14. ஸூரத்து இப்ராஹீம்
மக்கீ, வசனங்கள்: 52

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
14:1
14:1 الۤرٰ‌ كِتٰبٌ اَنْزَلْنٰهُ اِلَيْكَ لِـتُخْرِجَ النَّاسَ مِنَ الظُّلُمٰتِ اِلَى النُّوْرِ  ۙ بِاِذْنِ رَبِّهِمْ اِلٰى صِرَاطِ الْعَزِيْزِ الْحَمِيْدِۙ‏
الۤرٰ‌ அலிஃப்; லாம்; றா. كِتٰبٌ ஒரு வேதம் اَنْزَلْنٰهُ இதை இறக்கினோம் اِلَيْكَ உம்மீது لِـتُخْرِجَ நீர் வெளியேற்றுவதற்காக النَّاسَ மக்களை مِنَ الظُّلُمٰتِ இருள்களிலிருந்து اِلَى النُّوْرِ  ۙ பக்கம்/ஒளியின் بِاِذْنِ அனுமதி கொண்டு رَبِّهِمْ அவர்களுடைய இறைவனின் اِلٰى பக்கம் صِرَاطِ பாதையின் الْعَزِيْزِ மிகைத்தவன் الْحَمِيْدِۙ‏ மகா புகழாளன்
14:1. அலிFப்-லாம்-ரா; கிதாBபுன் அன்Zஜல்னாஹு இலய்க லிதுக்ரிஜன்-னாஸ மினள் ளுலுமாதி இலன் னூரி Bபி-இத்னி ரBப்Bபிஹிம் இலா ஸிராதில் 'அZஜீZஜில் ஹமீத்
14:1. அலிஃப், லாம், றா. (நபியே! இது) வேதமாகும்: மனிதர்களை அவர்களுடைய இறைவனின் அனுமதியைக் கொண்டு இருள்களிலிருந்து பிரகாசத்தின்பால் (- அதாவது) புகழுக்குரியவனும், வல்லமை மிக்கோனுமாகியவனின் பாதையில் நீர் வெளியேற்றிக் கொண்டுவருவதற்காக, இ(வ்வேதத்)தை நாமே உம்மீது இறக்கியிருக்கின்றோம்.
14:2
14:2 اللّٰهِ الَّذِىْ لَهٗ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ‌ؕ وَوَيْلٌ لِّـلْكٰفِرِيْنَ مِنْ عَذَابٍ شَدِيْدِ ۙ‏
اللّٰهِ அல்லாஹ் الَّذِىْ எத்தகையவன் لَهٗ அவனுக்கே مَا فِى السَّمٰوٰتِ வானங்களில் உள்ளவை وَمَا فِى الْاَرْضِ‌ؕ பூமியில் உள்ளவை وَوَيْلٌ கேடு உண்டாகுக! لِّـلْكٰفِرِيْنَ நிராகரிப்பாளர்களுக்கு مِنْ عَذَابٍ வேதனையின் شَدِيْدِ ۙ‏ கடினமானது
14:2. அல்லாஹில் லதீ லஹூ மா Fபிஸ் ஸமாவாதி வமா Fபில்ல் அர்ள்; வ வய்லுல் லில்காFபிரீன மின் 'அதாBபின் ஷதீத்
14:2. அல்லாஹ் எத்தகையவன் என்றால், வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அவனுக்கே சொந்தமாகும்; இன்னும், (இதை) நிராகரிப்போருக்குக் கடினமான வேதனையினால் பெருங்கேடுதான்.
14:3
14:3 اۨلَّذِيْنَ يَسْتَحِبُّوْنَ الْحَيٰوةَ الدُّنْيَا عَلَى الْاٰخِرَةِ وَيَصُدُّوْنَ عَنْ سَبِيْلِ اللّٰهِ وَيَبْغُوْنَهَا عِوَجًا‌ ؕ اُولٰۤٮِٕكَ فِىْ ضَلٰلٍۢ بَعِيْدٍ‏
اۨلَّذِيْنَ எவர்கள் يَسْتَحِبُّوْنَ விரும்புவார்கள் الْحَيٰوةَ வாழ்வை الدُّنْيَا உலகம் عَلَى الْاٰخِرَةِ மறுமையை விட وَيَصُدُّوْنَ இன்னும் தடுப்பார்கள் عَنْ سَبِيْلِ பாதையை விட்டு اللّٰهِ அல்லாஹ்வின் وَيَبْغُوْنَهَا இன்னும் தேடுகின்றனர்/அதில் عِوَجًا‌ ؕ اُولٰۤٮِٕكَ கோணலை/இவர்கள் فِىْ ضَلٰلٍۢ வழிகேட்டில் بَعِيْدٍ‏ தூரமானது
14:3. அல்லதீன யஸ்தஹிBப்Bபூ னல் ஹயாதத் துன்யா 'அலல் ஆகிரதி வ யஸுத்தூன 'அன்ஸBபீலில் லாஹி வ யBப்கூனஹா 'இவஜா; உலா 'இக Fபீ ளலாலின் Bப'ஈத்
14:3. இவர்கள் மறுமையைவிட இவ்வுலக வாழ்க்கையையே நேசிக்கின்றார்கள்; அல்லாஹ்வின் வழியைவிட்டும் (மற்றவர்களையும்) தடுக்கின்றார்கள்; அது கோணலாக (இருக்க வேண்டுமென) விரும்புகிறார்கள்; இவர்கள் மிகவும் தூரமான வழிகேட்டிலேயே இருக்கின்றார்கள்.
14:4
14:4 وَمَاۤ اَرْسَلْنَا مِنْ رَّسُوْلٍ اِلَّا بِلِسَانِ قَوْمِهٖ لِيُبَيِّنَ لَهُمْ‌ؕ فَيُضِلُّ اللّٰهُ مَنْ يَّشَآءُ وَيَهْدِىْ مَنْ يَّشَآءُ‌ ؕ وَهُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُ‏
وَمَاۤ اَرْسَلْنَا நாம் அனுப்பவில்லை مِنْ رَّسُوْلٍ எந்த ஒரு தூதரை اِلَّا தவிர بِلِسَانِ மொழியைக் கொண்டே قَوْمِهٖ அவருடைய மக்களின் لِيُبَيِّنَ அவர் தெளிவுபடுத்துவதற்காக لَهُمْ‌ؕ அவர்களுக்கு فَيُضِلُّ ஆகவேவழிகெடுக்கிறான் اللّٰهُ அல்லாஹ் مَنْ எவரை يَّشَآءُ நாடுவான் وَيَهْدِىْ இன்னும் நேர்வழி செலுத்துகிறான் مَنْ يَّشَآءُ‌ ؕ எவரை/நாடுவான் وَهُوَ அவன்தான் الْعَزِيْزُ மிகைத்தவன் الْحَكِيْمُ‏ மகா ஞானவான்
14:4. வ மா அர்ஸல்னா மிர் ரஸூலின் இல்லா Bபிலிஸானி கவ்மிஹீ லியுBபய்யின லஹும் Fப யுளில்லுல் லாஹு மய் யஷா'உ வ யஹ்தீ மய் யஷா'; வ ஹுவல் 'அZஜீZஜுல் ஹகீம்
14:4. எந்தத் தூதரையும் அவருடைய சமுதாயத்தின் மொழியைக் கொண்டே தவிர நாம் அனுப்பவில்லை, அவர்களுக்கு அவர் விளக்கிக் கூறுவதற்காக; அல்லாஹ் தான் நாடியோரை வழிதவறச் செய்கின்றான்; தான் நாடியோருக்கு நேர்வழியையும் காண்பிக்கின்றான்; அவன் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
14:5
14:5 وَلَـقَدْ اَرْسَلْنَا مُوْسٰى بِاٰيٰتِنَاۤ اَنْ اَخْرِجْ قَوْمَكَ مِنَ الظُّلُمٰتِ اِلَى النُّوْرِ ۙ وَذَكِّرْهُمْ بِاَيّٰٮمِ اللّٰهِ‌ؕ اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيٰتٍ لّـِكُلِّ صَبَّارٍ شَكُوْرٍ‏
وَلَـقَدْ اَرْسَلْنَا திட்டமாக அனுப்பினோம் مُوْسٰى மூஸாவை بِاٰيٰتِنَاۤ நம் அத்தாட்சிகளைக் கொண்டு اَنْ اَخْرِجْ வெளியேற்று قَوْمَكَ உம் சமுதாயத்தை مِنَ الظُّلُمٰتِ இருள்களிலிருந்து اِلَى النُّوْرِ ۙ ஒளியின் பக்கம் وَذَكِّرْ இன்னும் ஞாபகமூட்டு هُمْ அவர்களுக்கு بِاَيّٰٮمِ (அந்)நாட்களை اللّٰهِ‌ؕ அல்லாஹ்வின் اِنَّ فِىْ ذٰ لِكَ நிச்சயமாக/இதில் لَاٰيٰتٍ அத்தாட்சிகள் لّـِكُلِّ எல்லோருக்கும் صَبَّارٍ மிக பொறுமையாளர் شَكُوْرٍ‏ மிக நன்றியறிபவர்
14:5. வ லகத் அர்ஸல்னா மூஸா Bபி ஆயாதினா அன் அக்ரிஜ் கவ்மக மினள் ளுலுமாதி இலன் னூரி வ தக் கிர்ஹும் Bபி அய்யாமில் லாஹ்; இன்ன Fபீ தாலிக ல ஆயாதில் லிகுல்லி ஸBப்Bபாரின் ஷகூர்
14:5. நிச்சயமாக நாம் மூஸாவை நம்முடைய அத்தாட்சிகளைக் கொண்டு அனுப்பிவைத்து, "நீர் உம்முடைய சமூகத்தினரை இருள்களிலிருந்து பிரகாசத்தின்பால் வெளியேற்றுவீராக! இன்னும், அல்லாஹ்வின் அருட்கொடைகள் நிகழ்வுற்ற நாட்களை அவர்களுக்கு நினைவூட்டுவீராக!" (என்று கட்டளையிட்டோம்.) நிச்சயமாக இதில் ஒவ்வொரு பொறுமையாளருக்கும் நன்றி செலுத்துவோருக்கும் உறுதியான பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
14:6
14:6 وَاِذْ قَالَ مُوْسٰى لِـقَوْمِهِ اذْكُرُوْا نِعْمَةَ اللّٰهِ عَلَيْكُمْ اِذْ اَنْجٰٮكُمْ مِّنْ اٰلِ فِرْعَوْنَ يَسُوْمُوْنَـكُمْ سُوْۤءَ الْعَذَابِ وَ يُذَبِّحُوْنَ اَبْنَآءَكُمْ وَيَسْتَحْيُوْنَ نِسَآءَكُمْ‌ ؕ وَفِىْ ذٰ لِكُمْ بَلَاۤ ءٌ مِّنْ رَّبِّكُمْ عَظِيْمٌ
وَاِذْ قَالَ கூறிய சமயம் مُوْسٰى மூஸா لِـقَوْمِهِ தன் சமுதாயத்திற்கு اذْكُرُوْا நினைவு கூறுங்கள் نِعْمَةَ அருளை اللّٰهِ அல்லாஹ்வின் عَلَيْكُمْ உங்கள் மீது اِذْ போது اَنْجٰٮكُمْ உங்களை காப்பாற்றினான் مِّنْ இருந்து اٰلِ கூட்டம் فِرْعَوْنَ ஃபிர்அவ்னுடைய يَسُوْمُوْنَـكُمْ சிரமம் தந்தார்கள்/உங்களுக்கு سُوْۤءَ الْعَذَابِ கடினமான வேதனையால் وَ يُذَبِّحُوْنَ இன்னும் அறுத்தார்கள் اَبْنَآءَ ஆண் பிள்ளைகளை كُمْ உங்கள் وَيَسْتَحْيُوْنَ இன்னும் வாழவிட்டார்கள் نِسَآءَ பெண்(பிள்ளை)களை كُمْ‌ ؕ உங்கள் وَفِىْ ذٰ لِكُمْ இன்னும் இதில் بَلَاۤ ءٌ ஒரு சோதனை مِّنْ இருந்து رَّبِّكُمْ உங்கள் இறைவன் عَظِيْمٌ‏ மகத்தானது
14:6. வ இத் கால மூஸா லிகவ்மிஹித் குரூ னிஃமதல் லாஹி 'அலய்கும் இத் அன்ஜாகும் மின் ஆலி Fபிர்'அவ்ன யஸூமூ னகும் ஸூ'அல் 'அதாBபி வ யுதBப்Bபிஹூன அBப்னா'அகும் வ யஸ்தஹ்யூன னிஸா'அகும்; வ Fபீ தாலிகும் Bபலா'உன் மிர் ரBப்Bபிகும் 'அளீம்
14:6. மூஸா தம் சமூகத்தாரிடம், "ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரிடமிருந்து (அல்லாஹ்) உங்களைக் காப்பாற்றியபோது, அல்லாஹ் உங்களுக்குப் புரிந்த அருட்கொடையை நினைத்துப்பாருங்கள்: அவர்களோ, உங்களைக் கொடிய வேதனையால் துன்புறுத்தியதுடன், உங்களுடைய ஆண் குழந்தைகளை அறுத்(துக் கொலை செய்)தும் உங்கள் பெண் மக்களை (மட்டும்) உயிருடன் விட்டுக்கொண்டும் இருந்தார்கள்; இதில் உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு மகத்தான சோதனை (ஏற்பட்டு) இருந்தது" என்று கூறினார்.
