டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம் 68. ஸூரத்துல் கலம்(எழுதுகோல்)
மக்கீ, வசனங்கள்: 52
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
68:1 نٓ وَالْقَلَمِ وَمَا يَسْطُرُوْنَۙ
نٓ நூன் وَالْقَلَمِ எழுது கோல் மீது(ம்) சத்தியமாக! وَمَا يَسْطُرُوْنَۙ இன்னும் அவர்கள் எழுதுகின்றவற்றின் மீதும்
68:1. னூன்; வல்கலமி வமா யஸ்துரூன்
68:1. நூன், எழுதுகோல் மீதும், இன்னும் (அதன் மூலம்) அவர்கள் எழுதுவதின் மீதும் சத்தியமாக!
68:2 مَاۤ اَنْتَ بِـنِعْمَةِ رَبِّكَ بِمَجْنُوْنٍۚ
مَاۤ اَنْتَ நீர் இல்லை بِـنِعْمَةِ அருளால் رَبِّكَ உமது இறைவனின் بِمَجْنُوْنٍۚ பைத்தியக்காரராக
68:2. மா அன்த Bபினிஃமதி ரBப்Bபிக Bபிமஜ்னூன்
68:2. உம்முடைய இறைவனின் அருட்கொடையால், நீர் பைத்தியக்காரர் அல்லர்.
68:3 وَاِنَّ لَڪَ لَاَجْرًا غَيْرَ مَمْنُوْنٍۚ
وَاِنَّ நிச்சயமாக لَڪَ உமக்கு لَاَجْرًا நற்கூலி உண்டு غَيْرَ مَمْنُوْنٍۚ முடிவற்ற
68:3. வ இன்ன லக ல அஜ்ரன் கய்ர மம்னூன்
68:3. இன்னும், உமக்கு முடிவுறாத (நற்)கூலி நிச்சயமாக இருக்கிறது.
68:4 وَاِنَّكَ لَعَلٰى خُلُقٍ عَظِيْمٍ
وَاِنَّكَ நிச்சயமாக நீர் لَعَلٰى خُلُقٍ நற்குணத்தில் عَظِيْمٍ மகத்தான
68:4. வ இன்னக ல'அலா குலுகின் 'அளீம்
68:4. மேலும், (நபியே!) நிச்சயமாக நீர் மகத்தான (நற்)குணத்தின் மீது இருக்கின்றீர்.
68:5 فَسَتُبْصِرُ وَيُبْصِرُوْنَۙ
فَسَتُبْصِرُ விரைவில் நீரும் காண்பீர் وَيُبْصِرُوْنَۙ அவர்களும் காண்பார்கள்
68:5. FபஸதுBப்ஸிரு வ யுBப்ஸிரூன்
68:5. எனவே, வெகு சிக்கிரத்தில் நீரும் பார்ப்பீர்; அவர்களும் பார்ப்பார்கள்.
68:6 بِاَيِّٮكُمُ الْمَفْتُوْنُ
بِاَيِّٮكُمُ உங்களில் யார் الْمَفْتُوْنُ சோதிக்கப்பட்டவர்
68:6. Bபி அய்யிகுமுல் மFப்தூன்
68:6. உங்களில் எவர் (பைத்தியம் என்னும் நோயால்) சோதனைக்குள்ளாக்கப்பட்டவர் என்பதை.
68:7 اِنَّ رَبَّكَ هُوَ اَعْلَمُ بِمَنْ ضَلَّ عَنْ سَبِيْلِهٖ وَهُوَ اَعْلَمُ بِالْمُهْتَدِيْنَ
اِنَّ நிச்சயமாக رَبَّكَ உமது இறைவன் هُوَ அவன் اَعْلَمُ மிக அறிந்தவன் بِمَنْ ضَلَّ வழிதவறியவனை عَنْ سَبِيْلِهٖ அவனது பாதையில் இருந்து وَهُوَ அவன்தான் اَعْلَمُ மிக அறிந்தவன் بِالْمُهْتَدِيْنَ நேர்வழி பெற்றவர்களை(யும்)
68:7. இன்ன ரBப்Bபக ஹுவ அஃலமு Bபிமன் ளல்ல 'அன் ஸBபீலிஹீ வ ஹுவ அஃலமு Bபில்முஹ்ததீன்
68:7. உம்முடைய இறைவன் அவனுடைய வழியை விட்டுத் தவறியவர் யார் என்பதை நிச்சயமாக மிக அறிந்தவன்; (அது போன்றே) நேர்வழி அடைந்தோரையும் அவன் மிக அறிந்தவன்.
68:8 فَلَا تُطِعِ الْمُكَذِّبِيْنَ
فَلَا تُطِعِ ஆகவே, நீர் கீழ்ப்படியாதீர் الْمُكَذِّبِيْنَ பொய்ப்பிப்பவர்களுக்கு
68:8. Fபலா துதி'இல் முகத்திBபீன்
68:8. எனவே, (சன்மார்க்கத்தைப்) பொய்ப்பிப்பவர்களுக்கு நீர் கீழ்ப்படியாதீர்.
