8. ஸூரத்துல் அன்ஃபால்(போரில் கிடைத்த வெற்றிப்பொருள்கள்)
மதனீ, வசனங்கள்: 75

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
8:1
8:1 يَسْــٴَــلُوْنَكَ عَنِ الْاَنْفَالِ‌ ؕ قُلِ الْاَنْفَالُ لِلّٰهِ وَالرَّسُوْلِ‌ ۚ فَاتَّقُوا اللّٰهَ وَاَصْلِحُوْا ذَاتَ بَيْنِكُمْ‌ وَاَطِيْعُوا اللّٰهَ وَرَسُوْلَهٗۤ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ‏
يَسْــٴَــلُوْنَكَ உம்மிடம் கேட்கிறார்கள் عَنِ الْاَنْفَالِ‌ ؕ அன்ஃபால் பற்றி قُلِ கூறுவீராக الْاَنْفَالُ (போரில் கிடைத்த) வெற்றிப் பொருள்கள் لِلّٰهِ அல்லாஹ்வுக்கு وَالرَّسُوْلِ‌ ۚ இன்னும் தூதருக்கு فَاتَّقُوا ஆகவே, அஞ்சுங்கள் اللّٰهَ அல்லாஹ்வை وَاَصْلِحُوْا இன்னும் சீர்திருத்தம் செய்யுங்கள் ذَاتَ بَيْنِكُمْ‌ உங்களுக்கு மத்தியில் وَاَطِيْعُوا இன்னும் கீழ்ப்படியுங்கள் اللّٰهَ அல்லாஹ்வுக்கு وَرَسُوْلَهٗۤ இன்னும் அவனுடைய தூதருக்கு اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ‏ நீங்கள் இருந்தால்/நம்பிக்கையாளர்களாக
8:1. யஸ்'அலூனக 'அனில் அன்Fபாலி குலில் அன்Fபாலு லில்லாஹி வர் ரஸூலி Fபத்தகுல் லாஹ வ அஸ்லிஹூ தாத Bபய்னிகும் வ அதீ'உல் லாஹ வ ரஸூலஹூ இன் குன்தும் மு'மினீன்
8:1. போரில் கிடைத்த வெற்றிப் பொருட்களைப்பற்றி உம்மிடம் அவர்கள் கேட்கிறார்கள்: (அதற்கு நபியே!) நீர் கூறுவீராக! "போரில் கிடைத்த வெற்றிப் பொருட்கள் அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும் சொந்தமானதாகும்; ஆகவே, அல்லாஹ்வுக்கு அஞ்சிக்கொள்ளுங்கள்: உங்களிடையே (உங்களுடைய) நிலைகளை சீராக்கிக்கொள்ளுங்கள்; நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருப்பின் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்."
8:2
8:2 اِنَّمَا الْمُؤْمِنُوْنَ الَّذِيْنَ اِذَا ذُكِرَ اللّٰهُ وَجِلَتْ قُلُوْبُهُمْ وَاِذَا تُلِيَتْ عَلَيْهِمْ اٰيٰتُهٗ زَادَتْهُمْ اِيْمَانًا وَّعَلٰى رَبِّهِمْ يَتَوَكَّلُوْنَ ‌‌ۖ ‌ۚ‏
اِنَّمَا الْمُؤْمِنُوْنَ நம்பிக்கையாளர்கள் எல்லாம் الَّذِيْنَ எவர்கள் اِذَا ذُكِرَ நினைவுகூரப்பட்டால் اللّٰهُ அல்லாஹ்வை وَجِلَتْ நடுங்கும் قُلُوْبُهُمْ உள்ளங்கள்/அவர்களுடைய وَاِذَا تُلِيَتْ இன்னும் ஓதப்பட்டால் عَلَيْهِمْ அவர்கள் முன் اٰيٰتُهٗ வசனங்கள்/அவனுடைய زَادَتْهُمْ அவை அதிகப்படுத்தும்/அவர்களுக்கு اِيْمَانًا இறை நம்பிக்கையை وَّعَلٰى رَبِّهِمْ இன்னும் தங்கள் இறைவன் மீதே يَتَوَكَّلُوْنَ ۖ நம்பிக்கை வைப்பார்கள்
8:2. இன்னமல் மு'மினூனல் லதீன இதா துகிரல் லாஹு வஜிலத் குலூBபுஹும் வ இதா துலியத் 'அலய்ஹிம் ஆயாதுஹூ Zஜாதத் ஹும் ஈமான(ன்)வ் வ 'அலா ரBப்Bபிஹிம் யதவக்கலூன்
8:2. நம்பிக்கையாளர்கள் யார் என்றால் அல்லாஹ்வைப் பற்றி (அவர்கள் முன்) கூறப்பட்டால், அவர்களுடைய இதயங்கள் பயந்து நடுங்கிவிடும்; அவனுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக்காண்பிக்கப்பட்டால், அவை அவர்களுக்கு ஈமானை (நம்பிக்கையை) அதிகப்படுத்தும்; மேலும், தங்களுடைய இறைவனையே அவர்கள் சார்ந்திருப்பார்கள்.
8:3
8:3 الَّذِيْنَ يُقِيْمُوْنَ الصَّلٰوةَ وَمِمَّا رَزَقْنٰهُمْ يُنْفِقُوْنَؕ‏
الَّذِيْنَ எவர்கள் يُقِيْمُوْنَ நிலைநிறுத்துவார்கள் الصَّلٰوةَ தொழுகையை وَمِمَّا இன்னும் எதிலிருந்து رَزَقْنٰهُمْ கொடுத்தோம்/அவர்களுக்கு يُنْفِقُوْنَؕ‏ தர்மம் புரிவார்கள்
8:3. அல்லதீன யுகீமூனஸ் ஸலாத வ மிம்மா ரZஜக்னாஹும் யுன்Fபிகூன்
8:3. அவர்கள் தொழுகையை நிலைநிறுத்துவார்கள்; அவர்களுக்கு நாம் அளித்த (செல்வத்)திலிருந்து செலவு செய்வார்கள்.
8:4
8:4 اُولٰۤٮِٕكَ هُمُ الْمُؤْمِنُوْنَ حَقًّا ‌ؕ لَهُمْ دَرَجٰتٌ عِنْدَ رَبِّهِمْ وَمَغْفِرَةٌ وَّرِزْقٌ كَرِيْمٌ‌ۚ‏
اُولٰۤٮِٕكَ هُمُ அவர்கள்தான் الْمُؤْمِنُوْنَ நம்பிக்கையாளர்கள் حَقًّا ؕ உண்மையில் لَهُمْ அவர்களுக்கு دَرَجٰتٌ பல பதவிகள் عِنْدَ رَبِّهِمْ அவர்களின் இறைவனிடம் وَمَغْفِرَةٌ இன்னும் மன்னிப்பு وَّرِزْقٌ இன்னும் உணவு كَرِيْمٌ‌ۚ‏ கண்ணியமானது
8:4. உலா'இக ஹுமுல் மு'மினூன ஹக்கா; லஹும் தரஜாதுன் 'இன்த ரBப்Bபிஹிம் வ மக் Fபிரது(ன்)வ் வ ரிZஜ்குன் கரீம்
8:4. இத்தகையவர்கள் தாம் உண்மையான நம்பிக்கையாளர்கள் ஆவார்கள்: அவர்களுடைய இறைவனிடம் அவர்களுக்கு உயர்பதவிகளும், பாவமன்னிப்பும், கண்ணியமான உணவும் உண்டு.
8:5
8:5 كَمَاۤ اَخْرَجَكَ رَبُّكَ مِنْۢ بَيْتِكَ بِالْحَـقِّ وَاِنَّ فَرِيْقًا مِّنَ الْمُؤْمِنِيْنَ لَـكٰرِهُوْنَۙ‏
كَمَاۤ போன்றே اَخْرَجَكَ வெளியேற்றினான்/உம்மை رَبُّكَ உம் இறைவன் مِنْۢ இருந்து بَيْتِكَ உம் இல்லம் بِالْحَـقِّ சத்தியத்தைக் கொண்டு وَاِنَّ நிச்சயமாக فَرِيْقًا ஒரு பிரிவினர் مِّنَ الْمُؤْمِنِيْنَ நம்பிக்கையாளர்களில் لَـكٰرِهُوْنَۙ‏ வெறுப்பவர்களே
8:5. கமா அக்ரஜக ரBப்Bபுக மிம் Bபய்திக Bபில்ஹக்க்; வ இன்ன Fபரீகம் மினல் மு'மினீன லகாரிஹூன்
8:5. (நபியே!) உம் இறைவன் உம்மை உம் வீட்டை விட்டு சத்தியத்தைக் கொண்டு (பத்ருக்களம் நோக்கி) வெளியேற்றியபோது, நம்பிக்கையாளர்களிலிருந்து ஒரு பிரிவினர் (உம்முடன் வர இணக்கமில்லாது) வெறுத்துக் கொண்டிருந்தது போல்-
8:6
8:6 يُجَادِلُوْنَكَ فِى الْحَـقِّ بَعْدَ مَا تَبَيَّنَ كَاَنَّمَا يُسَاقُوْنَ اِلَى الْمَوْتِ وَهُمْ يَنْظُرُوْنَؕ‏
يُجَادِلُوْنَكَ தர்க்கிக்கின்றனர்/உம்முடன் فِى الْحَـقِّ உண்மையில் بَعْدَ பின்னர் مَا تَبَيَّنَ தெளிவானது كَاَنَّمَا போன்று يُسَاقُوْنَ ஓட்டிச் செல்லப்படுகிறார்கள் اِلَى பக்கம் الْمَوْتِ மரணம் وَهُمْ அவர்கள் இருக்க يَنْظُرُوْنَؕ‏ பார்ப்பவர்களாக
8:6. யுஜாதிலூனக Fபில் ஹக்கி Bபஃத மா தBபய்யன க'அன்னமா யஸாகூன இலல் மவ்தி வ ஹும் யன்ளுரூன்
8:6. (அவர்களுக்குத்) தெளிவான பின்னரும் சத்தியத்தில் அவர்கள் உம்முடன் விவாதம் செய்கின்றனர்; அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கும் போதே மரணத்தின்பால் அவர்கள் இழுத்துச்செல்லப்படுவது போன்று (நினைக்கிறார்கள்).
8:7
8:7 وَاِذْ يَعِدُكُمُ اللّٰهُ اِحْدَى الطَّآٮِٕفَتَيْنِ اَنَّهَا لَـكُمْ وَتَوَدُّوْنَ اَنَّ غَيْرَ ذَاتِ الشَّوْكَةِ تَكُوْنُ لَـكُمْ وَيُرِيْدُ اللّٰهُ اَنْ يُّحِقَّ الْحَـقَّ بِكَلِمٰتِهٖ وَيَقْطَعَ دَابِرَ الْـكٰفِرِيْنَۙ‏
وَاِذْ சமயம் يَعِدُكُمُ வாக்களித்தான்/உங்களுக்கு اللّٰهُ அல்லாஹ் اِحْدَى ஒன்றை الطَّآٮِٕفَتَيْنِ இரு கூட்டங்களில் اَنَّهَا நிச்சயம் அது لَـكُمْ உங்களுக்கு وَتَوَدُّوْنَ விரும்பினீர்கள் اَنَّ நிச்சயமாக غَيْرَ அல்லாதது ذَاتِ உடையது الشَّوْكَةِ ஆயுதம் (பலம்) تَكُوْنُ ஆகவேண்டும் لَـكُمْ உங்களுக்கு وَيُرِيْدُ இன்னும் நாடுகிறான் اللّٰهُ அல்லாஹ் اَنْ يُّحِقَّ உண்மைப்படுத்த الْحَـقَّ உண்மையை بِكَلِمٰتِهٖ தன் வாக்குகளைக் கொண்டு وَيَقْطَعَ இன்னும் துண்டித்துவிட دَابِرَ வேரை الْـكٰفِرِيْنَۙ‏ நிராகரிப்பவர்கள்
8:7. வ இத் ய'இதுகுமுல் லாஹு இஹ்தத் தா'இFபதய்னி அன்னஹா லகும் வ தவத்தூன அன்ன கய்ர தாதிஷ் ஷவ்கதி தகூனு லகும் வ யுரீதுல் லாஹு அய் யுஹிக்கல் ஹக்க Bபிகலிமாதிஹீ வ யக்த'அ தாBபிரல் காFபிரீன்
8:7. "(அபூஸுஃப்யான் தலைமையில் வரும் வியாபாரக் கூட்டம், அபூஜஹ்லின் தலைமையில் வரும் படையினர் ஆகிய) இரு கூட்டங்களில் (ஏதேனும்) ஒரு கூட்டத்தை (வெற்றிகொள்ளும் வாய்ப்பு) உங்களுக்கு உண்டு" என்று, அல்லாஹ் வாக்களித்ததை நினைவுகூருங்கள்; ஆயுதபாணிகளாக இல்லாத (வியாபாரக் கூட்டமான)து உங்களுக்குக் கிடைக்க வேண்டுமென நீங்கள் விரும்பினீர்கள்: (ஆனால்,) அல்லாஹ் தன் வாக்குகளால் சத்தியத்தை நிலைநாட்டவும், நிராகரிப்போரை வேரறுக்கவுமே நாடுகிறான்.
8:8
8:8 لِيُحِقَّ الْحَـقَّ وَيُبْطِلَ الْبَاطِلَ وَلَوْ كَرِهَ الْمُجْرِمُوْنَ‌ۚ‏
لِيُحِقَّ அவன் உண்மைப்படுத்த الْحَـقَّ உண்மையை وَيُبْطِلَ இன்னும் அழித்துவிட, பெய்ப்பித்து விட الْبَاطِلَ பொய்யை وَلَوْ كَرِهَ வெறுத்தாலும் الْمُجْرِمُوْنَ‌ۚ‏ பாவிகள், குற்றவாளிகள்
8:8. லியுஹிக்கல் ஹக்க வ யுBப்திலல் Bபாதில வ லவ் கரிஹல் முஜ்ரிமூன்
8:8. மேலும், குற்றவாளிகள் வெறுத்தபோதிலும், சத்தியத்தை நிலைநாட்டிடவும், அசத்தியத்தை அழிப்பதற்காகவும் (இவ்வாறு நாடுகிறான்).
8:9
8:9 اِذْ تَسْتَغِيْثُوْنَ رَبَّكُمْ فَاسْتَجَابَ لَـكُمْ اَنِّىْ مُمِدُّكُمْ بِاَلْفٍ مِّنَ الْمَلٰۤٮِٕكَةِ مُرْدِفِيْنَ‏
اِذْ சமயம் تَسْتَغِيْثُوْنَ நீங்கள் பாதுகாப்புத் தேடுகிறீர்கள் رَبَّكُمْ உங்கள் இறைவனிடம் فَاسْتَجَابَ பதிலளித்தான் لَـكُمْ உங்களுக்கு اَنِّىْ நிச்சயமாக நான் مُمِدُّ உதவுவேன் كُمْ உங்களுக்கு بِاَلْفٍ ஆயிரத்தைக்கொண்டு مِّنَ الْمَلٰۤٮِٕكَةِ வானவர்களில் مُرْدِفِيْنَ‏ தொடர்ந்து வரக்கூடியவர்கள்
8:9. இத் தஸ்தகீதூன ரBப்Bபகும் Fபஸ்தஜாBப லகும் அன்னீ முமித்துகும் Bபி அல்Fபிம் மினல் மலா'இகதி முர்திFபீன்
8:9. (நினைவு கூருங்கள்): நீங்கள் உங்கள் இறைவனின் உதவியை நாடியபோது: "(அணி அணியாக உங்களைப்) பின்பற்றி வரக்கூடிய ஓராயிரம் வானவர்களைக் கொண்டு, நிச்சயமாக உங்களுக்கு நான் உதவி புரிவேன்" என்று அவன் உங்களுக்குப் பதிலளித்தான்.
8:10
8:10 وَمَا جَعَلَهُ اللّٰهُ اِلَّا بُشْرٰى وَلِتَطْمَٮِٕنَّ بِهٖ قُلُوْبُكُمْ‌ۚ وَمَا النَّصْرُ اِلَّا مِنْ عِنْدِ اللّٰهِ‌ؕ اِنَّ اللّٰهَ عَزِيْزٌ حَكِيْمٌ
وَمَا இல்லை جَعَلَهُ அதை ஆக்க اللّٰهُ அல்லாஹ் اِلَّا தவிர بُشْرٰى ஒரு நற்செய்தியாக وَلِتَطْمَٮِٕنَّ இன்னும் நிம்மதி பெறுவதற்காக بِهٖ அதன் மூலம் قُلُوْبُكُمْ‌ۚ உங்கள் உள்ளங்கள் وَمَا இல்லை النَّصْرُ உதவி اِلَّا தவிர مِنْ இருந்தே عِنْدِ اللّٰهِ‌ؕ அல்லாஹ்விடம் اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் عَزِيْزٌ மிகைத்தவன் حَكِيْمٌ‏ ஞானவான்
8:10. வமா ஜ'அலஹுல் லாஹு இல்லா Bபுஷ்ரா வ லிதத்ம'இன்ன Bபிஹீ குலூBபுகும்; வ மன் னஸ்ரு இல்லா மின் 'இன்தில் லாஹ்; இன்னல் லாஹ அZஜீZஜுன் ஹகீம்
8:10. உங்கள் இதயங்கள் திருப்தியடைவதற்காகவும், ஒரு நன்மாராயமாகவும் இதை (இந்த வெற்றியை) அல்லாஹ் ஆக்கினான்; அல்லாஹ்விடமிருந்தே தவிர உதவி இல்லை; நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
8:11
8:11 اِذْ يُغَشِّيْكُمُ النُّعَاسَ اَمَنَةً مِّنْهُ وَيُنَزِّلُ عَلَيْكُمْ مِّنَ السَّمَآءِ مَآءً لِّيُطَهِّرَكُمْ بِهٖ وَيُذْهِبَ عَنْكُمْ رِجْزَ الشَّيْطٰنِ وَلِيَرْبِطَ عَلٰى قُلُوْبِكُمْ وَيُثَبِّتَ بِهِ الْاَقْدَامَؕ‏
اِذْ சமயம் يُغَشِّيْكُمُ சூழவைக்கிறான்/உங்கள் மீது النُّعَاسَ சிறு தூக்கத்தை اَمَنَةً அச்சமற்றிருப்பதற்காக مِّنْهُ தன் புறத்திலிருந்து وَيُنَزِّلُ இன்னும் இறக்குகிறான் عَلَيْكُمْ உங்கள் மீது مِّنَ இருந்து السَّمَآءِ வானம்,மேகம் مَآءً நீரை, மழையை لِّيُطَهِّرَ அவன் சுத்தப்படுத்துவற்காக كُمْ உங்களை بِهٖ அதன் மூலம் وَيُذْهِبَ இன்னும் அவன் போக்குவதற்காக عَنْكُمْ உங்களை விட்டு رِجْزَ அசுத்தத்தை الشَّيْطٰنِ ஷைத்தானுடைய وَلِيَرْبِطَ இன்னும் அவன் பலப்படுத்துவதற்காக عَلٰى قُلُوْبِكُمْ உங்கள் உள்ளங்களை وَيُثَبِّتَ இன்னும் அவன் உறுதிபடுத்துவதற்காக بِهِ அதன் மூலம் الْاَقْدَامَؕ‏ பாதங்களை
8:11. இத் யுகஷ்ஷீகுமுன் னு'அஸ்ஸ அமனதம் மின்ஹு வ யுனZஜ்Zஜிலு 'அலய்கும் மினஸ் ஸமா'இ மா'அல் லியுதஹ் ஹிரகும் Bபிஹீ வ யுத்ஹிBப 'அன்கும் ரிஜ்Zஜஷ் ஷய்தானி வ லியர்Bபித 'அல குலூBபிகும் வ யுதBப்Bபித Bபிஹில் அக்தாம்
8:11. (நினைவு கூருங்கள்): நீங்கள் அமைதியடைவதற்காக அவன் சிறியதொரு நித்திரை உங்களைப் பொதிந்துகொள்ளுமாறு செய்தான்; இன்னும், உங்களை அதன் மூலம் தூய்மைப்படுத்துவதற்காகவும், ஷைத்தானின் அசுத்தத்தை (தீய எண்ணத்தை) உங்களை விட்டு நீக்குவதற்காகவும், உங்கள் இதயங்களைப் பலப்படுத்தி அதைக் கொண்டு (உங்களுடைய) பாதங்களை உறுதிப்படுத்துவதற்காகவும், அவன் உங்கள் மீது வானிலிருந்து மழை பொழியச் செய்தான்.