14:7
14:7 وَاِذْ تَاَذَّنَ رَبُّكُمْ لَٮِٕنْ شَكَرْتُمْ لَاَزِيْدَنَّـكُمْ‌ وَلَٮِٕنْ كَفَرْتُمْ اِنَّ عَذَابِىْ لَشَدِيْدٌ‏
وَاِذْ تَاَذَّنَ இன்னும் அறிவித்த சமயம் رَبُّكُمْ உங்கள் இறைவன் لَٮِٕنْ شَكَرْتُمْ நீங்கள்நன்றி செலுத்தினால் لَاَزِيْدَنَّـكُمْ‌ அதிகப்படுத்துவேன்/ உங்களுக்கு وَلَٮِٕنْ كَفَرْتُمْ நீங்கள் நிராகரித்தால் اِنَّ நிச்சயமாக عَذَابِىْ என் வேதனை لَشَدِيْدٌ‏ கடுமையானதுதான்
14:7. வ இத் த அத்தன ரBப்Bபுகும் ல'இன் ஷகர்தும் ல அZஜீதன்னகும் வ ல'இன் கFபர்தும் இன்ன 'அதாBபீ லஷதீத்
14:7. (இதற்காக எனக்கு) நீங்கள் நன்றி செலுத்தினால், உங்களுக்கு நிச்சயமாக நான் (என் அருளை) அதிகமாக்குவேன்; (அவ்வாறில்லாது,) நீங்கள் மாறு செய்தீர்களானால் நிச்சயமாக என்னுடைய வேதனை மிகக் கடுமையானதாக இருக்கும்" என்று உங்களுடைய இறைவன் அறிவித்ததையும் (நினைவுகூருங்கள்).
14:8
14:8 وَقَالَ مُوْسٰٓى اِنْ تَكْفُرُوْۤا اَنْـتُمْ وَمَنْ فِى الْاَرْضِ جَمِيْعًا ۙ فَاِنَّ اللّٰهَ لَـغَنِىٌّ حَمِيْدٌ‏
وَقَالَ கூறினார் مُوْسٰٓى மூஸா اِنْ تَكْفُرُوْۤا நீங்கள் நிராகரித்தால் اَنْـتُمْ நீங்கள் وَمَنْ இன்னும் எவர் فِى الْاَرْضِ பூமியில் جَمِيْعًا ۙ அனைவரும் فَاِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் لَـغَنِىٌّ நிறைவானவன் حَمِيْدٌ‏ மகா புகழாளன்
14:8. வ கால மூஸா இன் தக்Fபுரூ அன்தும் வ மன் Fபில் அர்ளி ஜமீ'அன் Fப இன்னல் லாஹ ல கனிய்யுன் ஹமீத்
14:8. மேலும், மூஸா (தம் சமூகத்தாரிடம்) "நீங்களும், பூமியிலுள்ள அனைவரும் சேர்ந்து மாறு செய்தபோதிலும் (அவனுக்கு யாதொரு நஷ்டமும் ஏற்படாது); நிச்சயமாக அல்லாஹ் தேவையற்றவனும் புகழுக்குரியவனாகவும் இருக்கின்றான்" என்றும் கூறினார்.
14:9
14:9 اَلَمْ يَاْتِكُمْ نَبَـؤُا الَّذِيْنَ مِنْ قَبْلِكُمْ قَوْمِ نُوْحٍ وَّعَادٍ وَّثَمُوْدَ‌  ۛؕ وَالَّذِيْنَ مِنْۢ بَعْدِهِمْ ‌ۛؕ لَا يَعْلَمُهُمْ اِلَّا اللّٰهُ‌ؕ جَآءَتْهُمْ رُسُلُهُمْ بِالْبَيِّنٰتِ فَرَدُّوْۤا اَيْدِيَهُمْ فِىْۤ اَفْوَاهِهِمْ وَقَالُوْۤا اِنَّا كَفَرْنَا بِمَاۤ اُرْسِلْـتُمْ بِهٖ وَاِنَّا لَفِىْ شَكٍّ مِّمَّا تَدْعُوْنَـنَاۤ اِلَيْهِ مُرِيْبٍ‏
اَلَمْ يَاْتِكُمْ உங்களுக்கு வரவில்லையா? نَبَـؤُا சரித்திரம் الَّذِيْنَ எவர்கள் مِنْ قَبْلِكُمْ உங்களுக்கு முன்னர் قَوْمِ மக்கள் نُوْحٍ நூஹூடைய وَّعَادٍ இன்னும் ஆது وَّثَمُوْدَ‌  ۛؕ ஸமூது وَالَّذِيْنَ இன்னும் எவர்கள் مِنْۢ بَعْدِهِمْ ۛؕ அவர்களுக்குப் பின்னர் لَا அறியமாட்டார் يَعْلَمُهُمْ அவர்களை اِلَّا தவிர اللّٰهُ‌ؕ அல்லாஹ் جَآءَتْهُمْ வந்தா(ர்க)ள்/அவர்களிடம் رُسُلُهُمْ தூதர்கள்/ அவர்களுடைய بِالْبَيِّنٰتِ தெளிவான சான்றுகளைக் கொண்டு فَرَدُّوْۤا திருப்பினர் اَيْدِيَهُمْ கைகளை/தங்கள் فِىْۤ اَفْوَاهِهِمْ தங்கள் வாய்களின் பக்கமே وَقَالُوْۤا இன்னும் கூறினர் اِنَّا நிச்சயமாக நாங்கள் كَفَرْنَا நிராகரித்தோம் بِمَاۤ எதைக் கொண்டு اُرْسِلْـتُمْ நீங்கள் அனுப்பப்பட்டீர்களோ بِهٖ அதைக் கொண்டு وَاِنَّا இன்னும் நிச்சயமாக நாங்கள் لَفِىْ شَكٍّ சந்தேகத்தில் مِّمَّا تَدْعُوْنَـنَاۤ எதில்/அழைக்கிறீர்கள்/எங்களை اِلَيْهِ அதன் பக்கம் مُرِيْبٍ‏ ஆழமான சந்தேகம்
14:9. அலம் ய'திகும் னBப'உல் லதீன மின் கBப்லிகும் கவ்மி னூஹி(ன்)வ் வ 'ஆதி(ன்)வ் வ தமூத், வல்லதீன மிம் Bபஃதிஹிம்; லா யஃலமுஹும் இல்லல்லாஹ்; ஜா'அத் ஹும் ருஸுலுஹும் Bபில்Bபய்யினாதி Fபரத்தூ அய்தியஹும் Fபீ அFப்வாஹிஹிம் வ காலூ இன்னா கFபர்னா Bபிமா உர்ஸில்தும் Bபிஹீ வ இன்னா லFபீ ஷக்கிம் மிம்மா தத்'ஊனனா இலய்ஹி முரீBப்
14:9. உங்களுக்குமுன் சென்றுபோன நூஹ், ஆது, ஸமூது போன்ற சமூகத்தாரின் செய்தியும் அவர்களுக்குப்பின் வந்தவர்களுடைய செய்தியும் உங்களுக்கு வரவில்லையா? அவர்களை அல்லாஹ்வைத் தவிர (வேறு) எவரும் அறியார்; அவர்களிடத்தில் (அல்லாஹ் அனுப்பிய) அவர்களுடைய தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டுவந்தார்கள்; தங்கள் கைகளை தங்கள் வாய்களின் பக்கம் கொண்டுசென்று, "நீங்கள் எதைக்கொண்டு அனுப்பப்பட்டிருக்கின்றீர்களோ அ(த்தூ)தை நிச்சயமாக நாங்கள் நிராகரிக்கின்றோம்; அன்றியும், நீங்கள் எங்களை எதன்பால் அழைக்கிறீர்களோ, அதைப்பற்றியும் நாங்கள் பெரும் சந்தேகத்தில் இருக்கின்றோம்" என்று கூறினார்கள்.
14:10
14:10 قَالَتْ رُسُلُهُمْ اَفِى اللّٰهِ شَكٌّ فَاطِرِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ؕ يَدْعُوْكُمْ لِيَـغْفِرَ لَـكُمْ مِّنْ ذُنُوْبِكُمْ وَيُؤَخِّرَكُمْ اِلٰٓى اَجَلٍ مُّسَمًّى‌ؕ قَالُوْۤا اِنْ اَنْتُمْ اِلَّا بَشَرٌ مِّثْلُنَاؕ تُرِيْدُوْنَ اَنْ تَصُدُّوْنَا عَمَّا كَانَ يَعْبُدُ اٰبَآؤُنَا فَاْتُوْنَا بِسُلْطٰنٍ مُّبِيْنٍ‏
قَالَتْ கூறினா(ர்க)ள் رُسُلُهُمْ தூதர்கள்/ அவர்களுடைய اَفِى اللّٰهِ அல்லாஹ்வின் விஷயத்திலா? شَكٌّ சந்தேகம் فَاطِرِ படைப்பாளனாகிய السَّمٰوٰتِ வானங்கள் وَالْاَرْضِ‌ؕ இன்னும் பூமி يَدْعُوْكُمْ அழைக்கிறான்/ உங்களை لِيَـغْفِرَ மன்னிப்பதற்காக لَـكُمْ உங்களுக்கு مِّنْ ذُنُوْبِكُمْ உங்கள் குற்றங்களை وَيُؤَخِّرَ இன்னும் விட்டு வைப்பதற்கு كُمْ உங்களை اِلٰٓى வரை اَجَلٍ ஒரு காலம் مُّسَمًّى‌ؕ குறிக்கப்பட்டது قَالُوْۤا கூறினர் اِنْ اَنْتُمْ நீங்கள் இல்லை اِلَّا தவிர بَشَرٌ மனிதர்களே مِّثْلُنَاؕ எங்களைப் போன்ற تُرِيْدُوْنَ நாடுகிறீர்கள் اَنْ تَصُدُّوْنَا எங்களை நீங்கள் தடுக்க عَمَّا எவற்றை விட்டு كَانَ يَعْبُدُ வணங்கிக் கொண்டிருந்தார் اٰبَآؤُنَا மூதாதைகள்/எங்கள் فَاْتُوْنَا ஆகவே வாருங்கள்/நம்மிடம் بِسُلْطٰنٍ ஆதாரத்தைக் கொண்டு مُّبِيْنٍ‏ தெளிவானது
14:10. காலத் ருஸுலுஹும் அFபில்லாஹி ஷக்குன் Fபாதிரிஸ் ஸமாவாதி வல் அர்ளி யத்'ஊகும் லியக்Fபிர லகும் மின் துனூBபிகும் வ யு'அகிரகும் இலா அஜலின் முஸம்மா; காலூ இன் அன்தும் இல்லா Bபஷரும் மித்லுனா துரீதூன அன் தஸுத்தூனா 'அம்மா கான யஃBபுது ஆBபா'உனா Fப'தூனா Bபி ஸுல்தானின் முBபீன்
14:10. அதற்கு அவர்களுடைய தூதர்கள், "வானங்களையும் பூமியையும் படைத்த அல்லாஹ்வைப் பற்றியா (உங்களுக்கு) சந்தேகம்? அவன் உங்களுடைய பாவங்களை மன்னிப்பதற்காக உங்களை அழைக்கின்றான்; (அத்துடன்) ஒரு குறிப்பிட்ட தவணை வரை உங்களுக்கு (உலகில்) அவகாசம் அளிக்கவும் (அழைக்கின்றான்)" என்று கூறினார்கள். (அப்போது) அவர்கள், "நீங்கள் எங்களைப் போன்ற மனிதர்களே அன்றி (வேறு) இல்லை; எங்களுடைய மூதாதையர்கள் வணங்கிக் கொண்டிருந்தவற்றை விட்டும் எங்களைத் தடுத்துவிட நீங்கள் விரும்புகிறீர்கள்? அப்படியானால், எங்களுக்குத் தெளிவான ஆதாரத்தைக் கொண்டு வாருங்கள்" எனக் கூறினார்கள்.
