முகம்
2:115   وَلِلّٰهِ الْمَشْرِقُ وَالْمَغْرِبُ‌ فَاَيْنَمَا تُوَلُّوْا فَثَمَّ وَجْهُ اللّٰهِ‌ؕ اِنَّ اللّٰهَ وَاسِعٌ عَلِيْمٌ‏
2:115. கிழக்கும், மேற்கும், அல்லாஹ்வுக்கே (சொந்தம்); நீங்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் இருக்கிறது; நிச்சயமாக அல்லாஹ் விசாலமானவன்; எல்லாம் அறிந்தவன்.
2:144   قَدْ نَرٰى تَقَلُّبَ وَجْهِكَ فِى السَّمَآءِ‌‌ۚ فَلَـنُوَلِّيَنَّكَ قِبْلَةً تَرْضٰٮهَا‌ فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَـرَامِؕ وَحَيْثُ مَا كُنْتُمْ فَوَلُّوْا وُجُوْهَكُمْ شَطْرَهٗ ‌ؕ وَاِنَّ الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ لَيَـعْلَمُوْنَ اَنَّهُ الْحَـقُّ مِنْ رَّبِّهِمْ‌ؕ وَمَا اللّٰهُ بِغَافِلٍ عَمَّا يَعْمَلُوْنَ‏
2:144. நபியே! நாம் உம் முகம் அடிக்கடி வானத்தை நோக்கக் காண்கிறோம்; எனவே, நீர் விரும்பும் கிப்லாவின் பக்கம் உம்மைத் திடமாகத் திருப்பி விடுகிறோம்; ஆகவே, நீர் (கஃபா எனும்) மஸ்ஜிதுல் ஹராமின் பக்கம் உம் முகத்தைத் திருப்பிக் கொள்ளும். (முஸ்லிம்களே!) இன்னும் நீங்கள் எங்கிருந்தாலும் (தொழுகையின் போது) உங்கள் முகங்களை அந்த (கிப்லாவின்) பக்கமே திருப்பிக் கொள்ளுங்கள்; நிச்சயமாக எவர்கள் வேதம் கொடுக்கப்பட்டிருக்கின்றார்களோ அவர்கள், இது அவர்களுடைய இறைவனிடமிருந்து வந்த உண்மை என்பதை அறிவார்கள்; அல்லாஹ் அவர்கள் செய்வதைப் பற்றிப் பராமுகமானவனாக இல்லை.
2:149   وَمِنْ حَيْثُ خَرَجْتَ فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَـرَامِؕ وَاِنَّهٗ لَـلْحَقُّ مِنْ رَّبِّكَؕ وَمَا اللّٰهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُوْنَ‏
2:149. ஆகவே, (நபியே!) நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் (தொழுகையின் போது) உம் முகத்தை (கஃபா எனும்) மஸ்ஜிதுல் ஹராமின் பக்கமே திருப்பிக்கொள்வீராக! நிச்சயமாக இது தான் உம் இறைவனிடமிருந்து (வந்து)ள்ள உண்மை; அல்லாஹ் நீங்கள் செய்பவைப்பற்றிப் பராமுகமானவனாக இல்லை.
2:150   وَمِنْ حَيْثُ خَرَجْتَ فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَـرَامِؕ وَحَيْثُ مَا كُنْتُمْ فَوَلُّوْا وُجُوْهَڪُمْ شَطْرَهٗ ۙ لِئَلَّا يَكُوْنَ لِلنَّاسِ عَلَيْكُمْ حُجَّةٌ اِلَّا الَّذِيْنَ ظَلَمُوْا مِنْهُمْ فَلَا تَخْشَوْهُمْ وَاخْشَوْنِىْ وَلِاُتِمَّ نِعْمَتِىْ عَلَيْكُمْ وَلَعَلَّكُمْ تَهْتَدُوْنَ ۙ‌ۛ‏
2:150. ஆகவே, (நபியே!) நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் (தொழுகையின் போது), உம் முகத்தை (கஃபா என்னும்) மஸ்ஜிதுல் ஹராமின் பக்கமே திருப்பிக்கொள்ளும்; (நம்பிக்கையாளர்களே!) உங்களில் அநியாயக்காரர்களைத் தவிர மற்ற மனிதர்கள் உங்களுடன் வீண்தர்க்கம் செய்ய இடங்கொடாமல் இருக்கும் பொருட்டு, நீங்களும் எங்கிருந்தாலும் (தொழுகையின் போது கஃபாவாகிய) அதன் பக்கமே உங்களுடைய முகங்களைத் திருப்பிக்கொள்ளுங்கள்; எனவே, அவர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சுங்கள்; இன்னும், என்னுடைய அருட்கொடையை உங்கள்மீது முழுமையாக்கி வைப்பதற்கும், நீங்கள் நேர்வழியினைப் பெறுவதற்கும் (பிறருக்கு அஞ்சாது, எனக்கே அஞ்சுங்கள்).
2:177   لَيْسَ الْبِرَّ اَنْ تُوَلُّوْا وُجُوْهَكُمْ قِبَلَ الْمَشْرِقِ وَ الْمَغْرِبِ وَلٰـكِنَّ الْبِرَّ مَنْ اٰمَنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ وَالْمَلٰٓٮِٕکَةِ وَالْكِتٰبِ وَالنَّبِيّٖنَ‌ۚ وَاٰتَى الْمَالَ عَلٰى حُبِّهٖ ذَوِى الْقُرْبٰى وَالْيَتٰمٰى وَالْمَسٰكِيْنَ وَابْنَ السَّبِيْلِۙ وَالسَّآٮِٕلِيْنَ وَفِى الرِّقَابِ‌ۚ وَاَقَامَ الصَّلٰوةَ وَاٰتَى الزَّکٰوةَ ‌ ۚ وَالْمُوْفُوْنَ بِعَهْدِهِمْ اِذَا عٰهَدُوْا ۚ وَالصّٰبِرِيْنَ فِى الْبَاْسَآءِ وَالضَّرَّآءِ وَحِيْنَ الْبَاْسِؕ اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ صَدَقُوْا ؕ وَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُتَّقُوْنَ‏
2:177. புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக்கொள்வதில் இல்லை; ஆனால், புண்ணியம் உடையவர்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதிநாளின் மீதும், வானவர்கள் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் நம்பிக்கை கொண்டு, செல்வத்தைத் தம் விருப்பத்தின் மீது உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கருக்கும் யாசிப்பவர்களுக்கும், அடிமைகளின் மீட்புக்காகக் கொடுத்தவரும்; இன்னும், தொழுகையைக் கடைப்பிடித்து ஜகாத்தையும் கொடுத்து, இன்னும் தாம் வாக்களித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோரும்; (வறுமை, இழப்பு போன்ற) துன்பத்திலும், (நோய் நொடிகள் போன்றவற்றின்) கஷ்டத்திலும், யுத்த சமயத்திலும், பொறுமையுடன் இருந்தவர்களுமாவர்; அத்தகையோர்தாம் உண்மையாளர்கள்; இன்னும், அவர்கள்தாம் (இறைவனை) அஞ்சியவர்கள்.
