பறவைகள்
2:260   وَاِذْ قَالَ اِبْرٰهٖمُ رَبِّ اَرِنِىْ كَيْفَ تُحْىِ الْمَوْتٰى ؕ قَالَ اَوَلَمْ تُؤْمِنْ‌ؕ قَالَ بَلٰى وَلٰـكِنْ لِّيَطْمَٮِٕنَّ قَلْبِىْ‌ؕ قَالَ فَخُذْ اَرْبَعَةً مِّنَ الطَّيْرِ فَصُرْهُنَّ اِلَيْكَ ثُمَّ اجْعَلْ عَلٰى كُلِّ جَبَلٍ مِّنْهُنَّ جُزْءًا ثُمَّ ادْعُهُنَّ يَاْتِيْنَكَ سَعْيًا ‌ؕ وَاعْلَمْ اَنَّ اللّٰهَ عَزِيْزٌ حَكِيْمٌ‏
2:260. இன்னும், இப்ராஹீம்: "என் இறைவா! இறந்தவர்களை நீ எவ்வாறு உயிர்ப்பிக்கிறாய் என்பதை எனக்குக் காண்பிப்பாயாக!" என வேண்டியபோது, அவன் "நீர் (இதை) நம்பவில்லையா?" எனக் கேட்டான்; "அவ்வாறல்ல! (நான் நம்புகிறேன்); ஆனால், என் இதயம் அமைதி பெறுவதற்காக (இவ்வாறு கேட்கிறேன்)" எனக் கூறினார்: "(அப்படியாயின்,) பறவைகளிலிருந்து நான்கைப் பிடித்து, அவற்றைத் துண்டு துண்டாக வெட்டி உம்மிடம் வைத்துக்கொள்ளும்; பின்னர், அவற்றின் ஒவ்வொரு பாகத்தையும் மலையின் மீது வைத்துவிடும்; பின், அவற்றைக் கூப்பிடும்; அவை உம்மிடம் வேகமாய் வரும்; நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், ஞானம் மிக்கவன் என்பதை அறிந்து கொள்ளும்" என்று (அல்லாஹ்) கூறினான்.
3:49   وَرَسُوْلًا اِلٰى بَنِىْۤ اِسْرٰٓءِيْلَ ۙ اَنِّىْ قَدْ جِئْتُكُمْ بِاٰيَةٍ مِّنْ رَّبِّكُمْ ۙۚ اَنِّىْۤ  اَخْلُقُ لَـكُمْ مِّنَ الطِّيْنِ كَهَیْــٴَــةِ الطَّيْرِ فَاَنْفُخُ فِيْهِ فَيَكُوْنُ طَيْرًاۢ بِاِذْنِ اللّٰهِ‌‌ۚ وَاُبْرِئُ الْاَكْمَهَ وَالْاَبْرَصَ وَاُحْىِ الْمَوْتٰى بِاِذْنِ اللّٰهِ‌ۚ وَ اُنَبِّئُكُمْ بِمَا تَاْكُلُوْنَ وَمَا تَدَّخِرُوْنَۙ فِىْ بُيُوْتِكُمْ‌ؕ اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيَةً لَّـكُمْ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَۚ‏
3:49. இஸ்ராயீலின் சந்ததியினருக்குத் தூதராகவும் (அவரை ஆக்குவான்; இவ்வாறு அவர் ஆகியதும் அவர்களிடம், அவர்:) "நான் உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியுடன் நிச்சயமாக வந்துள்ளேன்; நான் உங்களுக்காக களிமண்ணால் ஒரு பறவையின் உருவத்தைப்போல் உண்டாக்கி நான் அதில் ஊதுவேன்; அது அல்லாஹ்வின் அனுமதியைக்கொண்டு (உயிருடைய) பறவையாகி விடும்; அல்லாஹ்வின் அனுமதியைக்கொண்டு பிறவிக் குருடனையும், வெண் குஷ்டரோகியையும் குணப்படுத்துவேன்; இறந்தோரையும் உயிர்ப்பிப்பேன்; நீங்கள் உண்பவற்றையும், நீங்கள் உங்கள் வீடுகளில் சேமித்துவைப்பவற்றையும் நான் உங்களுக்கு எடுத்துக்கூறுவேன்; நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால் நிச்சயமாக இவற்றில் உங்களுக்குத் (திடமான) ஓர் அத்தாட்சி இருக்கிறது" (என்று கூறினார்).
