டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம் 40. ஸூரத்துல் முஃமின்(ஈமான் கொண்டவர்)
மக்கீ, வசனங்கள்: 85
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
40:1 حٰمٓ ۚ
حٰمٓ ۚ ஹா மீம்
40:1. ஹா-மீம்
40:1. ஹா, மீம்.
40:2 تَنْزِيْلُ الْكِتٰبِ مِنَ اللّٰهِ الْعَزِيْزِ الْعَلِيْمِۙ
تَنْزِيْلُ இறக்கப்பட்டது الْكِتٰبِ இந்த வேதம் مِنَ اللّٰهِ அல்லாஹ்வின் புறத்தில் இருந்து الْعَزِيْزِ மிகைத்தவன் الْعَلِيْمِۙ நன்கறிந்தவன்
40:2. தன்Zஜீலுல் கிதாBபி மினல் லாஹில் அZஜீZஜில் 'அலீம்
40:2. (யாவரையும்) மிகைத்தோனும், மிக அறிந்தோனுமாகிய அல்லாஹ்விடமிருந்து இறக்கியருளப்பட்ட வேதம்.
40:3 غَافِرِ الذَّنْۢبِ وَقَابِلِ التَّوْبِ شَدِيْدِ الْعِقَابِ ذِى الطَّوْلِؕ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَؕ اِلَيْهِ الْمَصِيْرُ
غَافِرِ மன்னிப்பவன் الذَّنْۢبِ பாவங்களை وَقَابِلِ இன்னும் அங்கீகரிப்பவன் التَّوْبِ திருந்தி மன்னிப்புக் கோருவதை شَدِيْدِ கடுமையானவன் الْعِقَابِ தண்டிப்பதில் ذِى الطَّوْلِؕ அருள் உடையவன் لَاۤ அறவே இல்லை اِلٰهَ வணக்கத்திற்குரியவன் اِلَّا هُوَؕ அவனைத் தவிர اِلَيْهِ அவன் பக்கமே الْمَصِيْرُ மீளுமிடம்
40:3. காFபிரித் தம்Bபி வ காBபிலித் தவ்Bபி ஷதீதில் 'இகாBபி தித் தவ்லி லா இலாஹ இல்லா ஹுவ இலய்ஹில் மஸீர்
40:3. (அவன்) பாவத்தை மன்னிப்பவனும், மன்னிப்புக் கேட்பதை அங்கீகரிப்பவனும், தண்டிப்பதில் கடுமையானவனும், அருளுடையவனும் ஆவான்; அவனைத் தவிர வேறு தெய்வமில்லை; அவனிடமே (யாவரும்) மீள வேண்டியிருக்கிறது.
40:4 مَا يُجَادِلُ فِىْۤ اٰيٰتِ اللّٰهِ اِلَّا الَّذِيْنَ كَفَرُوْا فَلَا يَغْرُرْكَ تَقَلُّبُهُمْ فِى الْبِلَادِ
مَا يُجَادِلُ விவாதம் செய்ய மாட்டார்(கள்) فِىْۤ اٰيٰتِ அத்தாட்சிகளில் اللّٰهِ அல்லாஹ்வின் اِلَّا தவிர الَّذِيْنَ كَفَرُوْا நிராகரித்தவர்களை فَلَا يَغْرُرْكَ ஆகவே, உம்மை மயக்கிவிட வேண்டாம் تَقَلُّبُهُمْ அவர்கள் சுற்றித்திரிவது فِى الْبِلَادِ நகரங்களில்
40:4. மா யுஜாதிலு Fபீ ஆயாதில் லாஹி இல்லல் லதீன கFபரூ Fபலா யக்ருர்க தகல்லுBபுஹும் Fபில் Bபிலாத்
40:4. நிராகரிப்பவர்களைத் தவிர (வேறு எவரும்) அல்லாஹ்வின் வசனங்களைப் பற்றி தர்க்கம் செய்யமாட்டார்கள்; ஆகவே, பட்டணங்களில் அவர்களுடைய (ஆடம்பர) நடமாட்டம் உம்மை ஏமாற்றிவிட வேண்டாம்.
40:5 كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوْحٍ وَّ الْاَحْزَابُ مِنْۢ بَعْدِهِمْ وَهَمَّتْ كُلُّ اُمَّةٍۢ بِرَسُوْلِهِمْ لِيَاْخُذُوْهُ ؕ وَجَادَلُوْا بِالْبَاطِلِ لِيُدْحِضُوْا بِهِ الْحَقَّ فَاَخَذْتُهُمْ فَكَيْفَ كَانَ عِقَابِ
كَذَّبَتْ பொய்ப்பித்தனர் قَبْلَهُمْ இவர்களுக்கு முன்னர் قَوْمُ மக்களும் نُوْحٍ நூஹூடைய وَّ الْاَحْزَابُ இராணுவங்களும் مِنْۢ بَعْدِهِمْ அவர்களுக்குப் பின்னர் وَهَمَّتْ இன்னும் நாடினார்கள் كُلُّ எல்லா اُمَّةٍۢ சமுதாயத்தினரும் بِرَسُوْلِهِمْ தங்களது தூதரை لِيَاْخُذُوْهُ ؕ அவரைதண்டிப்பதற்கு وَجَادَلُوْا இன்னும் தர்க்கம் செய்தனர் بِالْبَاطِلِ அசத்தியத்தைக் கொண்டு لِيُدْحِضُوْا அவர்கள் அழிப்பதற்காக بِهِ அதன் மூலம் الْحَقَّ சத்தியத்தை فَاَخَذْتُهُمْ ஆகவே, நான் அவர்களைப் பிடித்தேன் فَكَيْفَ எப்படி? كَانَ இருந்தது عِقَابِ எனது தண்டனை
40:5. கத்தBபத் கBப்லஹும் கவ்மு னூஹி(ன்)வ் வல் அஹ்ZஜாBபு மின் Bபஃதிஹிம் வ ஹம்மத் குல்லு உம்மதின் Bபி ரஸூலிஹிம் லி ய'குதூஹு வ ஜாதலூ Bபில்Bபாதிலி லி யுத் ஹிளூ Bபிஹில் ஹக்க Fப அகத்துஹும் Fப கய்Fப கான 'இகாBப்
40:5. இவர்களுக்கு முன்னரே நூஹின் சமூகத்தாரும், அவர்களுக்குப் பிந்திய கூட்டங்களும் (நபிமார்களைப்) பொய்ப்பித்தார்கள்; அன்றியும், ஒவ்வொரு சமுதாயமும் தன்னிடம் வந்த தூதர்களைப் (குற்றம் கண்டு) பிடிக்கக் கருதி, உண்மையை அழித்துவிடுவதற்காகப் பொய்யைக் கொண்டும் தர்க்கம் செய்தது; ஆனால், நான் அவர்களைப் பிடித்தேன்; (இதற்காக அவர்கள் மீது விதிக்கப்பெற்ற என் தண்டனை எவ்வாறு இருந்தது?)
40:6 وَكَذٰلِكَ حَقَّتْ كَلِمَتُ رَبِّكَ عَلَى الَّذِيْنَ كَفَرُوْۤا اَنَّهُمْ اَصْحٰبُ النَّارِ ؔۘ
وَكَذٰلِكَ இவ்வாறுதான் حَقَّتْ உறுதியாகி விட்டது كَلِمَتُ வாக்கு رَبِّكَ உமது இறைவனின் عَلَى الَّذِيْنَ كَفَرُوْۤا நிராகரித்தவர்கள் மீது اَنَّهُمْ நிச்சயமாக அவர்கள் اَصْحٰبُ النَّارِ ؔۘ நரகவாசிகள்
40:6. வ கதாலிக ஹக்கத் கலிமது ரBப்Bபிக 'அலல் லதீன கFபரூ அன்னஹும் அஸ்ஹாBபுன் னார்
40:6. இவ்வாறே நிராகரிப்பவர்கள் மீது: நிச்சயமாக அவர்கள் நரகவாசிகள்தாம் என்ற உம்முடைய இறைவனின் வாக்கு உறுதியாகிவிட்டது.
40:7 اَلَّذِيْنَ يَحْمِلُوْنَ الْعَرْشَ وَمَنْ حَوْلَهٗ يُسَبِّحُوْنَ بِحَمْدِ رَبِّهِمْ وَيُؤْمِنُوْنَ بِهٖ وَيَسْتَغْفِرُوْنَ لِلَّذِيْنَ اٰمَنُوْا ۚ رَبَّنَا وَسِعْتَ كُلَّ شَىْءٍ رَّحْمَةً وَّعِلْمًا فَاغْفِرْ لِلَّذِيْنَ تَابُوْا وَاتَّبَعُوْا سَبِيْلَكَ وَقِهِمْ عَذَابَ الْجَحِيْمِ
اَلَّذِيْنَ يَحْمِلُوْنَ சுமப்பவர்களும் الْعَرْشَ அர்ஷை وَمَنْ حَوْلَهٗ அதைச் சுற்றி இருப்பவர்களும் يُسَبِّحُوْنَ துதிக்கின்றனர் بِحَمْدِ புகழை رَبِّهِمْ தங்கள் இறைவனின் وَيُؤْمِنُوْنَ بِهٖ இன்னும் அவனை நம்பிக்கை கொள்கின்றனர் وَيَسْتَغْفِرُوْنَ இன்னும் பாவமன்னிப்புக் கோருகின்றனர் لِلَّذِيْنَ اٰمَنُوْا ۚ நம்பிக்கை கொண்டவர்களுக்காக رَبَّنَا எங்கள் இறைவா وَسِعْتَ நீ விசாலமடைந்து இருக்கின்றாய் كُلَّ شَىْءٍ எல்லாவற்றையும் رَّحْمَةً கருணையாலும் وَّعِلْمًا இன்னும் கல்வியாலும் فَاغْفِرْ ஆகவே மன்னிப்பாயாக! لِلَّذِيْنَ تَابُوْا திருந்தி மன்னிப்புக் கோரியவர்களை وَاتَّبَعُوْا இன்னும் பின்பற்றினார்கள் سَبِيْلَكَ உனது பாதையை وَقِهِمْ இன்னும் அவர்களை பாதுகாப்பாயாக! عَذَابَ வேதனையை விட்டு الْجَحِيْمِ நரகத்தின்
40:7. அல்லதீன யஹ்மிலூனல் 'அர்ஷ வ மன் ஹவ்லஹூ யுஸBப்Bபிஹூன Bபிஹம்தி ரBப்Bபிஹிம் வ யு'மினூன Bபிஹீ வ யஸ்தக்Fபிரூன லில்லதீன ஆமனூ ரBப்Bபனா வஸிஃத குல்ல ஷய்'இர் ரஹ்மத(ன்)வ் வ 'இல்மன் Fபக்Fபிர் லில்லதீன தாBபூ வத்தBப'ஊ ஸBபீலக வ கிஹிம் 'அதாBபல் ஜஹீம்
40:7. அர்ஷை (அரியாசனத்தை)ச் சுமந்து கொண்டிருப்பவர்களும், அதைச் சுற்றியுள்ளவர்களும் தங்கள் இறைவனின் புகழைக்கொண்டு அவனைத் துதி செய்துகொண்டு இருக்கிறார்கள்; அவன் மீது நம்பிக்கை வைக்கிறார்கள்; மேலும், நம்பிக்கை கொண்டவர்களுக்காக மன்னிப்புக் கோருகின்றனர்; "எங்கள் இறைவனே! நீ அருளாலும், ஞானத்தாலும் எல்லாப் பொருட்களையும் சூழ்ந்து இருக்கிறாய்! எனவே, பாவமீட்சி கோரி உன் வழியைப் பின்பற்றுபவர்களுக்கு, நீ மன்னிப்பளிப்பாயாக! இன்னும், அவர்களை நரக வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!"
40:8 رَبَّنَا وَاَدْخِلْهُمْ جَنّٰتِ عَدْنِ اۨلَّتِىْ وَعَدْتَّهُمْ وَمَنْ صَلَحَ مِنْ اٰبَآٮِٕهِمْ وَاَزْوَاجِهِمْ وَذُرِّيّٰتِهِمْ ؕ اِنَّكَ اَنْتَ الْعَزِيْزُ الْحَكِيْمُ ۙ
رَبَّنَا எங்கள் இறைவா! وَاَدْخِلْهُمْ இன்னும் அவர்களை நுழைப்பாயாக! جَنّٰتِ சொர்க்கங்களில் عَدْنِ அத்ன் اۨلَّتِىْ எதை وَعَدْتَّهُمْ அவர்களுக்கு வாக்களித்திருக்கின்றாய் وَمَنْ صَلَحَ நல்லவர்களாக இருந்தவர்களை مِنْ اٰبَآٮِٕهِمْ அவர்களின் பெற்றோர்கள் وَاَزْوَاجِهِمْ அவர்களின் மனைவிகள் وَذُرِّيّٰتِهِمْ ؕ அவர்களின் சந்ததிகளில் اِنَّكَ اَنْتَ நிச்சயமாக நீதான் الْعَزِيْزُ மிகைத்தவன் الْحَكِيْمُ ۙ மகா ஞானவான்
40:8. ரBப்Bபனா வ அத்கில்ஹும் ஜன்னாதி 'அத்னினில் லதீ வ'அத்தஹும் வ மன் ஸலஹ மின் ஆBபா'இஹிம் வ அZஜ்வாஜிஹிம் வ துர்ரிய்யாதிஹிம்; இன்னக அன்தல் 'அZஜீZஜுல் ஹகீம்
40:8. "எங்கள் இறைவனே! நீ அவர்களுக்கு வாக்களித்திருக்கும் நிலையான சுவர்க்கங்களில் அவர்களையும், அவர்கள் மூதாதையர்களிலும், அவர்கள் மனைவியர்களிலும், அவர்கள் சந்ததியர்களிலும் யார் நல்லோராகிவிட்டனரோ அவர்களையும் பிரவேசிக்கச் செய்வாயாக! நிச்சயமாக நீதான் (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்."
40:9 وَقِهِمُ السَّيِّاٰتِ ؕ وَمَنْ تَقِ السَّيِّاٰتِ يَوْمَٮِٕذٍ فَقَدْ رَحِمْتَهٗ ؕ وَذٰ لِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيْمُ
وَقِهِمُ இன்னும் அவர்களை பாதுகாப்பாயாக! السَّيِّاٰتِ ؕ தீமைகளை விட்டு وَمَنْ تَقِ நீங்கள் எவரை பாதுகாப்பாயோ السَّيِّاٰتِ தீமைகளை விட்டு يَوْمَٮِٕذٍ அன்றைய தினம் فَقَدْ திட்டமாக رَحِمْتَهٗ ؕ அவர் மீது நீ கருணை புரிந்துவிட்டாய் وَذٰ لِكَ هُوَ அதுதான் الْفَوْزُ வெற்றியாகும் الْعَظِيْمُ மகத்தான
40:9. வ கிஹிமுஸ் ஸய்யிஆத்; வ மன் தகிஸ் ஸய்யிஆதி யவ்ம'இதின் Fபகத் ரஹிம்தஹ்; வ தாலிக ஹுவல் Fபவ்Zஜுல் 'அளீம்
40:9. "இன்னும், அவர்களைத் தீமைகளிலிருந்து காப்பாயாக! அந்நாளில் நீ யாரை தீமைகளிலிருந்து காத்துக்கொள்கிறாயோ, அவருக்கு நிச்சயமாக நீ அருள் புரிந்துவிட்டாய்; அதுவே, மகத்தான வெற்றியாகும்" (என்றும் கூறுவர்).
40:10 اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا يُنَادَوْنَ لَمَقْتُ اللّٰهِ اَكْبَرُ مِنْ مَّقْتِكُمْ اَنْفُسَكُمْ اِذْ تُدْعَوْنَ اِلَى الْاِيْمَانِ فَتَكْفُرُوْنَ
اِنَّ நிச்சயமாக الَّذِيْنَ كَفَرُوْا நிராகரிப்பவர்கள் يُنَادَوْنَ அழைக்கப்படுவார்கள் لَمَقْتُ கோபிப்பது اللّٰهِ அல்லாஹ் اَكْبَرُ மிகப் பெரியது مِنْ مَّقْتِكُمْ நீங்கள் கோபிப்பதை விட اَنْفُسَكُمْ உங்களை اِذْ تُدْعَوْنَ நீங்கள் அழைக்கப்பட்டபோது اِلَى الْاِيْمَانِ நம்பிக்கை கொள்வதற்கு فَتَكْفُرُوْنَ நிராகரித்தீர்கள்
40:10. இன்னல் லதீன கFபரூ யுனாதவ்ன லமக்துல் லாஹி அக்Bபரு மிம் மக்திகும் அன்Fபுஸகும் இத் துத்'அவ்ன இலல் ஈமானி Fபதக்Fபுரூன்
40:10. நிச்சயமாக நிராகரித்துவிட்டார்களே அவர்கள் "இன்று உங்களையே நீங்கள் கோபித்துக் கொள்வதைவிட அல்லாஹ்வுடைய கோபம் மிகப் பெரியதாகும்; ஏனென்றால், நீங்கள் நம்பிக்கையின் பால் அழைக்கப்பட்டபோது (அதை) நிராகரித்து விட்டீர்களே" என்று (மறுமையில் வானவர்களால்) அழைக்கப்(பட்டுக் கூறப்)படுவார்கள்.