2:272   لَيْسَ عَلَيْكَ هُدٰٮهُمْ وَلٰـكِنَّ اللّٰهَ يَهْدِىْ مَنْ يَّشَآءُ‌ ؕ وَمَا تُنْفِقُوْا مِنْ خَيْرٍ فَلِاَنْفُسِكُمْ‌ؕ وَمَا تُنْفِقُوْنَ اِلَّا ابْتِغَآءَ وَجْهِ اللّٰهِ‌ؕ وَمَا تُنْفِقُوْا مِنْ خَيْرٍ يُّوَفَّ اِلَيْكُمْ وَاَنْـتُمْ لَا تُظْلَمُوْنَ‏
2:272. (நபியே!) அவர்களை நேர்வழியில் சேர்ப்பது உமது பொறுப்பன்று; ஆனால், தான் நாடியவர்களை அல்லாஹ் நேர்வழியில் செலுத்துகின்றான்; இன்னும், நல்லதில் நீங்கள் எதைச் செலவிடினும், அது உங்களுக்கே (நன்மை) ஆகும்; அல்லாஹ்வின் திருப்தியைப் பெறுவதற்காகவே அன்றி (வீண் பெருமைக்காகச்) செலவு செய்யாதீர்கள்; நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவு செய்தாலும் (அதற்குரிய நற்பலன்) உங்களுக்கு நிறைவாக வழங்கப்படும்; நீங்கள் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள்.
3:106   يَّوْمَ تَبْيَضُّ وُجُوْهٌ وَّتَسْوَدُّ وُجُوْهٌ  ؕ فَاَمَّا الَّذِيْنَ اسْوَدَّتْ وُجُوْهُهُمْ اَكَفَرْتُمْ بَعْدَ اِيْمَانِكُمْ فَذُوْقُوا الْعَذَابَ بِمَا كُنْتُمْ تَكْفُرُوْنَ‏
3:106. அந்த (மறுமை) நாளில் சில முகங்கள் (மகிழ்ச்சியினால் பிரகாசமாய்) வெண்மையாகவும், சில முகங்கள் (துக்கத்தால்) கறுத்தும் இருக்கும்; கறுத்த முகங்களுடையோரிடம், "நீங்கள் நம்பிக்கை கொண்டபின் நிராகரித்து விட்டீர்களா? (அப்படியானால்,) நீங்கள் நிராகரித்ததற்காக வேதனையைச் சுவையுங்கள்" (என்று கூறப்படும்).
3:107   وَاَمَّا الَّذِيْنَ ابْيَـضَّتْ وُجُوْهُهُمْ فَفِىْ رَحْمَةِ اللّٰهِ ؕ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ‏
3:107. எவர்களுடைய முகங்கள் (மகிழ்ச்சியினால் பிரகாசமாய்) வெண்மையாக இருக்கின்றனவோ, அவர்கள் அல்லாஹ்வின் அருளில் இருப்பார்கள்; அவர்கள் அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.
4:43   يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَقْرَبُوا الصَّلٰوةَ وَاَنْـتُمْ سُكَارٰى حَتّٰى تَعْلَمُوْا مَا تَقُوْلُوْنَ وَلَا جُنُبًا اِلَّا عَابِرِىْ سَبِيْلٍ حَتّٰى تَغْتَسِلُوْا‌ ؕ وَاِنْ كُنْتُمْ مَّرْضٰۤى اَوْ عَلٰى سَفَرٍ اَوْ جَآءَ اَحَدٌ مِّنْكُمْ مِّنَ الْغَآٮِٕطِ اَوْ لٰمَسْتُمُ النِّسَآءَ فَلَمْ تَجِدُوْا مَآءً فَتَيَمَّمُوْا صَعِيْدًا طَيِّبًا فَامْسَحُوْا بِوُجُوْهِكُمْ وَاَيْدِيْكُمْ‌ ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَفُوًّا غَفُوْرًا‏
4:43. நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் போதையில் இருக்கும்போது, நீங்கள் கூறுவது இன்னது என்று நீங்கள் அறிந்துகொள்ளும் வரை தொழுகைக்கு நெருங்காதீர்கள்; அன்றியும், குளிப்பு கடமையாக இருக்கும்போது குளிக்கும் வரை (பள்ளிக்குச் செல்லாதீர்கள்; பள்ளிவாசல் வழியாக) பாதையைக் கடந்து சென்றால் தவிர; இன்னும், நீங்கள் நோயாளிகளாகவோ பயணத்திலோ இருந்தால், அல்லது மலஜலம் கழிக்குமிடத்திலிருந்து வந்தால் அல்லது பெண்களைத் தீண்டியோ இருந்து (சுத்தம் செய்துகொள்ள) தண்ணீரைப் பெறாவிடின் சுத்தமான மண்ணைத் தொட்டு உங்களுடைய முகங்களையும், உங்களுடைய கைகளையும் தடவி (தயம்மும் செய்து) கொள்ளுங்கள்; (இதன் பின் தொழலாம்;) நிச்சயமாக அல்லாஹ் பிழை பொறுப்பவனாகவும், மன்னிப்பவனாகவும் இருக்கின்றான்.
