பலகை
7:145 وَكَتَبْنَا لَهٗ فِى الْاَلْوَاحِ مِنْ كُلِّ شَىْءٍ مَّوْعِظَةً وَّتَفْصِيْلًا لِّـكُلِّ شَىْءٍ ۚ فَخُذْهَا بِقُوَّةٍ وَّاْمُرْ قَوْمَكَ يَاْخُذُوْا بِاَحْسَنِهَا ؕ سَاُورِيْكُمْ دَارَ الْفٰسِقِيْنَ
7:145. மேலும், நாம் அவருக்குப் பலகைகளில் ஒவ்வொரு விஷயத்திலிருந்து உபதேசத்தையும், ஒவ்வொரு விஷயத்திற்குரிய விளக்கத்தையும் எழுதினோம்; ஆகவே, "அவற்றை உறுதியாகப் பற்றிப் பிடிப்பீராக! இன்னும், உம்முடைய சமூகத்தாரை அவற்றில் அழகானவற்றை எடுத்துக்கொள்ளுமாறு கட்டளையிடுவீராக! அதிசீக்கிரம் பாவிகளின் வீட்டை (தங்குமிடத்தை) நான் உங்களுக்குக் காட்டுவேன்" (என்று கூறினான்).
7:150 وَلَمَّا رَجَعَ مُوْسٰٓى اِلٰى قَوْمِهٖ غَضْبَانَ اَسِفًا ۙ قَالَ بِئْسَمَا خَلَفْتُمُوْنِىْ مِنْۢ بَعْدِىْ ۚ اَعَجِلْتُمْ اَمْرَ رَبِّكُمْ ۚ وَاَلْقَى الْاَلْوَاحَ وَاَخَذَ بِرَاْسِ اَخِيْهِ يَجُرُّهٗۤ اِلَيْهِؕ قَالَ ابْنَ اُمَّ اِنَّ الْـقَوْمَ اسْتَضْعَفُوْنِىْ وَكَادُوْا يَقْتُلُوْنَنِىْ ۖ فَلَا تُشْمِتْ بِىَ الْاَعْدَآءَ وَ لَا تَجْعَلْنِىْ مَعَ الْقَوْمِ الظّٰلِمِيْنَ
7:150. (இதனையறிந்த) மூஸா தன் சமூகத்தாரிடம் கோபமுற்றவராகவும், வருத்தம் நிறைந்தவராகவும் திரும்பி வந்தபோது (அவர்களை நோக்கி) "நான் இல்லாத சமயத்தில் நீங்கள் செய்தது மிகவும் கெட்டது; உங்கள் இறைவனுடைய கட்டளை (வேதனை)யை(க் கொண்டுவர) அவசரப்படுகிறீர்களா?" என்று கூறினார்; பின்னர், பலகைகளைப் போட்டுவிட்டு, தம் சகோதரர் (ஹாரூன்) உடைய தலை(முடி)யைப் பிடித்து அவரைத் தம் பக்கம் இழுத்தார். அப்போது (ஹாரூன்) "என் தாயின் மகனே! இந்த மக்கள் என்னைப் பலவீனமாகக் கருதி என்னைக் கொலை செய்யவும் முற்பட்டனர்; ஆகவே, (என்னுடைய) பகைவர்களுக்கு என் மூலம் மகிழ்ச்சியை ஏற்படுத்திவிடாதீர்; இன்னும், என்னை அநியாயக்காரக் கூட்டத்தாருடன் சேர்த்து விடாதீர்" என்று கூறினார்.
7:154 وَلَمَّا سَكَتَ عَنْ مُّوْسَى الْغَضَبُ اَخَذَ الْاَلْوَاحَ ۖ وَفِىْ نُسْخَتِهَا هُدًى وَّرَحْمَةٌ لِّـلَّذِيْنَ هُمْ لِرَبِّهِمْ يَرْهَبُوْنَ
7:154. மூஸாவை விட்டும் கோபம் தணிந்தபோது, (அவர் போட்டுவிட்ட) பலகைகளை எடுத்துக் கொண்டார்; அவற்றில் எழுதப்பட்டிருந்ததில் தம் இறைவனுக்குப் பயப்படுபவர்களுக்கு நேர்வழியும், (இறை) கிருபையும் இருந்தன.