்களுக்கு நன்மையாகும்; ஆனால், நீங்கள் நிராகரிப்பீர்களானால் (இறைவனுக்கு எதுவும் குறைந்துவிடாது; ஏனெனில்,) நிச்சயமாக வானங்களிலும் பூமியிலும் இருப்பவை அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியவை; அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தோனும், ஞானமிக்கோனும் ஆவான்.
5:38 وَالسَّارِقُ وَالسَّارِقَةُ فَاقْطَعُوْۤا اَيْدِيَهُمَا جَزَآءًۢ بِمَا كَسَبَا نَـكَالًا مِّنَ اللّٰهِ ؕ وَاللّٰهُ عَزِيْزٌ حَكِيْمٌ
5:38. திருடனும், திருடியும் - அவ்விருவரும் சம்பாதித்ததற்குக் கூலியாக அல்லாஹ்விடமிருந்துள்ள தண்டனையாக - அவர்களின் கரங்களைத் துண்டித்துவிடுங்கள்; அல்லாஹ் மிகைத்தவனும் ஞானம் மிக்கோனுமாக இருக்கின்றான்.
5:118 اِنْ تُعَذِّبْهُمْ فَاِنَّهُمْ عِبَادُكَۚ وَاِنْ تَغْفِرْ لَهُمْ فَاِنَّكَ اَنْتَ الْعَزِيْزُ الْحَكِيْمُ
5:118. "(இறைவா!) நீ அவர்களை வேதனை செய்தால் (தண்டிப்பதற்கு முற்றிலும் உரிமையுள்ள) உன்னுடைய அடியார்களாகவே நிச்சயமாக அவர்கள் இருக்கின்றனர்; அன்றி, நீ அவர்களை மன்னித்துவிடுவாயானால் நிச்சயமாக நீதான் (யாவரையும்) மிகைத்தோனாகவும் ஞானமிக்கோனாகவும் இருக்கின்றாய்" (என்று கூறுவார்).
6:18 وَهُوَ الْقَاهِرُ فَوْقَ عِبَادِهٖ ؕ وَهُوَ الْحَكِيْمُ الْخَبِيْرُ
6:18. அவன் தன் அடியார்களை அடக்கியாள்பவன்; இன்னும், அவனே பூரணஞானமுள்ளவன்; (யாவற்றையும்) நன்கறிந்தவன்.
6:73 وَهُوَ الَّذِىْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ بِالْحَـقِّؕ وَيَوْمَ يَقُوْلُ كُنْ فَيَكُوْنُؕ قَوْلُهُ الْحَـقُّ ؕ وَلَهُ الْمُلْكُ يَوْمَ يُنْفَخُ فِى الصُّوْرِ ؕ عٰلِمُ الْغَيْبِ وَ الشَّهَادَةِ ؕ وَهُوَ الْحَكِيْمُ الْخَبِيْرُ
6:73. அவன்தான் வானங்களையும், பூமியையும் உண்மையாகவே படைத்தான்: அவன் 'ஆகுக!' என்று சொல்லும் நாளில், அது (உடனே) ஆகிவிடும்; அவனுடைய வாக்கு உண்மையானது: 'எக்காளம்' (ஸூர்) ஊதப்படும் நாளில், ஆட்சி (அதிகாரம்) அவனுடையதாகவே இருக்கும்: அவன் மறைவானவற்றையும், பகிரங்கமானவற்றையும் அறிகிறவன்: அவனே ஞானமுடையோன்; (யாவற்றையும்) நன்கறிந்தவன்.
6:83 وَتِلْكَ حُجَّتُنَاۤ اٰتَيْنٰهَاۤ اِبْرٰهِيْمَ عَلٰى قَوْمِهٖؕ نَرْفَعُ دَرَجٰتٍ مَّنْ نَّشَآءُ ؕ اِنَّ رَبَّكَ حَكِيْمٌ عَلِيْمٌ
6:83. இவை நம்முடைய ஆதாரமாகும்; நாம் இதனை இப்ராஹீமுக்கு அவருடைய கூட்டத்திற்கு எதிராகக் கொடுத்தோம்; நாம் விரும்புவோருக்குப் பதவிகளை உயர்த்துகிறோம்; நிச்சயமாக உம்முடைய இறைவன் ஞானமுள்ளவன்; நன்கறிகிறவன்.
6:128 وَيَوْمَ يَحْشُرُهُمْ جَمِيْعًا ۚ يٰمَعْشَرَ الْجِنِّ قَدِ اسْتَكْثَرْتُمْ مِّنَ الْاِنْسِۚ وَقَالَ اَوْلِيٰٓـئُهُمْ مِّنَ الْاِنْسِ رَبَّنَا اسْتَمْتَعَ بَعْضُنَا بِبَعْضٍ وَّبَلَغْنَاۤ اَجَلَـنَا الَّذِىْۤ اَجَّلْتَ لَـنَا ؕ قَالَ النَّارُ مَثْوٰٮكُمْ خٰلِدِيْنَ فِيْهَاۤ اِلَّا مَا شَآءَ اللّٰهُؕ اِنَّ رَبَّكَ حَكِيْمٌ عَلِيْمٌ
6:128. அவர்கள் யாவரையும் ஒன்று சேர்க்கும் (மறுமை) நாளில், அவன் (ஜின்களை நோக்கி): "ஜின் கூட்டத்தாரே! மனிதர்களிலிருந்து (பலரை நீங்கள் வழிகெடுத்து உங்கள் கூட்டத்தை) திட்டமாக நீங்கள் அதிகப்படுத்திக் கொண்டீர்கள்" (என்று கூறுவான்). அதற்கு, மனிதர்களிலிருந்து அவர்களுடைய நண்பர்கள்: "எங்கள் இறைவா! எங்களில் சிலர் சிலரைக்கொண்டு பலன் அடைந்திருக்கின்றனர்; நீ எங்களுக்கு நிர்ணயித்த எங்களுடைய தவணையை நாங்கள் அடைந்துவிட்டோம்" என்று கூறுவார்கள். அதற்கு அவன், "நரகம்தான் உங்கள் தங்குமிடமாகும் - அல்லாஹ் நாடினாலன்றி நீங்கள் அதில் நிரந்தரமாக இருப்பீர்கள்" என்று கூறுவான். நிச்சயமாக உமது இறைவன் மிக்க ஞானமுடையோனாகவும், (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்.
6:139 وَقَالُوْا مَا فِىْ بُطُوْنِ هٰذِهِ الْاَنْعَامِ خَالِصَةٌ لِّذُكُوْرِنَا وَمُحَرَّمٌ عَلٰٓى اَزْوَاجِنَا ۚ وَاِنْ يَّكُنْ مَّيْتَةً فَهُمْ فِيْهِ شُرَكَآءُ ؕ سَيَجْزِيْهِمْ وَصْفَهُمْ ؕ اِنَّهٗ حَكِيْمٌ عَلِيْمٌ
6:139. மேலும் அவர்கள், 'இந்தக் கால்நடைகளின் வயிற்றில் உள்ளவை எங்கள் ஆண்களுக்கு மட்டுமே சொந்தம்; அவை எங்கள் பெண்களுக்குத் தடுக்கப்பட்டுள்ளன; அவை செத்துப் பிறந்தால் - அவற்றில் அவர்கள் கூட்டாளிகள்' என்றும் கூறுகிறார்கள். அவர்களுடைய (இந்தப் பொய்யான) கூற்றுக்காக அவர்களை அவன் தண்டிப்பான். நிச்சயமாக அவன் ஞானமுடையோனும் (யாவற்றையும்) அறிந்தவனுமாக இருக்கின்றான்.