4:47   يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ اٰمِنُوْا بِمَا نَزَّلْنَا مُصَدِّقًا لِّمَا مَعَكُمْ مِّنْ قَبْلِ اَنْ نَّـطْمِسَ وُجُوْهًا فَنَرُدَّهَا عَلٰٓى اَدْبَارِهَاۤ اَوْ نَلْعَنَهُمْ كَمَا لَعَنَّاۤ اَصْحٰبَ السَّبْتِ‌ؕ وَكَانَ اَمْرُ اللّٰهِ مَفْعُوْلًا‏
4:47. வேதம் வழங்கப்பட்டவர்களே! நாம் முகங்களை மாற்றி, அவற்றைப் பின்புறமாகத் திருப்பிவிடுவதற்கு முன்னே, அல்லது சனிக்கிழமையுடையோரை நாம் சபித்ததுபோன்று அவர்களைச் சபிக்கும் முன்னே, உங்களிடமுள்ள (வேதத்)தை உண்மைப்படுத்துகின்ற நாம் இறக்கிய (இவ்வேதத்)தை (குர்ஆனை) நம்புங்கள்; அல்லாஹ்வின் கட்டளை நிறைவேற்றப்பட்டேதீரும்.
5:6   يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا قُمْتُمْ اِلَى الصَّلٰوةِ فَاغْسِلُوْا وُجُوْهَكُمْ وَاَيْدِيَكُمْ اِلَى الْمَرَافِقِ وَامْسَحُوْا بِرُءُوْسِكُمْ وَاَرْجُلَكُمْ اِلَى الْـكَعْبَيْنِ‌ ؕ وَاِنْ كُنْتُمْ جُنُبًا فَاطَّهَّرُوْا‌ ؕ وَاِنْ كُنْتُمْ مَّرْضَىٰۤ اَوْ عَلٰى سَفَرٍ اَوْ جَآءَ اَحَدٌ مِّنْكُمْ مِّنَ الْغَآٮِٕطِ اَوْ لٰمَسْتُمُ النِّسَآءَ فَلَمْ تَجِدُوْا مَآءً فَتَيَمَّمُوْا صَعِيْدًا طَيِّبًا فَامْسَحُوْا بِوُجُوْهِكُمْ وَاَيْدِيْكُمْ مِّنْهُ‌ ؕ مَا يُرِيْدُ اللّٰهُ لِيَجْعَلَ عَلَيْكُمْ مِّنْ حَرَجٍ وَّلٰـكِنْ يُّرِيْدُ لِيُطَهِّرَكُمْ وَ لِيُتِمَّ نِعْمَتَهٗ عَلَيْكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ‏
5:6. நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் தொழுகைக்குத் தயாராகும்போது, (முன்னதாக) உங்கள் முகங்களையும், முழங்கைகள்வரை உங்கள் கைகளையும் கழுவிக்கொள்ளுங்கள்; உங்களுடைய தலைகளை (ஈரக்கையால்) தடவி (மஸ்ஹு செய்து) கொள்ளுங்கள்; உங்கள் கால்களை கணுக்கால் வரை(க் கழுவிக் கொள்ளுங்கள்); நீங்கள் பெருந்தொடக்குடையோராக (குளிக்க கடமைப்பட்டோராக) இருந்தால் (குளித்து) தூய்மையாக்கிக்கொள்ளுங்கள்; தவிர, நீங்கள் நோயாளிகளாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால், அல்லது உங்களில் எவரும் மல ஜலம் கழித்துவந்தாலும், அல்லது நீங்கள் பெண்களைத் தீண்டி (உடல் உறவுகொண்டு) இருந்தாலும், (உங்களைச் சுத்தப்படுத்திக்கொள்ள) நீங்கள் தண்ணீரைப் பெறாவிட்டால், சுத்தமான மண்ணை நீங்கள் நாடி (இரு கைகளால் அடித்து) அதிலிருந்து உங்கள் முகங்களையும், உங்களுடைய கைகளையும் தடவி (தயம்மும் செய்து) கொள்ளுங்கள்; அல்லாஹ் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் கொடுக்க விரும்பவில்லை; ஆனால், அவன் உங்களைத் தூய்மைப்படுத்தவும்; இன்னும், நீங்கள் அவனுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு, தனது அருட்கொடையை உங்கள்மீது முழுமையாக்கவும் விரும்புகிறான்.
6:52   وَلَا تَطْرُدِ الَّذِيْنَ يَدْعُوْنَ رَبَّهُمْ بِالْغَدٰوةِ وَالْعَشِىِّ يُرِيْدُوْنَ وَجْهَهٗ‌ ؕ مَا عَلَيْكَ مِنْ حِسَابِهِمْ مِّنْ شَىْءٍ وَّمَا مِنْ حِسَابِكَ عَلَيْهِمْ مِّنْ شَىْءٍ فَتَطْرُدَهُمْ فَتَكُوْنَ مِنَ الظّٰلِمِيْنَ‏
6:52. (நபியே!) காலையிலும் மாலையிலும், தங்களுடைய இறைவனை அவனுடைய பொருத்தத்தை நாடியவர்களாகப் பிரார்த்தித்துக் கொண்டிருப்போரை நீர் விரட்டிவிடாதீர்; அவர்களுடைய கேள்வி கணக்குகளைப்பற்றி உம்மீது பொறுப்பில்லை; உம்முடைய கேள்வி கணக்குப் பற்றி அவர்கள்மீதும் யாதொரு பொறுப்புமில்லை; எனவே, நீர் விரட்டிவிட்டால் நீரும் அநியாயம் செய்பவர்களில் ஒருவராகி விடுவீர்.
6:79   اِنِّىْ وَجَّهْتُ وَجْهِىَ لِلَّذِىْ فَطَرَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ حَنِيْفًا‌ وَّمَاۤ اَنَا مِنَ الْمُشْرِكِيْنَ‌ۚ‏
6:79. "வானங்களையும், பூமியையும் படைத்தவன் பக்கமே நான் என் முகத்தைத் திருப்பிக் கொண்டேன்; (நான் சத்திய வழியின்பால்) சாய்ந்தவனாக இருக்கும் நிலையில்; இன்னும், நான் இணைவைப்போரில் (ஒருவனாக) இல்லை" (என்று கூறினார்).