8:12
8:12 اِذْ يُوْحِىْ رَبُّكَ اِلَى الْمَلٰۤٮِٕكَةِ اَنِّىْ مَعَكُمْ فَثَبِّتُوا الَّذِيْنَ اٰمَنُوْا‌ ؕ سَاُلْقِىْ فِىْ قُلُوْبِ الَّذِيْنَ كَفَرُوا الرُّعْبَ فَاضْرِبُوْا فَوْقَ الْاَعْنَاقِ وَاضْرِبُوْا مِنْهُمْ كُلَّ بَنَانٍؕ‏
اِذْ சமயம் يُوْحِىْ வஹீ அறிவிக்கிறான் رَبُّكَ உம் இறைவன் اِلَى الْمَلٰۤٮِٕكَةِ வானவர்களுக்கு اَنِّىْ நிச்சயமாக நான் مَعَكُمْ உங்களுடன் فَثَبِّتُوا ஆகவே உறுதிப்படுத்துங்கள் الَّذِيْنَ எவர்கள் اٰمَنُوْا‌ ؕ நம்பிக்கை கொண்டார்கள் سَاُلْقِىْ போடுவேன் فِىْ قُلُوْبِ உள்ளங்களில் الَّذِيْنَ எவர்கள் كَفَرُوا நிராகரித்தனர் الرُّعْبَ திகிலை فَاضْرِبُوْا ஆகவே நீங்கள் வெட்டுங்கள் فَوْقَ மேல் الْاَعْنَاقِ கழுத்துகள் وَاضْرِبُوْا இன்னும் வெட்டுங்கள் مِنْهُمْ அவர்களின் كُلَّ بَنَانٍؕ‏ எல்லா கணுக்களை
8:12. இத் யூஹீ ரBப்Bபுக இலல் மலா'இகதி அன்னீ ம'அகும் FபதBப்Bபிதுல் லதீன ஆமனூ; ஸ உல்கீ Fபீ குலூBபில் லதீன கFபருர் ருஃBப Fபள்ரிBபூ Fபவ்கல் அஃனாகி வள்ரிBபூ மின்ஹும் குல்ல Bபனான்
8:12. (நபியே!) உம் இறைவன் வானவர்களை நோக்கி: "நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கிறேன்; ஆகவே, நீங்கள் நம்பிக்கையாளர்களை உறுதிப்படுத்துங்கள்; நிராகரிப்போரின் இதயங்களில் விரைவில் நான் திகிலை உண்டாக்குவேன்; நீங்கள் (அவர்களுடைய) பிடரிகளின் மீது வெட்டுங்கள்; அவர்களுடைய விரல் நுனிகளையும் வெட்டி விடுங்கள்" என்று ('வஹீ' மூலம்) அறிவித்ததை நினைவுகூரும்.
8:13
8:13 ذٰ لِكَ بِاَنَّهُمْ شَآ قُّوا اللّٰهَ وَرَسُوْلَهٗ‌ ۚ وَمَنْ يُّشَاقِقِ اللّٰهَ وَرَسُوْلَهٗ فَاِنَّ اللّٰهَ شَدِيْدُ الْعِقَابِ‏
ذٰ لِكَ بِاَنَّهُمْ அதற்கு காரணம் நிச்சயமாக அவர்கள் شَآ قُّوا பிளவுபட்டனர், முரண்பட்டனர் اللّٰهَ அல்லாஹ்விற்கு وَرَسُوْلَهٗ‌ ۚ இன்னும் அவனுடைய தூதருக்கு وَمَنْ எவர் يُّشَاقِقِ பிளவுபடுகிறார் اللّٰهَ அல்லாஹ்விற்கு وَرَسُوْلَهٗ இன்னும் அவனுடைய தூதருக்கு فَاِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் شَدِيْدُ கடுமையானவன் الْعِقَابِ‏ தண்டிப்பதில்
8:13. தாலிக Bபி அன்னஹும் ஷாக்குல் லாஹ வ ரஸூலஹ்; வ மய் யுஷகிகில் லாஹ வ ரஸூலஹூ Fப இன்னல் லாஹ ஷதீதுல் 'இகாBப்
8:13. இதற்குக் காரணம்: நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் மாறு செய்தார்கள்; எவர் அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் மாறு செய்வாரோ - நிச்சயமாக அல்லாஹ் கடினமாகத் தண்டிப்பவனாக இருக்கிறான்.
8:14
8:14 ذٰ لِكُمْ فَذُوْقُوْهُ وَاَنَّ لِلْكٰفِرِيْنَ عَذَابَ النَّارِ‏
ذٰ لِكُمْ அது فَذُوْقُوْهُ அதை சுவையுங்கள் وَاَنَّ நிச்சயமாக لِلْكٰفِرِيْنَ நிராகரிப்பவர்களுக்கு عَذَابَ வேதனை النَّارِ‏ நரகம்
8:14. தாலிகும் Fபதூகூஹு வ அன்ன லில்காFபிரீன 'அதாBபன் னார்
8:14. "இதோ! இதை (தண்டனையை)ச் சுவையுங்கள்: நிச்சயமாக நிராகரிப்பாளர்களுக்கு நரக வேதனையுண்டு" (என்று கூறப்படும்).
8:15
8:15 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا لَقِيْتُمُ الَّذِيْنَ كَفَرُوْا زَحْفًا فَلَا تُوَلُّوْهُمُ الْاَدْبَارَ‌ۚ‏
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا நம்பிக்கையாளர்களே اِذَا لَقِيْتُمُ நீங்கள் சந்தித்தால் الَّذِيْنَ எவர்கள் كَفَرُوْا நிராகரித்தனர் زَحْفًا பெரும் படையாக فَلَا تُوَلُّوْ திருப்பாதீர்கள் هُمُ அவர்களுக்கு الْاَدْبَارَ‌ۚ‏ பின்புறங்களை
8:15. யா அய்யுஹல் லதீன ஆமனூ இதா லகீதுமுல் லதீன கFபரூ Zஜஹ்Fபன் Fபலா துவல்லூஹுமுல் அத்Bபார்
8:15. நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் நிராகரிப்போரை(ப் போரில்) முன்னேறி வருபவர்களாகச் சந்தித்தால் அவர்களுக்குப் புறமுதுகுகளைக் காட்(டி ஓடிவி)டாதீர்கள்.
8:16
8:16 وَمَنْ يُّوَلِّهِمْ يَوْمَٮِٕذٍ دُبُرَهٗۤ اِلَّا مُتَحَرِّفًا لِّقِتَالٍ اَوْ مُتَحَيِّزًا اِلٰى فِئَةٍ فَقَدْ بَآءَ بِغَضَبٍ مِّنَ اللّٰهِ وَمَاْوٰٮهُ جَهَـنَّمُ‌ؕ وَبِئْسَ الْمَصِيْرُ‏
وَمَنْ எவர் يُّوَلِّهِمْ திருப்புவார்/அவர்களுக்கு يَوْمَٮِٕذٍ அந்நாளில் دُبُرَهٗۤ தன் பின் புறத்தை اِلَّا அல்லாமல் مُتَحَرِّفًا ஒதுங்கக்கூடியவராக لِّقِتَالٍ சண்டையிடுவதற்கு اَوْ அல்லது مُتَحَيِّزًا சேர்ந்து கொள்பவராக اِلٰى فِئَةٍ ஒரு கூட்டத்துடன் فَقَدْ بَآءَ சார்ந்துவிட்டார் بِغَضَبٍ கோபத்தில் مِّنَ اللّٰهِ அல்லாஹ்வின் وَمَاْوٰٮهُ இன்னும் அவருடைய தங்குமிடம் جَهَـنَّمُ‌ؕ நரகம் وَبِئْسَ இன்னும் கெட்டு விட்டது الْمَصِيْرُ‏ மீளுமிடத்தால்
8:16. வ மய் யுவல்லிஹிம் யவ்ம'இதின் துBபுரஹூ இல்லா முதஹர்ரிFபல் லிகிதாலின் அவ் முதஹய்யிZஜன் இலா Fபி'அதின் Fபகத் Bபா'அ BபிகளBபிம் மினல் லாஹி வ ம'வாஹு ஜஹன்னமு வ Bபி'ஸல் மஸீர்
8:16. (எதிரிகளை) வெட்டுவதற்கு இடம் மாறுபவராகவோ அல்லது (தம்) கூட்டத்தாருடன் சேர்ந்து கொள்வதற்காகவோ அன்றி, அந்நாளில் எவரேனும் புறமுதுகுக்காட்டித் திரும்புவாரானால், நிச்சயமாக அவர் அல்லாஹ்வின் கோபத்திற்கு உள்ளாகிவிடுவார்; அவர் தங்குமிடம் நரகமே; இன்னும், அது மிகவும் கெட்ட தங்குமிடம்.
8:17
8:17 فَلَمْ تَقْتُلُوْهُمْ وَلٰـكِنَّ اللّٰهَ قَتَلَهُمْ وَمَا رَمَيْتَ اِذْ رَمَيْتَ وَ لٰـكِنَّ اللّٰهَ رَمٰى‌ ۚ وَلِيُبْلِىَ الْمُؤْمِنِيْنَ مِنْهُ بَلَاۤءً حَسَنًا‌ ؕ اِنَّ اللّٰهَ سَمِيْعٌ عَلِيْمٌ‏
فَلَمْ تَقْتُلُوْ நீங்கள் கொல்லவில்லை هُمْ அவர்களை وَلٰـكِنَّ என்றாலும் நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் قَتَلَهُمْ கொன்றான்/அவர்களை وَمَا رَمَيْتَ நீர் எறியவில்லை اِذْ போது رَمَيْتَ எறிந்தீர் وَ لٰـكِنَّ என்றாலும் நிச்சயமாக اللّٰهَ رَمٰى‌ ۚ அல்லாஹ்/எறிந்தான் وَلِيُبْلِىَ இன்னும் அவன் சோதிப்பதற்காக الْمُؤْمِنِيْنَ நம்பிக்கையாளர்களை مِنْهُ அதன் மூலம் بَلَاۤءً சோதனையாக حَسَنًا‌ ؕ அழகிய اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் سَمِيْعٌ நன்கு செவியுறுபவன் عَلِيْمٌ‏ நன்கறிந்தவன்
8:17. Fபலம் தக்துலூஹும் வ லாகின்னல் லாஹ கதலஹும்; வமா ரமய்த இத் ரமய்த வ லாகின்னல் லாஹ ரமா; வ லியுBப்லியல் மு'மினீன மின்ஹு Bபலா'அன் ஹஸனா; இன்னல் லாஹ ஸமீ'உன் அலீம்
8:17. (பத்ருப் போரில்) எதிரிகளாகிய அவர்களை நீங்கள் கொல்லவில்லை; அல்லாஹ்தான் அவர்களைக் கொன்றான்; (நபியே! பகைவர்கள் மீது மண்ணை) நீர் எறிந்தபோது அதனை நீர் எறியவில்லை, அல்லாஹ்தான் எறிந்தான்; நம்பிக்கையாளர்களை தன்புறத்திலிருந்து அழகான முறையில் அவன் சோதிப்பதற்காகவே (இவ்வாறு செய்தான்); நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியேற்பவனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றான்.
8:18
8:18 ذٰ لِكُمْ وَاَنَّ اللّٰهَ مُوْهِنُ كَيْدِ الْـكٰفِرِيْنَ‏
ذٰ لِكُمْ அவை وَاَنَّ இன்னும் நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் مُوْهِنُ பலவீனப்படுத்துபவன் كَيْدِ சூழ்ச்சியை الْـكٰفِرِيْنَ‏ நிராகரிப்பவர்களின்
8:18. தாலிகும் வ அன்னல் லாஹ மூஹினு கய்தில் காFபிரீன்
8:18. அது (அல்லாஹ்விடமிருந்தாகும்) இன்னும், நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்போரின் சூழ்ச்சியைப் பலவீனப்படுத்தக் கூடியவன்.
8:19
8:19 اِنْ تَسْتَفْتِحُوْا فَقَدْ جَآءَكُمُ الْفَتْحُ‌ۚ وَاِنْ تَنْتَهُوْا فَهُوَ خَيْرٌ لَّـكُمْ‌ۚ وَ اِنْ تَعُوْدُوْا نَـعُدْ‌ۚ وَلَنْ تُغْنِىَ عَنْكُمْ فِئَتُكُمْ شَيْـٴًـــا وَّلَوْ كَثُرَتْۙ وَاَنَّ اللّٰهَ مَعَ الْمُؤْمِنِيْنَ
اِنْ تَسْتَفْتِحُوْا நீங்கள் தீர்ப்புத் தேடினால் فَقَدْ جَآءَ வந்துவிட்டது كُمُ உங்களுக்கு الْفَتْحُ‌ۚ தீர்ப்பு وَاِنْ تَنْتَهُوْا நீங்கள் விலகினால் فَهُوَ خَيْرٌ அது சிறந்தது لَّـكُمْ‌ۚ உங்களுக்கு وَ اِنْ تَعُوْدُوْا நீங்கள் திரும்பினால் نَـعُدْ‌ۚ திரும்புவோம் وَلَنْ تُغْنِىَ பலனளிக்காது عَنْكُمْ உங்களுக்கு فِئَتُكُمْ உங்கள் கூட்டம் شَيْـٴًـــا எதையும் وَّلَوْ كَثُرَتْۙ அது அதிகமாக இருந்தாலும் وَاَنَّ இன்னும் நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் مَعَ உடன் الْمُؤْمِنِيْنَ‏ நம்பிக்கையாளர்கள்
8:19. இன் தஸ்தFப்திஹூ Fபகத் ஜா'அகுமுல் Fபத்ஹு வ இன் தன்தஹூ Fபஹுவ கய்ருல் லகும் வ இன் த'ஊதூ ன'உத் வ லன் துக்னிய 'அன்கும் Fபி'அதுகும் ஷய்'அ(ன்)வ் வ லவ் கதுரத் வ அன்னல் லாஹ ம'அல் மு'மினீன்
8:19. "(நிராகரிப்பவர்களே!) நீங்கள் தீர்ப்பைத் தேடிக்கொண்டிருந்தால், நிச்சயமாக அந்தத் தீர்ப்பு உங்களுக்கு வந்துவிட்டது; இனியேனும் நீங்கள் (தவறை விட்டு) விலகிக்கொண்டால், அது உங்களுக்கு நலமாக இருக்கும்; நீங்கள் மீண்டும் (போருக்கு) வந்தால் நாங்களும் வருவோம்; உங்களுடைய கூட்டம் - அது எவ்வளவு அதிகமாக இருந்தாலும், அது உங்களுக்கு எத்தகைய பலனையும் அளிக்காது; நிச்சயமாக அல்லாஹ் நம்பிக்கையாளர்களுடன் இருக்கிறான்" (என்று கூறிவிடுங்கள்).
8:20
8:20 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اَطِيْعُوا اللّٰهَ وَرَسُوْلَهٗ وَلَا تَوَلَّوْا عَنْهُ وَاَنْـتُمْ تَسْمَعُوْنَ‌ ۖ‌ ۚ‏
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا நம்பிக்கையாளர்களே اَطِيْعُوا கீழ்ப்படியுங்கள் اللّٰهَ அல்லாஹ்விற்கு وَرَسُوْلَهٗ இன்னும் அவனுடைய தூதருக்கு وَلَا تَوَلَّوْا விலகாதீர்கள் عَنْهُ அவரை விட்டு وَاَنْـتُمْ நீங்கள் இருக்க تَسْمَعُوْنَ‌ ۚ‏ செவிமடுப்பவர்களாக
8:20. யா அய்யுஹல் லதீன ஆமனூ அதீ'உல் லாஹ வ ரஸூலஹூ வலா தவல்லவ் 'அன்ஹு வ அன்தும் தஸ்ம'ஊன்
8:20. நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்; நீங்கள் கேட்டுக்கொண்டிருக்கும் நிலையிலேயே அவரைப் புறக்கணிக்காதீர்கள்.
8:21
8:21 وَلَا تَكُوْنُوْا كَالَّذِيْنَ قَالُوْا سَمِعْنَا وَهُمْ لَا يَسْمَعُوْنَ‌‏
وَلَا تَكُوْنُوْا ஆகிவிடாதீர்கள் كَالَّذِيْنَ எவர்களைப் போல் قَالُوْا கூறினர் سَمِعْنَا செவியுற்றோம் وَهُمْ அவர்கள் இருக்க لَا يَسْمَعُوْنَ‌‏ செவியேற்காதவர்களாக
8:21. வ லா தகூனூ கல்லதீன காலூ ஸமிஃனா வ ஹும் லா யஸ்ம'ஊன்
8:21. (மனப்பூர்வமாகச்) செவியேற்காமல் இருந்துகொண்டே, 'நாங்கள் செவியுற்றோம்' என்று (நாவால் மட்டும்) சொல்கின்றவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள்.