8:10 وَمَا جَعَلَهُ اللّٰهُ اِلَّا بُشْرٰى وَلِتَطْمَٮِٕنَّ بِهٖ قُلُوْبُكُمْۚ وَمَا النَّصْرُ اِلَّا مِنْ عِنْدِ اللّٰهِؕ اِنَّ اللّٰهَ عَزِيْزٌ حَكِيْمٌ
8:10. உங்கள் இதயங்கள் திருப்தியடைவதற்காகவும், ஒரு நன்மாராயமாகவும் இதை (இந்த வெற்றியை) அல்லாஹ் ஆக்கினான்; அல்லாஹ்விடமிருந்தே தவிர உதவி இல்லை; நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
8:49 اِذْ يَقُوْلُ الْمُنٰفِقُوْنَ وَالَّذِيْنَ فِىْ قُلُوْبِهِمْ مَّرَضٌ غَرَّ هٰٓؤُلَاۤءِ دِيْنُهُمْؕ وَمَنْ يَّتَوَكَّلْ عَلَى اللّٰهِ فَاِنَّ اللّٰهَ عَزِيْزٌ حَكِيْمٌ
8:49. நயவஞ்சகர்களும் தம் இதயங்களில் நோய் உள்ளவர்களும் (முஸ்லிம்களைச் சுட்டிக்காட்டி) "இவர்களை இவர்களுடைய மார்க்கம் ஏமாற்றி விட்டது" என்று கூறியதை (நினைவுகூர்வீராக!) அல்லாஹ்வை எவர் சார்ந்திருக்கிறாரோ, நிச்சயமாக அல்லாஹ் (சக்தியில்) மிகைத்தவனாகவும், ஞானமுடையோனாகவும் இருக்கின்றான் (என்பதில் உறுதிகொள்வார்களாக)!
8:63 وَاَلَّفَ بَيْنَ قُلُوْبِهِمْؕ لَوْ اَنْفَقْتَ مَا فِى الْاَرْضِ جَمِيْعًا مَّاۤ اَلَّفْتَ بَيْنَ قُلُوْبِهِمْ وَلٰـكِنَّ اللّٰهَ اَلَّفَ بَيْنَهُمْؕ اِنَّهٗ عَزِيْزٌ حَكِيْمٌ
8:63. மேலும், (நம்பிக்கையாளர்களாகிய) அவர்கள் உள்ளங்களுக்கிடையில் பிணைப்பை உண்டாக்கினான்; பூமியிலுள்ள (செல்வங்கள்) அனைத்தையும் நீர் செலவு செய்தபோதிலும், அவர்கள் உள்ளங்களுக்கிடையே அத்தகைய பிணைப்பை உண்டாக்கியிருக்க முடியாது; ஆனால், நிச்சயமாக அல்லாஹ் அவர்களிடையே பிணைப்பை ஏற்படுத்தியுள்ளான்; நிச்சயமாக அவன் மிகைத்தவனாகவும், ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான்.
8:67 مَا كَانَ لِنَبِىٍّ اَنْ يَّكُوْنَ لَهٗۤ اَسْرٰى حَتّٰى يُثْخِنَ فِى الْاَرْضِؕ تُرِيْدُوْنَ عَرَضَ الدُّنْيَا ۖ وَاللّٰهُ يُرِيْدُ الْاٰخِرَةَ ؕ وَاللّٰهُ عَزِيْزٌ حَكِيْمٌ
8:67. (விஷமங்கள் அடங்க) பூமியில் இரத்தத்தை ஓட்டாத வரையில் (விரோதிகளை உயிருடன்) சிறைப்பிடிப்பது எந்த நபிக்கும் தகுதியில்லை; நீங்கள் இவ்வுலகத்தின் (நிலையில்லா) பொருட்களை விரும்புகிறீர்கள்; அல்லாஹ்வோ (உங்களுக்கு நிலையான) மறுமையை நாடுகிறான்; அல்லாஹ் மிகைத்தோனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
8:71 وَاِنْ يُّرِيْدُوْا خِيَانَـتَكَ فَقَدْ خَانُوا اللّٰهَ مِنْ قَبْلُ فَاَمْكَنَ مِنْهُمْ ؕ وَاللّٰهُ عَلِيْمٌ حَكِيْمٌ
8:71. (நபியே!) அவர்கள் உமக்கு மோசம் செய்ய நாடினால் (கவலைப்படாதீர்!); இதற்கு முன்னர், அவர்கள் அல்லாஹ்வுக்கு மோசம் செய்திருக்கிறார்கள்; (ஆதலால் தான் அவர்களைச் சிறை பிடிக்க) அவர்கள்மீது உமக்கு சக்தியை அவன் அளித்தான்; அல்லாஹ் (எல்லாம்) அறிபவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
9:15 وَيُذْهِبْ غَيْظَ قُلُوْبِهِمْ ؕ وَ يَتُوْبُ اللّٰهُ عَلٰى مَنْ يَّشَآءُ ؕ وَاللّٰهُ عَلِيْمٌ حَكِيْمٌ
9:15. அவர்களுடைய இதயங்களின் கோபத்தைப் போக்கிவிடுவான்; தான் நாடியவரின் மன்னிப்புக் கோருதலை ஏற்றுக்கொள்கிறான்; அல்லாஹ் (எல்லாம்) அறிந்தவனாகவும், (பூரண) ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
9:28 يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنَّمَا الْمُشْرِكُوْنَ نَجَسٌ فَلَا يَقْرَبُوا الْمَسْجِدَ الْحَـرَامَ بَعْدَ عَامِهِمْ هٰذَا ۚ وَ اِنْ خِفْتُمْ عَيْلَةً فَسَوْفَ يُغْنِيْكُمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖۤ اِنْ شَآءَ ؕ اِنَّ اللّٰهَ عَلِيْمٌ حَكِيْمٌ
9:28. நம்பிக்கை கொண்டவர்களே! நிச்சயமாக இணைவைப்பவர்களெல்லாம் அசுத்தமானவர்களே. ஆதலால், அவர்களின் இவ்வாண்டிற்குப் பின்னர் (கஃபா என்னும்) மஸ்ஜிதுல் ஹராமை அவர்கள் நெருங்கக்கூடாது. (அதனால், உங்களுக்கு) வறுமையை நீங்கள் பயந்தீர்களாயின் அல்லாஹ் - அவன் நாடினால் - விரைவில் தன் அருளால் உங்களைச் செல்வந்தர்களாக்கி விடுவான். நிச்சயமாக அல்லாஹ், எல்லாம் அறிந்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
9:40 اِلَّا تَـنْصُرُوْهُ فَقَدْ نَصَرَهُ اللّٰهُ اِذْ اَخْرَجَهُ الَّذِيْنَ كَفَرُوْا ثَانِىَ اثْنَيْنِ اِذْ هُمَا فِى الْغَارِ اِذْ يَقُوْلُ لِصَاحِبِهٖ لَا تَحْزَنْ اِنَّ اللّٰهَ مَعَنَا ۚ فَاَنْزَلَ اللّٰهُ سَكِيْنَـتَهٗ عَلَيْهِ وَاَ يَّدَهٗ بِجُنُوْدٍ لَّمْ تَرَوْهَا وَجَعَلَ كَلِمَةَ الَّذِيْنَ كَفَرُوا السُّفْلٰى ؕ وَكَلِمَةُ اللّٰهِ هِىَ الْعُلْيَا ؕ وَاللّٰهُ عَزِيْزٌ حَكِيْمٌ
9:40. (நம் தூதராகிய) அவருக்கு நீங்கள் உதவி செய்யாவிட்டால், (அவருக்கு யாதொரு இழப்புமில்லை); நிராகரிப்பவர்கள் அவரை (ஊரை விட்டு) வெளியேற்றியபோது, நிச்சயமாக அல்லாஹ் அவருக்கு உதவிசெய்தே இருக்கின்றான்; இருவரும் குகையில் இருந்தபோது, இருவரில் ஒருவராக இருந்த அவர் (நம் தூதர்) தம் தோழரிடம், "கவலைப்படாதீர்கள்! நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்" என்று கூறிய நேரத்தில்: அப்போது அவர்மீது அல்லாஹ் தன் சாந்தியை இறக்கிவைத்தான்; மேலும், நீங்கள் பார்க்கமுடியாப் படைகளைக் கொண்டு அவரைப் பலப்படுத்தினான்; நிராகரிப்போரின் வாக்கைக் கீழாக்கினான்; ஏனெனில், அல்லாஹ்வின் வாக்கு - அதுதான் (எப்போதும்) மேலோங்கும்; அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.