68:9 وَدُّوْا لَوْ تُدْهِنُ فَيُدْهِنُوْنَ
وَدُّوْا ஆசைப்படுகின்றனர் لَوْ تُدْهِنُ நீர் அனுசரித்து போகவேண்டும் என்று فَيُدْهِنُوْنَ அப்படியென்றால் அவர்களும் அனுசரிப்பார்கள்
68:9. வத்தூ லவ் துத்ஹினு Fப-யுத்ஹினூன்
68:9. (சன்மார்க்கப் போதனையை) நீர் தளர்த்தினால், தாங்களும் தளர்ந்து போகலாம் என்று அவர்கள் விரும்புகின்றனர்.
68:10 وَلَا تُطِعْ كُلَّ حَلَّافٍ مَّهِيْنٍۙ
وَلَا تُطِعْ நீர் கீழ்ப்படியாதீர்! كُلَّ எவருக்கும் حَلَّافٍ அதிகம் சத்தியம் செய்கின்றவன் مَّهِيْنٍۙ அற்பமானவன்
68:10. வ லா துதிஃ குல்ல ஹல்லா Fபிம் மஹீன்
68:10. அன்றியும், இழிவானவனான, அதிகம் சத்தியம் செய்யும் எவனுக்கும் நீர் கீழ்ப்படியாதீர்.
68:11 هَمَّازٍ مَّشَّآءٍۢ بِنَمِيْمٍۙ
هَمَّازٍ அதிகம் புறம் பேசுபவன் مَّشَّآءٍۢ بِنَمِيْمٍۙ அதிகம் கோள் சொல்பவன்
68:11. ஹம்மாZஜிம் மஷ் ஷா'இம் Bபினமீம்
68:11. (அத்தகையவன்) குறை கூறித் திரிபவன்; கோள் சொல்லிக் கொண்டு நடப்பவன்.
68:12 مَّنَّاعٍ لِّلْخَيْرِ مُعْتَدٍ اَثِيْمٍۙ
مَّنَّاعٍ அதிகம் தடுப்பவன் لِّلْخَيْرِ நன்மையை مُعْتَدٍ வரம்பு மீறி اَثِيْمٍۙ பெரும் பாவி
68:12. மன்னா'இல் லில்கய்ரி முஃததின் அதீம்
68:12. (எப்பொழுதும்) நன்மையானவற்றைத் தடுத்துக் கொண்டிருப்பவன்; வரம்பு மீறுபவன், பாவம் செய்பவன்.
68:13 عُتُلٍّ ۢ بَعْدَ ذٰلِكَ زَنِيْمٍۙ
عُتُلٍّ ۢ அசிங்கமானவன் بَعْدَ பிறகு ذٰلِكَ இதற்கு زَنِيْمٍۙ ஈனன்
68:13. 'உதுல்லிம் Bபஃத தாலிக Zஜனீம்
68:13. கடின சித்தமுடையவன்; அப்பால் இழிபிறப்பு உடையவன்.
68:14 اَنْ كَانَ ذَا مَالٍ وَّبَنِيْنَؕ
اَنْ كَانَ இருந்த காரணத்தால் ذَا مَالٍ செல்வ(மு)ம் உடையவனாக وَّبَنِيْنَؕ ஆண் பிள்ளைகளும்
68:14. அன் கான தா மாலி(ன்)வ்-வ Bபனீன்
68:14. செல்வமும், (பல) ஆண்மக்களும் உள்ளவனாக அவன் இருப்பதால்-
68:15 اِذَا تُتْلٰى عَلَيْهِ اٰيٰتُنَا قَالَ اَسَاطِيْرُ الْاَوَّلِيْنَ
اِذَا تُتْلٰى ஓதப்பட்டால் عَلَيْهِ அவன் மீது اٰيٰتُنَا நமது வசனங்கள் قَالَ கூறுகின்றான் اَسَاطِيْرُ கட்டுக் கதைகள் الْاَوَّلِيْنَ முன்னோரின்
68:15. இதா துத்லா 'அலய்ஹி ஆயாதுனா கால அஸாதீருல் அவ்வலீன்
68:15. நம் வசனங்கள் அவனிடம் ஓதப்பட்டால், "இவை முன்னோர்களின் கட்டுக்கதைகள்" என்று அவன் கூறுகின்றான்.
68:16 سَنَسِمُهٗ عَلَى الْخُـرْطُوْمِ
سَنَسِمُهٗ விரைவில் அவனுக்கு அடையாளமிடுவோம் عَلَى الْخُـرْطُوْمِ மூக்கின் மீது
68:16. ஸனஸிமுஹூ 'அலல் குர்தூம்
68:16. விரைவிலேயே அவனுடைய மூக்கின் மீது அடையாளமிடுவோம்.
