தாகூத்
2:257 اَللّٰهُ وَلِىُّ الَّذِيْنَ اٰمَنُوْا يُخْرِجُهُمْ مِّنَ الظُّلُمٰتِ اِلَى النُّوْرِؕ وَالَّذِيْنَ كَفَرُوْۤا اَوْلِيٰٓــــٴُـهُمُ الطَّاغُوْتُۙ يُخْرِجُوْنَهُمْ مِّنَ النُّوْرِ اِلَى الظُّلُمٰتِؕ اُولٰٓٮِٕكَ اَصْحٰبُ النَّارِۚ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ
2:257. அல்லாஹ்வே நம்பிக்கை கொண்டவர்களின் பாதுகாவலன் (ஆவான்); அவன் அவர்களை இருள்களிலிருந்து வெளிச்சத்தின் பக்கம் கொண்டு வருகின்றான்; ஆனால், நிராகரிப்பவர்களுக்கோ - (வழி கெடுக்கும்) ஷைத்தான்கள் தாம் அவர்களின் பாதுகாவலர்கள்; அவை அவர்களை வெளிச்சத்திலிருந்து, இருள்களின் பக்கம் கொண்டு வருகின்றன; அவர்களே நரகவாசிகள்; அவர்கள் அதில் நிரந்தரமாக இருப்பர்.
4:51 اَلَمْ تَرَ اِلَى الَّذِيْنَ اُوْتُوْا نَصِيْبًا مِّنَ الْكِتٰبِ يُؤْمِنُوْنَ بِالْجِبْتِ وَالطَّاغُوْتِ وَيَقُوْلُوْنَ لِلَّذِيْنَ كَفَرُوْا هٰٓؤُلَۤاءِ اَهْدٰى مِنَ الَّذِيْنَ اٰمَنُوْا سَبِيْلًا
4:51. (நபியே!) வேதத்தில் ஒரு பாகம் கொடுக்கப்பட்டவர்களை நீர் பார்க்கவில்லையா? இவர்கள் சிலைகளையும், ஷைத்தானையும் நம்புகின்றனர்; மேலும், (இணைவைப்போராகிய குறைஷியர்களைச் சுட்டிக்காண்பித்து), "இவர்கள்தாம், நம்பிக்கை கொண்டவர்களைவிட மிகவும் நேரான பாதையில் இருக்கின்றார்கள்" என்று நிராகரிப்பாளர்களுக்குக் கூறுகின்றனர்.
4:60 اَلَمْ تَرَ اِلَى الَّذِيْنَ يَزْعُمُوْنَ اَنَّهُمْ اٰمَنُوْا بِمَاۤ اُنْزِلَ اِلَيْكَ وَمَاۤ اُنْزِلَ مِنْ قَبْلِكَ يُرِيْدُوْنَ اَنْ يَّتَحَاكَمُوْۤا اِلَى الطَّاغُوْتِ وَقَدْ اُمِرُوْۤا اَنْ يَّكْفُرُوْا بِهٖ ؕ وَيُرِيْدُ الشَّيْـطٰنُ اَنْ يُّضِلَّهُمْ ضَلٰلًاۢ بَعِيْدًا
4:60. (நபியே!) உம்மீது இறக்கப்பட்ட (இவ்வேதத்)தையும், உமக்கு முன்னர் இறக்கப்பட்ட (வேதங்கள் அனைத்)தையும் நம்புவதாக எண்ணிக் கொண்டிருப்போரை நீர் பார்க்கவில்லையா? அவர்கள் ஷைத்தானைத் தீர்ப்புக்கூறுபவனாக ஆக்கிக்கொள்ள விரும்புகின்றனர்; (ஆனால்,) அவர்களோ அவனை நிராகரிக்க வேண்டுமென்று கட்டளையிடப்பட்டுள்ளனர்; அந்த ஷைத்தானோ, அவர்களை வெகுதூரமான வழிகேட்டில் தள்ளிவிட விரும்புகிறான்.
5:60 قُلْ هَلْ اُنَـبِّئُكُمْ بِشَرٍّ مِّنْ ذٰ لِكَ مَثُوْبَةً عِنْدَ اللّٰهِ ؕ مَنْ لَّعَنَهُ اللّٰهُ وَغَضِبَ عَلَيْهِ وَجَعَلَ مِنْهُمُ الْقِرَدَةَ وَالْخَـنَازِيْرَ وَعَبَدَ الطَّاغُوْتَ ؕ اُولٰٓٮِٕكَ شَرٌّ مَّكَانًا وَّاَضَلُّ عَنْ سَوَآءِ السَّبِيْلِ
5:60. "அல்லாஹ்விடமிருந்து இதைவிடக் கெட்ட பிரதிபலனை அடைந்தவர்களைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? அல்லாஹ் எவர்களைச் சபித்து இன்னும், அவர்கள் மீது கோபமும் கொண்டு, அவர்களில் சிலரைக் குரங்குகளாகவும், பன்றிகளாகவும் ஆக்கினானோ அவர்களும், ஷைத்தானை வணங்கியவர்களும்தான்; அவர்கள்தாம் தீய இடத்திற்குரியவர்கள்; நேரான வழியிலிருந்தும் தவறியவர்கள்" என்று (நபியே!) நீர் கூறுவீராக!
16:36 وَلَـقَدْ بَعَثْنَا فِىْ كُلِّ اُمَّةٍ رَّسُوْلًا اَنِ اعْبُدُوا اللّٰهَ وَاجْتَنِبُوا الطَّاغُوْتَۚ فَمِنْهُمْ مَّنْ هَدَى اللّٰهُ وَمِنْهُمْ مَّنْ حَقَّتْ عَلَيْهِ الضَّلٰلَةُ ؕ فَسِيْرُوْا فِىْ الْاَرْضِ فَانْظُرُوْا كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُكَذِّبِيْنَ
16:36. மெய்யாக நாம் ஒவ்வொரு சமூகத்தாரிடத்திலும், "அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள்; ஷைத்தான்களைவிட்டும் நீங்கள் விலகிச்செல்லுங்கள்" என்று (போதிக்குமாறு) நம் தூதரை அனுப்பிவைத்தோம்; எனவே, அ(ந்த சமூகத்த)வர்களில் அல்லாஹ் நேர்வழிகாட்டியோரும் இருக்கிறார்கள்; வழிகேடே விதிக்கப்பெற்றோரும் அவர்களில் இருக்கிறார்கள்; ஆகவே, நீங்கள் பூமியில் சுற்றுப்பயணம் செய்து, பொய்யர்களின் முடிவு என்ன ஆயிற்று? என்பதைக் கவனியுங்கள்.
39:17 وَالَّذِيْنَ اجْتَنَـبُـوا الطَّاغُوْتَ اَنْ يَّعْبُدُوْهَا وَاَنَابُوْۤا اِلَى اللّٰهِ لَهُمُ الْبُشْرٰى ۚ فَبَشِّرْ عِبَادِ ۙ
39:17. எவர்கள் ஷைத்தான்களை - அவற்றை வணங்குவதை விட்டும் விலகி, முற்றிலும் அல்லாஹ்வின் பால் முன்னோக்கியிருக்கிறார்களோ, அவர்களுக்குத்தான் நன்மாராயம்; ஆகவே, என்னுடைய அடியார்களுக்கு நன்மாராயம் கூறுவீராக!