பத்ரு யுத்தம்
3:13 قَدْ كَانَ لَـكُمْ اٰيَةٌ فِىْ فِئَتَيْنِ الْتَقَتَا ؕ فِئَةٌ تُقَاتِلُ فِىْ سَبِيْلِ اللّٰهِ وَاُخْرٰى كَافِرَةٌ يَّرَوْنَهُمْ مِّثْلَيْهِمْ رَاْىَ الْعَيْنِؕ وَاللّٰهُ يُؤَيِّدُ بِنَصْرِهٖ مَنْ يَّشَآءُ ؕ اِنَّ فِىْ ذٰ لِكَ لَعِبْرَةً لِّاُولِى الْاَبْصَارِ
3:13. (பத்ரு களத்தில்) சந்தித்த இரு சேனைகளிலும் உங்களுக்கு ஓர் அத்தாட்சி நிச்சயமாக உள்ளது; ஒரு சேனை அல்லாஹ்வின் பாதையில் போரிட்டது; பிறிதொன்று நிராகரிக்கக்கூடியதாக இருந்தது; (நிராகரிப்போர்) தம்மைப்போல், (முஸ்லிம்களான) அவர்களை இரு மடங்காகத் தம் கண்களால் கண்டனர்; இன்னும், அல்லாஹ் தான் நாடியவர்களுக்குத் தன் உதவியைக்கொண்டு பலப்படுத்துகிறான்; நிச்சயமாக (அகப்) பார்வையுடையோருக்கு இதில் திட்டமாக ஒரு படிப்பினை இருக்கிறது.
3:123 وَلَقَدْ نَصَرَكُمُ اللّٰهُ بِبَدْرٍ وَّاَنْـتُمْ اَذِلَّةٌ ۚ فَاتَّقُوا اللّٰهَ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ
3:123. பத்(ருப்போ)ரில் நீங்கள் (மிகவும் சக்தி) குறைந்தவர்களாக இருந்தபோது, அல்லாஹ் உங்களுக்கு உதவிபுரிந்தான்; ஆகவே, நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
3:140 اِنْ يَّمْسَسْكُمْ قَرْحٌ فَقَدْ مَسَّ الْقَوْمَ قَرْحٌ مِّثْلُهٗ ؕ وَتِلْكَ الْاَيَّامُ نُدَاوِلُهَا بَيْنَ النَّاسِۚ وَلِيَـعْلَمَ اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا وَيَتَّخِذَ مِنْكُمْ شُهَدَآءَؕ وَاللّٰهُ لَا يُحِبُّ الظّٰلِمِيْنَۙ
3:140. (உஹுதுப் போரில்) உங்களுக்கு ஒரு காயம் ஏற்பட்டது என்றால், அதேபோன்று அக்கூட்டத்தினருக்கும் (பத்ருப் போரில்) காயம் ஏற்பட்டுள்ளது; இத்தகைய (சோதனைக்) காலங்களை மனிதர்களிடையே நாமே மாறிமாறி வரச்செய்கின்றோம்; இதற்குக் காரணம், நம்பிக்கை கொண்டோரை அல்லாஹ் அறிவதற்கும், உங்களில் உயிர்த்தியாகம் செய்வோரை உருவாக்குவதற்குமே ஆகும்; இன்னும், அல்லாஹ் அநியாயம் செய்வோரை நேசிப்பதில்லை.
8:5 كَمَاۤ اَخْرَجَكَ رَبُّكَ مِنْۢ بَيْتِكَ بِالْحَـقِّ وَاِنَّ فَرِيْقًا مِّنَ الْمُؤْمِنِيْنَ لَـكٰرِهُوْنَۙ
8:5. (நபியே!) உம் இறைவன் உம்மை உம் வீட்டை விட்டு சத்தியத்தைக் கொண்டு (பத்ருக்களம் நோக்கி) வெளியேற்றியபோது, நம்பிக்கையாளர்களிலிருந்து ஒரு பிரிவினர் (உம்முடன் வர இணக்கமில்லாது) வெறுத்துக் கொண்டிருந்தது போல்-
8:42 اِذْ اَنْتُمْ بِالْعُدْوَةِ الدُّنْيَا وَهُمْ بِالْعُدْوَةِ الْقُصْوٰى وَ الرَّكْبُ اَسْفَلَ مِنْكُمْؕ وَلَوْ تَوَاعَدْتُّمْ لَاخْتَلَفْتُمْ فِى الْمِيْعٰدِۙ وَلٰـكِنْ لِّيَقْضِىَ اللّٰهُ اَمْرًا كَانَ مَفْعُوْلًا ۙ لِّيَهْلِكَ مَنْ هَلَكَ عَنْۢ بَيِّنَةٍ وَّيَحْيٰى مَنْ حَىَّ عَنْۢ بَيِّنَةٍ ؕ وَاِنَّ اللّٰهَ لَسَمِيْعٌ عَلِيْمٌۙ
8:42. (பத்ருப் போர்க்களத்தில் மதீனாவுக்கு) சமீபத்திலுள்ள பள்ளத்தாக்கில் நீங்களும், (எதிரிகளான) அவர்கள் தூரமான பள்ளத்தாக்கிலும், (குறைஷி வியாபாரிகளாகிய) வாகனக்காரர்கள் உங்கள் கீழ்ப்புறத்திலும், இருந்த (நேரத்தை நினைத்துப்பாருங்கள்); நீங்கள் ஒருவருக்கொருவர் (சந்திக்கும் காலம், இடம் பற்றி) வாக்குறுதி செய்திருந்தால் அவ்வாக்குறுதியில் நிச்சயமாக கருத்து வேற்றுமை கொண்டிருப்பீர்கள்; ஆனால், செய்யப்பட வேண்டிய காரியத்தை அல்லாஹ் நிறைவேற்றுவதற்காகவும், அழிந்தவர் தக்க காரணத்துடன் அழிவதற்காகவும், வாழ்பவர் தக்க காரணத்துடன் வாழ்வதற்காகவும் (இவ்வாறு அவன் செய்தான்); நிச்சயமாக அல்லாஹ் செவியேற்பவனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றான்.