40:11 قَالُوْا رَبَّنَاۤ اَمَتَّنَا اثْنَتَيْنِ وَاَحْيَيْتَنَا اثْنَتَيْنِ فَاعْتَرَفْنَا بِذُنُوْبِنَا فَهَلْ اِلٰى خُرُوْجٍ مِّنْ سَبِيْلٍ
قَالُوْا அவர்கள் கூறுவார்கள் رَبَّنَاۤ எங்கள் இறைவா! اَمَتَّنَا நீ எங்களுக்கு மரணத்தைக் கொடுத்தாய் اثْنَتَيْنِ இருமுறை وَاَحْيَيْتَنَا எங்களுக்கு வாழ்க்கையைக் கொடுத்தாய் اثْنَتَيْنِ இருமுறை فَاعْتَرَفْنَا நாங்கள் ஒப்புக் கொண்டோம் بِذُنُوْبِنَا எங்கள் பாவங்களை فَهَلْ اِلٰى خُرُوْجٍ வெளியேறுவதற்கு ஏதேனும் உண்டா? مِّنْ سَبِيْلٍ வழி
40:11. காலூ ரBப்Bபனா அமத் தனத்னதய்னி வ அஹ்யய்தனத் னதய்னி FபஃதரFப்னா Bபிதுனூ Bபினா Fபஹல் இலா குரூஜிம் மின் ஸBபீல்
40:11. அதற்கவர்கள்: "எங்கள் இறைவனே! நீ எங்களை இரு முறை மரணமடையச் செய்தாய்; இருமுறை நீ எங்களை உயிர்ப்பித்தாய்; ஆகையால், நாங்கள் (இப்பொழுது) எங்கள் பாவங்களை ஒப்புக் கொண்டோம்; எனவே, (இதிலிருந்து தப்பி) வெளியேற ஏதும் வழியுண்டா?" எனக் கூறுவர்.
40:12 ذٰ لِكُمْ بِاَنَّهٗۤ اِذَا دُعِىَ اللّٰهُ وَحْدَهٗ كَفَرْتُمْ ۚ وَاِنْ يُّشْرَكْ بِهٖ تُؤْمِنُوْا ؕ فَالْحُكْمُ لِلّٰهِ الْعَلِىِّ الْكَبِيْرِ
ذٰ لِكُمْ இது بِاَنَّهٗۤ ஏனென்றால் நிச்சயமாக اِذَا دُعِىَ அழைக்கப்பட்டால் اللّٰهُ அல்லாஹ் وَحْدَهٗ அவன் ஒருவனை மட்டும் كَفَرْتُمْ ۚ நீங்கள் நிராகரித்தீர்கள் وَاِنْ يُّشْرَكْ இணை வைக்கப்பட்டால் بِهٖ அவனுக்கு تُؤْمِنُوْا ؕ நம்பிக்கை கொள்கிறீர்கள் فَالْحُكْمُ எல்லா அதிகாரமும் لِلّٰهِ அல்லாஹ்வுக்கே الْعَلِىِّ மிக உயர்ந்தவனும் الْكَبِيْرِ மிகப் பெரியவனுமாகிய
40:12. தாலிகும் Bபி அன்னஹூ இதா து'இயல் லாஹு வஹ்தஹூ கFபர்தும் வ இ(ன்)ய் யுஷ்ரக் Bபிஹீ து'மினூ; Fபல்ஹுக்மு லில்லாஹில் 'அலிய்யில் கBபீர்
40:12. (பதில் கூறப்படும்:) "அதற்குக் காரணம் அல்லாஹ் ஒருவனே (வணக்கத்திற்குரியவன்; எனவே, அவனையே வணங்குங்கள்) என்று அழைக்கப்பட்டபோது, நீங்கள் நிராகரித்தீர்கள், ஆனால், அவனுக்கு (எதையும்) இணையாக்கப்பட்டபோது, (அதன் மீது) நீங்கள் நம்பிக்கை கொண்டீர்கள்; ஆகவே, இத்தீர்ப்பு மிக்க மேலானவனும், மிக்க பெரியவனுமான அல்லாஹ்வுக்கே உரியது."
40:13 هُوَ الَّذِىْ يُرِيْكُمْ اٰيٰتِهٖ وَيُنَزِّلُ لَـكُمْ مِّنَ السَّمَآءِ رِزْقًا ؕ وَمَا يَتَذَكَّرُ اِلَّا مَنْ يُّنِيْبُ
هُوَ الَّذِىْ அவன்தான் يُرِيْكُمْ உங்களுக்கு காண்பிக்கின்றான் اٰيٰتِهٖ தனது அத்தாட்சிகளை وَيُنَزِّلُ இறக்குகின்றான் لَـكُمْ உங்களுக்கு مِّنَ السَّمَآءِ வானத்திலிருந்து رِزْقًا ؕ உணவை وَمَا يَتَذَكَّرُ நல்லுபதேசம் பெற மாட்டார்கள் اِلَّا مَنْ يُّنِيْبُ திரும்புகின்றவர்களைத் தவிர
40:13. ஹுவல் லதீ யுரீகும் ஆயாதிஹீ வ யுனZஜ்Zஜிலு லகும் மினஸ் ஸமா'இ ரிZஜ்கா; வமா யததக்கரு இல்லா மய் யுனீBப்
40:13. அவனே தன் அத்தாட்சிகளை உங்களுக்குக் காண்பிக்கிறான்; உங்களுக்கு வானத்திலிருந்து உணவையும் இறக்கிவைக்கிறான்; எனவே, (அவனையே) முன்னோக்குபவர்களைத் தவிர (வேறு யாரும்) படிப்பினை பெறமாட்டார்கள்.
40:14 فَادْعُوا اللّٰهَ مُخْلِصِيْنَ لَهُ الدِّيْنَ وَلَوْ كَرِهَ الْـكٰفِرُوْنَ
فَادْعُوا ஆகவே அழையுங்கள் اللّٰهَ அல்லாஹ்வை مُخْلِصِيْنَ لَهُ அவனுக்கு பரிசுத்தமாக்கியவர்களாக الدِّيْنَ வழிபாடுகளை وَلَوْ كَرِهَ வெறுத்தாலும் சரியே! الْـكٰفِرُوْنَ நிராகரிப்பவர்கள்
40:14. Fபத்'உல் லாஹ முக்லிஸீன லஹுத் தீன வ லவ் கரிஹல் காFபிரூன்
40:14. ஆகவே, நிராகரிப்பாளர்கள் வெறுத்தபோதிலும், நீங்கள் அல்லாஹ்வையே - முற்றிலும் வணக்கத்தை அவனுக்கே கலப்பற்றவர்களாக்கி வைக்கின்றவர்களாக - அழையுங்கள்.
40:15 رَفِيْعُ الدَّرَجٰتِ ذُو الْعَرْشِ ۚ يُلْقِى الرُّوْحَ مِنْ اَمْرِهٖ عَلٰى مَنْ يَّشَآءُ مِنْ عِبَادِهٖ لِيُنْذِرَ يَوْمَ التَّلَاقِ ۙ
رَفِيْعُ உயர்த்தக்கூடியவன் الدَّرَجٰتِ அந்தஸ்துகளை ذُو الْعَرْشِ ۚ அர்ஷுடையவன் يُلْقِى இறக்கினான் الرُّوْحَ வஹ்யை مِنْ اَمْرِهٖ தனது கட்டளையை உள்ளடக்கிய عَلٰى مَنْ يَّشَآءُ தான் நாடியவர் மீது مِنْ عِبَادِهٖ தனது அடியார்களில் لِيُنْذِرَ அவர்எச்சரிப்பதற்காக يَوْمَ التَّلَاقِ ۙ சந்திக்கின்ற நாளைப் பற்றி
40:15. ரFபீ'உத் தரஜாதி துல் 'அர்ஷி யுல்கிர் ரூஹ மின் அம்ரிஹீ 'அலா மய் யஷா'உ மின் 'இBபாதிஹீ லியுன்திர யவ்மத் தலாக்
40:15. (அவனே) அந்தஸ்துகளை உயர்த்துபவன்; அர்ஷுக்குரியவன்; சந்திப்புக்குரிய (இறுதி) நாளைப் பற்றி அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக தன் அடியார்களில் தான் நாடியவர்கள் மீது, தன் கட்டளையினால் வஹீயை இறக்கிவைக்கிறான்.
40:16 يَوْمَ هُمْ بَارِزُوْنَ ۚ لَا يَخْفٰى عَلَى اللّٰهِ مِنْهُمْ شَىْءٌ ؕ لِمَنِ الْمُلْكُ الْيَوْمَ ؕ لِلّٰهِ الْوَاحِدِ الْقَهَّارِ
يَوْمَ நாளை(ப் பற்றி) هُمْ அவர்கள் بَارِزُوْنَ ۚ வெளிப்பட்டு நிற்பார்கள் لَا يَخْفٰى மறைந்துவிடாது عَلَى முன்னால் اللّٰهِ அல்லாஹ்வின் مِنْهُمْ அவர்களில் شَىْءٌ ؕ எதுவும் لِمَنِ யாருக்கு உரியது? الْمُلْكُ ஆட்சி الْيَوْمَ ؕ இன்று لِلّٰهِ அல்லாஹ்விற்கே உரியது الْوَاحِدِ ஒருவனும் الْقَهَّارِ அடக்கி ஆள்பவனுமாகிய
40:16. யவ்ம ஹும் BபாரிZஜூன லா யக்Fபா 'அலல் லாஹி மின்ஹும் ஷய்; லிமனில் முல்குல் யவ்ம லில்லாஹில் வாஹிதில் கஹ்ஹார்
40:16. அந்நாளில் அவர்கள் வெளிப்பட்டு வருவார்கள்; அவர்களுடைய எந்த விஷயமும் அல்லாஹ்வுக்கு மறைந்ததாக இருக்காது. ஆட்சி இன்று யாருக்கு? ஏகனாகிய அடக்கியாளும் அல்லாஹ்வுக்கேயாகும்.
40:17 اَ لْيَوْمَ تُجْزٰى كُلُّ نَـفْسٍۢ بِمَا كَسَبَتْ ؕ لَا ظُلْمَ الْيَوْمَ ؕ اِنَّ اللّٰهَ سَرِيْعُ الْحِسَابِ
اَ لْيَوْمَ இன்று تُجْزٰى கூலி கொடுக்கப்படும் كُلُّ எல்லா نَـفْسٍۢ ஆன்மாவுக்கும் بِمَا كَسَبَتْ ؕ அவைசெய்தவற்றுக்கு لَا ظُلْمَ எவ்வித அநியாயமும் இருக்காது الْيَوْمَ ؕ இன்று اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் سَرِيْعُ மிக விரைவானவன் الْحِسَابِ விசாரிப்பதில்
40:17. அல்-யவ்ம துஜ்Zஜா குல்லு னFப்ஸிம் Bபிமா கஸBபத்; லா ளுல்மல் யவ்ம்; இன்னல் லாஹ ஸரீ'உல் ஹிஸாBப்
40:17. இன்று ஒவ்வோர் ஆத்மாவும் அது சம்பாதித்ததைக் கொண்டு கூலி கொடுக்கப்படும்; இன்று எந்த அநியாயமும் இல்லை; நிச்சயமாக அல்லாஹ் கேள்வி கணக்குக் கேட்பதில் மிகவும் தீவிரமானவன்.
40:18 وَاَنْذِرْهُمْ يَوْمَ الْاٰزِفَةِ اِذِ الْقُلُوْبُ لَدَى الْحَـنَاجِرِ كٰظِمِيْنَ ؕ مَا لِلظّٰلِمِيْنَ مِنْ حَمِيْمٍ وَّلَا شَفِيْعٍ يُّطَاعُ ؕ
وَاَنْذِرْهُمْ அவர்களை நீர் எச்சரிப்பீராக! يَوْمَ الْاٰزِفَةِ நெருங்கி வரக்கூடிய நாளைப் பற்றி اِذِ போது الْقُلُوْبُ உள்ளங்கள் لَدَى الْحَـنَاجِرِ தொண்டைகளுக்கு அருகில் كٰظِمِيْنَ ؕ துக்கம் நிறைந்தவர்களாக مَا لِلظّٰلِمِيْنَ அந்த அநியாயக்காரர்களுக்கு இருக்கமாட்டார் مِنْ حَمِيْمٍ நண்பர் எவரும் وَّلَا شَفِيْعٍ இன்னும் ஒரு பரிந்துரையாளரும் இருக்க மாட்டார் يُّطَاعُ ؕ ஏற்றுக்கொள்ளப்படுகின்றார்
40:18. வ அன்திர்ஹும் யவ்மல் ஆZஜிFபதி இதில் குலூBபு லதல் ஹனாஜிரி காளிமீன்; மா லிள்ளாலிமீன மின் ஹமீமி(ன்)வ் வலா ஷFபீ'இ(ன்)ய்-யுதா'
40:18. (நபியே!) அண்மையில் வரும் (கியாம) நாளைப் பற்றி அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக! இதயங்கள் விசனத்தால் நிரம்பி தொண்டைக்குழிகளுக்கு வரும் (அவ்) வேளையில், அநியாயக்காரர்களுக்கு (இரக்கப்படும்) உற்ற நண்பனோ, ஏற்றுக்கொள்ளப்படும் சிபாரிசு செய்பவனோ இருக்கமாட்டான்.
40:19 يَعْلَمُ خَآٮِٕنَةَ الْاَعْيُنِ وَمَا تُخْفِى الصُّدُوْرُ
يَعْلَمُ அவன் நன்கறிவான் خَآٮِٕنَةَ மோசடிகளையும் الْاَعْيُنِ கண்களின் وَمَا تُخْفِى மறைப்பதையும் الصُّدُوْرُ நெஞ்சங்கள்
40:19. யஃலமு கா'இனதல் அஃயுனி வமா துக்Fபிஸ் ஸுதூர்
40:19. கண்கள் செய்யும் மோசத்தையும், உள்ளங்கள் மறைத்து வைப்பதையும் அவன் நன்கு அறிகிறான்.
40:20 وَاللّٰهُ يَقْضِىْ بِالْحَقِّؕ وَالَّذِيْنَ يَدْعُوْنَ مِنْ دُوْنِهٖ لَا يَقْضُوْنَ بِشَىْءٍؕ اِنَّ اللّٰهَ هُوَ السَّمِيْعُ الْبَصِيْرُ
وَاللّٰهُ அல்லாஹ் يَقْضِىْ தீர்ப்பளிக்கின்றான் بِالْحَقِّؕ உண்மையைத்தான் وَالَّذِيْنَ எவர்களை يَدْعُوْنَ அவர்கள் அழைக்கின்றார்களோ مِنْ دُوْنِهٖ அவனையன்றி لَا يَقْضُوْنَ அவர்கள் தீர்ப்பளிக்க மாட்டார்கள் بِشَىْءٍؕ எதையும் اِنَّ நிச்சயமாக اللّٰهَ هُوَ அல்லாஹ்தான் السَّمِيْعُ நன்கு செவிமடுப்பவன் الْبَصِيْرُ உற்று நோக்குபவன்
40:20. வல்லாஹு யக்ளீ Bபில்ஹக்க், வல்லதீன யத்'ஊன மின் தூனிஹீ லா யக்ளூன Bபிஷய்'; இன்னல் லாஹ ஹுவஸ் ஸமீ'உல் Bபஸீர்
40:20. மேலும், அல்லாஹ் உண்மையைக் கொண்டே தீர்ப்பளிப்பான்; அன்றியும், அவனையன்றி அவர்கள் (வேறு) எவர்களை அழைத்(துப் பிரார்த்தித்)தார்களோ, அவர்கள் யாதொரு விஷயத்தைப் பற்றியும் தீர்ப்புச் செய்யமாட்டார்கள்; நிச்சயமாக அல்லாஹ் அவனே (யாவற்றையும்) செவியேற்பவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான்.
40:21 اَوَلَمْ يَسِيْرُوْا فِى الْاَرْضِ فَيَنْظُرُوْا كَيْفَ كَانَ عَاقِبَةُ الَّذِيْنَ كَانُوْا مِنْ قَبْلِهِمْؕ كَانُوْا هُمْ اَشَدَّ مِنْهُمْ قُوَّةً وَّاٰثَارًا فِى الْاَرْضِ فَاَخَذَهُمُ اللّٰهُ بِذُنُوْبِهِمْؕ وَمَا كَانَ لَهُمْ مِّنَ اللّٰهِ مِنْ وَّاقٍ
اَوَلَمْ يَسِيْرُوْا அவர்கள் சுற்றுப் பயணம் செய்யவி்ல்லையா? فِى الْاَرْضِ பூமியில் فَيَنْظُرُوْا பார்த்திருப்பார்களே! كَيْفَ كَانَ எப்படி இருந்தது عَاقِبَةُ முடிவு الَّذِيْنَ كَانُوْا مِنْ قَبْلِهِمْؕ தங்களுக்கு முன்னுள்ளவர்களின் كَانُوْا இருந்தார்கள் هُمْ அவர்கள் اَشَدَّ மிகபலசாலிகளாகவும் مِنْهُمْ இவர்களை விட قُوَّةً (உடல்) வலிமையால் وَّاٰثَارًا இன்னும் அடையாளங்களால் فِى الْاَرْضِ பூமியில் فَاَخَذَ தண்டித்தான் هُمُ அவர்களை اللّٰهُ அல்லாஹ் بِذُنُوْبِهِمْؕ அவர்களின் பாவங்களினால் وَمَا كَانَ இருக்கவில்லை لَهُمْ அவர்களை مِّنَ اللّٰهِ அல்லாஹ்விடமிருந்து مِنْ وَّاقٍ பாதுகாப்பவர் எவரும்
40:21. அவலம் யஸீரூ Fபில் அர்ளி Fப யன்ளுரூ கய்Fப கான 'ஆகிBபதுல் லதீன கானூ மின் கBப்லிஹிம்; கானூ ஹும் அஷத்த மின்ஹும் குவ்வத(ன்)வ் வ ஆதாரன் Fபில் அர்ளி Fப அகதஹுமுல் லாஹு BபிதுனூBபிஹிம் வமா கான லஹும் மினல் லாஹி மி(ன்)வ் வாக்
40:21. இவர்கள் பூமியில் பயணம் செய்து, இவர்களுக்கு முன் இருந்தவர்களின் முடிவு எப்படியிருந்தது என்பதைப் பார்க்கவில்லையா? அவர்கள், பலத்தாலும், பூமியில் (விட்டுச்சென்ற பூர்வ) சின்னங்களாலும் இவர்களைவிட வலிமையுடையவர்களாகவே இருந்தார்கள்; ஆனால், அவர்களின் பாவங்களின் காரணமாக அவர்களை அல்லாஹ் பிடித்துக்கொண்டான்; இன்னும், அல்லாஹ்விடம் இருந்து அவர்களைக் காப்பாற்றுபவர் எவரும் இல்லை.
