டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம் 70. ஸூரத்துல் மஆரிஜ் (உயர்வழிகள்)
மக்கீ, வசனங்கள்: 44
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
70:1 سَاَلَ سَآٮِٕلٌ ۢ بِعَذَابٍ وَّاقِعٍۙ
سَاَلَ கேட்டார் سَآٮِٕلٌ ۢ கேட்பவர் بِعَذَابٍ வேதனையைப் பற்றி وَّاقِعٍۙ நிகழக்கூடிய
70:1. ஸ'அல ஸா'இலுன் Bபி 'அதாBபி(ன்)வ் வாகி'
70:1. (நிராகரிப்போருக்கு) சம்பவிக்கப்போகும் வேதனைபற்றி கேள்வி கேட்பவன் ஒருவன் (ஏளனமாகக்) கேட்கிறான்.
70:2 لِّلْكٰفِرِيْنَ لَيْسَ لَهٗ دَافِعٌ ۙ
لِّلْكٰفِرِيْنَ நிராகரிப்பாளர்களுக்கு لَيْسَ இல்லை لَهٗ அதை دَافِعٌ ۙ தடுப்பவர் ஒருவரும்
70:2. லில் காFபிரீன லய்ஸ லஹூ தாFபி'
70:2. நிராகரிப்பாளர்களுக்கு (அது ஏற்படும்போது) அதனைத் தடுப்பவர் எவருமில்லை.
70:3 مِّنَ اللّٰهِ ذِى الْمَعَارِجِؕ
مِّنَ اللّٰهِ அல்லாஹ்விடமிருந்து ذِى الْمَعَارِجِؕ உயர்வுகளும் மேன்மைகளும் உடைய
70:3. மினல் லாஹி தில் ம'ஆரிஜ்
70:3. (அவ்வேதனை) உயர் வழிகளையுடைய அல்லாஹ்வினால் (ஏற்படும்).
70:4 تَعْرُجُ الْمَلٰٓٮِٕكَةُ وَ الرُّوْحُ اِلَيْهِ فِىْ يَوْمٍ كَانَ مِقْدَارُهٗ خَمْسِيْنَ اَلْفَ سَنَةٍۚ
تَعْرُجُ ஏறுகின்றனர் الْمَلٰٓٮِٕكَةُ வானவர்களும் وَ الرُّوْحُ ஜிப்ரீலும் اِلَيْهِ அவன் பக்கம் فِىْ يَوْمٍ كَانَ ஒருநாளில்/இருக்கிறது مِقْدَارُهٗ அதன் அளவு خَمْسِيْنَ اَلْفَ ஐம்பதினாயிரம் سَنَةٍۚ ஆண்டுகளாக
70:4. தஃருஜுல் மலா'இகது வர் ரூஹு இலய்ஹி Fபீ யவ்மின் கான மிக்தாருஹூ கம்ஸீன அல்Fப ஸனஹ்
70:4. ஒரு நாள் வானவர்களும், (ஜிப்ரீலாகிய) அவ்வான்மாவும், அவனிடம் ஏறிச் செல்வார்கள்; அத்தினத்தின் அளவு ஐம்பதினாயிரம் ஆண்டுகளாகும்.
70:5 فَاصْبِرْ صَبْرًا جَمِيْلًا
فَاصْبِرْ ஆகவே நீர் பொறுப்பீராக! صَبْرًا பொறுமையாக جَمِيْلًا அழகிய
70:5. Fபஸ்Bபிர் ஸBப்ரன் ஜமீலா
70:5. எனவே, நீர் அழகிய பொறுமையுடன் பொறுப்பீராக!
70:6 اِنَّهُمْ يَرَوْنَهٗ بَعِيْدًا ۙ
اِنَّهُمْ நிச்சயமாக இவர்கள் يَرَوْنَهٗ அதை பார்க்கின்றனர் بَعِيْدًا ۙ தூரமாக
70:6. இனாஹும் யரவ்னஹூ Bப'ஈதா
70:6. நிச்சயமாக அவர்கள் அதை வெகுதூரமாகக் காண்கின்றனர்.