5:110   اِذْ قَالَ اللّٰهُ يٰعِيْسَى ابْنَ مَرْيَمَ اذْكُرْ نِعْمَتِىْ عَلَيْكَ وَعَلٰى وَالِدَتِكَ‌ ۘ اِذْ اَيَّدْتُّكَ بِرُوْحِ الْقُدُسِ تُكَلِّمُ النَّاسَ فِىْ الْمَهْدِ وَكَهْلًا ۚوَاِذْ عَلَّمْتُكَ الْـكِتٰبَ وَالْحِكْمَةَ وَالتَّوْرٰٮةَ وَالْاِنْجِيْلَ‌ ۚ وَاِذْ تَخْلُقُ مِنَ الطِّيْنِ كَهَيْـــٴَــةِ ‏ الطَّيْرِ بِاِذْنِىْ فَتَـنْفُخُ فِيْهَا فَتَكُوْنُ طَيْرًۢا بِاِذْنِىْ‌ وَ تُبْرِئُ الْاَكْمَهَ وَالْاَبْرَصَ بِاِذْنِىْ‌ ۚ وَاِذْ تُخْرِجُ الْمَوْتٰى بِاِذْنِىْ‌ ۚ وَاِذْ كَفَفْتُ بَنِىْۤ اِسْرَآءِيْلَ عَنْكَ اِذْ جِئْتَهُمْ بِالْبَيِّنٰتِ فَقَالَ الَّذِيْنَ كَفَرُوْا مِنْهُمْ اِنْ هٰذَاۤ اِلَّا سِحْرٌ مُّبِيْنٌ‏
5:110. "மர்யமுடைய மகன் ஈஸாவே! உம்மீதும் உம் தாயார் மீதும் (நான் அருளிய) அருட்கொடையை நினைவு கூரும்! பரிசுத்த ஆன்மாவைக் கொண்டு உம்மை பலப்படுத்தியபோது நீர் தொட்டிலிலும், வாலிபப் பருவத்திலும் மனிதர்களிடம் பேசியதையும், இன்னும் நான் உமக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இன்ஜீலையும் கற்றுக் கொடுத்ததையும் (நினைத்துப் பாரும்)! இன்னும், நீர் களிமண்ணினால் என் உத்தரவைக் கொண்டு பறவை வடிவத்தைப் போல் உண்டாக்கி அதில் நீர் ஊதியபோது, அது என் உத்தரவைக் கொண்டு பறவையாகியதை; இன்னும், என் உத்தரவைக் கொண்டு பிறவிக் குருடனையும், வெண்குஷ்டக்காரனையும் சுகப்படுத்தியதையும், (நினைத்துப் பாரும்!); இறந்தோரை என் உத்தரவுக் கொண்டு (உயிர்ப்பித்து) வெளிப்படுத்தியதையும், (நினைத்துப் பாரும்!); அன்றியும், (இஸ்ராயீலின் சந்ததியினராகிய) அவர்களிடம் நீர் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தபோது, அவர்களில் நிராகரித்தவர்கள், 'இது தெளிவான சூனியத்தைத் தவிர வேறு இல்லை!' என்று கூறியபோது (அந்த) இஸ்ராயீலின் மக்க(ளின் தீங்குக)ளை உம்மைவிட்டும் நான் தடுத்துவிட்டதையும் நினைத்துப் பாரும்!" என்று (ஈஸாவை அழைத்து) அல்லாஹ் கூறியதை (நபியே! நீர் நினைவு கூர்வீராக)!"
