துறவி
5:82   لَـتَجِدَنَّ اَشَدَّ النَّاسِ عَدَاوَةً لِّـلَّذِيْنَ اٰمَنُوا الْيَهُوْدَ وَالَّذِيْنَ اَشْرَكُوْا‌ ۚ وَلَـتَجِدَنَّ اَ قْرَبَهُمْ مَّوَدَّةً لِّـلَّذِيْنَ اٰمَنُوا الَّذِيْنَ قَالُوْۤا اِنَّا نَصٰرٰى‌ ؕ ذٰ لِكَ بِاَنَّ مِنْهُمْ قِسِّيْسِيْنَ وَرُهْبَانًا وَّاَنَّهُمْ لَا يَسْتَكْبِرُوْنَ‏
5:82. நம்பிக்கை கொண்டோருக்கு மனிதர்களிலேயே கடுமையான பகைவர்களாக யூதர்களையும், இணைவைப்பவர்களையும் நிச்சயமாக (நபியே!) நீர் காண்பீர்; “நிச்சயமாக நாங்கள் கிறிஸ்தவர்களாக இருக்கின்றோம்” என்று சொல்பவர்களை, நம்பிக்கையாளர்களுக்கு நேசத்தால் (மனிதர்களாகிய) அவர்களில் மிகவும் நெருங்கியவர்களாக (நபியே!) நீர் காண்பீர்; அது (ஏனென்றால்), அவர்களில் கற்றறிந்த குருமார்களும், துறவிகளும் இருக்கின்றனர்; மேலும், அவர்கள் இறுமாப்புக் கொள்வதுமில்லை என்பதினாலாகும்.
57:27   ثُمَّ قَفَّيْنَا عَلٰٓى اٰثَارِهِمْ بِرُسُلِنَا وَقَفَّيْنَا بِعِيْسَى ابْنِ مَرْيَمَ وَاٰتَيْنٰهُ الْاِنْجِيْلَ ۙ وَجَعَلْنَا فِىْ قُلُوْبِ الَّذِيْنَ اتَّبَعُوْهُ رَاْفَةً وَّرَحْمَةً  ؕ وَرَهْبَانِيَّةَ اۨبْتَدَعُوْهَا مَا كَتَبْنٰهَا عَلَيْهِمْ اِلَّا ابْتِغَآءَ رِضْوَانِ اللّٰهِ فَمَا رَعَوْهَا حَقَّ رِعَايَتِهَا‌ ۚ فَاٰتَيْنَا الَّذِيْنَ اٰمَنُوْا مِنْهُمْ اَجْرَهُمْ‌ۚ وَكَثِيْرٌ مِّنْهُمْ فٰسِقُوْنَ‏
57:27. பின்னர், அவர்களுடைய (அடிச்)சுவடுகளின் மீது (மற்றைய) நம் தூதர்களைத் தொடரச் செய்தோம்; அவ்வாறே மர்யமின் குமாரர் ஈஸாவை (தூதராக அவர்களை)த் தொடரச்செய்து, அவருக்கு இன்ஜீலையும் கொடுத்தோம்; அன்றியும், அவரைப் பின்பற்றியவர்களின் இதயங்களில் இரக்கத்தையும் கிருபையையும் உண்டாக்கினோம்; ஆனால், அவர்கள் தாங்களே புதிதாக உண்டாக்கிக்கொண்ட துறவறத்தை நாம் அவர்கள்மீது விதிக்கவில்லை; அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைய வேண்டியேயன்றி (அவர்களே அதனை உண்டு பண்ணிக்கொண்டார்கள்); ஆனால், அதைப் பேணுகிற அளவுக்கு அவர்கள் அதைச் சரிவரப் பேணவில்லை; அப்பால், அவர்களில் நம்பிக்கை கொண்டவர்களுக்கு அவர்களுடைய (நற்) கூலியை நாம் வழங்கினோம்; எனினும், அவர்களில் பெரும்பாலோர் பாவிகளாகவே இருக்கின்றனர்.