68:17 اِنَّا بَلَوْنٰهُمْ كَمَا بَلَوْنَاۤ اَصْحٰبَ الْجَـنَّةِ ۚ اِذْ اَقْسَمُوْا لَيَصْرِمُنَّهَا مُصْبِحِيْنَۙ
اِنَّا நிச்சயமாக நாம் بَلَوْنٰهُمْ அவர்களை சோதித்தோம் كَمَا بَلَوْنَاۤ நாம் சோதித்ததுபோல் اَصْحٰبَ الْجَـنَّةِ ۚ தோட்ட முடையவர்களை اِذْ اَقْسَمُوْا அவர்கள் சத்தியம் செய்த சமயத்தை நினைவு கூருங்கள்! لَيَصْرِمُنَّهَا அதை அவர்கள் நிச்சயமாக அறுவடை செய்ய வேண்டும் مُصْبِحِيْنَۙ அவர்கள் அதிகாலையில் இருக்கும் போது
68:17. இன்னா Bபலவ்னாஹும் கமா Bபலவ்னா அஸ்-ஹாBபல் ஜன்னதி இத் 'அக்ஸமூ ல-யஸ்ரி முன்னஹா முஸ்Bபிஹீன்
68:17. நிச்சயமாக நாம் தோட்டமுடையவர்களைச் சோதித்தது போலவே, நாம் அவர்களைச் சோதித்தோம்; அ(த் தோட்டத்திற்குரிய)வர்கள் அதனை (கனிகளை) அதிகாலையில் சென்று அறுத்துவிடுவோமென்று சத்தியம் செய்தார்கள்.
68:18 وَلَا يَسْتَثْنُوْنَ
وَلَا يَسْتَثْنُوْنَ அவர்கள் அல்லாஹ் நாடினால் என்று கூறவில்லை
68:18. வ லா யஸ்தத்னூன்
68:18. 'அல்லாஹ் நாடினால்' (இன்ஷா அல்லாஹ்) என்று அவர்கள் கூறவில்லை.
68:19 فَطَافَ عَلَيْهَا طَآٮِٕفٌ مِّنْ رَّبِّكَ وَهُمْ نَآٮِٕمُوْنَ
فَطَافَ இரவில் சுற்றியது عَلَيْهَا அதன் மீது طَآٮِٕفٌ ஒரு கட்டளை مِّنْ رَّبِّكَ உமது இறைவனிடமிருந்து وَهُمْ نَآٮِٕمُوْنَ அவர்கள் தூங்கியவர்களாக இருந்த போது
68:19. FபதாFப 'அலய்ஹா தா'இ Fபும் மிர் ரBப்Bபிக வ ஹும் னா'இமூன்
68:19. எனவே, அவர்கள் தூங்கிக்கொண்டிருக்கும் போது உம் இறைவனிடமிருந்து சுற்றக்கூடிய (நெருப்பின் ஆபத்து) அத் தோட்டத்தின் மீது சுற்றிக்கொண்டது.
68:20 فَاَصْبَحَتْ كَالصَّرِيْمِۙ
فَاَصْبَحَتْ ஆகிவிட்டது كَالصَّرِيْمِۙ அது கடுமையான இருள் நிறைந்த இரவைப் போன்று
68:20. Fப அஸ்Bபஹத் கஸ்ஸரீம்
68:20. அது காலையில் கருத்த சாம்பலைப்போல் ஆகிவிட்டது.
68:21 فَتَـنَادَوْا مُصْبِحِيْنَۙ
فَتَـنَادَوْا ஒருவரை ஒருவர் அழைத்தனர் مُصْبِحِيْنَۙ அவர்கள் அதிகாலையில் ஆனவுடன்
68:21. Fபதனாதவ் முஸ்Bபிஹீன்
68:21. (இது அறியாது) காலையில் எழுந்த அவர்கள் ஒருவரை ஒருவர் அழைத்தனர்.
68:22 اَنِ اغْدُوْا عَلٰى حَرْثِكُمْ اِنْ كُنْتُمْ صٰرِمِيْنَ
اَنِ اغْدُوْا காலையில் செல்லுங்கள் عَلٰى حَرْثِكُمْ உங்கள் விவசாய நிலத்திற்கு اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் صٰرِمِيْنَ அறுவடை செய்பவர்களாக
68:22. அனிக்தூ 'அலா ஹர்திகும் இன் குன்தும் ஸாரிமீன்
68:22. "நீங்கள் (விளைச்சலை) அறுப்பவர்களாக இருந்தால் உங்கள் தோட்டத்திற்கு அதிகாலையில் செல்லுங்கள்" (என்று கூறிக்கொண்டனர்).
68:23 فَانْطَلَقُوْا وَهُمْ يَتَخَافَتُوْنَۙ
فَانْطَلَقُوْا சென்றனர் وَهُمْ அவர்கள் يَتَخَافَتُوْنَۙ தங்களுக்குள் தாழ்ந்த குரலில் பேசியவர்களாக
68:23. Fபன்தலகூ வ ஹும் யதகாFபதூன்
68:23. எனவே, அவர்கள் (பிறர் அறியாது) மெதுவாகப் பேசிக்கொண்டு சென்றனர்.
68:24 اَنْ لَّا يَدْخُلَنَّهَا الْيَوْمَ عَلَيْكُمْ مِّسْكِيْنٌۙ
اَنْ لَّا يَدْخُلَنَّهَا அதில் நுழைந்து விடக்கூடாது الْيَوْمَ இன்றைய தினம் عَلَيْكُمْ உங்களிடம் مِّسْكِيْنٌۙ ஏழை ஒருவரும்
68:24. அல் லா யத்குலன்னஹல் யவ்ம 'அலய்கும் மிஸ்கீன்
68:24. "எந்த ஏழையும் இன்று உங்களிடம் அத்தோட்டத்தில் நிச்சயமாக நுழையக் கூடாது" என்று.