70:7 وَّنَرٰٮهُ قَرِيْبًا ؕ
وَّنَرٰٮهُ நாம் அதை பார்க்கிறோம் قَرِيْبًا ؕ சமீபமாக
70:7. வ னராஹு கரீBபா
70:7. ஆனால், நாமோ அதனை வெகு சமீபமாகக் காண்கின்றோம்.
70:8 يَوْمَ تَكُوْنُ السَّمَآءُ كَالْمُهْلِۙ
يَوْمَ நாளில் تَكُوْنُ ஆகிவிடும் السَّمَآءُ வானம் كَالْمُهْلِۙ எண்ணையின் அடி மண்டியைப் போல்
70:8. யவ்ம தகூனுஸ் ஸமா'உ கல்முஹ்ல்
70:8. அந்நாளில் வானம் உருக்கப்பட்ட செம்பைப் போல் ஆகிவிடும்.
70:9 وَتَكُوْنُ الْجِبَالُ كَالْعِهْنِۙ
وَتَكُوْنُ இன்னும் ஆகிவிடும் الْجِبَالُ மலைகள் كَالْعِهْنِۙ முடிகளைப் போல்
70:9. வ தகூனுல் ஜிBபாலு கல்'இஹ்ன்
70:9. இன்னும், மலைகள் சாயம் ஏற்றப்பட்ட பஞ்சுபோல் ஆகிவிடும் (நாளில்).
70:10 وَلَا يَسْأَلُ حَمِيْمٌ حَمِيْمًا ۖۚ
وَلَا يَسْأَلُ விசாரிக்க மாட்டான் حَمِيْمٌ ஒரு நண்பன் حَمِيْمًا ۖۚ நண்பனைப் பற்றி
70:10. வ லா யஸ்'அலு ஹமீமுன் ஹமீமா
70:10. ஒரு நண்பன் மற்றொரு நண்பனைப் பற்றி விசாரிக்கமாட்டான்.
70:11 يُّبَصَّرُوْنَهُمْؕ يَوَدُّ الْمُجْرِمُ لَوْ يَفْتَدِىْ مِنْ عَذَابِ يَوْمِٮِٕذٍۢ بِبَنِيْهِۙ
يُّبَصَّرُوْنَهُمْؕ அவர்கள் அவர்களை காண்பிக்கப்படுவார்கள் يَوَدُّ ஆசைப்படுவான் الْمُجْرِمُ குற்றவாளி لَوْ يَفْتَدِىْ ஈடாக கொடுக்க வேண்டுமே مِنْ عَذَابِ தண்டனையிலிருந்து يَوْمِٮِٕذٍۢ அந்நாளின் بِبَنِيْهِۙ தன் பிள்ளைகளை
70:11. யுBபஸ்ஸரூனஹும்; ய வத்துல் முஜ்ரிமு லவ் யFப்ததீ மின் 'அதாBபி யவ்ம'இதிம் BபிBபனீஹ்
70:11. அவர்கள் நேருக்கு நேர் காண்பிக்கப்படுவார்கள்; ஆனால், விசாரித்துக்கொள்ள மாட்டார்கள்; குற்றவாளி அந்நாளின் வேதனைக்கு ஈடாகக் கொடுக்கப் பிரியப்படுவான், தன் மக்களையும்.
