துளி
18:37 قَالَ لَهٗ صَاحِبُهٗ وَهُوَ يُحَاوِرُهٗۤ اَكَفَرْتَ بِالَّذِىْ خَلَقَكَ مِنْ تُرَابٍ ثُمَّ مِنْ نُّـطْفَةٍ ثُمَّ سَوّٰٮكَ رَجُلًاؕ
18:37. அவனுடைய தோழர் அவனுடன் (இதுபற்றித்) தர்க்கித்தவராக, "உன்னை மண்ணிலிருந்தும், பின் ஒரு துளி இந்திரியத்திலிருந்தும் படைத்து, பின்பு உன்னைச் சரியான மனிதனாக ஆக்கினானே அவனையா நீ நிராகரிக்கின்றாய்?" என்று அவனிடம் கேட்டார்.
23:13 ثُمَّ جَعَلْنٰهُ نُطْفَةً فِىْ قَرَارٍ مَّكِيْنٍ
23:13. பின்னர், நாம் (மனிதனைப் படைப்பதற்காக) அவனை ஒரு பாதுகாப்பான இடத்தில் இந்திரியத் துளியாக வைத்தோம்.
23:14 ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً فَخَلَقْنَا الْمُضْغَةَ عِظٰمًا فَكَسَوْنَا الْعِظٰمَ لَحْمًا ثُمَّ اَنْشَاْنٰهُ خَلْقًا اٰخَرَ ؕ فَتَبٰـرَكَ اللّٰهُ اَحْسَنُ الْخٰلِقِيْنَ ؕ
23:14. பின்னர், அந்த இந்திரியத் துளியை இரத்தக்கட்டியாகப் படைத்தோம்; பின்னர், அந்த இரத்தக் கட்டியை ஒரு சதைத்துண்டாகப் படைத்தோம்; பின்னர், அந்தச் சதைத் துண்டை எலும்புகளாகவும் ஆக்கினோம்; பின்னர், அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம்; பின்னர், நாம் அதனை வேறொரு படைப்பாக (மனிதனாக)ச் செய்தோம்; எனவே, படைப்பாளர்களில் மிக்க அழகானவனான அல்லாஹ் பெரும்பாக்கியமுடையவன்.
32:8 ثُمَّ جَعَلَ نَسْلَهٗ مِنْ سُلٰلَةٍ مِّنْ مَّآءٍ مَّهِيْنٍۚ
32:8. பிறகு (நுழையும்) அற்பமான நீரின் (இந்திரிய) சத்திலிருந்து, அவனுடைய சந்ததியை உண்டாக்கினான்.
35:11 وَاللّٰهُ خَلَقَكُمْ مِّنْ تُرَابٍ ثُمَّ مِنْ نُّطْفَةٍ ثُمَّ جَعَلَـكُمْ اَزْوَاجًا ؕ وَمَا تَحْمِلُ مِنْ اُنْثٰى وَلَا تَضَعُ اِلَّا بِعِلْمِهؕ وَمَا يُعَمَّرُ مِنْ مُّعَمَّرٍ وَّلَا يُنْقَصُ مِنْ عُمُرِهٖۤ اِلَّا فِىْ كِتٰبٍؕ اِنَّ ذٰلِكَ عَلَى اللّٰهِ يَسِيْرٌ
35:11. அன்றியும், அல்லாஹ்தான் உங்களை (முதலில்) மண்ணால் படைத்தான்; பின்னர், ஒரு துளி இந்திரியத்திலிருந்து - பின் உங்களை (ஆண், பெண்) ஜோடியாக அவன் ஆக்கினான்; அவன் அறிவைக் கொண்டேயல்லாமல் எந்தப் பெண்ணும் கர்ப்பம் தரிப்பதுமில்லை; பிரசவிப்பதுமில்லை; இவ்வாறே வயதானவரின் வயது அதிகமாக்கப்படுவதும், அவருடைய வயதிலிருந்து குறைக்கப்படுவதும் (லவ்ஹுல் மஹ்ஃபூள் என்னும்) ஏட்டில் இல்லாமலில்லை; நிச்சயமாக இது, அல்லாஹ்வுக்கு எளிதானதேயாகும்.
36:77 اَوَلَمْ يَرَ الْاِنْسَانُ اَنَّا خَلَقْنٰهُ مِنْ نُّطْفَةٍ فَاِذَا هُوَ خَصِيْمٌ مُّبِيْنٌ
36:77. மனிதனை ஒரு துளி இந்திரியத்திலிருந்து நாமே நிச்சயமாகப் படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில்லையா? அவ்வாறிருந்தும், அவன் (நமக்கு) வெளிப்படையான தர்க்கவாதியாகிவிடுகிறான்.
53:45 وَاَنَّهٗ خَلَقَ الزَّوْجَيْنِ الذَّكَرَ وَالْاُنْثٰىۙ
53:45. இன்னும், நிச்சயமாக அவனே ஆண், பெண் என்னும் ஜோடிகளைப் படைத்தான்.