14:11
14:11 قَالَتْ لَهُمْ رُسُلُهُمْ اِنْ نَّحْنُ اِلَّا بَشَرٌ مِّثْلُكُمْ وَلٰـكِنَّ اللّٰهَ يَمُنُّ عَلٰى مَنْ يَّشَآءُ مِنْ عِبَادِهٖ‌ؕ وَمَا كَانَ لَنَاۤ اَنْ نَّاْتِيَكُمْ بِسُلْطٰنٍ اِلَّا بِاِذْنِ اللّٰهِ‌ؕ وَعَلَى اللّٰهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُوْنَ‏
قَالَتْ கூறினா(ர்க)ள் لَهُمْ அவர்களுக்கு رُسُلُهُمْ தூதர்கள்/ அவர்களுடைய اِنْ இல்லை نَّحْنُ நாங்கள் اِلَّا தவிர بَشَرٌ மனிதர்களே مِّثْلُكُمْ உங்களைப் போன்ற وَلٰـكِنَّ எனினும் اللّٰهَ அல்லாஹ் يَمُنُّ அருள் புரிகிறான் عَلٰى மீது مَنْ எவர் يَّشَآءُ நாடுவான் مِنْ عِبَادِهٖ‌ؕ தன் அடியார்களில் وَمَا كَانَ لَنَاۤ முடியாது/எங்களுக்கு اَنْ نَّاْتِيَكُمْ உங்களிடம் நாம் வருவது بِسُلْطٰنٍ ஓர் ஆதாரத்தைக் கொண்டு اِلَّا தவிர بِاِذْنِ அனுமதி கொண்டே اللّٰهِ‌ؕ அல்லாஹ்வுடைய وَعَلَى اللّٰهِ அல்லாஹ்வின் மீதே فَلْيَتَوَكَّلِ நம்பிக்கை வைக்கட்டும் الْمُؤْمِنُوْنَ‏ நம்பிக்கையாளர்கள்
14:11. காலத் லஹும் ருஸுலுஹும் இன் னஹ்னு இல்லா Bபஷரும் மித்லுகும் வ லாகின்னல் லாஹ யமுன்னு 'அலா மய் யஷா'உ மின் 'இBபாதிஹீ வமா கான லனா அன் ன'தியகும் Bபிஸுல் தானின் இல்லா Bபி இத்னில் லாஹ்; வ 'அலல் லாஹி Fபல்யதவக்கலில் மு'மினூன்
14:11. (அதற்கு) அவர்களுடைய தூதர்கள் அவர்களை நோக்கி, "நாங்கள் உங்களைப்போன்ற மனிதர்களே அல்லாமல் வேறில்லை; எனினும், அல்லாஹ் தன் அடியார்களில் தான் நாடியவர் மீது அருள் புரிகின்றான்; அல்லாஹ்வின் அனுமதியின்றி நாங்கள் உங்களுக்கு எந்த ஓர் ஆதாரத்தையும் கொண்டுவருவதற்கில்லை; இன்னும், நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வையே (முழுமையாகச்) சார்ந்திருக்கட்டும்" என்று கூறினார்கள்.
14:12
14:12 وَمَا لَـنَاۤ اَلَّا نَـتَوَكَّلَ عَلَى اللّٰهِ وَقَدْ هَدٰٮنَا سُبُلَنَا‌ؕ وَلَــنَصْبِرَنَّ عَلٰى مَاۤ اٰذَيْتُمُوْنَا‌ؕ وَعَلَى اللّٰهِ فَلْيَتَوَكَّلِ الْمُتَوَكِّلُوْنَ
وَمَا لَـنَاۤ எங்களுக்கென்ன? اَلَّا نَـتَوَكَّلَ நாங்கள் நம்பிக்கை வைக்காதிருக்க عَلَى மீது اللّٰهِ அல்லாஹ் وَقَدْ நேர்வழிபடுத்தினான் هَدٰٮنَا எங்களை سُبُلَنَا‌ؕ எங்கள் பாதைகளில் وَلَــنَصْبِرَنَّ நிச்சயமாக பொறுப்போம் عَلٰى مَاۤ اٰذَيْتُمُوْنَا‌ؕ நீங்கள் துன்புறுத்துவதில் எங்களை وَعَلَى اللّٰهِ அல்லாஹ் மீதே فَلْيَتَوَكَّلِ ஆகவே நம்பிக்கை வைக்கட்டும் الْمُتَوَكِّلُوْنَ‏ நம்பிக்கை வைப்பவர்கள்
14:12. வமா லனா அல்லா னதவக்கல 'அலல் லாஹி வ கத் ஹதானா ஸுBபுலனா; வ லனஸ்Bபிரன்ன 'அலா மா ஆதய்துமூனா; வ 'அலல் லாஹி Fபல்யதவக்கலில் முதவக்கிலூன்
14:12. நாங்கள் அல்லாஹ்வின் மீது சாராதிருக்க எங்களுக்கென்ன (நேர்ந்தது)? நிச்சயமாக அவன்தான் (நாங்கள் வெற்றிபெறும்) வழிகளையும் எங்களுக்குக் காட்டினான்; நீங்கள் எங்களுக்குக் கொடுக்கும் துன்பத்தை நிச்சயமாகப் பொறுத்துக் கொள்வோம்; சார்ந்திருப்போர் அல்லாஹ்வையே சார்ந்திருக்கட்டும்" (என்றும் கூறினார்கள்.)
14:13
14:13 وَقَالَ الَّذِيْنَ كَفَرُوْا لِرُسُلِهِمْ لَـنُخْرِجَنَّكُمْ مِّنْ اَرْضِنَاۤ اَوْ لَـتَعُوْدُنَّ فِىْ مِلَّتِنَا‌ ؕ فَاَوْحٰۤى اِلَيْهِمْ رَبُّهُمْ لَــنُهْلِكَنَّ الظّٰلِمِيْنَۙ‏
وَقَالَ கூறினார்(கள்) الَّذِيْنَ எவர்கள் كَفَرُوْا நிராகரித்தனர் لِرُسُلِهِمْ தங்கள் தூதர்களிடம் لَـنُخْرِجَنَّكُمْ நிச்சயமாக வெளியேற்றுவோம்/உங்களை مِّنْ اَرْضِنَاۤ எங்கள் பூமியிலிருந்து اَوْ அல்லது لَـتَعُوْدُنَّ நீங்கள் நிச்சயமாக திரும்பிடவேண்டும் فِىْ مِلَّتِنَا‌ ؕ எங்கள் மார்க்கத்தில் فَاَوْحٰۤى ஆகவே வஹீ அறிவித்தான் اِلَيْهِمْ அவர்களுக்கு رَبُّهُمْ இறைவன்/அவர்களுடைய لَــنُهْلِكَنَّ நிச்சயமாக அழிப்போம் الظّٰلِمِيْنَۙ‏ அநியாயக்காரர்களை
14:13. வ காலல் லதீன கFபரூ லி ருஸுலிஹிம் லனுக்ரிஜன்ன கும் மின் ஆர்ளினா அவ் ல த'ஊதுன்ன Fபீ மில்லதினா Fப அவ்ஹா இலய்ஹிம் ரBப்Bபுஹும் லனுஹ்லிகன்னத் ளாலிமீன்
14:13. நிராகரிப்பவர்கள் அவர்களுடைய தூதர்களை நோக்கி, "நிச்சயமாக நாங்கள் உங்களை எங்கள் பூமியிலிருந்து வெளியேற்றிவிடுவோம்; அல்லது நீங்கள் எங்கள் மார்க்கத்திற்குத் திரும்பிவிட வேண்டும்" என்று கூறினார்கள்; அப்போது: "நிச்சயமாக நாம் (இந்த) அநியாயக்காரர்களை அழித்துவிடுவோம்" என்று அவர்களின் இறைவன் அவர்களுக்கு அறிவித்தான்.
14:14
14:14 وَلَـنُسْكِنَنَّكُمُ الْاَرْضَ مِنْۢ بَعْدِهِمْ‌ؕ ذٰ لِكَ لِمَنْ خَافَ مَقَامِىْ وَخَافَ وَعِيْدِ‏
وَلَـنُسْكِنَنَّكُمُ நிச்சயமாக குடி அமர்த்துவோம்/உங்களை الْاَرْضَ பூமியில் مِنْۢ بَعْدِ பின்னர் هِمْ‌ؕ அவர்களுக்கு ذٰ لِكَ இது لِمَنْ எவருக்கு خَافَ பயந்தார் مَقَامِىْ என் முன்னால் நிற்பதை وَخَافَ இன்னும் பயந்தார் وَعِيْدِ‏ என் எச்சரிக்கையை
14:14. வ லனுஸ்கினன் னகுமுல் அர்ள மின் Bபஃதிஹிம்; தாலிக லிமன் காFப மகாமீ வ காFப வ'ஈத்
14:14. நிச்சயமாக நாம் உங்களை அவர்களுக்குப் பின், இப்பூமியில் குடியேற்றுவோம்; இது என் முன்னால் (விசாரணைக்காக) நிற்பதை அஞ்சுபவருக்கும், என் எச்சரிக்கையை அஞ்சுபவருக்கும் (சன்மானம்) ஆகும் (என்றும் 'வஹீ' மூலம் அவர்களுடைய இறைவன் அவர்களுக்கு அறிவித்தான்).
14:15
14:15 وَاسْتَفْتَحُوْا وَخَابَ كُلُّ جَبَّارٍ عَنِيْدٍۙ‏
وَاسْتَفْتَحُوْا ஆகவே வெற்றிபெற முயற்சித்தார்கள் وَخَابَ அழிந்தார்(கள்) كُلُّ எல்லோரும் جَبَّارٍ பிடிவாதக்காரர்(கள்) عَنِيْدٍۙ‏ வம்பர்(கள்)
14:15. வஸ்தFப்தஹூ வ காBப குல்லு ஜBப்Bபாரின் 'அனீத்
14:15. இன்னும், (நம் தூதர்களான) அவர்கள் (அல்லாஹ்விடம்) வெற்றியைத் தேடினார்கள்; பிடிவாதக்கார வம்பன் ஒவ்வொருவனும் நஷ்டமடைந்தான்.
14:16
14:16 مِّنْ وَّرَآٮِٕهٖ جَهَـنَّمُ وَيُسْقٰى مِنْ مَّآءٍ صَدِيْدٍۙ‏
مِّنْ وَّرَآٮِٕهٖ அவனுக்கு பின்புறத்தில் جَهَـنَّمُ நரகம் وَيُسْقٰى இன்னும் புகட்டப்படுவான் مِنْ இருந்து مَّآءٍ நீர் صَدِيْدٍۙ‏ சீழ்
14:16. மி(ன்)வ் வரா'இஹீ ஜஹன்னமு வ யுஸ்கா மின் மா'இன் ஸதீத்
14:16. அவனுக்கு முன்னால் நரகம் இருக்கிறது; இன்னும், அவனுக்கு (துர்நாற்றமுள்ள) சீழ்நீரே குடிக்கக் கொடுக்கப்படும்.
14:17
14:17 يَّتَجَرَّعُهٗ وَلَا يَكَادُ يُسِيْـغُهٗ وَيَاْتِيْهِ الْمَوْتُ مِنْ كُلِّ مَكَانٍ وَّمَا هُوَ بِمَيِّتٍؕ‌ وَمِنْ وَّرَآٮِٕهٖ عَذَابٌ غَلِيْظٌ‏
يَّتَجَرَّعُهٗ அள்ளிக் குடிப்பான்/அதை وَلَا يَكَادُ يُسِيْـغُهٗ இலகுவாக குடித்து விடமாட்டான்/அதை وَيَاْتِيْهِ வரும்/அவனுக்கு الْمَوْتُ மரணம் مِنْ كُلِّ مَكَانٍ ஒவ்வொரு இடத்திலிருந்தும் وَّمَا இல்லை هُوَ அவன் بِمَيِّتٍؕ‌ இறந்து விடுபவனாக وَمِنْ وَّرَآٮِٕهٖ அவனுக்குப்பின்னால் عَذَابٌ வேதனை غَلِيْظٌ‏ கடினமானது
14:17. யதஜர்ர'உஹூ வலா யகாது யுஸீகுஹூ வ ய'தீஹில் மவ்து மின் குல்லி மகானி(ன்)வ் வமா ஹுவ Bபிமய்யிதி(ன்)வ் வ மி(ன்)வ் வரா'இஹீ 'அதாBபுன் கலீள்
14:17. அதை அவன் (சிரமத்தோடு) சிறிது சிறிதாக விழுங்குவான்; எனினும், அதை அவன் எளிதாக விழுங்கமாட்டான்: ஒவ்வொரு திசையிலிருந்தும் அவனுக்கு மரணம் வந்துகொண்டிருக்கும்; எனினும், அவன் இறந்துவிடுபவனும் அல்லன்: அன்றியும், அவன் முன்னே (மிகக்) கொடிய வேதனையுமுண்டு.
