தீய - தீயவன் - தீயவர்கள்
2:26 اِنَّ اللّٰهَ لَا يَسْتَحْـىٖۤ اَنْ يَّضْرِبَ مَثَلًا مَّا بَعُوْضَةً فَمَا فَوْقَهَا ؕ فَاَمَّا الَّذِيْنَ اٰمَنُوْا فَيَعْلَمُوْنَ اَنَّهُ الْحَـقُّ مِنْ رَّبِّهِمْۚ وَاَمَّا الَّذِيْنَ ڪَفَرُوْا فَيَقُوْلُوْنَ مَاذَآ اَرَادَ اللّٰهُ بِهٰذَا مَثَلًا ۘ يُضِلُّ بِهٖ ڪَثِيْرًا وَّيَهْدِىْ بِهٖ كَثِيْرًا ؕ وَمَا يُضِلُّ بِهٖۤ اِلَّا الْفٰسِقِيْنَۙ
2:26. நிச்சயமாக அல்லாஹ் கொசுவையோ, அதிலும் (அற்பத்தில்) மேற்பட்டதையோ உதாரணம் கூறுவதில் வெட்கப்படமாட்டான்; நம்பிக்கை கொண்டவர்கள் நிச்சயமாக அது தங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள உண்மை என்பதை அறிவார்கள்; ஆனால், நிராகரித்தவர்களோ "இவ்வித உதாரணத்தின் மூலம் இறைவன் என்ன நாடுகிறான்?" என்று கூறுகிறார்கள்; அவன் இதைக் கொண்டு பலரை வழிகேட்டில் விடுகிறான்; இன்னும், பலரை இதன் மூலம் நேர்வழி பெறச்செய்கிறான்; ஆனால், தீயவர்களைத் தவிர (வேறு யாரையும்), அவன் அதனால் வழிகேட்டில் ஆக்குவதில்லை.
2:169 اِنَّمَا يَاْمُرُكُمْ بِالسُّوْٓءِ وَالْفَحْشَآءِ وَاَنْ تَقُوْلُوْا عَلَى اللّٰهِ مَا لَا تَعْلَمُوْنَ
2:169. நிச்சயமாக அவன் தீயவற்றையும், மானக்கேடானவற்றையும், அல்லாஹ்வைப் பற்றி நீங்கள் அறியாததைக் கூறும்படியும் உங்களை ஏவுகிறான்.
3:82 فَمَنْ تَوَلّٰى بَعْدَ ذٰ لِكَ فَاُولٰٓٮِٕكَ هُمُ الْفٰسِقُوْنَ
3:82. எனவே, இதன் பின்னரும் எவரேனும் புறக்கணித்து விடுவார்களானால் நிச்சயமாக அவர்கள்தாம் தீயவர்கள்.
3:179 مَا كَانَ اللّٰهُ لِيَذَرَ الْمُؤْمِنِيْنَ عَلٰى مَاۤ اَنْـتُمْ عَلَيْهِ حَتّٰى يَمِيْزَ الْخَبِيْثَ مِنَ الطَّيِّبِؕ وَمَا كَانَ اللّٰهُ لِيُطْلِعَكُمْ عَلَى الْغَيْبِ وَ لٰكِنَّ اللّٰهَ يَجْتَبِىْ مِنْ رُّسُلِهٖ مَنْ يَّشَآءُ فَاٰمِنُوْا بِاللّٰهِ وَرُسُلِهٖۚ وَاِنْ تُؤْمِنُوْا وَتَتَّقُوْا فَلَـكُمْ اَجْرٌ عَظِيْمٌ
3:179. (நயவஞ்சகர்களே!) நல்லவரிலிருந்து தீயவரைப் பிரித்தறிவிக்கும்வரை, நீங்கள் எதன் மீது இருக்கிறீர்களோ அதன் மீது நம்பிக்கையாளர்களை அல்லாஹ் விட்டுவைப்பவனாக இல்லை; இன்னும், அல்லாஹ் உங்களுக்கு மறைவானவற்றை அறிவித்துவைப்பவனாகவும் இல்லை; ஏனெனில், (இவ்வாறு அறிவிப்பதற்கு) அல்லாஹ் தான் நாடியவர்களைத் தன் தூதர்களிலிருந்து தேர்ந்தெடுக்கிறான்; ஆகவே, அல்லாஹ்வின் மீதும், அவனது தூதர்கள் மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள்; நீங்கள் நம்பிக்கை கொண்டு (அல்லாஹ்வை) அஞ்சுவீர்களாயின் உங்களுக்கு மகத்தான (நற்)கூலியுண்டு.
