இன்னொரு உதாரணம்
முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறினார்கள், "இது சிலைகளையும், மேலானவனான உண்மையான இறைவனையும் குறிக்கிறது." அதாவது, அந்தச் சிலையானது ஊமையானது; அதனால் பேசவோ, நன்மையோ தீமையோ என எதையும் கூறவோ முடியாது. அதால் எதையுமே செய்ய முடியாது; பேச்சோ, செயலோ எதுவுமில்லை; அது பிறரைச் சார்ந்தே இருப்பதோடு, தன் எஜமானுக்கு ஒரு சுமையாகவும் இருக்கிறது. ﴾أَيْنَمَا يُوَجِّههُّ﴿
(அவன் அவனை எந்தப் பக்கம் திருப்பினாலும்,) அதாவது, அவனை எங்கு அனுப்பினாலும் ﴾لاَ يَأْتِ بِخَيْرٍ﴿
(அவன் எந்த நன்மையும் கொண்டு வரமாட்டான்.) அதாவது, தான் நாடிய காரியத்தில் அவன் வெற்றி பெற மாட்டான். ﴾هَلْ يَسْتَوِى﴿
(இப்படிப்பட்ட ஒரு மனிதன் சமமாவானா?) அதாவது, இந்தப் பண்புகளைக் கொண்ட ஒரு மனிதன் ﴾وَمَن يَأْمُرُ بِالْعَدْلِ﴿
(நீதியை ஏவுகின்றவனுக்குச் சமமாவானா?) அதாவது நேர்மை; யாருடைய வார்த்தைகள் உண்மையாகவும், யாருடைய செயல்கள் நற்செயல்களாகவும் இருக்கின்றனவோ அத்தகையவருக்கு. ﴾وَهُوَ عَلَى صِرَطٍ مُّسْتَقِيمٍ﴿
(மேலும் அவரே நேரான பாதையில் இருக்கிறார்.) அல்-அவ்ஃபீ வாயிலாக இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: "முந்தைய வசனத்தில் கூறப்பட்டது போலவே, இதுவும் இறைமறுப்பாளருக்கும் இறைநம்பிக்கையாளருக்கும் ஒரு உதாரணமாகும்."