14:18
14:18 مَثَلُ الَّذِيْنَ كَفَرُوْا بِرَبِّهِمْ‌ اَعْمَالُهُمْ كَرَمَادِ ۨاشْتَدَّتْ بِهِ الرِّيْحُ فِىْ يَوْمٍ عَاصِفٍ‌ؕ لَا يَقْدِرُوْنَ مِمَّا كَسَبُوْا عَلٰى شَىْءٍ‌ؕ ذٰ لِكَ هُوَ الضَّلٰلُ الْبَعِيْدُ‏
مَثَلُ உதாரணம் الَّذِيْنَ எவர்கள் كَفَرُوْا நிராகரித்தனர் بِرَبِّهِمْ‌ தங்கள் இறைவனை اَعْمَالُهُمْ அவர்களுடைய செயல்கள் كَرَمَادِ சாம்பல் ۨاشْتَدَّتْ கடுமையாக அடித்துச் சென்றது بِهِ அதை الرِّيْحُ காற்று فِىْ يَوْمٍ காலத்தில் عَاصِفٍ‌ؕ புயல் لَا يَقْدِرُوْنَ அவர்கள் சக்தி பெறமாட்டார்கள் مِمَّا كَسَبُوْا அவர்கள் செய்ததில் عَلٰى شَىْءٍ‌ؕ எதையும் ذٰ لِكَ هُوَ இதுதான் الضَّلٰلُ வழிகேடு الْبَعِيْدُ‏ தூரமானது
14:18. மதலுல் லதீன கFபரூ Bபி ரBப்Bபிஹிம்; அஃமாலுஹும் கரமாதினிஷ் தத்தத் Bபிஹிர் ரீஹு Fபீ யவ்மின் 'ஆஸிFபின்; லா யக்திரூன மிம்மா கஸBபூ 'அலா ஷய்'; தாலிக ஹுவத் ளலாலுல் Bப'ஈத்
14:18. தங்களுடைய இறைவனை நிராகரித்தவர்களுக்கு உதாரணமாவது: அவர்களுடைய செயல்கள் சாம்பல் போன்றவை; கடும் புயல்காற்று வீசும் நாளில் அச்சாம்பலைக் காற்று அடித்துக் கொண்டுபோய்விட்டது; (அவ்வாறே,) தாங்கள் சம்பாதித்ததிலிருந்து எதன்மீதும் அவர்கள் சக்தி பெறமாட்டார்கள்: இதுவே வெகுதூரமான வழிகேடாகும்.
14:19
14:19 اَلَمْ تَرَ اَنَّ اللّٰهَ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ بِالْحَـقِّ‌ؕ اِنْ يَّشَاْ يُذْهِبْكُمْ وَيَاْتِ بِخَلْقٍ جَدِيْدٍۙ‏
اَلَمْ تَرَ நீர் கவனிக்கவில்லையா? اَنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் خَلَقَ படைத்துள்ளான் السَّمٰوٰتِ வானங்களை وَالْاَرْضَ இன்னும் பூமியை بِالْحَـقِّ‌ؕ உண்மையைக் கொண்டு اِنْ يَّشَاْ அவன் நாடினால் يُذْهِبْكُمْ போக்கி விடுவான்/உங்களை وَيَاْتِ இன்னும் வருவான் بِخَلْقٍ படைப்பைக் கொண்டு جَدِيْدٍۙ‏ புதியது
14:19. அலம் தர அன்னல் லாஹ கலகஸ் ஸமாவாதி வல் அர்ள Bபில்ஹக்க்; இ(ன்)ய் யஷ யுத்ஹிBப்கும் வ ய'தி Bபிகல்கின் ஜதீத்
14:19. நிச்சயமாக அல்லாஹ் வானங்களையும், பூமியையும் உண்மையைக் கொண்டே படைத்திருக்கின்றான் என்பதை நீர் பார்க்கவில்லையா? அவன் நாடினால் உங்களைப் போக்கிவிட்டு புதியதொரு படைப்பைக் கொண்டுவருவான்.
14:20
14:20 وَّمَا ذٰلِكَ عَلَى اللّٰهِ بِعَزِيْزٍ‏
وَّمَا இல்லை ذٰلِكَ அது عَلَى மீது اللّٰهِ அல்லாஹ் بِعَزِيْزٍ‏ சிரமமானதாக
14:20. வமா தாலிக 'அலல் லாஹி Bபி 'அZஜீZஜ்
14:20. இன்னும், அது அல்லாஹ்வுக்குக் கடினமானதுமல்ல.
14:21
14:21 وَبَرَزُوْا لِلّٰهِ جَمِيْعًا فَقَالَ الضُّعَفٰۤؤُا لِلَّذِيْنَ اسْتَكْبَرُوْۤا اِنَّا كُنَّا لَـكُمْ تَبَعًا فَهَلْ اَنْـتُمْ مُّغْـنُوْنَ عَنَّا مِنْ عَذَابِ اللّٰهِ مِنْ شَىْءٍ‌ؕ قَالُوْا لَوْ هَدٰٮنَا اللّٰهُ لَهَدَيْنٰكُمْ‌ؕ سَوَآءٌ عَلَيْنَاۤ اَجَزِعْنَاۤ اَمْ صَبَرْنَا مَا لَــنَا مِنْ مَّحِيْصٍ
وَبَرَزُوْا வெளிப்படுவார்கள் لِلّٰهِ அல்லாஹ்விற்கு முன் جَمِيْعًا அனைவரும் فَقَالَ கூறுவார்(கள்) الضُّعَفٰۤؤُا பலவீனர்கள் لِلَّذِيْنَ எவர்களுக்கு اسْتَكْبَرُوْۤا பெருமையடித்தனர் اِنَّا நிச்சயமாக நாங்கள் كُنَّا இருந்தோம் لَـكُمْ உங்களை تَبَعًا பின்பற்றுபவர்களாக فَهَلْ ஆகவே ? اَنْـتُمْ நீங்கள் مُّغْـنُوْنَ தடுப்பீர்கள் عَنَّا எங்களை விட்டு مِنْ عَذَابِ வேதனையிலிருந்து اللّٰهِ அல்லாஹ்வின் مِنْ شَىْءٍ‌ؕ எதையும் قَالُوْا கூறினர் لَوْ هَدٰٮنَا வழிகாட்டினால் اللّٰهُ அல்லாஹ் لَهَدَيْنٰ வழிகாட்டுவோம் كُمْ‌ؕ உங்களுக்கு سَوَآءٌ சமமே عَلَيْنَاۤ நம் மீது اَجَزِعْنَاۤ நாம் பதட்டப்பட்டால் என்ன? اَمْ அல்லது صَبَرْنَا சகித்தோம் مَا இல்லை لَــنَا நமக்கு مِنْ அறவே مَّحِيْصٍ‏ தப்புமிடம்
14:21. வ BபரZஜூ லில்லாஹி ஜமீ'அன் Fபகாலள் ளு'அFபா'உ லில் லதீனஸ் தக்Bபரூ இன்னா குன்னா லகும் தBப'அன் Fபஹல் அன்தும் முக்னூன 'அன்னா மின் 'அதாBபில் லாஹி மின் ஷய்'; காலூ லவ் ஹதானல் லாஹு ல ஹதய்னாகும் ஸவா'உன் 'அலய்னா அஜZஜிஃனா அம் ஸBபர்னா மா லனா மின் மஹீஸ்
14:21. அன்றியும், அனைவரும் (வெளிப்பட்டு, மறுமை நாளில்) அல்லாஹ்வுக்கு முன்னே நிற்பார்கள்; அப்போது, (இவ்வுலகில்) பலவீனமானவர்கள் (இவ்வுலகில்) பெருமை அடித்துக்கொண்டிருந்தவர்களை நோக்கி: "நிச்சயமாக நாங்கள் (உலகில்) உங்களைப் பின்தொடர்பவர்களாக இருந்தோம்; இப்போது அல்லாஹ்வுடைய வேதனையிலிருந்து எதையேனும் எங்களைவிட்டும் நீங்கள் தடுப்பவர்களாக இருக்கிறீர்களா?" என்று கேட்பார்கள்; (அதற்கு) அவர்கள், "அல்லாஹ் எங்களுக்கு (ஏதாவது) வழியைக்காட்டினால், நாங்கள் (அவ்வழியை) உங்களுக்குக் காட்டுவோம்; (தப்பிக்க வழியேயின்றி வேதனையை அஞ்சி) நாம் பதறிக் கலங்கினாலும், அல்லது பொறுமையாக இருந்தாலும் நமக்கு ஒன்றுதான்; வேறு புகலிடமே நமக்கு இல்லையே!" என்று (கைசேதப்பட்டுக்) கூறுவார்கள்.
14:22
14:22 وَقَالَ الشَّيْطٰنُ لَمَّا قُضِىَ الْاَمْرُ اِنَّ اللّٰهَ وَعَدَكُمْ وَعْدَ الْحَـقِّ وَوَعَدْتُّكُمْ فَاَخْلَفْتُكُمْ‌ؕ وَمَا كَانَ لِىَ عَلَيْكُمْ مِّنْ سُلْطٰنٍ اِلَّاۤ اَنْ دَعَوْتُكُمْ فَاسْتَجَبْتُمْ لِىْ‌ ۚ فَلَا تَلُوْمُوْنِىْ وَلُوْمُوْۤا اَنْفُسَكُمْ‌ ؕ مَاۤ اَنَا بِمُصْرِخِكُمْ وَمَاۤ اَنْتُمْ بِمُصْرِخِىَّ‌ ؕ اِنِّىْ كَفَرْتُ بِمَاۤ اَشْرَكْتُمُوْنِ مِنْ قَبْلُ‌ ؕ اِنَّ الظّٰلِمِيْنَ لَهُمْ عَذَابٌ اَ لِيْمٌ‏
وَقَالَ கூறுவான் الشَّيْطٰنُ ஷைத்தான் لَمَّا قُضِىَ முடிக்கப்பட்டபோது الْاَمْرُ காரியம் اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் وَعَدَ வாக்களித்தான் كُمْ உங்களுக்கு وَعْدَ வாக்கை الْحَـقِّ உண்மையானது وَوَعَدْتُّكُمْ நான் வாக்களித்தேன்/உங்களுக்கு فَاَخْلَفْتُكُمْ‌ؕ நான் வஞ்சித்தேன்/உங்களை وَمَا كَانَ இல்லை لِىَ எனக்கு عَلَيْكُمْ அறவே مِّنْ உங்கள் மீது سُلْطٰنٍ அதிகாரம் اِلَّاۤ اَنْ دَعَوْتُكُمْ எனினும்/உங்களை அழைத்தேன் فَاسْتَجَبْتُمْ பதில் தந்தீர்கள் لِىْ‌ ۚ எனக்கு فَلَا تَلُوْمُوْنِىْ ஆகவே, என்னை நிந்திக்காதீர்கள் وَلُوْمُوْۤا நிந்தியுங்கள் اَنْفُسَكُمْ‌ ؕ உங்களையே مَاۤ اَنَا நான் இல்லை بِمُصْرِخِكُمْ உங்களுக்கு உதவுபவனாக وَمَاۤ இல்லை اَنْتُمْ நீங்கள் بِمُصْرِخِىَّ‌ உதவுபவர்களாக اِنِّىْ நிச்சயமாக நான் كَفَرْتُ நிராகரித்தேன் بِمَاۤ اَشْرَكْتُمُوْنِ என்னை நீங்கள் இணையாக்கியதை مِنْ قَبْلُ‌ ؕ முன்னரே اِنَّ நிச்சயமாக الظّٰلِمِيْنَ அணியாயக்காரர்கள் لَهُمْ அவர்களுக்கு عَذَابٌ வேதனை اَ لِيْمٌ‏ துன்புறுத்தக் கூடியது
14:22. வ காலஷ் ஷய்தானு லம்மா குளியல் அம்ரு இன்னல் லாஹ வ'அதகும் வஃதல் ஹக்கி வ வ'அத்துகும் Fப அக்லFப்துகும் வமா கான லிய 'அலய்கும் மின் ஸுல்தானின் இல்லா அன் த'அவ்துகும் Fபஸ்தஜBப்தும் லீ Fபலா தலூமூனீ வ லூமூ அன்Fபுஸகும் மா அன Bபிமுஸ்ரிகிகும் வ மா அன்தும் Bபிமுஸ்ரிகிய்ய இன்னீ கFபர்து Bபிமா அஷ்ரக்துமூனி மின் கBப்ல்; இன்னள் ளாலிமீன லஹும் அதாBபுன் அலீம்
14:22. (மறுமையில் இவர்கள் பற்றித்) தீர்ப்புக்கூறப்பட்டதும் ஷைத்தான் (இவர்களை நோக்கி), "நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு உண்மையான வாக்குறுதியையே வாக்களித்திருந்தான்; நானும் உங்களுக்கு வாக்களித்திருந்தேன்; ஆனால், நான் உங்களுக்கு(க் கொடுத்த வாக்கில்) மாறுசெய்து விட்டேன்; நான் உங்களை அழைத்தேன்; அப்போது, நீங்கள் என் அழைப்பினை ஏற்றுக்கொண்டீர்கள் என்பதைத்தவிர, எனக்கு உங்கள் மீது எந்த அதிகாரமுமில்லை; ஆகவே, நீங்கள் என்னை நிந்திக்காதீர்கள்; உங்களையே நீங்கள் நிந்தித்துக்கொள்ளுங்கள்; உங்களை நான் காப்பாற்றுபவன் இல்லை; நீங்களும் என்னைக் காப்பாற்றுகிறவர்களில்லை; நீங்கள் முன்னர் என்னை, (அல்லாஹ்வுக்கு) இணையாக்கிக் கொண்டிருந்ததையும், நிச்சயமாக நான் நிராகரித்து விட்டேன்; நிச்சயமாக அக்கிரமக்காரர்களுக்கு - நோவினைமிக்க வேதனை உண்டு" என்று கூறுவான்.