40:22 ذٰلِكَ بِاَنَّهُمْ كَانَتْ تَّاْتِيْهِمْ رُسُلُهُمْ بِالْبَيِّنٰتِ فَكَفَرُوْا فَاَخَذَهُمُ اللّٰهُؕ اِنَّهٗ قَوِىٌّ شَدِيْدُ الْعِقَابِ
ذٰلِكَ بِاَنَّهُمْ அதற்கு காரணம் நிச்சயமாக அவர்கள் كَانَتْ تَّاْتِيْهِمْ அவர்களிடம் வந்து கொண்டிருந்தார்கள் رُسُلُهُمْ அவர்களின் தூதர்கள் بِالْبَيِّنٰتِ தெளிவான அத்தாட்சிகளுடன் فَكَفَرُوْا ஆனால், அவர்கள் நிராகரித்தார்கள் فَاَخَذَ ஆகவே தண்டித்தான் هُمُ அவர்களை اللّٰهُؕ அல்லாஹ் اِنَّهٗ நிச்சயமாக அவன் قَوِىٌّ வலிமை மிக்கவன் شَدِيْدُ الْعِقَابِ தண்டிப்பதில் கடுமையானவன்
40:22. தாலிக Bபி அன்னஹும் கானத் தா'தீஹிம் ருஸுலுஹும் Bபில்Bபய்யினாதி FபகFபரூ Fப அகதஹுமுல் லாஹ்; இன்னஹூ கவிய்யுன் ஷதீதுல் 'இகாBப்
40:22. அது (ஏனெனில்), நிச்சயமாக அவர்களிடம் அவர்களின் தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளுடன் வந்தார்கள்; ஆனால், அவர்கள் நிராகரித்தனர்; ஆகவே, அல்லாஹ் அவர்களைப் பிடித்தான்; நிச்சயமாக அவன் (அல்லாஹ்) வலிமைமிக்கவன்; தண்டிப்பதில் கடுமையானவன்.
40:23 وَلَقَدْ اَرْسَلْنَا مُوْسٰى بِاٰيٰتِنَا وَسُلْطٰنٍ مُّبِيْنٍۙ
وَلَقَدْ திட்டவட்டமாக اَرْسَلْنَا அனுப்பினோம் مُوْسٰى மூஸாவை بِاٰيٰتِنَا நமது அத்தாட்சிகளுடன் وَسُلْطٰنٍ இன்னும் ஆதாரத்துடன் مُّبِيْنٍۙ தெளிவான
40:23. வ லகத் அர்ஸல்னா மூஸா Bபி ஆயாதினா வ ஸுல்தானிம் முBபீன்
40:23. மெய்யாக நாம் மூஸாவுக்கு நம்முடைய அத்தாட்சிகளையும், தெளிவான சான்றையும் கொடுத்தனுப்பினோம்.
40:24 اِلٰى فِرْعَوْنَ وَ هَامٰنَ وَقَارُوْنَ فَقَالُوْا سٰحِرٌ كَذَّابٌ
اِلٰى فِرْعَوْنَ ஃபிர்அவ்னிடம் وَ هَامٰنَ இன்னும் ஹாமான் وَقَارُوْنَ இன்னும் காரூன் فَقَالُوْا அவர்கள் கூறினார்கள் سٰحِرٌ சூனியக்காரர் كَذَّابٌ பொய்யர்
40:24. இலா Fபிர்'அவ்ன வ ஹாமான வ காரூன Fபகாலூ ஸாஹிருன் கத்தாBப்
40:24. ஃபிர்அவ்ன், ஹாமான், காரூன் ஆகியவர்களிடம்; ஆனால், அவர்களோ "(இவர்) பொய்யுரைப்பவர், சூனியக்காரர்" என்று கூறினர்.
40:25 فَلَمَّا جَآءَهُمْ بِالْحَقِّ مِنْ عِنْدِنَا قَالُوْا اقْتُلُوْۤا اَبْنَآءَ الَّذِيْنَ اٰمَنُوْا مَعَهٗ وَاسْتَحْيُوْا نِسَآءَهُمْؕ وَمَا كَيْدُ الْكٰفِرِيْنَ اِلَّا فِىْ ضَلٰلٍ
فَلَمَّا جَآءَ அவர் வந்த போது هُمْ அவர்களிடம் بِالْحَقِّ சத்தியத்தைக்கொண்டு مِنْ عِنْدِنَا நம்மிடமிருந்து قَالُوْا அவர்கள் கூறினார்கள் اقْتُلُوْۤا கொன்று விடுங்கள்! اَبْنَآءَ ஆண் பிள்ளைகளை الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கை கொண்டவர்களின் مَعَهٗ இவருடன் وَاسْتَحْيُوْا இன்னும் வாழவிடுங்கள்! نِسَآءَ பெண்களை هُمْؕ அவர்களின் وَمَا كَيْدُ சூழ்ச்சி இல்லை الْكٰفِرِيْنَ நிராகரிப்பவர்களின் اِلَّا தவிர فِىْ ضَلٰلٍ வழிகேட்டில்
40:25. Fபலம்ம ஜா'அஹும் Bபில் ஹக்கி மின் 'இன்தினா காலுக் துலூ அBப்னா'அல் லதீன ஆமனூ ம'அஹூ வஸ்தஹ்யூ னிஸா'அஹும்; வமா கய்துல் காFபிரீன இல்லா Fபீ ளலால்
40:25. ஆகவே, அவர் நம்மிடமிருந்து சத்தியத்தை அவர்களிடம் கொண்டுவந்தபோது, அவர்கள் "இவருடன் நம்பிக்கை கொண்டிருப்போரின் ஆண் குழந்தைகளைக் கொன்று, அவர்களின் பெண் குழந்தைகளை உயிருடன் விட்டுவிடுங்கள்" என்று கூறினார்கள்; மேலும், நிராகரிப்பாளர்களின் சூழ்ச்சி வழிகேட்டிலன்றி வேறில்லை.
40:26 وَقَالَ فِرْعَوْنُ ذَرُوْنِىْۤ اَقْتُلْ مُوْسٰى وَلْيَدْعُ رَبَّهٗۚ اِنِّىْۤ اَخَافُ اَنْ يُّبَدِّلَ دِيْنَكُمْ اَوْ اَنْ يُّظْهِرَ فِى الْاَرْضِ الْفَسَادَ
وَقَالَ கூறினான் فِرْعَوْنُ ஃபிர்அவ்ன் ذَرُوْنِىْۤ என்னை விடுங்கள் اَقْتُلْ கொன்று விடுகிறேன் مُوْسٰى மூஸாவை وَلْيَدْعُ அவர் அழைக்கட்டும் رَبَّهٗۚ தன் இறைவனை اِنِّىْۤ நிச்சயமாக நான் اَخَافُ பயப்படுகிறேன் اَنْ يُّبَدِّلَ அவர் மாற்றிவிடுவார் என்று دِيْنَكُمْ உங்கள் மார்க்கத்தை اَوْ அல்லது اَنْ يُّظْهِرَ உருவாக்கி விடுவார் என்று فِى الْاَرْضِ இந்த பூமியில் الْفَسَادَ குழப்பத்தை
40:26. வ கால Fபிர்'அவ்னு தரூனீ அக்துல் மூஸா வல்யத்'உ ரBப்Bபஹூ இன்னீ அகாFபு அய் யுBபத்தில தீனகும் அவ் அய் யுள்ஹிர Fபில் அர்ளில் Fபஸாத்
40:26. மேலும், ஃபிர்அவ்ன் கூறினான்: "மூஸாவைக் கொலைசெய்ய என்னை விட்டுவிடுங்கள்! இன்னும், இவர் தம்முடைய இறைவனை அழை(த்துப் பிரார்த்தி)க்கட்டும்! நிச்சயமாக இவர் உங்கள் மார்க்கத்தை மாற்றிவிடுவார்; அல்லது இப்பூமியில் குழப்பத்தை வெளியாக்குவார் என்று நான் அஞ்சுகிறேன்."
40:27 وَقَالَ مُوْسٰٓى اِنِّىْ عُذْتُ بِرَبِّىْ وَرَبِّكُمْ مِّنْ كُلِّ مُتَكَبِّرٍ لَّا يُؤْمِنُ بِيَوْمِ الْحِسَابِ
وَقَالَ கூறினார் مُوْسٰٓى மூஸா اِنِّىْ நிச்சயமாக நான் عُذْتُ பாதுகாவல் தேடுகிறேன் بِرَبِّىْ எனது இறைவனிடம் وَرَبِّكُمْ இன்னும் உங்கள் இறைவனிடம் مِّنْ كُلِّ எல்லோரை விட்டும் مُتَكَبِّرٍ பெருமை அடிக்கின்றவன் لَّا يُؤْمِنُ நம்பிக்கைகொள்ள மாட்டான் بِيَوْمِ الْحِسَابِ விசாரணை நாளை
40:27. வ கால மூஸா இன்னீ 'உத்து Bபி ரBப்Bபீ வ ரBப்Bபிகும் மின் குல்லி முதகBப்Bபிரில் லாயு'மினு Bபி யவ்மில் ஹிஸாBப்
40:27. மூஸா கூறினார்: "கேள்வி கணக்குக் கேட்கப்படும் நாள்மீது நம்பிக்கைகொள்ளாது, பெருமையடிக்கும் ஒவ்வொருவரையும் விட்டு, என்னுடைய இறைவனாகவும், உங்களுடைய இறைவனாகவும் இருப்பவனிடம் நிச்சயமாக நான் பாதுகாவல் தேடுகிறேன்."
40:28 وَقَالَ رَجُلٌ مُّؤْمِنٌ ۖ مِّنْ اٰلِ فِرْعَوْنَ يَكْتُمُ اِيْمَانَهٗۤ اَتَقْتُلُوْنَ رَجُلًا اَنْ يَّقُوْلَ رَبِّىَ اللّٰهُ وَقَدْ جَآءَكُمْ بِالْبَيِّنٰتِ مِنْ رَّبِّكُمْ ؕ وَاِنْ يَّكُ كَاذِبًا فَعَلَيْهِ كَذِبُهٗ ؕ وَاِنْ يَّكُ صَادِقًا يُّصِبْكُمْ بَعْضُ الَّذِىْ يَعِدُكُمْ ۚ اِنَّ اللّٰهَ لَا يَهْدِىْ مَنْ هُوَ مُسْرِفٌ كَذَّابٌ
وَقَالَ கூறினார் رَجُلٌ ஓர் ஆடவர் مُّؤْمِنٌ ۖ நம்பிக்கைகொண்டவர் مِّنْ اٰلِ குடும்பத்தாரில் فِرْعَوْنَ ஃபிர்அவ்னுடைய يَكْتُمُ மறைத்தவராக اِيْمَانَهٗۤ தனது நம்பிக்கையை اَتَقْتُلُوْنَ நீங்கள்கொல்கின்றீர்களா? رَجُلًا ஒரு மனிதரை اَنْ يَّقُوْلَ கூறியதற்காக رَبِّىَ என் இறைவன் என்று اللّٰهُ அல்லாஹ்தான் وَقَدْ திட்டமாக جَآءَ அவர் கொண்டு வந்திருக்கிறார் كُمْ உங்களுக்கு بِالْبَيِّنٰتِ தெளிவான அத்தாட்சிகளை مِنْ رَّبِّكُمْ ؕ உங்கள் இறைவனிடமிருந்து وَاِنْ يَّكُ அவர் இருந்தால் كَاذِبًا பொய்யராக فَعَلَيْهِ அவருக்குத்தான் கேடாக அமையும் كَذِبُهٗ ؕ அவருடைய பொய் وَاِنْ يَّكُ அவர் இருந்தால் صَادِقًا உண்மையாளராக يُّصِبْكُمْ உங்களைவந்தடையும் بَعْضُ சில الَّذِىْ يَعِدُ அவர் எச்சரிப்பதில் كُمْ ۚ உங்களை اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் لَا يَهْدِىْ مَنْ هُوَ நேர்வழி செலுத்தமாட்டான்/எவரை/அவர் مُسْرِفٌ வரம்புமீறுபவராக(வும்) كَذَّابٌ பெரும் பொய்யராக(வும்)
40:28. வ கால ரஜுலும் மு'மினும்மின் ஆலி Fபிர்'அவ்ன யக்துமு ஈமானஹூ அதக்துலூன ரஜுலன் அய் யகூல ரBப்Bபி யல் லாஹு வ கத் ஜா'அகும் Bபில் Bபய்யினாதி மிர் ரBப்Bபிகும் வ இ(ன்)ய் யகு காதிBபன் Fப'அலய்ஹி கதிBபுஹ் வ இ(ன்)ய் யகு ஸாதிக(ன்)ய் யஸிBப்கும் Bபஃளுல் லதீ ய'இதுகும் இன்னல் லாஹ லா யஹ்தீ மன் ஹுவ முஸ்ரிFபுன் கத்தாBப்
40:28. ஃபிர்அவ்னின் குடும்பத்தாரில் தம் நம்பிக்கையை மறைத்துவைத்திருந்த, நம்பிக்கை கொண்ட மனிதர் ஒருவர் கூறினார்: "என் இறைவன் அல்லாஹ்வேதான்!" என்று ஒரு மனிதர் கூறியதற்காக அவரை நீங்கள் கொன்றுவிடுவீர்களா? மேலும், அவர் மெய்யாகவே உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான அத்தாட்சிகளை உங்களிடம் கொண்டுவந்துள்ளார்; எனவே, அவர் பொய்யராக இருந்தால், அப்பொய் அவருக்கே (கேடு) ஆகும்; ஆனால், அவர் உண்மையாளராக இருந்தால், அவர் உங்களுக்கு வாக்களிக்கும் சில (வேதனைகள்) உங்களை வந்தடையுமே! நிச்சயமாக அல்லாஹ் வரம்புமீறிய பொய்யரை நேர்வழியில் செலுத்தமாட்டான்.
40:29 يٰقَوْمِ لَـكُمُ الْمُلْكُ الْيَوْمَ ظٰهِرِيْنَ فِى الْاَرْضِ فَمَنْ يَّنْصُرُنَا مِنْۢ بَاْسِ اللّٰهِ اِنْ جَآءَنَا ؕ قَالَ فِرْعَوْنُ مَاۤ اُرِيْكُمْ اِلَّا مَاۤ اَرٰى وَمَاۤ اَهْدِيْكُمْ اِلَّا سَبِيْلَ الرَّشَادِ
يٰقَوْمِ எனது மக்களே! لَـكُمُ உங்களுக்கு الْمُلْكُ ஆட்சி الْيَوْمَ இன்றைய தினம் ظٰهِرِيْنَ நீங்கள் மிகைத்திருக்கிறீர்கள் فِى الْاَرْضِ பூமியில் فَمَنْ யார்? يَّنْصُرُنَا நமக்கு உதவுவார் مِنْۢ بَاْسِ தண்டனையில்இருந்து اللّٰهِ அல்லாஹ்வின் اِنْ جَآءَنَا ؕ நம்மிடம்அதுவந்தால் قَالَ فِرْعَوْنُ ஃபிர்அவ்ன் கூறினான் مَاۤ اُرِيْكُمْ உங்களுக்கு நான் காண்பிக்க மாட்டேன் اِلَّا தவிர مَاۤ اَرٰى நான் கருதுவதையே وَمَاۤ اَهْدِيْكُمْ உங்களுக்கு நான் வழிகாட்ட மாட்டேன் اِلَّا سَبِيْلَ பாதையைத் தவிர الرَّشَادِ நேரான
40:29. யா கவ்மி லகுமுல் முல்குல் யவ்ம ளாஹிரீன Fபில் அர்ளி Fபமய் யன்ஸுருனா மிம் Bபாஸில் லாஹி இன் ஜா'அனா; கால Fபிர்'அவ்னு மா உரீகும் இல்லா மா அரா வ மா அஹ்தீகும் இல்லா ஸBபீலர் ரஷாத்
40:29. "என்னுடைய சமூகத்தாரே! இன்று ஆட்சி உங்களிடம்தான் இருக்கிறது: (நீங்கள்தாம் எகிப்து) பூமியில் மிகைத்தவர்களாகவும் இருக்கின்றீர்கள்; ஆயினும், அல்லாஹ்வின் தண்டனை நமக்கு வந்துவிட்டால், நமக்கு உதவிசெய்பவர் யார்?" (என்றும் கூறினார்:) அதற்கு: "நான் (உண்மை எனக்) காண்பதையே உங்களுக்கு நான் காண்பிக்கிறேன்; நேரான பாதையல்லாது (வேறு) எதையும் நான் உங்களுக்குக் காண்பிக்கவில்லை" என ஃபிர்அவன் கூறினான்.
40:30 وَقَالَ الَّذِىْۤ اٰمَنَ يٰقَوْمِ اِنِّىْۤ اَخَافُ عَلَيْكُمْ مِّثْلَ يَوْمِ الْاَحْزَابِۙ
وَقَالَ கூறினார் الَّذِىْۤ اٰمَنَ நம்பிக்கை கொண்டவர் يٰقَوْمِ என் மக்களே! اِنِّىْۤ நிச்சயமாக நான் اَخَافُ பயப்படுகிறேன் عَلَيْكُمْ உங்கள் மீது مِّثْلَ போன்றதை يَوْمِ நாளை الْاَحْزَابِۙ ராணுவங்களின்
40:30. வ காலல் லதீ ஆமன யா கவ்மி இன்னீ அகாFபு 'அலய்கும் மித்ல யவ்மில் அஹ்ZஜாBப்
40:30. நம்பிக்கை கொண்டிருந்த அவர் இன்னும் கூறினார்: "என்னுடைய சமூகத்தாரே! (அழிந்து போன மற்ற) கூட்டத்தினர்களின் நாளைப் போன்றது உங்கள் மீது வந்துவிடுமே! என்று நான் நிச்சயமாகப் பயப்படுகிறேன்."
