டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம் 28. ஸூரத்துல் கஸஸ்(வரலாறுகள்)
மக்கீ, வசனங்கள்: 88
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
28:1 طٰسٓمٓ
طٰسٓمٓ தா சீம் மீம்
28:1. தா-ஸீன்-மீம்
28:1. தா, ஸீம், மீம்.
28:2 تِلْكَ اٰيٰتُ الْـكِتٰبِ الْمُبِيْنِ
تِلْكَ இவை اٰيٰتُ வசனங்களாகும் الْـكِتٰبِ வேதத்தின் الْمُبِيْنِ தெளிவான
28:2. தில்க ஆயாதுல் கிதாBபில் முBபீன்
28:2. இவை தெளிவான வேதத்தின் வசனங்களாகும்.
28:3 نَـتْلُوْا عَلَيْكَ مِنْ نَّبَاِ مُوْسٰى وَفِرْعَوْنَ بِالْحَـقِّ لِقَوْمٍ يُّؤْمِنُوْنَ
نَـتْلُوْا நாம் ஓதுகிறோம் عَلَيْكَ உம்மீது مِنْ نَّبَاِ செய்தியை مُوْسٰى மூசா وَفِرْعَوْنَ மற்றும் ஃபிர்அவ்னின் بِالْحَـقِّ உண்மையாக لِقَوْمٍ மக்களுக்காக يُّؤْمِنُوْنَ நம்பிக்கைகொள்கின்ற
28:3. னத்லூ 'அலய்க மின் னBப-இ மூஸா வ Fபிர்'அவ்ன Bபில்ஹக்கி லிகவ்மி(ன்)ய் யு'மிஇனூன்
28:3. நம்பிக்கை கொள்ளும் மக்களுக்காக நாம் மூஸா மற்றும் ஃபிர்அவ்னுடைய வரலாற்றிலிருந்து உண்மையைக் கொண்டு, உமக்கு ஓதிக் காண்பிக்கின்றோம்.
28:4 اِنَّ فِرْعَوْنَ عَلَا فِى الْاَرْضِ وَجَعَلَ اَهْلَهَا شِيَـعًا يَّسْتَضْعِفُ طَآٮِٕفَةً مِّنْهُمْ يُذَبِّحُ اَبْنَآءَهُمْ وَيَسْتَحْىٖ نِسَآءَهُمْ ؕ اِنَّهٗ كَانَ مِنَ الْمُفْسِدِيْنَ
اِنَّ நிச்சயமாக فِرْعَوْنَ ஃபிர்அவ்ன் عَلَا பலவந்தப்படுத்தினான் فِى الْاَرْضِ பூமியில் وَجَعَلَ இன்னும் ஆக்கினான் اَهْلَهَا அங்குள்ளவர்களை شِيَـعًا பல பிரிவுகளாக يَّسْتَضْعِفُ பலவீனப்படுத்தினான் طَآٮِٕفَةً ஒரு வகுப்பாரை مِّنْهُمْ அவர்களில் يُذَبِّحُ கொன்றான் اَبْنَآءَ ஆண் பிள்ளைகளை هُمْ அவர்களின் وَيَسْتَحْىٖ வாழவிட்டான் نِسَآءَهُمْ ؕ அவர்களின் பெண்களை اِنَّهٗ நிச்சயமாக அவன் كَانَ இருந்தான் مِنَ الْمُفْسِدِيْنَ கெட்டவர்களில் ஒருவனாக
28:4. இன்ன Fபிர்'அவ்ன 'அலா Fபில் அர்ளி வ ஜ'அல அஹ்லஹா ஷிய'அய் யஸ்தள்'இFபு தா'இFபதம் மின்ஹும் யுதBப்Bபிஹு அBப்னா'அஹும் வ யஸ்தஹ்யீ னிஸா'அஹும்; இன்னஹூ கான மினல் முFப்ஸிதீன்
28:4. நிச்சயமாக ஃபிர்அவ்ன் இப்பூமியில் பெருமையடித்துக்கொண்டு, அதிலுள்ளவர்களைப் (பல) பிரிவினர்களாக்கி, அவர்களிலிருந்து ஒரு கூட்டத்தாரை பலவீனப்படுத்தினான்; அவர்களுடைய ஆண் குழந்தைகளை அறுத்து (கொலை செய்து), பெண் குழந்தைகளை உயிருடன் விட்டுவைத்தான்; நிச்சயமாக அவன் குழப்பம் செய்வோரில் ஒருவனாக இருந்தான்.