70:12 وَ صَاحِبَتِهٖ وَاَخِيْهِۙ
وَ صَاحِبَتِهٖ இன்னும் தன் மனைவியையும் وَاَخِيْهِۙ இன்னும் தன் சகோதரனையும்
70:12. வ ஸாஹிBபதிஹீ வ அகீஹ்
70:12. தன் மனைவியையும், தன் சகோதரனையும்
70:13 وَفَصِيْلَتِهِ الَّتِىْ تُــْٔوِيْهِۙ
وَفَصِيْلَتِهِ தன் குடும்பத்தையும் الَّتِىْ எது تُــْٔوِيْهِۙ தன்னை அரவணைக்கின்றது
70:13. வ Fபஸீலத்ஹில் லதீ து'வீஹ்
70:13. அவனை அரவணைத்துக் கொண்டிருந்த அவனுடைய சுற்றத்தாரையும்
70:14 وَمَنْ فِى الْاَرْضِ جَمِيْعًا ۙ ثُمَّ يُنْجِيْهِۙ
وَمَنْ فِى الْاَرْضِ பூமியில் உள்ளவர்களையும் جَمِيْعًا ۙ அனைவரையும் ثُمَّ பிறகு يُنْجِيْهِۙ அது அவனை பாதுகாக்க வேண்டும்
70:14. வ மன் Fபில் அர்ளி ஜமீ'அன் தும்ம யுன்ஜீஹ்
70:14. இன்னும், பூமியிலுள்ள அனைவரையும் (ஈடுகொடுத்துத்) தன்னைக் காப்பாற்றிக்கொள்ள(ப் பிரியப்படுவான்).
70:15 كَلَّا ؕ اِنَّهَا لَظٰىۙ
كَلَّا ؕ அவ்வாறல்ல اِنَّهَا لَظٰىۙ நிச்சயமாக அது கொழுந்து விட்டெரியும் நெருப்பாகும்
70:15. கல்லா இன்னஹா லளா
70:15. அவ்வாறு ஆவது இல்லை; ஏனெனில், நிச்சயமாக அந்நரகமாவது கொழுந்துவிட்டு எரியும் நெருப்பாகும்.
70:16 نَزَّاعَةً لِّلشَّوٰى ۖۚ
نَزَّاعَةً கழட்டிவிடக்கூடியது لِّلشَّوٰى ۖۚ தோலை
70:16. னZஜ்Zஜா'அதல் லிஷ்ஷவா
70:16. அது (தலையின்) தோலை (எரித்து) கழற்றிவிடும்.
70:17 تَدْعُوْا مَنْ اَدْبَرَ وَتَوَلّٰىۙ
تَدْعُوْا அது அழைக்கும் مَنْ எவர்கள் اَدْبَرَ புறக்கணித்தார்(கள்) وَتَوَلّٰىۙ இன்னும் விலகி சென்றார்(கள்)
70:17. தத்'ஊ மன் அத்Bபர வ தவல்லா
70:17. (நேர்வழியைப்) புறக்கணித்துப் புறங்காட்டிச் சென்றோரை அ(ந்நரகத் தீயான)து அழைக்கும்.
70:18 وَجَمَعَ فَاَوْعٰى
وَجَمَعَ இன்னும் சேகரித்தார்(கள்) فَاَوْعٰى இன்னும் பாதுகாத்தார்(கள் )
70:18. வ ஜம'அ Fப அவ்'ஆ
70:18. அன்றியும், (பொருளைச்) சேகரித்து, பிறகு (அதைத் தக்கபடி செலவுசெய்யாமல்) காத்துக் கொண்டானே (அவனையும் அது அழைக்கும்).
70:19 اِنَّ الْاِنْسَانَ خُلِقَ هَلُوْعًا ۙ
اِنَّ நிச்சயமாக الْاِنْسَانَ மனிதன் خُلِقَ படைக்கப்பட்டான் هَلُوْعًا ۙ பேராசைக்காரனாக
70:19. இன்னல் இன்ஸான குலிக ஹலூ'ஆ
70:19. நிச்சயமாக மனிதன் அவசரக்காரனாகவே படைக்கப்பட்டிருக்கிறான்.
