தர்மம்
2:162 خٰلِدِيْنَ فِيْهَا ۚ لَا يُخَفَّفُ عَنْهُمُ الْعَذَابُ وَلَا هُمْ يُنْظَرُوْنَ
2:162. அவர்கள் அ(ச் சாபத்)திலேயே என்றென்றும் இருப்பார்கள்; அவர்களை விட்டும் வேதனை இலேசாக்கப்படமாட்டாது; மேலும், (மன்னிப்புக் கோர) அவர்கள் அவகாசமும் கொடுக்கப்படமாட்டார்கள்.
2:196 وَاَتِمُّوا الْحَجَّ وَالْعُمْرَةَ لِلّٰهِؕ فَاِنْ اُحْصِرْتُمْ فَمَا اسْتَيْسَرَ مِنَ الْهَدْىِۚ وَلَا تَحْلِقُوْا رُءُوْسَكُمْ حَتّٰى يَبْلُغَ الْهَدْىُ مَحِلَّهٗ ؕ فَمَنْ كَانَ مِنْكُمْ مَّرِيْضًا اَوْ بِهٖۤ اَذًى مِّنْ رَّاْسِهٖ فَفِدْيَةٌ مِّنْ صِيَامٍ اَوْ صَدَقَةٍ اَوْ نُسُكٍۚ فَاِذَآ اَمِنْتُمْ فَمَنْ تَمَتَّعَ بِالْعُمْرَةِ اِلَى الْحَجِّ فَمَا اسْتَيْسَرَ مِنَ الْهَدْىِۚ فَمَنْ لَّمْ يَجِدْ فَصِيَامُ ثَلٰثَةِ اَيَّامٍ فِى الْحَجِّ وَسَبْعَةٍ اِذَا رَجَعْتُمْؕ تِلْكَ عَشَرَةٌ كَامِلَةٌ ؕ ذٰ لِكَ لِمَنْ لَّمْ يَكُنْ اَهْلُهٗ حَاضِرِىْ الْمَسْجِدِ الْحَـرَامِؕ وَاتَّقُوا اللّٰهَ وَاعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ شَدِيْدُ الْعِقَابِ
2:196. ஹஜ்ஜையும், உம்ராவையும் அல்லாஹ்வுக்காகப் பூர்த்திசெய்யுங்கள், (அப்படிப் பூர்த்தி செய்ய முடியாதவாறு) நீங்கள் தடுக்கப்படுவீர்களாயின் (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) பலிப் பிராணிகளில் (உங்களுக்கு) சாத்தியமானது (அதற்குப் பகரமாகும்); அந்தப் பலிப்பிராணி தனது இடத்தை அடைவதற்குமுன் உங்கள் தலை முடிகளை மழிக்காதீர்கள்; ஆயினும், உங்களில் எவரேனும் நோயாளியாகவோ அல்லது அவருடைய தலையில் ஏதேனும் தொந்தரவு தரக்கூடியதோ இருந்தால், (தலை முடியை இறக்கிக்கொள்ளக்கூடிய கட்டாயம் ஏற்பட்டால்) அதற்குப் பரிகாரமாக நோன்பு இருத்தல் வேண்டும்; அல்லது தர்மம் கொடுத்தல் வேண்டும்; அல்லது பலி கொடுத்தல் வேண்டும்; பின்னர் (பகைவர் பற்றிய அச்சம், நோய் போன்ற தடைகளை விட்டும்) அபயமுடையவர்களாக நீங்கள் ஆகிவிட்டால், (மக்கா சென்றபின், உங்களில்) எவரேனும் உம்ராவை (மாத்திரம்) செய்துவிட்டு, ஹஜ்ஜுக்கு முன்னதாகவே (ஹஜ்ஜுடைய காலத்தில் தடுக்கப்பட்டிருந்த) சுகத்தை அனுபவித்துவிட்டால், (அதற்குப் பரிகாரமாக) பலிப்பிராணியிலிருந்து எது இயலுமோ அது அவரின் மீ(து கடமையான)தாகும்: (அவ்வாறு பலி கொடுக்கும் வசதியைப்) பெற்றுக் கொள்ளாதவர் ஹஜ் செய்யும் காலத்தில் மூன்று நாட்களும், பின்னர் (தம் ஊர்) திரும்பியதும் ஏழு நாட்களும் நோன்பு நோற்றல் வேண்டும்; இவை முழுமையான பத்தாகும்; இ(ந்தச் சலுகையான)து எவருடைய குடும்பம் (கஃபா என்னும்) மஸ்ஜிதுல் ஹராமின் பக்கத்தில் இல்லையோ அவருக்குத்தான் - ஆகவே, அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் வேதனை கொடுப்பதில் கடுமையானவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