6:38   وَمَا مِنْ دَآبَّةٍ فِى الْاَرْضِ وَلَا طٰۤٮِٕرٍ يَّطِيْرُ بِجَنَاحَيْهِ اِلَّاۤ اُمَمٌ اَمْثَالُـكُمْ‌ؕ مَا فَرَّطْنَا فِى الْـكِتٰبِ مِنْ شَىْءٍ‌ ثُمَّ اِلٰى رَبِّهِمْ يُحْشَرُوْنَ‏
6:38. பூமியிலுள்ள எந்த உயிரினமும், தன் இரு சிறகுகளால் பறக்கின்ற எந்தப் பறவையும் உங்களைப்போன்ற இனங்களேயன்றி வேறில்லை; (இவற்றில்) எதையும் (நம் பதிவுப்) புத்தகத்தில் நாம் குறிப்பிடாமல் விட்டுவிடவில்லை; பிறகு, தம் இறைவனின்பால் அவை ஒன்று சேர்க்கப்படும்.
12:36   وَدَخَلَ مَعَهُ السِّجْنَ فَتَيٰنِ‌ؕ قَالَ اَحَدُهُمَاۤ اِنِّىْۤ اَرٰٮنِىْۤ اَعْصِرُ خَمْرًا‌ ۚ وَقَالَ الْاٰخَرُ اِنِّىْۤ اَرٰٮنِىْۤ اَحْمِلُ فَوْقَ رَاْسِىْ خُبْزًا تَاْكُلُ الطَّيْرُ مِنْهُ‌ ؕ نَبِّئْنَا بِتَاْوِيْلِهٖ ۚ اِنَّا نَرٰٮكَ مِنَ الْمُحْسِنِيْنَ‏
12:36. அவருடன் இரண்டு வாலிபர்களும் சிறையில் புகுந்தனர்; அவ்விருவரில் ஒருவன், "நான் மதுரசம் பிழிவதாக நிச்சயமாக என்னை (கனவில்) கண்டேன்" என்று கூறினான்; மற்றவன், "நான் என் தலைமீது ரொட்டி சுமப்பதாகவும், அதிலிருந்து பறவைகள் தின்பதாகவும் நிச்சயமாக என்னை நான் கண்டேன்" என்று கூறினான்; (பின் இருவரும் யூஸுஃபே!) "எங்களுக்கு இவற்றின் விளக்கத்தை அறிவிப்பீராக! மெய்யாக நாங்கள் உம்மை நன்மை செய்பவர்களில் ஒருவராகக் காண்கிறோம்" (என்று கூறினார்கள்).
12:41   يٰصَاحِبَىِ السِّجْنِ اَمَّاۤ اَحَدُكُمَا فَيَسْقِىْ رَبَّهٗ خَمْرًا‌ۚ وَاَمَّا الْاٰخَرُ فَيُصْلَبُ فَتَاْكُلُ الطَّيْرُ مِنْ رَّاْسِهٖ‌ؕ قُضِىَ الْاَمْرُ الَّذِىْ فِيْهِ تَسْتَفْتِيٰنِؕ‏
12:41. சிறையிலிருக்கும் என் இருதோழர்களே! (உங்கள் கனவுகளின் பலன்களாவன): உங்களிருவரில் ஒருவர் எஜமானனுக்கு மதுவைப் புகட்டிக் கொண்டிருப்பார்; மற்றவரோ சிலுவையில் அறையப்பட்டு, அவர் தலையிலிருந்து பறவைகள் (கொத்தித்) தின்னும்; எது குறித்து நீங்களிருவரும் விளக்கம் தேடினீர்களோ அக்காரியம் விதிக்கப்பட்டுவிட்டது" (என்று யூஸுஃப் கூறினார்).