14:23
14:23 وَاُدْخِلَ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ جَنّٰتٍ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَا بِاِذْنِ رَبِّهِمْ‌ؕ تَحِيَّتُهُمْ فِيْهَا سَلٰمٌ‏
وَاُدْخِلَ புகுத்தப்படுவார்(கள்) الَّذِيْنَ எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டனர் وَعَمِلُوا இன்னும் செய்தனர் الصّٰلِحٰتِ நன்மைகளை جَنّٰتٍ சொர்க்கங்களில் تَجْرِىْ ஓடும் مِنْ تَحْتِهَا அவற்றின் கீழ் الْاَنْهٰرُ நதிகள் خٰلِدِيْنَ நிரந்தரமானவர்களாக فِيْهَا அதில் بِاِذْنِ அனுமதிப்படி رَبِّهِمْ‌ؕ தங்கள் இறைவன் تَحِيَّتُهُمْ அவர்களின் முகமன் فِيْهَا அதில் سَلٰمٌ‏ ஸலாம்
14:23. வ உத்கிலல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி ஜன்னாதின் தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹாரு காலிதீன Fபீஹா Bபி இத்னி ரBப்Bபிஹிம் தஹிய்யதுஹும் Fபீஹா ஸலாம்
14:23. இன்னும், எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் செய்கிறார்களோ அவர்கள் சுவனபதிகளில் புகுத்தப்படுவார்கள்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; தங்கள் இறைவனுடைய அனுமதியைக் கொண்டு அவர்கள் நிரந்தரமாக அவற்றில் தங்கியிருப்பார்கள்; அதில் அவர்களுடைய காணிக்கையாவது "(உங்கள் மீது) சாந்தி உண்டாகுக!" என்பதாகும்.
14:24
14:24 اَلَمْ تَرَ كَيْفَ ضَرَبَ اللّٰهُ مَثَلًا كَلِمَةً طَيِّبَةً كَشَجَرَةٍ طَيِّبَةٍ اَصْلُهَا ثَابِتٌ وَّفَرْعُهَا فِى السَّمَآءِۙ‏
اَلَمْ تَرَ நீர் கவனிக்கவில்லையா? كَيْفَ எவ்வாறு? ضَرَبَ விவரித்தான் اللّٰهُ அல்லாஹ் مَثَلًا ஓர் உதாரணத்தை كَلِمَةً ஒரு வாக்கியத்திற்கு طَيِّبَةً நல்லது كَشَجَرَةٍ ஒரு மரத்திற்கு ஒப்பாக طَيِّبَةٍ நல்லது اَصْلُهَا அதன் வேர் ثَابِتٌ உறுதியானது وَّفَرْعُهَا இன்னும் அதன் கிளை فِى السَّمَآءِۙ‏ வானத்தில்
14:24. அலம் தர கய்Fப ளரBபல் லாஹு மதலன் கலிமதன் தய்யிBபதன் கஷஜரதின் தய்யிBபதின் அஸ்லுஹா தாBபிது(ன்)வ் வ Fபர்'உஹா Fபிஸ் ஸமா'
14:24. (நபியே!) நல்வாக்கியத்திற்கு அல்லாஹ் எவ்வாறு உதாரணம் கூறுகிறான் என்பதை நீர் கவனிக்கவில்லையா? அது ஒரு நன்மரத்தைப் போன்றது; அதனுடைய வேர் (பூமியில் ஆழமாகப்) பதிந்ததாகவும், அதன் கிளைகள் வானளாவியும் இருக்கிறது.
14:25
14:25 تُؤْتِىْۤ اُكُلَهَا كُلَّ حِيْنٍۢ بِاِذْنِ رَبِّهَا‌ؕ وَيَضْرِبُ اللّٰهُ الْاَمْثَالَ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَذَكَّرُوْنَ‏
تُؤْتِىْۤ கொடுக்கிறது اُكُلَهَا தன் கனிகளை كُلَّ حِيْنٍۢ எல்லாக் காலத்திலும் بِاِذْنِ அனுமதி கொண்டு رَبِّهَا‌ؕ தன் இறைவனின் وَيَضْرِبُ இன்னும் விவரிக்கிறான் اللّٰهُ அல்லாஹ் الْاَمْثَالَ உதாரணங்களை لِلنَّاسِ மனிதர்களுக்கு لَعَلَّهُمْ يَتَذَكَّرُوْنَ‏ அவர்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக
14:25. து'தீ உகுலஹா குல்ல ஹீனிம் Bபி இத்னி ரBப்Bபிஹா; வ யள்ரிBபுல் லாஹுல் அம்தால லின்னாஸி ல'அல்லஹும் யததக் கரூன்
14:25. அது, தன்னுடைய இறைவனின் அனுமதியைக் கொண்டு ஒவ்வொரு காலத்திலும் தன்னுடைய கனியைக் கொடுத்துக்கொண்டே இருக்கிறது; மனிதர்களுக்கு - அவர்கள் படிப்பினை பெறுவதற்காக - அல்லாஹ் (இத்தகைய) உதாரணங்களைக் கூறுகிறான்.
14:26
14:26 وَمَثَلُ كَلِمَةٍ خَبِيْثَةٍ كَشَجَرَةٍ خَبِيْثَةٍ ۨاجْتُثَّتْ مِنْ فَوْقِ الْاَرْضِ مَا لَهَا مِنْ قَرَارٍ‏
وَمَثَلُ இன்னும் உதாரணம் كَلِمَةٍ வாசகத்திற்கு خَبِيْثَةٍ கெட்டது كَشَجَرَةٍ மரத்திற்கு ஒப்பாகும் خَبِيْثَةٍ கெட்டது ۨاجْتُثَّتْ அறுபட்டது مِنْ இருந்து فَوْقِ மேல் الْاَرْضِ பூமியின் مَا இல்லை لَهَا அதற்கு مِنْ அறவே قَرَارٍ‏ எந்த உறுதி
14:26. வ மதலு கலிமதின் கBபீததின் கஷஜரதின் கBபீ ததினிஜ் துத்தத் மின் Fபவ்கில் அர்ளி மா லஹா மின் கரார்
14:26. (இணைவைப்போரின்) கெட்ட வாக்கியத்திற்கு உதாரணம், கெட்ட மரமாகும்; பூமியின் மேல் பாகத்திலிருந்தும் (அதன் வேர்) பிடுங்கப்பட்டிருக்கும்; அதற்கு நிலைத்து நிற்கும் தன்மையும் இல்லை.
14:27
14:27 يُثَبِّتُ اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا بِالْقَوْلِ الثَّابِتِ فِى الْحَيٰوةِ الدُّنْيَا وَفِى الْاٰخِرَةِ‌ ۚ وَيُضِلُّ اللّٰهُ الظّٰلِمِيْنَ‌ ۙ وَيَفْعَلُ اللّٰهُ مَا يَشَآءُ
يُثَبِّتُ உறுதிப்படுத்துகிறான் اللّٰهُ அல்லாஹ் الَّذِيْنَ எவர்களை اٰمَنُوْا நம்பிக்கை கொண்டார்கள் بِالْقَوْلِ சொல்லைக் கொண்டு الثَّابِتِ உறுதியானது فِى الْحَيٰوةِ வாழ்வில் الدُّنْيَا உலக(ம்) وَفِى الْاٰخِرَةِ‌ ۚ இன்னும் மறுமையில் وَيُضِلُّ வழிகெடுக்கிறான் اللّٰهُ அல்லாஹ் الظّٰلِمِيْنَ‌ ۙ அநியாயக்காரர்கள் وَيَفْعَلُ இன்னும் செய்கிறான் اللّٰهُ அல்லாஹ் مَا يَشَآءُ‏ தான் நாடுவதை
14:27. யுதBப்Bபிதுல் லாஹுல் லதீன ஆமனூ Bபில்கவ்லித் தாBபிதி Fபில் ஹயாதித் துன்யா வ Fபில் ஆகிரதி வ யுளில்லுல் லாஹுள் ளாலிமீன்; வ யFப்'அலுல் லாஹு மா யஷா'
14:27. எவர்கள் நம்பிக்கை கொள்கிறார்களோ அவர்களை இவ்வுலக வாழ்விலும் மறுமையிலும் உறுதியான சொல்லைக் கொண்டு அல்லாஹ் உறுதிப்படுத்துகின்றான்; இன்னும், அநியாயக்காரர்களை அல்லாஹ் வழிதவறச் செய்து விடுகிறான்; மேலும், அல்லாஹ் தான் நாடியதைச் செய்கிறான்.
14:28
14:28 اَلَمْ تَرَ اِلَى الَّذِيْنَ بَدَّلُوْا نِعْمَتَ اللّٰهِ كُفْرًا وَّاَحَلُّوْا قَوْمَهُمْ دَارَ الْبَوَارِۙ‏
اَلَمْ تَرَ நீர் பார்க்கவில்லையா? اِلَى பக்கம் الَّذِيْنَ எவர்கள் بَدَّلُوْا மாற்றினார்கள் نِعْمَتَ அருளை اللّٰهِ அல்லாஹ்வின் كُفْرًا நிராகரிப்பால் وَّاَحَلُّوْا இன்னும் தங்க வைத்தார்கள் قَوْمَهُمْ தங்கள் சமுதாயத்தை دَارَ الْبَوَارِۙ‏ அழிவு இல்லத்தில்
14:28. அலம் தர இலல் லதீன Bபத்தலூ னிஃமதல் லாஹி குFப்ர(ன்)வ் வ அஹல்லூ கவ்மஹும் தாரல் Bபவார்
14:28. அல்லாஹ்வின் அருட்கொடையை நிராகரிப்பாக மாற்றித் தங்கள் கூட்டத்தாரையும் அழிவு வீட்டில் இறக்கிவைத்தவர்களை (நபியே!) நீர் பார்க்கவில்லையா?
14:29
14:29 جَهَـنَّمَ‌ۚ يَصْلَوْنَهَا‌ؕ وَبِئْسَ الْقَرَارُ‏
جَهَـنَّمَ நரகம் يَصْلَوْنَهَا‌ؕ அதில் அவர்கள் எரிந்து பொசுங்குவார்கள் وَبِئْسَ மிகக் கெட்டது الْقَرَارُ‏ தங்குமிடத்தால்
14:29. ஜஹன்னம யஸ்லவ்னஹா வ Bபி'ஸல் கரார்
14:29. (அந்த அழிவு வீடான) நரகம் - அதில் அவர்கள் நுழைவார்கள்; இன்னும், அது தங்கும் இடங்களில் மிகவும் கெட்டதாகும்.