70:20 اِذَا مَسَّهُ الشَّرُّ جَزُوْعًا ۙ
اِذَا مَسَّهُ அவனுக்கு ஏற்பட்டால் الشَّرُّ தீங்கு جَزُوْعًا ۙ மிக பதட்டக்காரனாக
70:20. இதா மஸ்ஸஹுஷ் ஷர்ரு ஜZஜூ'ஆ
70:20. அவனை ஒரு கெடுதி தொட்டுவிட்டால் பதறுகிறான்.
70:21 وَاِذَا مَسَّهُ الْخَيْرُ مَنُوْعًا ۙ
وَاِذَا مَسَّهُ இன்னும் அவனுக்கு ஏற்பட்டால் الْخَيْرُ வசதி مَنُوْعًا ۙ முற்றிலும் தடுப்பவனாக
70:21. வ இதா மஸ்ஸஹுல் கய்ரு மனூ'ஆ
70:21. ஆனால், அவனை ஒரு நன்மை தொடுமானால் (அது பிறருக்குக் கிடைக்காதவாறு) தடுத்துக் கொள்கிறான்.
70:22 اِلَّا الْمُصَلِّيْنَۙ
اِلَّا தவிர الْمُصَلِّيْنَۙ தொழுகையாளிகளை
70:22. இல்லல் முஸல்லீன்
70:22. தொழுகையாளிகளைத் தவிர.
70:23 الَّذِيْنَ هُمْ عَلٰى صَلَاتِهِمْ دَآٮِٕمُوْنَۙ
الَّذِيْنَ எவர்கள் هُمْ அவர்கள் عَلٰى صَلَاتِهِمْ தங்கள் தொழுகையில் دَآٮِٕمُوْنَۙ நிரந்தரமாக இருக்கின்றார்களோ
70:23. அல்லதீன ஹும் 'அலா ஸலாதிஹிம் தா'இமூன்
70:23. (அதாவது) தம் தொழுகையின் மீது நிலைத்திருக்கின்றார்களே அவர்கள்.
70:24 وَالَّذِيْنَ فِىْۤ اَمْوَالِهِمْ حَقٌّ مَّعْلُوْمٌۙ
وَالَّذِيْنَ فِىْۤ اَمْوَالِهِمْ இன்னும் எவர்கள்/அவர்களுடைய செல்வங்களில் حَقٌّ உரிமை مَّعْلُوْمٌۙ குறிப்பிட்ட
70:24. வல்லதீன Fபீ அம்வாலிஹிம் ஹக்குன் மஃலூம்
70:24. அவர்களது பொருட்களில் (பிறருக்கு) நிர்ணயிக்கப்பட்ட பங்கு உண்டு.
70:25 لِّلسَّآٮِٕلِ وَالْمَحْرُوْمِۙ
لِّلسَّآٮِٕلِ யாசிப்பவருக்கு(ம்) وَالْمَحْرُوْمِۙ இல்லாதவருக்கும்
70:25. லிஸ்ஸா 'இலி வல்மஹ்ரூம்
70:25. யாசிப்பவருக்கும் (வெட்கப்பட்டு) கேட்காதவருக்கும் (அவர்களின் பொருள்களில் பங்குண்டு).
70:26 وَالَّذِيْنَ يُصَدِّقُوْنَ بِيَوْمِ الدِّيْنِۙ
وَالَّذِيْنَ இன்னும் எவர்கள் يُصَدِّقُوْنَ உண்மைப்படுத்துவார்களோ بِيَوْمِ الدِّيْنِۙ கூலி நாளை
70:26. வல்லதீன யுஸத்திகூன Bபி யவ்மித் தீன்
70:26. அன்றியும், நியாயத்தீர்ப்பு நாள் உண்டென்பதை அவர்கள் மெய்ப்படுத்துகின்றனர்.