9:60 اِنَّمَا الصَّدَقٰتُ لِلْفُقَرَآءِ وَالْمَسٰكِيْنِ وَالْعٰمِلِيْنَ عَلَيْهَا وَالْمُؤَلَّـفَةِ قُلُوْبُهُمْ وَفِى الرِّقَابِ وَالْغٰرِمِيْنَ وَفِىْ سَبِيْلِ اللّٰهِ وَابْنِ السَّبِيْلِؕ فَرِيْضَةً مِّنَ اللّٰهِؕ وَاللّٰهُ عَلِيْمٌ حَكِيْمٌ
9:60. (ஜகாத் என்னும்) தானங்கள் - வறியவர்களுக்கும், ஏழைகளுக்கும், அதற்காக (வசூல் செய்வது, கணக்கிடுவது போன்ற வேலைகளில்) உழைப்பவர்களுக்கும், எவர்களுடைய இதயங்கள் (இஸ்லாத்தின்பால்) ஈர்க்கப்படுகின்றனவோ அவர்களுக்கும், (அடிமைகளை) விடுதலை செய்வதற்கும், கடன்பட்டிருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையிலும், வழிப்போக்கருக்கும் உரியவை; (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும்; அல்லாஹ் (யாவையும்) அறிபவன், மிக்க ஞானமுடையோன்.
9:71 وَالْمُؤْمِنُوْنَ وَالْمُؤْمِنٰتُ بَعْضُهُمْ اَوْلِيَآءُ بَعْضٍۘ يَاْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَيُقِيْمُوْنَ الصَّلٰوةَ وَيُؤْتُوْنَ الزَّكٰوةَ وَيُطِيْعُوْنَ اللّٰهَ وَرَسُوْلَهٗؕ اُولٰۤٮِٕكَ سَيَرْحَمُهُمُ اللّٰهُؕ اِنَّ اللّٰهَ عَزِيْزٌ حَكِيْمٌ
9:71. நம்பிக்கை கொண்ட ஆண்களும், நம்பிக்கை கொண்ட பெண்களும் அவர்களில் சிலர் சிலருக்கு உதவியாளர்களாக இருக்கின்றனர்; அவர்கள் நன்மையை ஏவுகின்றனர்; தீமையைவிட்டும் தடுக்கின்றனர்; தொழுகையைக் கடைப்பிடிக்கிறார்கள்; ஜகாத்தை (முறையாகக்) கொடுக்கிறார்கள்; அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் கீழ்ப்படிகிறார்கள்; அத்தகையோர் - அவர்களுக்கு அல்லாஹ் சீக்கிரத்தில் கருணைபுரிவான்; நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
9:106 وَاٰخَرُوْنَ مُرْجَوْنَ لِاَمْرِ اللّٰهِ اِمَّا يُعَذِّبُهُمْ وَاِمَّا يَتُوْبُ عَلَيْهِمْؕ وَاللّٰهُ عَلِيْمٌ حَكِيْمٌ
9:106. வேறுசிலர் அல்லாஹ்வின் கட்டளைக்காகப் பிற்படுத்தப்பட்டுள்ளனர்; (அல்லாஹ்) அவர்களைத் தண்டிக்கலாம் அல்லது அவர்களை மன்னிக்கலாம்: அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.
9:110 لَا يَزَالُ بُنْيَانُهُمُ الَّذِىْ بَنَوْا رِيْبَةً فِىْ قُلُوْبِهِمْ اِلَّاۤ اَنْ تَقَطَّعَ قُلُوْبُهُمْؕ وَاللّٰهُ عَلِيْمٌ حَكِيْمٌ
9:110. அவர்கள் எழுப்பிய அவர்களுடைய கட்டடம் அவர்களுடைய இதயங்களில் ஒரு வடுவாக இருந்துகொண்டே இருக்கும்; அவர்களின் உள்ளங்கள் துண்டுதுண்டாக ஆகும்வரை (அதாவது, மரணிக்கும்வரை). அல்லாஹ் நன்கறிந்தவன், ஞானமிக்கவன்.
10:1 الٓر تِلْكَ اٰيٰتُ الْكِتٰبِ الْحَكِيْمِ
10:1. அலிஃப், லாம், ரா. இவை ஞானம் நிறைந்த வேதத்தின் வசனங்களாகும்.
11:1 الٓرٰ كِتٰبٌ اُحْكِمَتْ اٰيٰـتُهٗ ثُمَّ فُصِّلَتْ مِنْ لَّدُنْ حَكِيْمٍ خَبِيْرٍۙ
11:1. அலிஃப், லாம், றா. (இது) வேதமாகும்; இதன் வசனங்கள் (பல்வேறு அத்தாட்சிகளால்) உறுதியாக்கப்பட்டு, பின்னர் இவை நன்கறிபவனும், ஞானம் மிக்கோனுமாகிய (இறை)வனிடமிருந்து விவரிக்கப்பட்டுள்ளன.
12:6 وَكَذٰلِكَ يَجْتَبِيْكَ رَبُّكَ وَيُعَلِّمُكَ مِنْ تَاْوِيْلِ الْاَحَادِيْثِ وَيُتِمُّ نِعْمَتَهٗ عَلَيْكَ وَعَلٰٓى اٰلِ يَعْقُوْبَ كَمَاۤ اَتَمَّهَا عَلٰٓى اَبَوَيْكَ مِنْ قَبْلُ اِبْرٰهِيْمَ وَاِسْحٰقَ ؕ اِنَّ رَبَّكَ عَلِيْمٌ حَكِيْمٌ
12:6. இவ்வாறே, உன் இறைவன் உன்னைத் தேர்ந்தெடுத்து, கனவுகளின் விளக்கத்தை உனக்குக் கற்றுக்கொடுத்து, தன்னுடைய அருட்கொடையை உன்மீதும், யஃகூபின் சந்ததியினர் மீதும் நிரப்பமாக்கிவைப்பான்; (இதற்கு) முன்னர் இப்ராஹீம், இஸ்ஹாக் ஆகிய உன்னுடைய இரு மூதாதையரின் மீதும் அதனை அவன் நிரப்பமாக்கி வைத்தது போல்; நிச்சயமாக உன் இறைவன் (யாவற்றையும்) நன்கறிந்தோனும், மிக்க ஞானமுடையவனுமாக இருக்கின்றான்" (என்றும் கூறினார்).
