டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம் 20. ஸூரத்து தாஹா
மக்கீ, வசனங்கள்: 135
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
20:1 طٰهٰ ۚ
طٰهٰ ۚ ஓ மனிதரே!
20:1. தா-ஹா
20:1. தாஹா.
20:2 مَاۤ اَنْزَلْـنَا عَلَيْكَ الْـقُرْاٰنَ لِتَشْقٰٓى ۙ
مَاۤ اَنْزَلْـنَا நாம் இறக்கவில்லை عَلَيْكَ உம்மீது الْـقُرْاٰنَ குர்ஆனை لِتَشْقٰٓى ۙ நீர் சிரமப்படுவதற்காக
20:2. மா அன்Zஜல்னா 'அலய்கல் குர்ஆன லிதஷ்கா
20:2. (நபியே!) நீர் துன்பப்படுவதற்காக நாம் இந்தக் குர்ஆனை உம்மீது இறக்கவில்லை.
20:3 اِلَّا تَذْكِرَةً لِّمَنْ يَّخْشٰى ۙ
اِلَّا தவிர تَذْكِرَةً ஒரு நினைவூட்டலாகவே لِّمَنْ يَّخْشٰى ۙ பயப்படுகின்றவருக்கு
20:3. இல்லா தத்கிரதல் லிம(ன்)ய் யக்-ஷா
20:3. நம்மை அஞ்சுவோருக்கு ஓர் உபதேசமாகவே அன்றி (நாம் இறக்கவில்லை).
20:4 تَنْزِيْلًا مِّمَّنْ خَلَقَ الْاَرْضَ وَالسَّمٰوٰتِ الْعُلَى ؕ
تَنْزِيْلًا இறக்கப்பட்டதாகும் مِّمَّنْ خَلَقَ படைத்தவனிடமிருந்து الْاَرْضَ பூமியை وَالسَّمٰوٰتِ இன்னும் வானங்களை الْعُلَىؕ உயர்ந்த
20:4. தன்Zஜீலம் மிம்மன் கலகல் அர்ள வஸ் ஸமாவாதில் 'உலா
20:4. பூமியையும், உயர்ந்த வானங்களையும் படைத்தவனிடமிருந்து அது இறக்கி அருளப்பட்டது.
20:5 اَلرَّحْمٰنُ عَلَى الْعَرْشِ اسْتَوٰى
اَلرَّحْمٰنُ பேரருளாளன் عَلَى மீது الْعَرْشِ அர்ஷின் اسْتَوٰى உயர்ந்து இருக்கிறான்
20:5. அர்-ரஹ்மானு 'அலல் 'அர்ஷிஸ் தவா
20:5. அளவற்ற அருளாளன் (தன் கண்ணியத்திற்குத் தக்கவாறும், மகத்துவத்திற்குரியவாறும் அரியாசனத்தின் மீதிருப்பது அவனுக்கு எவ்வாறு தகுமோ அவ்வாறே) அர்ஷின் (அரியாசனத்தின்) மீது நிலையானான்.
20:6 لَهٗ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ وَمَا بَيْنَهُمَا وَمَا تَحْتَ الثَّرٰى
لَهٗ அவனுக்கே உரியன مَا உள்ளவை فِى السَّمٰوٰتِ வானங்களில் وَمَا இன்னும் உள்ளவை فِى الْاَرْضِ பூமியில் وَمَا இன்னும் உள்ளவை بَيْنَهُمَا அவ்விரண்டுக்கும் இடையில் وَمَا இன்னும் உள்ளவை تَحْتَ கீழ் الثَّرٰى ஈரமான மண்ணுக்கு
20:6. லஹூ மா Fபிஸ் ஸமாவாதி வமா Fபில் அர்ளி வமா Bபய்னஹுமா வமா தஹ்தத்தரா
20:6. வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும், இவ்விரண்டிற்கும் இடையே உள்ளவையும், மண்ணுக்கு அடியில் உள்ளவையும் அவனுக்கே உரியன.
20:7 وَاِنْ تَجْهَرْ بِالْقَوْلِ فَاِنَّهٗ يَعْلَمُ السِّرَّ وَاَخْفٰى
وَاِنْ تَجْهَرْ நீர் பகிரங்கப்படுத்தினாலும் بِالْقَوْلِ பேச்சை فَاِنَّهٗ நிச்சயமாக அவன் يَعْلَمُ நன்கறிவான் السِّرَّ இரகசியத்தை وَاَخْفٰى இன்னும் மிக மறைந்ததை
20:7. வ இன் தஜ்ஹர் Bபில்கவ்லி Fப-இன்னஹூ யஃலமுஸ் ஸிர்ர வ அக்Fபா
20:7. (நபியே!) நீர் சொல்லை உரக்கச் சொன்னாலும், நிச்சயமாக அவன் இரகசியத்தையும் அதைவிட மறைவானதையும் அறிகிறான்.
20:8 اَللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ؕ لَـهُ الْاَسْمَآءُ الْحُسْنٰى
اَللّٰهُ அல்லாஹ் لَاۤ அறவே இல்லை اِلٰهَ வணக்கத்திற்குரியவன் اِلَّا தவிர هُوَ ؕ அவனை لَـهُ அவனுக்கு உண்டு الْاَسْمَآءُ பெயர்கள் الْحُسْنٰى மிக அழகிய
20:8. அல்லாஹு லா இலாஹ இல்லா ஹுவ லஹுல் அஸ்மா'உல் ஹுஸ்னா
20:8. அல்லாஹ் - அவனைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறில்லை; அவனுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன.
20:9 وَهَلْ اَتٰٮكَ حَدِيْثُ مُوْسٰىۘ
وَهَلْ اَتٰٮكَ உமக்கு வந்ததா? حَدِيْثُ செய்தி مُوْسٰىۘ மூஸாவுடைய
20:9. வ ஹல் அதாக ஹதீது மூஸா
20:9. இன்னும், (நபியே!) மூஸாவின் வரலாறு உம்மிடம் வந்ததா?
20:10 اِذْ رَاٰ نَارًا فَقَالَ لِاَهْلِهِ امْكُثُوْۤا اِنِّىْۤ اٰنَسْتُ نَارًا لَّعَلِّىْۤ اٰتِيْكُمْ مِّنْهَا بِقَبَسٍ اَوْ اَجِدُ عَلَى النَّارِ هُدًى
اِذْ رَاٰ அவர் பார்த்தபோது نَارًا ஒரு நெருப்பை فَقَالَ அவர் கூறினார் لِاَهْلِهِ தனது குடும்பத்தினருக்கு امْكُثُوْۤا தங்கி இருங்கள் اِنِّىْۤ நிச்சயமாக நான் اٰنَسْتُ நான் காண்கின்றேன் نَارًا ஒரு நெருப்பை لَّعَلِّىْۤ اٰتِيْكُمْ உங்களிடம் கொண்டு வரலாம் مِّنْهَا அதிலிருந்து بِقَبَسٍ ஒரு எரிகொல்லியை اَوْ அல்லது اَجِدُ பெறலாம் عَلَى النَّارِ நெருப்பின் அருகில் هُدًى வழிகாட்டுதலை
20:10. இத் ர ஆ னாரன் Fபகால லி அஹ்லிஹிம் குதூ இன்னீ ஆனஸ்து னாரல் ல'அல்லீ ஆதீகும் மின்ஹா BபிகBபஸின் அவ் அஜிது 'அலன் னாரி ஹுதா
20:10. அவர் நெருப்பைக் கண்டு தம் குடும்பத்தாரிடம் "நீங்கள் (இங்கு சிறிது) தங்குங்கள்; நிச்சயமாக நான் நெருப்பைக் கண்டேன்; ஒரு வேளை அதிலிருந்து உங்களுக்கு ஓர் எரி கொள்ளியைக் கொண்டுவரவோ, அல்லது நாம் செல்ல வேண்டிய பாதையை அந் நெருப்பி(ன் உதவியி)னால் கண்டுபிடிக்கவோ செய்யலாம்" (என்று கூறினார்).
20:11 فَلَمَّاۤ اَتٰٮهَا نُوْدِىَ يٰمُوْسٰىؕ
فَلَمَّاۤ اَتٰٮهَا அவர் அதனிடம் வந்தபோது نُوْدِىَ அழைக்கப்பட்டார் يٰمُوْسٰىؕ மூஸாவே!
20:11. Fபலம்மா அதாஹா னூதிய யா மூஸா
20:11. அவர் (நெருப்பின்) அருகே வந்தபோது 'மூஸாவே!' என்று அழைக்கப்பட்டார்.
20:12 اِنِّىْۤ اَنَا رَبُّكَ فَاخْلَعْ نَـعْلَيْكَۚ اِنَّكَ بِالْوَادِ الْمُقَدَّسِ طُوًىؕ
اِنِّىْۤ اَنَا நிச்சயமாக நான்தான் رَبُّكَ உமது இறைவன் فَاخْلَعْ கழட்டுவீராக نَـعْلَيْكَۚ உமது செருப்புகளை اِنَّكَ நிச்சயமாக நீர் بِالْوَادِ பள்ளத்தாக்கில் الْمُقَدَّسِ பரிசுத்தமான طُوًىؕ துவா
20:12. இன்னீ அன ரBப்Bபுக Fபக்லஃ னஃலய்க இன்னக Bபில்வாதில் முகத்தஸி துவா
20:12. "நிச்சயமாக நான்தான் உன்னுடைய இறைவன்; நீர் உம் காலணிகள் இரண்டையும் கழற்றிவிடும்! நிச்சயமாக நீர் 'துவா' என்னும் புனிதமான பள்ளத்தாக்கில் இருக்கிறீர்."
20:13 وَاَنَا اخْتَرْتُكَ فَاسْتَمِعْ لِمَا يُوْحٰى
وَاَنَا நான் اخْتَرْتُكَ உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன் فَاسْتَمِعْ ஆகவே செவிமடுப்பீராக لِمَا يُوْحٰى வஹீ அறிவிக்கப்படுபவற்றை
20:13. வ அனக்தர்துக Fபஸ்தமிஃ லிமா யூஹா
20:13. "இன்னும், நான் உம்மை (என் தூதராக)த் தேர்ந்தெடுத்தேன்; ஆதலால், வஹீயின் வாயிலாக (உமக்கு) அறிவிக்கப்படுவதற்கு நீர் செவியேற்பீராக!"
20:14 اِنَّنِىْۤ اَنَا اللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّاۤ اَنَا فَاعْبُدْنِىْ ۙ وَاَقِمِ الصَّلٰوةَ لِذِكْرِىْ
اِنَّنِىْۤ اَنَا நிச்சயமாக நான்தான் اللّٰهُ அல்லாஹ் لَاۤ அறவே இல்லை اِلٰهَ வணக்கத்திற்குரியவன் اِلَّاۤ தவிர اَنَا என்னை فَاعْبُدْنِىْ ۙ ஆகவே, என்னை வணங்குவீராக وَاَقِمِ இன்னும் நிலைநிறுத்துவீராக الصَّلٰوةَ தொழுகையை لِذِكْرِىْ என் நினைவிற்காக
20:14. இன்னனீ அனல் லாஹு லா இலாஹ இல்லா அன FபஃBபுத்னீ வ அகிமிஸ்-ஸலாத லிதிக்ரீ
20:14. "நிச்சயமாக நான்தான் அல்லாஹ்! என்னைத் தவிர வேறு தெய்வம் இல்லை; ஆகவே, என்னையே நீர் வணங்கும்; என்னை நினைவு கூர்வதற்காகத் தொழுகையை நிலைநிறுத்தும்."
20:15 اِنَّ السَّاعَةَ اٰتِيَـةٌ اَكَادُ اُخْفِيْهَا لِتُجْزٰى كُلُّ نَفْسٍۢ بِمَا تَسْعٰى
اِنَّ நிச்சயமாக السَّاعَةَ மறுமை اٰتِيَـةٌ வரக்கூடியதாகும் اَكَادُ اُخْفِيْهَا அதை நான் மறைத்தே வைத்திருப்பேன் لِتُجْزٰى கூலி கொடுக்கப்படுவதற்காக كُلُّ ஒவ்வொரு نَفْسٍۢ ஆன்மாவும் بِمَا تَسْعٰى அது செய்கின்றவற்றுக்கு
20:15. இன்னஸ் ஸா'அத ஆதியதுன் அகாது உக்Fபீஹா லிதுஜ்Zஜா குல்லு னFப்ஸின் Bபிமா தஸ்'ஆ
20:15. ஒவ்வோர் ஆத்மாவும் தான் செய்ததற்குத் தக்கபடி பிரதிபலன்கள் அளிக்கப்படும் பொருட்டே, மறுமைநாள் நிச்சயமாக வரவிருக்கிறது; ஆயினும், அதை நான் மறைத்து வைக்க நாடுகிறேன்.
20:16 فَلَا يَصُدَّنَّكَ عَنْهَا مَنْ لَّا يُؤْمِنُ بِهَا وَاتَّبَعَ هَوٰٮهُ فَتَرْدٰى
فَلَا يَصُدَّنَّكَ உம்மை திருப்பிவிட வேண்டாம் عَنْهَا அதை விட்டு مَنْ لَّا يُؤْمِنُ எவன் நம்பிக்கை கொள்ளவில்லை بِهَا அதை وَاتَّبَعَ பின்பற்றியவன் هَوٰٮهُ தனது மன இச்சையை فَتَرْدٰى நீர் அழிந்து விடுவீர்
20:16. Fபலா யஸுத்தன்னக 'அன்ஹா மல் லா யு'மினு Bபிஹா வத்தBப'அ ஹவாஹு Fபதர்தா
20:16. "ஆகவே, அதனை நம்பாது, தன் மனோ இச்சையைப் பின்பற்றுபவன் திடனாக அதைவிட்டும் உம்மைத் திருப்பிவிட வேண்டாம்; அவ்வாறாயின், நீர் அழிந்துபோவீர்."
20:17 وَمَا تِلْكَ بِيَمِيْنِكَ يٰمُوْسٰى
وَمَا என்ன? تِلْكَ அது بِيَمِيْنِكَ உமது வலக்கையில் يٰمُوْسٰى மூஸாவே!
20:17. வமா தில்க Bபி யமீ னிக யா மூஸா
20:17. "மூஸாவே! உம்முடைய வலது கையில் இருப்பது என்ன?" (என்று அல்லாஹ் கேட்டான்).
20:18 قَالَ هِىَ عَصَاىَۚ اَتَوَكَّؤُا عَلَيْهَا وَاَهُشُّ بِهَا عَلٰى غَـنَمِىْ وَلِىَ فِيْهَا مَاٰرِبُ اُخْرٰى
قَالَ அவர் கூறினார் هِىَ அது عَصَاىَۚ எனது கைத்தடி اَتَوَكَّؤُا சாய்ந்து கொள்வேன் عَلَيْهَا அதன் மீது وَاَهُشُّ இன்னும் பறிப்பேன் بِهَا அதைக் கொண்டு عَلٰى غَـنَمِىْ என் ஆடுகளுக்கு وَلِىَ இன்னும் எனக்கு فِيْهَا அதில் உள்ளன مَاٰرِبُ اُخْرٰى மற்ற பல தேவைகள்
20:18. கால ஹிய 'அஸாய அதவக்க'உ அலய்ஹா வ அஹுஷ்ஷு Bபிஹா 'அலா கனமீ வ லிய Fபீஹா ம ஆரிBபு உக்ரா
20:18. (அதற்கவர்) "இது என்னுடைய கைத்தடி; இதன் மீது நான் சாய்ந்துகொள்வேன்; இதைக் கொண்டு என் ஆடுகளுக்கு இலைகள் பறிப்பேன்; இன்னும், இதில் எனக்கு வேறு தேவைகளும் நிறைவேறுகின்றன" என்று கூறினார்.
20:19 قَالَ اَلْقِهَا يٰمُوْسٰى
قَالَ அவன் கூறினான் اَلْقِهَا அதை நீர் எறிவீராக يٰمُوْسٰى மூஸாவே!
20:19. கால அல்கிஹா யா மூஸா
20:19. அதற்கு (இறைவன்) "மூஸாவே! அதை நீர் (கீழே) எறியும்" என்றான்.
20:20 فَاَلْقٰٮهَا فَاِذَا هِىَ حَيَّةٌ تَسْعٰى
فَاَلْقٰٮهَا அதை அவர்எறிந்தார் فَاِذَا உடனே هِىَ அது ஆகிவிட்டது حَيَّةٌ ஓடுகின்றது تَسْعٰى ஒரு பாம்பாக
20:20. Fப-அல்காஹா Fப -இதா ஹிய ஹய்யதுன் தஸ்'ஆ
20:20. அவ்வாறே அவர் அதனைக் கீழே எறிந்தார்; அப்போது அது ஊர்ந்து செல்லும் ஒரு பாம்பாயிற்று.
20:21 قَالَ خُذْهَا وَلَا تَخَفْ سَنُعِيْدُهَا سِيْرَتَهَا الْاُوْلٰى
قَالَ அவன் கூறினான் خُذْهَا அதைப் பிடிப்பீராக! وَلَا تَخَفْ பயப்படாதீர்! سَنُعِيْدُهَا அதை திருப்புவோம் سِيْرَتَهَا அதன் தன்மைக்கே الْاُوْلٰى முந்திய
20:21. கால குத்ஹா வலா த கFப் ஸனு'ஈதுஹா ஸீரதஹல் ஊலா
20:21. அவன் (இறைவன்) கூறினான்: "அதைப் பிடியும்; பயப்படாதீர்; உடனே, நாம் அதை அதன் பழைய நிலைக்கே மீட்டுவோம்."
20:22 وَاضْمُمْ يَدَكَ اِلَىٰ جَنَاحِكَ تَخْرُجْ بَيْضَآءَ مِنْ غَيْرِ سُوْٓءٍ اٰيَةً اُخْرٰىۙ
وَاضْمُمْ இன்னும் சேர்ப்பீராக يَدَكَ உமது கரத்தை اِلَىٰ جَنَاحِكَ புஜத்தின் கீழ் تَخْرُجْ தோன்றும் بَيْضَآءَ வெண்மையாக مِنْ غَيْرِ سُوْٓءٍ நோயுமின்றி اٰيَةً அத்தாட்சியாக اُخْرٰىۙ மற்றொரு
20:22. வள்மும் யதக இலா ஜனாஹிக தக்ருஜ் Bபய்ளா'அ மின் கய்ரி ஸூ'இன் ஆயதன் உக்ரா
20:22. "இன்னும், உன் கையை உம் விலாப்புறமாகப் புகுத்தி (வெளியில்) எடும்; அது ஒளி மிக்கதாய் தீங்கற்ற வெண்மையாக வெளிவரும்; இது மற்றோர் அத்தாட்சியாகும்."
20:23 لِنُرِيَكَ مِنْ اٰيٰتِنَا الْـكُبْـرٰىۚ
لِنُرِيَكَ உமக்கு நாம் காண்பிப்பதற்காக مِنْ اٰيٰتِنَا நமது அத்தாட்சிகளில் الْـكُبْـرٰىۚ பெரிய
20:23. லினுரியக மின் ஆயாதினல் குBப்ரா
20:23. "(இவ்வாறு) நம்முடைய பெரிய அத்தாட்சிகளிலிருந்து (சிலவற்றை) உமக்குக் காண்பிக்கிறோம்."
20:24 اِذْهَبْ اِلٰى فِرْعَوْنَ اِنَّهٗ طَغٰى
اِذْهَبْ நீர் செல்வீராக اِلٰى فِرْعَوْنَ ஃபிர்அவ்னிடம் اِنَّهٗ நிச்சயமாக அவன் طَغٰى வரம்பு மீறிவிட்டான்
20:24. இத்ஹBப் இலா Fபிர்'அவ்ன இன்னஹூ தகா
20:24. "ஃபிர்அவ்னிடம் நீர் செல்வீராக! நிச்சயமாக அவன் வரம்பு மீறிவிட்டான்" (என்றும் அல்லாஹ் கூறினான்).
