தற்கொலை
4:29 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَاْكُلُوْۤا اَمْوَالَـكُمْ بَيْنَكُمْ بِالْبَاطِلِ اِلَّاۤ اَنْ تَكُوْنَ تِجَارَةً عَنْ تَرَاضٍ مِّنْكُمْ وَلَا تَقْتُلُوْۤا اَنْـفُسَكُمْؕ اِنَّ اللّٰهَ كَانَ بِكُمْ رَحِيْمًا
4:29. நம்பிக்கை கொண்டவர்களே! உங்களில் ஒருவருக்கொருவர் பொருந்திக்கொள்ளும் முறையில் ஏற்படுகிற வர்த்தகம் அல்லாமல், உங்களுக்கிடையே உங்கள் பொருட்களை தவறான முறையில் உண்ணாதீர்கள்; நீங்கள் உங்களையே கொலைசெய்து கொள்ளாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் கருணையுள்ளவனாக இருக்கின்றான்.
6:151 قُلْ تَعَالَوْا اَتْلُ مَا حَرَّمَ رَبُّكُمْ عَلَيْكُمْ اَلَّا تُشْرِكُوْا بِهٖ شَيْـٴًـــــا وَّبِالْوَالِدَيْنِ اِحْسَانًا ۚ وَلَا تَقْتُلُوْۤا اَوْلَادَكُمْ مِّنْ اِمْلَاقٍؕ نَحْنُ نَرْزُقُكُمْ وَاِيَّاهُمْ ۚ وَلَا تَقْرَبُوا الْفَوَاحِشَ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ ۚ وَلَا تَقْتُلُوا النَّفْسَ الَّتِىْ حَرَّمَ اللّٰهُ اِلَّا بِالْحَـقِّ ؕ ذٰ لِكُمْ وَصّٰٮكُمْ بِهٖ لَعَلَّكُمْ تَعْقِلُوْنَ
6:151. வாருங்கள்! உங்கள் இறைவன் உங்கள் மீது விலக்கியிருப்பவற்றை(யும், ஏவியிருப்பவற்றையும்) நான் ஓதிக்காண்பிக்கிறேன்: எப்பொருளையும் அவனுக்கு இணையாக்காதீர்கள்; பெற்றோருக்கு நன்மைசெய்யுங்கள்; வறுமையின் காரணமாக உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்; ஏனெனில், உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம்; மானக்கேடான காரியங்களை அதில் வெளிப்படையானவற்றையும், இரகசியமானவற்றையும் நீங்கள் நெருங்காதீர்கள்; அல்லாஹ் தடுத்துள்ள எந்த ஓர் ஆத்மாவையும், (நியாயமான) உரிமையின்றிக் கொலை செய்யாதீர்கள்: இவற்றை நீங்கள் விளங்கிக்கொள்வதற்காக (இறைவன்) உங்களுக்கு (இவ்வாறு) ஏவுகிறான்.
17:33 وَلَا تَقْتُلُوا النَّفْسَ الَّتِىْ حَرَّمَ اللّٰهُ اِلَّا بِالْحَـقِّ ؕ وَمَنْ قُتِلَ مَظْلُوْمًا فَقَدْ جَعَلْنَا لِـوَلِيِّهٖ سُلْطٰنًا فَلَا يُسْرِفْ فِّى الْقَتْلِ ؕ اِنَّهٗ كَانَ مَنْصُوْرًا
17:33. மேலும், (கொலை செய்யக்கூடாது என்று) தடுத்துள்ள எந்த மனிதனையும் நியாயமான காரணமின்றிக் கொலை செய்துவிடாதீர்கள்; எவரேனும் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டுவிட்டால் அவருடைய வாரிசுக்கு நாம் அதிகாரம் கொடுத்திருக்கிறோம்; ஆனால், கொலையி(ன் மூலம் பதில் செய்வதி)ல் வரம்பு கடந்துவிடக்கூடாது: நிச்சயமாக (கொலையுண்டவரின் வாரிசான) அவர் (நீதியைக்கொண்டு) உதவி செய்யப்பட்டவராவார்.