பொற் குவியல்
3:14 زُيِّنَ لِلنَّاسِ حُبُّ الشَّهَوٰتِ مِنَ النِّسَآءِ وَالْبَـنِيْنَ وَالْقَنَاطِيْرِ الْمُقَنْطَرَةِ مِنَ الذَّهَبِ وَالْفِضَّةِ وَالْخَـيْلِ الْمُسَوَّمَةِ وَالْاَنْعَامِ وَالْحَـرْثِؕ ذٰ لِكَ مَتَاعُ الْحَيٰوةِ الدُّنْيَا ۚ وَاللّٰهُ عِنْدَهٗ حُسْنُ الْمَاٰبِ
3:14. பெண்கள், ஆண்மக்கள், பொன், வெள்ளியிலிருந்து சேகரிக்கப்பட்ட பெரும் குவியல்கள்; அடையாளமிடப்பட்ட (உயர்ந்த) குதிரைகள், (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) கால்நடைகள், சாகுபடி நிலங்கள் ஆகிய (மனதுக்கு) ஆசையூட்டப்பட்டவற்றை நேசிப்பது மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டிருக்கிறது; இவை (யெல்லாம் நிலையற்ற) உலக வாழ்வின் சுகப் பொருள்களாகும்; அல்லாஹ்விடத்திலோ அழகிய தங்குமிடமுண்டு.
3:75 وَمِنْ اَهْلِ الْكِتٰبِ مَنْ اِنْ تَاْمَنْهُ بِقِنْطَارٍ يُّؤَدِّهٖۤ اِلَيْكَۚ وَمِنْهُمْ مَّنْ اِنْ تَاْمَنْهُ بِدِيْنَارٍ لَّا يُؤَدِّهٖۤ اِلَيْكَ اِلَّا مَا دُمْتَ عَلَيْهِ قَآٮِٕمًا ؕ ذٰ لِكَ بِاَنَّهُمْ قَالُوْا لَيْسَ عَلَيْنَا فِىْ الْاُمِّيّٖنَ سَبِيْلٌۚ وَيَقُوْلُوْنَ عَلَى اللّٰهِ الْكَذِبَ وَ هُمْ يَعْلَمُوْنَ
3:75. (நபியே!) வேதத்தையுடையோரில் சிலர் இருக்கிறார்கள்; அவர்களிடம் நீர் ஒரு (பொற்) குவியலை நம்பி ஒப்படைத்தாலும், அவர்கள் அதை (ஒரு குறைவும் இல்லாமல் கேட்கும் போது) உம்மிடம் திருப்பிக் கொடுத்துவிடுவார்கள்; அவர்களில் இன்னும் சிலர் இருக்கிறார்கள்; அவர்களிடம் (ஒரே) ஒரு தங்கக்காசை நம்பி ஒப்படைத்தாலும், நீர் அவர்களிடம் தொடர்ந்து நின்றிருந்தாலே தவிர, அவர்கள் அதை உமக்குத் திருப்பிக் கொடுக்கமாட்டார்கள்; அதற்குக் காரணம், "எழுதப் படிக்கத் தெரியாத சமுதாயத்தின் விஷயத்தில் நம்மைக் குற்றம் பிடிக்க (அவர்களுக்கு) வழியில்லை" என்று அவர்கள் கூறுவதுதான்; மேலும், அவர்கள் அறிந்துகொண்டே அல்லாஹ்வின் மீது பொய் கூறுகிறார்கள்.
4:20 وَاِنْ اَرَدْتُّمُ اسْتِبْدَالَ زَوْجٍ مَّكَانَ زَوْجٍ ۙ وَّاٰتَيْتُمْ اِحْدٰٮهُنَّ قِنْطَارًا فَلَا تَاْخُذُوْا مِنْهُ شَيْئًا ؕ اَ تَاْخُذُوْنَهٗ بُهْتَانًا وَّاِثْمًا مُّبِيْنًا
4:20. நீங்கள் ஒரு மனைவி(யை விலக்கிவிட்டு அவளு)க்கு பதிலாக மற்றொரு மனைவியை (மணந்துகொள்ள) நாடினால், அவர்களில் ஒருத்திக்கு (முந்தைய மனைவிக்கு) ஒரு பொருட்குவியலையே கொடுத்திருந்த போதிலும், அதிலிருந்து எதையும் (திரும்ப) எடுத்துக் கொள்ளாதீர்கள். அபாண்டமாகவும், பகிரங்கமான பாவமாகவும் (குற்றம் சுமத்தி) அதனை (திரும்பி) எடுக்கிறீர்களா?
12:70 فَلَمَّا جَهَّزَهُمْ بِجَهَازِهِمْ جَعَلَ السِّقَايَةَ فِىْ رَحْلِ اَخِيْهِ ثُمَّ اَذَّنَ مُؤَذِّنٌ اَ يَّـتُهَا الْعِيْرُ اِنَّكُمْ لَسَارِقُوْنَ
12:70. பின்னர், அவர்களுடைய பொருள்களை அவர்களுக்குச் சித்தம் செய்துகொடுத்தபோது, தம் சகோதரர் (புன்யாமீன்) உடைய சுமையில் (பானங்கள் பருகுவதற்கான ஒரு பொற்) குவளையை வைத்துவிட்டார்; பிறகு, (அவர்கள் புறப்பட்டுச் செல்லலானதும் அரசாங்க) அறிவிப்பாளர் ஒருவர், "ஒட்டகக் கூட்டத்தார்களே! நிச்சயமாக நீங்கள் திருடர்களே!" என்று கூறினார்.