பரிந்துரை
2:48 وَاتَّقُوْا يَوْمًا لَّا تَجْزِىْ نَفْسٌ عَنْ نَّفْسٍ شَيْــٴًـــا وَّلَا يُقْبَلُ مِنْهَا شَفَاعَةٌ وَّلَا يُؤْخَذُ مِنْهَا عَدْلٌ وَّلَا هُمْ يُنْصَرُوْنَ
2:48. இன்னும், ஓர் ஆத்மா மற்றொரு ஆத்மாவிற்குச் சிறிதும் பயன்பட முடியாத (அந்த) ஒரு நாளை நீங்கள் அஞ்சுவீர்களாக! (அந்த நாளில்) எந்தப் பரிந்துரையும் அதற்காக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது; அதற்காக எந்த ஈடும் பெற்றுக்கொள்ளப்படமாட்டாது; அன்றியும், அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.
2:123 وَاتَّقُوْا يَوْمًا لَّا تَجْزِىْ نَفْسٌ عَنْ نَّفْسٍ شَيْئًا وَّلَا يُقْبَلُ مِنْهَا عَدْلٌ وَّلَا تَنْفَعُهَا شَفَاعَةٌ وَّلَا هُمْ يُنْصَرُوْنَ
2:123. இன்னும், (வரப்போகும்) அந்நாளிலிருந்து உங்களைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள்; அன்று, ஓர் ஆத்மா பிறிதோர் ஆத்மாவுக்கு எவ்விதப் பலனுமளிக்காது; அதனிடமிருந்து (அதன் பாவங்களுக்குப் பரிகாரமாக) எந்த நஷ்டஈடும் ஒப்புக்கொள்ளப்படமாட்டாது; எந்தப் பரிந்துரையும் அதற்குப் பலனளிக்காது; அவர்கள் (எவர் மூலமாகவும் எந்த) உதவியும் செய்யப்பட மாட்டார்கள்.
2:254 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اَنْفِقُوْا مِمَّا رَزَقْنٰكُمْ مِّنْ قَبْلِ اَنْ يَّاْتِىَ يَوْمٌ لَّا بَيْعٌ فِيْهِ وَلَا خُلَّةٌ وَّلَا شَفَاعَةٌ ؕ وَالْكٰفِرُوْنَ هُمُ الظّٰلِمُوْنَ
2:254. நம்பிக்கை கொண்டோரே! பேரமும், நட்பும், பரிந்துரையும் இல்லாத அந்த (இறுதித் தீர்ப்பு) நாள் வருவதற்கு முன்னர், நாம் உங்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழிகளில்) செலவு செய்யுங்கள்; இன்னும், நிராகரிப்பாளர்கள் - அவர்கள்தாம் அநியாயக்காரர்கள்.
4:85 مَنْ يَّشْفَعْ شَفَاعَةً حَسَنَةً يَّكُنْ لَّهٗ نَصِيْبٌ مِّنْهَا ۚ وَمَنْ يَّشْفَعْ شَفَاعَةً سَيِّئَةً يَّكُنْ لَّهٗ كِفْلٌ مِّنْهَا ؕ وَكَانَ اللّٰهُ عَلٰى كُلِّ شَىْءٍ مُّقِيْتًا
4:85. எவரேனும் ஒரு நன்மைக்குப் பரிந்துரை செய்தால், அதில் ஒரு பாகம் அவருக்கும் உண்டு; (அவ்வாறே) எவரேனும் ஒரு தீமைக்குப் பரிந்துரை செய்தால், அதிலிருந்து அவருக்கும் ஒரு பாகமுண்டு; அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் கண்காணிப்பவனாக இருக்கின்றான்.