28:5 وَنُرِيْدُ اَنْ نَّمُنَّ عَلَى الَّذِيْنَ اسْتُضْعِفُوْا فِى الْاَرْضِ وَنَجْعَلَهُمْ اَٮِٕمَّةً وَّنَجْعَلَهُمُ الْوٰرِثِيْنَۙ
وَنُرِيْدُ இன்னும் நாடினோம் اَنْ نَّمُنَّ நாம் அருள்புரிவதற்கு ? عَلَى الَّذِيْنَ اسْتُضْعِفُوْا பலவீனப்படுத்தப்பட்டவர்கள் மீது فِى الْاَرْضِ பூமியில் وَنَجْعَلَهُمْ இன்னும் அவர்களை நாம் ஆக்குவதற்கு اَٮِٕمَّةً அரசர்களாக وَّنَجْعَلَهُمُ இன்னும் அவர்களை நாம் ஆக்குவதற்கு الْوٰرِثِيْنَۙ வாரிசுகளாக
28:5. வ னுரீது அன் னமுன்ன 'அலல் லதீனஸ் துள்'இFபூ Fபில் அர்ளி வ னஜ்'அலஹும் அ'இம்மத(ன்)வ் வ னஜ்'அலஹுமுல் வாரிதீன்
28:5. ஆயினும், (எகிப்திய) பூமியில் பலவீனப்படுத்தப்பட்டோருக்கு நாம் உபகாரம் செய்யவும், அவர்களைத் தலைவர்களாக்கிவிடவும், அவர்களை (நாட்டுக்கு) வாரிசுகளாக்கவும் நாம் நாடினோம்.
28:6 وَنُمَكِّنَ لَهُمْ فِى الْاَرْضِ وَنُرِىَ فِرْعَوْنَ وَهَامٰنَ وَجُنُوْدَهُمَا مِنْهُمْ مَّا كَانُوْا يَحْذَرُوْنَ
وَنُمَكِّنَ இன்னும் நாம் ஆதிக்கத்தை ஏற்படுத்துவதற்கு لَهُمْ அவர்களுக்கு فِى الْاَرْضِ பூமியில் وَنُرِىَ நாம் காண்பிப்பதற்கு فِرْعَوْنَ ஃபிர்அவ்ன் وَهَامٰنَ இன்னும் ஹாமான் وَجُنُوْدَ இன்னும் இராணுவங்களுக்கு هُمَا அவ்விருவரின் مِنْهُمْ அவர்கள் மூலமாக مَّا எதை كَانُوْا இருந்தனர் يَحْذَرُوْنَ அச்சப்படுகின்றனர்
28:6. வ னுமக்கின லஹும் Fபில் அர்ளி வ னுரிய Fபிர்'அவ்ன வ ஹாமான வ ஜுனூதஹுமா மின்ஹும் மா கானூ யஹ்தரூன்
28:6. இன்னும், அப்பூமியில் அவர்களை நிலைப்படுத்தி ஃபிர்அவ்னும், ஹாமானும், அவ்விருவரின் படைகளும் இவர்களைப் பற்றி எ(வ்விஷயத்)தில் பயந்துகொண்டிருந்தார்களோ அதைக் காண்பிக்கவும் (நாடினோம்).
