துன்பம்
2:185   شَهْرُ رَمَضَانَ الَّذِىْٓ اُنْزِلَ فِيْهِ الْقُرْاٰنُ هُدًى لِّلنَّاسِ وَ بَيِّنٰتٍ مِّنَ الْهُدٰى وَالْفُرْقَانِۚ فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَـصُمْهُ ؕ وَمَنْ کَانَ مَرِيْضًا اَوْ عَلٰى سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ اَيَّامٍ اُخَرَؕ يُرِيْدُ اللّٰهُ بِکُمُ الْيُسْرَ وَلَا يُرِيْدُ بِکُمُ الْعُسْرَ وَلِتُکْمِلُوا الْعِدَّةَ وَلِتُکَبِّرُوا اللّٰهَ عَلٰى مَا هَدٰٮكُمْ وَلَعَلَّکُمْ تَشْكُرُوْنَ‏
2:185. ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும், நேரான வழியைத் தெளிவாக்கக்கூடியதாகவும், (நன்மை-தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான குர்ஆன் இறக்கியருளப்பட்டது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் நோன்பு நோற்கவேண்டும். எனினும், எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ, (அவர் அக்குறிப்பிட்ட நாட்களில் நோன்பை) மற்ற நாட்களில் கணக்கி(ட்டு நோற்றுவி)டவும். அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறான்; உங்களுக்குச் சிரமமானதை அவன் நாடவில்லை. (நோன்பின்) எண்ணிக்கையை நீங்கள் பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வை நீங்கள் பெருமைப்படுத்துவதற்காகவும், நீங்கள் நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்).
2:280   وَاِنْ كَانَ ذُوْ عُسْرَةٍ فَنَظِرَةٌ اِلٰى مَيْسَرَةٍ ‌ؕ وَاَنْ تَصَدَّقُوْا خَيْرٌ لَّـكُمْ‌ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ‏
2:280. அன்றியும், (கடன்பட்டவர் அதனைத் தீர்க்க இயலாது) சிரமப்படுபவராக இருந்தால், (அவருக்கு) வசதி வரும் வரை அவகாசம் கொடுக்கப்பட வேண்டும்; இன்னும், நீங்கள் அறிவீர்களானால் அதைத் தர்மமாக்கிவிடுவது உங்களுக்கு மிகவும் சிறந்ததாகும்.
9:117   لَـقَدْ تَّابَ اللّٰهُ عَلَى النَّبِىِّ وَالْمُهٰجِرِيْنَ وَالْاَنْصَارِ الَّذِيْنَ اتَّبَعُوْهُ فِىْ سَاعَةِ الْعُسْرَةِ مِنْۢ بَعْدِ مَا كَادَ يَزِيْغُ قُلُوْبُ فَرِيْقٍ مِّنْهُمْ ثُمَّ تَابَ عَلَيْهِمْ‌ؕ اِنَّهٗ بِهِمْ رَءُوْفٌ رَّحِيْمٌۙ ‏
9:117. நிச்சயமாக அல்லாஹ் நபியையும், முஹாஜிர்களையும், அன்சாரிகளையும் மன்னித்தான்; அவர்களில் ஒரு பிரிவினருடைய இதயங்கள் சறுகிவிடுவதற்கு நெருங்கிய பின்னர், கஷ்டமான காலத்தில் (நமது நபியாகிய) அவரை அவர்கள் பின்பற்றினர்; பின்னரும், அவர்களை மன்னித்(து அருள் புரிந்)தான்; நிச்சயமாக அவன் அவர்கள் மீது மிக்க கருணையும், கிருபையும் உடையவனாக இருக்கின்றான்.
18:73   قَالَ لَا تُؤَاخِذْنِىْ بِمَا نَسِيْتُ وَلَا تُرْهِقْنِىْ مِنْ اَمْرِىْ عُسْرًا‏
18:73. "நான் மறந்துவிட்டதைப்பற்றி நீங்கள் என்னைக் (குற்றம்) பிடிக்கவேண்டாம்; இன்னும், என் காரியத்தில் எனக்குச் சிரமத்தையும் நீங்கள் ஏற்படுத்திவிடாதீர்கள்" என்று (மூஸா) கூறினார்.
25:26   اَلْمُلْكُ يَوْمَٮِٕذِ اۨلْحَـقُّ لِلرَّحْمٰنِ‌ؕ وَكَانَ يَوْمًا عَلَى الْكٰفِرِيْنَ عَسِيْرًا‏
25:26. அந்நாளில் உண்மையான ஆட்சி அளவற்ற அருளாளனுக்குத்தான்; மேலும், நிராகரிப்பாளர்களுக்கு அது கடுமையான நாளாகவும் இருக்கும்.
54:8   مُّهْطِعِيْنَ اِلَى الدَّاعِ‌ؕ يَقُوْلُ الْكٰفِرُوْنَ هٰذَا يَوْمٌ عَسِرٌ‏
54:8. அழைப்பவர் பால் விரைந்தவர்களாயிருக்கும் நிலையில் (வெளியேறுவார்கள்): 'இது மிகவும் கஷ்டமான நாள்' என்றும் நிராகரிப்பாளர்கள் கூறுவார்கள்.
65:7   لِيُنْفِقْ ذُوْ سَعَةٍ مِّنْ سَعَتِهٖ‌ؕ وَمَنْ قُدِرَ عَلَيْهِ رِزْقُهٗ فَلْيُنْفِقْ مِمَّاۤ اٰتٰٮهُ اللّٰهُ‌ؕ لَا يُكَلِّفُ اللّٰهُ نَفْسًا اِلَّا مَاۤ اٰتٰٮهَا‌ؕ سَيَجْعَلُ اللّٰهُ بَعْدَ عُسْرٍ يُّسْرًا‏
65:7. தக்க வசதியுடையவர்கள், தம் வசதிக்கேற்ப (இவ்விஷயத்தில்) செலவுசெய்து கொள்ளவும்; ஆனால், எவர்மீது அவருடைய உணவு (வசதி) நெருக்கடியாக்கப்பட்டுள்ளதோ, அவர் தமக்கு அல்லாஹ் கொடுத்ததிலிருந்து செலவுசெய்து கொள்ளவும்; எந்த ஆத்மாவையும் அல்லாஹ் அதற்குக் கொடுத்திருப்பதேயல்லாமல் (மிகையாகச் செலவு செய்யும்படி) சிரமப்படுத்தமாட்டான்; கஷ்டத்திற்குப் பின்னர், அல்லாஹ் அதி சீக்கிரத்தில் இலகுவை (சுகத்தை) உண்டாக்குவான்.
74:9   فَذٰلِكَ يَوْمَٮِٕذٍ يَّوْمٌ عَسِيْرٌۙ‏
74:9. அந்நாள் மிகக் கடினமான நாள் ஆகும்.
92:10   فَسَنُيَسِّرُهٗ لِلْعُسْرٰىؕ‏
92:10. அப்போது அவனுக்குக் கஷ்டத்திற்கு (நரகவழிக்கு) எளிதாக்கி வைப்போம்.
94:5   فَاِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا ۙ‏
94:5. ஆதலின், நிச்சயமாகச் சிரமத்துடன் எளியது இருக்கிறது.
94:6   اِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا ؕ‏
94:6. நிச்சயமாக சிரமத்துடன் எளிது இருக்கிறது.