7:29   قُلْ اَمَرَ رَبِّىْ بِالْقِسْطِ‌ وَاَقِيْمُوْا وُجُوْهَكُمْ عِنْدَ كُلِّ مَسْجِدٍ وَّادْعُوْهُ مُخْلِصِيْنَ لَـهُ الدِّيْنَ ‌   ؕ كَمَا بَدَاَكُمْ تَعُوْدُوْنَؕ‏
7:29. "என் இறைவன், நீதத்தைக் கொண்டே ஏவியுள்ளான்; ஒவ்வொரு தொழுமிடத்திலும் (தொழுகையின் போது) உங்கள் முகங்களை அவன் பக்கமே நிலைப்படுத்திக் கொள்ளுங்கள்; வணக்கத்தை அவனுக்கே கலப்பற்றதாக ஆக்கியவர்களாக அவனை அழையுங்கள்; உங்களை அவன் துவக்கியது போலவே (அவனிடம்) நீங்கள் மீளுவீர்கள்!" என்று நீர் கூறும்.
8:50   وَ لَوْ تَرٰٓى اِذْ يَتَوَفَّى الَّذِيْنَ كَفَرُوا‌ ۙ الْمَلٰٓٮِٕكَةُ يَضْرِبُوْنَ وُجُوْهَهُمْ وَاَدْبَارَهُمْۚ وَذُوْقُوْا عَذَابَ الْحَرِيْقِ‏
8:50. வானவர்கள் நிராகரிப்பாளர்களின் உயிர்களைக் கைப்பற்றும் போது நீங்கள் பார்ப்பீர்களானால், அவர்களுடைய முகங்களிலும், பின்புறங்களிலும் அடிப்பார்கள். மேலும், "எரிக்கும் நரக வேதனையைச் சுவையுங்கள்" என்றும் கூறுவார்கள்.
10:27   وَالَّذِيْنَ كَسَبُوا السَّيِّاٰتِ جَزَآءُ سَيِّئَةٍ ۢ بِمِثْلِهَا ۙ وَتَرْهَقُهُمْ ذِلَّـةٌ  ؕ مَا لَهُمْ مِّنَ اللّٰهِ مِنْ عَاصِمٍ‌‌ ۚ كَاَنَّمَاۤ اُغْشِيَتْ وُجُوْهُهُمْ قِطَعًا مِّنَ الَّيْلِ مُظْلِمًا ‌ؕ اُولٰٓٮِٕكَ اَصْحٰبُ النَّارِ‌ ؕ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ‏
10:27. ஆனால், தீமைகளைச் சம்பாதிப்பவர்களுக்கு, (அவர்கள் செய்த) தீமைக்குக் கூலியாக அது போன்ற தீமையேயாகும்! அவர்களை இழிவு சூழ்ந்துகொள்ளும்; அவர்களை அல்லாஹ்விடமிருந்து காப்பாற்றுபவர் எவருமிலர்; அவர்களுடைய முகங்கள் இருளான இரவின் ஒரு பகுதியால் மூடிக்கொள்ளப்பட்டதைப் போல் இருக்கும்: அவர்கள் நரகநெருப்புக்கு உரியவர்கள்; அவர்கள் அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.
10:105   وَاَنْ اَقِمْ وَجْهَكَ لِلدِّيْنِ حَنِيْفًا‌ ۚ وَلَا تَكُوْنَنَّ مِنَ الْمُشْرِكِيْنَ‏
10:105. மேலும், உம்முடைய முகத்தை சத்திய வழியில் நின்று (இந்த) மார்க்கத்தின் பக்கமே நிலைபெறச் செய்வீராக! இன்னும், இணைவைப்பவர்களில் ஒருவராக நீர் ஆகிவிட வேண்டாம்.
12:93   اِذْهَبُوْا بِقَمِيْصِىْ هٰذَا فَاَلْقُوْهُ عَلٰى وَجْهِ اَبِىْ يَاْتِ بَصِيْرًا‌ۚ وَاْتُوْنِىْ بِاَهْلِكُمْ اَجْمَعِيْنَ‏
12:93. "என்னுடைய இந்தச் சட்டையை நீங்கள் (எடுத்துக்) கொண்டுசென்று, என் தந்தையின் முகத்தில் அதனைப் போடுங்கள்; அவர் பார்வையுடையவராக ஆகிவிடுவார்; இன்னும், உங்களுடைய குடும்பத்தார் அனைவரையும் என்னிடம் கொண்டுவாருங்கள்" (என்று கூறினார்).
12:96   فَلَمَّاۤ اَنْ جَآءَ الْبَشِيْرُ اَلْقٰٮهُ عَلٰى وَجْهِهٖ فَارْتَدَّ بَصِيْرًا ؕۚ قَالَ اَلَمْ اَقُلْ لَّـكُمْ‌ ۚ‌ ۙ اِنِّىْۤ اَعْلَمُ مِنَ اللّٰهِ مَا لَا تَعْلَمُوْنَ‏
12:96. பிறகு, நன்மாராயம் கூறுபவர் வந்து, அதனை (சட்டையை) அவர் முகத்தில் போட்டபோது அவர் மீண்டும் பார்வையுடையோரானார்; "நீங்கள் அறியாததையெல்லாம் அல்லாஹ்விடமிருந்து நிச்சயமாக நான் அறிவேன் என்று உங்களிடம் கூறவில்லையா?" என்று (அவர்களை நோக்கிக்) கூறினார்.
14:50   سَرَابِيْلُهُمْ مِّنْ قَطِرَانٍ وَّتَغْشٰى وُجُوْهَهُمُ النَّارُۙ‏
14:50. அவர்களுடைய ஆடைகள் தாரால் (செய்யப்பட்டு) இருக்கும்; இன்னும், அவர்களுடைய முகங்களை நெருப்பு மூடி இருக்கும்.
16:58   وَاِذَا بُشِّرَ اَحَدُهُمْ بِالْاُنْثٰى ظَلَّ وَجْهُهٗ مُسْوَدًّا وَّهُوَ كَظِيْمٌ‌ۚ‏
16:58. அவர்களில் ஒருவனுக்குப் பெண்குழந்தை (பிறந்திருப்பது) கொண்டு நன்மாராயம் கூறப்பட்டால் அவன் முகம் கறுத்துவிடுகிறது; அவன் கோபமுடையவனாகிறான்.