68:25 وَّغَدَوْا عَلٰى حَرْدٍ قٰدِرِيْنَ
وَّغَدَوْا இன்னும் காலையில் புறப்பட்டனர் عَلٰى حَرْدٍ ஒரு கெட்ட எண்ணத்துடன் قٰدِرِيْنَ சக்தி உள்ளவர்களாக
68:25. வ கதவ் 'அலா ஹர்தின் காதிரீன்
68:25. தடுப்பதின் மீது சக்தியுடையவர்களாகக் காலையில் சென்றனர்.
68:26 فَلَمَّا رَاَوْهَا قَالُوْۤا اِنَّا لَـضَآلُّوْنَۙ
فَلَمَّا رَاَوْهَا அவர்கள் அதைப் பார்த்த போது قَالُوْۤا கூறினார்கள் اِنَّا நிச்சயமாக நாங்கள் لَـضَآلُّوْنَۙ வழிதவறி விட்டோம்
68:26. Fபலம்மா ர அவ்ஹா காலூ இன்னா லளால்லூன்
68:26. ஆனால், அவர்கள் அதை (தோட்டத்தை அழிந்து போன நிலையில்) கண்டபோது: "நிச்சயமாக நாம் வழி தவறி (வேறு தோட்டத்திற்கு) வந்துவிட்டோம்" என்று கூறினார்கள்.
68:27 بَلْ نَحْنُ مَحْرُوْمُوْنَ
بَلْ இல்லை, மாறாக نَحْنُ நாங்கள் مَحْرُوْمُوْنَ இழப்பிற்குள்ளாகி விட்டோம்
68:27. Bபல் னஹ்னு மஹ்ரூமூன்
68:27. (பின்னர் கவனித்துப் பார்த்துவிட்டு,) "இல்லை! (ஏழை எளியோர்க்கு எதுவும் கிடைக்காமற் செய்த) நாம்தாம் தடுக்கப்பட்டவர் (பாக்கியம் இழந்தவர்)கள்" (என்று கூறிக்கொண்டனர்).
68:28 قَالَ اَوْسَطُهُمْ اَلَمْ اَقُلْ لَّكُمْ لَوْلَا تُسَبِّحُوْنَ
قَالَ கூறினார் اَوْسَطُهُمْ அவர்களில் நீதவான் اَلَمْ اَقُلْ لَّكُمْ நான் உங்களுக்கு கூறவில்லையா? لَوْلَا تُسَبِّحُوْنَ நீங்கள் இன்ஷா அல்லாஹ் என்று சொல்லி இருக்க வேண்டாமா
68:28. கால அவ்ஸதுஹும் அலம் அகுல் லகும் லவ் லா துஸBப்Bபிஹூன்
68:28. அவர்களில் நடுநிலையுள்ள ஒருவர் "நீங்கள் (இறைவனைத்) துதித்திருக்க வேண்டும் என்று நான் உங்களுக்குக் கூறவில்லையா?" என்று கூறினார்.
68:29 قَالُوْا سُبْحٰنَ رَبِّنَاۤ اِنَّا كُنَّا ظٰلِمِيْنَ
قَالُوْا கூறினார்கள் سُبْحٰنَ மிகப் பரிசுத்தமானவன் رَبِّنَاۤ எங்கள் இறைவன் اِنَّا நிச்சயமாக நாங்கள் كُنَّا நாங்கள்ஆகிவிட்டோம் ظٰلِمِيْنَ அநியாயக்காரர்களாக
68:29. காலூ ஸுBப்ஹான ரBப்Bபினா இன்னா குன்னா ளாலிமீன்
68:29. "எங்கள் இறைவன் தூயவன்; நாம்தாம் நிச்சயமாக அநியாயம் செய்தவர்கள் ஆகிவிட்டோம்!" என்றும் கூறினர்.
68:30 فَاَقْبَلَ بَعْضُهُمْ عَلٰى بَعْضٍ يَّتَلَاوَمُوْنَ
فَاَقْبَلَ முன்னோக்கினர் بَعْضُهُمْ அவர்களில் சிலர் عَلٰى بَعْضٍ சிலரை يَّتَلَاوَمُوْنَ அவர்களுக்குள் பழித்தவர்களாக
68:30. Fப அக்Bபல Bபஃளுஹும் 'அலா Bபஃளி(ன்)ய் யதலாவமூன்
68:30. பின்னர், அவர்களில் சிலர் சிலரை நிந்தித்தவர்களாக முன்னோக்கினர்.
68:31 قَالُوْا يٰوَيْلَنَاۤ اِنَّا كُنَّا طٰغِيْنَ
قَالُوْا கூறினார்கள் يٰوَيْلَنَاۤ எங்களின் நாசமே! اِنَّا كُنَّا நிச்சயமாக நாங்கள் இருந்தோம் طٰغِيْنَ வரம்பு மீறியவர்களாக
68:31. காலூ யா வய்லனா இன்னா குன்னா தாகீன்
68:31. அவர்கள் கூறினார்கள்: "எங்களுக்குண்டான கேடே! நிச்சயமாக நாம் வரம்பு மீறியவர்களாக இருந்தோம்."