20:25 قَالَ رَبِّ اشْرَحْ لِىْ صَدْرِىْ ۙ
قَالَ அவர் கூறினார் رَبِّ என் இறைவா اشْرَحْ لِىْ எனக்கு விரிவாக்கு صَدْرِىْ ۙ என் நெஞ்சத்தை
20:25. கால ரBப்Bபிஷ் ரஹ் லீ ஸத்ரீ
20:25. (அதற்கு மூஸா) கூறினார்: "இறைவனே! எனக்காக என் நெஞ்சத்தை நீ (உறுதிப்படுத்தி) விரிவாக்கித் தருவாயாக!"
20:26 وَيَسِّرْ لِىْۤ اَمْرِىْ ۙ
وَيَسِّرْ இன்னும் இலகுவாக்கு لِىْۤ எனக்கு اَمْرِىْ ۙ என் காரியத்தை
20:26. வ யஸ்ஸிர் லீ அம்ரீ
20:26. "என் காரியத்தை எனக்கு நீ எளிதாக்கியும் வைப்பாயாக!"
20:27 وَاحْلُلْ عُقْدَةً مِّنْ لِّسَانِیْ ۙ
وَاحْلُلْ இன்னும் அவிழ்த்துவிடு عُقْدَةً கொன்னலை مِّنْ لِّسَانِیْ ۙ என் நாவிலிருந்து
20:27. வஹ்லுல் 'உக்ததன் மில்லி ஸானீ
20:27. "என் நாவிலுள்ள முடிச்சையும் அவிழ்ப்பாயாக!"
20:28 يَفْقَهُوْا قَوْلِیْ
يَفْقَهُوْا அவர்கள் புரிந்து கொள்வார்கள் قَوْلِیْ என் பேச்சை
20:28. யFப்கஹூ கவ்லீ
20:28. "என் சொல்லை அவர்கள் விளங்கிக் கொள்வதற்காக!"
20:29 وَاجْعَلْ لِّىْ وَزِيْرًا مِّنْ اَهْلِىْ ۙ
وَاجْعَلْ இன்னும் ஏற்படுத்து لِّىْ எனக்கு وَزِيْرًا ஓர் உதவியாளரை مِّنْ اَهْلِىْ ۙ என்குடும்பத்திலிருந்து
20:29. வஜ்'அல் லீ வZஜீரன் மின் அஹ்லீ
20:29. "என் குடும்பத்திலிருந்து எனக்கு (உதவி செய்ய) ஓர் உதவியாளரையும் ஏற்படுத்தித் தருவாயாக!"
20:30 هٰرُوْنَ اَخِى ۙ
هٰرُوْنَ ஹாரூனை اَخِى ۙ என் சகோதரர் فِىْۤ اَهْلِ வாசிகளிடம்
20:30. ஹாரூன அகீ
20:30. "என் சகோதரர் ஹாரூனை (அவ்வாறு ஏற்படுத்தித் தருவாயாக!)"
20:31 اشْدُدْ بِهٖۤ اَزْرِىْ ۙ
اشْدُدْ பலப்படுத்து بِهٖۤ அதன் மூலம் اَزْرِىْ ۙ எனது முதுகை
20:31. உஷ்துத் Bபிஹீ அZஜ்ரீ
20:31. 'அவரைக் கொண்டு என் முதுகை வலுப்படுத்துவாயாக!'
20:32 وَاَشْرِكْهُ فِىْۤ اَمْرِىْ ۙ
وَاَشْرِكْهُ அவரை இணைத்துவிடு فِىْۤ اَمْرِىْ ۙ எனது காரியத்தில்
20:32. வ அஷ்ரிக் ஹு Fபீ அம்ரீ
20:32. "என் காரியத்தில் அவரைக் கூட்டாக்கி வைப்பாயாக!"
20:33 كَىْ نُسَبِّحَكَ كَثِيْرًا ۙ
كَىْ نُسَبِّحَكَ நாங்கள் உன்னை துதிப்பதற்காக كَثِيْرًا ۙ அதிகம்
20:33. கய் னுஸBப்Bபிஹக கதீரா
20:33. "நாங்கள் உன்னை அதிகமதிகம் (தஸ்பீஹ் செய்து) துதிப்பதற்காகவும்."
20:34 وَّنَذْكُرَكَ كَثِيْرًا ؕ
وَّنَذْكُرَكَ இன்னும் நாங்கள் உன்னை நினைவு கூருவதற்காக كَثِيْرًا ؕ அதிகம்
20:34. வ னத்குரக கதீரா
20:34. "நாங்கள் உன்னை அதிகமதிகம் நினைவு கூர்வதற்காகவும் (இவற்றையெல்லாம் அருள்வாயாக)!"
20:35 اِنَّكَ كُنْتَ بِنَا بَصِيْرًا
اِنَّكَ நிச்சயமாக நீ كُنْتَ இருக்கின்றாய் بِنَا எங்களை بَصِيْرًا உற்று நோக்கியவனாக
20:35. இன்னக குன்த Bபினா Bபஸீரா
20:35. "நிச்சயமாக, நீ எங்களை உற்று நோக்கியவனாகவே இருக்கிறாய்" (என்றார்).
20:36 قَالَ قَدْ اُوْتِيْتَ سُؤْلَـكَ يٰمُوْسٰى
قَالَ அவன் கூறினான் قَدْ اُوْتِيْتَ திட்டமாக கொடுக்கப்பட்டீர் سُؤْلَـكَ உமது கோரிக்கையை يٰمُوْسٰى மூஸாவே!
20:36. கால கத் ஊதீத ஸு'லக யா மூஸா
20:36. "மூஸாவே! நீர் கேட்டவற்றை நிச்சயமாக நீர் கொடுக்கப்பட்டுவிட்டீர்" என்று (அல்லாஹ்) கூறினான்.
20:37 وَلَـقَدْ مَنَـنَّا عَلَيْكَ مَرَّةً اُخْرٰٓىۙ
وَلَـقَدْ திட்டமாக مَنَـنَّا அருள் புரிந்திருக்கின்றேன் عَلَيْكَ உம்மீது مَرَّةً முறை اُخْرٰٓىۙ மற்றொரு
20:37. வ லகத் மனன்னா 'அலய்க மர்ரதன் உக்ரா
20:37. மேலும், மற்றொரு முறையும் நிச்சயமாக நாம் உம்மீது பேரருள் புரிந்துள்ளோம்.
20:38 اِذْ اَوْحَيْنَاۤ اِلٰٓى اُمِّكَ مَا يُوْحٰٓى ۙ
اِذْ اَوْحَيْنَاۤ நாம் அறிவித்தபோது اِلٰٓى اُمِّكَ உமது தாய்க்கு مَا يُوْحٰٓى ۙ அறிவிக்கப்பட வேண்டியவற்றை
20:38. இத் அவ்ஹய்னா இலா உம்மிக மா யூஹா
20:38. உம் தாயாருக்கு அறிவிக்கப்பட வேண்டியதை நாம் அறிவித்த நேரத்தை (நினைவு கூர்வீராக)!
20:39 اَنِ اقْذِفِيْهِ فِى التَّابُوْتِ فَاقْذِفِيْهِ فِى الْيَمِّ فَلْيُلْقِهِ الْيَمُّ بِالسَّاحِلِ يَاْخُذْهُ عَدُوٌّ لِّىْ وَعَدُوٌّ لَّهٗ ؕ وَاَلْقَيْتُ عَلَيْكَ مَحَـبَّةً مِّنِّىْ ۚ وَلِتُصْنَعَ عَلٰى عَيْنِىْ ۘ
اَنِ اقْذِفِيْهِ அதாவது அவரை போடுவீராக فِى التَّابُوْتِ பேழையில் فَاقْذِفِيْهِ அதை போடுவீராக فِى الْيَمِّ கடலில் فَلْيُلْقِهِ அதை எறியும் الْيَمُّ கடல் بِالسَّاحِلِ கரையில் يَاْخُذْهُ அதை எடுப்பான் عَدُوٌّ எதிரி لِّىْ எனது وَعَدُوٌّ இன்னும் எதிரி لَّهٗ ؕ அவரது وَاَلْقَيْتُ இன்னும் ஏற்படுத்தினேன் عَلَيْكَ உம்மீது مَحَـبَّةً அன்பை مِّنِّىْ ۚ என் புறத்திலிருந்து وَلِتُصْنَعَ இன்னும் நீ பராமரிக்கப்படுவதற்காக عَلٰى عَيْنِىْ ۘ என் கண்பார்வையில்
20:39. 'அனிக்திFபீஹி Fபித் தாBபூதி Fபக்திFபீஹி Fபில் யம்மி Fபல் யுல் கிஹில் யம்மு Bபிஸ் ஸாஹிலி ய'குத்ஹு 'அதுவ்வுல் லீ வ 'அதுவ்வுல் லஹ்; வ அல்கய்து 'அலய்க மஹBப்Bபதன் மின்னீ வ லிதுஸ்ன'அ 'அலா 'அய்னீ
20:39. "அவரை (குழந்தையை) பேழையில் (வைத்து நைல்) நதியில் போட்டுவிடும்; பின்னர், அந்த நதி அதைக் கரையிலே சேர்த்துவிடும்; அங்கே எனக்குப் பகைவனும் அவருக்குப் பகைவனுமாகிய (ஒரு)வன் அவரை எடுத்துக்கொள்வான்" (எனப் பணித்தோம்); மேலும், (மூஸாவே) நீர் என் கண்காணிப்பில் வளர்க்கப்படுவதற்காக உம்மீது அன்பைப் பொழிந்தேன்.
20:40 اِذْ تَمْشِىْۤ اُخْتُكَ فَتَقُوْلُ هَلْ اَدُلُّـكُمْ عَلٰى مَنْ يَّكْفُلُهٗ ؕ فَرَجَعْنٰكَ اِلٰٓى اُمِّكَ كَىْ تَقَرَّ عَيْنُهَا وَلَا تَحْزَنَ ؕ وَقَتَلْتَ نَـفْسًا فَنَجَّيْنٰكَ مِنَ الْغَمِّ وَفَتَـنّٰكَ فُتُوْنًا فَلَبِثْتَ سِنِيْنَ فِىْۤ اَهْلِ مَدْيَنَ ۙ ثُمَّ جِئْتَ عَلٰى قَدَرٍ يّٰمُوْسٰى
اِذْ تَمْشِىْۤ நடந்து சென்றபோது اُخْتُكَ உமது சகோதரி فَتَقُوْلُ கூறினாள் هَلْ اَدُلُّـكُمْ நான் உங்களுக்கு அறிவிக்கவா? عَلٰى مَنْ يَّكْفُلُهٗ ؕ அவரை பொறுப்பேற்பவரை فَرَجَعْنٰكَ உம்மை திரும்பக் கொண்டு வந்தோம் اِلٰٓى اُمِّكَ உமது தாயிடமே كَىْ تَقَرَّ குளிர்வதற்காக عَيْنُهَا அவளது கண் وَلَا تَحْزَنَ ؕ இன்னும் அவள் கவலைப்படாமல் இருப்பதற்காக وَقَتَلْتَ நீர் கொன்று விட்டீர் نَـفْسًا ஓர் உயிரை فَنَجَّيْنٰكَ உம்மை நாம் பாதுகாத்தோம் مِنَ الْغَمِّ அந்த துக்கத்திலிருந்து وَفَتَـنّٰكَ இன்னும் உம்மை நாம் சோதித்தோம் فُتُوْنًا பல சோதனைகளில் فَلَبِثْتَ ஆக, நீர் தங்கினீர் سِنِيْنَ பல ஆண்டுகள் فِىْۤ اَهْلِ வாசிகளிடம் مَدْيَنَ ۙ மத்யன் ثُمَّ பிறகு جِئْتَ நீர் அடைந்தீர் عَلٰى قَدَرٍ ஒரு குறிப்பிட்ட நேரத்தை يّٰمُوْسٰى மூஸாவே!
20:40. இத் தம்ஷீ உக்துக Fபதகூலு ஹல் அதுல்லுகும் 'அலா மய் யக்Fபுலுஹூ Fபரஜஃனாக இலா உம்மிக கய் தகர்ர 'அய்னுஹா வலா தஹ்Zஜன்; வ கதல்த னFப்ஸன் Fபனஜ்ஜய்னாக மினல் கம்மி வ Fபதன்னாக Fபுதூனா; FபலBபித்த ஸினீன Fபீ அஹ்லி மத்யன தும்ம ஜி'த 'அலா கதரி(ன்)ய் யா மூஸா
20:40. (பேழை கண்டெடுக்கப்பட்ட பின்) உம் சகோதரி நடந்துவந்து "இவரைப் பொறுப்பேற்றுக் கொள்ளக்கூடிய ஒருவரை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா?" என்று கேட்டாள். ஆகவே, நாம் உம் தாயாரிடம் அவருடைய கண் குளிர்ச்சி அடையும் பொருட்டும், அவர் துக்கமடையாமல் இருக்கும் பொருட்டும் உம்மை (அவர்பால்) மீட்டினோம். பின்னர், நீர் ஒரு மனிதனைக் கொன்றுவிட்டீர்; அப்பொழுதும் நாம் உம்மை அக்கவலையிலிருந்து விடுவித்தோம். மேலும், உம்மைப் பல வகைகளில் சோதித்தோம். அப்பால், நீர் பல ஆண்டுகளாக மத்யன் வாசிகளிடையே தங்கியிருந்தீர். மூஸாவே! பிறகு (நாம் உம்மை முன்பு தூதராக்க) நிர்ணயித்தபடி நீர் வந்தீர்.
20:41 وَاصْطَنَعْتُكَ لِنَفْسِىۚ
وَاصْطَنَعْتُكَ இன்னும் நான் உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன் لِنَفْسِىۚ எனக்காகவே
20:41. வஸ்தனஃ துக லினFப்ஸீ
20:41. இன்னும், எனக்காகவே நான் உம்மைத் (தூதராகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்.
20:42 اِذْهَبْ اَنْتَ وَاَخُوْكَ بِاٰيٰتِىْ وَلَا تَنِيَا فِىْ ذِكْرِىۚ
اِذْهَبْ செல்வீர்களாக! اَنْتَ நீரும் وَاَخُوْكَ உனது சகோதரரும் بِاٰيٰتِىْ என் அத்தாட்சிகளைக் கொண்டு وَلَا تَنِيَا இன்னும் நீங்கள் இருவரும் சோர்வடையாதீர்கள் فِىْ ذِكْرِىۚ என்னை நினைவு கூர்வதில்
20:42. இத்ஹBப் அன்த வ அகூக Bபி ஆயாதீ வலா தனியா Fபீ திக்ரீ
20:42. ஆகவே, நீரும் உம் சகோதரரும் என்னுடைய அத்தாட்சிகளுடன் செல்வீர்களாக! மேலும், என்னைத் தியானிப்பதில் நீங்கள் இருவரும் சளைக்காதீர்கள்.
20:43 اِذْهَبَاۤ اِلٰى فِرْعَوْنَ اِنَّهٗ طَغٰى ۖۚ
اِذْهَبَاۤ நீங்கள் இருவரும் செல்வீர்களாக اِلٰى فِرْعَوْنَ ஃபிர்அவ்னிடம் اِنَّهٗ நிச்சயமாக அவன் طَغٰى ۖۚ வரம்பு மீறிவிட்டான்
20:43. இத்ஹBபா இலா Fபிர்'அவ்ன இன்னஹூ தகா
20:43. நீங்கள் இருவரும் ஃபிர்அவ்னிடம் செல்லுங்கள்; நிச்சயமாக அவன் வரம்பு மீறிவிட்டான்.
20:44 فَقُوْلَا لَهٗ قَوْلًا لَّيِّنًا لَّعَلَّهٗ يَتَذَكَّرُ اَوْ يَخْشٰى
فَقُوْلَا நீங்கள் இருவரும் கூறுவீர்களாக لَهٗ அவனுக்கு قَوْلًا சொல்லை لَّيِّنًا மென்மையான لَّعَلَّهٗ يَتَذَكَّرُ அவன் நல்லறிவு பெறுகிறானா اَوْ அல்லது يَخْشٰى பயப்படுகிறானா
20:44. Fபகூலா லஹூ கவ்லல் லய்யினல் ல அல்லஹூ யததக்க்கரு 'அவ் யக்-ஷா
20:44. நீங்கள் இருவரும் அவனிடம் (சாந்தமாக) மென்மையான சொல்லால் சொல்லுங்கள்; அதனால், அவன் நல்லுபதேசம் பெறலாம் அல்லது அச்சம் கொள்ளலாம்.
20:45 قَالَا رَبَّنَاۤ اِنَّـنَا نَخَافُ اَنْ يَّفْرُطَ عَلَيْنَاۤ اَوْ اَنْ يَّطْغٰى
قَالَا இருவரும் கூறினர் رَبَّنَاۤ எங்கள் இறைவன் اِنَّـنَا நிச்சயமாக நங்கள் نَخَافُ பயப்படுகிறோம் اَنْ يَّفْرُطَ அவசரப்படுவதை عَلَيْنَاۤ எங்கள் மீது اَوْ அல்லது اَنْ يَّطْغٰى வரம்பு மீறுவதை
20:45. காலா ரBப்Bபனா இன்னனா னகாFபு அய் யFப்ருத 'அலய்னா அவ் அய் யத்கா
20:45. "எங்கள் இறைவனே! அவன் எங்களுக்குத் தீங்கிழைக்கத் தீவிரப்படவோ அல்லது வரம்பு மீறவோ செய்யலாம் என நாங்கள் பயப்படுகிறோம்" என்று அவ்விருவரும் (மூஸாவும், ஹாரூனும்) கூறினார்கள்.
20:46 قَالَ لَا تَخَافَآ اِنَّنِىْ مَعَكُمَاۤ اَسْمَعُ وَاَرٰى
قَالَ கூறினான் لَا تَخَافَآ இருவரும் பயப்படாதீர்கள் اِنَّنِىْ நிச்சயமாக நான் مَعَكُمَاۤ உங்கள் இருவருடன் اَسْمَعُ (நான்) கேட்பவனாக وَاَرٰى இன்னும் பார்ப்பவனாக (இருக்கிறேன்)
20:46. கால லா தகாFபா இன்னனீ ம'அகுமா அஸ்ம'உ வ அரா
20:46. (அதற்கு அல்லாஹ்) "நீங்கள் இருவரும் அஞ்ச வேண்டாம்; நிச்சயமாக நான் (யாவற்றையும்) செவியேற்பவனாகவும் பார்ப்பவனாகவும் உங்கள் இருவருடனும் இருக்கின்றேன்" என்று கூறினான்.
20:47 فَاْتِيٰهُ فَقُوْلَاۤ اِنَّا رَسُوْلَا رَبِّكَ فَاَرْسِلْ مَعَنَا بَنِىْۤ اِسْرَآءِيْلَ ۙ وَلَا تُعَذِّبْهُمْ ؕ قَدْ جِئْنٰكَ بِاٰيَةٍ مِّنْ رَّبِّكَ ؕ وَالسَّلٰمُ عَلٰى مَنِ اتَّبَعَ الْهُدٰى
فَاْتِيٰهُ ஆகவே இருவரும் வாருங்கள் فَقُوْلَاۤ இன்னும் கூறுங்கள் اِنَّا நிச்சயமாக நாங்கள் رَسُوْلَا தூதர்கள் رَبِّكَ உனது இறைவனின் فَاَرْسِلْ ஆகவே அனுப்பி விடு مَعَنَا எங்களுடன் بَنِىْۤ اِسْرَآءِيْلَ ۙ இஸ்ரவேலர்களை وَلَا تُعَذِّبْهُمْ ؕ இன்னும் அவர்களை வேதனை செய்யாதே قَدْ جِئْنٰكَ திட்டமாக உன்னிடம் நாங்கள் கொண்டு வந்துள்ளோம் بِاٰيَةٍ ஓர் அத்தாட்சியை مِّنْ رَّبِّكَ ؕ உமது இறைவனிடமிருந்து وَالسَّلٰمُ ஈடேற்றம் உண்டாகுக عَلٰى مَنِ اتَّبَعَ பின்பற்றியவருக்கு الْهُدٰى நேர்வழியை
20:47. Fபாதியாஹு Fபகூலா இன்னா ரஸூலா ரBப்Bபிக Fப அர்ஸில் ம'அனா Bபனீ இஸ்ரா'ஈல வலா து'அத்திBப்ஹும் கத் ஜி'னாக Bபி ஆயதிம் மிர் ரBப்Bபிக வஸ்ஸ லாமு 'அலா மனித் தBப'அல் ஹுதா
20:47. ஆகவே, நீங்கள் இருவரும் அவனிடம் சென்று "நாங்கள் இருவரும் உன்னுடைய இறைவனின் தூதர்கள்: இஸ்ராயீலின் சந்ததிகளை எங்களுடன் அனுப்பிவிடு! மேலும், அவர்களை வேதனைப்படுத்தாதே! திட்டமாக நாங்கள் உன் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியை உனக்குக் கொண்டு வந்திருக்கிறோம்; இன்னும், எவர் நேர்வழியைப் பின்பற்றுகிறாரோ அவர் மீது (சாந்தி) 'ஸலாம் உண்டாவதாக' என்று சொல்லுங்கள்" (என்று அல்லாஹ் கட்டளையிட்டான்).
