தாவூத்
2:251   فَهَزَمُوْهُمْ بِاِذْنِ اللّٰهِ ۙ وَقَتَلَ دَاوٗدُ جَالُوْتَ وَاٰتٰٮهُ اللّٰهُ الْمُلْكَ وَالْحِکْمَةَ وَعَلَّمَهٗ مِمَّا يَشَآءُ ‌ؕ وَلَوْلَا دَفْعُ اللّٰهِ النَّاسَ بَعْضَهُمْ بِبَعْضٍ لَّفَسَدَتِ الْاَرْضُ وَلٰـکِنَّ اللّٰهَ ذُوْ فَضْلٍ عَلَى الْعٰلَمِيْنَ‏
2:251. இவ்வாறு அவர்கள் அல்லாஹ்வின் அனுமதி கொண்டு (ஜாலூத்தின் படையை) முறியடித்தார்கள்; தாவூது ஜாலூத்தைக் கொன்றார்; அல்லாஹ் அவருக்கு அரசுரிமையையும், ஞானத்தையும் கொடுத்தான்; தான் விரும்பியவற்றையெல்லாம் அவருக்குக் கற்பித்தான்; இன்னும், மனிதர்களை அவர்களில் சிலரைக்கொண்டு சிலரை அல்லாஹ் தடுக்காவிட்டால் பூமி சீர்கெட்டிருக்கும்; ஆயினும், நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தார்மீது அருளுடையோனாக இருக்கின்றான்.
4:163   اِنَّاۤ اَوْحَيْنَاۤ اِلَيْكَ كَمَاۤ اَوْحَيْنَاۤ اِلٰى نُوْحٍ وَّالنَّبِيّٖنَ مِنْۢ بَعْدِهٖ‌ ۚ وَاَوْحَيْنَاۤ اِلٰٓى اِبْرٰهِيْمَ وَاِسْمٰعِيْلَ وَاِسْحٰقَ وَيَعْقُوْبَ وَالْاَسْبَاطِ وَعِيْسٰى وَاَيُّوْبَ وَيُوْنُسَ وَهٰرُوْنَ وَسُلَيْمٰنَ‌ ۚ وَاٰتَيْنَا دَاوٗدَ زَبُوْرًا‌ ۚ‏
4:163. (நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த (இதர) நபிமார்களுக்கும் நாம் வஹீ அறிவித்தது போலவே, உமக்கும் நிச்சயமாக வஹீ அறிவித்தோம்; மேலும், இப்ராஹீமுக்கும், இஸ்மாயிலுக்கும், இஸ்ஹாக்குக்கும், யஃகூபுக்கும் (அவருடைய) சந்ததியினருக்கும், ஈஸாவுக்கும், அய்யூபுக்கும், யூனுஸுக்கும், ஹாரூனுக்கும், ஸுலைமானுக்கும் நாம் வஹீ அறிவித்தோம்; இன்னும், நாம் தாவூதுக்கு ஜபூர் (என்னும்) வேதத்தைக் கொடுத்தோம்.
5:78   لُعِنَ الَّذِيْنَ كَفَرُوْا مِنْۢ بَنِىْۤ اِسْرَآءِيْلَ عَلٰى لِسَانِ دَاوٗدَ وَعِيْسَى ابْنِ مَرْيَمَ‌ ؕ ذٰ لِكَ بِمَا عَصَوْا وَّكَانُوْا يَعْتَدُوْنَ‏
5:78. இஸ்ராயீலின் சந்ததிகளிலிருந்து நிராகரித்து விட்டவர்கள், தாவூது, மர்யமின் குமாரர் ஈஸா ஆகியவர்களின் நாவால் சபிக்கப்பட்டுள்ளனர்; அது ஏனென்றால், அவர்கள் (இறைவன் கட்டளைக்கு) மாறுசெய்து வரம்பு மீறிக் கொண்டு இருந்தார்கள் என்பதினாலாகும்.