8:22
8:22 اِنَّ شَرَّ الدَّوَآبِّ عِنْدَ اللّٰهِ الصُّمُّ الْبُكْمُ الَّذِيْنَ لَا يَعْقِلُوْنَ‏
اِنَّ நிச்சயமாக شَرَّ மிகக் கொடூரமானவர்(கள்) الدَّوَآبِّ ஊர்வனவற்றில் عِنْدَ اللّٰهِ அல்லாஹ்விடம் الصُّمُّ செவிடர்கள் الْبُكْمُ ஊமைகளான الَّذِيْنَ لَا يَعْقِلُوْنَ‏ எவர்கள்/சிந்தித்து புரியமாட்டார்கள்
8:22. இன்ன ஷர்ரத் தவாBப்Bபி 'இன்தல் லாஹிஸ் ஸும்முல் Bபுக்முல் லதீன லா யஃகிலூன்
8:22. நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உயிரினங்களில் மிகக் கேவலமானவர்கள் (உண்மையை) அறிந்து கொள்ளாச் செவிடர்களும், ஊமைகளும்தான்.
8:23
8:23 وَلَوْ عَلِمَ اللّٰهُ فِيْهِمْ خَيْرًا لَّاَسْمَعَهُمْ‌ؕ وَلَوْ اَسْمَعَهُمْ لَـتَوَلَّوْا وَّهُمْ مُّعْرِضُوْنَ‏
وَلَوْ عَلِمَ அறிந்திருந்தால் اللّٰهُ அல்லாஹ் فِيْهِمْ அவர்களிடம் خَيْرًا ஒரு நன்மையை لَّاَسْمَعَهُمْ‌ؕ செவியுறச் செய்திருப்பான்/அவர்களை وَلَوْ اَسْمَعَهُمْ அவன் அவர்களை செவியுறச் செய்தாலும் لَـتَوَلَّوْا விலகி இருப்பார்கள் وَّهُمْ அவர்கள் இருக்க مُّعْرِضُوْنَ‏ புறக்கணிப்பவர்களாக
8:23. வ லவ் 'அலிமல் லாஹு Fபீஹிம் கய்ரல் ல அஸ்ம'அஹும்; வ லவ் அஸ்ம'அஹும் லதவல்லவ் வ ஹும் முஃரிளூன்
8:23. அவர்களிடத்தில் ஏதேனும் நன்மை உண்டு என அல்லாஹ் அறிந்திருந்தால், அவன் அவர்களைச் செவியேற்குமாறு செய்திருப்பான்; (அவர்கள் இருக்கும் நிலையில்) அவன் அவர்களைச் செவியேற்கச் செய்தாலும், அவர்கள் புறக்கணித்தவர்களாகவே திரும்பியிருப்பார்கள்.
8:24
8:24 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اسْتَجِيْبُوْا لِلّٰهِ وَلِلرَّسُوْلِ اِذَا دَعَاكُمْ لِمَا يُحْيِيْكُمْ‌ۚ وَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ يَحُوْلُ بَيْنَ الْمَرْءِ وَقَلْبِهٖ وَاَنَّهٗۤ اِلَيْهِ تُحْشَرُوْنَ‏
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا நம்பிக்கையாளர்களே اسْتَجِيْبُوْا பதிலளியுங்கள் لِلّٰهِ அல்லாஹ்வுக்கு وَلِلرَّسُوْلِ இன்னும் தூதருக்கு اِذَا دَعَا அழைத்தால் كُمْ உங்களை لِمَا எதற்கு يُحْيِيْكُمْ‌ۚ வாழவைக்கும்/உங்களை وَاعْلَمُوْۤا அறிந்து கொள்ளுங்கள் اَنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் يَحُوْلُ தடையாகிறான் بَيْنَ நடுவில் الْمَرْءِ மனிதனுக்கு وَقَلْبِهٖ இன்னும் அவனுடைய உள்ளத்திற்கு وَاَنَّهٗۤ இன்னும் நிச்சயமாக நீங்கள் اِلَيْهِ அவனிடமே تُحْشَرُوْنَ‏ ஒன்று திரட்டப்படுவீர்கள்
8:24. யா அய்யுஹல் லதீன ஆமனுஸ் தஜீBபூ லில்லாஹி வ லிர் ரஸூலி இதா த'ஆகும் லிமா யுஹ்யீகும் வஃலமூ அன்னல் லாஹ யஹூலு Bபய்னல் மர்'இ வ கல்Bபிஹீ வ அன்னஹூ இலய்ஹி துஹ்ஷரூன்
8:24. நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும் - உங்களுக்கு வாழ்வளிக்கும் காரியத்தின்பால் உங்களை அவர் அழைத்தால் - நீங்கள் பதிலளியுங்கள்; இன்னும், நிச்சயமாக அல்லாஹ் மனிதனுக்கும் அவன் இதயத்திற்குமிடையேயும் சூழ்ந்து இருக்கிறான் என்பதையும், அவனிடத்திலேயே நீங்கள் ஒன்று சேர்க்கப்படுவீர்கள் என்பதையும் அறிந்துகொள்ளுங்கள்.
8:25
8:25 وَاتَّقُوْا فِتْنَةً لَّا تُصِيْبَنَّ الَّذِيْنَ ظَلَمُوْا مِنْكُمْ خَآصَّةً‌ ۚ وَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ شَدِيْدُ الْعِقَابِ‏
وَاتَّقُوْا அஞ்சுங்கள் فِتْنَةً ஒரு வேதனையை لَّا تُصِيْبَنَّ அடையாது الَّذِيْنَ ظَلَمُوْا அநியாயக்காரர்களை مِنْكُمْ உங்களில் خَآصَّةً‌ ۚ மட்டுமே وَاعْلَمُوْۤا அறிந்து கொள்ளுங்கள் اَنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் شَدِيْدُ கடுமையானவன் الْعِقَابِ‏ தண்டிப்பதில்
8:25. வத்தகூ Fபித்னதல் லா துஸீBபன்னல் லதீன ளலமூ மின்கும் காஸ்ஸத் வ'லமூ அன்னல் லாஹ ஷதீதுல் 'இகாBப்
8:25. நீங்கள் வேதனைக்குப் பயந்துகொள்ளுங்கள்; அது, உங்களில் அநியாயம் செய்தவர்களை மட்டும்தான் குறிப்பாகப் பிடிக்கும் என்பதில்லை; நிச்சயமாக அல்லாஹ் தண்டனை அளிப்பதில் கடுமையானவன் என்பதையும் நன்கு அறிந்துகொள்ளுங்கள்.
8:26
8:26 وَاذْكُرُوْۤا اِذْ اَنْـتُمْ قَلِيْلٌ مُّسْتَضْعَفُوْنَ فِى الْاَرْضِ تَخَافُوْنَ اَنْ يَّتَخَطَّفَكُمُ النَّاسُ فَاٰوٰٮكُمْ وَاَيَّدَكُمْ بِنَصْرِهٖ وَرَزَقَكُمْ مِّنَ الطَّيِّبٰتِ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ‏
وَاذْكُرُوْۤا நினைவு கூருங்கள் اِذْ (இருந்த) சமயத்தை اَنْـتُمْ நீங்கள் قَلِيْلٌ குறைவானவர்களாக مُّسْتَضْعَفُوْنَ பலவீனர்களாக فِى الْاَرْضِ பூமியில் تَخَافُوْنَ பயந்தவர்களாக اَنْ உங்களை يَّتَخَطَّفَكُمُ தாக்கிவிடுவதை النَّاسُ மக்கள் فَاٰوٰٮكُمْ அவன் இடமளித்தான்/உங்களுக்கு وَاَيَّدَكُمْ பலப்படுத்தினான்/உங்களை بِنَصْرِهٖ தன் உதவியைக் கொண்டு وَرَزَقَكُمْ உணவளித்தான்/உங்களுக்கு مِّنَ الطَّيِّبٰتِ நல்ல உணவுகளில் لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ‏ நீங்கள் நன்றி செலுத்துவதற்காக
8:26. வத்குரூ இத் அன்தும் கலீலும் முஸ்தள் 'அFபூன Fபிலர்ளி தகாFபூன அய் யதகத் தFபகுமுன் னாஸு Fப ஆவாகும் வ அய்யதகும் Bபினஸ்ரிஹீ வ ரZஜககும் மினத் தய்யிBபாதி ல'அல்லகும் தஷ்குரூன்
8:26. நீங்கள் பூமியில் (மக்காவில்) சிறு தொகையினராகவும், பலவீனமானவர்களாகவும் இருந்த நிலையில், உங்களை (எந்த நேரத்திலும்) மனிதர்கள் இறாஞ்சிக்கொண்டு சென்றுவிடுவார்கள் என்று நீங்கள் பயப்பட்டுக் கொண்டிருந்தபோது, அவன் உங்களுக்கு (மதீனாவில்) புகலிடம் அளித்துத் தன் உதவியைக்கொண்டு உங்களைப் பலப்படுத்தினான்; இன்னும், நல்லவற்றிலிருந்து உங்களுக்கு உணவளித்ததையும் நினைவு கூருங்கள்; நீங்கள் (அவனுக்கு) நன்றி செலுத்துவதற்காக.
8:27
8:27 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَخُوْنُوا اللّٰهَ وَالرَّسُوْلَ وَتَخُوْنُوْۤا اَمٰنٰتِكُمْ وَاَنْـتُمْ تَعْلَمُوْنَ‏
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கையாளர்களே لَا تَخُوْنُوا மோசம்செய்யாதீர்கள் اللّٰهَ அல்லாஹ்வுக்கு وَالرَّسُوْلَ இன்னும் தூதருக்கு وَتَخُوْنُوْۤا இன்னும் மோசம் செய்யாதீர்கள் اَمٰنٰتِكُمْ அமானிதங்களுக்கு/உங்கள் وَاَنْـتُمْ நீங்கள் இருக்க تَعْلَمُوْنَ‏ அறிந்தவர்களாக
8:27. யா அய்யுஹல் லதீன ஆமனூ லா தகூனல் லாஹ வர் ரஸூல வ தகூனூ அமானாதிகும் வ அன்தும் தஃலமூன்
8:27. நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும் மோசம் செய்யாதீர்கள்; நீங்கள் அறிந்துகொண்டே, உங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்டவற்றிலும் மோசம் செய்யாதீர்கள்.
8:28
8:28 وَاعْلَمُوْۤا اَنَّمَاۤ اَمْوَالُكُمْ وَاَوْلَادُكُمْ فِتْنَةٌ  ۙ وَّاَنَّ اللّٰهَ عِنْدَهٗۤ اَجْرٌ عَظِيْمٌ
وَاعْلَمُوْۤا அறிந்து கொள்ளுங்கள் اَنَّمَاۤ எல்லாம் اَمْوَالُكُمْ செல்வங்கள்/உங்கள் وَاَوْلَادُكُمْ இன்னும் சந்ததிகள்/உங்கள் فِتْنَةٌ  ۙ ஒரு சோதனை وَّاَنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் عِنْدَهٗۤ அவனிடம்தான் اَجْرٌ கூலி عَظِيْمٌ‏ மகத்தானது
8:28. வஃலமூ அன்னமா அம்வாலுகும் வ அவ்லாதுகும் Fபித்னது(ன்)வ் வ அன்னல் லாஹ 'இன்தஹூ அஜ்ருன் அளீம்
8:28. நிச்சயமாக உங்கள் செல்வங்களும், உங்கள் குழந்தைகளும் (உங்களுக்குச்) சோதனையாக இருக்கின்றன என்பதையும், நிச்சயமாக அல்லாஹ் - அவனிடத்தில்தான் மகத்தான (நற்)கூலி உண்டு என்பதையும் நீங்கள் அறிந்துகொள்ளுங்கள்.
8:29
8:29 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنْ تَتَّقُوا اللّٰهَ يَجْعَلْ لَّـكُمْ فُرْقَانًا وَّيُكَفِّرْ عَنْكُمْ سَيِّاٰتِكُمْ وَيَغْفِرْ لَـكُمْ‌ؕ وَ اللّٰهُ ذُو الْفَضْلِ الْعَظِيْمِ‏
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا நம்பிக்கையாளர்களே اِنْ تَتَّقُوا அஞ்சினால் اللّٰهَ அல்லாஹ்வை يَجْعَلْ ஏற்படுத்துவான் لَّـكُمْ உங்களுக்கு فُرْقَانًا ஒரு வித்தியாசத்தை وَّيُكَفِّرْ இன்னும் அகற்றி விடுவான் عَنْكُمْ உங்களை விட்டு سَيِّاٰتِكُمْ உங்கள் பாவங்களை وَيَغْفِرْ இன்னும் மன்னிப்பான் لَـكُمْ‌ؕ உங்களை وَ اللّٰهُ அல்லாஹ் ذُو الْفَضْلِ அருளுடையவன் الْعَظِيْمِ‏ மகத்தானது
8:29. யா அய்யுஹல் லதீன ஆமனூ இன் தத்தகுல் லாஹ யஜ்'அல் லகும் Fபுர்கான(ன்)வ் வ யுகFப்Fபிர் 'அன்கும் ஸய்யி ஆதிகும் வ யக்Fபிர் லகும்; வல்லாஹு துல் Fபள்லில் 'அளீம்
8:29. நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுவீர்களானால் அவன் உங்களுக்கு (நன்மை-தீமையைப் பிரித்தறிந்து நடக்கக்கூடிய) நேர்வழியைக் காட்டுவான்; இன்னும், உங்களை விட்டும் உங்கள் பாவங்களைப் போக்கி உங்களை மன்னிப்பான்; (ஏனெனில்,) அல்லாஹ் மகத்தான அருளுடையவன்.
8:30
8:30 وَاِذْ يَمْكُرُ بِكَ الَّذِيْنَ كَفَرُوْا لِيُثْبِتُوْكَ اَوْ يَقْتُلُوْكَ اَوْ يُخْرِجُوْكَ‌ؕ وَيَمْكُرُوْنَ وَيَمْكُرُ اللّٰهُ‌ؕ وَاللّٰهُ خَيْرُ الْمٰكِرِيْنَ‏
وَاِذْ சமயம் يَمْكُرُ சூழ்ச்சி செய்வார்(கள்) بِكَ உமக்கு الَّذِيْنَ எவர்கள் كَفَرُوْا நிராகரித்தனர் لِيُثْبِتُوْكَ அவர்கள் சிறைப்படுத்த/உம்மை اَوْ அல்லது يَقْتُلُوْكَ உம்மை அவர்கள் கொல்ல اَوْ அல்லது يُخْرِجُوْكَ‌ؕ அவர்கள் வெளியேற்ற/உம்மை وَيَمْكُرُوْنَ இன்னும் சூழ்ச்சி செய்கின்றனர் وَيَمْكُرُ இன்னும் சூழ்ச்சி செய்கிறான் اللّٰهُ‌ؕ அல்லாஹ் وَاللّٰهُ அல்லாஹ் خَيْرُ மிகச் சிறந்தவன் الْمٰكِرِيْنَ‏ சூழ்ச்சி செய்பவர்களில்
8:30. வ இத் யம்குரு Bபிகல் லதீன கFபரூ லியுத்Bபிதூக அவ் யக்துலூக அவ் யுக்ரிஜூக்; வ யம்குரூன வ யம்குருல் லாஹு வல்லாஹு கய்ருல் மாகிரீன்
8:30. (நபியே!) உம்மைச் சிறைப்படுத்தவோ அல்லது உம்மைக் கொலை செய்யவோ அல்லது உம்மை (ஊரைவிட்டு) வெளியேற்றிவிடவோ நிராகரிப்போர் சூழ்ச்சி செய்ததை நினைவு கூர்வீராக! அவர்களும் சூழ்ச்சி செய்கின்றனர்; அல்லாஹ்வும் (அவர்களுக்கு எதிராக) சூழ்ச்சி செய்கின்றான்; சூழ்ச்சி செய்வோரில் எல்லாம் அல்லாஹ் மிகவும் மேன்மையுடையவன்.
8:31
8:31 وَاِذَا تُتْلٰى عَلَيْهِمْ اٰيٰتُنَا قَالُوْا قَدْ سَمِعْنَا لَوْ نَشَآءُ لَـقُلْنَا مِثْلَ هٰذَٓا‌ ۙ اِنْ هٰذَاۤ اِلَّاۤ اَسَاطِيْرُ الْاَوَّلِيْنَ‏
وَاِذَا تُتْلٰى ஓதப்பட்டால் عَلَيْهِمْ அவர்கள் மீது اٰيٰتُنَا நம் வசனங்கள் قَالُوْا கூறுகின்றனர் قَدْ سَمِعْنَا செவியேற்று விட்டோம் لَوْ نَشَآءُ நாம் நாடியிருந்தால் لَـقُلْنَا கூறியிருப்போம் مِثْلَ هٰذَٓا‌ ۙ இது போன்று اِنْ هٰذَاۤ اِلَّاۤ இவை இல்லை/தவிர اَسَاطِيْرُ கட்டுக் கதைகளே الْاَوَّلِيْنَ‏ முன்னோரின்
8:31. வ இதா துத்லா 'அலய்ஹிம் ஆயாதுனா காலூ கத் ஸமிஃனா லவ் னஷா'உ லகுல்னா மித்ல ஹாதா இன் ஹாதா இல்லா அஸாதீருல் அவ்வலீன்
8:31. அவர்கள்மீது நம் வசனங்கள் ஓதிக்காண்பிக்கப்பட்டால் அவர்கள், "நாம் நிச்சயமாக (இவற்றை முன்னரே) கேட்டிருக்கின்றோம்; நாங்கள் நாடினால் இதைப்போல் சொல்லிவிடுவோம்; இது முன்னோர்களின் கட்டுக்கதைகளேயன்றி வேறில்லை" என்று சொல்கிறார்கள்.
8:32
8:32 وَاِذْ قَالُوا اللّٰهُمَّ اِنْ كَانَ هٰذَا هُوَ الْحَـقَّ مِنْ عِنْدِكَ فَاَمْطِرْ عَلَيْنَا حِجَارَةً مِّنَ السَّمَآءِ اَوِ ائْتِنَا بِعَذَابٍ اَ لِيْمٍ‏
وَاِذْ சமயம் قَالُوا கூறினர் اللّٰهُمَّ அல்லாஹ்வே اِنْ كَانَ இருக்குமேயானால் هٰذَا هُوَ இதுதான் الْحَـقَّ உண்மையாக مِنْ عِنْدِكَ உன்னிடமிருந்து فَاَمْطِرْ பொழி عَلَيْنَا எங்கள் மீது حِجَارَةً கல்லை مِّنَ السَّمَآءِ வானத்திலிருந்து اَوِ அல்லது ائْتِنَا எங்களிடம் வா بِعَذَابٍ வேதனையைக் கொண்டு اَ لِيْمٍ‏ துன்புறுத்தும்
8:32. வ இத் காலுல் லாஹும்ம இன் கான ஹாதா ஹுவல் ஹக்க மின் 'இன்திக Fப அம்திர் 'அலய்னா ஹிஜாரதம் மினஸ் ஸமா'இ அவி'தினா Bபி 'அதாBபின் அலீம்
8:32. (இன்னும் நிராகரிப்போர்): "அல்லாஹ்வே! உன்னிடமிருந்து வந்த இதுவே உண்மையானால், எங்கள் மீது வானத்திலிருந்து கல்மழையைப் பெய்யச் செய்! அல்லது எங்களுக்கு ஒரு நோவினைமிக்க வேதனையை அனுப்பு!" என்று கூறினார்களே (அதையும் நபியே! நீர் நினைவு கூரும்).