2:271 اِنْ تُبْدُوا الصَّدَقٰتِ فَنِعِمَّا هِىَۚ وَاِنْ تُخْفُوْهَا وَ تُؤْتُوْهَا الْفُقَرَآءَ فَهُوَ خَيْرٌ لَّكُمْؕ وَيُكَفِّرُ عَنْكُمْ مِّنْ سَيِّاٰتِكُمْؕ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرٌ
2:271. தான தர்மங்களை நீங்கள் வெளிப்படையாகச் செய்தால் அதுவும் நல்லதே; (ஏனெனில், அவ்வாறு செய்யப் பிறரையும் அது தூண்டும்;) எனினும், அவற்றை மறைத்து ஏழைகளுக்கு வழங்கினால் அது உங்களுக்கு இன்னும் நல்லது; (தர்மங்களால்) அவன் உங்கள் தீமைகளை அழித்துவிடுவான்; நீங்கள் செய்வதை(யெல்லாம்) அல்லாஹ் நன்கறிந்தவனாகவே இருக்கின்றான்.
2:276 يَمْحَقُ اللّٰهُ الرِّبٰوا وَيُرْبِى الصَّدَقٰتِؕ وَاللّٰهُ لَا يُحِبُّ كُلَّ كَفَّارٍ اَثِيْمٍ
2:276. அல்லாஹ் வட்டியை (அபிவிருத்தியில்லாமல்) அழித்து விடுவான்; இன்னும், தர்மங்களைப் பெருகச் செய்வான்; (தன் கட்டளையை) நிராகரித்துக் கொண்டிருக்கும் எந்தப் பாவியையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.
4:114 لَا خَيْرَ فِىْ كَثِيْرٍ مِّنْ نَّجْوٰٮهُمْ اِلَّا مَنْ اَمَرَ بِصَدَقَةٍ اَوْ مَعْرُوْفٍ اَوْ اِصْلَاحٍۢ بَيْنَ النَّاسِ ؕ وَمَنْ يَّفْعَلْ ذٰ لِكَ ابْتِغَآءَ مَرْضَاتِ اللّٰهِ فَسَوْفَ نُـؤْتِيْهِ اَجْرًا عَظِيْمًا
4:114. (நபியே!) தர்மம், நன்மை, மனிதர்களிடையே சமாதானம் செய்துவைப்பது ஆகியவற்றை ஏவியவரைத் தவிர, அவர்களின் இரகசியங்களில் பெரும்பாலானவற்றில் எந்த விதமான நன்மையுமில்லை; ஆகவே, எவர் அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி இதைச் செய்கின்றாரோ, அவருக்கு நாம் மகத்தான (நற்)கூலியை வழங்குவோம்.
9:58 وَمِنْهُمْ مَّنْ يَّلْمِزُكَ فِى الصَّدَقٰتِ ۚ فَاِنْ اُعْطُوْا مِنْهَا رَضُوْا وَاِنْ لَّمْ يُعْطَوْا مِنْهَاۤ اِذَا هُمْ يَسْخَطُوْنَ
9:58. (நபியே!) தானங்கள் விஷயத்தில் (பாரபட்சம் உடையவர் என்று) உம்மைக் குறை கூறுபவரும் அவர்களில் இருக்கிறார்கள்; அவற்றிலிருந்து அவர்களுக்கு (ஒரு பங்கு) கொடுக்கப்பட்டால் திருப்தியடைகிறார்கள்; அப்படி அவற்றிலிருந்து அவர்களுக்குக் கொடுக்கப்படவில்லையானால் அவர்கள் ஆத்திரம் கொள்கிறார்கள்.