12:83 قَالَ بَلْ سَوَّلَتْ لَـكُمْ اَنْفُسُكُمْ اَمْرًاؕ فَصَبْرٌ جَمِيْلٌؕ عَسَى اللّٰهُ اَنْ يَّاْتِيَنِىْ بِهِمْ جَمِيْعًاؕ اِنَّهٗ هُوَ الْعَلِيْمُ الْحَكِيْمُ
12:83. (ஊர் திரும்பியவர்கள் தம் தந்தையிடம் அவ்வாறே சொல்லவும்) "இல்லை! உங்களுடைய மனங்கள் (இவ்வாறு தவறான) ஒரு விஷயத்தைச் செய்யும்படித் தூண்டிவிட்டிருக்கின்றன; ஆயினும், அழகான பொறுமையே (எனக்கு உகந்ததாகும்); அல்லாஹ் அவர்களனைவரையும் என்னிடம் கொண்டுவந்து சேர்க்கப் போதுமானவன்; நிச்சயமாக அவன் மிகவும் அறிந்தவனாகவும், மிக்க ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்" என்று கூறினார்.
12:110 حَتّٰۤى اِذَا اسْتَيْــٴَــسَ الرُّسُلُ وَظَنُّوْۤا اَنَّهُمْ قَدْ كُذِبُوْا جَآءَهُمْ نَصْرُنَا ۙ فَـنُجِّىَ مَنْ نَّشَآءُ ؕ وَلَا يُرَدُّ بَاْسُنَا عَنِ الْقَوْمِ الْمُجْرِمِيْنَ
12:110. (நம்) தூதர்கள் நிச்சயமாகப் பொய்ப்படுத்தப்பட்டு விட்டார்கள் என்று எண்ணி, நம்பிக்கை இழந்து விடும்பொழுது நமது உதவி அவர்களுக்கு வந்தது; நாம் நாடியவர்கள் காப்பாற்றப்பட்டனர்; நமது தண்டனை குற்றவாளிகளான கூட்டத்தாரை விட்டும் நீக்கப்படாது.
14:4 وَمَاۤ اَرْسَلْنَا مِنْ رَّسُوْلٍ اِلَّا بِلِسَانِ قَوْمِهٖ لِيُبَيِّنَ لَهُمْؕ فَيُضِلُّ اللّٰهُ مَنْ يَّشَآءُ وَيَهْدِىْ مَنْ يَّشَآءُ ؕ وَهُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُ
14:4. எந்தத் தூதரையும் அவருடைய சமுதாயத்தின் மொழியைக் கொண்டே தவிர நாம் அனுப்பவில்லை, அவர்களுக்கு அவர் விளக்கிக் கூறுவதற்காக; அல்லாஹ் தான் நாடியோரை வழிதவறச் செய்கின்றான்; தான் நாடியோருக்கு நேர்வழியையும் காண்பிக்கின்றான்; அவன் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
15:25 وَاِنَّ رَبَّكَ هُوَ يَحْشُرُهُمْؕ اِنَّهٗ حَكِيْمٌ عَلِيْمٌ
15:25. நிச்சயமாக உம்முடைய இறைவன் (இறுதிநாளில்) அவர்களை ஒன்று திரட்டுவான்; நிச்சயமாக அவன் ஞானம்மிக்கவன்; யாவற்றையும் நன்கறிபவன்.
16:60 لِلَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ بِالْاٰخِرَةِ مَثَلُ السَّوْءِۚ وَلِلّٰهِ الْمَثَلُ الْاَعْلٰى ؕ وَهُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُ
16:60. எவர்கள் மறுமையின் மீது நம்பிக்கை கொள்ளவில்லையோ அவர்களுக்கே கெட்ட தன்மை இருக்கிறது; அல்லாஹ்வுக்கோ மிகவும் உயர்ந்த தன்மை இருக்கின்றது; மேலும், அவன் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.
16:125 اُدْعُ اِلٰى سَبِيْلِ رَبِّكَ بِالْحِكْمَةِ وَالْمَوْعِظَةِ الْحَسَنَةِ وَجَادِلْهُمْ بِالَّتِىْ هِىَ اَحْسَنُؕ اِنَّ رَبَّكَ هُوَ اَعْلَمُ بِمَنْ ضَلَّ عَنْ سَبِيْلِهٖ وَهُوَ اَعْلَمُ بِالْمُهْتَدِيْنَ
16:125. (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களை நன்கு அறிந்தவன்; இன்னும், அவன் நேர்வழி பெற்றவர்களையும் நன்கறிந்தவன்.
17:39 ذٰ لِكَ مِمَّاۤ اَوْحٰۤى اِلَيْكَ رَبُّكَ مِنَ الْحِكْمَةِ ؕ وَلَا تَجْعَلْ مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَ فَتُلْقٰى فِىْ جَهَنَّمَ مَلُوْمًا مَّدْحُوْرًا
17:39. இவையெல்லாம் உம்முடைய இறைவன் ஞானத்திலிருந்து உமக்கு 'வஹீ' (மூலம்) அறிவித்துள்ளவையாகும்; ஆகவே, அல்லாஹ்வுடன் வேறு தெய்வத்தை (இணையாக) ஏற்படுத்தாதீர்: (அப்படிச் செய்தால்) நீர் நிந்திக்கப்பட்டவராகவும் (அருளை விட்டும்) தூரமாக்கப்பட்டவராகவும் நரகத்தில் எறியப்படுவீர்.
22:52 وَمَاۤ اَرْسَلْنَا مِنْ قَبْلِكَ مِنْ رَّسُوْلٍ وَّلَا نَبِىٍّ اِلَّاۤ اِذَا تَمَنّٰٓى اَلْقَی الشَّيْطٰنُ فِىْۤ اُمْنِيَّتِهٖ ۚ فَيَنْسَخُ اللّٰهُ مَا يُلْقِى الشَّيْطٰنُ ثُمَّ يُحْكِمُ اللّٰهُ اٰيٰتِهٖ ؕ وَاللّٰهُ عَلِيْمٌ حَكِيْمٌ ۙ
22:52. (நபியே!) உமக்கு முன்னர் எந்தத் தூதரையும் எந்த நபியையும் - அவர் ஓதினால், அவருடைய ஓதுதலில் ஷைத்தான் (நிராகரிப்போரின் நெஞ்சில்) குழப்பத்தைப் போட்டே அல்லாமல் - நாம் அனுப்பவில்லை; எனினும், ஷைத்தான் எறிந்த (குழப்பத்)தை அல்லாஹ் நீக்கிய பின்னர் அவன் தன்னுடைய வசனங்களை உறுதிப்படுத்துகிறான்; மேலும், அல்லாஹ் (யாவற்றையும்) அறிந்தவனாகவும், ஞானமிக்கோனாகவும் இருக்கின்றான்.
24:5 اِلَّا الَّذِيْنَ تَابُوْا مِنْۢ بَعْدِ ذٰلِكَ وَاَصْلَحُوْاۚ فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ
24:5. எனினும், (இவர்களில்) எவர் இதற்குப் பின்னர் தவ்பா செய்து (தங்களைத்) திருத்திக் கொள்கிறார்களோ - நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும் கிருபை செய்பவனாகவும் இருக்கின்றான்.