68:32 عَسٰى رَبُّنَاۤ اَنْ يُّبْدِلَـنَا خَيْرًا مِّنْهَاۤ اِنَّاۤ اِلٰى رَبِّنَا رٰغِبُوْنَ
عَسٰى கூடும் رَبُّنَاۤ எங்கள் இறைவன் اَنْ يُّبْدِلَـنَا எங்களுக்கு பகரமாக தர(க்கூடும்) خَيْرًا சிறந்ததை مِّنْهَاۤ அதை விட اِنَّاۤ நிச்சயமாக நாங்கள் اِلٰى பக்கம் رَبِّنَا எங்கள் இறைவன் رٰغِبُوْنَ ஆசை உள்ளவர்கள்
68:32. 'அஸா ரBப்Bபுனா அ(ன்)ய் யுBப்திலனா கய்ரம் மின்ஹா இன்னா இலா ரBப்Bபினா ராகிBபூன்
68:32. "எங்களுடைய இறைவன் இதைவிட மேலானதை எங்களுக்கு மாற்றித்தரக்கூடும்; நாங்கள் (தவ்பா செய்து) நிச்சயமாக எங்களுடைய இறைவன் மீதே ஆதரவு வைக்கிறோம்" (எனக் கூறினர்).
68:33 كَذٰلِكَ الْعَذَابُؕ وَلَعَذَابُ الْاٰخِرَةِ اَكْبَرُ ۘ لَوْ كَانُوْا يَعْلَمُوْنَ
كَذٰلِكَ இவ்வாறுதான் الْعَذَابُؕ தண்டனை وَلَعَذَابُ தண்டனை الْاٰخِرَةِ மறுமையின் اَكْبَرُ ۘ மிகப் பெரியது لَوْ كَانُوْا அவர்கள் இருக்க வேண்டுமே! يَعْلَمُوْنَ அறிந்தவர்களாக
68:33. கதாலிகல் அதாBப், வ ல'அதாBபுல் ஆகிரதி அக்Bபர்; லவ் கானூ யஃலமூன்
68:33. இவ்வாறுதான் (இவ்வுலக) வேதனை - அவர்கள் அறிந்து கொள்வார்களானால் மறுமையின் வேதனை (இதைவிட) மிகவும் பெரிது (என உணர்ந்து சன்மார்க்கத்தின்பால் திரும்புவார்கள்).
68:34 اِنَّ لِلْمُتَّقِيْنَ عِنْدَ رَبِّهِمْ جَنّٰتِ النَّعِيْمِ
اِنَّ لِلْمُتَّقِيْنَ நிச்சயமாக இறையச்சம் உள்ளவர்களுக்கு عِنْدَ رَبِّهِمْ தங்கள் இறைவனிடம் جَنّٰتِ சொர்க்கங்கள் النَّعِيْمِ இன்பம் நிறைந்த
68:34. இன்ன லில்முத்தகீன 'இன்த ரBப்Bபிஹிம் ஜன்னாதின் ன'ஈம்
68:34. நிச்சயமாக இறையச்சமுடையோருக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் இன்பம் தரும் சுவர்க்கச் சோலைகள் உண்டு.
68:35 اَفَنَجْعَلُ الْمُسْلِمِيْنَ كَالْمُجْرِمِيْنَؕ
اَفَنَجْعَلُ ஆக்குவோமா? الْمُسْلِمِيْنَ முற்றிலும் பணிந்தவர்களை كَالْمُجْرِمِيْنَؕ குற்றவாளிகளைப் போல்
68:35. அFபனஜ்'அலுல் முஸ்லிமீன கல்முஜ்ரிமீன்
68:35. நாம் முஸ்லிம்களை (பாவம் செய்யும்) குற்றவாளிகளைப் போல் ஆக்குவோமா?
68:36 مَا لَـكُمْ كَيْفَ تَحْكُمُوْنَۚ
مَا لَـكُمْ உங்களுக்கு என்ன ஆனது كَيْفَ எப்படி تَحْكُمُوْنَۚ நீங்கள் தீர்ப்பளிக்கிறீர்கள்
68:36. மா லகும் கய்Fப தஹ்குமூன்
68:36. (சத்தியத்தை நிராகரிப்போரே!) உங்களுக்கு என்ன நேர்ந்தது? (இரு சாராரும் சமமென) எவ்வாறு நீங்கள் தீர்ப்புச் சொல்கிறீர்கள்?
68:37 اَمْ لَـكُمْ كِتٰبٌ فِيْهِ تَدْرُسُوْنَۙ
اَمْ لَـكُمْ உங்களுக்கு ? كِتٰبٌ வேதம் فِيْهِ அதில் تَدْرُسُوْنَۙ படிக்கின்றீர்களா
68:37. அம் லகும் கிதாBபுன் Fபீஹி தத்ருஸூன்
68:37. அல்லது, உங்களிடம் ஏதாவது வேதம் (ஆதாரம்) இருந்து, அதில் நீங்கள் படிக்கின்றீர்களா?