9:60 اِنَّمَا الصَّدَقٰتُ لِلْفُقَرَآءِ وَالْمَسٰكِيْنِ وَالْعٰمِلِيْنَ عَلَيْهَا وَالْمُؤَلَّـفَةِ قُلُوْبُهُمْ وَفِى الرِّقَابِ وَالْغٰرِمِيْنَ وَفِىْ سَبِيْلِ اللّٰهِ وَابْنِ السَّبِيْلِؕ فَرِيْضَةً مِّنَ اللّٰهِؕ وَاللّٰهُ عَلِيْمٌ حَكِيْمٌ
9:60. (ஜகாத் என்னும்) தானங்கள் - வறியவர்களுக்கும், ஏழைகளுக்கும், அதற்காக (வசூல் செய்வது, கணக்கிடுவது போன்ற வேலைகளில்) உழைப்பவர்களுக்கும், எவர்களுடைய இதயங்கள் (இஸ்லாத்தின்பால்) ஈர்க்கப்படுகின்றனவோ அவர்களுக்கும், (அடிமைகளை) விடுதலை செய்வதற்கும், கடன்பட்டிருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையிலும், வழிப்போக்கருக்கும் உரியவை; (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும்; அல்லாஹ் (யாவையும்) அறிபவன், மிக்க ஞானமுடையோன்.
9:79 اَلَّذِيْنَ يَلْمِزُوْنَ الْمُطَّوِّعِيْنَ مِنَ الْمُؤْمِنِيْنَ فِى الصَّدَقٰتِ وَالَّذِيْنَ لَا يَجِدُوْنَ اِلَّا جُهْدَهُمْ فَيَسْخَرُوْنَ مِنْهُمْؕ سَخِرَ اللّٰهُ مِنْهُمْ وَلَهُمْ عَذَابٌ اَلِيْمٌ
9:79. (நயவஞ்சகர்களான) இவர்கள் நம்பிக்கையாளர்களில் தாராளமாக தர்மம் செய்பவர்களையும், தங்கள் உழைப்பைத் தவிர வேறு எதையும் (தர்மம் செய்வதற்கு) பெறாதவர்களையும் குறைகூறி, ஏளனமும் செய்கிறார்கள்; இவர்களை அல்லாஹ் ஏளனம் செய்கிறான்; இவர்களுக்கு நோவினைதரும் வேதனையுமுண்டு.
9:103 خُذْ مِنْ اَمْوَالِهِمْ صَدَقَةً تُطَهِّرُهُمْ وَتُزَكِّيْهِمْ بِهَا وَصَلِّ عَلَيْهِمْؕ اِنَّ صَلٰوتَكَ سَكَنٌ لَّهُمْؕ وَاللّٰهُ سَمِيْعٌ عَلِيْمٌ
9:103. (நபியே!) அவர்களுடைய செல்வத்திலிருந்து தர்மத்தை (ஜகாத்தை) எடுத்துக்கொண்டு, அதைக் கொண்டு அவர்களைத் தூய்மையாக்கி, அவர்களைப் பரிசுத்தப்படுத்துவீராக! இன்னும், அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வீராக! நிச்சயமாக உம்முடைய பிரார்த்தனை அவர்களுக்கு நிம்மதி அளிக்கும்; அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றான்.
9:104 اَلَمْ يَعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ هُوَ يَقْبَلُ التَّوْبَةَ عَنْ عِبَادِهٖ وَيَاْخُذُ الصَّدَقٰتِ وَ اَنَّ اللّٰهَ هُوَ التَّوَّابُ الرَّحِيْمُ
9:104. நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களிடமிருந்து மன்னிப்புக் கோருதலை ஒப்புக் கொள்கிறான் என்பதையும், (அவர்களுடைய) தர்மங்களை அங்கீகரிக்கிறான் என்பதையும், நிச்சயமாக அல்லாஹ் - அவனே மன்னிப்புக் கோருதலை ஏற்றுக்கொள்கிறவன், மிகக் கிருபையுடையவன் என்பதையும் அவர்கள் அறியவில்லையா?