20:48 اِنَّا قَدْ اُوْحِىَ اِلَـيْنَاۤ اَنَّ الْعَذَابَ عَلٰى مَنْ كَذَّبَ وَتَوَلّٰى
اِنَّا நிச்சயமாக நாங்கள் قَدْ திட்டமாக اُوْحِىَ வஹீ அறிவிக்கப்பட்டுள்ளது اِلَـيْنَاۤ எங்களுக்கு اَنَّ நிச்சயமாக الْعَذَابَ தண்டனை عَلٰى மீது مَنْ كَذَّبَ பொய்ப்பித்தவர் وَتَوَلّٰى புறக்கணித்து திரும்பினார்
20:48. இன்னா கத் ஊஹிய இலய்னா அன்ன்னல் 'அதாBப 'அலா மன் கத் தBப வ தவல்லா
20:48. "எவன் (நாங்கள் கொண்டு வந்திருப்பதை) பொய்ப்பித்து, புறக்கணிக்கிறானோ அவன்மீது நிச்சயமாக வேதனை ஏற்படும் என எங்களுக்கு உறுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது" (என்று நீங்களிருவரும் அவனுக்குக் கூறுங்கள்).
20:49 قَالَ فَمَنْ رَّبُّكُمَا يٰمُوْسٰى
قَالَ அவன் கூறினான் فَمَنْ யார் رَّبُّكُمَا உங்கள் இருவரின் இறைவன் يٰمُوْسٰى மூஸாவே!
20:49. கால Fபமர் ரBப்Bபு குமா யா மூஸா
20:49. (இதற்கு ஃபிர்அவ்ன்) "மூஸாவே! உங்களிருவருடைய இறைவன் யார்?" என்று கேட்டான்.
20:50 قَالَ رَبُّنَا الَّذِىْۤ اَعْطٰـى كُلَّ شَىْءٍ خَلْقَهٗ ثُمَّ هَدٰى
قَالَ அவர் கூறினார் رَبُّنَا எங்கள் இறைவன் الَّذِىْۤ எவன் اَعْطٰـى கொடுத்தான் كُلَّ ஒவ்வொரு شَىْءٍ பொருளுக்கும் خَلْقَهٗ அதற்குரியபடைப்பை ثُمَّ பிறகு هَدٰى வழிகாட்டினான்
20:50. கால ரBப்Bபுனல் லதீ அஃதா குல்ல ஷய்'இன் கல்கஹூ தும்ம ஹதா
20:50. "ஒவ்வொரு பொருளுக்கும் அதற்கான அமைப்பை வழங்கி, பின்னர் வழிகாட்டி இருக்கிறானே அவன்தான் எங்கள் இறைவன்" என்று கூறினார்.
20:51 قَالَ فَمَا بَالُ الْقُرُوْنِ الْاُوْلٰى
قَالَ அவன் கூறினான் فَمَا بَالُ நிலை என்னவாகும் الْقُرُوْنِ தலைமுறையினர்கள் الْاُوْلٰى முந்திய
20:51. கால Fபமா Bபாலுல் குரூனில் ஊலா
20:51. "அப்படியென்றால், முன் சென்ற தலைமுறைகளின் நிலைமை என்ன?" என்று கேட்டான்.
20:52 قَالَ عِلْمُهَا عِنْدَ رَبِّىْ فِىْ كِتٰبٍۚ لَا يَضِلُّ رَبِّىْ وَلَا يَنْسَى
قَالَ அவர் கூறினார் عِلْمُهَا அவர்களைப் பற்றிய ஞானம் عِنْدَ رَبِّىْ என் இறைவனிடம் فِىْ كِتٰبٍۚ பதிவுப் புத்தகத்தில் لَا يَضِلُّ தவறு செய்துவிட மாட்டான் رَبِّىْ என் இறைவன் وَلَا يَنْسَى இன்னும் மறக்கமாட்டான்
20:52. கால 'இல்முஹா 'இன்த ரBபீ Fபீ கிதாBப், லா யளில்லு ரBப்Bபீ வலா யன்ஸா
20:52. "இதுபற்றிய அறிவு என்னுடைய இறைவனிடம் (பதிவுப்) புத்தகத்தில் இருக்கிறது; என் இறைவன் தவறுவதும் இல்லை; மறப்பதும் இல்லை" என்று (மூஸா பதில்) சொன்னார்.
20:53 الَّذِىْ جَعَلَ لَـكُمُ الْاَرْضَ مَهْدًا وَّسَلَكَ لَـكُمْ فِيْهَا سُبُلًا وَّ اَنْزَلَ مِنَ السَّمَآءِ مَآءً ؕ فَاَخْرَجْنَا بِهٖۤ اَزْوَاجًا مِّنْ نَّبَاتٍ شَتّٰى
الَّذِىْ எவன் جَعَلَ ஆக்கினான் لَـكُمُ உங்களுக்கு الْاَرْضَ பூமியை مَهْدًا விரிப்பாக وَّسَلَكَ இன்னும் ஏற்படுத்தினான் لَـكُمْ உங்களுக்கு فِيْهَا அதில் سُبُلًا பாதைகளை وَّ اَنْزَلَ இன்னும் இறக்கினான் مِنَ السَّمَآءِ வானத்திலிருந்து مَآءً ؕ மழையை فَاَخْرَجْنَا உற்பத்தி செய்கிறோம் بِهٖۤ அதன்மூலம் اَزْوَاجًا பல வகைகளை مِّنْ نَّبَاتٍ தாவரங்களிலிருந்து شَتّٰى பலதரப்பட்ட
20:53. அல்லதீ ஜ'அல லகுமுல் அர்ள மஹ்த(ன்)வ் வ ஸலக லகும் Fபீஹா ஸுBபுல(ன்)வ் வ அன்Zஜல மினஸ் ஸமா'இ மா'அன் Fப அக்ரஜ்னா Bபிஹீ அZஜ்வாஜம் மின் னBபாதின் ஷத்தா
20:53. "(அவனே) உங்களுக்காக இப்பூமியை ஒரு விரிப்பாக அமைத்தான்; இன்னும், அதில் உங்களுக்குப் பாதைகளை இலேசாக்கினான்; மேலும், வானத்திலிருந்து நீரையும் இறக்கினான்:" இதை (மழைநீரை)க் கொண்டு நாம் பலவிதமான தாவரங்களை ஜோடி ஜோடியாக வெளிப்படுத்துகிறோம்.
20:54 كُلُوْا وَارْعَوْا اَنْعَامَكُمْ ؕ اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيٰتٍ لِّاُولِى الـنُّهٰى
كُلُوْا சாப்பிடுங்கள் وَارْعَوْا இன்னும் மேய்த்துக் கொள்ளுங்கள் اَنْعَامَكُمْ ؕ உங்கள் கால் நடைகளை اِنَّ நிச்சயம் فِىْ ذٰ لِكَ இதில் لَاٰيٰتٍ பல அத்தாட்சிகள் لِّاُولِى الـنُّهٰى அறிவுடையவர்களுக்கு
20:54. குலூ வர்'அவ் அன்'ஆமகும்; இன்ன Fபீ தாலிக ல ஆயாதில் லி உலின் னுஹா
20:54. (அவற்றிலிருந்து) நீங்களும் புசித்து, உங்கள் கால்நடைகளையும் மேய விடுங்கள்; நிச்சயமாக இதில் அறிவுடையோருக்குத் (தக்க) அத்தாட்சிகள் இருக்கின்றன.
20:55 مِنْهَا خَلَقْنٰكُمْ وَفِيْهَا نُعِيْدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً اُخْرٰى
مِنْهَا அதிலிருந்துதான் خَلَقْنٰكُمْ உங்களைப் படைத்தோம் وَفِيْهَا இன்னும் அதில்தான் نُعِيْدُ மீட்டுக் கொண்டுவருவோம் كُمْ உங்களை وَمِنْهَا இன்னும் அதிலிருந்துதான் نُخْرِجُكُمْ வெளியேற்றுவோம் تَارَةً முறை اُخْرٰى மற்றொரு
20:55. மின்ஹா கலக்னாகும் வ Fபீஹா னு'ஈதுகும் வ மின்ஹா னுக்ரிஜுகும் தாரதன் உக்ரா
20:55. (பூமியாகிய) அதிலிருந்தே நாம் உங்களைப் படைத்தோம்; அதனுள்ளேயே நாம் உங்களை மீட்டுவோம்; இன்னும், அதிலிருந்தே நாம் உங்களை இரண்டாம் முறையாகவும் வெளிப்படுத்துவோம்.
20:56 وَلَـقَدْ اَرَيْنٰهُ اٰيٰتِنَا كُلَّهَا فَكَذَّبَ وَاَبٰى
وَلَـقَدْ اَرَيْنٰهُ திட்டமாக அவனுக்கு நாம் காண்பித்தோம் اٰيٰتِنَا நமது அத்தாட்சிகள் كُلَّهَا அனைத்தும் فَكَذَّبَ எனினும் அவன் பொய்ப்பித்தான் وَاَبٰى இன்னும் ஏற்க மறுத்தான்
20:56. வ லகத் அரய்னாஹு ஆயாதினா குல்லஹா Fபகத் தBப வ அBபா
20:56. நாம் நம்முடைய அத்தாட்சிகளை எல்லாம் அவனுக்குக் காண்பித்தோம்; ஆனால், அவன் (அவற்றையெல்லாம்) பொய்யெனக் கூறி (நம்பிக்கை கொள்ள) மறுத்துவிட்டான்.
20:57 قَالَ اَجِئْتَنَا لِتُخْرِجَنَا مِنْ اَرْضِنَا بِسِحْرِكَ يٰمُوْسٰى
قَالَ அவன் கூறினான் اَجِئْتَنَا எங்களிடம் வந்தீரா? لِتُخْرِجَنَا எங்களை நீர் வெளியேற்றுவதற்காக مِنْ اَرْضِنَا எங்கள் பூமியிலிருந்து بِسِحْرِكَ உமது சூனியத்தால் يٰمُوْسٰى மூஸாவே!
20:57. கால அஜி'தனா லிதுக்ரி ஜனா மின் அர்ளினா Bபிஸிஹ்ரிக யா மூஸா
20:57. "மூஸாவே! நீர் உம் சூனியத்தைக் கொண்டு எங்களை எங்கள் நாட்டைவிட்டு வெளியேற்றுவதற்காகவா நம்மிடம் வந்தீர்?" என்று கூறினான்.
20:58 فَلَنَاْتِيَنَّكَ بِسِحْرٍ مِّثْلِهٖ فَاجْعَلْ بَيْنَنَا وَبَيْنَكَ مَوْعِدًا لَّا نُخْلِفُهٗ نَحْنُ وَلَاۤ اَنْتَ مَكَانًـا سُوًى
فَلَنَاْتِيَنَّكَ நிச்சயமாக உம்மிடம் கொண்டு வருவோம் بِسِحْرٍ ஒரு சூனியத்தை مِّثْلِهٖ அதுபோன்ற فَاجْعَلْ ஆகவே, ஏற்படுத்து بَيْنَنَا எங்களுக்கு மத்தியிலும் وَبَيْنَكَ உங்களுக்கு மத்தியிலும் مَوْعِدًا குறிப்பிட்ட நேரத்தை لَّا نُخْلِفُهٗ அதற்கு மாறுசெய்ய மாட்டோம் نَحْنُ நாமும் وَلَاۤ اَنْتَ நீயும் (அதற்கு மாறுசெய்யக் கூடாது) مَكَانًـا ஓர் இடத்தில் سُوًى சமமான
20:58. Fபலனாதியன்னக Bபிஸிஹ்ரிம் மித்லிஹீ Fபஜ்'அல் Bபய்னனா வ Bபய்னக மவ்'இதல் லா னுக்லிFபுஹூ னஹ்னு வ லா அன்த மகானன் ஸுவா
20:58. "அவ்வாறாயின், இதைப் போன்ற சூனியத்தை நாங்களும் உமக்குத் திடனாகக் கொண்டு வருவோம்; ஆகவே, நாங்களோ அல்லது நீரோ மாற்றம் செய்ய முடியாதபடி நமக்கும் உமக்குமிடையே ஒரு தவணையை (எல்லோரும் வந்து காணக்கூடிய) ஒரு சரியான தளத்தில் ஏற்படுத்தும்" (என்றான்).
20:59 قَالَ مَوْعِدُكُمْ يَوْمُ الزِّيْنَةِ وَاَنْ يُّحْشَرَ النَّاسُ ضُحًى
قَالَ அவர் கூறினார் مَوْعِدُ வாக்களிக்கப் பட்ட நேரம் كُمْ உங்களுக்கு يَوْمُ الزِّيْنَةِ யவ்முஸ் ஸீனா وَاَنْ يُّحْشَرَ இன்னும் ஒன்றுதிரட்டப்படுவது النَّاسُ மக்கள் ضُحًى முற்பகலில்
20:59. கால மவ்'இதுகும் யவ்முZஜ் Zஜீனதி வ அய் யுஹ்ஷரன் னாஸு ளுஹா
20:59. "பண்டிகை நாளே உங்களுடைய தவணையாகும்; இன்னும், மனிதர்கள் யாவரும் முற்பகலிலேயே ஒன்று திரட்டப்பட வேண்டும்" என்று அவர் சொன்னார்.
20:60 فَتَوَلّٰى فِرْعَوْنُ فَجَمَعَ كَيْدَهٗ ثُمَّ اَتٰى
فَتَوَلّٰى திரும்பிச் சென்றான் فِرْعَوْنُ ஃபிர்அவ்ன் فَجَمَعَ ஒன்றிணைத்தான் كَيْدَهٗ தனது சூழ்ச்சியை ثُمَّ பிறகு اَتٰى வந்தான்
20:60. Fபதவல்லா Fபிர்'அவ்னு Fபஜ்ஜம'அ கய்தஹூ தும்ம அதா
20:60. அவ்வாறே ஃபிர்அவன் திரும்பிச் சென்று (சூனியத்திற்கான) தனது (சகல) சூழ்ச்சியையும் ஒன்று திரட்டிக் கொண்டு பின்னர் வந்தான்.
20:61 قَالَ لَهُمْ مُّوْسٰى وَيْلَكُمْ لَا تَفْتَرُوْا عَلَى اللّٰهِ كَذِبًا فَيُسْحِتَكُمْ بِعَذَابٍۚ وَقَدْ خَابَ مَنِ افْتَرٰى
قَالَ கூறினார் لَهُمْ அவர்களுக்கு مُّوْسٰى மூஸா وَيْلَكُمْ உங்களுக்கு கேடுதான் لَا تَفْتَرُوْا கற்பனை செய்யாதீர்கள் عَلَى اللّٰهِ அல்லாஹ்வின் மீது كَذِبًا பொய்யை فَيُسْحِتَكُمْ உங்களை அழித்து விடுவான் بِعَذَابٍۚ வேதனையைக் கொண்டு وَقَدْ திட்டமாக خَابَ நஷ்டமடைந்து விட்டான் مَنِ எவன் افْتَرٰى கற்பனை செய்தான்
20:61. கால லஹும் மூஸா வய்லகும் லா தFப்தரூ 'அலல் லாஹி கதிBபன் Fப யுஸ் ஹிதகும் Bபி 'அதாBப், வ கத் காBப மனிFப் தரா
20:61. (அப்பொழுது) மூஸா சூனியக்காரர்களிடம் "உங்களுக்குக் கேடுதான்; அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டாதீர்கள்; (அவ்வாறு செய்தால்) அவன் வேதனையினால் உங்களை அழித்துவிடுவான்; எவன் பொய்யை இட்டுக் கட்டுகிறானோ, திட்டமாக அவன் (நற்பேறு கெட்டு) அழிந்துவிட்டான்" என்று கூறினார்.
20:62 فَتَنَازَعُوْۤا اَمْرَهُمْ بَيْنَهُمْ وَاَسَرُّوا النَّجْوٰى
فَتَنَازَعُوْۤا அவர்கள் தர்க்கித்துக் கொண்டனர் اَمْرَ காரியத்தில் هُمْ தங்கள் بَيْنَهُمْ தங்களுக்கு மத்தியில் وَاَسَرُّوا இன்னும் அவர்கள் இரகசியமாக ஆக்கிக் கொண்டனர் النَّجْوٰى அந்த பேச்சை
20:62. FபதனாZஜ'ஊ அம்ரஹும் Bபய்னஹும் வ அஸர்ருன் னஜ்வா
20:62. அவர்கள் தமக்குள்ளே தங்கள் காரியத்தைக் குறித்து (த் தங்களிடையே) விவாதித்து (அவ்விவாதத்தை) இரகசிய ஆலோசனையாகவும் வைத்துக் கொண்டனர்.
20:63 قَالُوْۤا اِنْ هٰذٰٮنِ لَسٰحِرٰنِ يُرِيْدٰنِ اَنْ يُّخْرِجٰكُمْ مِّنْ اَرْضِكُمْ بِسِحْرِهِمَا وَيَذْهَبَا بِطَرِيْقَتِكُمُ الْمُثْلٰى
قَالُوْۤا அவர்கள் கூறினார்கள் اِنْ هٰذٰٮنِ நிச்சயமாக இந்த இருவரும் لَسٰحِرٰنِ சூனியக்காரர்கள் يُرِيْدٰنِ அவ்விருவரும் நாடுகின்றனர் اَنْ يُّخْرِجٰكُمْ உங்களை வெளியேற்றுவதற்கு(ம்) مِّنْ اَرْضِكُمْ உங்கள் பூமியிலிருந்து بِسِحْرِهِمَا தங்கள் சூனியத்தைக் கொண்டு وَيَذْهَبَا இன்னும் அவ்விருவரும் மிகைத்து விடுவதற்கு بِطَرِيْقَتِكُمُ உங்கள்தலைவர்களை الْمُثْلٰى சிறந்த
20:63. காலூ இன் ஹாதானி லஸாஹிரானி யுரீதானி அய் யுக்ரிஜாகும் மின் அர்ளிகும் Bபிஸிஹ்ரிஹிமா வ யத்ஹBபா Bபிதரீகதிகுமுல் முத்லா
20:63. (மக்களை நோக்கி,) "நிச்சயமாக இவ்விருவரும் சூனியக்காரர்களே! தம் இருவருடைய சூனியத்தைக் கொண்டு உங்களை உங்களுடைய நாட்டை விட்டு வெளியேற்றவும், சிறப்பான உங்களுடைய (மார்க்க) பாதையைப் போக்கி விடவுமே இவ்விருவரும் விரும்புகிறார்கள்" என்று அவர்கள் கூறினார்கள்.