40:31 مِثْلَ دَاْبِ قَوْمِ نُوْحٍ وَّعَادٍ وَّثَمُوْدَ وَالَّذِيْنَ مِنْۢ بَعْدِهِمْؕ وَمَا اللّٰهُ يُرِيْدُ ظُلْمًا لِّلْعِبَادِ
مِثْلَ போன்று دَاْبِ வழமையான வேதனையை قَوْمِ மக்கள் نُوْحٍ நூஹூடைய وَّعَادٍ இன்னும் ஆது وَّثَمُوْدَ இன்னும் ஸமூது وَالَّذِيْنَ مِنْۢ بَعْدِهِمْؕ இன்னும் அவர்களுக்குப் பின்னர் வந்தவர்களுக்கு ஏற்பட்ட وَمَا اللّٰهُ அல்லாஹ் இல்லை يُرِيْدُ நாடுகின்றவனாக ظُلْمًا அநியாயத்தை لِّلْعِبَادِ அடியார்களுக்கு
40:31. மித்ல தாBபி கவ்மி னூஹி(ன்)வ் வ 'ஆதி(ன்)வ் வ தமூத வல்லதீன மிம் Bபஃதிஹிம்; வ மல் லாஹு யுரீது ளுல்மல் லில்'இBபாத்
40:31. "நூஹுடைய சமூகத்திற்கும், இன்னும் ஆது, ஸமூதுடைய சமூகத்தாருக்கும், அவர்களுக்குப் பின்னுள்ளவர்களுக்கும் உண்டான நிலையைப் போன்று (உங்களுக்கு நிகழ்ந்துவிடுமோ எனப் பயப்படுகிறேன்); ஆனால், அல்லாஹ் (தன்) அடியார்களுக்கு அநியாயம் செய்ய நாடமாட்டான்" (என்றும்).
40:32 وَيٰقَوْمِ اِنِّىْۤ اَخَافُ عَلَيْكُمْ يَوْمَ التَّنَادِۙ
وَيٰقَوْمِ என் மக்களே اِنِّىْۤ اَخَافُ நிச்சயமாக பயப்படுகிறேன் عَلَيْكُمْ உங்கள் மீது يَوْمَ التَّنَادِۙ கூவி அழைக்கின்ற நாளை
40:32. வ யா கவ்மி இன்னீ அகாFபு 'அலய்கும் யவ்மத் தனாத்
40:32. "என்னுடைய சமூகத்தாரே! உங்கள் மீது அழைக்கப்படும் (தீர்ப்பு) நாளைப் பற்றியும் நான் பயப்படுகிறேன்."
40:33 يَوْمَ تُوَلُّوْنَ مُدْبِرِيْنَۚ مَا لَكُمْ مِّنَ اللّٰهِ مِنْ عَاصِمٍۚ وَمَنْ يُّضْلِلِ اللّٰهُ فَمَا لَهٗ مِنْ هَادٍ
يَوْمَ நாளில் تُوَلُّوْنَ நீங்கள் திரும்புகின்றீர்கள் مُدْبِرِيْنَۚ புறமுதுகிட்டவர்களாக مَا لَكُمْ உங்களுக்கு இருக்க மாட்டார் مِّنَ اللّٰهِ அல்லாஹ்விடமிருந்து مِنْ எவரும் عَاصِمٍۚ பாதுகாக்கக்கூடியவர் وَمَنْ எவரை يُّضْلِلِ வழிகெடுத்தானோ اللّٰهُ அல்லாஹ் فَمَا لَهٗ அவருக்கு இல்லை مِنْ هَادٍ நேர்வழி காட்டுபவர் யாரும்
40:33. யவ்ம துவல்லூன முத் Bபிரீன மா லகும் மினல் லாஹி மின் 'ஆஸிம்; வ மய் யுள்லிலில் லாஹு Fபமா லஹூ மின் ஹாத்
40:33. "அல்லாஹ்வை விட்டும் உங்களைக் காப்பாற்றுபவர் எவருமில்லாத நிலையில் நீங்கள் பின்வாங்கும் நாள் (அது); அன்றியும், அல்லாஹ் யாரைத் தவறான வழியில் விட்டுவிடுகின்றானோ, அவனுக்கு நேர்வழி காட்டுவோர் எவருமில்லை."
40:34 وَلَقَدْ جَآءَكُمْ يُوْسُفُ مِنْ قَبْلُ بِالْبَيِّنٰتِ فَمَا زِلْـتُمْ فِىْ شَكٍّ مِّمَّا جَآءَكُمْ بِهٖ ؕ حَتّٰٓى اِذَا هَلَكَ قُلْتُمْ لَنْ يَّبْعَثَ اللّٰهُ مِنْۢ بَعْدِهٖ رَسُوْلًا ؕ كَذٰلِكَ يُضِلُّ اللّٰهُ مَنْ هُوَ مُسْرِفٌ مُّرْتَابٌ ۚ ۖ
وَلَقَدْ திட்டவட்டமாக جَآءَكُمْ உங்களிடம் வந்தார் يُوْسُفُ யூஸுஃப் مِنْ قَبْلُ இதற்கு முன்னர் بِالْبَيِّنٰتِ தெளிவான அத்தாட்சிகளுடன் فَمَا زِلْـتُمْ فِىْ شَكٍّ ஆனால், நீங்கள் சந்தேகத்தில்தான் தொடர்ந்து இருந்தீர்கள் مِّمَّا எதில் جَآءَكُمْ உங்களிடம் வந்தார் بِهٖ ؕ அதைக் கொண்டு حَتّٰٓى இறுதியாக اِذَا هَلَكَ அவர் இறந்துவிட்ட போது قُلْتُمْ கூறினீர்கள் لَنْ يَّبْعَثَ அனுப்பவே மாட்டான் اللّٰهُ அல்லாஹ் مِنْۢ بَعْدِهٖ அவருக்குப் பின்னர் رَسُوْلًا ؕ ஒரு தூதரை كَذٰلِكَ இவ்வாறுதான் يُضِلُّ வழிகெடுப்பான் اللّٰهُ அல்லாஹ் مَنْ எவர் هُوَ அவர் مُسْرِفٌ வரம்புமீறுபவராக(வும்) مُّرْتَابٌ ۚ ۖ சந்தேகம் கொள்பவராக(வும்)
40:34. வ லகத் ஜா'அகும் யூஸுFபு மின் கBப்லு Bபில் Bபய்யினாதி Fபமா Zஜில்தும் Fபீ ஷக்கிம் மிம்மா ஜா'அகும் Bபிஹீ ஹத்தா இதா ஹலக குல்தும் லய் யBப் அதல் லாஹு மிம் Bபஃதிஹீ ரஸூலா; கதாலிக யுளில்லுல் லாஹு மன் ஹுவ முஸ்ரிFபும் முர்தாBப்
40:34. "மேலும், முற்காலத்தில் திட்டமாக யூஸுஃப் தெளிவான அத்தாட்சிகளுடன் உங்களிடம் வந்தார்; எனினும், அவர் உங்களிடம் கொண்டுவந்ததைப் பற்றி நீங்கள் சந்தேகத்திலேயே இருந்தீர்கள்; இறுதியில், அவர் இறந்தபோது 'அவருக்குப்பின் எந்தத் தூதரையும் அல்லாஹ் அனுப்பவே மாட்டான்' என்றும் கூறினீர்கள்; இவ்வாறே, எவர் வரம்புமீறிச் சந்தேகிக்கிறாரோ அவரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுகிறான்."
40:35 اۨلَّذِيْنَ يُجَادِلُوْنَ فِىْۤ اٰيٰتِ اللّٰهِ بِغَيْرِ سُلْطٰنٍ اَتٰٮهُمْ ؕ كَبُـرَ مَقْتًا عِنْدَ اللّٰهِ وَعِنْدَ الَّذِيْنَ اٰمَنُوْا ؕ كَذٰلِكَ يَطْبَعُ اللّٰهُ عَلٰى كُلِّ قَلْبِ مُتَكَبِّرٍ جَبَّارٍ
اۨلَّذِيْنَ எவர்கள் يُجَادِلُوْنَ தர்க்கம் செய்கின்றார்கள் فِىْۤ اٰيٰتِ அத்தாட்சிகளில் اللّٰهِ அல்லாஹ்வின் بِغَيْرِ سُلْطٰنٍ எவ்வித ஆதாரமின்றி اَتٰٮهُمْ ؕ தங்களிடம் வந்த(து) كَبُـرَ மிகப் பெரிய(து) مَقْتًا கோபத்திற்குரியது عِنْدَ اللّٰهِ அல்லாஹ்விட(மு)ம் وَعِنْدَ الَّذِيْنَ اٰمَنُوْا ؕ நம்பிக்கையாளர்களிடமும் كَذٰلِكَ இவ்வாறுதான் يَطْبَعُ முத்திரையிடுகிறான் اللّٰهُ அல்லாஹ் عَلٰى كُلِّ قَلْبِ எல்லோருடைய உள்ளத்திலும் مُتَكَبِّرٍ பெருமை அடிக்கின்றவர்கள் جَبَّارٍ அநியாயக்காரர்கள்
40:35. அல்லதீன யுஜாதிலூன Fபீ ஆயாதில் லாஹி Bபிகய்ரி ஸுல்தானின் அதாஹும் கBபுர மக்தன் 'இன்தல் லாஹி வ 'இன்தல் லதீன ஆமனூ; கதாலிக யத்Bபஹுல் லாஹு 'அலா குல்லி கல்Bபி முதகBப்Bபிரின் ஜBப்Bபார்
40:35. "அவர்கள் எத்தகையோரென்றால் (இறைவனிடமிருந்து) தங்களுக்கு வந்த-யாதோர் ஆதாரமுமின்றி, அல்லாஹ்வின் வசனங்களைப் பற்றி தர்க்கம் செய்கின்றார்கள்; அது, அல்லாஹ்விடத்திலும் நம்பிக்கை கொண்டவர்களிடத்திலும் கோபத்தால் பெரிதாகிவிட்டது; இவ்வாறே, பெருமையடித்து ஆணவம்கொள்ளும் ஒவ்வொரு இதயத்தின் மீதும் அல்லாஹ் முத்திரையிட்டுவிடுகிறான்" (என்றும் அவர் கூறினார்).
40:36 وَقَالَ فِرْعَوْنُ يٰهَامٰنُ ابْنِ لِىْ صَرْحًا لَّعَلِّىْۤ اَبْلُغُ الْاَسْبَابَۙ
وَقَالَ கூறினான் فِرْعَوْنُ ஃபிர்அவ்ன் يٰهَامٰنُ ஹாமானே! ابْنِ கட்டு لِىْ எனக்காக صَرْحًا ஒரு கோபுரத்தை لَّعَلِّىْۤ اَبْلُغُ நான் ஏற வேண்டும் الْاَسْبَابَۙ வாசல்களில்
40:36. வ கால Fபிர்'அவ்னு யா ஹாமானுBப்-னி லீ ஸர்ஹல் ல'அல்லீ அBப்லுகுல் அஸ்BபாBப்
40:36. (இவ்வளவு உபதேசித்த பின்னரும்,) "ஹாமானே! உயரமான ஒரு கோபுரத்தை எனக்காக நீ கட்டுவாயாக! நான் (மேலே செல்வதற்கான) பாதைகளைப் பெறும் பொருட்டு" என்று ஃபிர்அவ்ன் கூறினான்.
40:37 اَسْبَابَ السَّمٰوٰتِ فَاَطَّلِعَ اِلٰٓى اِلٰهِ مُوْسٰى وَاِنِّىْ لَاَظُنُّهٗ كَاذِبًا ؕ وَكَذٰلِكَ زُيِّنَ لِفِرْعَوْنَ سُوْٓءُ عَمَلِهٖ وَصُدَّ عَنِ السَّبِيْلِ ؕ وَمَا كَيْدُ فِرْعَوْنَ اِلَّا فِىْ تَبَابٍ
اَسْبَابَ வாசல்களில் السَّمٰوٰتِ வானங்களின் فَاَطَّلِعَ நான் எட்டிப்பார்க்க வேண்டும் اِلٰٓى اِلٰهِ கடவுளை مُوْسٰى மூஸாவின் وَاِنِّىْ நிச்சயமாக நான் لَاَظُنُّهٗ அவரைக்கருதுகிறேன் كَاذِبًا ؕ பொய்யராகவே وَكَذٰلِكَ இவ்வாறுதான் زُيِّنَ அலங்காரமாக்கப் பட்டது لِفِرْعَوْنَ ஃபிர்அவ்னுக்கு سُوْٓءُ தீய عَمَلِهٖ அவனது செயல் وَصُدَّ இன்னும் அவன் தடுக்கப்பட்டான் عَنِ السَّبِيْلِ ؕ நேரான பாதையை விட்டு وَمَا كَيْدُ சூழ்ச்சி இல்லை فِرْعَوْنَ ஃபிர்அவ்னின் اِلَّا தவிர فِىْ تَبَابٍ அழிவில்
40:37. அஸ்BபாBபஸ் ஸமாவாதி Fபாத்தலி'அ இலா இலாஹி மூஸா வ இன்னீ ல அளுன்னுஹூ காதிBபா; வ கதாலிக Zஜுய்யின லி-Fபிர்'அவ்ன ஸூ'உ 'அமலிஹீ வ ஸுத்த 'அனிஸ் ஸBபீல்; வமா கய்து Fபிர்'அவ்ன இல்லா Fபீ தBபாBப்
40:37. "(ஆம்) வானங்களின் பாதைகளை அடைந்து மூஸாவுடைய இறைவனை நான் காணவேண்டும்; எனினும், அவர் பொய்சொல்கிறார் என்றே நிச்சயமாக நான் எண்ணுகிறேன்" (என ஃபிர்அவ்ன் கூறினான்); இவ்வாறே, ஃபிர்அவ்னுக்கு அவனுடைய தீயசெயல் அழகாக்கப்பட்டது; இன்னும், (நேர்) வழியிலிருந்து அவன் தடுக்கப்பட்டான்; ஃபிர்அவ்னுடைய சதி அழிவிலேயே தவிர இல்லை.
40:38 وَقَالَ الَّذِىْۤ اٰمَنَ يٰقَوْمِ اتَّبِعُوْنِ اَهْدِكُمْ سَبِيْلَ الرَّشَادِۚ
وَقَالَ கூறினார் الَّذِىْۤ اٰمَنَ நம்பிக்கை கொண்டவர் يٰقَوْمِ என் மக்களே! اتَّبِعُوْنِ என்னை பின்பற்றுங்கள்! اَهْدِكُمْ நான் உங்களுக்கு வழி காட்டுகிறேன் سَبِيْلَ பாதையை الرَّشَادِۚ நேரான
40:38. வ காலல் லதீ ஆமன யா கவ்மித் தBபி'ஊனி அஹ்திகும் ஸBபீலர் ரஷாத்
40:38. நம்பிக்கை கொண்டிருந்த அம்மனிதர், மேலும் கூறினார்: "என்னுடைய சமூகத்தாரே! என்னைப் பின்பற்றுங்கள்; நான் உங்களுக்கு நேரான பாதையைக் காண்பிக்கிறேன்."
40:39 يٰقَوْمِ اِنَّمَا هٰذِهِ الْحَيٰوةُ الدُّنْيَا مَتَاعٌ وَّاِنَّ الْاٰخِرَةَ هِىَ دَارُ الْقَرَارِ
يٰقَوْمِ என் மக்களே! اِنَّمَا هٰذِهِ الْحَيٰوةُ இந்த வாழ்க்கை எல்லாம் الدُّنْيَا உலக مَتَاعٌ அற்ப இன்பம்தான் وَّاِنَّ இன்னும் நிச்சயமாக الْاٰخِرَةَ هِىَ மறுமைதான் دَارُ الْقَرَارِ நிரந்தரமான இல்லம்
40:39. யா கவ்மி இன்னமா ஹாதிஹில் ஹயாதுத் துன்யா மதா'உ(ன்)வ் வ இன்னல் ஆகிரத ஹிய தாருல் கரார்
40:39. "என்னுடைய சமூகத்தாரே! இவ்வுலக வாழ்க்கையெல்லாம் அற்பசுகம்தான்; அன்றியும், நிச்சயமாக மறுமையோ - அதுதான் (என்றென்றும் இருக்கும்) நிலையான வீடு."
40:40 مَنْ عَمِلَ سَيِّـئَـةً فَلَا يُجْزٰٓى اِلَّا مِثْلَهَا ۚ وَمَنْ عَمِلَ صَالِحًـا مِّنْ ذَكَرٍ اَوْ اُنْثٰى وَهُوَ مُؤْمِنٌ فَاُولٰٓٮِٕكَ يَدْخُلُوْنَ الْجَـنَّةَ يُرْزَقُوْنَ فِيْهَا بِغَيْرِ حِسَابٍ
مَنْ عَمِلَ யார் செய்வாரோ سَيِّـئَـةً ஒரு தீமையை فَلَا يُجْزٰٓى அவர் கூலி கொடுக்கப்பட மாட்டார் اِلَّا தவிர مِثْلَهَا ۚ அது போன்றதே وَمَنْ யார் ஒருவர் عَمِلَ செய்வாரோ صَالِحًـا நன்மையை مِّنْ இல் ذَكَرٍ ஆண்(கள்) اَوْ அல்லது اُنْثٰى பெண்(கள்) وَهُوَ அவர் இருக்கின்ற நிலையில் مُؤْمِنٌ நம்பிக்கையாளராக فَاُولٰٓٮِٕكَ அவர்கள் يَدْخُلُوْنَ நுழைக்கப்படுவார்கள் الْجَـنَّةَ சொர்க்கத்தில் يُرْزَقُوْنَ அவர்கள் உணவளிக்கப்படுவார்கள் فِيْهَا அதில் بِغَيْرِ حِسَابٍ கணக்கின்றி
40:40. மன் 'அமில ஸய்யி'அதன் Fபலா யுஜ்Zஜா இல்லா மித்லஹா வ மன் 'அமில ஸாலிஹம் மின் தகரின் அவ் உன்தா வ ஹுவ மு'மினுன் Fப உலா'இக யத்குலூனல் ஜன்னத யுர்Zஜகூன Fபீஹா Bபிகய்ரி ஹிஸாBப்
40:40. "எவர் தீமை செய்கிறாரோ, அவர் அதைப் போன்றதையே கூலியாகக் கொடுக்கப்படுவார்: எவர் ஒருவர், ஆணோ அல்லது பெண்ணோ நம்பிக்கை கொண்டவராக இருக்கும் நிலையில் நற்செயலைச் செய்கிறாரோ - அத்தகையோர் சுவர்க்கத்தில் பிரவேசிப்பர்; அதில் கணக்கில்லாது அவர்கள் உணவளிக்கப்படுவார்கள்."