4:38 وَالَّذِيْنَ يُنْفِقُوْنَ اَمْوَالَهُمْ رِئَآءَ النَّاسِ وَلَا يُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَلَا بِالْيَوْمِ الْاٰخِرِؕ وَمَنْ يَّكُنِ الشَّيْطٰنُ لَهٗ قَرِيْنًا فَسَآءَ قَرِيْنًا
4:38. இன்னும், எவர்கள் (மற்ற) மனிதர்களுக்குக் காட்டுவதற்காகத் தங்கள் செல்வங்களைச் செலவு செய்வதுடன், அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பாதிருக்கின்றனரோ (அவர்களுக்குச் ஷைத்தானே கூட்டாளியாவான்); எவனுக்குச் ஷைத்தான் கூட்டாளியாக இருக்கின்றானோ, அவன் கூட்டாளியால் மிகக் கெட்டவன் (என்பதை அறிய வேண்டாமா?)
12:77 قَالُوْۤا اِنْ يَّسْرِقْ فَقَدْ سَرَقَ اَخٌ لَّهٗ مِنْ قَبْلُ ۚ فَاَسَرَّهَا يُوْسُفُ فِىْ نَفْسِهٖ وَلَمْ يُبْدِهَا لَهُمْ ۚ قَالَ اَنْـتُمْ شَرٌّ مَّكَانًا ۚ وَاللّٰهُ اَعْلَمُ بِمَا تَصِفُوْنَ
12:77. (அப்போது) அவர்கள் இவன் (அதைத்) திருடியிருந்தால் இவனுடைய சகோதரன் (யூஸுஃபும்) முன்னால் நிச்சயமாகத் திருடியிருக்கிறான் என்று (தங்களுக்குள்) கூறிக்கொண்டார்கள்; (இச்செய்திகளைச் செவியேற்றும்) அதனை அவர்களிடம் வெளியிடாது, யூஸுஃப் தம் மனதுக்குள் மறைத்து வைத்துக்கொண்டார். அவர் "நீங்கள் தரத்தில் இன்னும் தீயவர்கள், (இவர் சகோதரரும் திருடியிருப்பார் என்று) நீங்கள் வர்ணிக்கிறீர்களே அதை அல்லாஹ் நன்றாக அறிவான்" என்று (தமக்குள்ளே) சொல்லிக் கொண்டார்.
24:4 وَالَّذِيْنَ يَرْمُوْنَ الْمُحْصَنٰتِ ثُمَّ لَمْ يَاْتُوْا بِاَرْبَعَةِ شُهَدَآءَ فَاجْلِدُوْهُمْ ثَمٰنِيْنَ جَلْدَةً وَّلَا تَقْبَلُوْا لَهُمْ شَهَادَةً اَبَدًا ۚ وَاُولٰٓٮِٕكَ هُمُ الْفٰسِقُوْنَ ۙ
24:4. எவர்கள் கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி (அதை நிரூபிக்க) நான்கு சாட்சிகளைக் கொண்டுவரவில்லையோ, அவர்களை நீங்கள் எண்பது கசையடி அடியுங்கள்; பின்னர், அவர்களது சாட்சியத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாதீர்கள்; நிச்சயமாக அவர்கள்தான் தீயவர்கள்.
38:55 هٰذَا ؕ وَاِنَّ لِلطّٰغِيْنَ لَشَرَّ مَاٰبٍ ۙ
38:55. இது (நல்லோருக்காக); ஆனால், நிச்சயமாகத் தீயவர்களுக்கு மிகக் கெட்ட தங்குமிடம் இருக்கிறது.
46:35 فَاصْبِرْ كَمَا صَبَرَ اُولُوا الْعَزْمِ مِنَ الرُّسُلِ وَلَا تَسْتَعْجِلْ لَّهُمْؕ كَاَنَّهُمْ يَوْمَ يَرَوْنَ مَا يُوْعَدُوْنَۙ لَمْ يَلْبَثُوْۤا اِلَّا سَاعَةً مِّنْ نَّهَارٍ ؕ بَلٰغٌ ۚ فَهَلْ يُهْلَكُ اِلَّا الْقَوْمُ الْفٰسِقُوْنَ
46:35. (நபியே!) நம் தூதர்களில் உறுதிமிக்கவர்கள் பொறுமையாக இருந்தது போல், நீரும் பொறுமையுடன் இருப்பீராக! இவர்களுக்காக (வேதனையை வரவழைக்க) அவசரப்படாதீர்! இவர்களுக்கு வாக்களிக்கப்பட்டதை இவர்கள் பார்க்கும் நாளில், இவர்கள் (இப்பூமியில்) ஒரு நாளில் ஒரு நாழிகைக்கு மேல் இருக்கவில்லை (என்று எண்ணுவார்கள்). (இது) தெளிவாக அறிவிக்க வேண்டியதே! எனவே, வரம்பு மீறிய கூட்டத்தார் தவிர (வேறு எவரும்) அழிக்கப்படுவார்களா?
80:42 اُولٰٓٮِٕكَ هُمُ الْكَفَرَةُ الْفَجَرَةُ
80:42. அவர்கள்தாம் நிராகரித்தவர்கள்; தீயவர்கள்.