20:64 فَاَجْمِعُوْا كَيْدَكُمْ ثُمَّ ائْتُوْا صَفًّا ۚ وَقَدْ اَفْلَحَ الْيَوْمَ مَنِ اسْتَعْلٰى
فَاَجْمِعُوْا ஆகவே உறுதிப்படுத்துங்கள் كَيْدَ சூழ்ச்சிகளை كُمْ உங்கள் ثُمَّ பின்பு ائْتُوْا வாருங்கள் صَفًّا ۚ ஓர் அணியாக وَقَدْ திட்டமாக اَفْلَحَ வெற்றி அடைந்து விட்டார் الْيَوْمَ இன்றைய தினம் مَنِ اسْتَعْلٰى மிகைத்தவர்
20:64. Fப அஜ்மி'ஊ கய்தகும் தும்ம்ம'தூ ஸFப்Fபா; வ கத் அFப்லஹல் யவ்ம மனிஸ் தஃலா
20:64. "ஆகவே, உங்கள் சூழ்ச்சியை ஒரு சேரத் தீர்மானித்துக் கொண்டு, பின்னர் அணிஅணியாக வாருங்கள்: இன்றைய தினம் மேலோங்குகிறவர், நிச்சயமாக வெற்றியடைவார்" (என்று கூறினர்).
20:65 قَالُوْا يٰمُوْسٰٓى اِمَّاۤ اَنْ تُلْقِىَ وَاِمَّاۤ اَنْ نَّكُوْنَ اَوَّلَ مَنْ اَلْقٰى
قَالُوْا அவர்கள் கூறினர் يٰمُوْسٰٓى மூஸாவே! اِمَّاۤ اَنْ تُلْقِىَ ஒன்று நீர் எறிவீராக وَاِمَّاۤ اَنْ نَّكُوْنَ அவர்கள் நாங்கள் இருப்போம் اَوَّلَ முதலாவதாக مَنْ اَلْقٰى எறிபவர்களில்
20:65. காலூ யா மூஸா இம்மா அன் துல்கிய வ இம்மா அன் னகூன அவ்வல மன் அல்கா
20:65. "மூஸாவே! நீர் எறிகின்றீரா? எறிகிறவர்களில் நாங்கள் முதலாவதாக இருக்கட்டுமா?" என்று (சூனியக்காரர்கள்) கேட்டனர்.
20:66 قَالَ بَلْ اَلْقُوْاۚ فَاِذَا حِبَالُهُمْ وَعِصِيُّهُمْ يُخَيَّلُ اِلَيْهِ مِنْ سِحْرِهِمْ اَنَّهَا تَسْعٰى
قَالَ அவர் கூறினார் بَلْ மாறாக اَلْقُوْاۚ நீங்கள் எறியுங்கள் فَاِذَا ஆக, அப்போது حِبَالُهُمْ அவர்களுடைய கயிர்களும் وَعِصِيُّهُمْ அவர்களுடைய தடிகளும் يُخَيَّلُ தோற்றமளிக்கப்பட்டது اِلَيْهِ அவருக்கு مِنْ سِحْرِهِمْ அவர்களுடைய சூனியத்தால் اَنَّهَا அவை تَسْعٰى ஓடுவதாக
20:66. கால Bபல் அல்கூ Fப இதா ஹிBபாலுஹும் வ 'இஸிய்யுஹும் யுகய்யலு இலய்ஹி மின் ஸிஹ்ரிஹிம் அன்னஹா தஸ்'ஆ
20:66. அதற்கவர்: "அவ்வாறன்று! நீங்களே (முதலில்) எறியுங்கள்" என்று கூறினார்; (அவர்கள் எறியவே) அவர்களுடைய கயிறுகளும் அவர்களுடைய தடிகளும் அவர்களின் சூனியத்தால் (பாம்புகளாகி) நிச்சயமாக நெளிந்தோடுவது போல் அவருக்குத் தோன்றியது.
20:67 فَاَوْجَسَ فِىْ نَفْسِهٖ خِيْفَةً مُّوْسٰى
فَاَوْجَسَ அவர் உணர்ந்தார் فِىْ نَفْسِهٖ தனது உள்ளத்தில் خِيْفَةً பயத்தை مُّوْسٰى மூஸா
20:67. Fப அவ்ஜஸ Fபீ னFப்ஸிஹீ கீFபதம் மூஸா
20:67. அப்போது, மூஸா தம் மனதில் பயத்தை உணர்ந்தார்.
20:68 قُلْنَا لَا تَخَفْ اِنَّكَ اَنْتَ الْاَعْلٰى
قُلْنَا நாம் கூறினோம் لَا تَخَفْ பயப்படாதீர் اِنَّكَ اَنْتَ நிச்சயமாக நீதான் الْاَعْلٰى மிகைத்தவர்
20:68. குல்னா லா தகFப் இன்னக அன்தல் அஃலா
20:68. "(மூஸாவே!) நீர் பயப்படாதீர்! நிச்சயமாக நீர்தாம் மேலோங்கியவர்" என்று நாம் சொன்னோம்.
20:69 وَاَ لْقِ مَا فِىْ يَمِيْنِكَ تَلْقَفْ مَا صَنَعُوْا ؕاِنَّمَا صَنَعُوْا كَيْدُ سٰحِرٍ ؕ وَلَا يُفْلِحُ السّٰحِرُ حَيْثُ اَتٰى
وَاَ لْقِ இன்னும் எறிவீராக مَا فِىْ يَمِيْنِكَ உமது கையில் உள்ளதை تَلْقَفْ விழுங்கி விடும் مَا صَنَعُوْا அவர்கள் செய்ததை ؕاِنَّمَا صَنَعُوْا அவர்கள் செய்ததெல்லாம் كَيْدُ சூழ்ச்சிதான் سٰحِرٍ ؕ ஒரு சூனியக்காரனின் وَلَا يُفْلِحُ வெற்றிபெற மாட்டான் السّٰحِرُ சூனியக்காரன் حَيْثُ اَتٰى எங்கிருந்து வந்தாலும்
20:69. வ அல்கி மா Fபீ யமீ னிக தல்கFப் மா ஸன'ஊ; இன்னமா ஸன'ஊ கய்து ஸாஹிர்; வலா யுFப்லிஹுஸ் ஸாஹிரு ஹய்து அதா
20:69. "இன்னும், உம் வலது கையில் இருப்பதை நீர் (கீழே) எறியும்; அவர்கள் செய்த (சூனியங்கள் யா)வற்றை(யும்) அது விழுங்கிவிடும்; அவர்கள் செய்தது சூனியக்காரனின் சூழ்ச்சியே ஆகும்; ஆகவே, சூனியக்காரன் எங்கு வந்தாலும் வெற்றி பெற மாட்டான்" (என்றும் கூறினோம்).
20:70 فَاُلْقِىَ السَّحَرَةُ سُجَّدًا قَالُوْۤا اٰمَنَّا بِرَبِّ هٰرُوْنَ وَمُوْسٰى
فَاُلْقِىَ ஆக, விழுந்தனர் السَّحَرَةُ சூனியக்காரர்கள் سُجَّدًا சிரம்பணிந்தவர்களாக قَالُوْۤا கூறினார்கள் اٰمَنَّا நம்பிக்கை கொண்டோம் بِرَبِّ இறைவனைக்கொண்டு هٰرُوْنَ ஹாரூன் وَمُوْسٰى இன்னும் மூஸாவுடைய
20:70. Fப உல்கியஸ் ஸஹரது ஸுஜ்ஜதன் காலூ ஆமன்னா Bபி ரBப்Bபி ஹாரூன வ மூஸா
20:70. (மூஸா வெற்றி பெற்றதும்) சூனியக்காரர்கள் ஸுஜூது செய்தவர்களாக வீழ்த்தப்பட்டு "ஹாரூனுடைய, மூஸாவுடைய இறைவன் மீதே நாங்கள் நம்பிக்கை கொள்கிறோம்" என்று கூறினார்கள்.
20:71 قَالَ اٰمَنْتُمْ لَهٗ قَبْلَ اَنْ اٰذَنَ لَـكُمْؕ اِنَّهٗ لَـكَبِيْرُكُمُ الَّذِىْ عَلَّمَكُمُ السِّحْرَۚ فَلَاُقَطِّعَنَّ اَيْدِيَكُمْ وَاَرْجُلَكُمْ مِّنْ خِلَافٍ وَّلَاُصَلِّبَـنَّكُمْ فِىْ جُذُوْعِ النَّخْلِ وَلَـتَعْلَمُنَّ اَيُّنَاۤ اَشَدُّ عَذَابًا وَّاَبْقٰى
قَالَ கூறினான் اٰمَنْتُمْ நம்பிக்கை கொண்டீர்களா? لَهٗ அவரை قَبْلَ முன்னர் اَنْ اٰذَنَ நான் அனுமதியளிப்பதற்கு لَـكُمْؕ உங்களுக்கு اِنَّهٗ நிச்சயமாக அவர் لَـكَبِيْرُكُمُ உங்கள் பெரியவர் الَّذِىْ عَلَّمَكُمُ அவர் உங்களுக்கு கற்றுக்கொடுத்தார் السِّحْرَۚ சூனியத்தை فَلَاُقَطِّعَنَّ ஆகவே, நிச்சயமாக வெட்டுவேன் اَيْدِيَكُمْ உங்கள் கைகளை وَاَرْجُلَكُمْ உங்கள் கால்களை مِّنْ خِلَافٍ மாற்றமாக وَّلَاُصَلِّبَـنَّكُمْ உங்களை நிச்சயமாக கழுமரத்தில் ஏற்றுவேன் فِىْ جُذُوْعِ பலகைகளில் النَّخْلِ பேரித்த மரத்தின் وَلَـتَعْلَمُنَّ நிச்சயமாக நீங்கள் அறிந்து கொள்வீர்கள் اَيُّنَاۤ எங்களில் யார் اَشَدُّ கடினமானவர் عَذَابًا வேதனை செய்வதில் وَّاَبْقٰى நிரந்தரமானவர்
20:71. கால ஆமன்தும் லஹூ கBப்ல அன் ஆதன லகும்; இன்னஹூ லகBபீருகுமுல் லதீ 'அல்லம குமுஸ் ஸிஹ்ர Fபல உகத்தி'அன்ன அய்தியகும் வ அர்ஜுலகும் மின் கிலாFபி(ன்)வ் வ ல உஸல்லிBபன்னகும் Fபீ ஜுதூ'இன் னக்லி வ லதஃலமுன்ன அய்யுனா அஷத்து 'அதாBப(ன்)வ் வ அBப்கா
20:71. "நான் உங்களுக்கு அனுமதியளிக்கும் முன்னரே நீங்கள் அவர்மீது நம்பிக்கை கொண்டுவிட்டீர்களா? நிச்சயமாக அவர் உங்களுக்குச் சூனியத்தைக் கற்றுக்கொடுத்த உங்களுடைய தலைவர் (போல் தோன்றுகிறது); எனவே, நான் உங்களை மாறுகை, மாறுகால் வாங்கி, பேரீச்ச மரங்களின் அடிப்பாகங்களில் உங்களைக் கழுவேற்றுவேன்; மேலும், வேதனை கொடுப்பதில் நம்மில் கடுமையானவர் யார்? அதில் நிலையாக இருப்பவரும் யார்? என்பதை நிச்சயமாக நீங்கள் அறிந்து கொள்வீர்கள்" என்று அவன் (ஃபிர்அவ்ன்) கூறினான்.
20:72 قَالُوْا لَنْ نُّؤْثِرَكَ عَلٰى مَا جَآءَنَا مِنَ الْبَيِّنٰتِ وَالَّذِىْ فَطَرَنَا فَاقْضِ مَاۤ اَنْتَ قَاضٍ ؕ اِنَّمَا تَقْضِىْ هٰذِهِ الْحَيٰوةَ الدُّنْيَا ؕ
قَالُوْا அவர்கள் கூறினர் لَنْ نُّؤْثِرَكَ நாம் உம்மை தேர்ந்தெடுக்க மாட்டோம் عَلٰى مَا جَآءَنَا எங்களிடம் வந்ததை விட مِنَ الْبَيِّنٰتِ தெளிவான அத்தாட்சிகளில் இருந்து وَالَّذِىْ فَطَرَنَا எங்களைப் படைத்தவனை விட فَاقْضِ ஆகவே நீ செய் مَاۤ எதை اَنْتَ நீ قَاضٍ ؕ செய்பவனாக இருக்கிறாயோ اِنَّمَا تَقْضِىْ நீ செய்வதெல்லாம் هٰذِهِ இந்த الْحَيٰوةَ الدُّنْيَا ؕ உலக வாழ்க்கையில்தான்
20:72. காலூ லன் னு'திரக 'அலா மா ஜா'அனா மினல் Bபய்யினாதி வல்லதீ Fபதரனா Fபக்ளிமா அன்த காள்; இன்னமா தக்ளீ ஹாதிஹில் ஹயாதத் துன்யா
20:72. (மனந்திருந்திய அவர்கள் ஃபிர்அவ்னிடம்) "எங்களுக்கு வந்துள்ள தெளிவான அத்தாட்சிகளை விடவும், எங்களைப் படைத்தவனை விடவும் உன்னை (மேலானவனாக) நாங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளவே மாட்டோம்; ஆகவே, என்ன தீர்ப்புச் செய்ய நீ இருக்கிறாயோ அவ்வாறே தீர்ப்புச் செய்து கொள்: நீ தீர்ப்புச் செய்வதெல்லாம் இவ்வுலக வாழ்க்கையில்தான்" என்று கூறினர்.
20:73 اِنَّاۤ اٰمَنَّا بِرَبِّنَا لِيَـغْفِرَ لَـنَا خَطٰيٰنَا وَمَاۤ اَكْرَهْتَـنَا عَلَيْهِ مِنَ السِّحْرِؕ وَاللّٰهُ خَيْرٌ وَّاَبْقٰى
اِنَّاۤ நிச்சயமாக நாங்கள் اٰمَنَّا நம்பிக்கை கொண்டோம் بِرَبِّنَا எங்கள் இறைவனை لِيَـغْفِرَ அவன் மன்னிப்பதற்காக لَـنَا எங்களுக்கு خَطٰيٰنَا எங்கள் பாவங்களை وَمَاۤ இன்னும் எது اَكْرَهْتَـنَا நீ எங்களை நிர்ப்பந்தித்தாய் عَلَيْهِ அதை செய்வதற்கு مِنَ السِّحْرِؕ சூனியத்தில் وَاللّٰهُ அல்லாஹ்தான் خَيْرٌ மிகச் சிறந்தவன் وَّاَبْقٰى மிக நிரந்தரமானவன்
20:73. இன்னா ஆமன்னா Bபி ரBப்Bபினா லியக்Fபிர லனா கதாயானா வ மா அக்ரஹ்தனா 'அலய்ஹி மினஸ் ஸிஹ்ர்; வல்லாஹு கய்ரு(ன்)வ் வ அBப்கா
20:73. எங்களின் தவறுகளையும், இன்னும் சூனியத்திலிருந்து எதனைச் செய்வதின் மீது எங்களை நீ கட்டாயப்படுத்தினாயோ அக்குற்றத்தையும் எங்களுக்கு மன்னிப்பதற்காக, எங்கள் இறைவன் மீது நிச்சயமாக நாங்கள் நம்பிக்கை கொண்டோம்; மேலும், அல்லாஹ்தான் மிக்க மேலானவனாகவும், நிலைத்திருப்பவனாகவும் இருக்கின்றான்" (என்று கூறினார்கள்).
20:74 اِنَّهٗ مَنْ يَّاْتِ رَبَّهٗ مُجْرِمًا فَاِنَّ لَهٗ جَهَـنَّمَۚ لَا يَمُوْتُ فِيْهَا وَ لَا يَحْيٰى
اِنَّهٗ நிச்சயமாக விஷயமாவது مَنْ எவன் يَّاْتِ வருகிறானோ رَبَّهٗ தன் இறைவனிடம் مُجْرِمًا பாவியாக فَاِنَّ நிச்சயமாக لَهٗ அவனுக்கு جَهَـنَّمَۚ நரகம்தான் لَا يَمُوْتُ அவன் மரணிக்க மாட்டான் فِيْهَا அதில் وَ لَا يَحْيٰى வாழவும் மாட்டான்
20:74. இன்னஹூ மய் ய'தி ரBப்Bபஹூ முஜ்ரிமன் Fப இன்ன லஹூ ஜஹன்னம லா யமூது Fபீஹா வலா யஹ்யா
20:74. நிச்சயமாக எவன் தன் இறைவனிடத்தில் குற்றவாளியாக வருகிறானோ, அவனுக்கு நரகம் நிச்சயமாக இருக்கிறது; அதில் அவன் மரணிக்கவும் மாட்டான்; வாழவும் மாட்டான்.
20:75 وَمَنْ يَّاْتِهٖ مُؤْمِنًا قَدْ عَمِلَ الصّٰلِحٰتِ فَاُولٰٓٮِٕكَ لَهُمُ الدَّرَجٰتُ الْعُلٰىۙ
وَمَنْ இன்னும் யார் يَّاْتِهٖ அவனிடம்வருவாரோ مُؤْمِنًا நம்பிக்கையாளராக قَدْ عَمِلَ திட்டமாக செய்தார் الصّٰلِحٰتِ நன்மைகளை فَاُولٰٓٮِٕكَ لَهُمُ அவர்களுக்குத்தான் الدَّرَجٰتُ தகுதிகள் உண்டு الْعُلٰىۙ மிக உயர்ந்த
20:75. வ மய் ய'திஹீ மு'மினன் கத் 'அமிலஸ் ஸாலிஹாதி Fப உலா'இக லஹுமுத் தரஜாதுல் 'உலா
20:75. ஆனால், எவர் நம்பிக்கை கொண்டவராக நற்செயல்களைச் செய்த நிலையில் அவனிடம் வருகிறாரோ, அத்தகையோருக்கு மேலான பதவிகள் உண்டு.
20:76 جَنّٰتُ عَدْنٍ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَا ؕ وَذٰ لِكَ جَزَآءُ مَنْ تَزَكّٰى
جَنّٰتُ சொர்க்கங்கள் عَدْنٍ அத்ன் تَجْرِىْ ஓடும் مِنْ تَحْتِهَا அவற்றின் கீழே الْاَنْهٰرُ நதிகள் خٰلِدِيْنَ அவர்கள் நிரந்தரமானவர்களாக فِيْهَا ؕ அதில் وَذٰ لِكَ இதுதான் جَزَآءُ கூலியாகும் مَنْ எவர் تَزَكّٰى பரிசுத்தமானார்
20:76. ஜன்னாது 'அத்னின் தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹாரு காலிதீன Fபீஹா; வ தாலிக ஜZஜா'உ மன் தZஜக்கா
20:76. (அத்தகையவர்களுக்கு) என்றென்றும் நிலைத்திருக்கும் சுவனபதிகள் உண்டு; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும்; அவற்றில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்; இதுவே, (பாவங்கள் நீங்கித்) தூய்மையானவரின் (நற்) கூலியாகும்.
20:77 وَلَقَدْ اَوْحَيْنَاۤ اِلٰى مُوْسٰٓى ۙ اَنْ اَسْرِ بِعِبَادِىْ فَاضْرِبْ لَهُمْ طَرِيْقًا فِى الْبَحْرِ يَبَسًا ۙ لَّا تَخٰفُ دَرَكًا وَّلَا تَخْشٰى
وَلَقَدْ திட்டவட்டமாக اَوْحَيْنَاۤ நாம் வஹீ அறிவித்தோம் اِلٰى مُوْسٰٓى ۙ மூஸாவிற்கு اَنْ اَسْرِ இரவில் அழைத்துச் செல்வீராக بِعِبَادِىْ என் அடியார்களை فَاضْرِبْ இன்னும் ஏற்படுத்துவீராக لَهُمْ அவர்களுக்காக طَرِيْقًا ஒரு பாதையை فِى الْبَحْرِ கடலில் يَبَسًا ۙ காய்ந்த لَّا تَخٰفُ நீர் பயப்பட மாட்டீர் دَرَكًا பிடிக்கப்படுவதை وَّلَا تَخْشٰى அஞ்சமாட்டீர்
20:77. வ லகத் அவ்ஹய்னா இலா மூஸா அன் அஸ்ரி Bபி'இBபாதீ Fபள்ரிBப் லஹும் தரீகன் Fபில் Bபஹ்ரி யBபஸல் லா தகாFபு தரக(ன்)வ் வலா தக்-ஷா
20:77. இன்னும், "நீர் என் அடியார்களுடன் இரவோடிரவாகப் பயணம் செய்து, அவர்களுக்காகக் கடலில் உலர்ந்த பாதையை உண்டாக்கிக் கொள்வீராக! (ஃபிர்அவ்ன் உம்மை) அடைந்து விடுவதைப் பயப்படாமலும் (கடலில் மூழ்கிவிடுவோம் என்று) அஞ்சாமலும் இருப்பீராக!" என்று மூஸாவுக்கு நாம் திட்டமாக வஹீ அறிவித்தோம்.