40:41 وَيٰقَوْمِ مَا لِىْۤ اَدْعُوْكُمْ اِلَى النَّجٰوةِ وَتَدْعُوْنَنِىْۤ اِلَى النَّارِؕ
وَيٰقَوْمِ என் மக்களே مَا لِىْۤ எனக்கு என்ன நேர்ந்தது اَدْعُوْكُمْ நான் உங்களை அழைக்கிறேன் اِلَى النَّجٰوةِ பாதுகாக்கப்படுவதற்கு وَتَدْعُوْنَنِىْۤ நீங்களோ என்னை அழைக்கின்றீர்கள் اِلَى النَّارِؕ நரகத்தின் பக்கம்
40:41. வ யா கவ்மி மா லீ அத்'ஊகும் இலன் னஜாதி வ தத்'ஊனனீ இலன் னார்
40:41. என்னுடைய சமூகத்தாரே! எனக்கென்ன? நான் உங்களை ஈடேற்றத்தின்பால் அழைக்கிறேன்; ஆனால், நீங்களோ என்னை (நரக) நெருப்பின்பால் அழைக்கிறீர்கள்.
40:42 تَدْعُوْنَنِىْ لِاَكْفُرَ بِاللّٰهِ وَاُشْرِكَ بِهٖ مَا لَيْسَ لِىْ بِهٖ عِلْمٌ وَّاَنَا اَدْعُوْكُمْ اِلَى الْعَزِيْزِ الْغَفَّارِ
تَدْعُوْنَنِىْ நீங்கள் என்னை அழைக்கின்றீர்கள் لِاَكْفُرَ நான் நிராகரிப்பதற்கு(ம்) بِاللّٰهِ அல்லாஹ்வை وَاُشْرِكَ بِهٖ அவனுக்கு நான் இணைவைப்பதற்கும் مَا لَيْسَ لِىْ بِهٖ عِلْمٌ எனக்கு அறிவில்லாத ஒன்றை وَّاَنَا اَدْعُوْكُمْ நான்/அழைக்கின்றேன்/உங்களை اِلَى الْعَزِيْزِ மிகைத்தவன் பக்கம் الْغَفَّارِ மகா மன்னிப்பாளன்
40:42. தத்'ஊனனீ லி-அக்Fபுர Bபில்லாஹி வ உஷ்ரிக Bபிஹீ மா லய்ஸ லீ Bபிஹீ 'இல்மு(ன்)வ் வ அன அத்'ஊகும் இலல்'அZஜீZஜில் கFப்Fபார்
40:42. நான் அல்லாஹ்வை நிராகரிக்க வேண்டுமென்றும், எனக்கு எதைப்பற்றி அறிவு இல்லையோ அதை நான் அவனுக்கு இணைவைக்க வேண்டுமென்றும் என்னை நீங்கள் அழைக்கின்றீர்கள்; ஆனால், நானோ (யாவரையும்) மிகைத்தவனும், மிக மன்னிப்பவனுமாகியவனின் பக்கம் அழைக்கின்றேன்.
40:43 لَا جَرَمَ اَنَّمَا تَدْعُوْنَنِىْۤ اِلَيْهِ لَيْسَ لَهٗ دَعْوَةٌ فِى الدُّنْيَا وَلَا فِى الْاٰخِرَةِ وَاَنَّ مَرَدَّنَاۤ اِلَى اللّٰهِ وَاَنَّ الْمُسْرِفِيْنَ هُمْ اَصْحٰبُ النَّارِ
لَا جَرَمَ கண்டிப்பாக اَنَّمَا تَدْعُوْنَنِىْۤ நிச்சயமாக/எவை /நீங்கள் அழைக்கின்றீர்கள்/என்னை اِلَيْهِ அவற்றின் பக்கம் لَيْسَ لَهٗ அவற்றுக்கு இல்லை دَعْوَةٌ எவ்வித பிரார்த்தனை فِى الدُّنْيَا இவ்வுலகத்திலும் وَلَا فِى الْاٰخِرَةِ மறுமையிலும் وَاَنَّ இன்னும் நிச்சயமாக مَرَدَّنَاۤ நாம் திரும்புவது اِلَى اللّٰهِ அல்லாஹ்வின் பக்கம்தான் وَاَنَّ இன்னும் நிச்சயமாக الْمُسْرِفِيْنَ வரம்புமீறிகள் هُمْ அவர்கள்தான் اَصْحٰبُ النَّارِ நரகவாசிகள்
40:43. லா ஜரம அன்னமா தத்'ஊனனீ இலய்ஹி லய்ஸ லஹூ தஃவதுன் Fபித் துன்யா வலா Fபில் ஆகிரதி வ அன்ன மரத்தனா இலல் லாஹி வ அன்னல் முஸ்ரிFபீனஹும் அஸ்ஹாBபுன் னார்
40:43. "சந்தேகமில்லாமல் என்னை நீங்கள் எதன் பக்கம் அழைக்கின்றீர்களோ, அது நிச்சயமாக இவ்வுலகிலும் மறுமையிலும் (இறைவன் என) அழைக்கப்படுவதற்கு சிறிதும் தகுதியில்லாதது; மேலும், நிச்சயமாக நம்முடைய மீளுமிடம் அல்லாஹ்வின் பக்கமேயாகும்; இன்னும், நிச்சயமாக வரம்புமீறியவர்கள் நரகவாசிகளாகவே இருக்கிறார்கள்."
40:44 فَسَتَذْكُرُوْنَ مَاۤ اَقُوْلُ لَـكُمْؕ وَاُفَوِّضُ اَمْرِىْۤ اِلَى اللّٰهِؕ اِنَّ اللّٰهَ بَصِيْرٌۢ بِالْعِبَادِ
فَسَتَذْكُرُوْنَ நீங்கள் விரைவில் நினைவு கூர்வீர்கள் مَاۤ اَقُوْلُ நான் கூறுவதை لَـكُمْؕ உங்களுக்கு وَاُفَوِّضُ இன்னும் நான் ஒப்படைக்கிறேன் اَمْرِىْۤ என் காரியத்தை اِلَى اللّٰهِؕ அல்லாஹ்விடம் اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் بَصِيْرٌۢ உற்று நோக்குகின்றான் بِالْعِبَادِ அடியார்களை
40:44. Fபஸதத்குரூன மா அகூலு லகும்; வ உFபவ்விளு அம்ரீ இலல் லாஹ்; இன்னல்லாஹ Bபஸீரும் Bபில்'இBபாத்
40:44. "எனவே, நான் உங்களுக்குச் சொல்வதை நீங்கள் விரைவில் உணர்வீர்கள்; மேலும், நான் என் காரியத்தை அல்லாஹ்விடம் ஒப்படைத்து விடுகிறேன்; நிச்சயமாக அல்லாஹ் அடியார்களைக் கண்ணுற்றவனாகவே இருக்கின்றான்" (என்றும் அவர் கூறினார்).
40:45 فَوَقٰٮهُ اللّٰهُ سَيِّاٰتِ مَا مَكَرُوْا وَحَاقَ بِاٰلِ فِرْعَوْنَ سُوْٓءُ الْعَذَابِۚ
فَوَقٰٮهُ ஆக, அவரை பாதுகாத்தான் اللّٰهُ அல்லாஹ் سَيِّاٰتِ தீங்குகளை விட்டு مَا مَكَرُوْا அவர்கள் செய்த சூழ்ச்சிகளின் وَحَاقَ இன்னும் சூழ்ந்துகொண்டது بِاٰلِ குடும்பத்தார்களை فِرْعَوْنَ ஃபிர்அவ்னின் سُوْٓءُ الْعَذَابِۚ கெட்ட வேதனை
40:45. Fப வகாஹுல் லாஹு ஸய்யிஆதி மா மகரூ வ ஹாக Bபி ஆலி-Fபிர்'அவ்ன ஸூ'உல் 'அதாBப்
40:45. ஆகவே, அவர்கள் சூழ்ச்சி செய்த தீமைகளை விட்டும் அல்லாஹ் அவரைக் காத்துக் கொண்டான்; மேலும், வேதனையின் கேடு ஃபிர்அவ்னின் கூட்டத்தாரைச் சூழ்ந்து கொண்டது.
40:46 اَلنَّارُ يُعْرَضُوْنَ عَلَيْهَا غُدُوًّا وَّعَشِيًّا ۚ وَيَوْمَ تَقُوْمُ السَّاعَةُ اَدْخِلُوْۤا اٰلَ فِرْعَوْنَ اَشَدَّ الْعَذَابِ
اَلنَّارُ நரக நெருப்பாகும் يُعْرَضُوْنَ அவர்கள் சமர்ப்பிக்கப்படுவார்கள் عَلَيْهَا அதில் غُدُوًّا காலையிலும் وَّعَشِيًّا ۚ மாலையிலும் وَيَوْمَ நாள் تَقُوْمُ நிகழும் السَّاعَةُ மறுமை اَدْخِلُوْۤا நுழையுங்கள் اٰلَ فِرْعَوْنَ ஃபிர்அவ்னின் குடும்பத்தார்களை اَشَدَّ கடுமையான الْعَذَابِ வேதனையில்
40:46. அன் னாரு யுஃரளூன 'அலய்ஹா குதுவ்வ(ன்)வ் வ 'அஷிய்ய(ன்)வ் வ யவ்ம தகூமுஸ் ஸா'ஆது அத்கிலூ ஆல Fபிர்'அவ்ன அஷத்தல் 'அதாBப்
40:46. காலையிலும், மாலையிலும் அவர்கள் நரக நெருப்பின் முன் காட்டப்படுவார்கள்; மேலும், (நியாயத்) தீர்ப்புக் காலம் நிலைப்பெற்றிருக்கும் நாளில் "ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரைக் கடினமான வேதனையில் புகுத்துங்கள்" (என்று கூறப்படும்).
40:47 وَاِذْ يَتَحَآجُّوْنَ فِى النَّارِ فَيَقُوْلُ الضُّعَفٰٓؤُا لِلَّذِيْنَ اسْتَكْبَرُوْۤا اِنَّا كُنَّا لَـكُمْ تَبَعًا فَهَلْ اَنْتُمْ مُّغْنُوْنَ عَنَّا نَصِيْبًا مِّنَ النَّارِ
وَاِذْ يَتَحَآجُّوْنَ அவர்கள் ஒருவருக்கொருவர் வாய்ச் சண்டை செய்யும்போது فِى النَّارِ நரகத்தில் فَيَقُوْلُ கூறுவார்கள் الضُّعَفٰٓؤُا பலவீனமானவர்கள் لِلَّذِيْنَ اسْتَكْبَرُوْۤا பெருமை கொண்டிருந்தவர்களுக்கு اِنَّا كُنَّا நிச்சயமாக நாங்கள் இருந்தோம் لَـكُمْ உங்களை تَبَعًا பின்பற்றுபவர்களாக فَهَلْ اَنْتُمْ مُّغْنُوْنَ ஆகவே நீங்கள் தடுப்பீர்களா? عَنَّا எங்களை விட்டு نَصِيْبًا ஒரு பகுதியை مِّنَ النَّارِ நரகத்தில் இருந்து
40:47. வ இத் யதஹாஜ்ஜூன Fபின் னாரி Fப-யகூலுள் ளு'அFபா'உ லில்லதீனஸ் தக்Bபரூ இன்னா குன்னா லகும் தBப'அன் Fபஹல் அன்தும் முக்னூன அன்னா னஸீBபம் மினன் னார்
40:47. அவர்கள் நரக நெருப்பில் தர்க்கம் செய்து கொண்டு, பலவீனர்கள் பெருமை அடித்துக் கொண்டிருந்தோரை நோக்கி, "நிச்சயமாக நாங்கள் உங்களைப் பின்பற்றுபவர்களாக இருந்தோம்; எனவே, எங்களைவிட்டும் இந்நெருப்பிலிருந்து ஒரு பகுதியையாவது நீங்கள் தடுத்துவிடுபவர்களா?" என்று அவர்கள் சொல்லும் வேளையை (நினைவூட்டுவீராக)!
40:48 قَالَ الَّذِيْنَ اسْتَكْبَرُوْۤا اِنَّا كُلٌّ فِيْهَاۤ ۙاِنَّ اللّٰهَ قَدْ حَكَمَ بَيْنَ الْعِبَادِ
قَالَ கூறுவார்(கள்) الَّذِيْنَ اسْتَكْبَرُوْۤا பெருமை அடித்தவர்கள் اِنَّا நிச்சயமாக நாம் كُلٌّ எல்லோரும் فِيْهَاۤ அதில்தான் ۙاِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் قَدْ حَكَمَ திட்டமாக தீர்ப்பளித்து விட்டான் بَيْنَ الْعِبَادِ அடியார்களுக்கு மத்தியில்
40:48. காலல் லதீனஸ் தக்Bபரூ இன்னா குல்லுன் Fபீஹா இன்னல் லாஹ கத் ஹகம Bபய்னல்'இBபாத்
40:48. (அப்போது,) "நிச்சயமாக நாம் எல்லோருமே இதிலிருக்கிறோம்; நிச்சயமாக அல்லாஹ் (தன்) அடியார்களுக்கிடையில் தீர்ப்புச் செய்துவிட்டான்" என்று பெருமை அடித்துக்கொண்டிருந்தவர்கள் கூறுவார்கள்.
40:49 وَقَالَ الَّذِيْنَ فِى النَّارِ لِخَزَنَةِ جَهَنَّمَ ادْعُوْا رَبَّكُمْ يُخَفِّفْ عَنَّا يَوْمًا مِّنَ الْعَذَابِ
وَقَالَ கூறுவார்(கள்) الَّذِيْنَ فِى النَّارِ நரகத்தில் உள்ளவர்கள் لِخَزَنَةِ காவலாளிகளுக்கு جَهَنَّمَ நரகத்தின் ادْعُوْا அழையுங்கள்! رَبَّكُمْ உங்கள் இறைவனை يُخَفِّفْ அவன் இலகுவாக்குவான் عَنَّا எங்களை விட்டு يَوْمًا ஒரு நாளாவது مِّنَ الْعَذَابِ வேதனையை
40:49. வ காலல் லதீன Fபின் னாரி லிகZஜனதி ஜஹன்னமத்-'ஊ ரBப்Bபகும் யுகFப்FபிFப் 'அன்னா யவ்மம் மினல் 'அதாBப்
40:49. "இவ்வேதனையை ஒரு நாளைக்கு (மட்டுமாவது) எங்களுக்கு இலேசாக்கும்படி உங்கள் இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்யுங்கள்" என்று (நரக) நெருப்பில் இருப்பவர்கள் நரகத்தின் காவலர்களை நோக்கிக் கூறுவார்கள்.
40:50 قَالُوْۤا اَوَلَمْ تَكُ تَاْتِيْكُمْ رُسُلُكُمْ بِالْبَيِّنٰتِ ؕ قَالُوْا بَلٰى ؕ قَالُوْا فَادْعُوْا ۚ وَمَا دُعٰٓـؤُا الْكٰفِرِيْنَ اِلَّا فِىْ ضَلٰلٍ
قَالُوْۤا அவர்கள் கூறுவார்கள் اَوَلَمْ تَكُ تَاْتِيْكُمْ உங்களிடம் வந்திருக்கவில்லையா? رُسُلُكُمْ உங்கள் தூதர்கள் بِالْبَيِّنٰتِ ؕ தெளிவான அத்தாட்சிகளுடன் قَالُوْا அவர்கள் கூறுவார்கள் بَلٰى ؕ ஏன் வரவில்லை! قَالُوْا அவர்கள் கூறுவார்கள் فَادْعُوْا ۚ நீங்கள் பிரார்த்தனை கேளுங்கள் وَمَا دُعٰٓـؤُا பிரார்த்தனை இல்லை الْكٰفِرِيْنَ காஃபிர்களின் اِلَّا فِىْ ضَلٰلٍ வழிகேட்டில் தவிர
40:50. காலூ அவலம் தகு தாதீகும் ருஸுலுகும் Bபில்Bபய்யினாதி காலூ Bபலா' காலூ Fபத்'ஊ; வமா து'ஆ'உல் காFபிரீன இல்லா Fபீ ளலால்
40:50. "உங்கள் தூதர்கள் உங்களிடம் தெளிவான அத்தாட்சிகளுடன் வரவில்லையா?" என (அக்காவலர்கள்) கேட்பார்கள்: "ஆம்!" என அவர்கள் பதில் கூறுவார்கள்; "அவ்வாறாயின், நீங்களே பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள்" என்று அவர்கள் கூறுவர்; ஆனால், நிராகரிப்பாளர்களின் பிரார்த்தனை வீணானதாகவே அல்லாமல் (வேறு) இல்லை.
40:51 اِنَّا لَنَـنْصُرُ رُسُلَنَا وَالَّذِيْنَ اٰمَنُوْا فِى الْحَيٰوةِ الدُّنْيَا وَيَوْمَ يَقُوْمُ الْاَشْهَادُ ۙ
اِنَّا நிச்சயமாக நாம் لَنَـنْصُرُ உதவுவோம் رُسُلَنَا நமது தூதர்களுக்கு(ம்) وَالَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கை கொண்டவர்களுக்கும் فِى الْحَيٰوةِ வாழ்க்கையிலும் الدُّنْيَا இவ்வுலக وَيَوْمَ நாளிலும் يَقُوْمُ நிற்கின்ற الْاَشْهَادُ ۙ சாட்சிகள்
40:51. இன்னா லனன்ஸுரு ருஸுலனா வல்லதீன ஆமனூ Fபில் ஹயாதித் துன்யா வ யவ்ம யகூமுல் அஷ்ஹாத்
40:51. நிச்சயமாக நாம் நம்முடைய தூதர்களுக்கும், நம்பிக்கை கொண்டவர்களுக்கும், இவ்வுலக வாழ்க்கையிலும், சாட்சிகள் நிலைபெறும் நாளிலும் உதவி செய்வோம்.