8:33
8:33 وَمَا كَانَ اللّٰهُ لِيُعَذِّبَهُمْ وَاَنْتَ فِيْهِمْ‌ؕ وَمَا كَانَ اللّٰهُ مُعَذِّبَهُمْ وَهُمْ يَسْتَغْفِرُوْنَ‏
وَمَا كَانَ இல்லை اللّٰهُ அல்லாஹ் لِيُعَذِّبَهُمْ அவர்களை வேதனை செய்பவனாக وَاَنْتَ நீர் இருக்க فِيْهِمْ‌ؕ அவர்களுடன் وَمَا كَانَ இல்லை اللّٰهُ அல்லாஹ் مُعَذِّبَهُمْ வேதனை செய்பவனாக/அவர்களை وَهُمْ அவர்கள் இருக்க يَسْتَغْفِرُوْنَ‏ மன்னிப்புத் தேடுபவர்களாக
8:33. வமா கானல் லாஹு லியு'அத் திBபஹும் வ அன்த Fபீஹிம்; வமா கானல் லாஹு மு'அத் திBபஹும் வ ஹும் யஸ்தக்Fபிரூன்
8:33. (நபியே!) நீர் அவர்களிடையே இருக்கும் நிலையில் அல்லாஹ் அவர்களை வேதனை செய்பவனாக இல்லை; மேலும், அவர்கள் பாவமன்னிப்பைக் கேட்டுக் கொண்டிருக்கும் போதும், அல்லாஹ் அவர்களை வேதனை செய்பவனாக இல்லை.
8:34
8:34 وَمَا لَهُمْ اَلَّا يُعَذِّبَهُمُ اللّٰهُ وَهُمْ يَصُدُّوْنَ عَنِ الْمَسْجِدِ الْحَـرَامِ وَمَا كَانُوْۤا اَوْلِيَآءَهٗ‌ ؕ اِنْ اَوْلِيَآؤُهٗۤ اِلَّا الْمُتَّقُوْنَ وَلٰـكِنَّ اَكْثَرَهُمْ لَا يَعْلَمُوْنَ‏
وَمَا என்ன? لَهُمْ அவர்களுக்கு اَلَّا يُعَذِّبَهُمُ (அவன்) வேதனை செய்யாமலிருக்க / அவர்களை اللّٰهُ அல்லாஹ் وَهُمْ அவர்களோ يَصُدُّوْنَ தடுக்கின்றனர் عَنِ الْمَسْجِدِ மஸ்ஜிதை விட்டு الْحَـرَامِ புனிதமானது وَمَا كَانُوْۤا அவர்கள் இல்லை اَوْلِيَآءَهٗ‌ ؕ அதன் பொறுப்பாளர்களாக اِنْ இல்லை اَوْلِيَآؤُهٗۤ அதன் பொறுப்பாளர்கள் اِلَّا தவிர الْمُتَّقُوْنَ இறை அச்சமுள்ளவர்கள் وَلٰـكِنَّ எனினும் நிச்சயமாக اَكْثَرَ அதிகமானோர் هُمْ அவர்களில் لَا يَعْلَمُوْنَ‏ அறியமாட்டார்கள்
8:34. வமா லஹும் அல்லா யு'அத் திBபஹுமுல் லாஹு வ ஹும் யஸுத்தூன 'அனில் மஸ்ஜிதில்-ஹராமி வமா கானூ அவ்லியா'அஹ்; இன் அவ்லியா' உஹூ இல்லல் முத்தகூன வ லாகின்ன அக்தரஹும் லா யஃலமூன்
8:34. அல்லாஹ் அவர்களை வேதனை செய்யாமலிருக்க அவர்களுக்கு வேறு (காரணம்) என்ன இருக்கிறது? அவர்கள் (கஃபா என்னும்) மஸ்ஜிதுல்ஹராமை விட்டும் (முஸ்லிம்களைத்) தடுக்கின்றனர்; அவர்கள் அதனுடைய காரியஸ்தர்களாகவும் இருக்கவில்லை; (அல்லாஹ்வை) அஞ்சுவோரைத் தவிர (வேறு எவரும்) அதனுடைய காரியஸ்தர்களாக இருக்க முடியாது; எனினும், அவர்களில் பெரும்பாலோர் (இதனை) அறிய மாட்டார்கள்.
8:35
8:35 وَمَا كَانَ صَلَاتُهُمْ عِنْدَ الْبَيْتِ اِلَّا مُكَآءً وَّتَصْدِيَةً‌  ؕ فَذُوْقُوا الْعَذَابَ بِمَا كُنْتُمْ تَكْفُرُوْنَ‏
وَمَا كَانَ இருக்கவில்லை صَلَاتُهُمْ வழிபாடு/அவர்களுடைய عِنْدَ அருகில் الْبَيْتِ இறை ஆலயம் اِلَّا தவிர مُكَآءً சீட்டியடிப்பது وَّتَصْدِيَةً‌  ؕ இன்னும் கை தட்டுவது فَذُوْقُوا சுவையுங்கள் الْعَذَابَ வேதனையை بِمَا எதன் காரணமாக كُنْتُمْ இருந்தீர்கள் تَكْفُرُوْنَ‏ நிராகரிக்கிறீர்கள்
8:35. வமா கான ஸலாதுஹும் 'இன்தல் Bபய்தி இல்லா முகா அ(ன்)வ்-வ தஸ்தியஹ்; Fபதூகுல் 'அதாBப Bபிமா குன்தும் தக்Fபுரூன்
8:35. அப்பள்ளியில் அவர்களுடைய தொழுகையெல்லாம் சீட்டியடிப்பதும், கை தட்டுவதுமே தவிர வேறில்லை; ஆகவே, "நீங்கள் நிராகரித்துக்கொண்டிருந்ததின் காரணமாக (இப்போது) வேதனையைச் சுவையுங்கள்" (என்று அவர்களுக்கு மறுமையில் கூறப்படும்).
8:36
8:36 اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا يُنْفِقُوْنَ اَمْوَالَهُمْ لِيَـصُدُّوْا عَنْ سَبِيْلِ اللّٰهِ‌ ؕ فَسَيُنْفِقُوْنَهَا ثُمَّ تَكُوْنُ عَلَيْهِمْ حَسْرَةً ثُمَّ يُغْلَبُوْنَ ؕ وَالَّذِيْنَ كَفَرُوْۤا اِلٰى جَهَـنَّمَ يُحْشَرُوْنَۙ‏
اِنَّ நிச்சயமாக الَّذِيْنَ எவர்கள் كَفَرُوْا நிராகரித்தனர் يُنْفِقُوْنَ செலவு செய்கின்றனர் اَمْوَالَهُمْ தங்கள் செல்வங்களை لِيَـصُدُّوْا அவர்கள் தடுப்பதற்கு عَنْ سَبِيْلِ பாதையை விட்டு اللّٰهِ‌ ؕ அல்லாஹ்வின் فَسَيُنْفِقُوْنَهَا செலவு செய்வார்கள்/அவற்றை ثُمَّ பிறகு تَكُوْنُ அவை ஆகும் عَلَيْهِمْ அவர்கள் மீது حَسْرَةً துக்கமாக ثُمَّ பிறகு يُغْلَبُوْنَ ؕ வெற்றி கொள்ளப்படுவார்கள் وَالَّذِيْنَ كَفَرُوْۤا நிராகரிப்பாளர்கள் اِلٰى جَهَـنَّمَ நரகத்தின் பக்கமே يُحْشَرُوْنَۙ‏ ஒன்று திரட்டப்படுவார்கள்
8:36. இன்னல் லதீன கFபரூ யுன்Fபிகூன அம்வாலஹும் லியஸுத்தூ 'அன் ஸBபீலில் லாஹ்; Fபஸயுன்Fபிகூனஹா தும்ம தகூனு 'அலய்ஹிம் ஹஸ்ரதன் தும்ம யுக்லBபூன்; வல் லதீன கFபரூ இலா ஜஹன்ன்னம யுஹ்ஷரூனா
8:36. நிச்சயமாக நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வின் பாதையைவிட்டும் தடுப்பதற்காக தங்கள் செல்வங்களைச் செலவு செய்கின்றனர்; (இவ்வாறே அவர்கள் தொடர்ந்து) அவற்றைச் செலவு செய்து கொண்டிருப்பார்கள்: முடிவில் (அது) அவர்களுக்கே துக்கமாக அமைந்துவிடும்; பின்னர், அவர்கள் வெற்றிகொள்ளப்படுவார்கள்; (இறுதியில்) நிராகரிப்பவர்கள் நரகத்தில் ஒன்று சேர்க்கப்படுவார்கள்.
8:37
8:37 لِيَمِيْزَ اللّٰهُ الْخَبِيْثَ مِنَ الطَّيِّبِ وَ يَجْعَلَ الْخَبِيْثَ بَعْضَهٗ عَلٰى بَعْضٍ فَيَرْكُمَهٗ جَمِيْعًا فَيَجْعَلَهٗ فِىْ جَهَـنَّمَ‌ؕ اُولٰٓٮِٕكَ هُمُ الْخٰسِرُوْنَ
لِيَمِيْزَ பிரிப்பதற்காக اللّٰهُ அல்லாஹ் الْخَبِيْثَ கெட்டவர்களை مِنَ இருந்து الطَّيِّبِ நல்லவர்கள் وَ يَجْعَلَ இன்னும் ஆக்குவதற்கு الْخَبِيْثَ கெட்டவர்களை بَعْضَهٗ அவர்களில் சிலரை عَلٰى بَعْضٍ சிலர் மீது فَيَرْكُمَهٗ அவன் ஒன்றிணைத்து/அவர்கள் جَمِيْعًا அனைவரையும் فَيَجْعَلَهٗ அவர்களை ஆக்குவதற்காகவும் فِىْ جَهَـنَّمَ‌ؕ நரகத்தில் اُولٰٓٮِٕكَ هُمُ இவர்கள்தான் الْخٰسِرُوْنَ‏ நஷ்டவாளிகள்
8:37. லியமீZஜல் லாஹுல் கBபீத மினத் தய்யிBபி வ யஜ்'அலல் கBபீத Bபஃளஹூ 'அல Bபஃளின் Fபயர்குமஹூ ஜமீ'அன் Fபயஜ்'அலஹூ Fபீ ஜஹன்ன்னம்; உலா'இக ஹுமுல் காஸிரூன்
8:37. அல்லாஹ் நல்லவரிலிருந்து கெட்டவரை பிரிப்பதற்காகவும், கெட்டவரை - அவர்களில் சிலரைச் சிலரின் மீது ஆக்கி, அவர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து, பிறகு அவர்களை நரகத்தில் போடுவதற்காகவுமே (இவ்வாறு செய்கிறான்; எனவே,) இவர்கள்தாம் நஷ்டமடைந்தவர்கள்.
8:38
8:38 قُلْ لِّـلَّذِيْنَ كَفَرُوْۤا اِنْ يَّنْتَهُوْا يُغْفَرْ لَهُمْ مَّا قَدْ سَلَفَۚ وَاِنْ يَّعُوْدُوْا فَقَدْ مَضَتْ سُنَّتُ الْاَوَّلِيْنَ‏
قُلْ கூறுவீராக لِّـلَّذِيْنَ كَفَرُوْۤا நிராகரிப்பவர்களுக்கு اِنْ يَّنْتَهُوْا அவர்கள் விலகிக் கொண்டால் يُغْفَرْ மன்னிக்கப்படும் لَهُمْ அவர்களுக்கு مَّا قَدْ سَلَفَۚ எவை/முன் சென்றன وَاِنْ يَّعُوْدُوْا அவர்கள் திரும்பினால் فَقَدْ مَضَتْ சென்றுவிட்டது سُنَّتُ வழிமுறை الْاَوَّلِيْنَ‏ முன்னோரின்
8:38. குல் லில்லதீன கFபரூ இ(ன்)ய் யன்தஹூ யுக்Fபர் லஹும் மா கத் ஸலFப வ இ(ன்)ய் யஃஊதூ Fபகத் மளத் ஸுன்னதுல் அவ்வலீன்
8:38. நிராகரிப்போருக்கு (நபியே!) நீர் கூறும்: (இனியேனும்) அவர்கள், (விஷமங்களை விட்டும்) விலகிக்கொள்வார்களானால், திட்டமாக முன் நடந்தவை அவர்களுக்கு மன்னிக்கப்படும்; (ஆனால், அவர்கள் முன் போலவே விஷமங்கள் செய்ய) மீண்டும் முற்படுவார்களானால், முன் சென்றவர்களின் வழிமுறை நிச்சயமாக நடந்தே இருக்கிறது - (அதுவே இவர்களுக்கும்.)
8:39
8:39 وَقَاتِلُوْهُمْ حَتّٰى لَا تَكُوْنَ فِتْنَةٌ وَّيَكُوْنَ الدِّيْنُ كُلُّهٗ لِلّٰهِ‌ۚ فَاِنِ انْـتَهَوْا فَاِنَّ اللّٰهَ بِمَا يَعْمَلُوْنَ بَصِيْرٌ‏
وَقَاتِلُوْ போரிடுங்கள் هُمْ இவர்களிடம் حَتّٰ வரை لَا تَكُوْنَ இல்லாமல் ஆகும் فِتْنَةٌ குழப்பம் وَّيَكُوْنَ இன்னும் ஆகும் الدِّيْنُ வழிபாடு كُلُّهٗ எல்லாம் لِلّٰهِ‌ۚ அல்லாஹ்வுக்கு فَاِنِ انْـتَهَوْا அவர்கள் விலகிக் கொண்டால் فَاِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் بِمَا எதை يَعْمَلُوْنَ அவர்கள் செய்கிறார்கள் بَصِيْرٌ‏ உற்று நோக்குபவன்
8:39. வ காதிலூஹும் ஹத்தா லா தகூன Fபித்னது(ன்)வ் வ யகூனத்தீனு குல்லுஹூ லில்லாஹ்; Fப இனின் தஹவ் Fப இன்னல்லாஹ Bபிமா யஃமலூன Bபஸீர்
8:39. (நம்பிக்கையாளர்களே! இவர்களுடைய) விஷமம் முற்றிலும் நீங்கி, (அல்லாஹ்வின்) மார்க்கம் முற்றிலும் அல்லாஹ்வுக்கே ஆகும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்; ஆனால், அவர்கள் (விஷமங்கள் செய்வதிலிருந்து) விலகிக் கொண்டால் - நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை உற்று நோக்கியவனாகவே இருக்கின்றான்.
8:40
8:40 وَاِنْ تَوَلَّوْا فَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ مَوْلٰٮكُمْ‌ؕ نِعْمَ الْمَوْلٰى وَنِعْمَ النَّصِيْرُ‏
وَاِنْ تَوَلَّوْا அவர்கள் விலகினால் فَاعْلَمُوْۤا அறிந்து கொள்ளுங்கள் اَنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் مَوْلٰٮكُمْ‌ؕ உங்கள் எஜமானன் نِعْمَ சிறந்தவன் الْمَوْلٰى எஜமானன் وَنِعْمَ சிறந்தவன் النَّصِيْرُ‏ உதவியாளன்
8:40. வ இன் தவல்லவ் Fபஃலமூ அன்னல் லாஹ மவ்லாகும்; னிஃமல் மவ்லா வ னிஃமன் னஸீர்
8:40. அவர்கள் புறக்கணித்தால், நிச்சயமாக அல்லாஹ் உங்களுடைய பாதுகாவலன் என்பதை அறிந்துகொள்ளுங்கள்; அவன் சிறந்த பாதுகாவலன்; இன்னும், அவன் சிறந்த உதவியாளன்.
8:41
8:41 وَاعْلَمُوْۤا اَنَّمَا غَنِمْتُمْ مِّنْ شَىْءٍ فَاَنَّ لِلّٰهِ خُمُسَهٗ وَ لِلرَّسُوْلِ وَلِذِى الْقُرْبٰى وَالْيَتٰمٰى وَالْمَسٰكِيْنِ وَابْنِ السَّبِيْلِ ۙ اِنْ كُنْتُمْ اٰمَنْتُمْ بِاللّٰهِ وَمَاۤ اَنْزَلْنَا عَلٰى عَبْدِنَا يَوْمَ الْفُرْقَانِ يَوْمَ الْتَقَى الْجَمْعٰنِ‌ ؕ وَاللّٰهُ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ‏
وَاعْلَمُوْۤا அறிந்து கொள்ளுங்கள் اَنَّمَا நிச்சயமாக எது غَنِمْتُمْ வென்றீர்கள் مِّنْ شَىْءٍ ஒரு பொருள் فَاَنَّ நிச்சயமாக لِلّٰهِ அல்லாஹ்வுக்கு خُمُسَهٗ அதில் ஐந்தில் ஒன்று وَ لِلرَّسُوْلِ இன்னும் தூதருக்கு وَلِذِى الْقُرْبٰى இன்னும் உறவினர்களுக்கு وَالْيَتٰمٰى இன்னும் அநாதைகளுக்கு وَالْمَسٰكِيْنِ இன்னும் ஏழைகளுக்கு وَابْنِ السَّبِيْلِ ۙ இன்னும் பயணிகளுக்கு اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் اٰمَنْتُمْ நம்பிக்கை கொண்டவர்களாக بِاللّٰهِ அல்லாஹ்வை وَمَاۤ اَنْزَلْنَا இன்னும் எதை இறக்கினோம் عَلٰى عَبْدِنَا நம் அடியார் மீது يَوْمَ நாளில் الْفُرْقَانِ பிரித்தறிவித்த يَوْمَ நாளில் الْتَقَى சந்தித்தார்(கள்) الْجَمْعٰنِ‌ ؕ இரு கூட்டங்கள், இரு படைகள் وَاللّٰهُ நிச்சயமாகஅல்லாஹ் عَلٰى மீது كُلِّ شَىْءٍ எல்லாவற்றின் قَدِيْرٌ‏ பேராற்றலுடையவன்
8:41. வஃலமூ அன்னமா கனிம்தும் மின் ஷ'இன் Fப அன்ன லில்லாஹி குமுஸஹூ வ லிர் ரஸூலி வ லிதில் குர்Bப வல்யதாமா வல்மஸாகீனி வBப்னிஸ் ஸBபீலி இன் குன்தும் ஆமன்தும் Bபில்லாஹி வ மா அன்Zஜல்னா 'அல 'அBப்தினா யவ்மல் Fபுர்கானி யவ்மல்தகல் ஜம்'ஆன்; வல் லாஹு 'அலா குல்லி ஷய்'இன் கதீர்
8:41. (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் (போரில்) பெற்ற வெற்றிப் பொருட்களிலிருந்து நிச்சயமாக ஐந்தில் ஒருபங்கு அல்லாஹ்வுக்கும், (அவனது) தூதருக்கும், (அவருடைய) உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கருக்கும் உரியதாகும். நீங்கள் அல்லாஹ்வின் மீதும், (சத்தியத்துக்கும், அசத்தியத்துக்குமிடையே) தீர்ப்பளித்த (பத்ருப் போரின்) நாளில் - இரு படையினர் சந்தித்துக்கொண்ட நாளில், நம் அடியாரின் மீது நாம் இறக்கிவைத்த (உதவி முதலிய)வற்றின் மீதும் நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால், (மேற்கூறியது பற்றி) உறுதியாக அறிந்துகொள்ளுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்.