20:78 فَاَتْبَعَهُمْ فِرْعَوْنُ بِجُنُوْدِهٖ فَغَشِيَهُمْ مِّنَ الْيَمِّ مَا غَشِيَهُمْؕ
فَاَتْبَعَهُمْ அவர்களைப் பின்தொடர்ந்தான் فِرْعَوْنُ ஃபிர்அவ்ன் بِجُنُوْدِهٖ தனது படைகளைக்கொண்டு فَغَشِيَهُمْ ஆகவே, அவர்களை சூழவேண்டியது مِّنَ الْيَمِّ கடலில் இருந்து مَا غَشِيَهُمْؕ எது/ சூழ்ந்தது/அவர்களை
20:78. Fப அத்Bப'அஹும் Fபிர்'அவ்னு Bபிஜுனூதிஹீ Fபகஷியஹும் மினல் யம்ம்மி மா கஷி யஹும்
20:78. மேலும், ஃபிர்அவ்ன் தன் சேனைகளுடன் அவர்களைப் பின்தொடர்ந்தான்; அப்போது கடலிலிருந்து அவர்களை மூடிக்கொள்கிற (அலையான)து அவர்களை மூடிக்கொண்டது.
20:79 وَاَضَلَّ فِرْعَوْنُ قَوْمَهٗ وَمَا هَدٰى
وَاَضَلَّ வழிகெடுத்தான் فِرْعَوْنُ ஃபிர்அவ்ன் قَوْمَهٗ தன் சமுதாயத்தினரை وَمَا هَدٰى அவன் நேர்வழி காட்டவில்லை
20:79. வ அளல்ல Fபிர்'அவ்னு கவ்மஹூ வமா ஹதா
20:79. ஃபிர்அவுன் - தன் சமூகத்தாரை வழி கெடுத்தான், நேரான பாதையை (அவர்களுக்குக்) காட்டவுமில்லை.
20:80 يٰبَنِىْۤ اِسْرَآءِيْلَ قَدْ اَنْجَيْنٰكُمْ مِّنْ عَدُوِّكُمْ وَوٰعَدْنٰكُمْ جَانِبَ الطُّوْرِ الْاَيْمَنَ وَنَزَّلْنَا عَلَيْكُمُ الْمَنَّ وَالسَّلْوٰى
يٰبَنِىْۤ اِسْرَآءِيْلَ இஸ்ரவேலர்களே! قَدْ திட்டமாக اَنْجَيْنٰكُمْ உங்களை நாம் பாதுகாத்தோம் مِّنْ عَدُوِّ எதிரிகளிடமிருந்து كُمْ உங்கள் وَوٰعَدْنٰكُمْ இன்னும் உங்களுக்கு வாக்களித்தோம் جَانِبَ பகுதியை الطُّوْرِ தூர் மலை الْاَيْمَنَ வலது وَنَزَّلْنَا இன்னும் இறக்கினோம் عَلَيْكُمُ உங்கள் மீது الْمَنَّ மன்னு وَالسَّلْوٰى ஸல்வா
20:80. யா Bபனீ இஸ்ரா'ஈல கத் அன்ஜய்னாகும் மின் 'அதுவ் விகும் வ வ'அத்னாகும் ஜானிBபத் தூரில் அய்மன வ னZஜ்Zஜல்னா 'அலய்குமுல் மன்ன வஸ் ஸல்வா
20:80. இஸ்ராயீலின் சந்ததியினரே! நாம் திட்டமாக உங்களை உங்கள் பகைவனிடமிருந்து இரட்சித்தோம்; மேலும், தூர் (ஸினாய்) மலையின் வலப்பக்கத்தில் நாம் (தவ்ராத் வேதத்தை அருள்வதாக) உங்களுக்கு வாக்குறுதியளித்தோம்; இன்னும், 'மன்னு சல்வா'வை (உணவாக) உங்கள் மீது நாம் இறக்கிவைத்தோம்.
20:81 كُلُوْا مِنْ طَيِّبٰتِ مَا رَزَقْنٰكُمْ وَلَا تَطْغَوْا فِيْهِ فَيَحِلَّ عَلَيْكُمْ غَضَبِىْۚ وَمَنْ يَّحْلِلْ عَلَيْهِ غَضَبِىْ فَقَدْ هَوٰى
كُلُوْا புசியுங்கள் مِنْ طَيِّبٰتِ நல்லவற்றிலிருந்து مَا رَزَقْنٰكُمْ நாம் உங்களுக்கு வழங்கிய وَلَا تَطْغَوْا எல்லை மீறாதீர்கள் فِيْهِ அதில் فَيَحِلَّ இறங்கிவிடும் عَلَيْكُمْ உங்கள் மீது غَضَبِىْۚ என் கோபம் وَمَنْ எவன் يَّحْلِلْ இறங்கி விடுகிறதோ عَلَيْهِ மீது غَضَبِىْ என் கோபம் فَقَدْ திட்டமாக هَوٰى அவன் வீழ்ந்து விடுவான்
20:81. குலூ மின் தய்யிBபாதி மா ரZஜக்னாகும் வலா தத்கவ் Fபீஹி Fப யஹில்ல 'அலய்கும் களBபீ வ மய் யஹ்லில் 'அலய்ஹி களBபீ Fபகத் ஹவா
20:81. நாம் உங்களுக்கு அளித்துள்ள தூய்மையானவற்றிலிருந்து உண்ணுங்கள்; (அதற்கு நன்றி செலுத்தாமல்) அதில் நீங்கள் வரம்பு மீறாதீர்கள்: (அப்படி செய்வீர்களானால்) உங்கள் மீது என் கோபம் இறங்கிவிடும்; மேலும், எவன் மீது என் கோபம் இறங்குகிறதோ, அவன் நிச்சயமாக (நரகத்தில்) வீழ்வான்.
20:82 وَاِنِّىْ لَـغَفَّارٌ لِّمَنْ تَابَ وَاٰمَنَ وَعَمِلَ صَالِحًـا ثُمَّ اهْتَدٰى
وَاِنِّىْ நிச்சயமாக நான் لَـغَفَّارٌ மிகவும் மன்னிக்கக்கூடியவன் لِّمَنْ تَابَ திருந்தியவரை وَاٰمَنَ இன்னும் நம்பிக்கைகொண்டார் وَعَمِلَ صَالِحًـا நன்மை செய்தார் ثُمَّ பின்னர் اهْتَدٰى நேர்வழி பெற்றார்
20:82. வ இன்னீ ல கFப்Fபாருல் லிமன் தாBப வ ஆமன வ 'அமில ஸாலிஹன் தும்மஹ் ததா
20:82. "எவன் பாவமன்னிப்புத் தேடி, நம்பிக்கை கொண்டு, நற்செயல்களையும் செய்து அப்பால் நேர்வழியும் அடைகிறானோ அவனுக்கு நிச்சயமாக நான் மிகவும் மன்னிப்பவனாக இருக்கின்றேன்" (என்று கூறினோம்).
20:83 وَمَاۤ اَعْجَلَكَ عَنْ قَوْمِكَ يٰمُوْسٰى
وَمَاۤ எது? اَعْجَلَكَ உம்மை அவசரமாக வரவழைத்தது عَنْ قَوْمِكَ உமது சமுதாயத்தை விட்டு يٰمُوْسٰى மூஸாவே!
20:83. வ மா அஃஜலக 'அன் கவ்மிக யா மூஸா
20:83. "மூஸாவே! உம் சமூகத்தாரை விட்டு உம்மை இவ்வளவு சீக்கிரம் விரைந்து வரச் செய்தது யாது?" (என்று தூர் ஸினாய் மலைக்கு அவர் வந்தபோது அல்லாஹ் கேட்டான்.)
20:84 قَالَ هُمْ اُولَاۤءِ عَلٰٓى اَثَرِىْ وَ عَجِلْتُ اِلَيْكَ رَبِّ لِتَرْضٰى
قَالَ அவர் கூறினார் هُمْ اُولَاۤءِ அவர்கள் عَلٰٓى மீது اَثَرِىْ என் அடிச்சுவட்டின் وَ عَجِلْتُ நான் விரைந்தேன் اِلَيْكَ உன் பக்கம் رَبِّ என் இறைவா لِتَرْضٰى நீ திருப்தி கொள்வதற்காக
20:84. கால ஹும் உலா'இ 'அலா அதரீ வ 'அஜில்து இலய்க ரBப்Bபி லிதர்ளா
20:84. (அதற்கவர்) "அவர்களும் என் அடிச்சுவட்டின் மீதே வருகின்றனர்; இன்னும், (என்) இறைவனே! நீ என்னைப் பற்றித் திருப்திப்படுவதற்காக, நான் உன்னிடத்தில் விரைந்து வந்தேன்" என்று கூறினார்.
20:85 قَالَ فَاِنَّا قَدْ فَتَـنَّا قَوْمَكَ مِنْۢ بَعْدِكَ وَاَضَلَّهُمُ السَّامِرِىُّ
قَالَ கூறினான் فَاِنَّا நிச்சயமாக நாம் قَدْ فَتَـنَّا திட்டமாக சோதித்தோம் قَوْمَكَ உமது சமுதாயத்தை مِنْۢ بَعْدِكَ உமக்குப் பின்னர் وَاَضَلَّهُمُ இன்னும் அவர்களை வழிகெடுத்தான் السَّامِرِىُّ ஸாமிரி
20:85. கால Fப இன்னா கத் Fபதன்னா கவ்மக மிம் Bபஃதிக வ அளல்லஹுமுஸ் ஸாமிரிய்ய்
20:85. "நிச்சயமாக, (நீர் இங்கு வந்த) பின்னர் உம்முடைய சமூகத்தாரைச் சோதித்தோம்; இன்னும், அவர்களை 'சாமிரி' வழிகெடுத்து விட்டான்" என்று (அல்லாஹ்) கூறினான்.
20:86 فَرَجَعَ مُوْسَىٰۤ اِلٰى قَوْمِهٖ غَضْبَانَ اَسِفًا ۙ قَالَ يٰقَوْمِ اَلَمْ يَعِدْكُمْ رَبُّكُمْ وَعْدًا حَسَنًا ۙ اَفَطَالَ عَلَيْكُمُ الْعَهْدُ اَمْ اَرَدْتُّمْ اَنْ يَّحِلَّ عَلَيْكُمْ غَضَبٌ مِّنْ رَّبِّكُمْ فَاَخْلَفْتُمْ مَّوْعِدِىْ
فَرَجَعَ திரும்பினார் مُوْسَىٰۤ மூஸா اِلٰى قَوْمِهٖ தனது சமுதாயத்திடம் غَضْبَانَ கோபமானவராக اَسِفًا ۙ கவலையடைந்தவராக قَالَ கூறினார் يٰقَوْمِ என் சமுதாயமே اَلَمْ يَعِدْ வாக்களிக்கவில்லையா كُمْ உங்களுக்கு رَبُّكُمْ உங்கள் இறைவன் وَعْدًا حَسَنًا ۙ அழகிய வாக்கை اَفَطَالَ தூரமாகிவிட்டதா عَلَيْكُمُ உங்களுக்கு الْعَهْدُ காலம் اَمْ அல்லது اَرَدْتُّمْ நீங்கள் நாடுகிறீர்களா اَنْ يَّحِلَّ இறங்குவதை عَلَيْكُمْ உங்கள் மீது غَضَبٌ கோபம் مِّنْ رَّبِّكُمْ உங்கள் இறைவன் புறத்திலிருந்து فَاَخْلَفْتُمْ அதனால் மாறு செய்தீர்களா مَّوْعِدِىْ எனது குறிப்பிட்ட நேரத்திற்கு
20:86. Fபரஜ'அ மூஸா இலா கவ்மிஹீ கள்Bபான அஸிFபா; கால யா கவ்மி அலம் ய'இத்கும் ரBப்Bபுகும் வ'தன் ஹஸனா; அFபதால 'அலய்குமுல் 'அஹ்து அம் அரத்தும் அய் யஹில்ல 'அலய்கும் களBபும் மிர் ரBப்Bபிகும் Fப அக்லFப்தும் மவ்'இதீ
20:86. ஆகவே, மூஸா கோபமும் விசனமும் கொண்டவராக தம் சமூகத்தாரிடம் திரும்பிவந்து, "என்னுடைய சமூகத்தவர்களே! உங்கள் இறைவன் உங்களுக்கு ஓர் அழகிய வாக்குறுதி கொடுக்கவில்லையா? எனவே, அந்த வாக்குறுதி(க் காலம்) அதிகமாகிவிட்டதா? அல்லது உங்கள் மீது உங்கள் இறைவனுடைய கோபம் இறங்க வேண்டுமென்று விரும்பியே நீங்கள் எனக்குக் கொடுத்த வாக்குறுதிக்கு மாறுசெய்தீர்களா?" (என்று கூறினார்).
20:87 قَالُوْا مَاۤ اَخْلَـفْنَا مَوْعِدَكَ بِمَلْكِنَا وَلٰـكِنَّا حُمِّلْنَاۤ اَوْزَارًا مِّنْ زِيْنَةِ الْقَوْمِ فَقَذَفْنٰهَا فَكَذٰلِكَ اَلْقَى السَّامِرِىُّ ۙ
قَالُوْا கூறினார்கள் مَاۤ اَخْلَـفْنَا நாங்கள் மாறுசெய்யவில்லை مَوْعِدَكَ உமது குறிப்பிட்டநேரத்திற்கு بِمَلْكِنَا எங்கள் விருப்பப்படி وَلٰـكِنَّا என்றாலும் حُمِّلْنَاۤ நாங்கள் சுமத்தப்பட்டோம் اَوْزَارًا பலசுமைகளை مِّنْ زِيْنَةِ ஆபரணங்களில் الْقَوْمِ மக்களின் فَقَذَفْنٰهَا ஆகவே அவற்றை நாங்கள் எறிந்தோம் فَكَذٰلِكَ அவ்வாறே اَلْقَى எறிந்தான் السَّامِرِىُّ ۙ சாமிரி
20:87. காலூ மா அக்லFப்னா மவ்'இதக Bபிமல்கின்ன வ லாகின்ன ஹும்மில்னா அவ்Zஜாரம் மின் Zஜீனதில் கவ்மி FபகதFப்னாஹா Fபகதாலிக அல்கஸ் ஸாமிரிய்ய்
20:87. உங்களுக்குக் கொடுத்திருந்த வாக்குறுதிக்கு, எங்கள் சுயவிருப்பப்படி நாங்கள் மாறு செய்யவில்லை; ஆனால், நாங்கள் சமூகத்தாரின் அலங்கார (ஆபரண)ங்களிலிருந்து சில சுமைகள் (கொண்டு) சுமத்தப்பட்டோம்; பிறகு, நாங்கள் அவற்றை(க் கழற்றி நெருப்பில்) எறிந்தோம்; அவ்வாறே சாமிரியும் எறிந்தான்" என்று அவர்கள் கூறினார்கள்.
20:88 فَاَخْرَجَ لَهُمْ عِجْلًا جَسَدًا لَّهٗ خُوَارٌ فَقَالُوْا هٰذَاۤ اِلٰهُكُمْ وَاِلٰهُ مُوْسٰى فَنَسِىَ
فَاَخْرَجَ உருவாக்கினான் لَهُمْ அவர்களுக்கு عِجْلًا ஒரு காளைக் கன்றை جَسَدًا ஓர் உடலை لَّهٗ அதற்கு خُوَارٌ மாட்டின் சப்தத்தை உடைய فَقَالُوْا கூறினர் هٰذَاۤ இதுதான் اِلٰهُكُمْ உங்களது தெய்வமும் وَاِلٰهُ தெய்வமும் مُوْسٰى மூஸாவுடைய فَنَسِىَ ஆனால் மறந்து விட்டார்
20:88. Fப அக்ரஜ லஹும் 'இஜ்லன் ஜஸதல் லஹூ குவாருன் Fபகாலூ ஹாதா இலாஹுகும் வ இலாஹு மூஸா Fபனஸீ
20:88. பின்னர், அவன் அவர்களுக்காக ஒரு காளைக் கன்றை (உருவாக்கி) வெளிப்படுத்தினான்; அதற்கு மாட்டின் சப்தமும் இருந்தது: (இதைக் கண்ட) சிலர் "இதுதான் உங்களுடைய இறைவன்; இன்னும், (இதுவே) மூஸாவின் இறைவனுமாகும்; ஆனால், அவர் இதை மறந்துவிட்டார்" என்று சொன்னார்கள்.
20:89 اَفَلَا يَرَوْنَ اَلَّا يَرْجِعُ اِلَيْهِمْ قَوْلًا ۙ وَّلَا يَمْلِكُ لَهُمْ ضَرًّا وَّلَا نَفْعًا
اَفَلَا يَرَوْنَ அவர்கள் பார்க்கவேண்டாமா اَلَّا அது يَرْجِعُ திரும்ப اِلَيْهِمْ அவர்களுக்கு قَوْلًا ۙ பேசாமல் இருப்பதை وَّلَا يَمْلِكُ இன்னும் ஆற்றல் பெறவில்லை لَهُمْ அவர்களுக்கு ضَرًّا தீமை செய்வதற்கும் وَّلَا نَفْعًا நன்மை செய்வதற்கும்
20:89. அFபலா யரவ்ன அல்லா யர்ஜி'உ இலய்ஹிம் கவ்ல(ன்)வ் வலா யம்லிகு லஹும் ளர்ர(ன்)வ் வலா னFப்'ஆ
20:89. அவர்களுடைய எந்தச் சொல்லுக்கும் அது பதிலளிக்காது என்பதையும், அவர்களுக்காக அது நன்மையையோ, தீமையையோ செய்யச் சக்தியற்றது என்பதையும் அவர்கள் பார்க்கவில்லையா?
20:90 وَلَـقَدْ قَالَ لَهُمْ هٰرُوْنُ مِنْ قَبْلُ يٰقَوْمِ اِنَّمَا فُتِنْتُمْ بِهٖۚ وَاِنَّ رَبَّكُمُ الرَّحْمٰنُ فَاتَّبِعُوْنِىْ وَاَطِيْعُوْۤا اَمْرِىْ
وَلَـقَدْ திட்டவட்டமாக قَالَ கூறினார் لَهُمْ அவர்களுக்கு هٰرُوْنُ ஹாரூன் مِنْ قَبْلُ இதற்கு முன்னர் يٰقَوْمِ என் சமுதாயமே اِنَّمَا فُتِنْتُمْ நிச்சயமாக நீங்கள் சோதிக்கப்பட்டுள்ளீர்கள் بِهٖۚ இதைக் கொண்டு وَاِنَّ நிச்சயமாக رَبَّكُمُ உங்கள் இறைவன் الرَّحْمٰنُ பேரருளாளன் தான் فَاتَّبِعُوْنِىْ ஆகவே, என்னைப் பின்பற்றுங்கள் وَاَطِيْعُوْۤا கீழ்ப்படியுங்கள் اَمْرِىْ என் கட்டளைக்கு
20:90. வ லகத் கால லஹும் ஹாரூனு மின் கBப்லு யா கவ்மி இன்னமா Fபுதின்தும் Bபிஹீ வ இன்ன ரBப்Bபகுமுர் ரஹ்மானு Fபத்தBபி'ஊனீ வ அதீ'ஊ அம்ரீ
20:90. (இதற்கு) முன்னரே ஹாரூன் அவர்களை நோக்கி, "என் சமூகத்தவரே! நிச்சயமாக இதைக் கொண்டு நீங்கள் சோதிக்கப்பட்டிருக்கிறீர்கள்; நிச்சயமாக உங்களுடைய இறைவன் அளவற்ற அருளாளனே ஆவான்; எனவே, என்னைப் பின்பற்றுங்கள்; இன்னும், என் கட்டளைக்குக் கீழ்ப்படியுங்கள்" என்று கூறினார்.