40:52 يَوْمَ لَا يَنْفَعُ الظّٰلِمِيْنَ مَعْذِرَتُهُمْ وَلَهُمُ اللَّعْنَةُ وَلَهُمْ سُوْٓءُ الدَّارِ
يَوْمَ (அந்)நாளில் لَا يَنْفَعُ பலனளிக்காது الظّٰلِمِيْنَ அநியாயக்காரர்களுக்கு مَعْذِرَتُهُمْ அவர்களின் சாக்குபோக்கு(கள்) وَلَهُمُ இன்னும் அவர்களுக்கு اللَّعْنَةُ சாபம்தான் وَلَهُمْ இன்னும் அவர்களுக்கு سُوْٓءُ الدَّارِ கெட்ட வீடும்
40:52. யவ்ம லா யன்Fப'உள் ளாலிமீன மஃதிரதுஹும் வ லஹுமுல் லஃனது வ லஹும் ஸூஉத் தார்
40:52. அந்நாளில், அநியாயக்காரர்களுக்கு அவர்கள் புகல் கூறுதல் பயனளிக்காது; அவர்களுக்குச் சாபமும் உண்டு; தீய இருப்பிடமும் அவர்களுக்குண்டு.
40:53 وَلَقَدْ اٰتَيْنَا مُوْسَى الْهُدٰى وَاَوْرَثْنَا بَنِىْۤ اِسْرَآءِيْلَ الْكِتٰبَۙ
وَلَقَدْ திட்டவட்டமாக اٰتَيْنَا நாம் கொடுத்தோம் مُوْسَى மூஸாவிற்கு الْهُدٰى நேர்வழியை وَاَوْرَثْنَا நாம் வாழையடி வாழையாகக் கொடுத்தோம் بَنِىْۤ اِسْرَآءِيْلَ இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு الْكِتٰبَۙ வேதத்தை
40:53. வ லகத் ஆதய்னா மூஸல் ஹுதா வ அவ்ரத்னா Bபனீ இஸ்ரா 'ஈலல் கிதாBப்
40:53. நிச்சயமாக மூஸாவுக்கு நாம் நேர்வழியைக் கொடுத்தோம்; அன்றியும், இஸ்ராயீலின் சந்ததியினரை வேதத்திற்கு வாரிசாக்கினோம்.
40:54 هُدًى وَّذِكْرٰى لِاُولِى الْاَلْبَابِ
هُدًى நேர்வழியாக(வும்) وَّذِكْرٰى உபதேசமாகவும் لِاُولِى الْاَلْبَابِ அறிவுள்ளவர்களுக்கு
40:54. ஹுத(ன்)வ் வ திக்ரா லி உலில் அல்BபாBப்
40:54. (அது) நேரான வழிகாட்டியாகவும், அறிவுடையோருக்கு உபதேசமாகவும் இருந்தது.
40:55 فَاصْبِرْ اِنَّ وَعْدَ اللّٰهِ حَقٌّ وَّاسْتَغْفِرْ لِذَنْۢبِكَ وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ بِالْعَشِىِّ وَالْاِبْكَارِ
فَاصْبِرْ ஆகவே, பொறுமை காப்பீராக! اِنَّ நிச்சயமாக وَعْدَ اللّٰهِ அல்லாஹ்வின்வாக்கு حَقٌّ உண்மையானதே! وَّاسْتَغْفِرْ இன்னும் மன்னிப்புக்கேட்பீராக! لِذَنْۢبِكَ உமது பாவங்களுக்காக وَسَبِّحْ இன்னும் துதிப்பீராக! بِحَمْدِ புகழ்ந்து رَبِّكَ உமது இறைவனை بِالْعَشِىِّ மாலையிலும் وَالْاِبْكَارِ காலையிலும்
40:55. Fபஸ்Bபிர் இன்ன வஃதல் லாஹி ஹக்கு(ன்)வ் வஸ்தக்Fபிர் லிதம்Bபிக வ ஸBப்Bபிஹ் Bபிஹம்தி ரBப்Bபிக Bபில்'அஷிய்யி வல் இBப்கார்
40:55. ஆகவே, நீர் பொறுமையுடன் இருப்பீராக! நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானதாகும்; உம் பாவத்திற்காக மன்னிப்புக் கோருவீராக! மாலையிலும் காலையிலும் உம் இறைவனைப் புகழ்ந்து, தஸ்பீஹ் (துதி) செய்து கொண்டு இருப்பீராக!
40:56 اِنَّ الَّذِيْنَ يُجَادِلُوْنَ فِىْۤ اٰيٰتِ اللّٰهِ بِغَيْرِ سُلْطٰنٍ اَتٰٮهُمْۙ اِنْ فِىْ صُدُوْرِهِمْ اِلَّا كِبْرٌ مَّا هُمْ بِبَالِغِيْهِؕ فَاسْتَعِذْ بِاللّٰهِؕ اِنَّهٗ هُوَ السَّمِيْعُ الْبَصِيْرُ
اِنَّ நிச்சயமாக الَّذِيْنَ يُجَادِلُوْنَ தர்க்கம் செய்பவர்கள் فِىْۤ اٰيٰتِ அத்தாட்சிகள் விஷயத்தில் اللّٰهِ அல்லாஹ்வின் بِغَيْرِ سُلْطٰنٍ எவ்வித ஆதாரமும் இன்றி اَتٰٮهُمْۙ தங்களிடம் வந்த اِنْ فِىْ صُدُوْرِهِمْ அவர்களின் உள்ளங்களில் இல்லை اِلَّا தவிர كِبْرٌ பெருமையை مَّا هُمْ بِبَالِغِيْهِؕ அவர்கள் அந்த பெருமையை அடையவும் முடியாது فَاسْتَعِذْ ஆகவே, நீர் பாதுகாப்புத் தேடுவீராக! بِاللّٰهِؕ அல்லாஹ்விடம் اِنَّهٗ هُوَ நிச்சயமாக அவன்தான் السَّمِيْعُ நன்கு செவியுறுபவன் الْبَصِيْرُ உற்று நோக்குபவன்
40:56. இன்னல் லதீன யுஜாதி லூன Fபீ ஆயாதில் லாஹி Bபிகய்ரி ஸுல்தானின் அதாஹும் இன் Fபீ ஸுதூரிஹிம் இல்லா கிBப்ரும் மா ஹும் BபிBபாலிகீஹ்; Fபஸ்த'இத் Bபில்லாஹி இன்னஹூ ஹுவஸ் ஸமீ'உல் Bபஸீர்
40:56. நிச்சயமாக தங்களிடம் வந்த அல்லாஹ்வுடைய வசனங்களில் எவ்வித ஆதாரமுமின்றித் தர்க்கம் செய்கின்றார்களே, அத்தகையவர்கள் - அவர்களுடைய இதயங்களில் பெருமையைத் தவிர (வேறு எதுவும்) இல்லை; ஆனால், அ(ப் பெருமையான)தை அவர்கள் அடையவும் மாட்டார்கள்; ஆகவே, (நபியே!) நீர் அல்லாஹ்விடமே பாதுகாவல் தேடுவீராக! நிச்சயமாக அவன் (யாவரையும்) செவியேற்பவன், பார்ப்பவன்.
40:57 لَخَلْقُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ اَكْبَرُ مِنْ خَلْقِ النَّاسِ وَلٰـكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُوْنَ
لَخَلْقُ படைப்பதுதான் السَّمٰوٰتِ வானங்களையும் وَالْاَرْضِ பூமியையும் اَكْبَرُ மிகப் பெரியது مِنْ خَلْقِ படைப்பதைவிட النَّاسِ மனிதர்களை وَلٰـكِنَّ என்றாலும் اَكْثَرَ அதிகமானவர்கள் النَّاسِ மனிதர்களில் لَا يَعْلَمُوْنَ அறியமாட்டார்கள்
40:57. லகல்குஸ் ஸமாவாதி வல் அர்ளி அக்Bபரு மின் கல்கின் னாஸி வ லாகின்ன அக்தரன் னாஸி லா யஃலமூன்
40:57. நிச்சயமாக வானங்களையும், பூமியையும் படைப்பது, மனிதர்களைப் படைப்பதைவிட மிகவும் பெரியதாகும்; எனினும், மனிதர்களில் பெரும்பாலோர் அறியமாட்டார்கள்.
40:58 وَمَا يَسْتَوِى الْاَعْمٰى وَالْبَصِيْرُ ۙ وَالَّذِيْنَ اٰمَنُوْا وَ عَمِلُوا الصّٰلِحٰتِ وَلَا الْمُسِىْٓءُ ؕ قَلِيْلًا مَّا تَتَذَكَّرُوْنَ
وَمَا يَسْتَوِى சமமாக மாட்டார்(கள்) الْاَعْمٰى குருடரும் وَالْبَصِيْرُ ۙ பார்வையுள்ளவரும் وَالَّذِيْنَ எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டனர் وَ عَمِلُوا இன்னும் செய்தார்கள் الصّٰلِحٰتِ நன்மைகளை وَلَا الْمُسِىْٓءُ ؕ இன்னும் கெட்டவர்(கள்) قَلِيْلًا மிகக் குறைவாகத்தான் مَّا تَتَذَكَّرُوْنَ நீங்கள் நல்லுபதேசம் பெறுகிறீர்கள்
40:58. வமா யஸ்தவில் அஃமா வல்Bபஸீரு வல்லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி வ லல் முஸீ'; கலீலம் மா தததக்கரூன்
40:58. குருடனும், பார்வையுடையவனும் சமமாக மாட்டார்கள்; அவ்வாறே, நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்வோரும், தீயோரும் சமமாக மாட்டார்கள்: உங்களில் சொற்பமானவர்களே (இதைக் கொண்டு) உபதேசம் பெறுகிறீர்கள்.
40:59 اِنَّ السَّاعَةَ لَاٰتِيَةٌ لَّا رَيْبَ فِيْهَا وَلٰـكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا يُؤْمِنُوْنَ
اِنَّ السَّاعَةَ நிச்சயமாக மறுமை لَاٰتِيَةٌ வந்தே தீரும் لَّا رَيْبَ فِيْهَا அதில் எவ்வித சந்தேகமும் இல்லை وَلٰـكِنَّ என்றாலும் اَكْثَرَ அதிகமானவர்கள் النَّاسِ மனிதர்களில் لَا يُؤْمِنُوْنَ நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
40:59. இன்னஸ் ஸா'அத ல ஆதியதுல் லா ரய்Bப Fபீஹா வ லாகின்ன அக்தரன் னாஸி லா யு'மினூன்
40:59. மறுமை நாள் நிச்சயமாக வந்தே தீரும்; அதில் சந்தேகமே இல்லை; எனினும், மனிதர்களில் பெரும்பாலோர் நம்பிக்கை கொள்வதில்லை.
40:60 وَقَالَ رَبُّكُمُ ادْعُوْنِىْۤ اَسْتَجِبْ لَـكُمْؕ اِنَّ الَّذِيْنَ يَسْتَكْبِرُوْنَ عَنْ عِبَادَتِىْ سَيَدْخُلُوْنَ جَهَنَّمَ دَاخِرِيْنَ
وَقَالَ கூறுகிறான் رَبُّكُمُ உங்கள் இறைவன் ادْعُوْنِىْۤ என்னிடம் பிரார்த்தியுங்கள்! اَسْتَجِبْ நான் அங்கீகரிப்பேன் لَـكُمْؕ உங்களுக்கு اِنَّ நிச்சயமாக الَّذِيْنَ يَسْتَكْبِرُوْنَ பெருமை அடிப்பவர்கள் عَنْ عِبَادَتِىْ எனது வணக்க வழிபாடுகளை விட்டு سَيَدْخُلُوْنَ நுழைவார்கள் جَهَنَّمَ நரகத்தில் دَاخِرِيْنَ சிறுமைப்பட்டவர்களாக
40:60. வ கால ரBப்Bபுகுமுத் 'ஊனீ அஸ்தஜிBப் லகும்; இன்னல் லதீன யஸ்தக்Bபிரூன அன் 'இBபாததீ ஸ யத்குலூன ஜஹன்னம தாகிரீன்
40:60. உங்கள் இறைவன் கூறுகிறான்: "என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள்; நான் உங்கள் (பிரார்த்தனை)களுக்குப் பதிலளிக்கிறேன். நிச்சயமாக எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் சிறுமையடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள்."
40:61 اَللّٰهُ الَّذِىْ جَعَلَ لَـكُمُ الَّيْلَ لِتَسْكُنُوْا فِيْهِ وَالنَّهَارَ مُبْصِرًا ؕ اِنَّ اللّٰهَ لَذُوْ فَضْلٍ عَلَى النَّاسِ وَ لٰـكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا يَشْكُرُوْنَ
اَللّٰهُ அல்லாஹ் الَّذِىْ எப்படிப்பட்டவன் جَعَلَ لَـكُمُ உங்களுக்கு ஆக்கினான் الَّيْلَ இரவை لِتَسْكُنُوْا நீங்கள் ஓய்வு எடுப்பதற்காக(வும்) فِيْهِ அதில் وَالنَّهَارَ இன்னும் பகலை مُبْصِرًا ؕ வெளிச்ச முள்ளதாக(வும்) اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் لَذُوْ فَضْلٍ அருளுடையவன் عَلَى النَّاسِ மக்கள் மீது وَ لٰـكِنَّ என்றாலும் اَكْثَرَ அதிகமானவர்கள் النَّاسِ மனிதர்களில் لَا يَشْكُرُوْنَ நன்றி செலுத்தமாட்டார்கள்
40:61. அல்லாஹுல் லதீ ஜ'அல லகுமுல் லய்ல லித்தஸ்குனூ Fபீஹி வன்னஹார முBப்ஸிரா; இன்னல் லாஹ லதூ Fபள்லின் 'அலன் னாஸி வ லாகின்ன அக்தரன் னாஸி லா யஷ்குரூன்
40:61. நீங்கள் இளைப்பாறுவதற்காக இரவையும், நீங்கள் பார்ப்பதற்காக பகலையும் அல்லாஹ்தான் படைத்தான்; நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது அருளுடையவன்; ஆயினும், மனிதர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை.
40:62 ذٰ لِكُمُ اللّٰهُ رَبُّكُمْ خَالِقُ كُلِّ شَىْءٍ ۘ لَّاۤ اِلٰهَ اِلَّا هُوَ ۚ فَاَ نّٰى تُؤْفَكُوْنَ
ذٰ لِكُمُ اللّٰهُ அந்த அல்லாஹ்தான் رَبُّكُمْ உங்கள் இறைவன் خَالِقُ படைத்தவன் كُلِّ شَىْءٍ ۘ எல்லாவற்றையும் لَّاۤ அறவே இல்லை اِلٰهَ வணக்கத்திற்குரியவன் اِلَّا هُوَ ۚ அவனைத் தவிர فَاَ نّٰى تُؤْفَكُوْنَ எவ்வாறு திருப்பப்படுகிறீர்கள்
40:62. தாலிகுமுல் லாஹு ரBப்Bபுகும் காலிகு குல்லி ஷய்'இன்; லா இலாஹ இல்லா ஹுவ Fப அன்னா து'Fபகூன்
40:62. அவன்தான் உங்கள் அல்லாஹ்; உங்கள் இறைவன்; எல்லாப் பொருட்களையும் படைப்பவன்; அவனைத் தவிர வேறு தெய்வமில்லை; எனவே, நீங்கள் (சத்தியத்தை விட்டும்) எங்கு திருப்பப்படுகிறீர்கள்?
40:63 كَذٰلِكَ يُؤْفَكُ الَّذِيْنَ كَانُوْا بِاٰيٰتِ اللّٰهِ يَجْحَدُوْنَ
كَذٰلِكَ இவ்வாறுதான் يُؤْفَكُ திருப்பப்பட்டார்(கள்) الَّذِيْنَ எவர்கள் كَانُوْا இருந்தார்கள் بِاٰيٰتِ அத்தாட்சிகளை اللّٰهِ அல்லாஹ்வின் يَجْحَدُوْنَ மறுப்பவர்களாக
40:63. கதாலிக யு'Fபகுல் லதீன கானூ Bபி ஆயாதில் லாஹி யஜ்ஹதூன்
40:63. அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்துக் கொண்டிருந்தார்களே அவர்களும் இவ்வாறே திருப்பப்பட்டனர்.