6:70 وَذَرِ الَّذِيْنَ اتَّخَذُوْا دِيْنَهُمْ لَعِبًا وَّلَهْوًا وَّغَرَّتْهُمُ الْحَيٰوةُ الدُّنْيَا وَ ذَكِّرْ بِهٖۤ اَنْ تُبْسَلَ نَفْسٌ ۢ بِمَا كَسَبَتْۖ لَـيْسَ لَهَا مِنْ دُوْنِ اللّٰهِ وَلِىٌّ وَّلَا شَفِيْعٌ ۚ وَاِنْ تَعْدِلْ كُلَّ عَدْلٍ لَّا يُؤْخَذْ مِنْهَا ؕ اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ اُبْسِلُوْا بِمَا كَسَبُوْا ۚ لَهُمْ شَرَابٌ مِّنْ حَمِيْمٍ وَّعَذَابٌ اَ لِيْمٌۢ بِمَا كَانُوْا يَكْفُرُوْنَ
6:70. (நபியே!) யார் தங்கள் மார்க்கத்தை விளையாட்டாகவும், வெறும் வேடிக்கையாகவும் எடுத்துக்கொண்டார்களோ; இன்னும், யாரை இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றிவிட்டதோ அவர்களை விட்டுவிடும்; எனினும், ஒவ்வொரு ஆத்மாவும் அது சம்பாதித்துக்கொண்ட (தீய)தின் காரணமாக (வேதனையினால்) பிடிக்கப்படாமல் இருப்பதற்காக, நீர் (குர்ஆனாகிய) இதன் மூலம் அறிவுரை கூறுவீராக! (அந்நாளில்) அதற்கு அல்லாஹ்வைத் தவிர வேறு பாதுகாவலரோ, பரிந்து பேசுபவரோ இல்லை; இன்னும், (தான் செய்த பாவத்திற்கு) ஈடாக அது (தன்னால் இயன்ற) அத்தனையும் கொடுத்தாலும், அதனிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட மாட்டாது. அத்தகையோர் - அவர்கள் தாங்கள் சம்பாதித்தவைகளின் காரணமாக தண்டனையில் பிடிக்கப்பட்டுவிட்டனர். அவர்கள் நிராகரித்துக்கொண்டிருந்த காரணத்தால் அவர்களுக்குக் கொதிக்கும் பானமும், துன்புறுத்தும் வேதனையுமுண்டு.
6:94 وَلَقَدْ جِئْتُمُوْنَا فُرَادٰى كَمَا خَلَقْنٰكُمْ اَوَّلَ مَرَّةٍ وَّتَرَكْتُمْ مَّا خَوَّلْنٰكُمْ وَرَآءَ ظُهُوْرِكُمْۚ وَمَا نَرٰى مَعَكُمْ شُفَعَآءَكُمُ الَّذِيْنَ زَعَمْتُمْ اَنَّهُمْ فِيْكُمْ شُرَكٰٓؤُا ؕ لَقَدْ تَّقَطَّعَ بَيْنَكُمْ وَضَلَّ عَنْكُمْ مَّا كُنْتُمْ تَزْعُمُوْنَ
6:94. அன்றியும், (மறுமையில் அல்லாஹ் இவர்களை நோக்கி), "நாம் உங்களை முதல் முறையாகப் படைத்தோமே அதுபோன்று, நீங்கள் (எதுவும் இல்லாமல்) தனியே எம்மிடம் வந்துவிட்டீர்கள்; இன்னும், நாம் உங்களுக்கு அளித்தவற்றையெல்லாம் உங்கள் முதுகுகளுக்குப் பின்னால் விட்டுவிட்டீர்கள்; நிச்சயமாக எவர்கள் உங்களில் கூட்டாளிகள் என்று எண்ணிக் கொண்டிருந்தீர்களோ, அத்தகைய உங்களுடைய பரிந்துரையாளர்களை உங்களுடன் நாம் காணவில்லையே? உங்களுக்கிடையே (உறவுகள்) முறிந்துவிட்டன; இன்னும், நீங்கள் கற்பனை செய்துகொண்டிருந்தவை உங்களைவிட்டும் மறைந்துவிட்டன" (என்று கூறுவான்).