70:27 وَالَّذِيْنَ هُمْ مِّنْ عَذَابِ رَبِّهِمْ مُّشْفِقُوْنَۚ
وَالَّذِيْنَ இன்னும் எவர்கள் هُمْ அவர்கள் مِّنْ عَذَابِ தண்டனையை رَبِّهِمْ தங்கள் இறைவனின் مُّشْفِقُوْنَۚ பயப்படுகின்றார்களோ
70:27. வல்லதீன ஹும் மின் 'அதாBபி ரBப்Bபிஹிம் முஷ்Fபிகூன்
70:27. இன்னும், தம்முடைய இறைவனின் வேதனைக்கு அஞ்சியவாறு இருப்பார்களே அவர்கள்.
70:28 اِنَّ عَذَابَ رَبِّهِمْ غَيْرُ مَاْمُوْنٍ
اِنَّ عَذَابَ நிச்சயமாக தண்டனை رَبِّهِمْ அவர்களுடைய இறைவனின் غَيْرُ مَاْمُوْنٍ பயமற்று இருக்கக்கூடியது அல்ல
70:28. இன்ன 'அதாBப ரBப்Bபிஹிம் கய்ரு ம' மூன்
70:28. நிச்சயமாக அவர்களுடைய இறைவனின் வேதனை அச்சப்படாது இருக்கக்கூடியதல்ல.
70:29 وَالَّذِيْنَ هُمْ لِفُرُوْجِهِمْ حٰفِظُوْنَۙ
وَالَّذِيْنَ இன்னும் எவர்கள் هُمْ அவர்கள் لِفُرُوْجِهِمْ தங்கள் மர்மஸ்தானங்களை حٰفِظُوْنَۙ பாதுகாப்பார்களோ
70:29. வல்லதீன ஹும் லி Fபுரூஜிஹிம் ஹாFபிளூன்
70:29. அன்றியும், தங்கள் மறைவிடங்களை (கற்பை) பேணிக்கொள்கிறார்களே அவர்கள்.
70:30 اِلَّا عَلٰٓى اَزْوَاجِهِمْ اَوْ مَا مَلَـكَتْ اَيْمَانُهُمْ فَاِنَّهُمْ غَيْرُ مَلُوْمِيْنَۚ
اِلَّا தவிர عَلٰٓى اَزْوَاجِهِمْ தங்கள் மனைவிகள் اَوْ مَا مَلَـكَتْ அல்லது/சொந்தமாக்கிக் கொண்டவர்களிடம் اَيْمَانُهُمْ தங்கள் வலக்கரங்கள் فَاِنَّهُمْ நிச்சயமாக இவர்கள் غَيْرُ مَلُوْمِيْنَۚ பழிக்கப்பட மாட்டார்கள்
70:30. இல்லா 'அலா அZஜ்வாஜிஹிம் அவ் மா மலகத் அய்மானுஹும் Fப இன்னஹும் கய்ரு மலூமீன்
70:30. தம் மனைவியரிடத்திலும், தங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடத்திலும் (உறவு கொள்வதைத்) தவிர; நிச்சயமாக அவர்கள் (இத்தகையோருடன் உறவுகொள்வது பற்றி) நிந்திக்கப்படமாட்டார்கள்.
70:31 فَمَنِ ابْتَغٰى وَرَآءَ ذٰلِكَ فَاُولٰٓٮِٕكَ هُمُ الْعٰدُوْنَۚ
فَمَنِ ابْتَغٰى யார் தேடுவார்களோ وَرَآءَ ذٰلِكَ இதற்குப் பின் فَاُولٰٓٮِٕكَ هُمُ அவர்கள்தான் الْعٰدُوْنَۚ வரம்பு மீறிகள்
70:31. FபமனிBப் தகா வரா'அ தாலிக Fப உலா'இக ஹுமுல் 'ஆதூன்
70:31. எனவே, எவரேனும் இதற்கப்பால் உறவு கொள்வதைத் தேடினால் அவர்கள் (இறைவன் விதித்த) வரம்பை மீறியவர்கள்.