17:97   وَمَنْ يَّهْدِ اللّٰهُ فَهُوَ الْمُهْتَدِ‌ ۚ وَمَنْ يُّضْلِلْ فَلَنْ تَجِدَ لَهُمْ اَوْلِيَآءَ مِنْ دُوْنِهٖ‌ ؕ وَنَحْشُرُهُمْ يَوْمَ الْقِيٰمَةِ عَلٰى وُجُوْهِهِمْ عُمْيًا وَّبُكْمًا وَّصُمًّا‌ ؕ مَاْوٰٮهُمْ جَهَـنَّمُ‌ ؕ كُلَّمَا خَبَتْ زِدْنٰهُمْ سَعِيْرًا‏
17:97. அல்லாஹ் யாரை நேர்வழியில் செலுத்துகிறானோ, அவர்தாம் நேர்வழிபெற்றவர் ஆவார்; இன்னும், அவன் யாரை வழிகேட்டில் விடுகிறானோ அ(த்தகைய)வருக்கு உதவி செய்வோர் அவனையன்றி வேறு எவரையும் நீர் காணமாட்டீர்; மேலும், அவர்களைக் குருடர்களாகவும், ஊமையர்களாகவும், செவிடர்களாகவும் தம் முகங்களில் குப்புறவரும்படி செய்து மறுமைநாளில் ஒன்றுசேர்ப்போம்; இன்னும், அவர்கள் ஒதுங்கும் இடம் நரகமேயாகும்; அது (நரக நெருப்பு) அணையும் போதெல்லாம் நாம் அவர்களுக்கு நெருப்பை அதிகமாக்குவோம்.
18:28   وَاصْبِرْ نَـفْسَكَ مَعَ الَّذِيْنَ يَدْعُوْنَ رَبَّهُمْ بِالْغَدٰوةِ وَالْعَشِىِّ يُرِيْدُوْنَ وَجْهَهٗ‌ وَلَا تَعْدُ عَيْنٰكَ عَنْهُمْ‌ ۚ تُرِيْدُ زِيْنَةَ الْحَيٰوةِ الدُّنْيَا‌ ۚ وَ لَا تُطِعْ مَنْ اَغْفَلْنَا قَلْبَهٗ عَنْ ذِكْرِنَا وَاتَّبَعَ هَوٰٮهُ وَكَانَ اَمْرُهٗ فُرُطًا‏
18:28. இன்னும், (நபியே!) எவர்கள் தம் இறைவனுடைய திருப்பொருத்தத்தை நாடியவர்களாகக் காலையிலும், மாலையிலும் அவனைப் பிரார்த்தனை செய்துகொண்டிருக்கிறார்களோ, அவர்களுடன் நீரும் பொறுமையை மேற்கொண்டிருப்பீராக! இன்னும், உலக வாழ்க்கையின் அலங்காரத்தை நாடி அ(த்தகைய)வர்களை விட்டும் உம் இருகண்களையும் திருப்பிவிடாதீர்! இன்னும், எவனுடைய இதயத்தை நம்மை நினைவு கூர்வதிலிருந்து நாம் திருப்பிவிட்டோமோ அவனுக்கு நீர் கீழ்ப்படியாதீர்; ஏனெனில், அவன் தன் இச்சையைப் பின்பற்றியதனால் அவனுடைய காரியம் வரம்புமீறியதாகிவிட்டது.
18:29   وَقُلِ الْحَـقُّ مِنْ رَّبِّكُمْ‌ فَمَنْ شَآءَ فَلْيُؤْمِنْ وَّمَنْ شَآءَ فَلْيَكْفُرْ ‌ۙاِنَّاۤ اَعْتَدْنَا لِلظّٰلِمِيْنَ نَارًا ۙ اَحَاطَ بِهِمْ سُرَادِقُهَا‌ ؕ وَاِنْ يَّسْتَغِيْثُوْا يُغَاثُوْا بِمَآءٍ كَالْمُهْلِ يَشْوِى الْوُجُوْهَ‌ؕ بِئْسَ الشَّرَابُ وَسَآءَتْ مُرْتَفَقًا‏
18:29. (நபியே!) இன்னும் நீர் கூறுவீராக! "இந்தச் சத்திய(வேத)ம் உங்கள் இறைவனிடமிருந்து (வந்து)ள்ளது; ஆகவே, விரும்புபவர் (அதனை) நம்பிக்கைகொள்ளட்டும்; விரும்புபவர் (அதனை) நிராகரிக்கட்டும்; அநியாயக்காரர்களுக்கு (நரக) நெருப்பை நிச்சயமாக நாம் சித்தப்படுத்தியுள்ளோம்; அதனுடைய சுவர்கள் அவர்களைச் சூழ்ந்துகொள்ளும்; அவர்கள் (தண்ணீர் கேட்டு) இரட்சிக்கத் தேடினால் உருக்கப்பட்ட செம்பு போன்ற தண்ணீரைக் கொண்டே இரட்சிக்கப்படுவார்கள்; (அவர்களுடைய) முகங்களை அது சுட்டுக்கருக்கிவிடும்; மிகக்கேடான பானமாகும் அது! இன்னும், இறங்கும் தலத்தில் அதுவே மிகக்கெட்டதாகும்."
21:39   لَوْ يَعْلَمُ الَّذِيْنَ كَفَرُوْا حِيْنَ لَا يَكُفُّوْنَ عَنْ وُّجُوْهِهِمُ النَّارَ وَلَا عَنْ ظُهُوْرِهِمْ وَلَا هُمْ يُنْصَرُوْنَ‏
21:39. தம் முகங்களைவிட்டும், தம் முதுகுகளை விட்டும் (நரக) நெருப்பைத் தடுத்துக்கொள்ள முடியாமலும், (எவராலும்) உதவி செய்யப்படாமலும் இருப்பார்களே அந்த நேரத்தை நிராகரிப்பாளர்கள் அறிந்து கொள்வார்களானால், (இறுதி நேரம் பற்றிக் கேட்டுக்கொண்டிருக்க மாட்டார்கள்).