40:64 اَللّٰهُ الَّذِىْ جَعَلَ لَـكُمُ الْاَرْضَ قَرَارًا وَّالسَّمَآءَ بِنَآءً وَّصَوَّرَكُمْ فَاَحْسَنَ صُوَرَكُمْ وَرَزَقَكُمْ مِّنَ الطَّيِّبٰتِ ؕ ذٰ لِكُمُ اللّٰهُ رَبُّكُمْ ۖۚ فَتَبٰـرَكَ اللّٰهُ رَبُّ الْعٰلَمِيْنَ
اَللّٰهُ அல்லாஹ் الَّذِىْ எப்படிப்பட்டவன் جَعَلَ அமைத்தான் لَـكُمُ உங்களுக்கு الْاَرْضَ பூமியை قَرَارًا வசிப்பதற்கு வசதியாக وَّالسَّمَآءَ இன்னும் வானத்தை بِنَآءً ஒரு கட்டிடமாக وَّصَوَّرَكُمْ இன்னும் உங்களை உருவமைத்தான் فَاَحْسَنَ அழகாக்கினான் صُوَرَكُمْ உங்கள் உருவங்களை وَرَزَقَكُمْ இன்னும் உங்களுக்கு உணவளித்தான் مِّنَ الطَّيِّبٰتِ ؕ நல்ல உணவுகளில் இருந்து ذٰ لِكُمُ اللّٰهُ அவன் தான் அல்லாஹ் رَبُّكُمْ ۖۚ உங்கள் இறைவனாகிய فَتَبٰـرَكَ மிக்க அருள்வளம் நிறைந்தவன் اللّٰهُ அல்லாஹ் رَبُّ இறைவனாகிய الْعٰلَمِيْنَ அகிலங்களின்
40:64. அல்லாஹுல் லதீ ஜ'அல லகுமுல் அர்ள கரார(ன்)வ் வஸ்ஸ மா'அ Bபினா'அ(ன்)வ் வ ஸவ்வரகும் Fப அஹ்ஸன ஸுவரகும் வ ரZஜககும் மினத் தய்யிBபாத்; தாலிகுமுல் லாஹு ரBப்Bபுகும் FபதBபாரகல் லாஹு ரBப்Bபுல் 'ஆலமீன்
40:64. அல்லாஹ்தான் உங்களுக்கு இப்பூமியைத் தங்குமிடமாகவும், வானத்தை ஒரு விதானமாகவும் உண்டாக்கியிருக்கிறான்; மேலும், அவன்தான் உங்களை உருவாக்கி, உங்கள் உருவங்களை அழகாக்கி, நல்லவற்றிலிருந்து உங்களுக்கு உணவும் அளித்தான்; அவன்தான் அல்லாஹ்; உங்களுடைய இறைவன்; அகிலத்தாருக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ் மிகப் பாக்கியமுடையவன்.
40:65 هُوَ الْحَىُّ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ فَادْعُوْهُ مُخْلِصِيْنَ لَهُ الدِّيْنَؕ اَلْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَ
هُوَ அவன்தான் الْحَىُّ என்றும் உயிரோடு இருப்பவன் لَاۤ அறவே இல்லை اِلٰهَ வணக்கத்திற்குரியவன் اِلَّا هُوَ அவனைத் தவிர فَادْعُوْهُ ஆகவே அவனிடமே நீங்கள் பிரார்த்தியுங்கள் مُخْلِصِيْنَ தூய்மைப்படுத்தியவர்களாக لَهُ அவனுக்கு الدِّيْنَؕ வழிபாடுகளை اَلْحَمْدُ எல்லாப் புகழும் لِلّٰهِ அல்லாஹ்விற்கே رَبِّ இறைவனாகிய الْعٰلَمِيْنَ அகிலங்களின்
40:65. ஹுவல் ஹய்யு லா இலாஹ இல்லா ஹுவ Fபத்'ஊஹு முக் லிஸீன லஹுத்-தீன்; அல்ஹம்து லில்லாஹி ரBப்Bபில் 'ஆலமீன்
40:65. அவனே (என்றென்றும்) உயிரோடிருப்பவன்; அவனையன்றி (வேறு) தெய்வமில்லை; ஆகவே, வணக்கத்தை அவனுக்கே கலப்பற்றவர்களாக்கி வைக்கின்றவர்களாய், அவனையே நீங்கள் அழையுங்கள்; அனைத்துப் புகழும் அகிலங்களின் இறைவனான அல்லாஹ்வுக்கே ஆகும்.
40:66 قُلْ اِنِّىْ نُهِيْتُ اَنْ اَعْبُدَ الَّذِيْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ لَمَّا جَآءَنِىَ الْبَيِّنٰتُ مِنْ رَّبِّىْ وَاُمِرْتُ اَنْ اُسْلِمَ لِرَبِّ الْعٰلَمِيْنَ
قُلْ கூறுவீராக! اِنِّىْ நிச்சயமாக நான் نُهِيْتُ தடுக்கப்பட்டு விட்டேன் اَنْ اَعْبُدَ நான் வணங்குவதற்கு الَّذِيْنَ تَدْعُوْنَ நீங்கள் பிரார்த்திக்கின்றவர்களை مِنْ دُوْنِ اللّٰهِ அல்லாஹ்வையன்றி لَمَّا جَآءَنِىَ என்னிடம்வந்துவிட்டபோது الْبَيِّنٰتُ தெளிவான அத்தாட்சிகள் مِنْ رَّبِّىْ என் இறைவனிடமிருந்து وَاُمِرْتُ நான் ஆணை இடப்பட்டுள்ளேன் اَنْ اُسْلِمَ நான் முற்றிலும் பணிந்து நடக்கவேண்டும் لِرَبِّ இறைவனுக்கு الْعٰلَمِيْنَ அகிலங்களின்
40:66. குல் இன்னீ னுஹீது அன் அஃBபுதல் லதீன தத்'ஊன மின் தூனில் லாஹி லம்மா ஜா'அ னியல் Bபய்யினாது மிர் ரBப்Bபீ வ உமிர்து அன் உஸ்லிம லி ரBப்Bபில் 'ஆலமீன்
40:66. (நபியே!) நீர் கூறுவீராக! "என்னுடைய இறைவனிடமிருந்து தெளிவான அத்தாட்சிகள் எனக்கு வந்தபொழுது, அல்லாஹ்வையன்றி நீங்கள் அழைப்பவற்றை வணங்குவதை விட்டும் நிச்சயமாக நான் தடுக்கப்பட்டுள்ளேன்; அன்றியும், அகிலத்தாரின் இறைவனுக்கே அடிபணிய வேண்டும் என்று கட்டளையிடப்பட்டிருக்கின்றேன்."
40:67 هُوَ الَّذِىْ خَلَقَكُمْ مِّنْ تُرَابٍ ثُمَّ مِنْ نُّطْفَةٍ ثُمَّ مِنْ عَلَقَةٍ ثُمَّ يُخْرِجُكُمْ طِفْلًا ثُمَّ لِتَبْلُغُوْۤا اَشُدَّكُمْ ثُمَّ لِتَكُوْنُوْا شُيُوْخًا ؕ وَمِنْكُمْ مَّنْ يُّتَوَفّٰى مِنْ قَبْلُ وَلِتَبْلُغُوْۤا اَجَلًا مُّسَمًّى وَّلَعَلَّكُمْ تَعْقِلُوْنَ
هُوَ அவன் الَّذِىْ எப்படிப்பட்டவன் خَلَقَكُمْ உங்களைப்படைத்தான் مِّنْ تُرَابٍ மண்ணிலிருந்து ثُمَّ பிறகு مِنْ نُّطْفَةٍ இந்திரியத்தில் இருந்து ثُمَّ مِنْ عَلَقَةٍ பிறகு/இரத்தக் கட்டியில் இருந்து ثُمَّ பிறகு يُخْرِجُكُمْ உங்களை வெளிக்கொண்டு வருகிறான் طِفْلًا குழந்தைகளாக ثُمَّ பிறகு لِتَبْلُغُوْۤا நீங்கள் அடைவதற்காக اَشُدَّ வலிமையை كُمْ உங்கள் ثُمَّ பிறகு لِتَكُوْنُوْا நீங்கள்ஆகுவதற்காக شُيُوْخًا ؕ வயோதிகர்களாக وَمِنْكُمْ உங்களில் مَّنْ يُّتَوَفّٰى உயிர் கைப்பற்றப்படுபவரும் مِنْ قَبْلُ இதற்கு முன்னர் وَلِتَبْلُغُوْۤا இன்னும் நீங்கள் அடைவதற்காக اَجَلًا ஒரு தவணையை مُّسَمًّى குறிப்பிட்ட(து) وَّلَعَلَّكُمْ تَعْقِلُوْنَ இன்னும் நீங்கள் சிந்தித்து புரிவதற்காக
40:67. ஹுவல் லதீ கலககும் மின் துராBபின் தும்ம மின் னுத்Fபதின் தும்ம மின் 'அலகதின் தும்ம யுக்ரிஜுகும் திFப்லன் தும்ம லிதBப்லுகூ அஷுத்தகும் தும்ம லிதகூனூ ஷுயூகா; வ மின்கும் மய் யுதவFப்Fபா மின் கBப்லு வ லிதBப்லுகூ அஜலம் முஸம் ம(ன்)வ்-வ ல'அல்லகும் தஃகிலூன்
40:67. அவன்தான் உங்களை மண்ணிலிருந்து படைத்தான்; பின் இந்திரியத்திலிருந்தும், பின் இரத்தக் கட்டியிலிருந்தும் (உருவாக்கி), உங்களைக் குழந்தையாக வெளியாக்குகிறான்; பின் நீங்கள் உங்கள் வாலிபத்தை அடைந்து, பின்னர் முதியோராகுகிறீர்கள்; இதற்கு முன்னர் இறந்து விடுவோரும் உங்களில் இருக்கின்றனர்; இன்னும், நீங்கள் ஒரு குறிப்பிட்ட தவணையை அடைவீர்கள்; (இதிலிருந்து) நீங்கள் விளங்கிக் கொள்ளும் பொருட்டு (இதை அறிந்து கொள்ளுங்கள்).
40:68 هُوَ الَّذِىْ يُحْىٖ وَيُمِيْتُؕ فَاِذَا قَضٰٓى اَمْرًا فَاِنَّمَا يَقُوْلُ لَهٗ كُنْ فَيَكُوْنُ
هُوَ அவன் الَّذِىْ எப்படிப்பட்டவன் يُحْىٖ உயிர்ப்பிக்கின்றான் وَيُمِيْتُؕ இன்னும் மரணிக்கச் செய்கிறான் فَاِذَا قَضٰٓى அவன் முடிவு செய்துவிட்டால் اَمْرًا ஒரு காரியத்தை فَاِنَّمَا يَقُوْلُ அவன் கூறுவதெல்லாம் لَهٗ அதற்கு كُنْ ஆகு فَيَكُوْنُ உடனே அது ஆகிவிடும்
40:68. ஹுவல் லதீ யுஹ்யீ வ யுமீது Fப இதா களா அம்ரன் Fப இன்னமா யகூலு லஹூ குன் Fப யகூன்
40:68. அவனே உயிர்ப்பிக்கிறான்; அவனே மரணிக்கச் செய்கிறான்; ஆகவே, அவன் ஒரு காரியத்தைச் செய்யத் தீர்மானித்தால்: "ஆகுக!" என்று அதற்குக் கூறுகிறான், உடன் அது ஆகிவிடுகிறது.
40:69 اَلَمْ تَرَ اِلَى الَّذِيْنَ يُجَادِلُوْنَ فِىْۤ اٰيٰتِ اللّٰهِؕ اَنّٰى يُصْرَفُوْنَ ۛۚ ۙ
اَلَمْ تَرَ நீர் பார்க்கவில்லையா? اِلَى الَّذِيْنَ يُجَادِلُوْنَ தர்க்கம் செய்கின்றவர்களை فِىْۤ اٰيٰتِ اللّٰهِؕ அல்லாஹ்வின் வசனங்களில் اَنّٰى يُصْرَفُوْنَ ۛۚ ۙ அவர்கள் எவ்வாறு திருப்பப்படுகிறார்கள்
40:69. அலம் தர இலல் லதீன யுஜாதிலூன Fபீ ஆயாதில் லாஹி அன்னா யுஸ்ரFபூன்
40:69. அல்லாஹ்வின் வசனங்களைப் பற்றித் தர்க்கம் செய்பவர்களை நீங்கள் பார்க்கவில்லையா? எவ்வாறு அவர்கள் (சத்தியத்தை விட்டும்) திருப்பப்படுகின்றனர்?
40:70 الَّذِيْنَ كَذَّبُوْا بِالْكِتٰبِ وَبِمَاۤ اَرْسَلْنَا بِهٖ رُسُلَنَا ۛ فَسَوْفَ يَعْلَمُوْنَ ۙ
الَّذِيْنَ كَذَّبُوْا பொய்ப்பித்தவர்கள் بِالْكِتٰبِ வேதத்தை(யும்) وَبِمَاۤ اَرْسَلْنَا இன்னும் /எதைக் கொண்டு/நாம்அனுப்பினோமோ بِهٖ அதைக் கொண்டு رُسُلَنَا நமது தூதர்களை ۛ فَسَوْفَ يَعْلَمُوْنَ ۙ விரைவில் அறிந்து கொள்வார்கள்
40:70. அல்லதீன கத்தBபூ Bபில் கிதாBபி வ Bபிமா அர்ஸல்னா Bபிஹீ ருஸுலனா Fபஸவ்Fப யஃலமூன்
40:70. எவர்கள் இவ்வேதத்தையும், நம்முடைய (மற்ற) தூதர்கள் கொண்டு வந்ததையும் பொய்ப்பிக்கிறார்களோ அவர்கள் விரைவிலேயே (உண்மையை) அறிவார்கள்.
40:71 اِذِ الْاَغْلٰلُ فِىْۤ اَعْنَاقِهِمْ وَالسَّلٰسِلُؕ يُسْحَبُوْنَۙ
اِذِ الْاَغْلٰلُ அப்போது சங்கிலிகளும் فِىْۤ اَعْنَاقِهِمْ அவர்களின் கழுத்துகளில் وَالسَّلٰسِلُؕ இன்னும் விலங்குகளும் يُسْحَبُوْنَۙ அவர்கள் இழுக்கப்படுவார்கள்
40:71. இதில் அக்லாலு Fபீ அஃனாகி-ஹிம் வஸ்ஸலாஸிலு யுஸ்ஹBபூன்
40:71. அவர்களுடைய கழுத்துக்களில் (மோவாய்க்கட்டைகள் வரை) அரிகண்டங்களுடனும் விலங்குகளுடனும் இழுத்துக்கொண்டு வரப்பட்டு-
40:72 فِى الْحَمِيْمِ ۙ ثُمَّ فِى النَّارِ يُسْجَرُوْنَ ۚ
فِى الْحَمِيْمِ ۙ கொதிக்கின்ற நீரில் ثُمَّ பிறகு فِى النَّارِ நரக நெருப்பில் يُسْجَرُوْنَ ۚ அவர்கள் எரிக்கப்படுவார்கள்
40:72. Fபில் ஹமீமி தும்ம Fபின் னாரி யஸ்ஜரூன்
40:72. கொதிக்கும் நீரிலும், பிறகு, (நரக)த் தீயிலும் எரிக்கப்படுவார்கள்.
40:73 ثُمَّ قِيْلَ لَهُمْ اَيْنَ مَا كُنْتُمْ تُشْرِكُوْنَۙ
ثُمَّ பிறகு قِيْلَ கூறப்படும் لَهُمْ அவர்களிடம் اَيْنَ எங்கே? مَا كُنْتُمْ تُشْرِكُوْنَۙ நீங்கள் இணைவைத்துக் கொண்டிருந்தவை
40:73. தும்மா கீல லஹும் அய்ன மா குன்தும் துஷ்ரிகூன்
40:73. பிறகு, அவர்களுக்குச் சொல்லப்படும்: "நீங்கள் (அவனுக்கு) இணைவைத்துக் கொண்டிருந்தவை எங்கே?" என்று.
40:74 مِنْ دُوْنِ اللّٰهِ ؕ قَالُوْا ضَلُّوْا عَنَّا بَلْ لَّمْ نَـكُنْ نَّدْعُوْا مِنْ قَبْلُ شَيْــٴًـــا ؕ كَذٰلِكَ يُضِلُّ اللّٰهُ الْكٰفِرِيْنَ
مِنْ دُوْنِ اللّٰهِ ؕ அல்லாஹ்வையன்றி قَالُوْا அவர்கள் கூறுவார்கள் ضَلُّوْا அவை தவறிவிட்டன عَنَّا எங்களை விட்டும் بَلْ لَّمْ نَـكُنْ மாறாக/நாங்கள் இருக்கவில்லையே!” نَّدْعُوْا நாங்கள் வணங்குகின்றவர்களாக مِنْ قَبْلُ இதற்கு முன்னர் شَيْــٴًـــا ؕ எதையும் كَذٰلِكَ இவ்வாறுதான் يُضِلُّ வழிகெடுக்கின்றான் اللّٰهُ அல்லாஹ் الْكٰفِرِيْنَ நிராகரிப்பாளர்களை
40:74. மின் தூனில் லாஹி காலூ ளல்லூ 'அன்னா Bபல் லம் னகுன் னத்'ஊ மின் கBப்லு ஷய்'ஆ; கதாலிக யுளில்லுல் லாஹுல் காFபிரீன்
40:74. அல்லாஹ்வையன்றி (நீங்கள் இணைவைத்துக் கொண்டிருந்தவை எங்கே?' என்று கேட்கப்பட்டதும்): "அவை எங்களைவிட்டும் மறைந்து விட்டன; அன்றியும், முன்னர் நாங்கள் (அல்லாஹ்வைத் தவிர) வேறு எதையும் அழைத்துக் கொண்டிருக்கவில்லையே!" என்று கூறுவார்கள். இவ்வாறுதான் நிராகரிப்பாளர்களை அல்லாஹ் வழிகெடச் செய்கிறான்.
40:75 ذٰ لِكُمْ بِمَا كُنْتُمْ تَفْرَحُوْنَ فِى الْاَرْضِ بِغَيْرِ الْحَقِّ وَبِمَا كُنْـتُمْ تَمْرَحُوْنَ ۚ
ذٰ لِكُمْ بِمَا كُنْتُمْ இது/நீங்கள் இருந்த காரணத்தாலும் تَفْرَحُوْنَ மகிழ்ச்சி அடைபவர்களாக فِى الْاَرْضِ பூமியில் بِغَيْرِ الْحَقِّ அநியாயத்தைக் கொண்டு وَبِمَا كُنْـتُمْ நீங்கள் இருந்த காரணத்தாலும் تَمْرَحُوْنَ ۚ மமதை கொள்பவர்களாக
40:75. தாலிகும் Bபிமா குன்தும் தFப்ரஹூன Fபில் அர்ளி Bபிகய்ரில் ஹக்கி வ Bபிமா குன்தும் தம்ரஹூன்
40:75. நீங்கள் பூமியில் நியாயமின்றிப் பெருமிதம் கொண்டதும், இறுமாப்புக் கொண்டதுமே இதற்குக் காரணம்.