14:30
14:30 وَجَعَلُوْا لِلّٰهِ اَنْدَادًا لِّيُـضِلُّوْا عَنْ سَبِيْلِهٖ‌ؕ قُلْ تَمَتَّعُوْا فَاِنَّ مَصِيْرَكُمْ اِلَى النَّارِ‏
وَجَعَلُوْا இன்னும் ஏற்படுத்தினர் لِلّٰهِ அல்லாஹ்விற்கு اَنْدَادًا இணைகளை لِّيُـضِلُّوْا அவர்கள் வழிகெடுப்பதற்காக عَنْ سَبِيْلِهٖ‌ؕ அவனுடைய பாதையிலிருந்து قُلْ கூறுவீராக تَمَتَّعُوْا சுகமனுபவியுங்கள் فَاِنَّ நிச்சயமாக مَصِيْرَكُمْ உங்கள் மீட்சி اِلَى பக்கம் النَّارِ‏ நரகத்தின்
14:30. வ ஜ'அலூ லில்லாஹி அன்தாதல் லியுளில்லூ 'அன் ஸBபீலிஹ்; குல் தமத்த'ஊ Fப இன்னா மஸீரகும் இலன் னார்
14:30. மேலும், அல்லாஹ்வுக்கு இணையாக தெய்வங்களை அவர்கள் ஆக்கிக்கொண்டனர்; அவனுடைய பாதையிலிருந்து (மக்களை) அவைகள் கெடுப்பதற்காக; (நபியே! அவர்களை நோக்கி, "இவ்வுலகில் சிறிதுகாலம்) சுகம் அனுபவித்துக்கொள்ளுங்கள்; நிச்சயமாக நீங்கள் (இறுதியாகச்) சேருமிடம் நரகம்தான்" என்று கூறிவிடும்.
14:31
14:31 قُلْ لِّـعِبَادِىَ الَّذِيْنَ اٰمَنُوْا يُقِيْمُوا الصَّلٰوةَ وَيُنْفِقُوْا مِمَّا رَزَقْنٰهُمْ سِرًّا وَّعَلَانِيَةً مِّنْ قَبْلِ اَنْ يَّاْتِىَ يَوْمٌ لَّا بَيْعٌ فِيْهِ وَلَا خِلٰلٌ‏
قُلْ கூறுவீராக لِّـعِبَادِىَ என் அடியார்களுக்கு الَّذِيْنَ எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டனர் يُقِيْمُوا நிலை நிறுத்தட்டும் الصَّلٰوةَ தொழுகையை وَيُنْفِقُوْا இன்னும் தானம் செய்யட்டும் مِمَّا நாம் வசதியளித்தவற்றில் رَزَقْنٰهُمْ அவர்களுக்கு سِرًّا இரகசியமாக وَّعَلَانِيَةً இன்னும் வெளிப்படையாக مِّنْ قَبْلِ முன்னர் اَنْ يَّاْتِىَ வருவதற்கு يَوْمٌ ஒரு நாள் لَّا இல்லை بَيْعٌ கொடுக்கல் வாங்கல் فِيْهِ அதில் وَلَا இல்லை خِلٰلٌ‏ நட்பு
14:31. குல் லி'இBபாதியல் லதீன ஆமனூ யுகீமுஸ் ஸலாத வ யுன்Fபிகூ மிம்மா ரZஜக்னாஹும் ஸிர்ர(ன்)வ் வ 'அலானியதம் மின் கBப்லி அ(ன்)ய் யாதிய யவ்முல் லா Bபய்'உன் Fபீஹி வலா கிலால்
14:31. நம்பிக்கை கொண்ட என் அடியார்களிடம் (நபியே!) "கொடுக்கலும் வாங்கலும், நட்பும் இல்லாத (இறுதி) நாள் வருவதற்கு முன்னதாகவே, அவர்கள் தொழுகையைக் கடைப்பிடிக்கவும், நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து, இரகசியமாகவும், பகிரங்கமாகவும் (தானதர்மங்களில்) செலவும் செய்யட்டும்" என்று நீர் கூறுவீராக!
14:32
14:32 اَللّٰهُ الَّذِىْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَاَنْزَلَ مِنَ السَّمَآءِ مَآءً فَاَخْرَجَ بِهٖ مِنَ الثَّمَرٰتِ رِزْقًا لَّـكُمْ‌ ۚ وَسَخَّرَ لَـكُمُ الْـفُلْكَ لِتَجْرِىَ فِى الْبَحْرِ بِاَمْرِهٖ‌ۚ وَسَخَّرَ لَـكُمُ الْاَنْهٰرَ‌ۚ‏
اَللّٰهُ அல்லாஹ்தான் الَّذِىْ எத்தகையவன் خَلَقَ படைத்தான் السَّمٰوٰتِ வானங்களை وَالْاَرْضَ இன்னும் பூமியை وَاَنْزَلَ இன்னும் இறக்கினான் مِنَ السَّمَآءِ வானத்திலிருந்து مَآءً மழையை فَاَخْرَجَ வெளிப்படுத்தினான் بِهٖ அதைக் கொண்டு مِنَ الثَّمَرٰتِ கனிகளில் رِزْقًا لَّـكُمْ‌ ۚ உணவாக/உங்களுக்கு وَسَخَّرَ வசப்படுத்தினான் لَـكُمُ உங்களுக்கு الْـفُلْكَ கப்பலை لِتَجْرِىَ அது செல்வதற்காக فِى الْبَحْرِ கடலில் بِاَمْرِهٖ‌ۚ அவனுடைய கட்டளையைக் கொண்டு وَسَخَّرَ இன்னும் வசப்படுத்தினான் لَـكُمُ உங்களுக்கு الْاَنْهٰرَ‌ۚ‏ ஆறுகளை
14:32. அல்லாஹுல் லதீ கலகஸ் ஸமாவாதி வல் அர்ள வ அன்Zஜல மினஸ் ஸமா'இ மா'அன் Fப'அக்ரஜ Bபிஹீ மினத் தமராதி ரிZஜ்கல் லகும் வ ஸக்கர லகுமுல் Fபுல்க லிதஜ்ரிய Fபில் Bபஹ்ரி Bபி அம்ரிஹீ வ ஸக்கர லகுமுல் அன்ஹார்
14:32. அல்லாஹ் எத்தகையவனென்றால், அவன்தான் வானங்களையும், பூமியையும் படைத்து, வானத்திலிருந்து தண்ணீரை (- மழையை) இறக்கி, அதைக்கொண்டு கனிவர்க்கங்களையும் உங்களுக்கு ஆகாரமாக வெளிப்படுத்தினான்; இன்னும், தன் கட்டளையினால் கடலில் செல்லுமாறு கப்பலை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்தும், ஆறுகளையும் உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான்.
14:33
14:33 وَسَخَّرَ لَـكُمُ الشَّمْسَ وَالْقَمَرَ دَآٮِٕبَيْنِ‌ۚ وَسَخَّرَ لَـكُمُ الَّيْلَ وَالنَّهَارَ‌ۚ‏
وَسَخَّرَ இன்னும் வசப்படுத்தினான் لَـكُمُ உங்களுக்கு الشَّمْسَ சூரியனை وَالْقَمَرَ இன்னும் சந்திரனை دَآٮِٕبَيْنِ‌ۚ தொடர்ந்து செயல்படக்கூடியதாக وَسَخَّرَ இன்னும் வசப்படுத்தினான் لَـكُمُ உங்களுக்கு الَّيْلَ இரவை وَالنَّهَارَ‌ۚ‏ இன்னும் பகலை
14:33. வ ஸக்கர லகுமுஷ் ஷம்ஸ வல்கமர தா'இBபய்னி வ ஸக்கர லகுமுல் லய்ல வன்னஹார்
14:33. (தவறாமல், தம் வழிகளில்) தொடர்ந்து செல்லுமாறு சூரியனையும் சந்திரனையும் அவனே உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான்; மேலும், அவனே இரவையும் பகலையும் உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான்.
14:34
14:34 وَاٰتٰٮكُمْ مِّنْ كُلِّ مَا سَاَلْـتُمُوْهُ‌ ؕ وَاِنْ تَعُدُّوْا نِعْمَتَ اللّٰهِ لَا تُحْصُوْهَا ؕ اِنَّ الْاِنْسَانَ لَـظَلُوْمٌ كَفَّارٌ
وَاٰتٰٮكُمْ தந்தான்/உங்களுக்கு مِّنْ كُلِّ مَا سَاَلْـتُمُوْهُ‌ ؕ நீங்கள் கேட்டதிலிருந்தெல்லாம்/அவனிடம் وَاِنْ تَعُدُّوْا நீங்கள் கணக்கிட்டால் نِعْمَتَ அருளை اللّٰهِ அல்லாஹ்வின் لَا تُحْصُوْهَا ؕ நீங்கள் எண்ண முடியாது/அதை اِنَّ நிச்சயமாக الْاِنْسَانَ மனிதன் لَـظَلُوْمٌ மகா அநியாயக்காரன் كَفَّارٌ‏ மிக நன்றிகெட்டவன்
14:34. வ ஆதாகும் மின் குல்லி மா ஸ அல்துமூஹ்; வ இன் த'உத்தூ னிஃமதல் லாஹி லா துஹ்ஸூஹா; இன்னல் இன்ஸான லளலூ முன் கFப்Fபார்
14:34. (இவையன்றி) நீங்கள் அவனிடம் கேட்ட யாவற்றிலிருந்தும் அவன் உங்களுக்குக் கொடுத்தான்; அல்லாஹ்வின் அருட்கொடையை நீங்கள் எண்ணினால், அவற்றை நீங்கள் எண்ணி முடியாது; நிச்சயமாக மனிதன் மிக்க அநியாயக்காரனாகவும் மிக்க நன்றிகெட்டவனாகவும் இருக்கின்றான்.
14:35
14:35 وَاِذْ قَالَ اِبْرٰهِيْمُ رَبِّ اجْعَلْ هٰذَا الْبَلَدَ اٰمِنًا وَّاجْنُبْنِىْ وَبَنِىَّ اَنْ نَّـعْبُدَ الْاَصْنَامَؕ‏
وَاِذْ قَالَ கூறியபோது اِبْرٰهِيْمُ இப்றாஹீம் رَبِّ என் இறைவா اجْعَلْ ஆக்கு هٰذَا الْبَلَدَ இந்த ஊரை اٰمِنًا அபயமளிப்பதாக وَّاجْنُبْنِىْ இன்னும் தூரமாக்கு/என்னை وَبَنِىَّ இன்னும் என் பிள்ளைகளை اَنْ نَّـعْبُدَ நாங்கள் வணங்குவதை الْاَصْنَامَؕ‏ சிலைகளை
14:35. வ இத் கால இBப்ராஹீமு ரBப்Bபிஜ் 'அல் ஹாதல் Bபலத ஆமின(ன்)வ் வஜ்னுBப்னீ வ Bபனிய்ய அன் னஃBபுதல் அஸ்னாம்
14:35. "என் இறைவனே! இந்த ஊரை (மக்காவை) சமாதானமுள்ளதாய், அச்சம் தீர்ந்ததாய் ஆக்குவாயாக! என்னையும், என் மக்களையும் சிலைகளை நாங்கள் வணங்குவதிலிருந்து காப்பாற்றுவாயாக!" என்று இப்ராஹீம் கூறியதை (நபியே! நீர் அவர்களுக்கு நினைவுகூரும்).
14:36
14:36 رَبِّ اِنَّهُنَّ اَضْلَلْنَ كَثِيْرًا مِّنَ النَّاسِ‌ۚ فَمَنْ تَبِعَنِىْ فَاِنَّهٗ مِنِّىْ‌ۚ وَمَنْ عَصَانِىْ فَاِنَّكَ غَفُوْرٌ رَّحِيْمٌ‏
رَبِّ என் இறைவா اِنَّهُنَّ நிச்சயமாக இவை اَضْلَلْنَ வழி கெடுத்தன كَثِيْرًا பலரை مِّنَ النَّاسِ‌ۚ மக்களில் فَمَنْ ஆகவே, எவர் تَبِعَنِىْ பின்பற்றினார்/என்னை فَاِنَّهٗ நிச்சயமாக அவர் مِنِّىْ‌ۚ என்னை சேர்ந்த وَمَنْ இன்னும் எவர் عَصَانِىْ மாறு செய்தார்/எனக்கு فَاِنَّكَ நிச்சயமாக நீ غَفُوْرٌ மகா மன்னிப்பாளன் رَّحِيْمٌ‏ பெரும் கருணையாளன்
14:36. ரBப்Bபி இன்னஹுன்ன அள்லல்ன கதீரம் மினன் னாஸி Fபமன் தBபி'அனீ Fப இன்னஹூ மின்னீ வ மன் 'அஸானீ Fப இன்னக கFபூருர் ரஹீம்
14:36. "என் இறைவனே! நிச்சயமாக இவை (சிலைகள்) மக்களில் அநேகரை வழிகெடுத்து விட்டன; எனவே, எவர் என்னைப் பின்பற்றுகிறாரோ அவர் என்னைச் சேர்ந்தவராவார்; எவர் எனக்கு மாறு செய்கிறாரோ (அவர் என்னைச் சார்ந்தவர் இல்லை என்றாலும்), அப்போது நிச்சயமாக நீ மன்னிப்பவனாகவும் மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றாய்."