16:79   اَلَمْ يَرَوْا اِلَى الطَّيْرِ مُسَخَّرٰتٍ فِىْ جَوِّ السَّمَآءِ ؕ مَا يُمْسِكُهُنَّ اِلَّا اللّٰهُ‌ؕ اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيٰتٍ لِّقَوْمٍ يُّؤْمِنُوْنَ‏
16:79. வான் (மண்டலத்தின் காற்று) வெளியில் (இறைக் கட்டளைக்குக்) கட்டுப்பட்டவையாக (பறந்து செல்லும்) பறவைகளை இவர்கள் பார்க்கவில்லையா? அவற்றை (ஆகாயத்தில்) அல்லாஹ்வைத் தவிர (வேறு எவரும்) தடுத்து நிறுத்தவில்லை; நிச்சயமாக இதில் நம்பிக்கை கொண்ட மக்களுக்கு(த் தக்க) அத்தாட்சிகள் இருக்கின்றன.
21:79   فَفَهَّمْنٰهَا سُلَيْمٰنَ‌‌ۚ وَكُلًّا اٰتَيْنَا حُكْمًا وَّعِلْمًا‌ وَّسَخَّرْنَا مَعَ دَاوٗدَ الْجِبَالَ يُسَبِّحْنَ وَالطَّيْرَ‌ ؕ وَكُنَّا فٰعِلِيْنَ‏
21:79. அப்போது, நாம் ஸுலைமானுக்கு அதை (தீர்ப்பின் நியாயத்தை) விளங்கவைத்தோம்; மேலும், (அவ்விருவரில்) ஒவ்வொருவருக்கும் நாம் ஞானத்தையும் கல்வியையும் கொடுத்தோம்; இன்னும், நாம் தாவூதுக்கு மலைகளையும் பறவைகளையும் வசப்படுத்திக் கொடுத்தோம்; அவை (அல்லாஹ்வை, தாவூதுடன் தஸ்பீஹ்) துதி செய்து கொண்டிருந்தன; இவற்றையெல்லாம் நாமே செய்தோம்.
22:31   حُنَفَآءَ لِلّٰهِ غَيْرَ مُشْرِكِيْنَ بِهٖ‌ؕ وَمَنْ يُّشْرِكْ بِاللّٰهِ فَكَاَنَّمَا خَرَّ مِنَ السَّمَآءِ فَتَخْطَفُهُ الطَّيْرُ اَوْ تَهْوِىْ بِهِ الرِّيْحُ فِىْ مَكَانٍ سَحِيْقٍ‏
22:31. அல்லாஹ்வுக்காக (அசத்தியத்தை விட்டும் சத்தியத்தின்பால்) சாய்ந்தவர்களாக, அவனுக்கு எதனையும் இணைவைக்காதவர்களாக இருங்கள்: இன்னும், எவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறானோ, அவன் வானத்திலிருந்து விழுந்து, பறவைகள் அவனை வாரி எடுத்துச்சென்றது போலும், அல்லது பெரும் காற்றடித்து அவனை வெகுதொலைவிலுள்ள ஓர் இடத்திற்கு அடித்துக் கொண்டுசென்றது போலும் ஆகிவிடுவான்.
24:41   اَلَمْ تَرَ اَنَّ اللّٰهَ يُسَبِّحُ لَهٗ مَنْ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَالطَّيْرُ صٰٓفّٰتٍ‌ؕ كُلٌّ قَدْ عَلِمَ صَلَاتَهٗ وَتَسْبِيْحَهٗ‌ؕ وَاللّٰهُ عَلِيْمٌۢ بِمَا يَفْعَلُوْنَ‏
24:41. (நபியே) நீர் பார்க்கவில்லையா? வானங்களிலும் பூமியிலும் உள்ளவையும், பறவைகள் (விண்ணில் தங்கள்) இறக்கைகளை விரித்(துப் பறந்)த வண்ணமாக நிச்சயமாக அல்லாஹ்வைத் துதிக்கின்றன; ஒவ்வொன்றும் தன் தொழுகையையும், தன் துதியையும் திட்டமாக அறிந்தே இருக்கிறது; அல்லாஹ்வும் அவைகள் செய்பவற்றை நன்கறிந்திருக்கிறான்.