8:42
8:42 اِذْ اَنْتُمْ بِالْعُدْوَةِ الدُّنْيَا وَهُمْ بِالْعُدْوَةِ الْقُصْوٰى وَ الرَّكْبُ اَسْفَلَ مِنْكُمْ‌ؕ وَلَوْ تَوَاعَدْتُّمْ لَاخْتَلَفْتُمْ فِى الْمِيْعٰدِ‌ۙ وَلٰـكِنْ لِّيَقْضِىَ اللّٰهُ اَمْرًا كَانَ مَفْعُوْلًا ۙ لِّيَهْلِكَ مَنْ هَلَكَ عَنْۢ بَيِّنَةٍ وَّيَحْيٰى مَنْ حَىَّ عَنْۢ بَيِّنَةٍ‌ ؕ وَاِنَّ اللّٰهَ لَسَمِيْعٌ عَلِيْمٌۙ‏
اِذْ சமயம் اَنْتُمْ நீங்கள் بِالْعُدْوَةِ பள்ளத்தாக்கில் الدُّنْيَا சமீபமானது وَهُمْ அவர்கள் بِالْعُدْوَةِ பள்ளத்தாக்கில் الْقُصْوٰى தூரமானது وَ الرَّكْبُ வாகனக்காரர்கள் اَسْفَلَ கீழே مِنْكُمْ‌ؕ உங்களுக்கு وَلَوْ تَوَاعَدْتُّمْ நீங்கள் வாக்குறுதி செய்து கொண்டிருந்தால் لَاخْتَلَفْتُمْ தவறிழைத்திருப்பீர்கள் فِى الْمِيْعٰدِ‌ۙ குறிப்பிட்ட நேரத்தில் وَلٰـكِنْ எனினும் لِّيَقْضِىَ நிறைவேற்றுவதற்காக اللّٰهُ அல்லாஹ் اَمْرًا ஒரு காரியத்தை كَانَ இருக்கின்றது مَفْعُوْلًا ۙ முடிவுசெய்யப்பட்டதாக لِّيَهْلِكَ அழிவதற்காக مَنْ எவன் هَلَكَ அழிந்தான் عَنْۢ بَيِّنَةٍ ஆதாரத்துடன் وَّيَحْيٰى இன்னும் வாழ்வதற்காக مَنْ எவன் حَىَّ வாழ்ந்தான் عَنْۢ بَيِّنَةٍ‌ ؕ ஆதாரத்துடன் وَاِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ்தான் لَسَمِيْعٌ நன்குசெவியுறுபவன் عَلِيْمٌۙ‏ நன்கறிந்தவன்
8:42. இத் அன்தும் Bபில்'உத்வதித் துன்யா வ ஹும் Bபில்'உத்வதில் குஸ்வா வர்ரக்Bபு அஸ்Fபல மின்கும்; வ லவ் தவாத்தும் லக்தலFப்தும் Fபில் மீ'ஆதி வ லாகில் லியக்ளியல் லாஹு அம்ரன் கான மFப்'ஊலல் லியஹ்லிக மன் ஹலக 'அம் Bபய்யினதி(ன்)வ் வ யஹ்யா மன் ஹய்ய 'அம் Bபய்யினஹ்; வ இன்னல் லாஹ ல ஸமீ'உன் 'அலீம்
8:42. (பத்ருப் போர்க்களத்தில் மதீனாவுக்கு) சமீபத்திலுள்ள பள்ளத்தாக்கில் நீங்களும், (எதிரிகளான) அவர்கள் தூரமான பள்ளத்தாக்கிலும், (குறைஷி வியாபாரிகளாகிய) வாகனக்காரர்கள் உங்கள் கீழ்ப்புறத்திலும், இருந்த (நேரத்தை நினைத்துப்பாருங்கள்); நீங்கள் ஒருவருக்கொருவர் (சந்திக்கும் காலம், இடம் பற்றி) வாக்குறுதி செய்திருந்தால் அவ்வாக்குறுதியில் நிச்சயமாக கருத்து வேற்றுமை கொண்டிருப்பீர்கள்; ஆனால், செய்யப்பட வேண்டிய காரியத்தை அல்லாஹ் நிறைவேற்றுவதற்காகவும், அழிந்தவர் தக்க காரணத்துடன் அழிவதற்காகவும், வாழ்பவர் தக்க காரணத்துடன் வாழ்வதற்காகவும் (இவ்வாறு அவன் செய்தான்); நிச்சயமாக அல்லாஹ் செவியேற்பவனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றான்.
8:43
8:43 اِذْ يُرِيْكَهُمُ اللّٰهُ فِىْ مَنَامِكَ قَلِيْلًا ؕ وَّلَوْ اَرٰٮكَهُمْ كَثِيْرًا لَّـفَشِلْـتُمْ وَلَـتَـنَازَعْتُمْ فِى الْاَمْرِ وَلٰـكِنَّ اللّٰهَ سَلَّمَ‌ؕ اِنَّهٗ عَلِيْمٌۢ بِذَاتِ الصُّدُوْرِ‏
اِذْ يُرِيْكَهُمُ சமயம்/காண்பிக்கிறான்/உமக்கு/அவர்களை اللّٰهُ அல்லாஹ் فِىْ مَنَامِكَ உமது கனவில் قَلِيْلًا ؕ குறைவாக وَّلَوْ اَرٰٮكَهُمْ அவன் காண்பித்திருந்தால் உமக்கு / அவர்களை كَثِيْرًا அதிகமானவர்களாக لَّـفَشِلْـتُمْ நீங்கள் துணிவிழந்திருப்பீர்கள் وَلَـتَـنَازَعْتُمْ இன்னும் தர்க்கித்திருப்பீர்கள் فِى الْاَمْرِ காரியத்தில் وَلٰـكِنَّ என்றாலும் நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் سَلَّمَ‌ؕ காப்பாற்றினான் اِنَّهٗ நிச்சயமாக அவன் عَلِيْمٌۢ நன்கறிந்தவன் بِذَاتِ الصُّدُوْرِ‏ நெஞ்சங்களில் உள்ளவற்றை
8:43. இத் யுரீகஹுமுல் லாஹு Fபீ மனாமிக கலீல; வ லவ் அராகஹும் கதீரல் லFபஷில்தும் வ லதனாZஜஃதும் Fபில் அம்ரி வ லாகின்னல் லாஹ ஸல்லம்; இன்னஹூ 'அலீமும் Bபிதாதிஸ் ஸுதூர்
8:43. (நபியே!) உம் கனவில் அவர்களை(த் தொகையில்) உமக்குக் குறைவாகக் காண்பித்ததையும், (நினைவுகூர்வீராக!) அவர்களை உமக்கு அதிகமாகக் காண்பித்திருந்தால், நீங்கள் தைரியம் இழந்து (போர் நடத்தும்) காரியத்தில் நீங்கள் (ஒருவருக்கொருவர் பிணங்கித்) தர்க்கம் செய்து கொண்டிருந்திருப்பீர்கள்; எனினும், (அப்படி நடந்துவிடாமல் உங்களை) அல்லாஹ் காப்பாற்றினான்; நிச்சயமாக அவன் உள்ளங்களில் உள்ளவற்றை அறிபவன்.
8:44
8:44 وَ اِذْ يُرِيْكُمُوْهُمْ اِذِ الْتَقَيْتُمْ فِىْۤ اَعْيُنِكُمْ قَلِيْلًا وَّيُقَلِّلُكُمْ فِىْۤ اَعْيُنِهِمْ لِيَـقْضِىَ اللّٰهُ اَمْرًا كَانَ مَفْعُوْلًا ؕ وَاِلَى اللّٰهِ تُرْجَعُ الْاُمُوْرُ
وَ اِذْ போது يُرِيْكُمُوْ காட்டுகிறான்/உங்களுக்கு هُمْ அவர்களை اِذِ போது الْتَقَيْتُمْ நீங்கள் சந்தித்தீர்கள் فِىْۤ اَعْيُنِكُمْ உங்கள் கண்களில் قَلِيْلًا குறைவாக وَّيُقَلِّلُكُمْ இன்னும் குறைவாக காட்டுகிறான்/உங்களை فِىْۤ اَعْيُنِهِمْ அவர்களுடைய கண்களில் لِيَـقْضِىَ நிறைவேற்றுவதற்காக اللّٰهُ அல்லாஹ் اَمْرًا ஒரு காரியத்தை كَانَ இருக்கின்றது مَفْعُوْلًا ؕ முடிவு செய்யப்பட்டதாக وَاِلَى اللّٰهِ அல்லாஹ்வின் பக்கமே تُرْجَعُ திருப்பப்படும் الْاُمُوْرُ‏ காரியங்கள்
8:44. வ இத் யுரீகுமூஹும் இதில் தகய்தும் Fபீ அஃயுனிகும் கலீல(ன்)வ் வ யுகல்லிலுகும் Fபீ அஃயுனிஹிம் லியக்ளியல் லாஹு அம்ரன் கான மFப்'ஊலா; வ இலல் லாஹி துர்ஜ'உல் உமூர்
8:44. நீங்கள் ஒருவருக்கொருவர் (போரில்) சந்தித்தபோது - அவர்களை உங்களுக்கு, உங்களுடைய கண்களில் குறைவாக அவன் காட்டியதையும்; இன்னும், உங்களை அவர்களுடைய கண்களில் குறைவாகக் காண்பித்ததையும் (நினைவுகூருங்கள்); செய்யப்படவேண்டிய காரியத்தை அல்லாஹ் நிறைவேற்றுவதற்காக (இவ்வாறு செய்தான்) - அல்லாஹ்விடமே எல்லாக் காரியங்களும் திரும்பக் கொண்டுவரப்படும்.
8:45
8:45 يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا لَقِيْتُمْ فِئَةً فَاثْبُتُوْا وَاذْكُرُوا اللّٰهَ كَثِيْرًا لَّعَلَّكُمْ تُفْلِحُوْنَ‌ۚ‏
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا நம்பிக்கையாளர்களே! اِذَا لَقِيْتُمْ நீங்கள் சந்தித்தால் فِئَةً ஒரு கூட்டத்தை فَاثْبُتُوْا உறுதியாக இருங்கள் وَاذْكُرُوا நினைவு கூருங்கள் اللّٰهَ அல்லாஹ்வை كَثِيْرًا அதிகமாக لَّعَلَّكُمْ تُفْلِحُوْنَ‌ۚ‏ நீங்கள் வெற்றி பெறுவதற்காக
8:45. யா அய்யுஹல் லதீன ஆமனூ இதா லகீதும் Fபி'அதன் Fபத்Bபுதூ வத்குருல் லாஹ கதீரல் ல'அல்லகும் துFப்லிஹூன்
8:45. நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் (போரில் எதிரியின்) கூட்டத்தாரைச் சந்திப்பீர்களாயின் உறுதியாக இருங்கள் - அல்லாஹ்வை அதிகமாக நீங்கள் நினைவுகூருங்கள்; வெற்றியடைவீர்கள்.
8:46
8:46 وَاَطِيْعُوا اللّٰهَ وَرَسُوْلَهٗ وَلَا تَنَازَعُوْا فَتَفْشَلُوْا وَتَذْهَبَ رِيْحُكُمْ‌ وَاصْبِرُوْا‌ ؕ اِنَّ اللّٰهَ مَعَ الصّٰبِرِيْنَ‌ۚ‏
وَاَطِيْعُوا இன்னும் கீழ்ப்படியுங்கள் اللّٰهَ அல்லாஹ்வுக்கும் وَرَسُوْلَهٗ இன்னும் அவனுடைய தூதருக்கும் وَلَا تَنَازَعُوْا இன்னும் தர்க்கிக்காதீர்கள் فَتَفْشَلُوْا அவ்வாறாயின் நீங்கள் துணிவிழப்பீர்கள் وَتَذْهَبَ சென்றுவிடும் رِيْحُكُمْ‌ உங்கள் ஆற்றல் وَاصْبِرُوْا‌ ؕ பொறுத்திருங்கள் اِنَّ اللّٰهَ مَعَ நிச்சயமாக அல்லாஹ்/உடன் الصّٰبِرِيْنَ‌ۚ‏ பொறுமையாளர்கள்
8:46. வ அதீ'உல் லாஹ வ ரஸூலஹூ வலா தனாZஜ'ஊ FபதFப்ஷலூ வ தத்ஹBப ரீஹுகும் வஸ்Bபிரூ; இன்னல் லாஹ ம'அஸ் ஸாBபிரீன்
8:46. இன்னும், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்; நீங்கள் உங்களுக்குள் முரண்படாதீர்கள்; அவ்வாறாயின் நீங்கள் கோழைகளாகிவிடுவீர்கள்; உங்கள் பலம் குன்றிவிடும்; (துன்பங்களைச் சகித்துக்கொண்டு) நீங்கள் பொறுமையாக இருங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பொறுமை உடையவர்களுடன் இருக்கிறான்.
8:47
8:47 وَلَا تَكُوْنُوْا كَالَّذِيْنَ خَرَجُوْا مِنْ دِيَارِهِمْ بَطَرًا وَّرِئَآءَ النَّاسِ وَ يَصُدُّوْنَ عَنْ سَبِيْلِ اللّٰهِ‌ؕ وَاللّٰهُ بِمَا يَعْمَلُوْنَ مُحِيْطٌ‏
وَلَا تَكُوْنُوْا ஆகிவிடாதீர்கள் كَالَّذِيْنَ எவர்களைப் போல் خَرَجُوْا புறப்பட்டனர் مِنْ இருந்து دِيَارِهِمْ தங்கள் இல்லங்கள் بَطَرًا பெருமைக்காக وَّرِئَآءَ இன்னும் காண்பிப்பதற்காக النَّاسِ மக்களுக்கு وَ يَصُدُّوْنَ இன்னும் தடுப்பார்கள் عَنْ سَبِيْلِ பாதையை விட்டு اللّٰهِ‌ؕ அல்லாஹ்வின் وَاللّٰهُ அல்லாஹ் بِمَا எவற்றை يَعْمَلُوْنَ செய்வார்கள் مُحِيْطٌ‏ சூழ்ந்திருப்பவன்
8:47. வ லா தகூனூ கல்லதீன கரஜூ மின் தியாரிஹிம் Bபதர(ன்)வ் வ ரி'ஆ'அன் னாஸி வ யஸுத்தூன 'அன் ஸBபீலில் லாஹ்; வல்லாஹு Bபிமா யஃமலூன முஹீத்
8:47. பெருமைக்காகவும், மனிதர்களுக்குக் காண்பிப்பதற்காகவும் தங்கள் வீடுகளிலிருந்து வெளிக்கிளம்பி (முஸ்லிம்களுக்கெதிராக பத்ரில்) மக்களை அல்லாஹ்வுடைய பாதையை விட்டுத் தடுத்தார்களே, அவர்களைப்போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள்; அவர்கள் செய்வதை அல்லாஹ் சூழ்ந்து அறிந்தவனாக இருக்கிறான்.
8:48
8:48 وَاِذْ زَيَّنَ لَهُمُ الشَّيْطٰنُ اَعْمَالَهُمْ وَقَالَ لَا غَالِبَ لَـكُمُ الْيَوْمَ مِنَ النَّاسِ وَاِنِّىْ جَارٌ لَّـكُمْ‌ۚ فَلَمَّا تَرَآءَتِ الْفِئَتٰنِ نَكَصَ عَلٰى عَقِبَيْهِ وَقَالَ اِنِّىْ بَرِىْٓءٌ مِّنْكُمْ اِنِّىْۤ اَرٰى مَا لَا تَرَوْنَ اِنِّىْۤ اَخَافُ اللّٰهَ‌ؕ وَاللّٰهُ شَدِيْدُ الْعِقَابِ
وَاِذْ சமயம் زَيَّنَ அலங்கரித்தான் لَهُمُ அவர்களுக்கு الشَّيْطٰنُ ஷைத்தான் اَعْمَالَهُمْ அவர்களுடைய செயல்களை وَقَالَ இன்னும் கூறினான் لَا அறவே இல்லை غَالِبَ வெல்பவர் لَـكُمُ உங்களை الْيَوْمَ இன்று مِنَ النَّاسِ மக்களில் وَاِنِّىْ நிச்சயமாக நான் جَارٌ துணை لَّـكُمْ‌ۚ உங்களுக்கு فَلَمَّا போது تَرَآءَتِ பார்த்தன ஒன்றுக்கொன்று الْفِئَتٰنِ இரு கூட்டங்கள் نَكَصَ திரும்பினான் عَلٰى عَقِبَيْهِ தன் இரு குதிங்கால்கள் மீது وَقَالَ இன்னும் கூறினான் اِنِّىْ நிச்சயமாக நான் بَرِىْٓءٌ விலகியவன் مِّنْكُمْ உங்களை விட்டு اِنِّىْۤ நிச்சயமாக நான் اَرٰى பார்க்கிறேன் مَا لَا تَرَوْنَ எதை/நீங்கள் பார்க்க மாட்டீர்கள் اِنِّىْۤ நிச்சயமாக நான் اَخَافُ பயப்படுகிறேன் اللّٰهَ‌ؕ அல்லாஹ்வை وَاللّٰهُ அல்லாஹ் شَدِيْدُ الْعِقَابِ‏ தண்டிப்பதில் கடுமையானவன்
8:48. வ இத் Zஜய்யன லஹுமுஷ் ஷய்தானு அஃமாலஹும் வ கால லா காலிBப லகுமுல் யவ்ம மினன் னாஸி வ இன்னீ ஜாருல் லகும் Fபலம்மா தரா'அதில் Fபி'அதானி னகஸ 'அலா அகிBபய்ஹி வ கால இன்னீ Bபரீ'உம் மின்கும் இன்னீ அரா மா லா தரவ்ன இன்னீ அகாFபுல் லாஹ்; வல்லாஹு ஷதீதுல் 'இகாBப்
8:48. ஷைத்தான் அவர்களுடைய (பாவச்) செயல்களை அவர்களுக்கு அழகாகக் காண்பித்து, "இன்று மனிதர்களில் உங்களை வெற்றி கொள்வோர் எவருமில்லை; நிச்சயமாக நான் உங்களுக்குத் துணையாக இருக்கின்றேன்!" என்று கூறினான். இரு படைகளும் நேருக்குநேர் சந்தித்தபோது அவன் புறங்காட்டி பின்சென்றான்; மேலும், "நிச்சயமாக நான் உங்களை விட்டு விலகிக்கொண்டேன்; நீங்கள் பார்க்காததை நான் பார்க்கிறேன்; நிச்சயமாக நான் அல்லாஹ்வுக்கு பயப்படுகிறேன்; அல்லாஹ் தண்டனை கொடுப்பதில் கடினமானவன்" என்று கூறினான்.