24:10 وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهٗ وَاَنَّ اللّٰهَ تَوَّابٌ حَكِيْمٌ
24:10. இன்னும், உங்கள் மீது அல்லாஹ்வுடைய அருளும், அவனுடைய கிருபையும் இல்லாது போயிருப்பின், (உங்களுக்கு அழிவு உண்டாகியிருக்கும்;) நிச்சயமாக அல்லாஹ் தவ்பாவை ஏற்றுக்கொள்பவனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.
24:18 وَيُبَيِّنُ اللّٰهُ لَـكُمُ الْاٰيٰتِؕ وَاللّٰهُ عَلِيْمٌ حَكِيْمٌ
24:18. இன்னும், அல்லாஹ் (தன்) வசனங்களை உங்களுக்கு (நன்கு) விவரித்துக் கூறுகிறான்; மேலும், அல்லாஹ் (யாவும்) அறிந்தவன்; விவேகம் மிக்கோன்.
24:59 وَاِذَا بَلَغَ الْاَطْفَالُ مِنْكُمُ الْحُـلُمَ فَلْيَسْتَـاْذِنُوْا كَمَا اسْتَـاْذَنَ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْؕ كَذٰلِكَ يُبَيِّنُ اللّٰهُ لَـكُمْ اٰيٰتِهٖؕ وَاللّٰهُ عَلِيْمٌ حَكِيْمٌ
24:59. இன்னும், உங்களிலுள்ள குழந்தைகள் பருவத்தை அடைந்துவிட்டால் அவர்களும் அவர்களுக்கு முன்னுள்ள (மூத்த)வர்கள் அனுமதி கேட்பதுபோல் அனுமதி கேட்கவேண்டும்; இவ்வாறே, அல்லாஹ் தன்னுடைய வசனங்களை உங்களுக்கு விவரிக்கின்றான்; அல்லாஹ் (யாவற்றையும்) அறிந்தவன்; ஞானம் மிக்கவன்.
27:6 وَاِنَّكَ لَـتُلَـقَّى الْقُرْاٰنَ مِنْ لَّدُنْ حَكِيْمٍ عَلِيْمٍ
27:6. (நபியே!) நிச்சயமாக மிக்க ஞானமுடைய (யாவற்றையும்) நன்கறிந்தவனிடமிருந்து இந்தக் குர்ஆன் உமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.
27:9 يٰمُوْسٰۤى اِنَّـهٗۤ اَنَا اللّٰهُ الْعَزِيْزُ الْحَكِيْمُۙ
27:9. "மூஸாவே! நிச்சயமாக நானே அல்லாஹ்! (யாவற்றையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கோன்."
27:15 وَلَـقَدْ اٰتَيْنَا دَاوٗدَ وَ سُلَيْمٰنَ عِلْمًا ۚ وَقَالَا الْحَمْدُ لِلّٰهِ الَّذِىْ فَضَّلَنَا عَلٰى كَثِيْرٍ مِّنْ عِبَادِهِ الْمُؤْمِنِيْنَ
27:15. தாவூதுக்கும், ஸுலைமானுக்கும் நிச்சயமாக நாம் கல்வியைக் கொடுத்தோம்; அதற்கு அவ்விருவரும்: "புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது; அவன்தான் நம்பிக்கையாளர்களான தன் அடியார்களில் அநேகரைவிட நம்மை மேன்மையாக்கினான்" என்று கூறினார்கள்.
29:26 فَاٰمَنَ لَهٗ لُوْطٌۘ وَقَالَ اِنِّىْ مُهَاجِرٌ اِلٰى رَبِّىْ ؕ اِنَّهٗ هُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُ
29:26. (இதன் பின்னரும்) லூத் (மட்டுமே) அவர் மீது நம்பிக்கை கொண்டார்; (அவரிடம் இப்ராஹீம்) "நிச்சயமாக நான் என் இறைவனை நாடி (இவ்வூரை விட்டு) ஹிஜ்ரத் செய்கிறேன்; நிச்சயமாக அவன் (யாவற்றையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்" என்று கூறினார்.
29:42 اِنَّ اللّٰهَ يَعْلَمُ مَا يَدْعُوْنَ مِنْ دُوْنِهٖ مِنْ شَىْءٍؕ وَهُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُ
29:42. நிச்சயமாக அல்லாஹ் - அவனையன்றி (கடவுளென) அவர்கள் எதை அழைக்கிறார்களோ, அதை அறிகிறான்; இன்னும், அவன் (யாவற்றையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.
30:27 وَهُوَ الَّذِىْ يَـبْدَؤُا الْخَـلْقَ ثُمَّ يُعِيْدُهٗ وَهُوَ اَهْوَنُ عَلَيْهِؕ وَلَهُ الْمَثَلُ الْاَعْلٰى فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِۚ وَهُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُ
30:27. அவனே படைப்பைத் துவங்குகின்றான்; பின்னர், அவனே அதை மீட்டுகிறான்; மேலும், இது அவனுக்கு மிகவும் எளிதேயாகும். வானங்களிலும் பூமியிலும் மிக உயர்ந்த வர்ணனை (பண்பு) அவனுக்குரியதே. மேலும், அவன் மிகைத்தவன், ஞானம் மிக்கவன்.
31:2 تِلْكَ اٰيٰتُ الْكِتٰبِ الْحَكِيْمِۙ
31:2. இவை, ஞானம் நிறைந்த வேதத்தின் வசனங்களாகும்.
31:9 خٰلِدِيْنَ فِيْهَا ؕ وَعْدَ اللّٰهِ حَقًّا ؕ وَهُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُ
31:9. அவர்கள் அதில் நிரந்தரமாக இருப்பார்கள்; அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது; அவன் (யாவற்றையும்) மிகைத்தவன், ஞானம் மிக்கோன்.
31:12 وَلَقَدْ اٰتَيْنَا لُقْمٰنَ الْحِكْمَةَ اَنِ اشْكُرْ لِلّٰهِؕ وَمَنْ يَّشْكُرْ فَاِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهٖۚ وَمَنْ كَفَرَ فَاِنَّ اللّٰهَ غَنِىٌّ حَمِيْدٌ
31:12. இன்னும், நாம் லுக்மானுக்கு நிச்சயமாக ஞானத்தைக் கொடுத்தோம்; அல்லாஹ்வுக்கு நீர் நன்றி செலுத்தும்; ஏனென்றால், எவன் நன்றி செலுத்துகிறானோ அவன் தன(து நன்மை)க்காகவே நன்றி செலுத்துகிறான்; இன்னும், எவன் நிராகரிக்கின்றானோ, (அவன் தன்னையே நட்டப்படுத்திக் கொள்கிறான்;) நிச்சயமாக அல்லாஹ் (எவரிடத்திலிருந்தும்) தேவையில்லாதவன்; புகழப்படுபவன்.
