பானம்
2:259   اَوْ كَالَّذِىْ مَرَّ عَلٰى قَرْيَةٍ وَّ هِىَ خَاوِيَةٌ عَلٰى عُرُوْشِهَا ‌ۚ قَالَ اَنّٰى يُحْىٖ هٰذِهِ اللّٰهُ بَعْدَ مَوْتِهَا ‌ۚ فَاَمَاتَهُ اللّٰهُ مِائَةَ عَامٍ ثُمَّ بَعَثَهٗ ‌ؕ قَالَ كَمْ لَبِثْتَ‌ؕ قَالَ لَبِثْتُ يَوْمًا اَوْ بَعْضَ يَوْمٍ‌ؕ قَالَ بَلْ لَّبِثْتَ مِائَةَ عَامٍ فَانْظُرْ اِلٰى طَعَامِكَ وَشَرَابِكَ لَمْ يَتَسَنَّهْ‌ۚ وَانْظُرْ اِلٰى حِمَارِكَ وَلِنَجْعَلَكَ اٰيَةً لِّلنَّاسِ‌ وَانْظُرْ اِلَى الْعِظَامِ كَيْفَ نُـنْشِزُهَا ثُمَّ نَكْسُوْهَا لَحْمًا ‌ؕ فَلَمَّا تَبَيَّنَ لَهٗ ۙ قَالَ اَعْلَمُ اَنَّ اللّٰهَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ‏
2:259. அல்லது, ஒரு கிராமத்தைக் கடந்து சென்றவரை (நீர் அறிவீரா?) அந்தக் கிராமமானது அடியோடு வீழ்ந்துகிடந்தது; (இதைப் பார்த்த அவர்), "இவ்வூர் (இவ்வாறு அழிந்து) மடிந்த பின் இதனை அல்லாஹ் எப்படி உயிர்ப்பிப்பான்?" என்று கூறினார்; ஆகவே, அல்லாஹ் அவரை நூறாண்டுகள் வரை மரணிக்கச் செய்தான்; பின்னர், அவரை (உயிர்கொடுத்து) எழுப்பி, "எவ்வளவு காலம் (இந்நிலையில்) இருந்தீர்?" என்று அவரைக் கேட்டான்; அதற்கவர், "ஒரு நாள் அல்லது ஒரு நாளின் சிறுபகுதியில் (இவ்வாறு) இருந்தேன்" என்று கூறினார்; "இல்லை! நீர் (இந்நிலையில்) நூறாண்டுகள் இருந்தீர்! இதோ பாரும் உம்முடைய உணவையும், உம்முடைய பானத்தையும்; (கெட்டுப் போகாமையினால்) அவை (எந்த விதத்திலும்) மாறுதலடையவில்லை; ஆனால், உம்முடைய கழுதையைப் பாரும்; உம்மை மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாக்குவதற்காக (இவ்வாறு செய்தோம்); இன்னும், (அக்கழுதையின்) எலும்புகளைப் பாரும்: அவற்றை நாம் எப்படிச் சேர்க்கிறோம்; பின்னர், அவற்றின் மேல் சதையைப் போர்த்துகிறோம்" எனக் கூறினான்; (இதுவெல்லாம்) அவருக்குத் தெளிவானபோது, அவர் "நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருள்களின் மீதும் வல்லமையுடையவன் என்பதை நான் அறிந்து கொண்டேன்!" என்று கூறினார்.
16:69   ثُمَّ كُلِىْ مِنْ كُلِّ الثَّمَرٰتِ فَاسْلُكِىْ سُبُلَ رَبِّكِ ذُلُلًا‌ ؕ يَخْرُجُ مِنْۢ بُطُوْنِهَا شَرَابٌ مُّخْتَلِفٌ اَلْوَانُهٗ فِيْهِ شِفَآءٌ لِّلنَّاسِ‌ؕ اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيَةً لِّقَوْمٍ يَّتَفَكَّرُوْنَ‏
16:69. "பின், நீ எல்லாவிதமான கனி (களின் மலர்) களிலிருந்தும் உணவருந்தி உன் இறைவன் (காட்டித்தரும்) எளிதான வழிகளில் (உன் கூட்டுக்குள்) ஒடுங்கிச்செல்" (என்றும் உள்ளுணர்ச்சியை உண்டாக்கினான்); அதன் வயிறுகளிலிருந்து பலவித நிறங்களுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது; அதில், மனிதர்களுக்கு (பிணி தீர்க்க வல்ல) நோய் நிவாரணி உண்டு; நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது.