8:49
8:49 اِذْ يَقُوْلُ الْمُنٰفِقُوْنَ وَالَّذِيْنَ فِىْ قُلُوْبِهِمْ مَّرَضٌ غَرَّ هٰٓؤُلَاۤءِ دِيْنُهُمْؕ وَمَنْ يَّتَوَكَّلْ عَلَى اللّٰهِ فَاِنَّ اللّٰهَ عَزِيْزٌ حَكِيْمٌ‏
اِذْ போது يَقُوْلُ கூறினார்(கள்) الْمُنٰفِقُوْنَ நயவஞ்சகர்கள் وَالَّذِيْنَ எவர்கள் فِىْ قُلُوْبِهِمْ தங்கள் உள்ளங்களில் مَّرَضٌ நோய் غَرَّ மயக்கி விட்டது هٰٓؤُلَاۤءِ இவர்களை دِيْنُهُمْؕ இவர்களுடைய மார்க்கம் وَمَنْ எவர் يَّتَوَكَّلْ நம்பிக்கை வைப்பார் عَلَى اللّٰهِ அல்லாஹ் மீது فَاِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் عَزِيْزٌ மிகைத்தவன் حَكِيْمٌ‏ ஞானவான்
8:49. இத் யகூலுல் முனாFபிகூன வல்லதீன Fபீ குலூBபிஹிம் மரளுன் கர்ர ஹா'உலா'இ தீனுஹும்; வ மய் யதவக்கல் 'அலல் லாஹி Fப இன்னல் லாஹ 'அZஜீ Zஜுன் ஹகீம்
8:49. நயவஞ்சகர்களும் தம் இதயங்களில் நோய் உள்ளவர்களும் (முஸ்லிம்களைச் சுட்டிக்காட்டி) "இவர்களை இவர்களுடைய மார்க்கம் ஏமாற்றி விட்டது" என்று கூறியதை (நினைவுகூர்வீராக!) அல்லாஹ்வை எவர் சார்ந்திருக்கிறாரோ, நிச்சயமாக அல்லாஹ் (சக்தியில்) மிகைத்தவனாகவும், ஞானமுடையோனாகவும் இருக்கின்றான் (என்பதில் உறுதிகொள்வார்களாக)!
8:50
8:50 وَ لَوْ تَرٰٓى اِذْ يَتَوَفَّى الَّذِيْنَ كَفَرُوا‌ ۙ الْمَلٰٓٮِٕكَةُ يَضْرِبُوْنَ وُجُوْهَهُمْ وَاَدْبَارَهُمْۚ وَذُوْقُوْا عَذَابَ الْحَرِيْقِ‏
وَ لَوْ تَرٰٓى நீர் பார்த்தால் اِذْ போது يَتَوَفَّى உயிர் கைப்பற்றுவார்(கள்) الَّذِيْنَ كَفَرُوا‌ ۙ நிராகரித்தவர்களை الْمَلٰٓٮِٕكَةُ வானவர்கள் يَضْرِبُوْنَ அடித்தவர்களாக وُجُوْهَهُمْ அவர்களுடைய முகங்களில் وَاَدْبَارَهُمْۚ இன்னும் அவர்களுடைய முதுகுகளில் وَذُوْقُوْا இன்னும் சுவையுங்கள் عَذَابَ வேதனையை الْحَرِيْقِ‏ எரிக்கக்கூடியது
8:50. வ லவ் தரா இத் யதவFப் Fபல் லதீன கFபருல் மலா'இகது யள்ரிBபூன வுஜூஹஹும் வ அத்Bபாரஹும் வ தூகூ 'அதாBபல் ஹரீக்
8:50. வானவர்கள் நிராகரிப்பாளர்களின் உயிர்களைக் கைப்பற்றும் போது நீங்கள் பார்ப்பீர்களானால், அவர்களுடைய முகங்களிலும், பின்புறங்களிலும் அடிப்பார்கள். மேலும், "எரிக்கும் நரக வேதனையைச் சுவையுங்கள்" என்றும் கூறுவார்கள்.
8:51
8:51 ذٰلِكَ بِمَا قَدَّمَتْ اَيْدِيْكُمْ وَاَنَّ اللّٰهَ لَـيْسَ بِظَلَّامٍ لِّـلْعَبِيْدِۙ‏
ذٰلِكَ بِمَا அதற்குக் காரணம் قَدَّمَتْ முற்படுத்தின اَيْدِيْكُمْ உங்கள் கரங்கள் وَاَنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் لَـيْسَ இல்லை بِظَلَّامٍ அநீதியிழைப்பவன் لِّـلْعَبِيْدِۙ‏ அடியார்களுக்கு
8:51. தாலிக Bபிமா கத்தமத் அய்தீகும் வான்னல்லாஹ லய்ஸ Bபிளல்லாமில் லில் 'அBபீத்
8:51. இது, உங்களுடைய கைகள் முற்படுத்திய (தீய)வற்றின் காரணத்தினாலாகும்; நிச்சயமாக அல்லாஹ் (தன்) அடியார்களுக்கு (ஒரு சிறிதும்) அநியாயம் செய்பவனாக இல்லை.
8:52
8:52 كَدَاْبِ اٰلِ فِرْعَوْنَ‌ۙ وَالَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ‌ؕ كَفَرُوْا بِاٰيٰتِ اللّٰهِ فَاَخَذَهُمُ اللّٰهُ بِذُنُوْبِهِمْ‌ؕ اِنَّ اللّٰهَ قَوِىٌّ شَدِيْدُ الْعِقَابِ‏
كَدَاْبِ நிலைமையைப் போன்று اٰلِ சமுதாயம் فِرْعَوْنَ‌ۙ ஃபிர்அவ்னுடைய وَالَّذِيْنَ இன்னும் எவர்கள் مِنْ قَبْلِهِمْ‌ؕ அவர்களுக்கு முன்னர் كَفَرُوْا நிராகரித்தனர் بِاٰيٰتِ வசனங்களை اللّٰهِ அல்லாஹ்வின் فَاَخَذَهُمُ ஆகவே அவர்களைத் தண்டித்தான் اللّٰهُ அல்லாஹ் بِذُنُوْبِهِمْ‌ؕ அவர்களுடைய பாவங்களினால் اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் قَوِىٌّ மிக வலிமையானவன் شَدِيْدُ கடுமையானவன் الْعِقَابِ‏ தண்டிப்பதில்
8:52. கதாBபி ஆலி Fபிர்'அவ்ன வல் லதீன மின் கBப்லிஹிம்; கFபரூ Bபி ஆயாதில் லாஹி Fப அகதஹு முல் லாஹு BபிதுனூBபிஹிம்; இன்னல் லாஹ கவிய்யுன் ஷதீதுல் 'இகாBப்
8:52. (இவர்களின் நிலைமை) ஃபிர்அவ்னின் கூட்டத்தார்; இன்னும், அவர்களுக்கு முன்பு இருந்தவர்களுடைய நிலையைப் போன்றதேயாகும்: (இவர்களைப் போலவே) அவர்கள் அல்லாஹ்வின் அத்தாட்சிகளை நிராகரித்தனர்; அவர்களுடைய பாவங்களின் காரணமாக அல்லாஹ் அவர்களைப் பிடித்துக்கொண்டான்; நிச்சயமாக அல்லாஹ் பேராற்றலுடையோன்; தண்டிப்பதில் கடுமையானவன்.
8:53
8:53 ذٰلِكَ بِاَنَّ اللّٰهَ لَمْ يَكُ مُغَيِّرًا نِّـعْمَةً اَنْعَمَهَا عَلٰى قَوْمٍ حَتّٰى يُغَيِّرُوْا مَا بِاَنْفُسِهِمْ‌ۙ وَاَنَّ اللّٰهَ سَمِيْعٌ عَلِيْمٌۙ‏
ذٰلِكَ அதற்கு بِاَنَّ காரணம், நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் لَمْ يَكُ இருக்கவில்லை مُغَيِّرًا மாற்றுபவனாக نِّـعْمَةً ஓர் அருட்கொடையை اَنْعَمَهَا அருள்புரிந்தான்/அதை عَلٰى மீது قَوْمٍ ஒரு சமுதாயம் حَتّٰى வரை يُغَيِّرُوْا மாற்றுவார்கள் مَا எதை بِاَنْفُسِهِمْ‌ۙ தங்களிடம் وَاَنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் سَمِيْعٌ நன்கு செவியுறுபவன் عَلِيْمٌۙ‏ நன்கறிந்தவன்
8:53. தாலிக Bபி அன்னல் லாஹ லம் யகுமு கய்யிரன் னிஃமதன் அன்'அமஹா 'அலா கவ்மின் ஹத்தா யுகய்யிரூ மா Bபிஅன்Fபுஸிஹிம் வ அன்னல்லாஹ ஸமீ'உன் 'அலீம்
8:53. இது (ஏனெனில்,) நிச்சயமாக அல்லாஹ் ஓர் அருட்கொடையை - எந்த சமூகத்தின் மீது அதை அவன் அருளியுள்ளானோ - அவர்கள் தமக்குத்தாமே மாற்றிக்கொள்ளாத வரை, அவன் மாற்றுகிறவனாக இல்லை என்ற காரணத்தினாலாகும்; நிச்சயமாக அல்லாஹ் (எல்லாவற்றையும்) செவியுறுபவனாகவும், (யாவற்றையும்) நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.
8:54
8:54 كَدَاْبِ اٰلِ فِرْعَوْنَ‌ۙ وَالَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ‌ؕ كَذَّبُوْا بِاٰيٰتِ رَبِّهِمْ فَاَهْلَكْنٰهُمْ بِذُنُوْبِهِمْ وَاَغْرَقْنَاۤ اٰلَ فِرْعَوْنَ‌ۚ وَكُلٌّ كَانُوْا ظٰلِمِيْنَ‏
كَدَاْبِ நிலைமையைப் போன்று اٰلِ சமுதாயம் فِرْعَوْنَ‌ۙ ஃபிர்அவ்னுடைய وَالَّذِيْنَ இன்னும் எவர்கள் مِنْ قَبْلِهِمْ‌ؕ அவர்களுக்கு முன்னர் كَذَّبُوْا பொய்ப்பித்தனர் بِاٰيٰتِ வசனங்களை رَبِّهِمْ தங்கள் இறைவனின் فَاَهْلَكْنٰهُمْ அழித்தோம்/அவர்களை بِذُنُوْبِهِمْ அவர்களுடைய பாவங்களினால் وَاَغْرَقْنَاۤ இன்னும் மூழ்கடித்தோம் اٰلَ சமுதாயம் فِرْعَوْنَ‌ۚ ஃபிர்அவ்னுடைய وَكُلٌّ எல்லோரும் كَانُوْا இருந்தனர் ظٰلِمِيْنَ‏ அநியாயக்காரர்களாக
8:54. கதாBபி ஆலி Fபிர்'அவ்ன வல்லதீன மின் கBப்லிஹிம்; கத்தBபூ Bபி ஆயாதி ரBப்Bபிஹிம் Fபாஹ்லக்னாஹும் BபிதுனூBபிஹிம் வ அக்ரக்னா ஆல Fபிர்'அவ்ன்; வ குல்லுன் கானூ ளாலிமீன்
8:54. ஃபிர்அவ்னின் கூட்டத்தார் - இன்னும், அவர்களுக்கு முன்பு இருந்தவர்களுடைய நிலைமையைப் போன்றதேயாகும்; அவர்கள் (இவர்களைப் போலவே தம்) இறைவனின் வசனங்களைப் பொய்ப்பித்தார்கள்; ஆகவே, நாம் அவர்களை அவர்களுடைய பாவங்களின் காரணமாக அழித்தோம்; இன்னும், ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை மூழ்கடித்தோம்; அவர்கள் அனைவரும் அநியாயக்காரர்களாக இருந்தார்கள்.
8:55
8:55 اِنَّ شَرَّ الدَّوَآبِّ عِنْدَ اللّٰهِ الَّذِيْنَ كَفَرُوْا فَهُمْ لَا يُؤْمِنُوْنَ‌ ۖ‌ ۚ‏
اِنَّ شَرَّ நிச்சயமாக கொடியவர்கள் الدَّوَآبِّ மிருகங்களில் عِنْدَ اللّٰهِ அல்லாஹ்விடம் الَّذِيْنَ எவர்கள் كَفَرُوْا நிராகரித்தனர் فَهُمْ ஆகவே, அவர்கள் لَا يُؤْمِنُوْنَ‌ ۖ‌ ۚ‏ நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
8:55. இன்ன ஷர்ரத் தவாBப்Bபி 'இன்தல் லாஹில் லதீன கFபரூ Fபஹும் லா யு'மினூன்
8:55. நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உயிரினங்களில் மிகவும் கெட்டவர்கள், நிராகரித்தவர்கள்தாம்; எனவே, அவர்கள் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள்.
8:56
8:56 اَلَّذِيْنَ عَاهَدْتَّ مِنْهُمْ ثُمَّ يَنْقُضُوْنَ عَهْدَهُمْ فِىْ كُلِّ مَرَّةٍ وَّهُمْ لَا يَـتَّـقُوْنَ‏
اَلَّذِيْنَ எவர்கள் عَاهَدْتَّ ஒப்பந்தம் செய்தீர் مِنْهُمْ அவர்களிடம் ثُمَّ பிறகு يَنْقُضُوْنَ முறிக்கின்றனர் عَهْدَ ஒப்பந்தத்தை هُمْ தங்கள் فِىْ كُلِّ ஒவ்வொரு مَرَّةٍ முறையிலும் وَّهُمْ அவர்கள் لَا يَـتَّـقُوْنَ‏ அவர்கள் அல்லாஹ்வை அஞ்சுவதில்லை
8:56. அல்லதீன'ஆஹத்த மின் ஹும் தும்ம யன்குளூன 'அஹ்தஹும் Fபீ குல்லி மர்ரதி(ன்)வ் வ ஹும் லா யத்தகூன்
8:56. (நபியே!) அவர்களுடன் நீர் உடன்படிக்கை செய்தீர்; பின்னர், ஒவ்வொரு தடவையும் அவர்கள் தம் உடன்படிக்கையை முறித்தே வருகின்றனர்; அவர்கள் (அல்லாஹ்வுக்கு) அஞ்சுவதேயில்லை.
8:57
8:57 فَاِمَّا تَثْقَفَنَّهُمْ فِى الْحَـرْبِ فَشَرِّدْ بِهِمْ مَّنْ خَلْفَهُمْ لَعَلَّهُمْ يَذَّكَّرُوْنَ‏
فَاِمَّا تَثْقَفَنَّهُمْ நீர் பெற்றுக் கொண்டால் / அவர்களை فِى الْحَـرْبِ போரில் فَشَرِّدْ விரட்டியடிப்பீராக بِهِمْ அவர்களைக்கொண்டு مَّنْ எவர்கள் خَلْفَهُمْ அவர்களுக்குப் பின் لَعَلَّهُمْ يَذَّكَّرُوْنَ‏ அவர்கள் நல்லறிவு பெறுவதற்காக
8:57. Fப இம்மா தத்கFபன்னஹும் Fபில் ஹர்Bபி Fபஷர்ரித் Bபிஹிம் மன் கல்Fபஹும் ல'அல்லஹும் யத்தக்கரூன்
8:57. எனவே, போரில் நீர் அவர்களைத் (தாக்கும் வாய்ப்பைப்) பெற்றுவிட்டால், அவர்கள் மூலமாக அவர்களுக்குப் பின்னால் உள்ளவர்களைச் சிதறடித்துவிடுவீராக! இதனால், அவர்கள் படிப்பினை பெறலாம்.
8:58
8:58 وَاِمَّا تَخَافَنَّ مِنْ قَوْمٍ خِيَانَةً فَانْۢبِذْ اِلَيْهِمْ عَلٰى سَوَآءٍ‌ ؕ اِنَّ اللّٰهَ لَا يُحِبُّ الْخَآٮِٕنِيْنَ
وَاِمَّا تَخَافَنَّ நீர் பயந்தால் مِنْ இருந்து قَوْمٍ ஒரு சமுதாயம் خِيَانَةً மோசடியை فَانْۢبِذْ எறிவீராக اِلَيْهِمْ அவர்களிடம் عَلٰى سَوَآءٍ‌ ؕ சமமாக اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் لَا يُحِبُّ நேசிக்க மாட்டான் الْخَآٮِٕنِيْنَ‏ மோசடிக்காரர்களை
8:58. வ இம்மா தகாFபன மின் கவ்மின் கியானதன் Fபம்Bபித் இலய்ஹிம் 'அலா ஸவா'; இன்னல் லாஹ லாயுஹிBப்Bபுல் கா'இனீன்
8:58. (உம்முடன் உடன்படிக்கை செய்திருக்கும்) ஏதாவது ஒரு கூட்டத்தாரிடமிருந்து மோசடியை நீர் பயந்தால், (அதற்குச்) சமமாகவே (அவ்வுடன்படிக்கையை) அவர்களிடம் எறிந்துவிடும்; நிச்சயமாக அல்லாஹ் மோசடி செய்பவர்களை நேசிப்பதில்லை.
8:59
8:59 وَلَا يَحْسَبَنَّ الَّذِيْنَ كَفَرُوْا سَبَقُوْا‌ ؕ اِنَّهُمْ لَا يُعْجِزُوْنَ‏
وَلَا يَحْسَبَنَّ நிச்சயமாக அவர்(கள்) எண்ண வேண்டாம் الَّذِيْنَ எவர்கள் كَفَرُوْا நிராகரித்தனர் سَبَقُوْا‌ ؕ முந்திவிட்டனர் اِنَّهُمْ நிச்சயமாக அவர்கள் لَا يُعْجِزُوْنَ‏ அவர்கள் பலவீனப்படுத்த முடியாது
8:59. வ லா யஹ்ஸBபன்னல் லதீன கFபரூ ஸBபகூ; இன்னஹும் லா யுஃஜிZஜூன்
8:59. நிராகரிப்பவர்கள் தாங்கள் (தண்டனையிலிருந்து) தப்பித்துக் கொண்டதாக எண்ண வேண்டாம்; நிச்சயமாக அவர்கள் (நம்மை எதிலும்) இயலாமலாக்க முடியாது.