20:91 قَالُوْا لَنْ نَّبْرَحَ عَلَيْهِ عٰكِفِيْنَ حَتّٰى يَرْجِعَ اِلَيْنَا مُوْسٰى
قَالُوْا அவர்கள் கூறினர் لَنْ نَّبْرَحَ நாங்கள் நீடித்திருப்போம் عَلَيْهِ இதை عٰكِفِيْنَ வணங்கியவர்களாகவே حَتّٰى يَرْجِعَ திரும்புகின்ற வரை اِلَيْنَا எங்களிடம் مُوْسٰى மூஸா
20:91. காலூ லன் னBப்ரஹ 'அலய்ஹி 'ஆகிFபீன ஹத்தா யர்ஜி'அ இலய்னா மூஸா
20:91. "மூஸா எங்களிடம் திரும்பி வரும் வரையில், நாங்கள் இதன் மீதே உறுதியாக நிலைத்திருப்போம்" என்று அவர்கள் கூறினர்.
20:92 قَالَ يٰهٰرُوْنُ مَا مَنَعَكَ اِذْ رَاَيْتَهُمْ ضَلُّوْٓا ۙ
قَالَ கூறினார் يٰهٰرُوْنُ ஹாரூனே مَا எது مَنَعَكَ உம்மை தடுத்தது اِذْ رَاَيْتَهُمْ நீர் அவர்களைப் பார்த்தபோது ضَلُّوْٓا ۙ அவர்கள் வழிதவறி விட்டார்கள்
20:92. கால யா ஹாரூனு மா மன 'அக இத் ர அய்தஹும் ளல்லூ
20:92. (மூஸா திரும்பியதும் தம் சகோதரரிடம்) "ஹாரூனே! இவர்கள் வழிகெடுகிறார்கள் என்று நீர் கண்டபோது (அவர்களுக்குப் போதனை செய்து திருத்துவதிலிருந்து) உம்மைத் தடை செய்தது யாது?" என்று கேட்டார்.
20:93 اَلَّا تَتَّبِعَنِؕ اَفَعَصَيْتَ اَمْرِىْ
اَلَّا تَتَّبِعَنِؕ நீர் என்னைப் பின்பற்றி நடந்திருக்க வேண்டாமா اَفَعَصَيْتَ மாறு செய்துவிட்டீரா اَمْرِىْ எனது கட்டளைக்கு
20:93. அல்லா தத்தBபி'அனி அFப'அஸய்த அம்ரீ
20:93. "நீர் என்னைப் பின்பற்றியிருக்க வேண்டாமா? நீர் என் கட்டளையை மீறினீரா?"
20:94 قَالَ يَابْنَؤُمَّ لَا تَاْخُذْ بِلِحْيَتِىْ وَلَا بِرَاْسِىْۚ اِنِّىْ خَشِيْتُ اَنْ تَقُوْلَ فَرَّقْتَ بَيْنَ بَنِىْۤ اِسْرَآءِيْلَ وَلَمْ تَرْقُبْ قَوْلِىْ
قَالَ அவர் கூறினார் يَابْنَؤُمَّ என் தாயின் மகனே لَا تَاْخُذْ பிடிக்காதே بِلِحْيَتِىْ எனது தாடியையும் وَلَا بِرَاْسِىْۚ என் தலையையும் اِنِّىْ خَشِيْتُ நிச்சயமாக நான் பயந்தேன் اَنْ تَقُوْلَ நீர் கூறிவிடுவதை فَرَّقْتَ பிரித்து விட்டாய் بَيْنَ மத்தியில் بَنِىْۤ اِسْرَآءِيْلَ இஸ்ரவேலர்களுக்கு وَلَمْ تَرْقُبْ நீர் கவனிக்காமல் قَوْلِىْ என் கூற்றை
20:94. கால யBப்ன'உம்ம லா த'குத் Bபி லிஹ்யதீ வலா Bபி ர'ஸீ இன்னீ கஷீது அன் தகூல Fபர்ரக்த Bபய்ன Bபனீ இஸ்ரா'ஈல வ லம் தர்குBப் கவ்லீ
20:94. (இதற்கு ஹாரூன்) "என் தாயின் மகனே! என் தாடியையோ, என் தலை(முடி)யையோ பிடி(த்திழுக்காதீர்); 'நீர் இஸ்ராயீலின் சந்ததியிலே பிரிவினையை உண்டாக்கிவிட்டீர்! என் வார்த்தைக்காக நீர் காத்திருக்கவில்லை!' என்று நீர் கூறுவீரோ என நிச்சயமாக நான் அஞ்சினேன்" என்று கூறினார்.
20:95 قَالَ فَمَا خَطْبُكَ يٰسَامِرِىُّ
قَالَ கூறினார் فَمَا خَطْبُكَ உன் விஷயம் என்ன يٰسَامِرِىُّ ஸாமிரியே
20:95. கால Fபமா கத்Bபுக யா ஸாமிரிய்ய்
20:95. "சாமியாரே! உன் விஷயம் என்ன?" என்று அவர் அவனிடம் கேட்டார்.
20:96 قَالَ بَصُرْتُ بِمَا لَمْ يَـبْصُرُوْا بِهٖ فَقَبَـضْتُ قَبْضَةً مِّنْ اَثَرِ الرَّسُوْلِ فَنَبَذْتُهَا وَكَذٰلِكَ سَوَّلَتْ لِىْ نَفْسِى
قَالَ அவன் கூறினான் بَصُرْتُ நான் பார்த்தேன் بِمَا لَمْ يَـبْصُرُوْا எதை/அவர்கள் பார்க்கவில்லை بِهٖ அதை فَقَبَـضْتُ ஆகவே, எடுத்தேன் قَبْضَةً ஒரு பிடி مِّنْ اَثَرِ காலடி சுவடிலிருந்து الرَّسُوْلِ தூதரின் فَنَبَذْتُهَا இன்னும் அதை எறிந்தேன் وَكَذٰلِكَ இப்படித்தான் سَوَّلَتْ அலங்கரித்தது لِىْ எனக்கு نَفْسِى என் மனம்
20:96. கால Bபஸுர்து Bபிமா லம் யBப்ஸுரூ Bபிஹீ FபகBபள்து கBப்ளதம் மின் அதரிர் ரஸூலி FபனBபத்துஹா வ கதாலிக ஸவ்வலத் லீ னFப்ஸீ
20:96. "அவர்கள் காணாத ஒன்றை நான் கண்டேன்; ஆகவே, நான் அந்தத் தூதர் காலடியிலிருந்து ஒரு பிடி (மண்) பிடித்து, அதை எறிந்தேன்; அவ்விதம் (செய்வதை) என் மனம் எனக்கு அழகா(ன செயலா)க ஆக்கிற்று" என (ஸாமிரி பதில்) சொன்னான்.
20:97 قَالَ فَاذْهَبْ فَاِنَّ لَـكَ فِى الْحَيٰوةِ اَنْ تَقُوْلَ لَا مِسَاسَ وَاِنَّ لَـكَ مَوْعِدًا لَّنْ تُخْلَفَهٗ ۚ وَانْظُرْ اِلٰٓى اِلٰهِكَ الَّذِىْ ظَلْتَ عَلَيْهِ عَاكِفًا ؕ لَّـنُحَرِّقَنَّهٗ ثُمَّ لَـنَنْسِفَنَّهٗ فِى الْيَمِّ نَسْفًا
قَالَ அவர் கூறினார் فَاذْهَبْ நீ சென்று விடு فَاِنَّ لَـكَ நிச்சயமாக உனக்கு فِى الْحَيٰوةِ இவ்வாழ்க்கையில் اَنْ تَقُوْلَ என்று சொல்வதுதான் لَا مِسَاسَ தொடாதீர் وَاِنَّ لَـكَ இன்னும் உமக்கு உண்டு مَوْعِدًا ஒரு குறிப்பிட்ட நேரம் لَّنْ تُخْلَفَهٗ ۚ அதை நீ தவறவிடமாட்டாய் وَانْظُرْ இன்னும் பார் اِلٰٓى اِلٰهِكَ உனது தெய்வத்தை الَّذِىْ எது ظَلْتَ இருந்தாய் عَلَيْهِ அதனை عَاكِفًا ؕ வணங்கியவனாக لَّـنُحَرِّقَنَّهٗ நிச்சயமாக நாம் அதை எறிந்து விடுவோம் ثُمَّ பிறகு لَـنَنْسِفَنَّهٗ அதை பரப்பிவிடுவோம் فِى الْيَمِّ கடலில் نَسْفًا பரப்பப்பட்டதாக
20:97. கால Fபத்ஹBப் Fப இன்ன லக Fபில் ஹயாதி அன் தகூல லா மிஸாஸ வ இன்ன லக மவ்'இதல் லன் துக்லFபஹூ வன்ளுர் இலா இலாஹிகல் லதீ ளல்த 'அலய்ஹி 'ஆகிFபா; ல னுஹர்ரிகன்னஹூ தும்ம ல னன்ஸிFபன்னஹூ Fபில் யம்மி னஸ்Fபா
20:97. "நீ இங்கிருந்து போய்விடு; நிச்சயமாக இந்த வாழ்க்கையில் (எவரைக் கண்டாலும், என்னைத்) 'தீண்டாதீர்' என்று சொல்(லித் திரி)வதுதான் உனக்குள்ளது; (மறுமையில்) நிச்சயமாக உனக்கு வாக்களிக்கப்பட்டதும் உண்டு; அதில் நீ மாற்றம் செய்யப்படவேமாட்டாய்; மேலும், வணக்கத்தில் எதன் மீது நீ நிலையானவனாக இருந்தாயோ அந்த உன் தெய்வத்தைப்பார்; நிச்சயமாக அதைச் சுட்டெரித்துப் பின்னர், (சாம்பலாக்கி) அதைக் கடலில் பரத்திவிடுவோம்" என்றார்.
20:98 اِنَّمَاۤ اِلٰهُكُمُ اللّٰهُ الَّذِىْ لَاۤ اِلٰـهَ اِلَّا هُوَؕ وَسِعَ كُلَّ شَىْءٍ عِلْمًا
اِنَّمَاۤ اِلٰهُكُمُ நிச்சயமாக உங்கள் (வணக்கத்திற்குரிய) இறைவன் اللّٰهُ அல்லாஹ்தான் الَّذِىْ அவன் لَاۤ அறவே இல்லை اِلٰـهَ வணக்கத்திற்குரியவன் اِلَّا தவிர هُوَؕ அவனை وَسِعَ அவன் விசாலமாகி இருக்கின்றான் كُلَّ شَىْءٍ எல்லாவற்றையும் عِلْمًا அறிவால்
20:98. இன்னமா இலாஹு குமுல் லாஹுல் லதீ லா இலாஹ இல்லா ஹூ; வஸி'அ குல்ல ஷய்'இன் இல்மா
20:98. "உங்களுடைய இறைவன் அல்லாஹ் (ஒருவன்) தான்; அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய) இறைவன் வேறில்லை; ஒவ்வொரு பொருளையும் (தன்) அறிவால் விசாலமாக (அறிந்து) வைத்துள்ளான்."
20:99 كَذٰلِكَ نَقُصُّ عَلَيْكَ مِنْ اَنْۢبَآءِ مَا قَدْ سَبَقَ ۚ وَقَدْ اٰتَيْنٰكَ مِنْ لَّدُنَّا ذِكْرًا ۖ ۚ
كَذٰلِكَ இவ்வாறு نَقُصُّ நாம் விவரிக்கிறோம் عَلَيْكَ உமக்கு مِنْ اَنْۢبَآءِ செய்திகளை مَا قَدْ سَبَقَ ۚ முன் சென்றுவிட்டவர்களின் وَقَدْ திட்டமாக اٰتَيْنٰكَ உமக்கு கொடுத்தோம் مِنْ لَّدُنَّا நம் புறத்திலிருந்து ذِكْرًا ۖ ۚ ஒரு நல்லுரையை
20:99. கதாலிக னகுஸ்ஸு 'அலய்க மின் அன்Bபா'இ மா கத் ஸBபக்; வ கத் ஆதய்னாக மில் லதுன்னா திக்ரா
20:99. (நபியே!) இவ்வாறே முன்சென்ற (சமுதாயங்களின்) செய்திகளிலிருந்து வரலாற்றை நாம் உமக்குக் கூறுகிறோம்; மேலும், திட்டமாக நம்மிடமிருந்து நினைவூட்டும் நல்லுபதேசத்தை (இத்திருக்குர்ஆனை) நாம் உமக்குக் கொடுத்திருக்கிறோம்.
20:100 مَنْ اَعْرَضَ عَنْهُ فَاِنَّهٗ يَحْمِلُ يَوْمَ الْقِيٰمَةِ وِزْرًا ۙ
مَنْ யார் اَعْرَضَ புறக்கணித்தாரோ عَنْهُ அதை فَاِنَّهٗ நிச்சயமாக அவர் يَحْمِلُ அவர் சுமப்பார் يَوْمَ الْقِيٰمَةِ மறுமை நாளில் وِزْرًا ۙ பாவத்தை
20:100. மன் அஃரள 'அன்ஹு, Fப இன்னஹூ யஹ்மிலு யவ்மல் கியாமதி விZஜ்ரா
20:100. எவன் அதனைப் புறக்கணிக்கின்றானோ, நிச்சயமாக அவன் மறுமை நாளில் பாவத்தைச் சுமப்பான்.
20:101 خٰلِدِيْنَ فِيْهِ ؕ وَسَآءَ لَهُمْ يَوْمَ الْقِيٰمَةِ حِمْلًا ۙ
خٰلِدِيْنَ அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள் فِيْهِ ؕ அதில் وَسَآءَ மிகக் கெட்டது لَهُمْ அவர்களுக்கு يَوْمَ الْقِيٰمَةِ மறுமை நாளில் حِمْلًاۙ சுமையால்
20:101. காலிதீன Fபீஹி வ ஸா'அ லஹும் யவ்மல் கியாமதி ஹிம்லா
20:101. அப்படிச் சுமப்பவர்கள் அதில் எந்நாளும் (அதைச் சுமந்தவாறே) இருப்பார்கள்; மறுமை நாளில் சுமையால் அவர்களுக்கு அது மிகவும் கெட்டது.
20:102 يَّوْمَ يُنْفَخُ فِى الصُّوْرِ وَنَحْشُرُ الْمُجْرِمِيْنَ يَوْمَٮِٕذٍ زُرْقًا ۖ ۚ
يَّوْمَ நாளில் يُنْفَخُ ஊதப்படும் فِى الصُّوْرِ சூரில் وَنَحْشُرُ நாம் எழுப்புவோம் الْمُجْرِمِيْنَ பாவிகளை يَوْمَٮِٕذٍ அந்நாளில் زُرْقًا ۖ ۚ கண்கள் நீலமானவர்களாக
20:102. யவ்ம யுன்Fபகு Fபிஸ்ஸூரி வ னஹ்ஷுருல் முஜ்ரிமீன யவ்ம 'இதின் Zஜுர்கா
20:102. ஸூர் (எக்காளம்) ஊதப்படும் நாளில், குற்றவாளிகளை, (பயத்தினால்) நீலம் பூத்த கண்ணுடையோராக நாம் அந்நாளில் ஒன்று சேர்ப்போம்.
20:103 يَّتَخَافَـتُوْنَ بَيْنَهُمْ اِنْ لَّبِثْتُمْ اِلَّا عَشْرًا
يَّتَخَافَـتُوْنَ அவர்கள் மெதுவாகப் பேசிக் கொள்வார்கள் بَيْنَهُمْ தங்களுக்கு மத்தியில் اِنْ لَّبِثْتُمْ நீங்கள் தங்கவில்லை اِلَّا தவிர عَشْرًا பத்து நாட்களே
20:103. யதகாFபதூன Bபய்னஹும் இல் லBபித்தும் இல்லா 'அஷ்ரா
20:103. "நீங்கள் பத்து (நாட்களுக்கு) மேல் (பூமியில்) தங்கியதில்லை" என்று அவர்கள் தங்களுக்கிடையில் இரகசியம் பேசிக்கொள்வார்கள்.
20:104 نَحْنُ اَعْلَمُ بِمَا يَقُوْلُوْنَ اِذْ يَقُوْلُ اَمْثَلُهُمْ طَرِيْقَةً اِنْ لَّبِثْتُمْ اِلَّا يَوْمًا
نَحْنُ நாம் اَعْلَمُ நன்கறிந்தவர்கள் بِمَا يَقُوْلُوْنَ அவர்கள் பேசுவதை اِذْ يَقُوْلُ கூறும் போது اَمْثَلُهُمْ முழுமையானவர்/அவர்களில் طَرِيْقَةً அறிவால் اِنْ لَّبِثْتُمْ நீங்கள் தங்கவில்லை اِلَّا தவிர يَوْمًا ஒரு நாளே
20:104. னஹ்னு அஃலமு Bபிமா யகூலூன இத் யகூலு அம்தலுஹும் தரீகதன் இல்லBபித்தும் இல்லா யவ்மா
20:104. "ஒரு நாளேயன்றி (அதிகமாக) நீங்கள் தங்கவில்லை" என்று அவர்களில் நல்வழியில் சென்றவர்கள் கூறும் சமயத்தில், அவர்கள் என்ன கூறுவார்கள் என்பதையும் நாம் நன்கறிவோம்.
20:105 وَيَسْــٴَــلُوْنَكَ عَنِ الْجِبَالِ فَقُلْ يَنْسِفُهَا رَبِّىْ نَسْفًا ۙ
وَيَسْــٴَــلُوْنَكَ உம்மிடம் கேட்கிறார்கள் عَنِ الْجِبَالِ மலைகளைப் பற்றி فَقُلْ நீர் கூறுவீராக يَنْسِفُهَا அவற்றை தூளாக ஆக்கி விடுவான் رَبِّىْ என் இறைவன் نَسْفًا ۙ தூள்
20:105. வ யஸ்'அலூனக 'அனில் ஜிBபாலி Fபகுல் யன்ஸிFபுஹா ரBப்Bபீ னஸ்Fபா
20:105. (நபியே!) இன்னும் உம்மிடம், மலைகளைப் பற்றி அவர்கள் கேட்கிறார்கள்: "அவைகளை என் இறைவன் தூள் தூளாக்கி (மணல்களைப் போல் பரப்பி) விடுவான்" என்று நீர் கூறுவீராக!
20:106 فَيَذَرُهَا قَاعًا صَفْصَفًا ۙ
فَيَذَرُهَا இன்னும் அவற்றை விட்டுவிடுவான் قَاعًا சமமான صَفْصَفًا ۙ பூமியாக
20:106. Fப யதருஹா கா'அன் ஸFப்ஸFபா
20:106. பின்பு, அவற்றைச் சமவெளியாக்கி விடுவான்.
20:107 لَّا تَرٰى فِيْهَا عِوَجًا وَّلَاۤ اَمْتًا ؕ
لَّا تَرٰى நீர் காணமாட்டீர் فِيْهَا அவற்றில் عِوَجًا கோணலை وَّلَاۤ اَمْتًا ؕ இன்னும் வளைவை
20:107. லா தரா Fபீஹா 'இவஜ(ன்)வ் வ லா அம்தா
20:107. "அதில், நீர் மேடு பள்ளத்தைக் காணமாட்டீர்."