7:53 هَلْ يَنْظُرُوْنَ اِلَّا تَاْوِيْلَهٗؕ يَوْمَ يَاْتِىْ تَاْوِيْلُهٗ يَقُوْلُ الَّذِيْنَ نَسُوْهُ مِنْ قَبْلُ قَدْ جَآءَتْ رُسُلُ رَبِّنَا بِالْحَـقِّۚ فَهَلْ لَّـنَا مِنْ شُفَعَآءَ فَيَشْفَعُوْا لَـنَاۤ اَوْ نُرَدُّ فَنَعْمَلَ غَيْرَ الَّذِىْ كُنَّا نَـعْمَلُؕ قَدْ خَسِرُوْۤا اَنْفُسَهُمْ وَضَلَّ عَنْهُمْ مَّا كَانُوْا يَفْتَرُوْنَ
7:53. இவர்கள் (தங்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டு வந்த) அதன் முடிவைத் தவிர (வேறு எதையும்) எதிர்பார்க்கிறார்களா? அதன் முடிவு (வெளிப்பட்டு) வரும் நாளில், இதற்கு முன் அதனை (முற்றிலும்) மறந்திருந்தவர்கள், "நிச்சயமாக எங்கள் இறைவனின் தூதர்கள் சத்தியத்தையே கொண்டு வந்தனர்: எங்களுக்குப் பரிந்து பேசக்கூடியவர்கள் எவரும் இருக்கின்றனரா? அவ்வாறாயின், அவர்கள் எங்களுக்காகப் பரிந்து பேசட்டும்; அல்லது நாங்கள் (உலகத்திற்குத்) திருப்பி அனுப்பப்படுவோமா? அப்படியாயின், நாங்கள் (முன்) செய்து கொண்டிருந்தோமே அது அல்லாத (நன்மையான)தைச் செய்வோம்!" என்று கூறுவார்கள். நிச்சயமாக அவர்கள் தமக்குத் தாமே நஷ்டத்தை ஏற்படுத்திக் கொண்டார்கள்: அவர்கள் (பொய்யாகக்) கற்பனை செய்து கொண்டிருந்தவையும் அவர்களை விட்டும் மறைந்துவிடும்.
10:3 اِنَّ رَبَّكُمُ اللّٰهُ الَّذِىْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ فِىْ سِتَّةِ اَيَّامٍ ثُمَّ اسْتَوٰى عَلَى الْعَرْشِ يُدَبِّرُ الْاَمْرَؕ مَا مِنْ شَفِيْعٍ اِلَّا مِنْۢ بَعْدِ اِذْنِهٖ ؕ ذٰ لِكُمُ اللّٰهُ رَبُّكُمْ فَاعْبُدُوْهُ ؕ اَفَلَا تَذَكَّرُوْنَ
10:3. நிச்சயமாக உங்கள் இறைவன் அல்லாஹ்வே: அவன் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான்; பின்னர், (தன் கண்ணியத்திற்குத் தக்கவாறும், மகத்துவத்திற்குரியவாறும் அர்ஷின் மீதிருப்பது அவனுக்கு எவ்வாறு தகுமோ அவ்வாறே) அவன் அர்ஷின் (அரியாசனத்தின்) மீது நிலையானான்; (இவை சம்பந்தப்பட்ட) அனைத்துக் காரியங்களையும் அவனே ஒழுங்குபடுத்துகின்றான்; அவனுடைய அனுமதிக்குப் பின்னரேயன்றி, (அவனிடம்) பரிந்து பேசுபவர் எவருமில்லை; அவன்தான் (உங்களைப் படைத்துப் பரிபக்குவப்படுத்தும்) உங்களுடைய இறைவனாகிய அல்லாஹ்; ஆகவே, அவனையே வணங்குங்கள்: நீங்கள் சிந்திக்கவேண்டாமா?
19:87 لَا يَمْلِكُوْنَ الشَّفَاعَةَ اِلَّا مَنِ اتَّخَذَ عِنْدَ الرَّحْمٰنِ عَهْدًا ۘ
19:87. அளவற்ற அருளாளனிடம் உடன்படிக்கை செய்துகொண்டோரைத் தவிர, எவரும் பரிந்துரை செய்ய அதிகாரம் பெறமாட்டார்கள்.
21:28 يَعْلَمُ مَا بَيْنَ اَيْدِيْهِمْ وَمَا خَلْفَهُمْ وَ لَا يَشْفَعُوْنَۙ اِلَّا لِمَنِ ارْتَضٰى وَهُمْ مِّنْ خَشْيَـتِهٖ مُشْفِقُوْنَ
21:28. அவர்களுக்கு முன்னால் இருப்பவற்றையும் அவர்களுக்குப் பின்னால் இருப்பவற்றையும் அவன் நன்கறிவான்; இன்னும், எவரை அவன் பொருந்திக்கொள்கிறானோ அ(த்தகைய)வருக்கன்றி, (வேறு எவருக்கும்) அவர்கள் பரிந்து பேசமாட்டார்கள்; இன்னும், அவர்கள் அவன்பால் உள்ள அச்சத்தால் நடுங்குபவர்களாகவும் இருக்கின்றார்கள்.