31:27 وَلَوْ اَنَّ مَا فِى الْاَرْضِ مِنْ شَجَرَةٍ اَقْلَامٌ وَّالْبَحْرُ يَمُدُّهٗ مِنْۢ بَعْدِهٖ سَبْعَةُ اَبْحُرٍ مَّا نَفِدَتْ كَلِمٰتُ اللّٰهِؕ اِنَّ اللّٰهَ عَزِيْزٌ حَكِيْمٌ
31:27. மேலும், நிச்சயமாக இப்பூமியிலுள்ள மரங்கள் யாவும் எழுதுகோல்களாகவும், கடல் (நீர் முழுவதும்) அதனுடன்கூட மற்றும் ஏழு கடல்கள் அதிகமாக்கப்பட்டு (மையாக) இருந்தபோதிலும், அல்லாஹ்வின் (புகழ்) வார்த்தைகள் முடிவுறா. நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், ஞானம் மிக்கோன்.
33:1 يٰۤـاَيُّهَا النَّبِىُّ اتَّقِ اللّٰهَ وَلَا تُطِعِ الْكٰفِرِيْنَ وَالْمُنٰفِقِيْنَ ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَلِيْمًا حَكِيْمًا ۙ
33:1. நபியே! அல்லாஹ்வையே அஞ்சுவீராக! நிராகரிப்பாளர்களுக்கும், நயவஞ்சகர்களுக்கும் கீழ்ப்படியாதீர்; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிபவன், ஞானம் மிக்கவன்.
33:34 وَاذْكُرْنَ مَا يُتْلٰى فِىْ بُيُوْتِكُنَّ مِنْ اٰيٰتِ اللّٰهِ وَالْحِكْمَةِؕ اِنَّ اللّٰهَ كَانَ لَطِيْفًا خَبِيْرًا
33:34. மேலும், உங்களுடைய வீடுகளில் ஓதப்படுகின்ற அல்லாஹ்வின் வசனங்களையும், ஞானத்தையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் (உங்கள் உள்ளங்களிலுள்ளவை பற்றி) சூட்சுமமாகத் தெரிந்தவன்; (உங்கள் செயல்கள் பற்றி) நன்கறிந்தவன்.
34:1 اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِىْ لَهٗ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ وَلَـهُ الْحَمْدُ فِى الْاٰخِرَةِ ؕ وَهُوَ الْحَكِيْمُ الْخَبِيْرُ
34:1. புகழ் எல்லாம் அல்லாஹ்வுக்கே உரியது. வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அவனுக்கே (உரியன); மறுமையிலும் புகழ் யாவும் அவனுக்கே; மேலும், அவன் ஞானம் மிக்கவன்; (யாவற்றையும்) நன்கறிபவன்.
34:27 قُلْ اَرُوْنِىَ الَّذِيْنَ اَ لْحَـقْتُمْ بِهٖ شُرَكَآءَ كَلَّا ؕ بَلْ هُوَ اللّٰهُ الْعَزِيْزُ الْحَكِيْمُ
34:27. "அவனுக்கு இணையானவர்களென நீங்கள் சேர்த்தீர்களே அவர்களை எனக்குக் காண்பியுங்கள்! அவ்வாறில்லை! (அவனுக்கு எவருமே இணையில்லை;) அவனே அல்லாஹ்; யாவரையும் மிகைத்தவன்; ஞானம் மிக்கோன்" என்றும் சொல்லும்!
35:2 مَا يَفْتَحِ اللّٰهُ لِلنَّاسِ مِنْ رَّحْمَةٍ فَلَا مُمْسِكَ لَهَا ۚ وَمَا يُمْسِكْ ۙ فَلَا مُرْسِلَ لَهٗ مِنْۢ بَعْدِه ؕ وَهُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُ
35:2. மனிதர்களுக்கு அல்லாஹ் தன் அருளிலிருந்து ஒன்றைத் திறப்பானாயின், அதைத் தடுப்பார் எவருமில்லை; அன்றியும், அவன் எதைத் தடுத்து விடுகிறானோ, அதன் பின் அதனை அனுப்பக்கூடியவர் எவரும் இல்லை; மேலும், அவன் யாவரையும் மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.
36:2 وَالْقُرْاٰنِ الْحَكِيْمِ ۙ
36:2. ஞானம் நிரம்பிய இக்குர்ஆன் மீது சத்தியமாக!
39:1 تَنْزِيْلُ الْكِتٰبِ مِنَ اللّٰهِ الْعَزِيْزِ الْحَكِيْمِ
39:1. (யாவரையும்) மிகைத்தவனும், ஞானம் மிக்கவனுமாகிய அல்லாஹ்விடமிருந்தே இவ்வேதம் இறக்கப்பட்டுள்ளது.
40:8 رَبَّنَا وَاَدْخِلْهُمْ جَنّٰتِ عَدْنِ اۨلَّتِىْ وَعَدْتَّهُمْ وَمَنْ صَلَحَ مِنْ اٰبَآٮِٕهِمْ وَاَزْوَاجِهِمْ وَذُرِّيّٰتِهِمْ ؕ اِنَّكَ اَنْتَ الْعَزِيْزُ الْحَكِيْمُ ۙ
40:8. "எங்கள் இறைவனே! நீ அவர்களுக்கு வாக்களித்திருக்கும் நிலையான சுவர்க்கங்களில் அவர்களையும், அவர்கள் மூதாதையர்களிலும், அவர்கள் மனைவியர்களிலும், அவர்கள் சந்ததியர்களிலும் யார் நல்லோராகிவிட்டனரோ அவர்களையும் பிரவேசிக்கச் செய்வாயாக! நிச்சயமாக நீதான் (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்."
41:42 لَّا يَاْتِيْهِ الْبَاطِلُ مِنْۢ بَيْنِ يَدَيْهِ وَلَا مِنْ خَلْفِهٖؕ تَنْزِيْلٌ مِّنْ حَكِيْمٍ حَمِيْدٍ
41:42. அதனிடம் அதற்கு முன்னிருந்தோ அதற்குப் பின்னிருந்தோ அசத்தியம் வராது; (இது) புகழுக்குரிய ஞானம் மிக்கவனிடமிருந்து இறங்கியுள்ளது.
42:3 كَذٰلِكَ يُوْحِىْۤ اِلَيْكَ وَاِلَى الَّذِيْنَ مِنْ قَبْلِكَۙ اللّٰهُ الْعَزِيْزُ الْحَكِيْمُ
42:3. (நபியே!) இது போன்றே (யாவரையும்) மிகைத்தவனும் ஞானம் மிக்கோனுமாகிய அல்லாஹ் உமக்கும், உமக்கு முன் இருந்தவர்(களுமாகிய நபிமார்)களுக்கும் வஹீ அறிவிக்கிறான்.
42:51 وَمَا كَانَ لِبَشَرٍ اَنْ يُّكَلِّمَهُ اللّٰهُ اِلَّا وَحْيًا اَوْ مِنْ وَّرَآىٴِ حِجَابٍ اَوْ يُرْسِلَ رَسُوْلًا فَيُوْحِىَ بِاِذْنِهٖ مَا يَشَآءُؕ اِنَّهٗ عَلِىٌّ حَكِيْمٌ
42:51. அல்லாஹ் எந்த மனிதரிடத்திலும் வஹீயாகவோ, அல்லது திரைக்கப்பால் இருந்தோ, அல்லது தான் விரும்பியதைத் தன் அனுமதியைக் கொண்டு வஹீ அறிவிக்கக்கூடிய ஒரு தூதரை (- வானவரை) அனுப்பியோ அன்றி (நேரடியாகப்) பேசுவதில்லை. நிச்சயமாக அவன் உயர்ந்தவன்; ஞானமுடையவன்.