28:7 وَاَوْحَيْنَاۤ اِلٰٓى اُمِّ مُوْسٰٓى اَنْ اَرْضِعِيْهِۚ فَاِذَا خِفْتِ عَلَيْهِ فَاَ لْقِيْهِ فِى الْيَمِّ وَلَا تَخَافِىْ وَلَا تَحْزَنِىْۚ اِنَّا رَآدُّوْهُ اِلَيْكِ وَجٰعِلُوْهُ مِنَ الْمُرْسَلِيْنَ
وَاَوْحَيْنَاۤ நாம் உள்ளத்தில் போட்டோம் اِلٰٓى اُمِّ தாயாருக்கு مُوْسٰٓى மூஸாவின் اَنْ اَرْضِعِيْهِۚ நீ அவருக்கு பாலூட்டு! فَاِذَا خِفْتِ நீ பயந்தால் عَلَيْهِ அவரை فَاَ لْقِيْهِ அவரை எரிந்து விடு فِى الْيَمِّ கடலில் وَلَا تَخَافِىْ நீ பயப்படாதே! وَلَا تَحْزَنِىْۚ இன்னும் நீ கவலைப்படாதே! اِنَّا நிச்சயமாக நாம் رَآدُّوْهُ அவரை திரும்பக் கொண்டு வருவோம் اِلَيْكِ உம்மிடம் وَجٰعِلُوْهُ இன்னும் , அவரை ஆக்குவோம் مِنَ الْمُرْسَلِيْنَ தூதர்களில்
28:7. வ அவ்ஹய்னா இலா உம்மி மூஸா அன் அர்ளி'ஈஹி Fபய்-தா கிFப்தி 'அலய்ஹி Fப அல்கீஹி Fபில்யம்மி வலா தகாFபீ வலா தஹ்Zஜனீ இன்னா ராத்தூஹு இலய்கி வ ஜா'இலூஹு மினல் முர்ஸலீன்
28:7. நாம் மூஸாவின் தாயாருக்கு: "அவருக்கு (-உன் குழந்தைக்குப்) பாலூட்டுவாயாக! அவர் மீது (ஏதும் ஆபத்து வரும் என்று) நீ பயப்படுவாயானால் அவரை ஆற்றில் எறிந்துவிடு; அப்பால் (அவருக்காக) நீ பயப்படவும் வேண்டாம்; துக்கப்படவும் வேண்டாம்; நிச்சயமாக நாம் அவரை உன்னிடம் மீள வைப்போம்; இன்னும், அவரை (நம்) தூதர்களில் ஒருவராக்கி வைப்போம்" என்று அறிவித்தோம்.
28:8 فَالْتَقَطَهٗۤ اٰلُ فِرْعَوْنَ لِيَكُوْنَ لَهُمْ عَدُوًّا وَّحَزَنًا ؕ اِنَّ فِرْعَوْنَ وَهَامٰنَ وَجُنُوْدَهُمَا كَانُوْا خٰطِـــِٕيْنَ
فَالْتَقَطَهٗۤ அவரைக் கண்டெடுத்தனர் اٰلُ குடும்பத்தினர் فِرْعَوْنَ ஃபிர்அவ்னின் لِيَكُوْنَ முடிவில் அவர் ஆகுவதற்காக لَهُمْ அவர்களுக்கு عَدُوًّا எதிரியாகவும் وَّحَزَنًا ؕ கவலையாகவும் اِنَّ நிச்சயமாக فِرْعَوْنَ ஃபிர்அவ்ன் وَهَامٰنَ ஹாமான் وَجُنُوْدَ இன்னும் ராணுவங்கள் هُمَا அவ்விருவரின் كَانُوْا இருந்தனர் خٰطِـــِٕيْنَ பாவிகளாகவே
28:8. Fபல்தகதஹூ ஆலு Fபிர்'அவ்ன லி யகூன லஹும் 'அதுவ்வ(ன்)வ் வ ஹZஜனா; இன்ன Fபிர்'அவ்ன வ ஹாமான வ ஜுனூத ஹுமா கானூ காதி'ஈன்
28:8. (நதியில் மிதந்து வந்த) அவரை ஃபிர்அவ்னுடைய குடும்பத்தினர் எடுத்துக்கொண்டார்கள்: (பிற்காலத்தில் அவர்) அவர்களுக்கு விரோதியாகவும் துக்கம் தருபவராகவும் ஆவதற்காக! நிச்சயமாக ஃபிர்அவ்னும், ஹாமானும், அவ்விருவரின் படைகளும் தவறிழைப்பவர்களாகவே இருந்தனர்.