22:11   وَمِنَ النَّاسِ مَنْ يَّعْبُدُ اللّٰهَ عَلٰى حَرْفٍ‌ ‌ۚ فَاِنْ اَصَابَهٗ خَيْرٌ اۨطْمَاَنَّ بِهٖ‌ ۚ وَاِنْ اَصَابَتْهُ فِتْنَةُ اۨنْقَلَبَ عَلٰى وَجْهِهٖ‌ۚ خَسِرَ الدُّنْيَا وَالْاٰخِرَةَ ‌ ؕ ذٰ لِكَ هُوَ الْخُسْرَانُ الْمُبِيْنُ‏
22:11. இன்னும், மனிதர்களில் (ஓர் உறுதியும் இல்லாமல்) ஓரத்தில் நின்றுகொண்டு அல்லாஹ்வை வணங்குகிறவனும் இருக்கிறான்; அவனுக்கு ஒரு நன்மை ஏற்படுமாயின் அதைக் கொண்டு அவன் திருப்தியடைந்துகொள்கிறான்; ஆனால், அவனுக்கு ஒரு சோதனை ஏற்படுமாயின் அதைக்கொண்டு அவன் தன் முகத்தின் மீது புரண்டு (திரும்பி) விடுகிறான்; இத்தகையவன் இம்மையிலும் மறுமையிலும் நஷ்டமடைகிறான்; இதுதான் தெளிவான நஷ்டமாகும்.
22:72   وَاِذَا تُتْلٰى عَلَيْهِمْ اٰيٰـتُـنَا بَيِّنٰتٍ تَعْرِفُ فِىْ وُجُوْهِ الَّذِيْنَ كَفَرُوا الْمُنْكَرَ‌ ؕ يَكَادُوْنَ يَسْطُوْنَ بِالَّذِيْنَ يَتْلُوْنَ عَلَيْهِمْ اٰيٰتِنَا‌ ؕ قُلْ اَفَاُنَبِّئُكُمْ بِشَرٍّ مِّنْ ذٰ لِكُمُ‌ ؕ اَلنَّارُؕ وَعَدَهَا اللّٰهُ الَّذِيْنَ كَفَرُوْا‌ ۚ وَبِئْسَ الْمَصِيْرُ‏
22:72. இன்னும், அவர்கள்மீது நம்முடைய தெளிவான வசனங்கள் ஓதிக்காண்பிக்கப்பட்டால் நிராகரிப்போருடைய முகங்களில் வெறுப்பை நீர் அறிவீர்; அவர்களிடம் நம் வசனங்களை ஓதிக்காட்டுபவர்களை அவர்கள் தாக்கவும் நெருங்குவார்கள்: "இன்னும், இதனைவிடக் கெட்டதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? அதுதான் நரக நெருப்பு; அதனை அல்லாஹ் நிராகரிப்பவர்களுக்கு வாக்களித்துள்ளான்; மேலும், அது மீளுமிடத்தில் மிகவும் கெட்டது" என்று (நபியே!) நீர் கூறுவீராக!
23:104   تَلْفَحُ وُجُوْهَهُمُ النَّارُ وَهُمْ فِيْهَا كٰلِحُوْنَ‏
23:104. (நரக) நெருப்பு அவர்களுடைய முகங்களைக் கரிக்கும்; இன்னும், அதில் அவர்கள் விகாரமானவர்களாக இருப்பார்கள்.
25:34   اَلَّذِيْنَ يُحْشَرُوْنَ عَلٰى وُجُوْهِهِمْ اِلٰى جَهَـنَّمَۙ اُولٰٓٮِٕكَ شَرٌّ مَّكَانًا وَّاَضَلُّ سَبِيْلًا‏
25:34. எவர்கள் நரகத்திற்குத் தங்கள் முகம் குப்புற (இழுத்துச் செல்லப் பெற்று) ஒன்று சேர்க்கப்படுவார்களோ, அவர்கள் தங்குமிடத்தால் மிகவும் கெட்டவர்கள்; பாதையால் மிகவும் வழி கெட்டவர்கள்.
27:90   وَمَنْ جَآءَ بِالسَّيِّئَةِ فَكُبَّتْ وُجُوْهُهُمْ فِى النَّارِؕ هَلْ تُجْزَوْنَ اِلَّا مَا كُنْتُمْ تَعْمَلُوْنَ‏
27:90. இன்னும், எவர் தீமையைக் கொண்டு வருகிறாரோ அவர்களுடைய முகங்கள் (நரக) நெருப்பில் குப்புறத் தள்ளப்படும்; "நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்கு அன்றி (வேறு) கூலி கொடுக்கப்படுவீர்களா?" (என்று கூறப்படும்.)
30:30   فَاَقِمْ وَجْهَكَ لِلدِّيْنِ حَنِيْفًا ‌ؕ فِطْرَتَ اللّٰهِ الَّتِىْ فَطَرَ النَّاسَ عَلَيْهَا ‌ؕ لَا تَبْدِيْلَ لِخَـلْقِ اللّٰهِ‌ ؕ ذٰ لِكَ الدِّيْنُ الْقَيِّمُ ۙ  وَلٰـكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُوْنَ ۙ ‏
30:30. ஆகவே, நீர் உம் முகத்தை தூய (இஸ்லாமிய) மார்க்கத்தின் பக்கம் முற்றிலும் திருப்பி நிலைநிறுத்துவீராக! எ(ந்த மார்க்கத்)தில் அல்லாஹ் மனிதர்களைப் படைத்தானோ அதுவே, அவனுடைய (நிலையான) இயற்கை மார்க்கமாகும்; அல்லாஹ்வின் படைத்தலில் எவ்வித மாற்றமும் இல்லை; அதுவே, நிலையான மார்க்கமாகும்; ஆனால், மனிதர்களில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள்.
30:43   فَاَقِمْ وَجْهَكَ لِلدِّيْنِ الْقَيِّمِ مِنْ قَبْلِ اَنْ يَّاْتِىَ يَوْمٌ لَّا مَرَدَّ لَهٗ مِنَ اللّٰهِ‌ يَوْمَٮِٕذٍ يَّصَّدَّعُوْنَ‏
30:43. ஆகவே, அல்லாஹ்விடமிருந்து எவரும் தடுத்துநிறுத்த முடியாத (அந்தத் தீர்ப்பு) நாள் வருவதற்கு முன், நீர் உம் முகத்தை நிலையான மார்க்கத்தில் நிலைநிறுத்துவீராக! அந்நாளில் அவர்கள் (நல்லோர், தீயோர் எனப்) பிரிந்து விடுவார்கள்.