26:100 فَمَا لَـنَا مِنْ شٰفِعِيْنَۙ
26:100. "ஆகவே, எங்களுக்காகப் பரிந்து பேசுவோர் (இன்று) எவருமில்லை."
30:13 وَلَمْ يَكُنْ لَّهُمْ مِّنْ شُرَكَآٮِٕهِمْ شُفَعٰٓؤُا وَكَانُوْا بِشُرَكَآٮِٕهِمْ كٰفِرِيْنَ
30:13. இன்னும், அவர்களுடைய இணையாளர்களிலிருந்து பரிந்துரைப்பவர்கள் எவரும் (மறுமையில்) அவர்களுக்கு இருக்கமாட்டார்கள்; மேலும், அவர்கள் தாங்கள் இணையாக்கியவர்களை நிராகரிப்போராகிவிடுவார்கள்.
32:4 اَللّٰهُ الَّذِىْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَمَا بَيْنَهُمَا فِىْ سِتَّةِ اَيَّامٍ ثُمَّ اسْتَوٰى عَلَى الْعَرْشِؕ مَا لَكُمْ مِّنْ دُوْنِهٖ مِنْ وَّلِىٍّ وَّلَا شَفِيْعٍؕ اَفَلَا تَتَذَكَّرُوْنَ
32:4. அல்லாஹ்தான் வானங்களையும், பூமியையும், இவ்விரண்டிற்கும் இடையிலிருப்பவற்றையும் ஆறு நாட்களில் படைத்தான்; பின்னர், (தன் கண்ணியத்திற்குத் தக்கவாறும், மகத்துவத்திற்குரியவாறும் அர்ஷின் மீதிருப்பது எவ்வாறு தகுமோ அவ்வாறே) அர்ஷின் (அரியாசனத்தின்) மீது அவன் நிலையானான்; அவனையன்றி உங்களுக்கு உதவியாளரோ, பரிந்துபேசுபவரோ இல்லை; எனவே, (இவற்றையெல்லாம்) நீங்கள் (நினைத்து) சிந்திக்க வேண்டாமா?
34:23 وَلَا تَنْفَعُ الشَّفَاعَةُ عِنْدَهٗۤ اِلَّا لِمَنْ اَذِنَ لَهٗ ؕ حَتّٰٓى اِذَا فُزِّعَ عَنْ قُلُوْبِهِمْ قَالُوْا مَاذَا ۙ قَالَ رَبُّكُمْ ؕ قَالُوا الْحَـقَّ ۚ وَهُوَ الْعَلِىُّ الْكَبِيْرُ
34:23. அன்றியும், அவன் எவருக்கு அனுமதி கொடுக்கிறானோ அவருக்குத் தவிர, அவனிடத்தில் எந்தப் பரிந்துரையும் பயனளிக்காது; எனவே, (நியாய விசாரணைக்கு நிற்கும்) அவர்களின் இதயங்களிலிருந்து திடுக்கம் நீக்கப்படுமானால், "உங்கள் இறைவன் என்ன கூறினான்?" என்று கேட்பார்கள்; "உண்மையானதையே! மேலும், அவனே மிக உயர்ந்தவன்; மிகப் பெரியவன்" என்று கூறுவார்கள்.
36:23 ءَاَ تَّخِذُ مِنْ دُوْنِهٖۤ اٰلِهَةً اِنْ يُّرِدْنِ الرَّحْمٰنُ بِضُرٍّ لَّا تُغْنِ عَنِّىْ شَفَاعَتُهُمْ شَيْئًا وَّلَا يُنْقِذُوْنِۚ
36:23. "அவனையன்றி வேறு கடவுள்களை நான் எடுத்துக் கொள்வேனோ? அளவற்ற அருளாளன் எனக்கு ஏதேனும் கெடுதியைக் கொண்டு நாடினால் இவற்றின் சிபாரிசு ஒரு பயனும் எனக்கு அளிக்காது; இவை என்னை விடுவிக்கவும் முடியாது."
39:43 اَمِ اتَّخَذُوْا مِنْ دُوْنِ اللّٰهِ شُفَعَآءَ ؕ قُلْ اَوَلَوْ كَانُوْا لَا يَمْلِكُوْنَ شَيْـٴًـــا وَّلَا يَعْقِلُوْنَ
39:43. அவர்கள் அல்லாஹ் அல்லாதவற்றை(த் தங்களுக்குப்) பரிந்துபேசுபவர்களாக எடுத்துக் கொண்டார்களா? (நபியே!) நீர் கூறுவீராக! "அவை எப்பொருளுக்கும் அதிகாரம் இல்லாதவையாகவும், (எதனையும்) விளங்காதவையாகவும் இருந்தாலுமா?" (என்று.)