27:16   وَوَرِثَ سُلَيْمٰنُ دَاوٗدَ‌ وَقَالَ يٰۤاَيُّهَا النَّاسُ عُلِّمْنَا مَنْطِقَ الطَّيْرِ وَاُوْتِيْنَا مِنْ كُلِّ شَىْءٍؕ‌ اِنَّ هٰذَا لَهُوَ الْفَضْلُ الْمُبِيْنُ‏
27:16. பின்னர், ஸுலைமான் தாவூதின் வாரிசானார்: அவர் கூறினார்: "மனிதர்களே! பறவைகளின் மொழி எங்களுக்குக் கற்றுத்தரப்பட்டுள்ளது; மேலும், நாங்கள் எல்லாவிதமான பொருட்களிலிருந்தும் (ஏராளமாக) அளிக்கப்பட்டுள்ளோம்; நிச்சயமாக இது தெளிவான அருளாகும்."
27:20   وَتَفَقَّدَ الطَّيْرَ فَقَالَ مَا لِىَ لَاۤ اَرَى الْهُدْهُدَ ‌ۖ  اَمْ كَانَ مِنَ الْغَآٮِٕبِيْنَ‏
27:20. அவர் பறவைகளைப் பரிசீலனை செய்து, "நான் இங்கே ஹுத் ஹுத் பறவையைக் காணவில்லையே என்ன காரணம்? அல்லது அது மறைந்தவற்றில் நின்றும் ஆகிவிட்டதோ?" என்று கூறினார்.
34:10   وَلَقَدْ اٰتَيْنَا دَاوٗدَ مِنَّا فَضْلًا ؕ يٰجِبَالُ اَوِّبِىْ مَعَهٗ وَالطَّيْرَ ۚ وَاَلَــنَّا لَـهُ الْحَدِيْدَ ۙ‏
34:10. இன்னும், நிச்சயமாக நாம் தாவூதுக்கு நம் (மேன்மையான) அருளை வழங்கினோம்: "மலைகளே! (அவர் தஸ்பீஹ் செய்யும்போது) அவருடன் சேர்ந்து நீங்களும் துதியுங்கள்: இன்னும், பறவைகளையும் (நீங்களும் அவ்வாறே செய்யுங்கள்" என்றோம்); மேலும், நாம் அவருக்கு இரும்பை மிருதுவாக்கித் தந்தோம்.
38:19   وَالطَّيْرَ مَحْشُوْرَةً ؕ كُلٌّ لَّـهٗۤ اَوَّابٌ‏
38:19. மேலும், பறவைகளை ஒன்று திரட்டி (நாம் வசப்படுத்திக் கொடுத்தோம்); அனைத்தும் அவனையே நோக்குபவையாக இருந்தன.
56:21   وَلَحْمِ طَيْرٍ مِّمَّا يَشْتَهُوْنَؕ‏
56:21. அவர்கள் விரும்பும் பறவைகளின் மாமிசத்தையும் (கொண்டு அச்சிறுவர்கள் வருவார்கள்).
67:19   اَوَلَمْ يَرَوْا اِلَى الطَّيْرِ فَوْقَهُمْ صٰٓفّٰتٍ وَّيَقْبِضْنَؕؔ ۘ مَا يُمْسِكُهُنَّ اِلَّا الرَّحْمٰنُ‌ؕ اِنَّهٗ بِكُلِّ شَىْءٍۢ بَصِيْرٌ‏
67:19. இறக்கைகளை விரித்துக்கொண்டும், சேர்த்துக் கொண்டும், இவர்களுக்குமேல் (வானில் பறக்கும்) பறவைகளை இவர்கள் பார்க்கவில்லையா? அளவற்ற அருளாளனைத் தவிர (வேறு யாரும் கீழே விழாது) அவற்றைத் தடுத்துக்கொண்டிருக்கவில்லை; நிச்சயமாக அவன் ஒவ்வொரு பொருளையும் நோட்டமிடுபவன்.
105:3   وَّاَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا اَبَابِيْلَۙ‏
105:3. மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங்கூட்டமாக அவன் அனுப்பினான்.