31:22   وَمَنْ يُّسْلِمْ وَجْهَهٗۤ اِلَى اللّٰهِ وَهُوَ مُحْسِنٌ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقٰى‌ؕ وَاِلَى اللّٰهِ عَاقِبَةُ الْاُمُوْرِ‏
31:22. எவர் அவர் நன்மை செய்பவராயிருக்கும் நிலையில் தன் முகத்தை முற்றிலும் அல்லாஹ்வின் பக்கமே திருப்பிக்கொள்கிறாரோ, அவர் நிச்சயமாக உறுதியான கயிற்றைப் பலமாகப் பற்றிப் பிடித்துக்கொண்டார்; இன்னும், காரியங்களின் முடிவெல்லாம் அல்லாஹ்விடமேயுள்ளது.
33:60   لَٮِٕنْ لَّمْ يَنْتَهِ الْمُنٰفِقُوْنَ وَ الَّذِيْنَ فِى قُلُوْبِهِمْ مَّرَضٌ وَّالْمُرْجِفُوْنَ فِى الْمَدِيْنَةِ لَـنُغْرِيَـنَّكَ بِهِمْ ثُمَّ لَا يُجَاوِرُوْنَكَ فِيْهَاۤ اِلَّا قَلِيْلًا ۛۚ  ۖ‏
33:60. நயவஞ்சகர்களும், தங்கள் இதயங்களில் நோய் உள்ளவர்களும், மதீனாவில் பொய்ப்பிரச்சாரம் செய்து கொண்டிருப்பவர்களும் (தம் தீச் செயல்களிலிருந்து) விலகிக்கொள்ளவில்லையானால், அவர்களுக்கு எதிராக நாம் உம்மை நிச்சயமாகச் சாட்டுவோம்; பிறகு, அவர்கள் வெகு சொற்ப (கால)மேயன்றி அங்கு உமது அண்டை அயலார்களாக வசித்திருக்கமாட்டார்கள்.
39:24   اَ فَمَنْ يَّتَّقِىْ بِوَجْهِهٖ سُوْٓءَ الْعَذَابِ يَوْمَ الْقِيٰمَةِ‌ ؕ وَقِيْلَ لِلظّٰلِمِيْنَ ذُوْقُوْا مَا كُنْـتُمْ تَكْسِبُوْنَ‏
39:24. எவன் மறுமை நாளின் தீய வேதனையைத் தன் முகத்தைக் கொண்டேனும் தடுத்துக்கொள்ள முற்படுகிறானோ - அவனா? (சுவர்க்கவாசியாக முடியும்?) மேலும், அநியாயக்காரர்களுக்கு "நீங்கள் சம்பாதித்துக்கொண்டதை (தீவினைப் பயனை) அனுபவியுங்கள்" என்று கூறப்படும்.
39:60   وَيَوْمَ الْقِيٰمَةِ تَرَى الَّذِيْنَ كَذَبُوْا عَلَى اللّٰهِ وُجُوْهُهُمْ مُّسْوَدَّةٌ ؕ اَلَيْسَ فِىْ جَهَنَّمَ مَثْوًى لِّلْمُتَكَبِّرِيْنَ‏
39:60. அன்றியும், அல்லாஹ்வின் மீது பொய்யுரைத்தார்களே அவர்களுடைய முகங்கள் மறுமை நாளில் கறுத்துப்போயிருப்பதை நீர் காண்பீர்; பெருமையடிப்பவர்களின் தங்குமிடம் நரகத்தில் இருக்கிறதல்லவா?
43:17   وَاِذَا بُشِّرَ اَحَدُهُمْ بِمَا ضَرَبَ لِلرَّحْمٰنِ مَثَلًا ظَلَّ وَجْهُهٗ مُسْوَدًّا وَّهُوَ كَظِيْمٌ‏
43:17. அளவற்ற அருளாளனுக்கு அவர்கள் எதனை ஒப்பாக்கினார்களோ அதை (அதாவது பெண் குழந்தையைக்) கொண்டு அவர்களில் ஒருவனுக்கு நற்செய்தி கூறப்படும்பொழுது அவனுடைய முகம் கறுத்துப்போய் விடுகிறது; மேலும், அவன் கோபம் நிரம்பியவனாகவும் ஆகிவிடுகின்றான்.
47:27   فَكَيْفَ اِذَا تَوَفَّتْهُمُ الْمَلٰٓٮِٕكَةُ يَضْرِبُوْنَ وُجُوْهَهُمْ وَاَدْبَارَهُمْ‏
47:27. ஆகவே, அவர்களுடைய முகங்களிலும், அவர்களுடைய முதுகுகளிலும் அடித்து (உயிர்களைக் கைப்பற்றும்) வானவர்கள் அவர்களை மரணமடையச் செய்யும்போது (அவர்கள் நிலைமை) எப்படியிருக்கும்?