20:108 يَوْمَٮِٕذٍ يَّتَّبِعُوْنَ الدَّاعِىَ لَا عِوَجَ لَهٗؕ وَخَشَعَتِ الْاَصْوَاتُ لِلرَّحْمٰنِ فَلَا تَسْمَعُ اِلَّا هَمْسًا
يَوْمَٮِٕذٍ அந்நாளில் يَّتَّبِعُوْنَ பின் தொடர்வார்கள் الدَّاعِىَ அழைப்பாளரை لَا عِوَجَ திரும்ப முடியாது لَهٗؕ அவரை விட்டு وَخَشَعَتِ இன்னும் அமைதியாகிவிடும் الْاَصْوَاتُ சப்தங்கள் எல்லாம் لِلرَّحْمٰنِ ரஹ்மானுக்கு முன் فَلَا تَسْمَعُ செவிமடுக்க மாட்டீர் اِلَّا தவிர هَمْسًا மென்மையான சப்தத்தைத்
20:108. யவ்ம இதி(ன்)ய் யத்தBபி'ஊனத் தா'இய லா 'இவஜ லஹூ வ கஷ'அதில் அஸ்வாது லிர் ரஹ்மானி Fபலா தஸ்ம'உ இல்லா ஹம்ஸா
20:108. அந்நாளில் அவர்கள் (ஸூர் மூலம்) அழைப்பவரையே பின்பற்றிச் செல்வார்கள்; அதில் எத்தகைய கோணலும் இருக்காது; இன்னும், (அவ்வேளை) அளவற்ற அருளாளனுக்கு (அஞ்சி எல்லாச்) சப்தங்களும் ஒடுங்கிவிடும்; கால்கள் (மெதுவாக அடியெடுத்து வைக்கும்) சப்தத்தைத் தவிர (வேறெதையும்) நீர் கேட்கமாட்டீர்.
20:109 يَوْمَٮِٕذٍ لَّا تَنْفَعُ الشَّفَاعَةُ اِلَّا مَنْ اَذِنَ لَـهُ الرَّحْمٰنُ وَرَضِىَ لَـهٗ قَوْلًا
يَوْمَٮِٕذٍ அந்நாளில் لَّا تَنْفَعُ பலனளிக்காது الشَّفَاعَةُ பரிந்துரை اِلَّا தவிர مَنْ எவர் اَذِنَ அனுமதித்தான் لَـهُ எவருக்கு الرَّحْمٰنُ பேரருளாளன் وَرَضِىَ இன்னும் அவன் விரும்பினான் لَـهٗ அவருடைய قَوْلًا பேச்சை
20:109. யவ்ம 'இதில் லா தன்Fப'உஷ் ஷFபா'அது இல்லா மன் அதின லஹுர் ரஹ்மானு வ ரளிய லஹூ கவ்லா
20:109. அந்நாளில் அளவற்ற அருளாளன் எவரை அனுமதித்து, அவருடைய பேச்சைப் பொருந்திக் கொள்கிறானோ, அவரைத் தவிர வேறு எவருடைய பரிந்துரையும் பலனளிக்காது.
20:110 يَعْلَمُ مَا بَيْنَ اَيْدِيْهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيْطُوْنَ بِهٖ عِلْمًا
يَعْلَمُ அவன் நன்கறிவான் مَا بَيْنَ உள்ளதையும் اَيْدِيْهِمْ அவர்களுக்கு முன் وَمَا خَلْفَهُمْ இன்னும் அவர்களுக்குப் பின் وَلَا يُحِيْطُوْنَ அவர்கள் சூழ்ந்தறிய மாட்டார்கள் بِهٖ அவனை عِلْمًا அறிவால்
20:110. யஃலமு மா Bபய்னா அய்தீஹிம் வமா கல்Fபஹும் வலா யுஹீதூன Bபிஹீ 'இல்மா
20:110. அவர்களுக்கு முன்னிருப்பதையும் அவர்களுக்குப் பின்னால் இருப்பதையும் அவன் நன்கறிவான்; அவனை அவர்கள் (தம்) ஞானத்தால் அறிந்து கொள்ளமாட்டார்கள்.
20:111 وَعَنَتِ الْوُجُوْهُ لِلْحَىِّ الْقَيُّوْمِؕ وَقَدْ خَابَ مَنْ حَمَلَ ظُلْمًا
وَعَنَتِ பணிந்து விட்டன الْوُجُوْهُ முகங்கள் لِلْحَىِّ என்றும் உயிருள்ளவன் الْقَيُّوْمِؕ என்றும் நிலையானவன் وَقَدْ திட்டமாக خَابَ நஷ்டமடைந்தான் مَنْ حَمَلَ சுமந்தவன் ظُلْمًا அநியாயத்தை
20:111. வ 'அனதில் வுஜூஹு லில் ஹய்யுல் கய்யூமி வ கத் காBப மன் ஹமல ளுல்மா
20:111. இன்னும், நிலைத்தவனான (அல்லாஹ்வாகிய) நித்தியஜீவனுக்கு யாவருடைய முகங்களும் பணிந்து தாழ்ந்துவிடும்; ஆகவே, எவன் அக்கிரமத்தைச் சுமந்து கொண்டானோ, அவன் நஷ்டமடைந்துவிடுவான்.
20:112 وَمَنْ يَّعْمَلْ مِنَ الصّٰلِحٰتِ وَهُوَ مُؤْمِنٌ فَلَا يَخٰفُ ظُلْمًا وَّلَا هَضْمًا
وَمَنْ யார் يَّعْمَلْ செய்வாரோ مِنَ الصّٰلِحٰتِ நன்மைகளை وَهُوَ அவரோ இருக்க مُؤْمِنٌ நம்பிக்கையாளராக فَلَا يَخٰفُ பயப்பட மாட்டார் ظُلْمًا அநியாயத்தை وَّلَا هَضْمًا இன்னும் நன்மைகள் குறைக்கப்படுவதை
20:112. வ மய் யஃமல் மினஸ் ஸாலிஹாதி வ ஹுவ மு'மினுன் Fபலா யகாFபு ளுல்ம(ன்)வ் வலா ஹள்மா
20:112. எவர் நம்பிக்கையாளராக இருந்து நற்செயல்களைச் செய்கிறாரோ அவர் (தமக்கு) அநீதியையோ (தமக்குரிய) கூலியில் குறைவையோ பயப்படமாட்டார்.
20:113 وَكَذٰلِكَ اَنْزَلْنٰهُ قُرْاٰنًا عَرَبِيًّا وَّ صَرَّفْنَا فِيْهِ مِنَ الْوَعِيْدِ لَعَلَّهُمْ يَتَّقُوْنَ اَوْ يُحْدِثُ لَهُمْ ذِكْرًا
وَكَذٰلِكَ இவ்வாறே اَنْزَلْنٰهُ இதை இறக்கினோம் قُرْاٰنًا குர்ஆனாக عَرَبِيًّا அரபி மொழியிலான وَّ صَرَّفْنَا فِيْهِ நாம் விவரித்து இருக்கிறோம்/அதில் مِنَ الْوَعِيْدِ எச்சரிக்கையை பலவாறாக لَعَلَّهُمْ يَتَّقُوْنَ அவர்கள் இறையச்சமுள்ளவர்களாக ஆகுவதற்காக اَوْ அல்லது يُحْدِثُ அது ஏற்படுத்துவதற்காக لَهُمْ அவர்களுக்கு ذِكْرًا ஓர் அறிவுரையை
20:113. வ கதாலிக அன்Zஜல்னாஹு குர்ஆனன் 'அரBபிய்ய(ன்)வ் வ ஸர்ரFப்னா Fபீ ஹி மினல் வ'ஈதி ல'அல்லஹும் யத்தகூன அவ் யுஹ்திது லஹும் திக்ரா
20:113. மேலும், இவ்விதமாகவே இதனை அரபி மொழியிலான குர்ஆனாக இறக்கிவைத்தோம்; அவர்கள் (நம்மை) அஞ்சுவதற்காக, அல்லது இது அவர்களுக்குப் படிப்பினை உண்டாக்குவதற்காக இதில் அவர்களுக்கு எச்சரிக்கையை விவரித்திருக்கின்றோம்.
20:114 فَتَعٰلَى اللّٰهُ الْمَلِكُ الْحَـقُّ ۚ وَلَا تَعْجَلْ بِالْقُرْاٰنِ مِنْ قَبْلِ اَنْ يُّقْضٰٓى اِلَيْكَ وَحْيُهٗ وَقُلْ رَّبِّ زِدْنِىْ عِلْمًا
فَتَعٰلَى மிக உயர்ந்தவன் اللّٰهُ அல்லாஹ் الْمَلِكُ அரசனாகிய الْحَـقُّ ۚ உண்மையாளனாகிய وَلَا تَعْجَلْ அவசரப்படாதீர் بِالْقُرْاٰنِ குர்ஆனில் مِنْ قَبْلِ முன்னர் اَنْ يُّقْضٰٓى முழுமையாக அறிவிக்கப்படுவதற்கு اِلَيْكَ உமக்கு وَحْيُهٗ அதனுடைய வஹீ وَقُلْ இன்னும் கூறுவீராக رَّبِّ என் இறைவா زِدْنِىْ எனக்குஅதிகப்படுத்து عِلْمًا ஞானத்தை
20:114. Fபத'ஆலல் லாஹுல் மலிகுல் ஹக்க்; வலா தஃஜல் Bபில் குர்'ஆனி மின் கBப்லி அய் யுக்ளா இலய்க வஹ்யுஹூ வ குர் ரBப்Bபி Zஜித்னீ 'இல்மா
20:114. ஆகவே, உண்மையான அரசனாகிய அல்லாஹ்வே மிக உயர்ந்தவன்; இன்னும், (நபியே) குர்ஆனை (- ஒதுவதை -) அறிவிப்பு உம்மளவில் முடிக்கப்படுவதற்கு முன்பே நீர் அவசரப்படாதீர்; "இறைவா! கல்வியை எனக்கு அதிகப்படுத்துவாயாக" என்றும் நீர் பிரார்த்தனை செய்வீராக!
20:115 وَلَـقَدْ عَهِدْنَاۤ اِلٰٓى اٰدَمَ مِنْ قَبْلُ فَنَسِىَ وَلَمْ نَجِدْ لَهٗ عَزْمًا
وَلَـقَدْ عَهِدْنَاۤ திட்டவட்டமாக நாம் கட்டளையிட்டோம் اِلٰٓى اٰدَمَ ஆதமுக்கு مِنْ قَبْلُ இதற்கு முன்னர் فَنَسِىَ மறந்து விட்டார் وَلَمْ نَجِدْ நாம் காணவில்லை لَهٗ அவரிடம் عَزْمًا உறுதியை
20:115. வ லகத் 'அஹித்னா இலா ஆதம மின் கBப்லு Fபனஸிய வ லம் னஜித் லஹூ 'அZஜ்மா
20:115. முன்னர், நாம் ஆதமிடம் நிச்சயமாக வாக்குறுதி வாங்கியிருந்தோம்; ஆனால், (அதனை) அவர் மறந்துவிட்டார்; (அக்கட்டளைப்படி நடக்கும்) உறுதியை நாம் அவரிடம் காணவில்லை.
20:116 وَاِذْ قُلْنَا لِلْمَلٰٓٮِٕكَةِ اسْجُدُوْا لِاٰدَمَ فَسَجَدُوْۤا اِلَّاۤ اِبْلِيْسَؕ اَبٰى
وَاِذْ சமயத்தை قُلْنَا நாம் கூறிய لِلْمَلٰٓٮِٕكَةِ வானவர்களுக்கு اسْجُدُوْا நீங்கள் சிரம் தாழ்த்துங்கள் لِاٰدَمَ ஆதமுக்கு فَسَجَدُوْۤا அவர்கள் சிரம் தாழ்த்தினர் اِلَّاۤ اِبْلِيْسَؕ இப்லீஸைத் தவிர اَبٰى மறுத்து விட்டான்
20:116. வ இத் குல்னா லில்ம லா'இகதிஸ் ஜுதூ லி ஆதம Fபஸஜதூ இல்லா இBப்லீஸ; அBபா
20:116. "நீங்கள் ஆதமுக்கு ஸுஜூது செய்யுங்கள்" என்று நாம் வானவர்களிடம் கூறியபோது, இப்லீஸைத் தவிர, அவர்கள் ஸுஜூது செய்தார்கள்; அவன் (அவ்வாறு செய்யாது) விலகிக் கொண்டான்.
20:117 فَقُلْنَا يٰۤاٰدَمُ اِنَّ هٰذَا عَدُوٌّ لَّكَ وَلِزَوْجِكَ فَلَا يُخْرِجَنَّكُمَا مِنَ الْجَـنَّةِ فَتَشْقٰى
فَقُلْنَا ஆகவே நாம் கூறினோம் يٰۤاٰدَمُ ஆதமே اِنَّ நிச்சயமாக هٰذَا இவன் عَدُوٌّ எதிரி لَّكَ உமக்கு وَلِزَوْجِكَ இன்னும் உமது மனைவிக்கு فَلَا يُخْرِجَنَّكُمَا ஆகவே, அவன் உங்கள் இருவரையும் வெளியேற்றிவிட வேண்டாம் مِنَ الْجَـنَّةِ சொர்க்கத்திலிருந்து فَتَشْقٰى நீர்சிரமப்பட்டுவிடுவீர்
20:117. Fபகுல்னா யா ஆதமு இன்ன ஹாதா 'அதுவ்வுல் லக வ லிZஜவ்ஜிக Fபலா யுக்ரிஜன் னகுமா மினல் ஜன்னதி Fபதஷ்கா
20:117. அப்பொழுது, "ஆதமே! நிச்சயமாக இவன் உமக்கும், உம்முடைய மனைவிக்கும் பகைவனாவான்; ஆதலால், உங்களிருவரையும் இச்சுவர்க்கத்திலிருந்து திட்டமாக அவன் வெளியேற்றிவிட (இடமளிக்க) வேண்டாம்; இல்லையேல், நீர் பெரும் இன்னலுக்குள்ளாவீர்" என்று நாம் கூறினோம்.
20:118 اِنَّ لَـكَ اَلَّا تَجُوْعَ فِيْهَا وَلَا تَعْرٰىۙ
اِنَّ நிச்சயமாக لَـكَ உமக்கு اَلَّا تَجُوْعَ நீர் பசித்திருக்காத فِيْهَا அதில் وَلَا تَعْرٰىۙ இன்னும் ஆடையற்றிருக்காத
20:118. இன்னா லக அல்லா தஜூ'அ Fபீஹா வலா தஃரா
20:118. "நிச்சயமாக நீர் இச்சுவர்க்கத்தில் பசியாகவோ, நிர்வாணமாகவோ இருக்கமாட்டீர்."
20:119 وَاَنَّكَ لَا تَظْمَؤُا فِيْهَا وَلَا تَضْحٰى
وَاَنَّكَ இன்னும் நிச்சயமாக நீர் لَا تَظْمَؤُا فِيْهَا அதில்தர்கிக்கமாட்டீர் وَلَا تَضْحٰى இன்னும் வெட்பத்தை உணர மாட்டீர்
20:119. வ அன்னக லா தள்ம'உ Fபீஹா வலா தள்ஹா
20:119. "இன்னும், இதில் நீர் தாகிக்கவும், வெயிலில் (கஷ்டப்)படவும் மாட்டீர்" (என்று கூறினோம்).
20:120 فَوَسْوَسَ اِلَيْهِ الشَّيْطٰنُ قَالَ يٰۤاٰدَمُ هَلْ اَدُلُّكَ عَلٰى شَجَرَةِ الْخُلْدِ وَمُلْكٍ لَّا يَبْلٰى
فَوَسْوَسَ ஊசலாட்டத்தை ஏற்படுத்தினான் اِلَيْهِ அவருக்கு الشَّيْطٰنُ ஷைத்தான் قَالَ கூறினான் يٰۤاٰدَمُ ஆதமே هَلْ اَدُلُّكَ நான் உமக்கு அறிவிக்கவா? عَلٰى شَجَرَةِ மரத்தையும் الْخُلْدِ நிரந்தரத்தின் وَمُلْكٍ ஆட்சியையும் لَّا يَبْلٰى அழியாத
20:120. Fப வஸ்வஸ இலய்ஹிஷ் ஷய்தானு கால யா ஆதமு ஹல் அதுல்லுக 'அலா ஷஜரதில் குல்தி வ முல்கில் லா யBப்லா
20:120. ஆனால், ஷைத்தான் அவருக்கு ஊசலாட்டத்தை உண்டாக்கி, "ஆதமே! நித்திய வாழ்வளிக்கும் மரத்தையும், அழிவில்லாத அரசாங்கத்தையும் உமக்கு நான் அறிவித்துத் தரவா?" என்று கேட்டான்.
20:121 فَاَكَلَا مِنْهَا فَبَدَتْ لَهُمَا سَوْاٰ تُہُمَا وَطَفِقَا يَخْصِفٰنِ عَلَيْهِمَا مِنْ وَّرَقِ الْجَـنَّةِ وَعَصٰۤى اٰدَمُ رَبَّهٗ فَغَوٰىۖ
فَاَكَلَا ஆக, அவ்விருவரும் சாப்பிட்டனர் مِنْهَا அதிலிருந்து فَبَدَتْ ஆகவே தெரியவந்தன لَهُمَا அவ்விருவருக்கும் سَوْاٰ تُہُمَا அவ்விருவரின் மறைவிடங்கள் وَطَفِقَا இன்னும் முற்பட்டனர் يَخْصِفٰنِ அவ்விருவரும் கட்டிக்கொள்வதற்கு عَلَيْهِمَا தங்கள் இருவர் மீது مِنْ وَّرَقِ இலைகளை الْجَـنَّةِ சொர்க்கத்தின் وَعَصٰۤى இன்னும் மாறுசெய்தார் اٰدَمُ ஆதம் رَبَّهٗ தன் இறைவனுக்கு فَغَوٰىۖ ஆகவே வழி தவறி விட்டார்
20:121. Fப அகலா மின்ஹா FபBபதத் லஹுமா ஸவ் ஆதுஹுமா வ தFபிகா யக்ஸிFபானி 'அலய்ஹிமா மி(ன்)வ் வரகில் ஜன்னஹ்; வ 'அஸா ஆதமு ரBப்Bபஹூ Fபகவா
20:121. பின்னர், (இப்லீஸின் ஆசை வார்த்தைப்படி) அவ்விருவரும் அம் மரத்தினின்று புசித்தனர்; உடனே, அவ்விருவரின் வெட்கத்தலங்களும் வெளியாயின; ஆகவே, அவ்விருவரும் சுவர்க்கத்துச் சோலையின் இலையைக் கொண்டு அவற்றை மறைத்துக் கொள்ளலானார்கள்; இவ்வாறு ஆதம் தம்முடைய இறைவனுக்கு மாறுசெய்து, அதனால் வழிபிசகிவிட்டார்.
20:122 ثُمَّ اجْتَبٰهُ رَبُّهٗ فَتَابَ عَلَيْهِ وَهَدٰى
ثُمَّ பிறகு اجْتَبٰهُ அவரை தேர்ந்தெடுத்தான் رَبُّهٗ அவருடையஇறைவன் فَتَابَ மன்னித்தான் عَلَيْهِ அவரை وَهَدٰى நேர்வழி காட்டினான்
20:122. தும்மஜ் தBப்Bபஹு ரBப்Bபுஹூ FபதாBப 'அலய்ஹி வ ஹதா
20:122. பின்னர், அவரது இறைவன் அவரைத் தேர்ந்தெடுத்து அவரை மன்னித்து நேர்வழியும் காட்டினான்.
20:123 قَالَ اهْبِطَا مِنْهَا جَمِيْعًاۢ بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّ ۚ فَاِمَّا يَاْتِيَنَّكُمْ مِّنِّىْ هُدًى ۙ فَمَنِ اتَّبَعَ هُدَاىَ فَلَا يَضِلُّ وَلَا يَشْقٰى
قَالَ கூறினான் اهْبِطَا நீங்கள் இறங்குங்கள் مِنْهَا இதிலிருந்து جَمِيْعًاۢ அனைவரும் بَعْضُكُمْ உங்களில் சிலர் لِبَعْضٍ சிலருக்கு عَدُوٌّ ۚ எதிரி فَاِمَّا يَاْتِيَنَّكُمْ உங்களுக்கு வந்தால் مِّنِّىْ என்னிடமிருந்து هُدًى ۙ நேர்வழியை فَمَنِ எவர் اتَّبَعَ பின்பற்றுவாரோ هُدَاىَ எனது நேர்வழியை فَلَا يَضِلُّ வழிதவற மாட்டார் وَلَا يَشْقٰى இன்னும் சிரமப்பட மாட்டார்
20:123. காலஹ் Bபித மின்ஹா ஜமீ'அம் Bபஃளுகும் லிBபஃளின் 'அதுவ்வ்; Fப இம்மா ய'தியன்னகும் மின்னீ ஹுதன் Fபமனித் தBப'அ ஹுதாய Fபலா யளில்லு வலா யஷ்கா
20:123. இதிலிருந்து நீங்கள் இருவரும் சேர்ந்து கீழே இறங்கிவிடுங்கள்; உங்கள் (சந்ததிக)ளில் சிலருக்குச் சிலர் பகைவர்களாகவே இருப்பார்கள்; அப்பொழுது நிச்சயமாக என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி வரும்; எவர் என்னுடைய நேர்வழியைப் பின்பற்றி நடக்கிறாரோ அவர் வழிதவறவும் மாட்டார்; நற்பேறிழக்கவும் மாட்டார்" என்று (அல்லாஹ்) கூறினான்.