8:60
8:60 وَاَعِدُّوْا لَهُمْ مَّا اسْتَطَعْتُمْ مِّنْ قُوَّةٍ وَّمِنْ رِّبَاطِ الْخَـيْلِ تُرْهِبُوْنَ بِهٖ عَدُوَّ اللّٰهِ وَعَدُوَّكُمْ وَاٰخَرِيْنَ مِنْ دُوْنِهِمْ‌ ۚ لَا تَعْلَمُوْنَهُمُ‌ ۚ اَللّٰهُ يَعْلَمُهُمْ‌ؕ وَمَا تُـنْفِقُوْا مِنْ شَىْءٍ فِىْ سَبِيْلِ اللّٰهِ يُوَفَّ اِلَيْكُمْ وَاَنْـتُمْ لَا تُظْلَمُوْنَ‏
وَاَعِدُّوْا ஏற்பாடு செய்யுங்கள் لَهُمْ அவர்களுக்கு مَّا اسْتَطَعْتُمْ உங்களுக்கு முடிந்ததை مِّنْ இருந்து قُوَّةٍ பலம் وَّمِنْ இன்னும் இருந்து رِّبَاطِ الْخَـيْلِ போர்க் குதிரைகள் تُرْهِبُوْنَ நீங்கள் அச்சுறுத்த வேண்டும் بِهٖ அதன் மூலம் عَدُوَّ எதிரிகளை اللّٰهِ அல்லாஹ்வின் وَعَدُوَّ இன்னும் எதிரிகளை كُمْ உங்கள் وَاٰخَرِيْنَ இன்னும் மற்றவர்களை مِنْ دُوْنِهِمْ‌ ۚ அவர்கள் அன்றி لَا تَعْلَمُوْنَهُمُ‌ ۚ நீங்கள் அறியமாட்டீர்கள்/அவர்களை اَللّٰهُ அல்லாஹ் يَعْلَمُهُمْ‌ؕ அறிவான்/அவர்களை وَمَا تُـنْفِقُوْا நீங்கள் எதை தர்மம் செய்தாலும் مِنْ شَىْءٍ பொருள்களில் فِىْ سَبِيْلِ பாதையில் اللّٰهِ அல்லாஹ்வின் يُوَفَّ முழுமையாக வழங்கப்படும் اِلَيْكُمْ உங்களுக்கு وَاَنْـتُمْ நீங்கள் لَا تُظْلَمُوْنَ‏ அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள்
8:60. வ அ'இத்தூ லஹும் மஸ்ததஃதும் மின் குவ்வதி(ன்)வ் வ மிர்ரிBபாதில் கய்லி துர்ஹிBபூன Bபிஹீ 'அதுவ்வல் லாஹி வ 'அதுவ்வகும் வ ஆகரீன மின் தூனிஹிம் லா தஃலமூ னஹும் அல்லாஹு யஃலமுஹும்; வமா துன்Fபிகூ மின் ஷய்'இன் Fபீ ஸBபீலில் லாஹி யுவFப்Fப இலய்கும் வ அன்தும் லா துள்லமூன்
8:60. (நிராகரிப்பாளர்களான) அவர்களுக்காக (-அவர்களை எதிர்ப்பதற்காக) உங்களால் இயன்ற அளவு பலத்தையும், (திறமையான) போர்க் குதிரைகளையும் ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள்: இதனால், நீங்கள் அல்லாஹ்வின் எதிரியையும், உங்களுடைய எதிரியையும் அச்சமடையச் செய்யலாம்; அவர்கள் அல்லாத வேறு சிலரையும் (நீங்கள் அச்சமடையச் செய்யலாம்); அவர்களை நீங்கள் அறியமாட்டீர்கள்; அல்லாஹ் அவர்களை அறிவான்; அல்லாஹ்வுடைய வழியில் நீங்கள் எதைச் செலவு செய்தாலும், (அதற்கான நற்கூலி) உங்களுக்குப் பூரணமாகவே வழங்கப்படும்; (அதில்) நீங்கள் (ஒரு சிறிதும்) அநீதம் இழைக்கப்பட மாட்டீர்கள்.
8:61
8:61 وَاِنْ جَنَحُوْا لِلسَّلْمِ فَاجْنَحْ لَهَا وَتَوَكَّلْ عَلَى اللّٰهِ‌ؕ اِنَّهٗ هُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ‏
وَاِنْ جَنَحُوْا அவர்கள் இணங்கினால் لِلسَّلْمِ சமாதானத்திற்கு فَاجْنَحْ நீர் இணங்குவீராக لَهَا அதற்கு وَتَوَكَّلْ நம்பிக்கை வைப்பீராக عَلَى மீது اللّٰهِ‌ؕ அல்லாஹ்வின் اِنَّهٗ هُوَ நிச்சயமாக அவன்தான் السَّمِيْعُ நன்கு செவியுறுபவன் الْعَلِيْمُ‏ நன்கறிந்தவன்
8:61. வ இன் ஜனஹூ லிஸ்ஸல்மி Fபஜ்னஹ் லஹா வ தவக்கல் 'அலல் லாஹ்; இன்னஹூ ஹுவஸ் ஸமீ'உல் 'அலீம்
8:61. அவர்கள் சமாதானத்தின் பக்கம் சாய்ந்து (இணங்கி) வந்தால், நீரும் அதன் பக்கம் சாய்வீராக! மேலும், அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக! நிச்சயமாக அவனே (எல்லாவற்றையும்) செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.
8:62
8:62 وَاِنْ يُّرِيْدُوْۤا اَنْ يَّخْدَعُوْكَ فَاِنَّ حَسْبَكَ اللّٰهُ‌ؕ هُوَ الَّذِىْۤ اَيَّدَكَ بِنَصْرِهٖ وَبِالْمُؤْمِنِيْنَۙ‏
وَاِنْ يُّرِيْدُوْۤا அவர்கள் நாடினால் اَنْ يَّخْدَعُوْ அவர்கள் வஞ்சிக்க كَ உம்மை فَاِنَّ நிச்சயமாக حَسْبَكَ உமக்குப் போதுமானவன் اللّٰهُ‌ؕ அல்லாஹ்தான் هُوَ அவன் الَّذِىْۤ எவன் اَيَّدَ பலப்படுத்தினான் كَ உம்மை بِنَصْرِهٖ தன் உதவியைக் கொண்டு وَبِالْمُؤْمِنِيْنَۙ‏ நம்பிக்கையாளர்களைக் கொண்டு
8:62. வ இ(ன்)ய் யுரீதூ அ(ன்)ய்-யக்த'ஊக Fப இன்ன ஹஸ்Bபகல் லாஹ்; ஹுவல் லதீ அய்யதக Bபினஸ்ரிஹீ வ Bபில்மு'மினீன்
8:62. அவர்கள் உம்மை ஏமாற்ற எண்ணினால் நிச்சயமாக அல்லாஹ் உமக்குப் போதுமானவன்; அவன்தான் உம்மைத் தன் உதவியைக் கொண்டும், நம்பிக்கையாளர்களைக் கொண்டும் பலப்படுத்தினான்.
8:63
8:63 وَاَلَّفَ بَيْنَ قُلُوْبِهِمْ‌ؕ لَوْ اَنْفَقْتَ مَا فِى الْاَرْضِ جَمِيْعًا مَّاۤ اَلَّفْتَ بَيْنَ قُلُوْبِهِمْ وَلٰـكِنَّ اللّٰهَ اَلَّفَ بَيْنَهُمْ‌ؕ اِنَّهٗ عَزِيْزٌ حَكِيْمٌ‏
وَاَلَّفَ ஒன்றிணைத்தான் بَيْنَ இடையில் قُلُوْبِهِمْ‌ؕ அவர்களுடைய உள்ளங்கள் لَوْ اَنْفَقْتَ நீர் செலவு செய்தால் مَا فِى الْاَرْضِ பூமியிலுள்ளவை جَمِيْعًا அனைத்தையும் مَّاۤ اَلَّفْتَ بَيْنَ ஒன்றிணைத்திருக்க மாட்டீர்/மத்தியில் قُلُوْبِهِمْ அவர்களுடைய உள்ளங்கள் وَلٰـكِنَّ என்றாலும் நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் اَلَّفَ ஒன்றிணைத்தான் بَيْنَهُمْ‌ؕ அவர்களுக்கு மத்தியில் اِنَّهٗ நிச்சயமாக அவன் عَزِيْزٌ மிகைத்தவன் حَكِيْمٌ‏ ஞானவான்
8:63. வ அல்லFப Bபய்ன குலூBபிஹிம்; லவ் அன்Fபக்த மா Fபில் அர்ளி ஜமீ'அம் மா அல்லFப்த Bபய்ன குலூBபிஹிம் வ லாகின்னல்லாஹ அல்லFப Bபய்னஹும்; இன்னாஹூ 'அZஜீZஜுன் ஹகீம்
8:63. மேலும், (நம்பிக்கையாளர்களாகிய) அவர்கள் உள்ளங்களுக்கிடையில் பிணைப்பை உண்டாக்கினான்; பூமியிலுள்ள (செல்வங்கள்) அனைத்தையும் நீர் செலவு செய்தபோதிலும், அவர்கள் உள்ளங்களுக்கிடையே அத்தகைய பிணைப்பை உண்டாக்கியிருக்க முடியாது; ஆனால், நிச்சயமாக அல்லாஹ் அவர்களிடையே பிணைப்பை ஏற்படுத்தியுள்ளான்; நிச்சயமாக அவன் மிகைத்தவனாகவும், ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான்.
8:64
8:64 يٰۤـاَيُّهَا النَّبِىُّ حَسْبُكَ اللّٰهُ وَ مَنِ اتَّبَعَكَ مِنَ الْمُؤْمِنِيْنَ
يٰۤـاَيُّهَا النَّبِىُّ நபியே! حَسْبُكَ உமக்குப் போதுமானவன் اللّٰهُ அல்லாஹ்தான் وَ مَنِ இன்னும் எவருக்கு اتَّبَعَكَ உம்மைப் பின்பற்றினார் مِنَ இருந்து مِنَ الْمُؤْمِنِيْنَ‏ நம்பிக்கையாளர்கள்
8:64. யா அய்யுஹன் னBபிய்யு ஹஸ்Bபுகல் லாஹு வ மனித்தBப 'அக மினல் மு'மினீன்
8:64. நபியே! உமக்கும், நம்பிக்கையாளர்களில் உம்மைப் பின்பற்றுவோருக்கும் அல்லாஹ்வே போதுமானவன்.
8:65
8:65 يٰۤـاَيُّهَا النَّبِىُّ حَرِّضِ الْمُؤْمِنِيْنَ عَلَى الْقِتَالِ‌ ؕ اِنْ يَّكُنْ مِّنْكُمْ عِشْرُوْنَ صَابِرُوْنَ يَغْلِبُوْا مِائَتَيْنِ‌ ۚ وَاِنْ يَّكُنْ مِّنْكُمْ مِّائَةٌ يَّغْلِبُوْۤا اَ لْفًا مِّنَ الَّذِيْنَ كَفَرُوْا بِاَنَّهُمْ قَوْمٌ لَّا يَفْقَهُوْنَ‏
يٰۤـاَيُّهَا النَّبِىُّ நபியே! حَرِّضِ தூண்டுவீராக الْمُؤْمِنِيْنَ நம்பிக்கையாளர்களை عَلَى الْقِتَالِ‌ ؕ போருக்கு اِنْ يَّكُنْ இருந்தால் مِّنْكُمْ உங்களில் عِشْرُوْنَ இருபது (நபர்கள்) صَابِرُوْنَ பொறுமையாளர்கள் يَغْلِبُوْا வெல்வார்கள் مِائَتَيْنِ‌ ۚ இரு நூறு(நபர்களை) وَاِنْ يَّكُنْ مِّنْكُمْ இருந்தால்/உங்களில் مِّائَةٌ நூறு (நபர்கள்) يَّغْلِبُوْۤا வெல்வார்கள் اَ لْفًا ஆயிரம் (நபர்களை) مِّنَ இருந்து الَّذِيْنَ كَفَرُوْا நிராகரித்தவர்கள் بِاَنَّهُمْ காரணம்/நிச்சயமாக அவர்கள் قَوْمٌ மக்கள் لَّا يَفْقَهُوْنَ‏ சிந்தித்து விளங்க மாட்டார்கள்
8:65. யா அய்யுஹன் னBபிய்யு ஹர்ரிளில் மு'மினீன 'அலல் கிதால்; இ(ன்)ய்-யகும் மின்கும் 'இஷ்ரூன ஸாBபிரூன யக்லிBபூ மி'அதய்ன்; வ இ(ன்)ய்-யகும் மின்கும் மி'அது(ன்)ய் யக்லிBபூ அல்Fபம் மினல் லதீன கFபரூ Bபி அன்னஹும் கவ்முல் லா யFப்கஹூன்
8:65. நபியே! நீர் நம்பிக்கையாளர்களைப் போருக்கு ஆர்வமூட்டுவீராக! உங்களில் பொறுமையுடையவர்கள் இருபது பேர் இருந்தால், இரு நூறு பேர்களை அவர்கள் வெற்றி கொள்வார்கள்; இன்னும், உங்களில் நூறு பேர் இருந்தால், அவர்கள் நிராகரிப்பவர்களிலிருந்து ஆயிரம் பேரை வெற்றி கொள்வார்கள்: (இது) நிச்சயமாக அவர்கள் விளங்காத கூட்டத்தினராக இருக்கின்ற காரணத்தினாலாகும்.
8:66
8:66 اَلْـٰٔـنَ خَفَّفَ اللّٰهُ عَنْكُمْ وَعَلِمَ اَنَّ فِيْكُمْ ضَعْفًا‌ؕ فَاِنْ يَّكُنْ مِّنْكُمْ مِّائَةٌ صَابِرَةٌ يَّغْلِبُوْا مِائَتَيْنِ‌ۚ وَاِنْ يَّكُنْ مِّنْكُمْ اَلْفٌ يَّغْلِبُوْۤا اَلْفَيْنِ بِاِذْنِ اللّٰهِؕ وَ اللّٰهُ مَعَ الصّٰبِرِيْنَ‏
اَلْـٰٔـنَ இப்போது خَفَّفَ இலகுவாக்கினான் اللّٰهُ அல்லாஹ் عَنْكُمْ உங்களுக்கு وَعَلِمَ இன்னும் அறிந்தான் اَنَّ நிச்சயமாக فِيْكُمْ உங்களில் ضَعْفًا‌ؕ பலவீனம் فَاِنْ يَّكُنْ இருந்தால் مِّنْكُمْ உங்களில் مِّائَةٌ நூறு (நபர்கள்) صَابِرَةٌ பொறுமையாளர்கள் يَّغْلِبُوْا வெல்வார்கள் مِائَتَيْنِ‌ۚ இரு நூறு(நபர்களை) وَاِنْ يَّكُنْ இருந்தால் مِّنْكُمْ உங்களில் اَلْفٌ ஆயிரம் (நபர்கள்) يَّغْلِبُوْۤا வெல்வார்கள் اَلْفَيْنِ இரண்டாயிரம் (நபர்களை) بِاِذْنِ அனுமதி கொண்டு اللّٰهِؕ அல்லாஹ்வின் وَ اللّٰهُ அல்லாஹ் مَعَ உடன் الصّٰبِرِيْنَ‏ பொறுமையாளர்கள்
8:66. அல்'ஆன கFப்FபFபல் லாஹு 'அன்கும் வ 'அலிம அன்ன Fபீகும் ளஃFபா; Fப-இ(ன்)ய் யகும் மின்கும் மி'அதுன் ஸாBபிரது(ன்)ய் யக்லிBபூ மி'அதய்ன்; வ இ(ன்)ய்-யகும் மின்கும் அல்Fபு(ன்)ய் யக்லிBபூ அல்Fபய்னி Bபி இத்னில் லாஹ்; வல்லாஹு ம'அஸ் ஸாBபிரீன்
8:66. நிச்சயமாக உங்களில் பலவீனம் இருக்கின்றது என்பதை அறிந்து இப்பொழுது அல்லாஹ் (அதனை) உங்களுக்கு இலகுவாக்கிவிட்டான்; எனவே, உங்களில் பொறுமையுடைய நூறுபேர் இருந்தால், அவர்கள் இருநூறுபேர் மீது வெற்றிக் கொள்வார்கள்; உங்களில் (இத்தகையோர்) ஆயிரம் பேர் இருந்தால், அல்லாஹ்வின் உத்தரவுக் கொண்டு அவர்களில் இரண்டாயிரம் பேர் மீது அவர்கள் வெற்றி கொள்வார்கள்; மேலும், அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்.
8:67
8:67 مَا كَانَ لِنَبِىٍّ اَنْ يَّكُوْنَ لَهٗۤ اَسْرٰى حَتّٰى يُثْخِنَ فِى الْاَرْضِ‌ؕ تُرِيْدُوْنَ عَرَضَ الدُّنْيَا ۖ  وَاللّٰهُ يُرِيْدُ الْاٰخِرَةَ‌ ؕ وَاللّٰهُ عَزِيْزٌ حَكِيْمٌ‏
مَا كَانَ ஆகுமானதல்ல لِنَبِىٍّ ஒரு நபிக்கு اَنْ يَّكُوْنَ இருப்பது لَهٗۤ அவருக்கு اَسْرٰى கைதிகள் حَتّٰى வரை يُثْخِنَ கொன்று குவிப்பார் فِى الْاَرْضِ‌ؕ பூமியில் تُرِيْدُوْنَ நாடுகிறீர்கள் عَرَضَ பொருளை الدُّنْيَا உலகத்தின் ۖ  وَاللّٰهُ அல்லாஹ் يُرِيْدُ நாடுகிறான் الْاٰخِرَةَ‌ ؕ மறுமையை وَاللّٰهُ அல்லாஹ் عَزِيْزٌ மிகைத்தவன் حَكِيْمٌ‏ ஞானவான்
8:67. மா கான லி னBபிய்யின் அய் யகூன லஹூ அஸ்ரா ஹத்தா யுத்கின Fபில் அர்ள்; துரீதூன அரளத் துன்யா வல்லாஹு யுரீதுல் ஆகிரஹ்; வல்லாஹு 'அZஜீZஜுன் ஹகீம்
8:67. (விஷமங்கள் அடங்க) பூமியில் இரத்தத்தை ஓட்டாத வரையில் (விரோதிகளை உயிருடன்) சிறைப்பிடிப்பது எந்த நபிக்கும் தகுதியில்லை; நீங்கள் இவ்வுலகத்தின் (நிலையில்லா) பொருட்களை விரும்புகிறீர்கள்; அல்லாஹ்வோ (உங்களுக்கு நிலையான) மறுமையை நாடுகிறான்; அல்லாஹ் மிகைத்தோனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
8:68
8:68 لَوْلَا كِتٰبٌ مِّنَ اللّٰهِ سَبَقَ لَمَسَّكُمْ فِيْمَاۤ اَخَذْتُمْ عَذَابٌ عَظِيْمٌ‏
لَوْلَا كِتٰبٌ விதி இல்லையெனில் مِّنَ இருந்து اللّٰهِ அல்லாஹ் سَبَقَ முந்தியது لَمَسَّكُمْ பிடித்தே இருக்கும்/உங்களை فِيْمَاۤ எதில் اَخَذْتُمْ வாங்கினீர்கள் عَذَابٌ عَظِيْمٌ‏ மகத்தான வேதனை
8:68. லவ் லா கிதாBபும் மினல் லாஹி ஸBபக லமஸ்ஸகும் Fபீ மா அகத்தும் 'அதாBபுன் 'அளீம்
8:68. அல்லாஹ்விடம் (உங்களுடைய மன்னிப்பு) ஏற்கனவே எழுதப்படாமலிருந்தால், நீங்கள் (போர்க் கைதிகளிடம் பத்ரில் ஈட்டுப்பணத்தை) எடுத்துக்கொண்டதன் காரணமாக உங்களை ஒரு பெரிய வேதனை பிடித்திருக்கும்.