40:76 اُدْخُلُوْۤا اَبْوَابَ جَهَـنَّمَ خٰلِدِيْنَ فِيْهَا ۚ فَبِئْسَ مَثْوَى الْمُتَكَبِّرِيْنَ
اُدْخُلُوْۤا நீங்கள் நுழையுங்கள்! اَبْوَابَ வாசல்களில் جَهَـنَّمَ நரகத்தின் خٰلِدِيْنَ நிரந்தரமானவர்களாக فِيْهَا ۚ அதில் فَبِئْسَ மிகக் கெட்டது مَثْوَى தங்குமிடம் الْمُتَكَبِّرِيْنَ பெருமையடிப்பவர்களின்
40:76. உத்குலூ அBப்வாBப ஜஹன்னம காலிதீன Fபீஹா FபBபி'ஸ மத்வல் முதகBப்Bபிரீன்
40:76. "நீங்கள் நரகத்தின் வாயில்களுள் - அதில் என்றென்றும் தங்குபவர்களாகப் பிரவேசியுங்கள்" (என்று கூறப்படும்); எனவே, பெருமையடித்துக் கொண்டிருந்தவர்களின் தங்குமிடம் மிகவும் கெட்டது.
40:77 فَاصْبِرْ اِنَّ وَعْدَ اللّٰهِ حَقٌّ ۚ فَاِمَّا نُرِيَنَّكَ بَعْضَ الَّذِىْ نَعِدُهُمْ اَوْ نَتَوَفَّيَنَّكَ فَاِلَيْنَا يُرْجَعُوْنَ
فَاصْبِرْ ஆகவே, பொறுமையாக இருப்பீராக! اِنَّ وَعْدَ நிச்சயமாக வாக்கு اللّٰهِ அல்லாஹ்வின் حَقٌّ ۚ உண்மையானதே! فَاِمَّا ஒன்று نُرِيَنَّكَ நாம் உங்களுக்கு காண்பிப்போம் بَعْضَ சிலதை الَّذِىْ نَعِدُهُمْ அவர்களை நாம் எச்சரித்தவற்றில் اَوْ அல்லது نَتَوَفَّيَنَّكَ உம்மை உயிர் கைப்பற்றிக் கொள்வோம் فَاِلَيْنَا நம் பக்கம்தான் يُرْجَعُوْنَ அவர்கள் திரும்பக் கொண்டு வரப்படுவார்கள்
40:77. Fபஸ்Bபிர் இன்ன வஃதல் லாஹி ஹக்க்; Fப இம்மா னுரியன்னக் Bபஃளல் லதீ ன'இ துஹும் அவ் னதவFப்Fபயன்னக Fப இலய்னா யுர்ஜ'ஊன்
40:77. ஆகவே, (நபியே!) நீர் பொறுமையுடன் இருப்பீராக! நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது; அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட சிலவற்றை நாம் உமக்குக் காண்பித்தாலும், அல்லது அதற்கு முன்னரே நிச்சயமாக நாம் உம்மை மரணமடையச் செய்தாலும், அவர்கள் நம்மிடமே கொண்டுவரப்படுவார்கள்.
40:78 وَلَقَدْ اَرْسَلْنَا رُسُلًا مِّنْ قَبْلِكَ مِنْهُمْ مَّنْ قَصَصْنَا عَلَيْكَ وَمِنْهُمْ مَّنْ لَّمْ نَقْصُصْ عَلَيْكَؕ وَمَا كَانَ لِرَسُوْلٍ اَنْ يَّاْتِىَ بِاٰيَةٍ اِلَّا بِاِذْنِ اللّٰهِۚ فَاِذَا جَآءَ اَمْرُ اللّٰهِ قُضِىَ بِالْحَقِّ وَخَسِرَ هُنَالِكَ الْمُبْطِلُوْنَ
وَلَقَدْ திட்டவட்டமாக اَرْسَلْنَا நாம் அனுப்பினோம் رُسُلًا பல தூதர்களை مِّنْ قَبْلِكَ உமக்கு முன்னர் مِنْهُمْ அவர்களில் مَّنْ எவரை (சிலரை) قَصَصْنَا நாம் விவரித்தோம் عَلَيْكَ உமக்கு وَمِنْهُمْ இன்னும் அவர்களில் مَّنْ எவரை (சிலரை) لَّمْ نَقْصُصْ நாம்விவரிக்கவில்லை عَلَيْكَؕ உமக்கு وَمَا كَانَ முடியாது لِرَسُوْلٍ எந்த ஒரு தூதருக்கும் اَنْ يَّاْتِىَ بِاٰيَةٍ அவர் ஓர் அத்தாட்சியைக் கொண்டு வருவதற்கு اِلَّا தவிர بِاِذْنِ அனுமதி கொண்டே اللّٰهِۚ அல்லாஹ்வின் فَاِذَا جَآءَ வந்துவிட்டால் اَمْرُ கட்டளை اللّٰهِ அல்லாஹ்வின் قُضِىَ தீர்ப்பளிக்கப்படும் بِالْحَقِّ நீதமாக وَخَسِرَ நஷ்டமடைவார்(கள்) هُنَالِكَ அப்போது الْمُبْطِلُوْنَ பொய்யர்கள்
40:78. வ லகத் அர்ஸல்னா ருஸுலம் மின் கBப்லிக மின்ஹும் மன் கஸஸ்னா 'அலய்க வ மின்ஹும் மல் லம் னக்ஸுஸ் 'அலய்க்; வமா கான லி ரஸூலின் அ(ன்)ய் யாதிய Bபி ஆயதின் இல்லா Bபி இத்னில் லாஹ்; Fப இதா ஜா'அ அம்ருல் லாஹி குளிய Bபில்ஹக்கி வ கஸிர ஹுனாலிகல் முBப்திலூன்
40:78. திட்டமாக உமக்கு முன்னர் தூதர்களை அனுப்பியிருக்கின்றோம்; அவர்களில் சிலருடைய வரலாற்றை உமக்குக் கூறியுள்ளோம்: இன்னும், எவர்களுடைய வரலாற்றை உமக்குக் கூறவில்லையோ அவர்களும் (அத்தூதர்களில்) இருக்கின்றனர்: (இவ்விருசாராரில்) எந்தத் தூதரும் அல்லாஹ்வின் அனுமதியின்றி எந்த அத்தாட்சியையும் கொண்டுவருவதற்கு (அதிகாரம்) இல்லை; ஆகவே, அல்லாஹ்வுடைய கட்டளை வரும்போது, (அனைவருக்கும்) நியாயமாகத் தீர்ப்பளிக்கப்படும்: அன்றியும், அந்த இடத்தில் பொய்யர்கள் தாம் நஷ்டமடைவார்கள்.
40:79 اَللّٰهُ الَّذِىْ جَعَلَ لَكُمُ الْاَنْعَامَ لِتَرْكَبُوْا مِنْهَا وَمِنْهَا تَاْكُلُوْنَ
اَللّٰهُ அல்லாஹ் الَّذِىْ எப்படிப்பட்டவன் جَعَلَ لَكُمُ உங்களுக்காக படைத்தான் الْاَنْعَامَ கால்நடைகளை لِتَرْكَبُوْا நீங்கள் வாகனிப்பதற்காக مِنْهَا அவற்றில் وَمِنْهَا அவற்றில் சிலவற்றை تَاْكُلُوْنَ நீங்கள் புசிக்கின்றீர்கள்
40:79. அல்லாஹுல் லதீ ஜ'அல லகுமுல் அன்'ஆம லிதர்கBபூ மின்ஹா வ மின்ஹா தாகுலூன்
40:79. அல்லாஹ்தான் கால்நடைகளை உங்களுக்காக உண்டாக்கியிருக்கிறான்; அவற்றில் சிலவற்றின் மீது நீங்கள் சவாரி செய்கிறீர்கள்; இன்னும், அவற்றில் (சிலவற்றிலிருந்து) நீங்கள் புசிக்கிறீர்கள்.
40:80 وَلَكُمْ فِيْهَا مَنَافِعُ وَ لِتَبْلُغُوْا عَلَيْهَا حَاجَةً فِىْ صُدُوْرِكُمْ وَعَلَيْهَا وَعَلَى الْفُلْكِ تُحْمَلُوْنَؕ
وَلَكُمْ இன்னும் உங்களுக்கு فِيْهَا அவற்றில் உள்ளன مَنَافِعُ பல பலன்கள் وَ لِتَبْلُغُوْا இன்னும் நீங்கள்அடைவதற்காக عَلَيْهَا அதன் மூலம் حَاجَةً ஓர் ஆசையை فِىْ صُدُوْرِكُمْ உங்கள் நெஞ்சங்களில் உள்ள وَعَلَيْهَا இன்னும் அவற்றின் மீது(ம்) وَعَلَى الْفُلْكِ கப்பலின் மீதும் تُحْمَلُوْنَؕ நீங்கள் சுமக்கப்படுகிறீர்கள்
40:80. வ லகும் Fபீஹா மனாFபி'உ வ லிதBப்லுகூ 'அலய்ஹா ஹாஜதன் Fபீ ஸுதூரிகும் வ 'அலய்ஹா வ 'அலல் Fபுல்கி துஹ்மலூன்
40:80. இன்னும், அவற்றில் உங்களுக்கு (வேறு பல) பயன்களும் இருக்கின்றன; மேலும், உங்கள் உள்ளங்களிலுள்ள தேவையை அதனால் நீங்கள் நிறைவேற்றிக்கொள்ளும் பொருட்டு அவற்றின் மீதும், கப்பல்கள் மீதும் நீங்கள் சுமந்து செல்லப்படுகிறீர்கள்.
40:81 وَيُرِيْكُمْ اٰيٰتِهٖ ۖ فَاَىَّ اٰيٰتِ اللّٰهِ تُنْكِرُوْنَ
وَيُرِيْكُمْ அவன் உங்களுக்கு காண்பிக்கிறான் اٰيٰتِهٖ தனது அத்தாட்சிகளை ۖ فَاَىَّ எதை اٰيٰتِ அத்தாட்சிகளில் اللّٰهِ அல்லாஹ்வின் تُنْكِرُوْنَ நீங்கள் மறுப்பீர்கள்
40:81. வ யுரீகும் ஆயாதிஹீ Fப அய்ய ஆயாதில் லாஹி துன்கிரூன்
40:81. இன்னும், அவன் தன் அத்தாட்சிகளை உங்களுக்குக் காண்பிக்கிறான்; ஆகவே, அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் எதை நீங்கள் மறுப்பீர்கள்?
40:82 اَفَلَمْ يَسِيْرُوْا فِى الْاَرْضِ فَيَنْظُرُوْا كَيْفَ كَانَ عَاقِبَةُ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْؕ كَانُوْۤا اَكْثَرَ مِنْهُمْ وَاَشَدَّ قُوَّةً وَّ اٰثَارًا فِى الْاَرْضِ فَمَاۤ اَغْنٰى عَنْهُمْ مَّا كَانُوْا يَكْسِبُوْنَ
اَفَلَمْ يَسِيْرُوْا அவர்கள் சுற்றுப் பயணம் செய்யவி்ல்லையா? فِى الْاَرْضِ பூமியில் فَيَنْظُرُوْا அவர்கள் பார்த்திருப்பார்களே! كَيْفَ كَانَ எப்படி இருந்தது عَاقِبَةُ முடிவு الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْؕ தங்களுக்கு முன்னுள்ளவர்களின் كَانُوْۤا இருந்தனர் اَكْثَرَ அதிகமாக(வும்) مِنْهُمْ இவர்களை விட وَاَشَدَّ மிக பலசாலிகளாகவும் قُوَّةً வலிமையால் وَّ اٰثَارًا இன்னும் அடையாளங்களால் فِى الْاَرْضِ பூமியில் فَمَاۤ اَغْنٰى ஆனால், தடுக்கவில்லை عَنْهُمْ அவர்களை விட்டு مَّا كَانُوْا يَكْسِبُوْنَ அவர்கள் செய்து கொண்டிருந்தது
40:82. அFபலம் யஸீரூ Fபில் அர்ளி Fப யன்ளுரூ கய்Fப கான 'ஆகிBபதுல் லதீன மின் கBப்லிஹிம்; கானூ அக்தர மின்ஹும் வ அஷத்த குவ்வத(ன்)வ் வ ஆதாரன் Fபில் அர்ளி Fபமா அக்னா 'அன்ஹும் மா கானூ யக்ஸிBபூன்
40:82. இவர்கள் பூமியில் பயணம் செய்து தங்களுக்கு முன்னர் இருந்தவர்களின் முடிவு எப்படியிருந்தது என்பதைப் பார்க்கவில்லையா? அவர்கள் இவர்களைவிட (எண்ணிக்கையில்) அதிகமானவர்களாகவும், பலத்தாலும், பூமியில் (விட்டுச்சென்ற) அடையாளச் சின்னங்களாலும் மிகக் கடினமானவர்களாகவும் இருந்தார்கள்; எனினும், அவர்கள் சம்பாதித்தது (எதுவும்) அவர்களுக்குப் பயனளிக்கவில்லை.
40:83 فَلَمَّا جَآءَتْهُمْ رُسُلُهُمْ بِالْبَيِّنٰتِ فَرِحُوْا بِمَا عِنْدَهُمْ مِّنَ الْعِلْمِ وَحَاقَ بِهِمْ مَّا كَانُوْا بِهٖ يَسْتَهْزِءُوْنَ
فَلَمَّا جَآءَتْهُمْ அவர்களிடம் வந்தபோது رُسُلُهُمْ அவர்களின் தூதர்கள் بِالْبَيِّنٰتِ தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு فَرِحُوْا அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர் بِمَا عِنْدَهُمْ தங்களிடம் இருந்ததைக் கொண்டு مِّنَ الْعِلْمِ திறமைகள் وَحَاقَ இன்னும் சூழ்ந்து கொண்டது بِهِمْ அவர்களை مَّا எது كَانُوْا இருந்தார்களோ بِهٖ அதை يَسْتَهْزِءُوْنَ பரிகாசம் செய்பவர்களக
40:83. Fபலம்மா ஜா'அத் ஹும் ருஸுலுஹும் Bபில்Bபய்யினாதி Fபரிஹூ Bபிமா 'இன்தஹும் மினல் 'இல்மி வ ஹாக Bபிஹிம் மா கானூ Bபிஹீ யஸ்தஹ்Zஜி'ஊன்
40:83. ஆகவே, அவர்களுடைய தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளுடன் வந்தபோது, அவர்கள் தங்களிடமிருந்த கல்வியின் காரணமாக பெரும் மகிழ்ச்சி அடைந்திருந்தார்கள்; எனினும், அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்ததுவே அவர்களைச் சூழ்ந்து கொண்டது.
40:84 فَلَمَّا رَاَوْا بَاْسَنَا قَالُوْۤا اٰمَنَّا بِاللّٰهِ وَحْدَهٗ وَكَفَرْنَا بِمَا كُنَّا بِهٖ مُشْرِكِيْنَ
فَلَمَّا رَاَوْا அவர்கள் பார்த்த போது بَاْسَنَا நமது தண்டனையை قَالُوْۤا அவர்கள் கூறினார்கள் اٰمَنَّا நாங்கள் நம்பிக்கை கொண்டோம் بِاللّٰهِ அல்லாஹ்வை وَحْدَهٗ அவன் ஒருவனை وَكَفَرْنَا நிராகரித்து விட்டோம் بِمَا எதை كُنَّا இருந்தோமோ بِهٖ அதை مُشْرِكِيْنَ இணைவைப்பவர்களாக
40:84. Fபலம்மா ர அவ் Bபாஸனா காலூ ஆமன்னா Bபில்லாஹி வஹ்தஹூ வ கFபர்னா Bபிமா குன்னா Bபிஹீ முஷ்ரிகீன்
40:84. எனவே, அவர்கள் நம் (கட்டளையால் உண்டான) வேதனையைக் கண்டபோது, "நாங்கள் அல்லாஹ் ஒருவன் மீதே நம்பிக்கை கொள்கிறோம்; நாங்கள் அவனுடன் இணைவைத்தவற்றை நிராகரித்துவிட்டோம்" என்று கூறினார்கள்.
40:85 فَلَمْ يَكُ يَنْفَعُهُمْ اِيْمَانُهُمْ لَمَّا رَاَوْا بَاْسَنَا ؕ سُنَّتَ اللّٰهِ الَّتِىْ قَدْ خَلَتْ فِىْ عِبَادِهٖۚ وَخَسِرَ هُنَالِكَ الْكٰفِرُوْنَ
فَلَمْ يَكُ ஆனால், இருக்கவில்லை يَنْفَعُهُمْ அவர்களுக்கு பலன் தரக்கூடியதாக اِيْمَانُهُمْ அவர்களின் ஈமான் لَمَّا رَاَوْا அவர்கள் பார்த்த போது بَاْسَنَا ؕ நமது தண்டனையை سُنَّتَ اللّٰهِ அல்லாஹ்வின் நடைமுறையைத்தான் الَّتِىْ எது قَدْ خَلَتْ சென்றுவிட்டது فِىْ عِبَادِهٖۚ அவனது அடியார்கள் விஷயத்தில் وَخَسِرَ நஷ்டமடைந்தார்(கள்) هُنَالِكَ அப்போது الْكٰفِرُوْنَ நிராகரிப்பாளர்கள்
40:85. Fபலம் யகு யன்Fப 'உஹும் ஈமானுஹும் லம்மா ர-அவ் Bப'ஸன ஸுன்னதல் லாஹில் லதீ கத் கலத் Fபீ 'இBபாதிஹீ வ கஸிர ஹுனாலிகல் காFபிரூன்
40:85. ஆயினும், நம் (கட்டளையால் உண்டான) வேதனையைக் கண்டபோது, அவர்களுடைய நம்பிக்கை அவர்களுக்குப் பயனளிக்கவில்லை; (இதற்குமுன்) அவனுடைய அடியார்களில் சென்றுவிட்டதே அத்தகைய அல்லாஹ்வுடைய வழிமுறையாக (இது நடந்தேறியது); ஆதலால், அந்நேரத்தில் நிராகரிப்பாளர்கள் நஷ்டத்தையே அடைந்தார்கள்.