70:32 وَالَّذِيْنَ هُمْ لِاَمٰنٰتِهِمْ وَعَهْدِهِمْ رٰعُوْنَ ۙ
وَالَّذِيْنَ இன்னும் எவர்கள் هُمْ அவர்கள் لِاَمٰنٰتِهِمْ தங்கள் அமானிதங்களை(யும்) وَعَهْدِهِمْ தங்கள் ஒப்பந்தங்களையும் رٰعُوْنَ ۙ பேணுகின்றார்களோ
70:32. வல்லதீன ஹும் லி அமானாதிஹிம் வ 'அஹ்திஹிம் ரா'ஊன்
70:32. இன்னும், எவர்கள் தம் அமானிதங்களையும் தம் வாக்குறுதிகளையும் பேணிக்கொள்கிறார்களோ அவர்கள்.
70:33 وَالَّذِيْنَ هُمْ بِشَهٰدٰتِهِمْ قَآٮِٕمُوْنَ ۙ
وَالَّذِيْنَ இன்னும் எவர்கள் هُمْ அவர்கள் بِشَهٰدٰتِهِمْ தங்கள் சாட்சிகளை قَآٮِٕمُوْنَ ۙ நிறைவேற்றுவார்களோ
70:33. வல்லதீன ஹும் Bபி ஷஹாதாதிஹிம் கா'இமூன்
70:33. இன்னும், எவர்கள் தங்கள் சாட்சியங்களில் உறுதியுடன் இருக்கின்றார்களோ அவர்கள்.
70:34 وَالَّذِيْنَ هُمْ عَلٰى صَلَاتِهِمْ يُحَافِظُوْنَؕ
وَالَّذِيْنَ இன்னும் எவர்கள் هُمْ அவர்கள் عَلٰى صَلَاتِهِمْ தங்கள் தொழுகையை يُحَافِظُوْنَؕ பேணுவார்களோ
70:34. வல்லதீன ஹும் 'அலா ஸலாதிஹிம் யுஹாFபிளூன்
70:34. எவர்கள் தங்கள் தொழுகைகளைப் பேணிக்கொள்கிறார்களோ அவர்கள்.
70:35 اُولٰٓٮِٕكَ فِىْ جَنّٰتٍ مُّكْرَمُوْنَؕ
اُولٰٓٮِٕكَ அ(த்தகைய)வர்கள் فِىْ جَنّٰتٍ சொர்க்கங்களில் مُّكْرَمُوْنَؕ கண்ணியப்படுத்தப்படுவார்கள்
70:35. உலா'இக Fபீ ஜன்னாதிம் முக்ரமூன்
70:35. (ஆக) இத்தகையோர் தாம் சுவர்க்கங்களில் கண்ணியப்படுத்தப்பட்டவர்களாக இருப்பார்கள்.
70:36 فَمَالِ الَّذِيْنَ كَفَرُوْا قِبَلَكَ مُهْطِعِيْنَۙ
فَمَالِ الَّذِيْنَ كَفَرُوْا நிராகரித்தவர்களுக்கு என்ன நேர்ந்தது? قِبَلَكَ உம் பக்கம் مُهْطِعِيْنَۙ விரைந்து வருகின்றனர்
70:36. Fபமா லில் லதீன கFபரூ கிBபலக முஹ்தி'ஈன்
70:36. நிராகரிப்பவர்களுக்கு என்ன? (கழுத்துக்களை நீட்டியவாறு அவர்கள்) உங்கள் முன் ஓடிவருகின்றனர்.
70:37 عَنِ الْيَمِيْنِ وَعَنِ الشِّمَالِ عِزِيْنَ
عَنِ الْيَمِيْنِ வலது புறத்தில் இருந்து(ம்) وَعَنِ الشِّمَالِ இடது புறத்தில் இருந்தும் عِزِيْنَ பல கூட்டங்களாக
70:37. அனில் யமீனி வ 'அனிஷ் ஷிமாலி 'இZஜீன்
70:37. வலப்புறமிருந்தும் இடப்புறமிருந்தும் கூட்டம் கூட்டமாக.