14:37
14:37 رَبَّنَاۤ اِنِّىْۤ اَسْكَنْتُ مِنْ ذُرِّيَّتِىْ بِوَادٍ غَيْرِ ذِىْ زَرْعٍ عِنْدَ بَيْتِكَ الْمُحَرَّمِۙ رَبَّنَا لِيُقِيْمُوْا الصَّلٰوةَ فَاجْعَلْ اَ فْـٮِٕدَةً مِّنَ النَّاسِ تَهْوِىْۤ اِلَيْهِمْ وَارْزُقْهُمْ مِّنَ الثَّمَرٰتِ لَعَلَّهُمْ يَشْكُرُوْنَ‏
رَبَّنَاۤ எங்கள் இறைவா اِنِّىْۤ நிச்சயமாக நான் اَسْكَنْتُ வசிக்க வைத்தேன் مِنْ ذُرِّيَّتِىْ என் சந்ததிகளில் சில بِوَادٍ ஒரு பள்ளத்தாக்கில் غَيْرِ ذِىْ زَرْعٍ விவசாயமற்றது عِنْدَ அருகில் بَيْتِكَ உன் வீட்டின் الْمُحَرَّمِۙ புனிதமாக்கப்பட்டது رَبَّنَا எங்கள் இறைவா لِيُقِيْمُوْا அவர்கள் நிலைநிறுத்துவதற்காக الصَّلٰوةَ அவர்கள் தொழுகையை فَاجْعَلْ ஆகவே ஆக்கு اَ فْـٮِٕدَةً உள்ளங்களை مِّنَ النَّاسِ மக்களிலிருந்து تَهْوِىْۤ ஆசைப்படக்கூடியதாக اِلَيْهِمْ அவர்கள் பக்கம் وَارْزُقْهُمْ இன்னும் உணவளி/அவர்களுக்கு مِّنَ الثَّمَرٰتِ கனிகளிலிருந்து لَعَلَّهُمْ يَشْكُرُوْنَ‏ அவர்கள் நன்றி செலுத்துவதற்காக
14:37. ரBப்Bபனா இன்னீ அஸ்கன்து மின் துர்ரிய்யதீ Bபிவாதின் கய்ரி தீ Zஜர்'இன் 'இன்த Bபய்திகல் முஹர்ரமி ரBப்Bபனா லியுகீமுஸ் ஸலாத Fபஜ்'அல் அFப்'இததம் மினன் னாஸி தஹ்வீ இலய்ஹிம் வர்Zஜுக்ஹும் மினத் தமராதி ல'அல்லஹும் யஷ்குரூன்
14:37. "எங்கள் இறைவனே! நிச்சயமாக நான் என் சந்ததியரிலிருந்து (சிலரை) சங்கையான உன் வீட்டின் (கஃபாவின்) அருகே, விவசாயமில்லாத (இப்) பள்ளத்தாக்கில் குடியேற்றியிருக்கின்றேன்; எங்கள் இறைவனே! தொழுகையை அவர்கள் நிலைநாட்டுவதற்காக; எனவே, மக்களில் ஒரு தொகையினரின் இதயங்களை அவர்கள்பால் சாய்ந்திடச் செய்வாயாக! இன்னும், அவர்கள் நன்றி செலுத்தும் பொருட்டும் கனிவர்க்கங்களிலிருந்து அவர்களுக்கு நீ ஆகாரமும் அளிப்பாயாக!"
14:38
14:38 رَبَّنَاۤ اِنَّكَ تَعْلَمُ مَا نُخْفِىْ وَمَا نُعْلِنُ‌ ؕ وَمَا يَخْفٰى عَلَى اللّٰهِ مِنْ شَىْءٍ فِى الْاَرْضِ وَلَا فِى السَّمَآءِ‏
رَبَّنَاۤ எங்கள் இறைவா اِنَّكَ நிச்சயமாக நீ تَعْلَمُ அறிவாய் مَا எதை نُخْفِىْ நாங்கள் மறைப்போம் وَمَا எதை نُعْلِنُ‌ ؕ வெளிப்படுத்துவோம் وَمَا يَخْفٰى மறையாது عَلَى اللّٰهِ அல்லாஹ்விற்கு مِنْ شَىْءٍ எதுவும் فِى الْاَرْضِ பூமியில் وَلَا فِى السَّمَآءِ‏ இன்னும் வானத்தில்
14:38. ரBப்Bபனா இன்னக தஃலமு மா னுக்Fபீ வமா னுஃலின்; வமா யக்Fபா 'அலல் லாஹி மின் ஷய்'இன் Fபில் அர்ளி வலா Fபிஸ் ஸமா'
14:38. எங்கள் இறைவனே! நாங்கள் மறைத்து வைத்திருப்பதையும், நாங்கள் பகிரங்கப்படுத்துவதையும் நிச்சயமாக நீ அறிகிறாய்; இன்னும், பூமியிலோ, மேலும் வானத்திலோ உள்ள எந்தப் பொருளும் அல்லாஹ்வுக்கு மறைந்ததாக இல்லை.
14:39
14:39 اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِىْ وَهَبَ لِىْ عَلَى الْـكِبَرِ اِسْمٰعِيْلَ وَاِسْحٰقَ‌ؕ اِنَّ رَبِّىْ لَسَمِيْعُ الدُّعَآءِ‏
اَلْحَمْدُ எல்லாப் புகழும் لِلّٰهِ அல்லாஹ்விற்கே الَّذِىْ எத்தகையவன் وَهَبَ வழங்கினான் لِىْ எனக்கு عَلَى الْـكِبَرِ வயோதிகத்தில் اِسْمٰعِيْلَ இஸ்மாயீலை وَاِسْحٰقَ‌ؕ இன்னும் இஸ்ஹாக்கை اِنَّ நிச்சயமாக رَبِّىْ என் இறைவன் لَسَمِيْعُ நன்கு செவியுறுபவன் الدُّعَآءِ‏ பிரார்த்தனையை
14:39. அல்ஹம்து லில்லாஹில் லதீ வஹBப லீ 'அலல் கிBபரி இஸ்மா'ஈல வ இஸ்ஹாக்; இன்ன ரBப்Bபீ லஸமீ'உத் து'ஆ
14:39. "எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது; அவனே (என்னுடைய) முதுமையில் இஸ்மாயீலையும், இஸ்ஹாக்கையும் (புதல்வர்களாக) எனக்கு அளித்தான்; நிச்சயமாக என் இறைவன் பிரார்த்தனையைக் கேட்பவன்."
14:40
14:40 رَبِّ اجْعَلْنِىْ مُقِيْمَ الصَّلٰوةِ وَمِنْ ذُرِّيَّتِىْ‌‌ ۖ  رَبَّنَا وَتَقَبَّلْ دُعَآءِ‏
رَبِّ என் இறைவா اجْعَلْنِىْ ஆக்கு/என்னை مُقِيْمَ நிலைநிறுத்துபவனாக الصَّلٰوةِ தொழுகையை وَمِنْ ذُرِّيَّتِىْ‌ இன்னும் என் சந்ததிகளிலிருந்து ۖ  رَبَّنَا எங்கள் இறைவா وَتَقَبَّلْ இன்னும் ஏற்றுக் கொள் دُعَآءِ‏ என் பிரார்த்தனையை
14:40. ரBப்Bபிஜ் 'அல்னீ முகீமஸ் ஸலாதி வ மின் துர்ரிய்யதீ ரBப்Bபனா வ தகBப்Bபல் து'ஆ'
14:40. "என் இறைவனே! என்னையும், என்னுடைய சந்ததியிலுள்ளோரையும் தொழுகையை நிலைநிறுத்துவோராக ஆக்குவாயாக! எங்கள் இறைவனே! என்னுடைய பிரார்த்தனையையும் ஏற்றுக்கொள்வாயாக!"
14:41
14:41 رَبَّنَا اغْفِرْ لِىْ وَلـِوَالِدَىَّ وَلِلْمُؤْمِنِيْنَ يَوْمَ يَقُوْمُ الْحِسَابُ
رَبَّنَا எங்கள் இறைவா اغْفِرْ மன்னிப்பளி لِىْ எனக்கு وَلـِوَالِدَىَّ இன்னும் என் தாய் தந்தைக்கு وَلِلْمُؤْمِنِيْنَ இன்னும் நம்பிக்கையாளர்களுக்கு يَوْمَ நாளில் يَقُوْمُ நிறைவேறும் الْحِسَابُ‏ விசாரணை
14:41. ரBப்Bபனக் Fபிர் லீ வ லிவாலிதய்ய வ லில்மு'மினீன யவ்ம யகூமுல் ஹிஸாBப்
14:41. எங்கள் இறைவா! என்னையும், என் பெற்றோர்களையும், நம்பிக்கையாளர்களையும் கேள்விக்கணக்கு நடைபெறும் (மறுமை) நாளில் மன்னிப்பாயாக!" (என்று பிரார்த்தித்தார்.)
14:42
14:42 وَلَا تَحْسَبَنَّ اللّٰهَ غَافِلًا عَمَّا يَعْمَلُ الظّٰلِمُوْنَ‌ ؕ اِنَّمَا يُؤَخِّرُهُمْ لِيَوْمٍ تَشْخَصُ فِيْهِ الْاَبْصَارُ ۙ‏
وَلَا تَحْسَبَنَّ எண்ணி விடாதீர் اللّٰهَ அல்லாஹ்வை غَافِلًا கவனிக்காதவனாக عَمَّا يَعْمَلُ செய்வதைப் பற்றி الظّٰلِمُوْنَ‌ ؕ அக்கிரமக்காரர்கள் اِنَّمَا يُؤَخِّرُ பிற்படுத்துவதெல்லாம் هُمْ அவர்களை لِيَوْمٍ ஒரு நாளுக்காக تَشْخَصُ கூர்ந்து விழித்திடும் فِيْهِ அதில் الْاَبْصَارُ ۙ‏ பார்வைகள்
14:42. வ லா தஹ்ஸBபன்னல் லாஹ காFபிலன் 'அம்மா யஃமலுள் ளாலிமூன்; இன்னமா யு'அக் கிருஹும் லி யவ்மின் தஷ்கஸு Fபீஹில் அBப்ஸார்
14:42. மேலும், அக்கிரமக்காரர்கள் செய்து கொண்டிருப்பதைப்பற்றி அல்லாஹ் பராமுகமாக இருக்கின்றான் என்று (நபியே!) நீர் நிச்சயமாக எண்ண வேண்டாம்; அவர்களுக்கு (தண்டனையை) தாமதப்படுத்துவதெல்லாம், எதில் கண்கள் விரைத்துப் பார்த்துக்கொண்டேயிருக்குமோ அந்த (மறுமை) நாளுக்காகத்தான்.
14:43
14:43 مُهْطِعِيْنَ مُقْنِعِىْ رُءُوْسِهِمْ لَا يَرْتَدُّ اِلَيْهِمْ طَرْفُهُمْ‌ ۚ وَاَفْـِٕدَتُهُمْ هَوَآءٌ ؕ‏
مُهْطِعِيْنَ விரைந்தவர்களாக مُقْنِعِىْ உயர்த்தியவர்களாக رُءُوْسِهِمْ தங்கள் தலைகளை لَا يَرْتَدُّ திரும்பாது اِلَيْهِمْ அவர்களிடம் طَرْفُهُمْ‌ ۚ அவர்களின் பார்வை وَاَفْـِٕدَتُهُمْ அவர்களுடைய உள்ளங்கள் هَوَآءٌ ؕ‏ வெற்றிடமாக
14:43. முஹ்தி'ஈன முக்னி'ஈ ரு'ஊஸிஹிம் லா யர்தத்து இலய்ஹிம் தர்Fபுஹும் வ அFப்'இததுஹும் ஹவா'
14:43. (அந்நாளில்) தங்களுடைய சிரங்களை (எப்பக்கமும் பாராமல்) நிமிர்த்தியவர்களாகவும் விரைந்தோடுபவர்களாகவும் அவர்கள் இருப்பார்கள்; (நிலை குத்திய) அவர்களின் பார்வை அவர்கள் பக்கம் திரும்பாது; இன்னும், அவர்களுடைய இதயங்கள் (திடுக்கம் கொண்டு) செயலற்றுவிடும்.