6:84   وَوَهَبْنَا لَهٗۤ اِسْحٰقَ وَيَعْقُوْبَ‌ؕ كُلًّا هَدَيْنَا ‌ۚ وَنُوْحًا هَدَيْنَا مِنْ قَبْلُ‌ وَمِنْ ذُرِّيَّتِهٖ دَاوٗدَ وَسُلَيْمٰنَ وَاَيُّوْبَ وَيُوْسُفَ وَمُوْسٰى وَ هٰرُوْنَ‌ؕ وَكَذٰلِكَ نَجْزِى الْمُحْسِنِيْنَۙ‏
6:84. நாம் அவருக்கு இஸ்ஹாக்கையும், யஃகூபையும் (சந்ததியாக) வழங்கினோம்; (இவர்கள்) ஒவ்வொருவரையும் நாம் நேர்வழியில் செலுத்தினோம்; (இதற்கு) முன்னர் நாம் நூஹையும் அவருடைய சந்ததியிலிருந்து தாவூது, ஸுலைமான், அய்யூப், யூஸுஃப், மூஸா, ஹாரூன் ஆகியோரையும் நேர்வழியில் செலுத்தினோம்; இப்படியே நாம் நன்மை புரிவோருக்கு (நற்)கூலி வழங்குகிறோம்.
17:55   وَرَبُّكَ اَعْلَمُ بِمَنْ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ؕ وَلَقَدْ فَضَّلْنَا بَعْضَ النَّبِيّٖنَ عَلٰى بَعْضٍ‌ وَّاٰتَيْنَا دَاوٗدَ زَبُوْرًا‏
17:55. உம்முடைய இறைவன் வானங்களிலும், பூமியிலும் உள்ளவர்களைப் பற்றி நன்கு அறிவான்; நபிமார்களில் சிலரை வேறு சிலரைவிடத் திட்டமாக நாம் மேன்மையாக்கியிருக்கிறோம்; இன்னும், தாவூதுக்கு ஜபூர் (வேதத்தையும்) கொடுத்தோம்.
21:76   وَنُوْحًا اِذْ نَادٰى مِنْ قَبْلُ فَاسْتَجَبْنَا لَهٗ فَنَجَّيْنٰهُ وَاَهْلَهٗ مِنَ الْكَرْبِ الْعَظِيْمِ‌ۚ‏
21:76. இன்னும், 'நூஹ்' அவர் இதற்கு முன்னர் பிரார்த்தித்தபோது, நாம் அவருக்கு (அவருடைய பிரார்த்தனையை ஏற்று) பதில் கூறினோம்; அவரையும், அவருடைய குடும்பத்தாரையும் மிகப் பெரிய துன்பத்திலிருந்து நாம் ஈடேற்றினோம்.
21:78   وَدَاوٗدَ وَسُلَيْمٰنَ اِذْ يَحْكُمٰنِ فِى الْحَـرْثِ اِذْ نَفَشَتْ فِيْهِ غَنَمُ الْقَوْمِ‌ۚ وَكُنَّا لِحُكْمِهِمْ شٰهِدِيْنَ ۙ‏
21:78. இன்னும் தாவூதையும், ஸுலைமானையும் (நினைவு கூர்வீராக!): வேளாண்மை நிலத்தில் ஒரு சமூகத்தாரின் ஆடுகள் இரவில் இறங்கி மேய்ந்தபோது, அதைப் பற்றி அவ்விருவரும் தீர்ப்புக் கூறியபோது, அவர்களுடைய தீர்ப்பை நாம் கவனித்துக் கொண்டிருந்தோம்.