70:38 اَيَطْمَعُ كُلُّ امْرِىءٍ مِّنْهُمْ اَنْ يُّدْخَلَ جَنَّةَ نَعِيْمٍۙ
اَيَطْمَعُ ஆசைப்படுகின்றானா? كُلُّ ஒவ்வொரு امْرِىءٍ மனிதனும் مِّنْهُمْ அவர்களில் اَنْ يُّدْخَلَ நுழைக்கப்பட வேண்டும் என்று جَنَّةَ சொர்க்கத்தில் نَعِيْمٍۙ இன்பம் நிறைந்த
70:38. அயத்ம'உ குல்லும் ரி'இம் மின்ஹும் அ(ன்)ய்யுத்கல ஜன்னத ன'ஈம்
70:38. அவர்களில் ஒவ்வொரு மனிதனும் பாக்கியமுள்ள சுவர்க்கத்தில் புகுத்தப்பட வேண்டுமென ஆசைப்படுகிறானா?
70:39 كَلَّا ؕ اِنَّا خَلَقْنٰهُمْ مِّمَّا يَعْلَمُوْنَ
كَلَّا ؕ அவ்வாறல்ல اِنَّا நிச்சயமாக நாம் خَلَقْنٰهُمْ அவர்களை படைத்தோம் مِّمَّا يَعْلَمُوْنَ அவர்கள் அறிந்திருக்கின்ற ஒன்றிலிருந்துதான்
70:39. கல்லா இன்னா கலக் னஹும் மிம்மா யஃலமூன்
70:39. அவ்வாறு (ஆகப்போவது) இல்லை; நிச்சயமாக நாம் அவர்களை அவர்கள் அறிந்திருக்கின்றார்களே, அதிலிருந்தே படைத்தோம்.
70:40 فَلَاۤ اُقْسِمُ بِرَبِّ الْمَشٰرِقِ وَالْمَغٰرِبِ اِنَّا لَقٰدِرُوْنَۙ
فَلَاۤ اُقْسِمُ சத்தியம் செய்கிறேன்! بِرَبِّ இறைவன் மீது الْمَشٰرِقِ கிழக்குகள் وَالْمَغٰرِبِ இன்னும் மேற்குகளின் اِنَّا நிச்சயமாக நாம் لَقٰدِرُوْنَۙ ஆற்றல் உள்ளவர்கள்
70:40. Fபலா உக்ஸிமு Bபி ரBப்Bபில் மஷாரிகி வல் மகாரிBபி இன்னா லகாதிரூன்
70:40. எனவே, கிழக்குத் திசைகள், மேற்குத் திசைகள் ஆகியவற்றின் இறைவன் மீது சத்தியமாக! நிச்சயமாக நாம் (விரும்பியவாறு செய்ய) ஆற்றலுடையோம்.
70:41 عَلٰٓى اَنْ نُّبَدِّلَ خَيْرًا مِّنْهُمْۙ وَمَا نَحْنُ بِمَسْبُوْقِيْنَ
عَلٰٓى اَنْ نُّبَدِّلَ நாம் மாற்றிக் கொண்டுவருவதற்கு خَيْرًا சிறந்தவர்களை مِّنْهُمْۙ இவர்களை விட وَمَا نَحْنُ நாம் அல்ல بِمَسْبُوْقِيْنَ பலவீனமானவர்கள்
70:41. 'அலா அன் னுBபத்தில கய்ரன் மின்ஹும் வமா னஹ்னு Bபி மஸ்Bபூகீன்
70:41. (அவர்களுக்குப் பதிலாக) அவர்களைவிடச் சிறந்தவர்களை நாம் மாற்றியமைப்பதில் (ஆற்றலுடையோம்); நாம் தோற்கடிக்கப்படுவோர் அல்லர்.