28:9 وَقَالَتِ امْرَاَتُ فِرْعَوْنَ قُرَّتُ عَيْنٍ لِّىْ وَلَكَ ؕ لَا تَقْتُلُوْهُ ۖ عَسٰٓى اَنْ يَّـنْفَعَنَاۤ اَوْ نَـتَّخِذَهٗ وَلَدًا وَّهُمْ لَا يَشْعُرُوْنَ
وَقَالَتِ கூறினாள் امْرَاَتُ மனைவி فِرْعَوْنَ ஃபிர்அவ்னின் قُرَّتُ குளிர்ச்சியாகும் عَيْنٍ கண் لِّىْ وَلَكَ ؕ எனக்கும் உனக்கும் لَا تَقْتُلُوْهُ அதைக் கொல்லாதீர்கள்! ۖ عَسٰٓى اَنْ يَّـنْفَعَنَاۤ அது நமக்கு நன்மை தரலாம் اَوْ نَـتَّخِذَهٗ அல்லது அதை நாம் வைத்துக்கொள்ளலாம் وَلَدًا பிள்ளையாக وَّهُمْ இன்னும் அவர்கள் لَا يَشْعُرُوْنَ உணரவில்லை
28:9. வ காலதிம் ர அது Fபிர்'அவ்ன குர்ரது 'அய்னில் லீ வ லக்; லா தக்துலூஹு 'அஸா அய்யன்Fப'அனா அவ் னத்தகிதஹூ வலத(ன்)வ் வ ஹும் லா யஷ்'உரூன்
28:9. இன்னும், (குழந்தையைக் கண்ட) ஃபிர்அவ்னின் மனைவி "(இக் குழந்தை) எனக்கும் உமக்கும் கண் குளிர்ச்சியாக இருக்கிறது; இதை நீர் கொன்றுவிடாதீர்! நமக்கு இவர் பயனளிக்கக்கூடும்; அல்லது நாம் இவரை (நம்) புதல்வராக்கிக்கொள்ளலாம்" என்று சொன்னாள்; இன்னும், அவர்கள் (இதன் விளைவு என்னவாகும் என்பதை) உணர்ந்து கொள்ளவில்லை.
28:10 وَاَصْبَحَ فُؤَادُ اُمِّ مُوْسٰى فٰرِغًا ؕ اِنْ كَادَتْ لَـتُبْدِىْ بِهٖ لَوْلَاۤ اَنْ رَّبَطْنَا عَلٰى قَلْبِهَا لِتَكُوْنَ مِنَ الْمُؤْمِنِيْنَ
وَاَصْبَحَ ஆகிவிட்டது فُؤَادُ உள்ளம் اُمِّ தாயாருடைய مُوْسٰى மூஸாவின் فٰرِغًا ؕ வெறுமையாக اِنْ كَادَتْ لَـتُبْدِىْ நிச்சயமாக அவள் வெளிப்படுத்தி இருக்கக்கூடும் بِهٖ அவரை لَوْلَاۤ اَنْ رَّبَطْنَا நாம் உறுதிப்படுத்தவில்லையெனில் عَلٰى قَلْبِهَا அவளுடைய உள்ளத்தை لِتَكُوْنَ அவள் ஆகவேண்டும் என்பதற்காக مِنَ الْمُؤْمِنِيْنَ நம்பிக்கையாளர்களில்
28:10. வ அஸ்Bபஹ Fபு'ஆது உம்மி மூஸா Fபாரிகன் இன் காதத் லதுBப்தீ Bபிஹீ லவ் லா அர்ரBபத்னா 'அலா கல்Bபிஹா லிதகூன மினல் மு'மினீன்
28:10. மூஸாவுடைய தாயின் இதயம் (துக்கத்தால்) வெறுமையாகிவிட்டது; நம்பிக்கையாளர்களில் உள்ளவளாக இருப்பதற்காக நாம் அவள் உள்ளத்தை உறுதிப்படுத்தாது இருந்திருந்தால், அவள் (அதனை மூஸா ஆற்றில் விடப்பட்டதை) வெளிப்படுத்த முனைந்திருப்பாள்.
28:11 وَقَالَتْ لِاُخْتِهٖ قُصِّيْهِ فَبَصُرَتْ بِهٖ عَنْ جُنُبٍ وَّهُمْ لَا يَشْعُرُوْنَۙ
وَقَالَتْ அவள் கூறினாள் لِاُخْتِهٖ அவருடைய சகோதரிக்கு قُصِّيْهِ நீ அவரைப் பின்தொடர்ந்து செல் فَبَصُرَتْ ஆக, அவள் பார்த்துவிட்டாள் بِهٖ அவரை عَنْ جُنُبٍ தூரத்திலிருந்து وَّهُمْ எனினும், அவர்கள் لَا يَشْعُرُوْنَۙ உணரவில்லை
28:11. வ காலத் லி உக்திஹீ குஸ்ஸீஹி FபBபஸுரத் Bபிஹீ 'அன் ஜுனுBபி(ன்)வ் வஹும் லா யஷ்'உரூன்
28:11. இன்னும், மூஸாவின் சகோதரியிடம்: "அவரைப் பின்தொடர்ந்து செல்!" என்றும், அவள் (தாய்) கூறினாள்; அவர்கள் உணராத விதத்தில் அவள் தூரத்திலிருந்து அவரைக் கவனித்து வந்தாள்.