68:38 اِنَّ لَـكُمْ فِيْهِ لَمَا تَخَيَّرُوْنَۚ
اِنَّ நிச்சயமாக لَـكُمْ உங்களுக்கு فِيْهِ அதில் لَمَا تَخَيَّرُوْنَۚ நீங்கள் விரும்புவதெல்லாம் உண்டா?
68:38. இன்ன லகும் Fபீஹி லமா தகய்யரூன்
68:38. நிச்சயமாக நீங்கள் உங்களுக்காகத் தேர்ந்தெடுத்துக் கொள்பவை உங்களுக்கு உண்டு என்று அதில் இருக்கிறதா?
68:39 اَمْ لَـكُمْ اَيْمَانٌ عَلَيْنَا بَالِغَةٌ اِلٰى يَوْمِ الْقِيٰمَةِ ۙ اِنَّ لَـكُمْ لَمَا تَحْكُمُوْنَۚ
اَمْ ? لَـكُمْ உங்களுக்கு اَيْمَانٌ ஒப்பந்தங்கள் عَلَيْنَا நம்மிடம் بَالِغَةٌ உறுதியான اِلٰى يَوْمِ الْقِيٰمَةِ ۙ மறுமை நாள் வரை اِنَّ لَـكُمْ நிச்சயமாக உங்களுக்கு لَمَا تَحْكُمُوْنَۚ நீங்கள் தீர்ப்பளிப்பதெல்லாம்
68:39. அம் லகும் அய்மானுன் 'அலய்னா Bபாலிகதுன் இலா யவ்மில் கியாமதி இன்ன லகும் லமா தஹ்குமூன்
68:39. அல்லது, நீங்கள் தீர்ப்புச் செய்து கொள்வதெல்லாம் மறுமை நாள் வரை உங்களுக்கு நிச்சயமாகக் கிடைத்துக் கொண்டிருக்கும், என்று நம் உறுதிப் பிரமாணங்கள் உங்களிடம் இருக்கின்றனவா?
68:40 سَلْهُمْ اَيُّهُمْ بِذٰلِكَ زَعِيْمٌ ۛۚ
سَلْهُمْ அவர்களிடம் கேட்பீராக اَيُّهُمْ அவர்களில் யார் بِذٰلِكَ இதற்கு زَعِيْمٌ ۛۚ பொறுப்பாளர்
68:40. ஸல்ஹும் அய்யுஹும் Bபிதா லிக Zஜ'ஈம்
68:40. (அவ்வாறெனில்,) அவர்களில் எவர் அதற்குப் பொறுப்பேற்பவர் என்பதை (நபியே!) நீர் அவர்களிடம் கேட்பீராக.
68:41 اَمْ لَهُمْ شُرَكَآءُ ۛۚ فَلْيَاْتُوْا بِشُرَكَآٮِٕهِمْ اِنْ كَانُوْا صٰدِقِيْنَ
اَمْ لَهُمْ இவர்களுக்கு உண்டா? شُرَكَآءُ ۛۚ கூட்டாளிகள் فَلْيَاْتُوْا அவர்கள் கொண்டு வரட்டும் بِشُرَكَآٮِٕهِمْ அவர்களின் அந்த கூட்டாளிகளை اِنْ كَانُوْا அவர்கள் இருந்தால் صٰدِقِيْنَ உண்மையாளர்களாக
68:41. அம் லஹும் ஷுரகா'உ Fபல் ய'தூ Bபிஷுரகா 'இஹிம் இன் கானூ ஸாதிகீன்
68:41. அல்லது, (பொறுப்பேற்க) அவர்களுக்கு இணைவைக்கும் கூட்டாளிகள்தாம் இருக்கின்றார்களா? அவ்வாறாயின், அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களுடைய கூட்டாளிகளைக் கொண்டு வரட்டும்.
68:42 يَوْمَ يُكْشَفُ عَنْ سَاقٍ وَّيُدْعَوْنَ اِلَى السُّجُوْدِ فَلَا يَسْتَطِيْعُوْنَۙ
يَوْمَ நாளில் يُكْشَفُ அகற்றப்படுகின்ற عَنْ سَاقٍ கெண்டைக்காலை விட்டும் وَّيُدْعَوْنَ இன்னும் அவர்கள் அழைக்கப்படுவார்கள் اِلَى السُّجُوْدِ சிரம்பணிய فَلَا يَسْتَطِيْعُوْنَۙ ஆனால், அவர்கள் சக்தி பெறமாட்டார்கள்
68:42. யவ்ம யுக்ஷFபு 'அன் ஸாகி(ன்)வ் வ யுத்'அவ்ன இலஸ் ஸுஜூதி Fபலா யஸ்ததீ'ஊன்
68:42. கெண்டைக்கால் விட்டும் (திரை) அகற்றப்படும் நாளில், அவர்களோ ஸுஜூது செய்யுமாறு அழைக்கப்படுவார்கள்; ஆனால், அவர்கள் (சிரம் பணிய) சக்தி பெற மாட்டார்கள்.