39:44 قُلْ لِّلّٰهِ الشَّفَاعَةُ جَمِيْعًا ؕ لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ ثُمَّ اِلَيْهِ تُرْجَعُوْنَ
39:44. "பரிந்துபேசுதல் எல்லாம் அல்லாஹ்வுக்கே உரியது; வானங்கள், பூமியின் ஆட்சி அவனுக்கே உரியது; பின்னர், அவனிடமே நீங்கள் மீட்டப்படுவீர்கள்" என்று (நபியே!) நீர் கூறுவீராக!
40:18 وَاَنْذِرْهُمْ يَوْمَ الْاٰزِفَةِ اِذِ الْقُلُوْبُ لَدَى الْحَـنَاجِرِ كٰظِمِيْنَ ؕ مَا لِلظّٰلِمِيْنَ مِنْ حَمِيْمٍ وَّلَا شَفِيْعٍ يُّطَاعُ ؕ
40:18. (நபியே!) அண்மையில் வரும் (கியாம) நாளைப் பற்றி அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக! இதயங்கள் விசனத்தால் நிரம்பி தொண்டைக்குழிகளுக்கு வரும் (அவ்) வேளையில், அநியாயக்காரர்களுக்கு (இரக்கப்படும்) உற்ற நண்பனோ, ஏற்றுக்கொள்ளப்படும் சிபாரிசு செய்பவனோ இருக்கமாட்டான்.
43:86 وَلَا يَمْلِكُ الَّذِيْنَ يَدْعُوْنَ مِنْ دُوْنِهِ الشَّفَاعَةَ اِلَّا مَنْ شَهِدَ بِالْحَـقِّ وَهُمْ يَعْلَمُوْنَ
43:86. அன்றியும், (அல்லாஹ்வாகிய) அவனையன்றி அவர்கள் எவர்களை (தெய்வங்களாக) அழைக்கிறார்களோ, அவர்கள் (அவனிடம் அவர்களுக்குப்) பரிந்துபேச அதிகாரமுள்ளவர்கள் அல்லர்; ஆனால், எவர்கள் அறிந்தவர்களாக இருக்கும் நிலையில் சத்தியத்தைக்கொண்டு சாட்சியம் கூறுகிறார்களோ அவர்களைத் தவிர.
53:26 وَكَمْ مِّنْ مَّلَكٍ فِى السَّمٰوٰتِ لَا تُغْنِىْ شَفَاعَتُهُمْ شَيْــٴًــــا اِلَّا مِنْۢ بَعْدِ اَنْ يَّاْذَنَ اللّٰهُ لِمَنْ يَّشَآءُ وَيَرْضٰى
53:26. அன்றியும், வானங்களில் எத்தனை வானவர்கள் இருக்கின்றனர்? எனினும், அல்லாஹ் விரும்பி, எவரைப் பற்றித் திருப்தியடைந்து, அவன் அனுமதி கொடுக்கிறானோ அவரைத் தவிர வேறெவரின் பரிந்துரையும் எந்தப் பயனும் அளிக்காது.
74:48 فَمَا تَنْفَعُهُمْ شَفَاعَةُ الشّٰفِعِيْنَؕ
74:48. ஆகவே, சிபாரிசு செய்வோரின் எந்தச் சிபாரிசும் அவர்களுக்குப் பயனளிக்காது.
78:38 يَوْمَ يَقُوْمُ الرُّوْحُ وَالْمَلٰٓٮِٕكَةُ صَفًّا ؕۙ لَّا يَتَكَلَّمُوْنَ اِلَّا مَنْ اَذِنَ لَهُ الرَّحْمٰنُ وَقَالَ صَوَابًا
78:38. (ஜிப்ரீலாகிய) ரூஹும், வானவர்களும் அணிவகுத்து நிற்கும் நாளில், அளவற்ற அருளாளன் எவருக்கு அனுமதி கொடுக்கிறானோ அவரைத் தவிர வேறெவரும் பேசமாட்டார்கள்; அ(த்தகைய)வரும் நேர்மையானதையே கூறுவார்.