பிள்ளைகள்
9:24 قُلْ اِنْ كَانَ اٰبَآؤُكُمْ وَاَبْنَآؤُكُمْ وَاِخْوَانُكُمْ وَاَزْوَاجُكُمْ وَعَشِيْرَتُكُمْ وَ اَمْوَالُ ۨاقْتَرَفْتُمُوْهَا وَتِجَارَةٌ تَخْشَوْنَ كَسَادَهَا وَ مَسٰكِنُ تَرْضَوْنَهَاۤ اَحَبَّ اِلَيْكُمْ مِّنَ اللّٰهِ وَرَسُوْلِهٖ وَ جِهَادٍ فِىْ سَبِيْلِهٖ فَتَرَ بَّصُوْا حَتّٰى يَاْتِىَ اللّٰهُ بِاَمْرِهٖ ؕ وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الْفٰسِقِيْنَ
9:24. (நபியே!) நீர் கூறும்: "உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் (எங்கே) ஏற்பட்டுவிடுமோ என்று அஞ்சுகின்ற (உங்கள்) வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும் - அல்லாஹ்வையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் போர்புரிவதையும் விட உங்களுக்குப் பிரியமானவையாக இருக்குமானால், அல்லாஹ் அவனுடைய கட்டளையை (வேதனையை)க் கொண்டுவரும் வரை, நீங்கள் எதிர்பார்த்து இருங்கள்; அல்லாஹ் பாவிகளான கூட்டத்தினரை நேர்வழியில் செலுத்துவதில்லை."
9:85 وَلَا تُعْجِبْكَ اَمْوَالُهُمْ وَاَوْلَادُهُمْؕ اِنَّمَا يُرِيْدُ اللّٰهُ اَنْ يُّعَذِّبَهُمْ بِهَا فِى الدُّنْيَا وَتَزْهَقَ اَنْفُسُهُمْ وَهُمْ كٰفِرُوْنَ
9:85. இன்னும், அவர்களுடைய செல்வங்களும், அவர்களுடைய பிள்ளைகளும் உம்மை ஆச்சரியப்படுத்த வேண்டாம்; நிச்சயமாக இவற்றைக் கொண்டு அவர்களை இவ்வுலகத்திலேயே வேதனை செய்யவும், அவர்கள் நிராகரிப்பாளர்களாக இருக்கும் நிலையிலேயே அவர்களின் உயிர் போவதையும் அல்லாஹ் விரும்புகிறான்.
18:46 اَلْمَالُ وَ الْبَـنُوْنَ زِيْنَةُ الْحَيٰوةِ الدُّنْيَا ۚ وَالْبٰقِيٰتُ الصّٰلِحٰتُ خَيْرٌ عِنْدَ رَبِّكَ ثَوَابًا وَّخَيْرٌ اَمَلًا
18:46. செல்வமும் பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கையின் அலங்காரங்களேயாகும்; என்றும் நிலைத்து நிற்கக்கூடிய நற்செயல்களே உம்முடைய இறைவனிடத்தில் (மறுமையின் நற்பேறுக்கு) நன்மையால் சிறந்தவையும் ஆதரவு வைப்பதால் சிறந்தவையுமாகும்.
26:133 اَمَدَّكُمْ بِاَنْعَامٍ وَّبَنِيْنَ ۚۙ
26:133. "அவன் உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) கால்நடைகளையும், பிள்ளைகளையும் கொண்டு உதவியளித்தான்."
33:4 مَا جَعَلَ اللّٰهُ لِرَجُلٍ مِّنْ قَلْبَيْنِ فِىْ جَوْفِهٖ ۚ وَمَا جَعَلَ اَزْوَاجَكُمُ الّٰٓـئِْ تُظٰهِرُوْنَ مِنْهُنَّ اُمَّهٰتِكُمْ ۚ وَمَا جَعَلَ اَدْعِيَآءَكُمْ اَبْنَآءَكُمْ ؕ ذٰ لِكُمْ قَوْلُـكُمْ بِاَ فْوَاهِكُمْ ؕ وَاللّٰهُ يَقُوْلُ الْحَقَّ وَهُوَ يَهْدِى السَّبِيْلَ
33:4. எந்த மனிதனுடைய அகத்திலும் அல்லாஹ் இரண்டு இதயங்களை உண்டாக்கவில்லை; உங்கள் மனைவியரில் எவரையும் (தன் மனைவியைத் தன் தாய் போன்றவள் என்று கூறி) நீங்கள் உங்களுடைய தாய்மார்களுக்கு ஒப்பாகக் கூறுவதனால் - உங்களுடைய தாய்களாக அவன் ஆக்கவில்லை; (அவ்வாறே) உங்களுடைய வளர்ப்புப் பிள்ளைகளை உங்களுடைய புதல்வர்களாக ஆக்கவில்லை; இவை யாவும் உங்களுடைய வாய்களால் சொல்லும் (வெறும்) வார்த்தையாகும்; அல்லாஹ் உண்மையையே கூறுகிறான்; இன்னும், அவன் நேர்வழியையே காட்டுகிறான்.
37:152 وَلَدَ اللّٰهُۙ وَاِنَّهُمْ لَـكٰذِبُوْنَ
37:152. "அல்லாஹ் (பிள்ளைகளைப்) பெற்றான்" - (என்று கூறும்) நிச்சயமாக அவர்கள் பொய்யர்களே!