27:16   وَوَرِثَ سُلَيْمٰنُ دَاوٗدَ‌ وَقَالَ يٰۤاَيُّهَا النَّاسُ عُلِّمْنَا مَنْطِقَ الطَّيْرِ وَاُوْتِيْنَا مِنْ كُلِّ شَىْءٍؕ‌ اِنَّ هٰذَا لَهُوَ الْفَضْلُ الْمُبِيْنُ‏
27:16. பின்னர், ஸுலைமான் தாவூதின் வாரிசானார்: அவர் கூறினார்: "மனிதர்களே! பறவைகளின் மொழி எங்களுக்குக் கற்றுத்தரப்பட்டுள்ளது; மேலும், நாங்கள் எல்லாவிதமான பொருட்களிலிருந்தும் (ஏராளமாக) அளிக்கப்பட்டுள்ளோம்; நிச்சயமாக இது தெளிவான அருளாகும்."
34:10   وَلَقَدْ اٰتَيْنَا دَاوٗدَ مِنَّا فَضْلًا ؕ يٰجِبَالُ اَوِّبِىْ مَعَهٗ وَالطَّيْرَ ۚ وَاَلَــنَّا لَـهُ الْحَدِيْدَ ۙ‏
34:10. இன்னும், நிச்சயமாக நாம் தாவூதுக்கு நம் (மேன்மையான) அருளை வழங்கினோம்: "மலைகளே! (அவர் தஸ்பீஹ் செய்யும்போது) அவருடன் சேர்ந்து நீங்களும் துதியுங்கள்: இன்னும், பறவைகளையும் (நீங்களும் அவ்வாறே செய்யுங்கள்" என்றோம்); மேலும், நாம் அவருக்கு இரும்பை மிருதுவாக்கித் தந்தோம்.
34:13   يَعْمَلُوْنَ لَهٗ مَا يَشَآءُ مِنْ مَّحَارِيْبَ وَتَمَاثِيْلَ وَجِفَانٍ كَالْجَـوَابِ وَقُدُوْرٍ رّٰسِيٰتٍ ؕ اِعْمَلُوْۤا اٰلَ دَاوٗدَ شُكْرًا ؕ وَقَلِيْلٌ مِّنْ عِبَادِىَ الشَّكُوْرُ‏
34:13. அவை அவருக்காக அவர் விரும்பிய உயரமான மாளிகைகளையும், சிற்பங்களையும், (தடாகங்கள் போன்ற) பெருங்கொப்பரைகளையும், நகர்த்த முடியாப் பெரும்பாத்திரங்களையும் செய்து கொண்டிருந்தன; "தாவூதின் சந்ததியினரே! நன்றி செலுத்துங்கள்; மேலும், என் அடியார்களிலிருந்து நன்றி செலுத்துவோர் சொற்பமானவர்களே" (என்று கூறினோம்).
38:17   اِصْبِرْ عَلٰى مَا يَقُوْلُوْنَ وَاذْكُرْ عَبْدَنَا دَاوٗدَ ذَا الْاَيْدِ‌ۚ اِنَّـهٗۤ اَوَّابٌ‏
38:17. இவர்கள் கூறுவதைப் பற்றிப் பொறுமையுடன் இருப்பீராக! இன்னும், பலசாலியான நம் அடியார் தாவூதையும் நினைவுகூர்வீராக! நிச்சயமாக அவர் (எந்நிலையிலும் நம் பக்கமே) மிகுதியாகத் திரும்புபவராக இருந்தார்.
38:22   اِذْ دَخَلُوْا عَلٰى دَاوٗدَ فَفَزِعَ مِنْهُمْ‌ قَالُوْا لَا تَخَفْ‌ۚ خَصْمٰنِ بَغٰى بَعْضُنَا عَلٰى بَعْضٍ فَاحْكُمْ بَيْنَنَا بِالْحَقِّ وَلَا تُشْطِطْ وَاهْدِنَاۤ اِلٰى سَوَآءِ الصِّرَاطِ‏
38:22. தாவூதிடம் நுழைந்தபோது அவர், அவர்களைக் கண்டு திடுக்குற்றார்; அப்போது அவர்கள் கூறினார்கள்: "பயப்படாதீர்! (நாங்கள்) இரு வழக்காளிகள்; எங்களில் ஒருவர் மற்றவர் மீது அநீதம் செய்திருக்கிறார்; எங்கள் இருவருக்கிடையில் நீதியைக் கொண்டு தீர்ப்பளிப்பீராக! (அதில்) தவறிழைத்துவிடாதீர்! நேரான வழியை எங்களுக்குக் காட்டுவீராக!"