20:124 وَمَنْ اَعْرَضَ عَنْ ذِكْرِىْ فَاِنَّ لَـهٗ مَعِيْشَةً ضَنْكًا وَّنَحْشُرُهٗ يَوْمَ الْقِيٰمَةِ اَعْمٰى
وَمَنْ எவன் اَعْرَضَ புறக்கணிப்பானோ عَنْ ذِكْرِىْ என் அறிவுரையை விட்டு فَاِنَّ நிச்சயமாக لَـهٗ அவனுக்கு مَعِيْشَةً வாழ்க்கைதான் ضَنْكًا நெருக்கடியான وَّنَحْشُرُهٗ இன்னும் அவனை நாம் எழுப்புவோம் يَوْمَ الْقِيٰمَةِ மறுமையில் اَعْمٰى குருடனாக
20:124. வ மன் அஃரள 'அன் திக்ரீ Fப இன்ன லஹூ ம'ஈஷதன் ளன்க(ன்)வ் வ னஹ்ஷுருஹூ யவ்மல் கியாமதி அஃமா
20:124. எவன் என்னுடைய உபதேசத்தைப் புறக்கணிக்கிறானோ, நிச்சயமாக அவனுக்கு நெருக்கடியான வாழ்க்கையே இருக்கும்; மேலும், நாம் அவனை மறுமை நாளில் குருடனாகவே எழுப்புவோம்" (என்று கூறினான்).
20:125 قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِىْۤ اَعْمٰى وَقَدْ كُنْتُ بَصِيْرًا
قَالَ அவன் கூறுவான் رَبِّ என் இறைவா لِمَ حَشَرْتَنِىْۤ ஏன் என்னை எழுப்பினாய் اَعْمٰى குருடனாக وَقَدْ كُنْتُ நான் இருந்தேனே بَصِيْرًا பார்வை உள்ளவனாக
20:125. கால ரBப்Bபி லிம ஹஷர் தனீ அஃமா வ கத் குன்து Bபஸீரா
20:125. (அப்போது அவன்) "என் இறைவனே! நான் பார்வையுடையவனாக இருந்தேனே! என்னை ஏன் நீ குருடனாக எழுப்பினாய்?" என்று கூறுவான்.
20:126 قَالَ كَذٰلِكَ اَتَـتْكَ اٰيٰتُنَا فَنَسِيْتَهَاۚ وَكَذٰلِكَ الْيَوْمَ تُنْسٰى
قَالَ அவன் கூறுவான் كَذٰلِكَ அவ்வாறுதான் اَتَـتْكَ உன்னிடம் வந்தன اٰيٰتُنَا எனது வசனங்கள் فَنَسِيْتَهَاۚ ஆனால், நீ அவற்றை மறந்தாய் وَكَذٰلِكَ அவ்வாறே الْيَوْمَ இன்று تُنْسٰى நீ மறக்கப்படுவாய்
20:126. கால கதாலிக அதத்க ஆயாதுனா Fபனஸீதஹா வ கதாலிகல் யவ்ம துன்ஸா
20:126. (அதற்கு இறைவன்:) "இவ்வாறேதான் இருக்கும்: நம்முடைய வசனங்கள் உன்னிடம் வந்தன; அவற்றை நீ மறந்துவிட்டாய்; அவ்வாறே, இன்றையதினம் நீயும் மறக்கடிக்கப்படுகிறாய்" என்று கூறுவான்.
20:127 وَكَذٰلِكَ نَجْزِىْ مَنْ اَسْرَفَ وَلَمْ يُؤْمِنْۢ بِاٰيٰتِ رَبِّهٖؕ وَلَعَذَابُ الْاٰخِرَةِ اَشَدُّ وَاَبْقٰى
وَكَذٰلِكَ இவ்வாறுதான் نَجْزِىْ கூலி கொடுப்போம் مَنْ எவர் اَسْرَفَ வரம்பு மீறினார் وَلَمْ يُؤْمِنْۢ இன்னும் நம்பிக்கை கொள்ளவில்லை بِاٰيٰتِ வசனங்களை رَبِّهٖؕ தன் இறைவனின் وَلَعَذَابُ தண்டனை الْاٰخِرَةِ மறுமையின் اَشَدُّ மிகக் கடுமையானது وَاَبْقٰى இன்னும் நிரந்தரமானது
20:127. வ கதாலிக னஜ்Zஜீ மன் அஸ்ரFப வ லம் யு'மின் Bபி ஆயாதி ரBப்Bபிஹ்; வ ல'அதாBபுல் ஆகிரதி அஷத்து வ அBப்கா
20:127. ஆகவே, எவன் தன் இறைவனுடைய வசனங்களின் மேல் நம்பிக்கை கொள்ளாமல், வரம்பு மீறி நடக்கின்றானோ அவனுக்கு இவ்வாறுதான் நாம் கூலி கொடுப்போம்; மேலும், மறுமையின் வேதனை மிகவும் கடினமானதும் நிலையானதுமாகும்.
20:128 اَفَلَمْ يَهْدِ لَهُمْ كَمْ اَهْلَكْنَا قَبْلَهُمْ مِّنَ الْقُرُوْنِ يَمْشُوْنَ فِىْ مَسٰكِنِهِمْؕ اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيٰتٍ لِّاُولِى النُّهٰى
اَفَلَمْ يَهْدِ தெளிவுபடுத்தவில்லையா لَهُمْ அவர்களுக்கு كَمْ எத்தனையோ اَهْلَكْنَا நாம் அழித்தது قَبْلَهُمْ இவர்களுக்கு முன்னர் مِّنَ الْقُرُوْنِ தலைமுறையினர்களை يَمْشُوْنَ செல்கிறார்கள் فِىْ مَسٰكِنِهِمْؕ அவர்களின் இருப்பிடங்களில் اِنَّ நிச்சயமாக فِىْ ذٰ لِكَ இதில் لَاٰيٰتٍ பல அத்தாட்சிகள் لِّاُولِى النُّهٰى அறிவுடையவர்களுக்கு
20:128. அFபலம் யஹ்தி லஹும் கம் அஹ்லக்னா கBப்லஹும் மினல் குரூனி யம்ஷூன Fபீ மஸாகினிஹிம்; இன்ன Fபீ தாலிக ல ஆயாதில் லி உலின்னுஹா
20:128. இவர்களுக்கு முன் நாம் எத்தனையோ தலைமுறையினரை அழித்திருக்கிறோம் என்பது அவர்களுக்குப் படிப்பினையைத் தந்து, நேர்வழி காட்டவில்லையா? அழிந்து போன அவர்கள் குடியிருந்த இடங்களில்தானே இவர்கள் நடக்கிறார்கள்; நிச்சயமாக அதில் அறிவுடையோருக்குப் பல அத்தாட்சிகள் உள்ளன.
20:129 وَلَوْلَا كَلِمَةٌ سَبَقَتْ مِنْ رَّبِّكَ لَــكَانَ لِزَامًا وَّاَجَلٌ مُّسَمًّىؕ
وَلَوْلَا كَلِمَةٌ ஒரு வாக்கு(ம்) இருக்கவில்லையெனில் سَبَقَتْ முந்தி مِنْ رَّبِّكَ உமது இறைவனிடம் لَــكَانَ لِزَامًا கண்டிப்பாக மரணம் ஏற்பட்டே இருக்கும் وَّاَجَلٌ தவணையும் مُّسَمًّىؕ ஒரு குறிப்பிட்ட
20:129. வ லவ் லா கலிமதுன் ஸBபகத் மிர் ரBப்Bபிக லகான லிZஜாம(ன்)வ் வ 'அஜலுன் முஸம்மா
20:129. உமது இறைவனிடமிருந்து ஒரு வாக்கும், (தண்டனைக்கான) குறிப்பிடப்பட்ட ஒரு தவணையும் முந்தியிராவிட்டால், அது (வேதனை) கட்டாயமாகி இருக்கும்.
20:130 فَاصْبِرْ عَلٰى مَا يَقُوْلُوْنَ وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ قَبْلَ طُلُوْعِ الشَّمْسِ وَقَبْلَ غُرُوْبِهَا ۚ وَمِنْ اٰنَآىٴِ الَّيْلِ فَسَبِّحْ وَاَطْرَافَ النَّهَارِ لَعَلَّكَ تَرْضٰى
فَاصْبِرْ நீர் பொறுத்துக் கொள்வீராக عَلٰى مَا يَقُوْلُوْنَ அவர்கள் கூறுவதை وَسَبِّحْ இன்னும் தொழுவீராக بِحَمْدِ புகழ்ந்து رَبِّكَ உமது இறைவனை قَبْلَ முன்னரும் طُلُوْعِ உதிக்கும் الشَّمْسِ சூரியன் وَقَبْلَ முன்னரும் غُرُوْبِهَا ۚ அது மறையும் وَمِنْ اٰنَآىٴِ நேரங்களிலும் الَّيْلِ இரவின் فَسَبِّحْ இன்னும் தொழுவீராக وَاَطْرَافَ ஓரங்களிலும் النَّهَارِ பகலின் لَعَلَّكَ تَرْضٰى நீர் திருப்தி பெறுவீர்
20:130. Fபஸ்Bபிர் 'அலா மா யகூலூன வ ஸBப்Bபிஹ் Bபிஹம்தி ரBப்Bபிக கBப்ல துலூ'இஷ் ஷம்ஸி வ கBப்ல குரூBபிஹா வ மின் ஆனா'இல் லய்லி FபஸBப்Bபிஹ் வ அத்ராFபன் னஹாரி ல 'அல்லக தர்ளா
20:130. ஆகவே, (நபியே!) அவர்கள் சொல்வதை (யெல்லாம்) நீர் பொறுத்துக்கொள்வீராக! இன்னும், சூரியன் உதிப்பதற்கு முன்னும், அது மறைவதற்கு முன்னும், இரவு நேரங்களிலும் உம்முடைய இறைவனின் புகழைத் துதிப்பீராக! இன்னும், பகலின் (இரு) முனைகளிலும் இவ்வாறே துதி செய்வீராக! இதனால் (நன்மைகளடைந்து) நீர் திருப்திபெறலாம்.
20:131 وَلَا تَمُدَّنَّ عَيْنَيْكَ اِلٰى مَا مَتَّعْنَا بِهٖۤ اَزْوَاجًا مِّنْهُمْ زَهْرَةَ الْحَيٰوةِ الدُّنْيَا ۙ لِنَفْتِنَهُمْ فِيْهِ ؕ وَرِزْقُ رَبِّكَ خَيْرٌ وَّاَبْقٰى
وَلَا تَمُدَّنَّ நீர் திருப்பாதீர் عَيْنَيْكَ உமது கண்களை اِلٰى مَا مَتَّعْنَا எவற்றின் பக்கம் இன்பமளித்தோம் بِهٖۤ அதன் மூலம் اَزْوَاجًا போன்றவர்கள் مِّنْهُمْ இவர்களை زَهْرَةَ அலங்காரமாக الْحَيٰوةِ الدُّنْيَا ۙ உலக வாழ்க்கையின் لِنَفْتِنَهُمْ அவர்களை நாம் சோதிப்பதற்காக فِيْهِ ؕ அதில் وَرِزْقُ அருட்கொடை رَبِّكَ உமது இறைவனின் خَيْرٌ சிறந்தது وَّاَبْقٰى நிலையானது
20:131. வ லா தமுத்தன்ன 'அய்னய்க இலா ம மத்தஃன Bபிஹீ அZஜ்வஜம் மின்ஹும் Zஜஹ்ரதல் ஹயாதித் துன்ய லினFப்தினஹும் Fபீஹ்; வ ரிZஜ்கு ரBப்Bபிக கய்ரு(ன்)வ் வ அBப்கா
20:131. இன்னும் அவர்களில் சில பிரிவினருக்கு உலக வாழ்க்கையின் அலங்காரமாக எதைக் கொண்டு சுகமனுபவிக்கச் செய்திருக்கிறோமோ, அதன் பக்கம் உமது இருகண்களையும் நீட்டாதீர்; (இவையெல்லாம்) அவர்களைச் சோதிப்பதற்காகவே (நாம் கொடுத்துள்ளோம்); உமது இறைவன் (மறுமையில் உமக்கு) வழங்கவிருப்பது சிறந்ததும், நிலையானதும் ஆகும்.
20:132 وَاْمُرْ اَهْلَكَ بِالصَّلٰوةِ وَاصْطَبِرْ عَلَيْهَا ؕ لَا نَسْــٴَــلُكَ رِزْقًا ؕ نَحْنُ نَرْزُقُكَ ؕ وَالْعَاقِبَةُ لِلتَّقْوٰى
وَاْمُرْ ஏவுவீராக اَهْلَكَ உமது குடும்பத்திற்கு بِالصَّلٰوةِ தொழுகையை وَاصْطَبِرْ உறுதியாக இருப்பீராக عَلَيْهَا ؕ அதன் மீது لَا نَسْــٴَــلُكَ நாம் உம்மிடம் எதையும் கேட்கவில்லை رِزْقًا ؕ உணவு எதையும் نَحْنُ نَرْزُقُكَ ؕ நாம்தான் உமக்கு உணவளிக்கிறோம் وَالْعَاقِبَةُ நல்ல முடிவு لِلتَّقْوٰى இறையச்சத்திற்குத்தான்
20:132. வ'முர் அஹ்லக Bபிஸ் ஸலாதி வஸ்தBபிர் 'அலய்ஹா லா னஸ்'அலுக ரிZஜ்கா; னஹ்னு னர்Zஜுகுக்; வல் 'ஆகிBபது லித்தக்வா
20:132. (நபியே!) உம் குடும்பத்தினரைத் தொழுகையைக் கொண்டு நீர் ஏவுவீராக! இன்னும், அதன் மீது நீரும் நிலைத்திருப்பீராக! நாம் உம்மிடம் உணவு கேட்கவில்லை; ஆனால், உமக்கு உணவை நாமே கொடுக்கிறோம்; நல்ல முடிவு இறையச்சத்திற்கே உரியது.
20:133 وَقَالُوْا لَوْلَا يَاْتِيْنَا بِاٰيَةٍ مِّنْ رَّبِّهٖ ؕ اَوَلَمْ تَاْتِہِمْ بَيِّنَةُ مَا فِى الصُّحُفِ الْاُوْلٰى
وَقَالُوْا இவர்கள் கூறினார்கள் لَوْلَا يَاْتِيْنَا நம்மிடம் கொண்டு வரமாட்டாரா بِاٰيَةٍ ஓர் அத்தாட்சியை مِّنْ رَّبِّهٖ ؕ தன் இறைவனிடமிருந்து اَوَلَمْ تَاْتِہِمْ அவர்களிடம் வரவில்லையா بَيِّنَةُ தெளிவான சான்று مَا فِى الصُّحُفِ வேதங்களில் உள்ள الْاُوْلٰى முந்திய
20:133. வ காலூ லவ் லா ய'தீனா Bபி ஆயதின் மிர் ரBப்Bபிஹ்; அவ லம் த'திஹிம் Bபய்யினது மா Fபிஸ் ஸுஹுFபில் ஊலா
20:133. "தம் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியை ஏன் அவர் நம்மிடம் கொண்டுவரவில்லை?" என்று (நிராகரிப்போர்) கேட்கின்றனர்; முந்தைய வேதங்களில் உள்ள தெளிவு (அத்தாட்சிகள்) அவர்களுக்கு வரவில்லையா?
20:134 وَلَوْ اَنَّاۤ اَهْلَكْنٰهُمْ بِعَذَابٍ مِّنْ قَبْلِهٖ لَـقَالُوْا رَبَّنَا لَوْلَاۤ اَرْسَلْتَ اِلَـيْنَا رَسُوْلًا فَنَتَّبِعَ اٰيٰتِكَ مِنْ قَبْلِ اَنْ نَّذِلَّ وَنَخْزٰى
وَلَوْ اَنَّاۤ اَهْلَكْنٰهُمْ இவர்களை நாம் அழித்திருந்தால் بِعَذَابٍ ஒரு வேதனையைக் கொண்டு مِّنْ قَبْلِهٖ இதற்கு முன்னரே لَـقَالُوْا கூறுவார்கள் رَبَّنَا எங்கள் இறைவா لَوْلَاۤ اَرْسَلْتَ நீ அனுப்பி இருக்கக்கூடாதா? اِلَـيْنَا எங்களுக்கு رَسُوْلًا ஒரு தூதரை فَنَتَّبِعَ பின்பற்றி இருப்போமே اٰيٰتِكَ உனது வசனங்களை مِنْ قَبْلِ முன்னர் اَنْ نَّذِلَّ இழிவடைவதற்கும் وَنَخْزٰى கேவலப்படுவதற்கும்
20:134. வ லவ் அன்னா அஹ்லக்னாஹும் Bபி 'அதாBபின் மின் கBப்லிஹீ லகாலூ ரBப்Bபனா லவ் லா அர்ஸல்த இலய்னா ரஸூலன் Fபனத்தBபி'அ ஆயாதிக மின் கBப்லி அன் னதில்ல வ னக்Zஜா
20:134. இன்னும், (நம் தூதர்) வருவதற்கு முன், நாம் இவர்களை வேதனை செய்து அழித்திருந்தால், அவர்கள், "எங்கள் இறைவா! நீ எங்களுக்கு ஒரு தூதரை அனுப்பியிருக்க வேண்டாமா? (அவ்வாறு அனுப்பியிருந்தால்,) நாங்கள் சிறுமைப்படுவதற்கும், கேவலப்படுவதற்கும் முன் உன் வசனங்களைப் பின்பற்றியிருப்போமே!" என்று கூறுவார்கள்.
20:135 قُلْ كُلٌّ مُّتَرَبِّصٌ فَتَرَبَّصُوْا ۚ فَسَتَعْلَمُوْنَ مَنْ اَصْحٰبُ الصِّرَاطِ السَّوِىِّ وَمَنِ اهْتَدٰى
قُلْ கூறுவீராக كُلٌّ ஒவ்வொருவரும் مُّتَرَبِّصٌ எதிர்பார்ப்பவர்களே فَتَرَبَّصُوْا ۚ ஆகவே எதிர்பாருங்கள் فَسَتَعْلَمُوْنَ நீங்கள் அறிந்து கொள்வீர்கள் مَنْ யார் اَصْحٰبُ الصِّرَاطِ பாதையுடையவர்கள் السَّوِىِّ நேரான وَمَنِ யார் اهْتَدٰى நேர்வழி பெற்றவர்
20:135. குல் குல்லும் முதரBப்Bபிஸுன் Fப தரBப்Bபஸூ Fப ஸ தஃலமூன மன் அஸ்ஹாBபுஸ் ஸிராதிஸ் ஸவிய்யி வ மனிஹ் ததா
20:135. (நபியே! "இறுதி நாளை) அனைவரும் எதிர்பார்த்திருப்பவர்களே! ஆகவே, நீங்களும் எதிர்பார்த்திருங்கள்; நேரான வழியை உடையவர்கள் யார்? மேலும், நேர்வழி அடைந்துவிட்டவர் யார்? என்பதையும் திடமாக நீங்கள் அறிந்துகொள்வீர்கள்" என்று நீர் கூறுவீராக!