43:4 وَاِنَّهٗ فِىْۤ اُمِّ الْكِتٰبِ لَدَيْنَا لَعَلِىٌّ حَكِيْمٌؕ
43:4. இன்னும், நிச்சயமாக இது நம்மிடத்திலுள்ள (லவ்ஹுல் மஹ்பூள் என்னும்) தாய் நூலில் இருக்கிறது; (இதுவே வேதங்களில்) மிக்க மேலானதும் ஞானம் நிறைந்ததுமாகும்.
43:63 وَ لَمَّا جَآءَ عِيْسٰى بِالْبَيِّنٰتِ قَالَ قَدْ جِئْتُكُمْ بِالْحِكْمَةِ وَلِاُبَيِّنَ لَكُمْ بَعْضَ الَّذِىْ تَخْتَلِفُوْنَ فِيْهِ ۚ فَاتَّقُوا اللّٰهَ وَاَطِيْعُوْنِ
43:63. இன்னும், ஈஸா தெளிவான அத்தாட்சிகளுடன் வந்தபோது: "மெய்யாகவே, நான் உங்களுக்கு ஞானத்தைக் கொண்டுவந்திருக்கிறேன்; நீங்கள் கருத்து வேற்றுமையுடன் இருக்கும் சிலவற்றை உங்களுக்கு விளக்கிக்கூறுவேன்; ஆகவே, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள், எனக்குக் கீழ்ப்படியுங்கள்" என்று கூறினார்.
43:84 وَهُوَ الَّذِىْ فِى السَّمَآءِ اِلٰـهٌ وَّفِى الْاَرْضِ اِلٰـهٌ ؕ وَهُوَ الْحَكِيْمُ الْعَلِيْمُ
43:84. அன்றியும், அவனே வானத்தின் இறைவனும் பூமியின் இறைவனும் ஆவான்; மேலும், அவனே ஞானம் மிக்கோன், (யாவற்றையும்) நன்கறிந்தவன்.
44:4 فِيْهَا يُفْرَقُ كُلُّ اَمْرٍ حَكِيْمٍۙ
44:4. அதில் உறுதிசெய்யப்பட்ட ஒவ்வொரு விஷயமும் பிரிக்கப்படும்.
45:2 تَنْزِيْلُ الْكِتٰبِ مِنَ اللّٰهِ الْعَزِيْزِ الْحَكِيْمِ
45:2. இவ்வேதம், யாவரையும் மிகைத்தோனும் ஞானம் மிக்கோனுமாகிய அல்லாஹ்விடமிருந்தே இறக்கியருளப்பட்டது.
45:37 وَلَهُ الْكِبْرِيَآءُ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَهُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُ
45:37. இன்னும், வானங்களிலும், பூமியிலுமுள்ள பெருமை அவனுக்கே உரியது; மேலும், அவன்தான் (யாவரையும்) மிகைத்தவன், ஞானம் மிக்கோன்.
46:2 تَنْزِيْلُ الْكِتٰبِ مِنَ اللّٰهِ الْعَزِيْزِ الْحَكِيْمِ
46:2. இவ்வேதம் (யாவரையும்) மிகைத்தோனும், ஞானமிக்கோனுமாகிய அல்லாஹ்விடமிருந்தே இறக்கியருளப்பட்டது.
48:4 هُوَ الَّذِىْۤ اَنْزَلَ السَّكِيْنَةَ فِىْ قُلُوْبِ الْمُؤْمِنِيْنَ لِيَزْدَادُوْۤا اِيْمَانًا مَّعَ اِيْمَانِهِمْ ؕ وَلِلّٰهِ جُنُوْدُ السَّمٰوٰتِ وَالْاَرْضِؕ وَكَانَ اللّٰهُ عَلِيْمًا حَكِيْمًا ۙ
48:4. நம்பிக்கையாளர்களின் இதயங்களில் அவர்களுடைய நம்பிக்கையுடன் (மேலும்) நம்பிக்கையை அதிகரித்துக்கொள்வதற்காக அவன்தான் அமைதியை இறக்கிவைத்தான்; அன்றியும், வானங்களிலும் பூமியிலுமுள்ள படைகள் (எல்லாம்) அல்லாஹ்வுக்கே சொந்தம்; மேலும், அல்லாஹ் நன்கறிந்தவன், ஞானம் மிக்கோன்.
48:7 وَلِلّٰهِ جُنُوْدُ السَّمٰوٰتِ وَالْاَرْضِؕ وَكَانَ اللّٰهُ عَزِيْزًا حَكِيْمًا
48:7. அன்றியும் வானங்களிலும், பூமியிலுமுள்ள படைகள் (எல்லாம்) அல்லாஹ்வுக்குச் சொந்தம்; மேலும், அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கோன்.
48:19 وَّمَغَانِمَ كَثِيْرَةً يَّاْخُذُوْنَهَا ؕ وَكَانَ اللّٰهُ عَزِيْزًا حَكِيْمًا
48:19. இன்னும், ஏராளமான போர்ப்பொருட்களை அவர்கள் கைப்பற்றும்படிச் செய்தான்; அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தோனாகவும் ஞானம் மிக்கோனாகவும் இருக்கிறான்.
49:8 فَضْلًا مِّنَ اللّٰهِ وَنِعْمَةً ؕ وَاللّٰهُ عَلِيْمٌ حَكِيْمٌ
49:8. (இது) அல்லாஹ்விடமிருந்துள்ள அருளாக, அருட்கொடையாக உள்ளது; மேலும், அல்லாஹ் நன்கறிந்தவன்; ஞானம் மிக்கோன்.
51:30 قَالُوْا كَذٰلِكِ ۙ قَالَ رَبُّكِؕ اِنَّهٗ هُوَ الْحَكِيْمُ الْعَلِيْمُ
51:30. "(அறிவு மிக்க புதல்வர் பிறப்பார்!)" இவ்வாறே, உம் இறைவன் கூறினான்; நிச்சயமாக அவன் ஞானம் மிக்கவன்; (யாவற்றையும்) நன்கறிந்தவன்" என்று கூறினார்கள்.
54:5 حِكْمَةٌ ۢ بَالِغَةٌ فَمَا تُغْنِ النُّذُرُۙ
54:5. நிறைவான ஞானம் உடையவை; ஆனால் (அவர்களுக்கு அவற்றின்) எச்சரிக்கைகள் பயனளிக்கவில்லை.
57:1 سَبَّحَ لِلّٰهِ مَا فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِۚ وَهُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُ
57:1. வானங்களிலும், பூமியிலும் உள்ள யாவும் அல்லாஹ்வுக்கு தஸ்பீஹ் (துதி) செய்து கொண்டிருக்கின்றன; அவன் (யாவரையும்) மிகைத்தோன்; ஞானம் மிக்கவன்.
59:1 سَبَّحَ لِلّٰهِ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِۚ وَهُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُ
59:1. வானங்களிலுள்ளவையும் பூமியிலுள்ளவையும் அல்லாஹ்வைத் தஸ்பீஹ் (துதி) செய்கின்றன; அவன் (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.
59:24 هُوَ اللّٰهُ الْخَـالِـقُ الْبَارِئُ الْمُصَوِّرُ لَـهُ الْاَسْمَآءُ الْحُسْنٰىؕ يُسَبِّحُ لَهٗ مَا فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِۚ وَهُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُ
59:24. அவன்தான் அல்லாஹ்; படைப்பவன்; (ஒழுங்குபடுத்தி) உண்டாக்குபவன்; உருவமளிப்பவன்; அவனுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன; வானங்களிலும், பூமியிலும் உள்ளவை யாவும் அவனையே தஸ்பீஹ் (துதி) செய்கின்றன; அவனே (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.