14:44
14:44 وَاَنْذِرِ النَّاسَ يَوْمَ يَاْتِيْهِمُ الْعَذَابُ فَيَـقُوْلُ الَّذِيْنَ ظَلَمُوْا رَبَّنَاۤ اَخِّرْنَاۤ اِلٰٓى اَجَلٍ قَرِيْبٍۙ نُّجِبْ دَعْوَتَكَ وَنَـتَّبِعِ الرُّسُلَ‌ؕ اَوَلَمْ تَكُوْنُوْۤااَقْسَمْتُمْ مِّنْ قَبْلُ مَالَـكُمْ مِّنْ زَوَالٍۙ‏
وَاَنْذِرِ எச்சரிப்பீராக النَّاسَ மக்களை يَوْمَ நாள் يَاْتِيْهِمُ அவர்களுக்கு வரும் الْعَذَابُ வேதனை فَيَـقُوْلُ கூறுவர் الَّذِيْنَ எவர்கள் ظَلَمُوْا அநியாயம் செய்தனர் رَبَّنَاۤ எங்கள் இறைவா اَخِّرْنَاۤ எங்களை பிற்படுத்து اِلٰٓى வரை اَجَلٍ ஒரு தவனை قَرِيْبٍۙ சமீபமானது نُّجِبْ பதிலளிப்போம் دَعْوَتَكَ உன் அழைப்புக்கு وَنَـتَّبِعِ இன்னும் பின்பற்றுவோம் الرُّسُلَ‌ؕ தூதர்களை اَوَلَمْ تَكُوْنُوْۤا நீங்கள் இருக்கவில்லையா? اَقْسَمْتُمْ சத்தியம் செய்தீர்கள் مِّنْ قَبْلُ இதற்கு முன்னர் مَالَـكُمْ உங்களுக்கு இல்லை مِّنْ زَوَالٍۙ‏ அழிவே
14:44. வ அன்திரின் னாஸ யவ்ம யாதீஹிமுல் 'அதாBபு Fப யகூலுல் லதீன ளலமூ ரBப்Bபனா அக்கிர்னா இலா அஜலின் கரீBபின் னுஜிBப் தஃவதக வ னத்தBபி 'இர் ருஸுல்; அவலம் தகூனூ அக்ஸம்தும் மின் கBப்லு மா லகும் மின் Zஜவால்
14:44. எனவே, அத்தகைய வேதனை அவர்களிடம் வரும் நாளை (நபியே!) நீர் மனிதர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக! அப்போது அநியாயம் செய்தவர்கள்: "எங்கள் இறைவனே! எங்களுக்குச் சற்றே அவகாசம் கொடுப்பாயாக! உன்னுடைய அழைப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்; (உன்னுடைய) தூதர்களையும் பின்பற்றுகிறோம்" என்று சொல்வார்கள். (அதற்கு இறைவன்) "உங்களுக்கு முடிவேயில்லை என்று இதற்கு முன்னர் நீங்கள் சத்தியம் செய்துகொண்டிருக்கவில்லையா?" (என்றும்.)
14:45
14:45 وَّسَكَنْتُمْ فِىْ مَسٰكِنِ الَّذِيْنَ ظَلَمُوْۤا اَنْفُسَهُمْ وَتَبَيَّنَ لَـكُمْ كَيْفَ فَعَلْنَا بِهِمْ وَضَرَبْنَا لَـكُمُ الْاَمْثَالَ‏
وَّسَكَنْتُمْ இன்னும் வசித்தீர்கள் فِىْ مَسٰكِنِ வசிப்பிடங்களில் الَّذِيْنَ எவர்கள் ظَلَمُوْۤا தீங்கிழைத்தனர் اَنْفُسَهُمْ தமக்குத்தாமே وَتَبَيَّنَ இன்னும் தெளிவானது لَـكُمْ உங்களுக்கு كَيْفَ எப்படி فَعَلْنَا நாம் செய்தோம் بِهِمْ அவர்களுக்கு وَضَرَبْنَا இன்னும் விவரித்தோம் لَـكُمُ உங்களுக்கு الْاَمْثَالَ‏ உதாரணங்களை
14:45. வ ஸகன்தும் Fபீ மஸாகினில் லதீன ளலமூ அன்Fபுஸஹும் வ தBபய்யன லகும் கய்Fப Fப'அல்னா Bபிஹிம் வ ளரBப்னா லகுமுல் அம்தால்
14:45. "அன்றியும், தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டார்களே அவர்கள் வாழ்விடங்களில் நீங்களும் வசித்தீர்கள்; அவர்களை நாம் எவ்வாறு (வேதனை) செய்தோம் என்பதும் உங்களுக்குத் தெளிவாகிவிட்டது; இன்னும், நாம் உங்களுக்கு(ப் பல முன்) உதாரணங்களையும் எடுத்துக்காட்டியிருக்கிறோம்" (என்றும் இறைவன் கூறுவான்).
14:46
14:46 وَقَدْ مَكَرُوْا مَكْرَهُمْ وَعِنْدَ اللّٰهِ مَكْرُهُمْؕ وَاِنْ كَانَ مَكْرُهُمْ لِتَزُوْلَ مِنْهُ الْجِبَالُ‏
وَقَدْ திட்டமாக مَكَرُوْا சூழ்ச்சி செய்தனர் مَكْرَهُمْ தங்கள் சூழ்ச்சியை وَعِنْدَ اللّٰهِ அல்லாஹ்விடம் مَكْرُهُمْؕ அவர்களுடைய சூழ்ச்சி وَاِنْ كَانَ இருந்தாலும் مَكْرُ சூழ்ச்சி هُمْ அவர்களுடைய لِتَزُوْلَ பெயர்த்துவிடும்படி مِنْهُ அதனால் الْجِبَالُ‏ மலைகள்
14:46. வ கத் மகரூ மக்ரஹும் வ 'இன்தல் லாஹி மக்ருஹும் வ இன் கான மக்ருஹும் லிதZஜூல மின்ஹுல் ஜிBபால்
14:46. எனினும், அவர்கள் தங்கள் சூழ்ச்சியைத் திட்டமாகச் செய்துகொண்டேயிருந்தனர்; அவர்களுடைய சூழ்ச்சி மலைகளைப் பெயர்த்துவிடக் கூடியவையாக இருந்தபோதிலும், அவர்களின் சூழ்ச்சி(க்கு உரிய தண்டனை) அல்லாஹ்விடம் இருக்கிறது.
14:47
14:47 فَلَا تَحْسَبَنَّ اللّٰهَ مُخْلِفَ وَعْدِهٖ رُسُلَهٗؕ اِنَّ اللّٰهَ عَزِيْزٌ ذُوْ انْتِقَامٍؕ‏
فَلَا تَحْسَبَنَّ நிச்சயமாகஎண்ணாதீர் اللّٰهَ அல்லாஹ்வை مُخْلِفَ மீறுபவனாக وَعْدِهٖ தனது வாக்கை رُسُلَهٗؕ தனது தூதர்களுக்கு اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் عَزِيْزٌ மிகைத்தவன் ذُوْ انْتِقَامٍؕ‏ பழிவாங்குபவன்
14:47. Fபலா தஹ்ஸBபன்னல் லாஹ முக்லிFப வஃதிஹீ ருஸுலஹ்; இன்னல் லாஹ 'அZஜீZஜுன் துன்திகாம்
14:47. ஆகவே, அல்லாஹ் தன் தூதர்களுக்கு அளித்த தன் வாக்குறுதியில் மாறுசெய்வான் என்று (நபியே!) நீர் எண்ண வேண்டாம்; நிச்சயமாக அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தவனாகவும், பழிவாங்குபவனாகவும் இருக்கின்றான்.
14:48
14:48 يَوْمَ تُبَدَّلُ الْاَرْضُ غَيْرَ الْاَرْضِ وَالسَّمٰوٰتُ‌ وَبَرَزُوْا لِلّٰهِ الْوَاحِدِ الْقَهَّارِ‏
يَوْمَ நாளில் تُبَدَّلُ மாற்றப்படும் الْاَرْضُ பூமி غَيْرَ الْاَرْضِ வேறு பூமியாக وَالسَّمٰوٰتُ‌ இன்னும் வானங்கள் وَبَرَزُوْا இன்னும் வெளிப்படுவர் لِلّٰهِ அல்லாஹ்விற்கு الْوَاحِدِ ஒருவன் الْقَهَّارِ‏ அடக்கி ஆளுபவன்
14:48. யவ்ம துBபத்தலுல் அர்ளு கய்ரல் அர்ளி வஸ்ஸமாவாது வ BபரZஜூ லில்லாஹில் வாஹிதில் கஹ்ஹார்
14:48. இந்த பூமி வேறு பூமியாகவும் இன்னும் வானங்களும் மாற்றப்படும் நாளில் (அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்); மேலும், அடக்கியாளும் ஏகனாகிய அல்லாஹ்வின் முன்னிலையில் வெளியாகி நிற்பார்கள்.
14:49
14:49 وَتَرَى الْمُجْرِمِيْنَ يَوْمَٮِٕذٍ مُّقَرَّنِيْنَ فِى الْاَصْفَادِ‌ۚ‏
وَتَرَى இன்னும் காண்பீர் الْمُجْرِمِيْنَ குற்றவாளிகளை يَوْمَٮِٕذٍ அந்நாளில் مُّقَرَّنِيْنَ பிணைக்கப்பட்டவர்களாக فِى الْاَصْفَادِ‌ۚ‏ விலங்குகளில்
14:49. வ தரல் முஜ்ரிமீன யவ்ம 'இதிம் முகர்ரனீன Fபில் அஸ்Fபாத்
14:49. இன்னும், அந்நாளில் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டவர்களாகக் குற்றவாளிகளை நீர் காண்பீர்.
14:50
14:50 سَرَابِيْلُهُمْ مِّنْ قَطِرَانٍ وَّتَغْشٰى وُجُوْهَهُمُ النَّارُۙ‏
سَرَابِيْلُهُمْ சட்டைகள்/அவர்களுடைய مِّنْ قَطِرَانٍ தாரினால் وَّتَغْشٰى இன்னும் சூழும் وُجُوْهَهُمُ அவர்களுடைய முகங்கள் النَّارُۙ‏ நெருப்பு
14:50. ஸராBபீலுஹும் மின் கதிரானி(ன்)வ் வ தக்ஷா வுஜூஹஹுமுன் னார்
14:50. அவர்களுடைய ஆடைகள் தாரால் (செய்யப்பட்டு) இருக்கும்; இன்னும், அவர்களுடைய முகங்களை நெருப்பு மூடி இருக்கும்.
14:51
14:51 لِيَجْزِىَ اللّٰهُ كُلَّ نَفْسٍ مَّا كَسَبَتْ‌ؕ اِنَّ اللّٰهَ سَرِيْعُ الْحِسَابِ‏
لِيَجْزِىَ கூலி கொடுப்பதற்காக اللّٰهُ அல்லாஹ் كُلَّ ஒவ்வொரு نَفْسٍ ஆன்மா مَّا எவற்றை كَسَبَتْ‌ؕ செய்தது اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் سَرِيْعُ மிகத் தீவிரமானவன் الْحِسَابِ‏ விசாரிப்பதில்
14:51. லியஜ்Zஜியல் லாஹு குல்ல னFப்ஸிம் மா கஸBபத்; இன்னல் லாஹ ஸரீ'உல் ஹிஸாBப்
14:51. அல்லாஹ் ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அது சம்பாதித்ததற்கான கூலி கொடுப்பதற்காகவே (அவர்களை இவ்வாறு செய்வான்); நிச்சயமாக அல்லாஹ் கேள்வி கணக்குக் கேட்பதில் மிகவும் தீவிரமானவன்.
14:52
14:52 هٰذَا بَلٰغٌ لِّـلنَّاسِ وَلِيُنْذَرُوْا بِهٖ وَلِيَـعْلَمُوْۤا اَنَّمَا هُوَ اِلٰـهٌ وَّاحِدٌ وَّلِيَذَّكَّرَ اُولُوا الْا َلْبَابِ
هٰذَا இது بَلٰغٌ எடுத்துச் சொல்லப்படும் செய்தி لِّـلنَّاسِ மக்களுக்கு وَلِيُنْذَرُوْا இன்னும் அவர்கள் எச்சரிக்கப்படுவதற்காக بِهٖ இதன் மூலம் وَلِيَـعْلَمُوْۤا இன்னும் அவர்கள் அறிவதற்காக اَنَّمَا هُوَ அவன்தான் اِلٰـهٌ வணக்கத்திற்குரியவன் وَّاحِدٌ ஒரே ஒருவன் وَّلِيَذَّكَّرَ இன்னும் நல்லுபதேசம் பெறுவதற்காக اُولُوا الْا َلْبَابِ‏ அறிவுடையவர்கள்
14:52. ஹாத Bபலாகுல் லின்னாஸி வ லியுன்தரூ Bபிஹீ வ லியஃலமூ அன்னமா ஹுவ இல்லாஹு(ன்)வ் வாஹிது(ன்)வ் வ லியத் தக்கர உலுல் அல்BபாBப்
14:52. இதன் மூலம் அவர்கள் எச்சரிக்கப்படுவதற்காகவும், (வணக்கத்திற்குரிய) அவன் ஒரே இறைவன்தான் என்று அவர்கள் அறிந்துகொள்வதற்காகவும், அறிவுடையோர் படிப்பினை பெறுவதற்காகவும் மனிதர்களுக்கு இது ஓர் அறிவிப்பாகும்.