9:40 اِلَّا تَـنْصُرُوْهُ فَقَدْ نَصَرَهُ اللّٰهُ اِذْ اَخْرَجَهُ الَّذِيْنَ كَفَرُوْا ثَانِىَ اثْنَيْنِ اِذْ هُمَا فِى الْغَارِ اِذْ يَقُوْلُ لِصَاحِبِهٖ لَا تَحْزَنْ اِنَّ اللّٰهَ مَعَنَا ۚ فَاَنْزَلَ اللّٰهُ سَكِيْنَـتَهٗ عَلَيْهِ وَاَ يَّدَهٗ بِجُنُوْدٍ لَّمْ تَرَوْهَا وَجَعَلَ كَلِمَةَ الَّذِيْنَ كَفَرُوا السُّفْلٰى ؕ وَكَلِمَةُ اللّٰهِ هِىَ الْعُلْيَا ؕ وَاللّٰهُ عَزِيْزٌ حَكِيْمٌ
9:40. (நம் தூதராகிய) அவருக்கு நீங்கள் உதவி செய்யாவிட்டால், (அவருக்கு யாதொரு இழப்புமில்லை); நிராகரிப்பவர்கள் அவரை (ஊரை விட்டு) வெளியேற்றியபோது, நிச்சயமாக அல்லாஹ் அவருக்கு உதவிசெய்தே இருக்கின்றான்; இருவரும் குகையில் இருந்தபோது, இருவரில் ஒருவராக இருந்த அவர் (நம் தூதர்) தம் தோழரிடம், "கவலைப்படாதீர்கள்! நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்" என்று கூறிய நேரத்தில்: அப்போது அவர்மீது அல்லாஹ் தன் சாந்தியை இறக்கிவைத்தான்; மேலும், நீங்கள் பார்க்கமுடியாப் படைகளைக் கொண்டு அவரைப் பலப்படுத்தினான்; நிராகரிப்போரின் வாக்கைக் கீழாக்கினான்; ஏனெனில், அல்லாஹ்வின் வாக்கு - அதுதான் (எப்போதும்) மேலோங்கும்; அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.