38:24   قَالَ لَقَدْ ظَلَمَكَ بِسُؤَالِ نَعْجَتِكَ اِلٰى نِعَاجِهٖ‌ ؕ وَاِنَّ كَثِيْرًا مِّنَ الْخُلَـطَآءِ لَيَبْغِىْ بَعْضُهُمْ عَلٰى بَعْضٍ اِلَّا الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَقَلِيْلٌ مَّا هُمْ‌ ؕ وَظَنَّ دَاوٗدُ اَنَّمَا فَتَنّٰهُ فَاسْتَغْفَرَ رَبَّهٗ وَخَرَّ رَاكِعًا وَّاَنَابَ ۩
38:24. (அதற்கு தாவூது) "உம்முடைய ஆட்டை அவர் தம்முடைய ஆடுகளுடன் சேர்த்துவிடும்படி கேட்டதன் மூலம் நிச்சயமாக அவர் உம்மீது அநியாயம் செய்துவிட்டார்: நிச்சயமாக கூட்டாளிகளில் பெரும்பாலோர் - அவர்களில் சிலர் சிலரை வரம்புமீறிவிடுகின்றனர்; நம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் செய்பவர்களைத் தவிர; இத்தகையோர் சிலரே" என்று கூறினார். (இதற்குள்) நிச்சயமாக நாமே அவரைச் சோதித்துவிட்டோம் என்று தாவூது எண்ணித் தம்முடைய இறைவனிடம் மன்னிப்புக்கோரி குனிந்து (ஸஜ்தாவில்) விழுந்தவராக (அவன்பால்) மீண்டார்.
38:26   يٰدَاوٗدُ اِنَّا جَعَلْنٰكَ خَلِيْفَةً فِى الْاَرْضِ فَاحْكُمْ بَيْنَ النَّاسِ بِالْحَقِّ وَلَا تَتَّبِعِ الْهَوٰى فَيُضِلَّكَ عَنْ سَبِيْلِ اللّٰهِ‌ ؕ اِنَّ الَّذِيْنَ يَضِلُّوْنَ عَنْ سَبِيْلِ اللّٰهِ لَهُمْ عَذَابٌ شَدِيْدٌۢ بِمَا نَسُوْا يَوْمَ الْحِسَابِ‏
38:26. (நாம் அவரிடம் கூறினோம்:) "தாவூதே! நிச்சயமாக நாம் உம்மை பூமியில் பின்தோன்றலாக ஆக்கினோம்; ஆகவே, மனிதர்களிடையே சத்தியத்தைக் கொண்டு (நீதமாக)த் தீர்ப்புச் செய்யும்; அன்றியும், மனோ இச்சையைப் பின்பற்றாதீர்! (ஏனெனில், அது) உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டும் வழிகெடுத்து விடும்; நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வின் பாதையை விட்டு வழிகெடுகிறார்களோ, அவர்களுக்குக் கேள்விக்கணக்குக் கேட்கப்படும் நாளை (அவர்கள்) மறந்துவிட்டமைக்காக மிகக் கொடிய வேதனையுண்டு."
38:30   وَوَهَبْنَا لِدَاوٗدَ سُلَيْمٰنَ‌ ؕ نِعْمَ الْعَبْدُ‌ ؕ اِنَّـهٗۤ اَوَّابٌ ؕ ‏
38:30. இன்னும், தாவூதுக்கு(ப் புதல்வராக) ஸுலைமானை அன்பளிப்பாக வழங்கினோம்: (அவர்) நல்லடியார்; நிச்சயமாக அவர் (எதிலும் நம்மையே) நோக்குபவர்.