48:29   مُحَمَّدٌ رَّسُوْلُ اللّٰهِ‌ ؕ وَالَّذِيْنَ مَعَهٗۤ اَشِدَّآءُ عَلَى الْكُفَّارِ رُحَمَآءُ بَيْنَهُمْ ‌ تَرٰٮهُمْ رُكَّعًا سُجَّدًا يَّبْتَغُوْنَ فَضْلًا مِّنَ اللّٰهِ وَرِضْوَانًا‌سِيْمَاهُمْ فِىْ وُجُوْهِهِمْ مِّنْ اَثَرِ السُّجُوْدِ‌ ؕ ذٰ لِكَ مَثَلُهُمْ فِى التَّوْرٰٮةِ ۛ ۖۚ وَمَثَلُهُمْ فِى الْاِنْجِيْلِ ۛۚ كَزَرْعٍ اَخْرَجَ شَطْئَـهٗ فَاٰزَرَهٗ فَاسْتَغْلَظَ فَاسْتَوٰى عَلٰى سُوْقِهٖ يُعْجِبُ الزُّرَّاعَ لِيَـغِيْظَ بِهِمُ الْكُفَّارَ‌ ؕ وَعَدَ اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ مِنْهُمْ مَّغْفِرَةً وَّاَجْرًا عَظِيْمًا‏
48:29. முஹம்மது, அல்லாஹ்வின் தூதராக இருக்கின்றார்; அவருடன் இருப்பவர்கள், நிராகரிப்பாளர்கள் மீது கண்டிப்பானவர்கள்; தங்களுக்கிடையே இரக்கமிக்கவர்கள்; ருகூஉ செய்பவர்களாகவும், ஸுஜூது செய்பவர்களாகவும், அல்லாஹ்விடமிருந்து (அவன்) அருளையும் (அவனுடைய) திருப்பொருத்தத்தையும் விரும்பி வேண்டுபவர்களாகவும் அவர்களை நீர் காண்பீர்; அவர்களுடைய அடையாளமாவது, அவர்களுடைய முகங்களில் (நெற்றியில்) ஸுஜூதுடைய அடையாளமிருக்கும்; இதுவே, தவ்ராத்திலுள்ள அவர்களின் உதாரணமாகும், இன்ஜீலிலுள்ள அவர்களுக்குரிய உதாரணமாவது: ஒரு பயிரைப் போன்றது; அது தன் முளையைக் கிளப்பி(ய பின்) அதை பலப்படுத்துகிறது; பின்னர், அது பருத்துக் கனமாகி, பிறகு விவசாயிகளை மகிழ்வடையச் செய்யும் விதத்தில், அது தன் அடித்தண்டின் மீது நிமிர்ந்து நிற்கிறது; இவற்றைக்கொண்டு நிராகரிப்பவர்களை அவன் கோபமூட்டுகிறான்; ஆனால், அவர்களில் எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் செய்தார்களோ அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் வாக்களித்திருக்கின்றான்.
51:29   فَاَقْبَلَتِ امْرَاَتُهٗ فِىْ صَرَّةٍ فَصَكَّتْ وَجْهَهَا وَقَالَتْ عَجُوْزٌ عَقِيْمٌ‏
51:29. பின்னர், இதைக் கேட்ட அவருடைய மனைவி சப்தமிட்டவாறு (அவர்கள்) எதிரில் வந்து, தம் முகத்தில் அடித்துக்கொண்டு "நான் மலட்டுக் கிழவியாயிற்றே!" என்று கூறினார்.
54:48   يَوْمَ يُسْحَبُوْنَ فِى النَّارِ عَلٰى وُجُوْهِهِمْؕ ذُوْقُوْا مَسَّ سَقَرَ‏
54:48. அவர்களுடைய முகங்களின் மீது அவர்கள் நரகத்திற்கு இழுத்துச் செல்லப்படும் நாளில், "நரக நெருப்புத் தீண்டுவதைச் சுவைத்துப் பாருங்கள்" (என்று அவர்களுக்குக் கூறப்படும்).
55:27   وَّيَبْقٰى وَجْهُ رَبِّكَ ذُو الْجَلٰلِ وَالْاِكْرَامِ‌ۚ‏
55:27. மிக்க வல்லமையும், கண்ணியமும் உடைய உம் இறைவனின் முகமே நிலைத்திருக்கும்.
67:27   فَلَمَّا رَاَوْهُ زُلْفَةً سِيْٓئَتْ وُجُوْهُ الَّذِيْنَ كَفَرُوْا وَقِيْلَ هٰذَا الَّذِىْ كُنْتُمْ بِهٖ تَدَّعُوْنَ‏
67:27. எனவே, அது நெருங்கி வருவதை அவர்கள் காணும்போது நிராகரிப்போரின் முகங்கள் (நிறம் பேதலித்துக்) கெட்டுவிடும்; இன்னும், "நீங்கள் எதை வேண்டிக்கொண்டிருந்தீர்களோ, அது இதுதான்" என்று அவர்களுக்குக் கூறப்படும்.
75:22   وُجُوْهٌ يَّوْمَٮِٕذٍ نَّاضِرَةٌ ۙ‏
75:22. அந்நாளில் சில முகங்கள் (மகிழ்ச்சியால்) செழுமையாக இருக்கும்.
75:24   وَوُجُوْهٌ يَّوْمَٮِٕذٍۢ بَاسِرَةٌ ۙ‏
75:24. ஆனால், அந்நாளில் வேறு சில முகங்களோ (துக்கத்தால்) சுண்டியிருக்கும்.
76:9   اِنَّمَا نُطْعِمُكُمْ لِـوَجْهِ اللّٰهِ لَا نُرِيْدُ مِنْكُمْ جَزَآءً وَّلَا شُكُوْرًا‏
76:9. "உங்களுக்கு நாங்கள் உணவளிப்பதெல்லாம், அல்லாஹ்வின் முகத்திற்காக (அவன் திருப்பொருத்தத்திற்காக); உங்களிடமிருந்து பிரதிபலனையோ, (அல்லது நீங்கள்) நன்றி செலுத்த வேண்டுமென்பதையோ நாங்கள் நாடவில்லை" (என்று அவர்கள் கூறுவர்).
80:38   وُجُوْهٌ يَّوْمَٮِٕذٍ مُّسْفِرَةٌ ۙ‏
80:38. அந்நாளில் சில முகங்கள் பிரகாசமுள்ளவையாக இருக்கும்.
80:40   وَوُجُوْهٌ يَّوْمَٮِٕذٍ عَلَيْهَا غَبَرَةٌ ۙ‏
80:40. ஆனால், அந்நாளில் (வேறு) சில முகங்கள் - அவற்றின் மீது புழுதி படிந்திருக்கும்.
83:24   تَعْرِفُ فِىْ وُجُوْهِهِمْ نَضْرَةَ النَّعِيْمِ‌ۚ‏
83:24. அவர்களுடைய முகங்களில் சுகபோகத்தின் செழிப்பை நீர் அறிவீர்.
92:20   اِلَّا ابْتِغَآءَ وَجْهِ رَبِّهِ الْاَعْلٰى‌ۚ‏
92:20. மிக மேலான தம் இறைவனின் (திருப்) பொருத்தத்தை நாடியே தவிர, (அவர் தானம் கொடுக்கிறார்).