70:42 فَذَرْهُمْ يَخُوْضُوْا وَيَلْعَبُوْا حَتّٰى يُلٰقُوْا يَوْمَهُمُ الَّذِىْ يُوْعَدُوْنَۙ
فَذَرْهُمْ ஆகவே அவர்களை விட்டுவிடுவீராக! يَخُوْضُوْا அவர்கள் ஈடுபடட்டும்! وَيَلْعَبُوْا இன்னும் விளையாடட்டும்! حَتّٰى இறுதியாக يُلٰقُوْا அவர்கள் சந்திப்பார்கள் ! يَوْمَهُمُ அவர்களது நாளை الَّذِىْ எது يُوْعَدُوْنَۙ எச்சரிக்கப்பட்டார்கள்
70:42. Fபதர்ஹும் யகூளூ வ யல்'அBபூ ஹத்தா யுலாகூ யவ்ம ஹுமுல் லதீ யூ'அதூன்
70:42. ஆகவே, அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட அந்த நாளை அவர்கள் சந்திக்கும் வரையில், அவர்கள் விளையாடிக் கொண்டிருக்கவும் (வீணானவற்றில்) மூழ்கிக்கிடக்கவும், அவர்களை நீர் விட்டுவிடுவீராக!
70:43 يَوْمَ يَخْرُجُوْنَ مِنَ الْاَجْدَاثِ سِرَاعًا كَاَنَّهُمْ اِلٰى نُصُبٍ يُّوْفِضُوْنَۙ
يَوْمَ நாளில் يَخْرُجُوْنَ அவர்கள் வெளியேறுகின்ற مِنَ الْاَجْدَاثِ புதைக் குழிகளில் இருந்து سِرَاعًا விரைவாக كَاَنَّهُمْ போல்/அவர்களோ اِلٰى نُصُبٍ கம்பத்தின் பக்கம் يُّوْفِضُوْنَۙ விரைந்து ஓடுகின்றவர்கள்
70:43. யவ்ம யக்ருஜூன மினல் அஜ்தாதி ஸிரா'அன் க அன்ன ஹும் இலா னுஸுBபி(ன்)ய் யூFபிளூன்
70:43. நிச்சயமாக அவர்கள் (தங்கள் ஆராதனை செய்யும்) நாட்டப்பட்டவை(களான சிலைக)ளின்பால் விரைந்து செல்பவர்களைப் போல், அந்நாளில் (தங்கள்) சமாதிகளிலிருந்து விரைவாக வெளியாவார்கள்.
70:44 خَاشِعَةً اَبْصَارُهُمْ تَرْهَقُهُمْ ذِلَّةٌ ؕ ذٰلِكَ الْيَوْمُ الَّذِىْ كَانُوْا يُوْعَدُوْنَ
خَاشِعَةً கீழ்நோக்கி இருக்கும் اَبْصَارُهُمْ அவர்களின் பார்வைகள் تَرْهَقُهُمْ அவர்களை சூழ்ந்து கொள்ளும் ذِلَّةٌ ؕ இழிவு ذٰلِكَ இதுதான் الْيَوْمُ நாளாகும் الَّذِىْ كَانُوْا يُوْعَدُوْنَ எது/வாக்களிக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள்
70:44. காஷி'அதன் அBப்ஸாருஹும் தர்ஹகுஹும் தில்லஹ்; தாலிகல் யவ்முல் லதீ கானூ யூ'அதூன்
70:44. அவர்களுடைய பார்வைகள் கீழ்நோக்கியிருக்கும்; இழிவு அவர்களைச் சூழ்ந்து கொண்டிருக்கும்; அவர்கள் வாக்களிக்கப்பட்டுக் கொண்டிருந்தார்களே, அது அந்நாள்தான்.