18:29   وَقُلِ الْحَـقُّ مِنْ رَّبِّكُمْ‌ فَمَنْ شَآءَ فَلْيُؤْمِنْ وَّمَنْ شَآءَ فَلْيَكْفُرْ ‌ۙاِنَّاۤ اَعْتَدْنَا لِلظّٰلِمِيْنَ نَارًا ۙ اَحَاطَ بِهِمْ سُرَادِقُهَا‌ ؕ وَاِنْ يَّسْتَغِيْثُوْا يُغَاثُوْا بِمَآءٍ كَالْمُهْلِ يَشْوِى الْوُجُوْهَ‌ؕ بِئْسَ الشَّرَابُ وَسَآءَتْ مُرْتَفَقًا‏
18:29. (நபியே!) இன்னும் நீர் கூறுவீராக! "இந்தச் சத்திய(வேத)ம் உங்கள் இறைவனிடமிருந்து (வந்து)ள்ளது; ஆகவே, விரும்புபவர் (அதனை) நம்பிக்கைகொள்ளட்டும்; விரும்புபவர் (அதனை) நிராகரிக்கட்டும்; அநியாயக்காரர்களுக்கு (நரக) நெருப்பை நிச்சயமாக நாம் சித்தப்படுத்தியுள்ளோம்; அதனுடைய சுவர்கள் அவர்களைச் சூழ்ந்துகொள்ளும்; அவர்கள் (தண்ணீர் கேட்டு) இரட்சிக்கத் தேடினால் உருக்கப்பட்ட செம்பு போன்ற தண்ணீரைக் கொண்டே இரட்சிக்கப்படுவார்கள்; (அவர்களுடைய) முகங்களை அது சுட்டுக்கருக்கிவிடும்; மிகக்கேடான பானமாகும் அது! இன்னும், இறங்கும் தலத்தில் அதுவே மிகக்கெட்டதாகும்."
36:73   وَلَهُمْ فِيْهَا مَنَافِعُ وَمَشَارِبُ‌ؕ اَفَلَا يَشْكُرُوْنَ‏
36:73. மேலும், அவற்றிலிருந்து அவர்களுக்குப் பயன்களும், பானங்களும் இருக்கின்றன: (இவற்றுக்கெல்லாம்) அவர்கள் நன்றி செலுத்த மாட்டார்களா?
37:45   يُطَافُ عَلَيْهِمْ بِكَاْسٍ مِّنْ مَّعِيْنٍۢ ۙ‏
37:45. தெளிவான பானம் நிறைந்த குவளைகள் அவர்களைச் சுற்றிக்கொண்டு வரும்.
38:42   اُرْكُضْ بِرِجْلِكَ‌ ۚ هٰذَا مُغْتَسَلٌ ۢ بَارِدٌ وَّشَرَابٌ‏
38:42. "உம்முடைய காலால் (பூமியைத்) தட்டும்; (அவ்வாறு தட்டவே, ஒரு நீரூற்றுப் பொங்கி வந்ததும்) இதோ குளிர்ச்சியான குளிக்குமிடமும், பானமும் (உமக்கு) இருக்கின்றன" (என்று சொன்னோம்).
38:51   مُتَّكِـــِٕيْنَ فِيْهَا يَدْعُوْنَ فِيْهَا بِفَاكِهَةٍ كَثِيْرَةٍ وَّشَرَابٍ‏
38:51. அதில் அவர்கள் (பஞ்சணைகள் மீது) சாய்ந்தவர்களாக, அங்கே ஏராளமான கனிவகைகளையும், பானங்களையும் கேட்டு (அருந்திக் கொண்டிருப்)பார்கள்.
56:18   بِاَكْوَابٍ وَّاَبَارِيْقَ ۙ وَكَاْسٍ مِّنْ مَّعِيْنٍۙ‏
56:18. தெளிந்த பானங்களால் நிரம்பிய கிண்ணங்களையும், கண்டிகளையும், குவளைகளையும் கொண்டு (அவர்களிடம் சுற்றி வருவார்கள்).
76:21   عٰلِيَهُمْ ثِيَابُ سُنْدُسٍ خُضْرٌ وَّاِسْتَبْرَقٌ‌ وَّحُلُّوْۤا اَسَاوِرَ مِنْ فِضَّةٍ ‌ۚوَسَقٰٮهُمْ رَبُّهُمْ شَرَابًا طَهُوْرًا‏
76:21. அவர்களின் மீது 'ஸுன்துஸு', 'இஸ்தப்ரக்' போன்ற பச்சை நிற பட்டாடைகள் இருக்கும்; இன்னும், அவர்கள் வெள்ளியாலாகிய கடகங்கள் அணிவிக்கப்பட்டிருப்பர்; அன்றியும், அவர்களுடைய இறைவன் அவர்களுக்குப் பரிசுத்தமான பானமும் புகட்டுவான்.
78:34   وَّكَاْسًا دِهَاقًا ؕ‏
78:34. பானம் நிறைந்த கிண்ணங்களும் (இருக்கின்றன).