68:43 خَاشِعَةً اَبْصَارُهُمْ تَرْهَقُهُمْ ذِلَّةٌ ؕ وَقَدْ كَانُوْا يُدْعَوْنَ اِلَى السُّجُوْدِ وَهُمْ سٰلِمُوْنَ
خَاشِعَةً தாழ்ந்து இருக்கும் اَبْصَارُهُمْ அவர்களின் பார்வைகள் تَرْهَقُهُمْ அவர்களை சூழும் ذِلَّةٌ ؕ இழிவு وَقَدْ كَانُوْا يُدْعَوْنَ அவர்கள் அழைக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள் اِلَى السُّجُوْدِ وَهُمْ سٰلِمُوْنَ தொழுகைக்கு/அவர்கள் சுகமானவர்களாக இருந்தபோது
68:43. காஷி'அதன் அBப்ஸாருஹும் தர்ஹகுஹும் தில்லது(ன்)வ் வ கத் கானூ யுத்'அவ்ன இலஸ்ஸுஜூதி வ ஹும் ஸாலிமூன்
68:43. அவர்களுடைய பார்வைகள் கீழ் நோக்கியவையாக இருக்கும் நிலையில் இழிவு அவர்களை மூடிக்கொள்ளும்; அவர்களோ (உலகில்) திடமாக இருந்தபோது, ஸுஜூது செய்யுமாறு அழைக்கப்பட்டுக் கொண்டுதான் இருந்தனர். (ஆனால், அப்போது அலட்சியமாக இருந்தனர்.)
68:44 فَذَرْنِىْ وَمَنْ يُّكَذِّبُ بِهٰذَا الْحَـدِيْثِؕ سَنَسْتَدْرِجُهُمْ مِّنْ حَيْثُ لَا يَعْلَمُوْنَۙ
فَذَرْنِىْ என்னை(யும்) விட்டு விடுவீராக! وَمَنْ يُّكَذِّبُ பொய்ப் பிப்பவர்களையும் بِهٰذَا الْحَـدِيْثِؕ இந்த வேதத்தை سَنَسْتَدْرِجُهُمْ அவர்களை கொஞ்சம் கொஞ்சமாகப் பிடிப்போம் مِّنْ حَيْثُ لَا يَعْلَمُوْنَۙ அவர்கள் அறியாத விதத்தில்
68:44. Fபதர்னீ வ ம(ன்)ய் யுகத்திBபு Bபிஹாதல் ஹதீதி ஸனஸ்தத் ரிஜுஹும் மின் ஹய்து லா யஃலமூன்
68:44. எனவே, என்னையும், இந்தச் செய்தியைப் பொய்யாக்குவோரையும் விட்டுவிடுவீராக! அவர்களே அறியாத விதத்தில் அவர்களை நாம் படிப்படியாகப் பிடிப்போம்.
68:45 وَاُمْلِىْ لَهُمْؕ اِنَّ كَيْدِىْ مَتِيْنٌ
وَاُمْلِىْ நாம் தவணை அளிப்போம் لَهُمْؕ அவர்களுக்கு اِنَّ நிச்சயமாக كَيْدِىْ எனது சூழ்ச்சி مَتِيْنٌ மிக பலமானது
68:45. வ உம்லீ லஹும்; இன்ன கய்தீ மதீன்
68:45. அன்றியும், நான் அவர்களுக்கு அவகாசம் கொடுப்பேன்; நிச்சயமாக என் சூழ்ச்சி உறுதியானது.
68:46 اَمْ تَسْــٴَــلُهُمْ اَجْرًا فَهُمْ مِّنْ مَّغْرَمٍ مُّثْقَلُوْنَۚ
اَمْ تَسْــٴَــلُهُمْ இவர்களிடம் நீர் கேட்கின்றீரா? اَجْرًا கூலி ஏதும் فَهُمْ அவர்கள் مِّنْ مَّغْرَمٍ கடனால் مُّثْقَلُوْنَۚ சிரமப்படுகிறார்களா?
68:46. அம் தஸ்'அலுஹும் அஜ்ரன் Fபஹும் மின் மக்ரமின் முத்கலூன்
68:46. நீர் அவர்களிடம் ஏதாவது கூலி கேட்டு, அதனால் அவர்கள் கடனால் பளுவாக்கப்பட்டுள்ளனரா?
68:47 اَمْ عِنْدَهُمُ الْغَيْبُ فَهُمْ يَكْتُبُوْنَ
اَمْ عِنْدَهُمُ அவர்களிடம் இருக்கின்றதா? الْغَيْبُ மறைவானவை فَهُمْ அவர்கள் يَكْتُبُوْنَ எழுதுகின்றனரா?
68:47. அம் 'இன்தஹுமுல் கய்Bபு Fபஹும் யக்துBபூன்
68:47. அல்லது, மறைவான விஷயங்கள் (எழுதப்படும் ஏடு) அவர்களிடம் இருந்து, (அதில்) அவர்கள் எழுதுகின்றார்களா?