8:69
8:69 فَكُلُوْا مِمَّا غَنِمْتُمْ حَلٰلاً طَيِّبًا ۖ  وَّاتَّقُوا اللّٰهَ‌ ؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ
فَكُلُوْا ஆகவே, புசியுங்கள் مِمَّا எதில் غَنِمْتُمْ வென்றீர்கள் حَلٰلاً ஆகுமானதை طَيِّبًا ۖ  நல்ல وَّاتَّقُوا அஞ்சுங்கள் اللّٰهَ‌ ؕ அல்லாஹ்வை اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் غَفُوْرٌ மகா மன்னிப்பாளன் رَّحِيْمٌ‏ பெரும் கருணையாளன்
8:69. Fபகுலூ மிம்மா கனிம்தும் ஹலாலன் தய்யிBபா; வத்த குல்லாஹ்; இன்னல் லாஹ கFபூருர் ரஹீம்
8:69. ஆகவே, போரில் நீங்கள் அடைந்த வெற்றிப் பொருட்களில் அனுமதிக்கப்பட்ட தூய்மையானதைப் புசியுங்கள்; அல்லாஹ்வுக்கே அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடையோனாகவும் இருக்கின்றான்.
8:70
8:70 يٰۤـاَيُّهَا النَّبِىُّ قُلْ لِّمَنْ فِىْۤ اَيْدِيْكُمْ مِّنَ الْاَسْرٰٓىۙ اِنْ يَّعْلَمِ اللّٰهُ فِىْ قُلُوْبِكُمْ خَيْرًا يُّؤْتِكُمْ خَيْرًا مِّمَّاۤ اُخِذَ مِنْكُمْ وَيَغْفِرْ لَـكُمْ‌ؕ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ‏
يٰۤـاَيُّهَا النَّبِىُّ நபியே! قُلْ கூறுவீராக لِّمَنْ எவருக்கு فِىْۤ اَيْدِيْكُمْ உங்கள் கரங்களில் مِّنَ الْاَسْرٰٓىۙ கைதிகளில் اِنْ يَّعْلَمِ அறிந்தால் اللّٰهُ அல்லாஹ் فِىْ قُلُوْبِكُمْ உங்கள் உள்ளங்களில் خَيْرًا நல்லதை يُّؤْتِكُمْ கொடுப்பான்/உங்களுக்கு خَيْرًا சிறந்ததை مِّمَّاۤ எதைவிட اُخِذَ எடுக்கப்பட்டது مِنْكُمْ உங்களிடமிருந்து وَيَغْفِرْ மன்னிப்பான் لَـكُمْ‌ؕ உங்களை وَاللّٰهُ அல்லாஹ் غَفُوْرٌ மகா மன்னிப்பாளன் رَّحِيْمٌ‏ பெரும் கருணையாளன்
8:70. யா அய்யுஹன் னBபிய்யு குல் லிமன் Fபீ அய்தீகும் மினல் அஸ்ரா இ(ன்)ய்-யஃலமில்லஹு Fபீ குலூBபிகும் கய்ர(ன்)ய் யு'திகும் கய்ரம் மிம்மா உகித மின்கும் வ யக்Fபிர் லகும்; வல்லாஹு கFபூருர் ரஹீம்
8:70. நபியே! உங்கள் வசத்தில் இருக்கும் கைதிகளை நோக்கிக் கூறுவீராக! "உங்களுடைய உள்ளங்களில் ஏதாவது ஒரு நன்மை இருப்பதை அல்லாஹ் அறிந்தால், உங்களிடமிருந்து (ஈட்டுத் தொகையாக) எடுத்துக்கொள்ளப்பட்டதை விட (இவ்வுலகத்தில்) மேலானது உங்களுக்கு அவன் கொடுப்பான்; உங்களை அவன் மன்னிப்பான்; அல்லாஹ் மன்னிப்போனாகவும், கிருபையுடையோனாகவும் இருக்கின்றான்."
8:71
8:71 وَاِنْ يُّرِيْدُوْا خِيَانَـتَكَ فَقَدْ خَانُوا اللّٰهَ مِنْ قَبْلُ فَاَمْكَنَ مِنْهُمْ ؕ وَاللّٰهُ عَلِيْمٌ حَكِيْمٌ‏
وَاِنْ يُّرِيْدُوْا அவர்கள் நாடினால் خِيَانَـتَكَ உமக்கு மோசடி செய்ய فَقَدْ خَانُوا மோசடிசெய்துள்ளனர் اللّٰهَ அல்லாஹ்வுக்கு مِنْ قَبْلُ முன்னர் فَاَمْكَنَ ஆகவே ஆதிக்கமளித்தான் مِنْهُمْ ؕ அவர்கள் மீது وَاللّٰهُ அல்லாஹ் عَلِيْمٌ நன்கறிந்தவன் حَكِيْمٌ‏ ஞானவான்
8:71. வ இ(ன்)ய்-யுரீதூ கியா னதக Fபகத் கானுல்லாஹ மின் கBப்லு Fப அம்கன மின்ஹும்; வல்லாஹு 'அலீமுன் ஹகீம்
8:71. (நபியே!) அவர்கள் உமக்கு மோசம் செய்ய நாடினால் (கவலைப்படாதீர்!); இதற்கு முன்னர், அவர்கள் அல்லாஹ்வுக்கு மோசம் செய்திருக்கிறார்கள்; (ஆதலால் தான் அவர்களைச் சிறை பிடிக்க) அவர்கள்மீது உமக்கு சக்தியை அவன் அளித்தான்; அல்லாஹ் (எல்லாம்) அறிபவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
8:72
8:72 اِنَّ الَّذِيْنَ اٰمَنُوْا وَهَاجَرُوْا وَجَاهَدُوْا بِاَمْوَالِهِمْ وَاَنْفُسِهِمْ فِىْ سَبِيْلِ اللّٰهِ وَالَّذِيْنَ اٰوَوْا وَّنَصَرُوْۤا اُولٰۤٮِٕكَ بَعْضُهُمْ اَوْلِيَآءُ بَعْضٍ‌ؕ وَالَّذِيْنَ اٰمَنُوْا وَلَمْ يُهَاجِرُوْا مَا لَـكُمْ مِّنْ وَّلَايَتِهِمْ مِّنْ شَىْءٍ حَتّٰى يُهَاجِرُوْا‌ ۚ وَاِنِ اسْتَـنْصَرُوْكُمْ فِى الدِّيْنِ فَعَلَيْكُمُ النَّصْرُ اِلَّا عَلٰى قَوْمٍۢ بَيْنَكُمْ وَبَيْنَهُمْ مِّيْثَاقٌ ؕ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ بَصِيْرٌ‏
اِنَّ நிச்சயமாக الَّذِيْنَ எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டனர் وَهَاجَرُوْا இன்னும் ஹிஜ்ரா சென்றனர் وَجَاهَدُوْا இன்னும் போர் புரிந்தனர் بِاَمْوَالِهِمْ தங்கள் பொருள்களாலும் وَاَنْفُسِهِمْ இன்னும் தங்கள் உயிர்களாலும் فِىْ سَبِيْلِ பாதையில் اللّٰهِ அல்லாஹ்வின் وَالَّذِيْنَ இன்னும் எவர்கள் اٰوَوْا அரவணைத்தனர் وَّنَصَرُوْۤا இன்னும் உதவினர் اُولٰۤٮِٕكَ இவர்கள் بَعْضُهُمْ இவர்களில் சிலர் اَوْلِيَآءُ பொறுப்பாளர்கள் بَعْضٍ‌ؕ சிலருக்கு وَالَّذِيْنَ இன்னும் எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டனர் وَلَمْ يُهَاجِرُوْا ஆனால் ஹிஜ்ரா செல்லவில்லை مَا لَـكُمْ உங்களுக்கு ஆகுமானதல்ல مِّنْ இருந்து وَّلَايَتِهِمْ அவர்களுக்கு பொறுப்பு مِّنْ شَىْءٍ எந்த ஒன்றுக்கும் حَتّٰى வரை يُهَاجِرُوْا‌ ۚ ஹிஜ்ரா செல்வார்கள் وَاِنِ اسْتَـنْصَرُوْ அவர்கள் உதவி தேடினால் كُمْ உங்களிடம் فِى الدِّيْنِ மார்க்கத்தில் فَعَلَيْكُمُ உங்கள் மீது கடமை النَّصْرُ உதவுவது اِلَّا தவிர عَلٰى எதிராக قَوْمٍۢ ஒரு சமுதாயம் بَيْنَكُمْ உங்களுக்கிடையில் وَبَيْنَهُمْ இன்னும் அவர்களுக்கு இடையில் مِّيْثَاقٌ ؕ உடன்படிக்கை وَاللّٰهُ அல்லாஹ் بِمَا எவற்றை تَعْمَلُوْنَ செய்கிறீர்கள் بَصِيْرٌ‏ உற்று நோக்குபவன்
8:72. இன்னல் லதீன ஆமனூ வ ஹாஜரூ வ ஜாஹதூ Bபி அம்வாலிஹிம் வ அன்Fபுஸிஹிம் Fபீ ஸBபீலில் லாஹி வல்லதீன ஆவவ் வ னஸரூ உலா'இக Bபஃளுஹும் அவ்லியா'உ Bபஃள்; வல்லதீன ஆமனூ வ லம் யுஹாஜிரூ மா லகும் மி(ன்)வ் வலாயதிஹிம் மின் ஷய்'இன் ஹத்தா யுஹாஜிரூ; வ இனிஸ்தன் ஸரூகும் Fபித் தீனி Fப'அலய்கு முன்னஸ்ரு இல்லா 'அலா கவ்மின் Bபய்னகும் வ Bபய்னஹும் மீதாக்; வல்லாஹு Bபிமா தஃமலூன Bபஸீர்
8:72. நிச்சயமாக எவர்கள் நம்பிக்கை கொண்டு, ஹிஜ்ரத் செய்து, தம் செல்வங்களாலும், தங்களது உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்தார்களோ, அவர்களும்; எவர்கள் இத்தகையோருக்குப் புகலிடம் கொடுத்து உதவியும் செய்தார்களோ, அவர்களும்; அவர்களில் சிலர் சிலருக்கு உற்ற நண்பர்கள் ஆவார்கள்; எவர்கள் நம்பிக்கை கொண்டு ஹிஜ்ரத் செய்யவில்லையோ, அவர்கள் ஹிஜ்ரத் செய்யும் வரையில், நீங்கள் அவர்களுடைய எவ்விஷயத்திலும் பொறுப்பாளிகளல்ல; எனினும், அவர்கள் மார்க்க விஷயத்தில் உங்களிடம் உதவி தேடினால், உதவி புரிவது உங்கள் மீது கடமையாகும்; ஆனால், உங்களுக்கும், எவர்களுக்கும் மத்தியில் உடன்படிக்கை இருக்கிறதோ, அக்கூட்டத்தினருக்கு எதிராகத் தவிர, அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு கவனித்துக் கொண்டே இருக்கிறான்.
8:73
8:73 وَالَّذِيْنَ كَفَرُوْا بَعْضُهُمْ اَوْلِيَآءُ بَعْضٍ‌ؕ اِلَّا تَفْعَلُوْهُ تَكُنْ فِتْنَةٌ فِى الْاَرْضِ وَفَسَادٌ كَبِيْرٌؕ‏
وَالَّذِيْنَ எவர்கள் كَفَرُوْا நிராகரித்தனர் بَعْضُهُمْ அவர்களில் சிலர் اَوْلِيَآءُ பொறுப்பாளர்கள் بَعْضٍ‌ؕ சிலருக்கு اِلَّا تَفْعَلُوْهُ நீங்கள் செய்யவில்லையென்றால் / அதை تَكُنْ ஆகிவிடும் فِتْنَةٌ குழப்பம் فِى الْاَرْضِ பூமியில் وَفَسَادٌ இன்னும் கலகம் كَبِيْرٌؕ‏ பெரியது
8:73. வல்லதீன கFபரூ Bபஃளுஹும் அவ்லியா'உ Bபஃள்; இல்லா தFப்'அலூஹு தகுன் Fபித்னதுன் Fபில் அர்ளி வ Fபஸாதுன் கBபீர்
8:73. நிராகரிப்பவர்கள் - அவர்களில் சிலர் சிலருக்குப் பாதுகாவலர்களாக இருக்கின்றனர்; நீங்கள் இதைச் செய்யாவிட்டால் (அதாவது ஒருவருக்கொருவர் பாதுகாவலராக இருக்காவிட்டால்) பூமியில் குழப்பமும், பெருங்கலகமும் ஏற்பட்டுவிடும்.
8:74
8:74 وَالَّذِيْنَ اٰمَنُوْا وَهَاجَرُوْا وَجٰهَدُوْا فِىْ سَبِيْلِ اللّٰهِ وَالَّذِيْنَ اَاوَوْا وَّنَصَرُوْۤا اُولٰۤٮِٕكَ هُمُ الْمُؤْمِنُوْنَ حَقًّا‌ ؕ لَّهُمْ مَّغْفِرَةٌ وَّرِزْقٌ كَرِيْمٌ‏
وَالَّذِيْنَ எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டனர் وَهَاجَرُوْا இன்னும் ஹிஜ்ரா சென்றனர் وَجٰهَدُوْا இன்னும் போர் புரிந்தனர் فِىْ سَبِيْلِ பாதையில் اللّٰهِ அல்லாஹ்வின் وَالَّذِيْنَ இன்னும் எவர்கள் اَاوَوْا அரவணைத்தனர் وَّنَصَرُوْۤا இன்னும் உதவினர் اُولٰۤٮِٕكَ هُمُ இவர்கள்தான் الْمُؤْمِنُوْنَ நம்பிக்கையாளர்கள் حَقًّا‌ ؕ உண்மையில் لَّهُمْ இவர்களுக்கு مَّغْفِرَةٌ மன்னிப்பு وَّرِزْقٌ இன்னும் உணவு كَرِيْمٌ‏ கண்ணியமானது
8:74. வல்லதீன ஆமனூ வ ஹாஜரூ வ ஜாஹதூ Fபீ ஸBபீலில் லாஹி வல்லதீன ஆவவ் வ னஸரூ உலா'இக ஹுமுல் மு'மினூன ஹக்கா; லஹும் மக்Fபிரது(ன்)வ் வ ரிZஜ்குன் கரீம்
8:74. எவர்கள் நம்பிக்கை கொண்டு, ஹிஜ்ரத் செய்து, அல்லாஹ்வின் பாதையில் போர்புரிகின்றார்களோ அ(த்தகைய)வர்களும், எவர்கள் அ(த்தகைய)வர்களுக்குப் புகலிடம் கொடுத்து, உதவி செய்கின்றார்களோ அவர்களும்தான் உண்மையான நம்பிக்கையாளர்கள் ஆவார்கள்; அவர்களுக்கு மன்னிப்பும், கண்ணியமான உணவும் உண்டு.
8:75
8:75 وَالَّذِيْنَ اٰمَنُوْا مِنْۢ بَعْدُ وَهَاجَرُوْا وَجَاهَدُوْا مَعَكُمْ فَاُولٰۤٮِٕكَ مِنْكُمْ‌ؕ وَاُولُوا الْاَرْحَامِ بَعْضُهُمْ اَوْلٰى بِبَعْضٍ فِىْ كِتٰبِ اللّٰهِ‌ؕ اِنَّ اللّٰهَ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ
وَالَّذِيْنَ எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டனர் مِنْۢ بَعْدُ பின்னர் وَهَاجَرُوْا இன்னும் ஹிஜ்ரா சென்றனர் وَجَاهَدُوْا இன்னும் போர் புரிந்தனர் مَعَكُمْ உங்களுடன் فَاُولٰۤٮِٕكَ அவர்கள் مِنْكُمْ‌ؕ உங்களைச் சேர்ந்தவர்கள்தான் وَاُولُوا الْاَرْحَامِ இரத்த பந்தங்கள் بَعْضُهُمْ அவர்களில் சிலர் اَوْلٰى நெருக்கமானவர் بِبَعْضٍ சிலருக்கு فِىْ كِتٰبِ வேதத்தில் اللّٰهِ‌ؕ அல்லாஹ்வின் اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் بِكُلِّ شَىْءٍ எல்லாவற்றையும் عَلِيْمٌ‏ நன்கறிந்தவன்
8:75. வல்லதீன ஆமனூ மின் Bபஃது வ ஹாஜரூ வ ஜாஹதூ ம'அகும் Fப உலா'இக மின்கும்; வ உலுல் அர்ஹாமி Bபஃளுஹும் அவ்லா BபிBபஃளின் Fபீ கிதாBபில் லாஹ்; இன்னல் லாஹ Bபிகுல்லி ஷய்'இன் 'அலீம்
8:75. இதன் பின்னரும், எவர்கள் நம்பிக்கை கொண்டு ஹிஜ்ரத் செய்து உங்களுடன் சேர்ந்து (மார்க்கத்திற்காகப்) போர் புரிந்தார்களோ, அவர்களும் உங்களைச் சேர்ந்தவர்களே; இன்னும், இரத்தக் கலப்புடைய பந்துக்கள் அல்லாஹ்வுடைய வேதத்தில் (உள்ளபடி) அவர்களில் சிலர் சிலருக்கு (வாரிசுரிமை பெற) மிக உரியவர்கள்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.