60:5 رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِّلَّذِيْنَ كَفَرُوْا وَاغْفِرْ لَـنَا رَبَّنَا ۚ اِنَّكَ اَنْتَ الْعَزِيْزُ الْحَكِيْمُ
60:5. "எங்கள் இறைவா! நிராகரிப்பாளர்களுக்கு எங்களைச் சோதனை(ப் பொருள்) ஆக ஆக்கிவிடாதே! எங்கள் இறைவா! எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக! நிச்சயமாக நீ (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்" (என்றும் வேண்டினார்).
60:10 يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا جَآءَكُمُ الْمُؤْمِنٰتُ مُهٰجِرٰتٍ فَامْتَحِنُوْهُنَّ ؕ اَللّٰهُ اَعْلَمُ بِاِيْمَانِهِنَّ ۚ فَاِنْ عَلِمْتُمُوْهُنَّ مُؤْمِنٰتٍ فَلَا تَرْجِعُوْهُنَّ اِلَى الْكُفَّارِ ؕ لَا هُنَّ حِلٌّ لَّهُمْ وَلَا هُمْ يَحِلُّوْنَ لَهُنَّ ۚ وَاٰ تُوْهُمْ مَّاۤ اَنْفَقُوْا ؕ وَلَا جُنَاحَ عَلَيْكُمْ اَنْ تَنْكِحُوْهُنَّ اِذَاۤ اٰ تَيْتُمُوْهُنَّ اُجُوْرَهُنَّ ؕ وَلَا تُمْسِكُوْا بِعِصَمِ الْكَوَافِرِ وَسْـــٴَــلُوْا مَاۤ اَنْفَقْتُمْ وَ لْیَسْـَٔلُوْا مَاۤ اَنْفَقُوْا ؕ ذٰ لِكُمْ حُكْمُ اللّٰهِ ؕ يَحْكُمُ بَيْنَكُمْ ؕ وَاللّٰهُ عَلِيْمٌ حَكِيْمٌ
60:10. நம்பிக்கை கொண்டவர்களே! நம்பிக்கை கொண்ட பெண்கள் ஹிஜ்ரத் செய்து உங்களிடம் வந்தால், அவர்களை நீங்கள் பரிசோதித்துக் கொள்ளுங்கள்; அல்லாஹ் அவர்கள் நம்பிக்கையை நன்கறிந்தவன்; எனவே, அவர்கள் நம்பிக்கைகொண்ட பெண்கள் என நீங்கள் அறிந்தால், நிராகரிப்பாளர்களிடம் அவர்களைத் திருப்பியனுப்பிவிடாதீர்கள்; ஏனெனில், இவர்கள் அவர்களுக்கு (மனைவியராக இருக்க) அனுமதிக்கப்பட்டோர் அல்லர்; அவர்கள் இவர்களுக்கு (கணவர்களாக இருக்க) அனுமதிக்கப்பட்டோர் அல்லர்; (ஆனால், இப்பெண்களுக்காக) அவர்கள் செலவு செய்திருந்ததை அவர்களுக்குக் கொடுத்துவிடுங்கள்; அன்றியும், நீங்கள் அவர்களுக்குரிய மஹரை கொடுத்து அவர்களை மணந்து கொள்வது உங்கள்மீது குற்றமில்லை; மேலும், நிராகரித்துக் கொண்டிருக்கும் பெண்களின் திருமணபந்தத்தை நீங்கள் பற்றிப்பிடித்துக் கொள்ளவேண்டாம்; அன்றியும், நீங்கள் செலவு செய்திருந்ததை (அவர்கள் போய்ச் சேருவோரிடம்) கேளுங்கள்; (அவ்வாறே, நம்பிக்கை கொண்டு உங்களிடம் வந்து விட்டோருக்காகத்) தாங்கள் செலவு செய்ததை அவர்கள் (உங்களிடம்) கேட்கலாம்; இதுவே, அல்லாஹ்வுடைய கட்டளையாகும்; உங்களிடையே அவன் தீர்ப்பு வழங்குகிறான்; மேலும், அல்லாஹ் நன்கறிந்தவன்; ஞானம் மிக்கவன்.
61:1 سَبَّحَ لِلّٰهِ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِۚ وَهُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُ
61:1. வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அல்லாஹ்வைத் தஸ்பீஹ் (துதி) செய்து கொண்டிருக்கின்றன; அவன் யாவரையும் மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.
62:1 يُسَبِّحُ لِلّٰهِ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ الْمَلِكِ الْقُدُّوْسِ الْعَزِيْزِ الْحَكِيْمِ
62:1. வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அல்லாஹ்வைத் தஸ்பீஹ் (துதி) செய்து கொண்டிருக்கின்றன; (அவன்தான் மெய்யான) பேரரசன்; பரிசுத்தமானவன்; (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.
62:2 هُوَ الَّذِىْ بَعَثَ فِى الْاُمِّيّٖنَ رَسُوْلًا مِّنْهُمْ يَتْلُوْا عَلَيْهِمْ اٰيٰتِهٖ وَيُزَكِّيْهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَاِنْ كَانُوْا مِنْ قَبْلُ لَفِىْ ضَلٰلٍ مُّبِيْنٍۙ
62:2. அவன்தான், எழுத்தறிவில்லா மக்களிடம் அவனுடைய வசனங்களை ஓதிக்காட்டி, அவர்களைப் பரிசுத்தமாக்கி, அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்பிக்கும்படியான தூதரை அவர்களிலிருந்தே அனுப்பிவைத்தான்; அவர்களோ, அதற்கு முன்னர் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருந்தனர்.
62:3 وَّاٰخَرِيْنَ مِنْهُمْ لَمَّا يَلْحَقُوْا بِهِمْؕ وَهُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُ
62:3. இவர்களிலிருந்து இவர்களுடன் சேராத (பிற்காலத்த) வர்களுக்காகவும், (தூதராக அனுப்பி வைத்தான்); அவன் (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.
64:18 عٰلِمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ الْعَزِيْزُ الْحَكِيْمُ
64:18. மறைவானவற்றையும், பகிரங்கமானவற்றையும் அறிபவன்; (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.
66:2 قَدْ فَرَضَ اللّٰهُ لَـكُمْ تَحِلَّةَ اَيْمَانِكُمْؕ وَاللّٰهُ مَوْلٰٮكُمْۚ وَهُوَ الْعَلِيْمُ الْحَكِيْمُ
66:2. அல்லாஹ் உங்களுடைய சத்தியங்களை (சில போது தக்க பரிகாரங்களுடன்) முறித்து விடுவதை உங்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறான்; மேலும், அல்லாஹ் உங்கள் எஜமானன்; மேலும், அவன் நன்கறிந்தவன்; ஞானம் மிக்கவன்.
76:30 وَمَا تَشَآءُوْنَ اِلَّاۤ اَنْ يَّشَآءَ اللّٰهُ ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَلِيْمًا حَكِيْمًا ۖ
76:30. எனினும், அல்லாஹ் நாடினாலன்றி, நீங்கள் நாட மாட்டீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன்; ஞானம் மிக்கவன்.