68:48 فَاصْبِرْ لِحُكْمِ رَبِّكَ وَلَا تَكُنْ كَصَاحِبِ الْحُوْتِۘ اِذْ نَادٰى وَهُوَ مَكْظُوْمٌؕ
فَاصْبِرْ பொறுமை காப்பீராக! لِحُكْمِ தீர்ப்புக்காக رَبِّكَ உமது இறைவனின் وَلَا تَكُنْ நீர் ஆகிவிடாதீர் كَصَاحِبِ الْحُوْتِۘ மீனுடையவரைப்போல் اِذْ نَادٰى அவர் அழைத்த நேரத்தில் وَهُوَ அவர் مَكْظُوْمٌؕ கடும் கோபமுடையவராக
68:48. Fபஸ்Bபிர் லிஹுக்மி ரBப்Bபிக வலா தகுன் கஸாஹிBபில் ஹூத்; இத் னாதா வ ஹுவ மக்ளூம்
68:48. ஆகவே, உம்முடைய இறைவனின் கட்டளைக்காக (நபியே!) நீர் பொறுத்திருப்பீராக! மீனுடையவரைப் போன்று (அவசரப்பட்டவராக) நீர் ஆகிவிடவேண்டாம்; அவர் துன்பம் நிறைந்தவராகத் (தன் இறைவனை) அழைத்தபோது-
68:49 لَوْلَاۤ اَنْ تَدٰرَكَهٗ نِعْمَةٌ مِّنْ رَّبِّهٖ لَنُبِذَ بِالْعَرَآءِ وَهُوَ مَذْمُوْمٌ
لَوْلَاۤ اَنْ تَدٰرَكَهٗ نِعْمَةٌ அவரை அடைந்திருக்காவிட்டால்/அருள் مِّنْ رَّبِّهٖ அவருடைய இறைவனிடமிருந்து لَنُبِذَ எறியப்பட்டிருப்பார் بِالْعَرَآءِ ஒரு பெருவெளியில் وَهُوَ அவர் இருந்தார் مَذْمُوْمٌ பழிப்பிற்குரிய வராகத்தான்
68:49. லவ் லா அன் ததார கஹூ னிஃமதும் மிர் ரBப்Bபிஹீ லனுBபித Bபில்'அரா'இ வ ஹுவ மத்மூம்
68:49. அவருடைய இறைவனிடமிருந்து அருட்கொடை அவரை அடையாதிருந்தால், அவர் பழிக்கப்பட்டவராக வெட்டவெளியில் எறியப்பட்டிருப்பார்.
68:50 فَاجْتَبٰهُ رَبُّهٗ فَجَعَلَهٗ مِنَ الصّٰلِحِيْنَ
فَاجْتَبٰهُ பிறகு, அவரை தேர்ந்தெடுத்தான் رَبُّهٗ அவரது இறைவன் فَجَعَلَهٗ அவரை ஆக்கினான் مِنَ الصّٰلِحِيْنَ நல்லவர்களில்
68:50. Fபஜ்தBபாஹு ரBப்Bபுஹூ Fபஜ'அலஹூ மினஸ் ஸாலிஹீன்
68:50. ஆனால், அவருடைய இறைவன், அவரைத் தேர்ந்தெடுத்து, அவரை நல்லவர்களில் உள்ளவராக்கினான்.
68:51 وَاِنْ يَّكَادُ الَّذِيْنَ كَفَرُوْا لَيُزْلِقُوْنَكَ بِاَبْصَارِهِمْ لَمَّا سَمِعُوا الذِّكْرَ وَيَقُوْلُوْنَ اِنَّهٗ لَمَجْنُوْنٌۘ
وَاِنْ يَّكَادُ நிச்சயமாக நெருங்கினார்(கள்) الَّذِيْنَ كَفَرُوْا நிராகரித்தவர்கள் لَيُزْلِقُوْنَكَ உம்மை நீக்கிவிட بِاَبْصَارِهِمْ தங்கள் பார்வைகளால் لَمَّا سَمِعُوا அவர்கள் செவியுற்றபோது الذِّكْرَ அறிவுரையை وَيَقُوْلُوْنَ இன்னும் அவர்கள் கூறினார்கள் اِنَّهٗ நிச்சயமாக அவர் لَمَجْنُوْنٌۘ ஒரு பைத்தியக்காரர்தான்
68:51. வ இ(ன்)ய்-யகாதுல் லதீன கFபரூ ல-யுZஜ்லிகூனக BபிஅBப்ஸாரிஹிம் லம்மா ஸமி'உத்-திக்ர வ யகூலூன இன்னஹூ லமஜ்னூன்
68:51. மேலும், எவர்கள் நிராகரிக்கின்றார்களோ அவர்கள் நல்லுபதேசத்தை (குர்ஆனைக்) கேட்கும்போது, தங்களுடைய பார்வைகளால் உம்மை வீழ்த்திவிட நெருங்குகிறார்கள்; "நிச்சயமாக அவர் பைத்தியக்காரர்" என்றும் கூறுகின்றனர்.
68:52 وَمَا هُوَ اِلَّا ذِكْرٌ لِّلْعٰلَمِيْنَ
وَمَا هُوَ அது இல்லை اِلَّا ذِكْرٌ ஓர் அறிவுரையே தவிர لِّلْعٰلَمِيْنَ அகிலத்தார்களுக்கு
68:52. வமா ஹுவ இல்லா திக்ருல் லில்'ஆலமீன்
68:52. ஆனால், அது (குர்ஆன்) அகிலத்தார் அனைவருக்குமே நல்லுபதேசமேயன்றி வேறில்லை.