28:12 وَحَرَّمْنَا عَلَيْهِ الْمَرَاضِعَ مِنْ قَبْلُ فَقَالَتْ هَلْ اَدُلُّـكُمْ عَلٰٓى اَهْلِ بَيْتٍ يَّكْفُلُوْنَهٗ لَـكُمْ وَهُمْ لَهٗ نٰصِحُوْنَ
وَحَرَّمْنَا நாம் தடுத்துவிட்டோம் عَلَيْهِ அவர் மீது الْمَرَاضِعَ பால்கொடுப்பவர்களை مِنْ قَبْلُ முன்னர் فَقَالَتْ கூறினாள் هَلْ اَدُلُّـكُمْ நான் உங்களுக்கு அறிவிக்கலாமா? عَلٰٓى اَهْلِ بَيْتٍ ஒரு வீட்டாரை يَّكْفُلُوْنَهٗ அவர்கள் அவரை பொறுப்பேற்பார்கள் لَـكُمْ உங்களுக்காக وَهُمْ அவர்கள் لَهٗ அவருக்கு نٰصِحُوْنَ நன்மையை நாடுபவர்கள்
28:12. வ ஹர்ரம்னா 'அலய்ஹில் மராளி'அ மின் கBப்லு Fபகாலத் ஹல் அதுல்லுகும் 'அலா அஹ்லி Bபய்தி(ன்)ய் யக்Fபுலூனஹூ லகும் வ ஹும் லஹூ னாஸிஹூன்
28:12. முன்னதாகவே அவர் மீது - பால் கொடுக்கும் பெண்களை நாம் தடுத்துவிட்டோம். (அவருடைய சகோதரி வந்து) கூறினாள்: "உங்களுக்காகப் பொறுப்பேற்று அவரைப் (பாலூட்டி) வளர்க்கக்கூடிய ஒரு வீட்டினரை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? மேலும், அவர்கள் அவர் நன்மையை நாடுபவராக இருப்பார்கள்."
28:13 فَرَدَدْنٰهُ اِلٰٓى اُمِّهٖ كَىْ تَقَرَّ عَيْنُهَا وَلَا تَحْزَنَ وَلِتَعْلَمَ اَنَّ وَعْدَ اللّٰهِ حَقٌّ وَّلٰـكِنَّ اَكْثَرَهُمْ لَا يَعْلَمُوْنَ
فَرَدَدْنٰهُ அவரை நாம் திரும்பக் கொண்டுவந்தோம் اِلٰٓى اُمِّهٖ அவருடைய தாயாரிடம் كَىْ تَقَرَّ குளிர்வதற்காகவும் عَيْنُهَا அவளது கண் وَلَا تَحْزَنَ இன்னும் அவள் கவலைப்படாமல் இருப்பதற்காகவும் وَلِتَعْلَمَ அவள் அறிவதற்காகவும் اَنَّ நிச்சயமாக وَعْدَ வாக்கு اللّٰهِ அல்லாஹ்வின் حَقٌّ உண்மை وَّلٰـكِنَّ என்றாலும் اَكْثَرَ அதிகமானவர்கள் هُمْ அவர்களில் لَا يَعْلَمُوْنَ அறியமாட்டார்கள்
28:13. Fபரதத்னாஹு இலா உம்மிஹீ கய் தகர்ர 'அய்னுஹா வலா தஹ்Zஜன வ லிதஃலம அன்ன வஃதல் லாஹி ஹக்கு(ன்)வ் வ லாகின்ன அக்தரஹும் லா யஃலமூன்
28:13. இவ்வாறு அவருடைய தாய் கண் குளிர்ச்சியடையவும், அவள் துக்கப்படாதிருக்கவும், நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது என்பதை அவள் அறிந்துகொள்வதற்காகவும், நாம் அவரை அவர் தாயாரிடத்தே திரும்பச் சேர்த்தோம்; எனினும், அவர்களில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள்.
28:14 وَلَمَّا بَلَغَ اَشُدَّهٗ وَاسْتَوٰٓى اٰتَيْنٰهُ حُكْمًا وَّعِلْمًا ؕ وَكَذٰلِكَ نَجْزِى الْمُحْسِنِيْنَ
وَلَمَّا போது بَلَغَ அடைந்தார் اَشُدَّهٗ அவர் தனது வலிமையை وَاسْتَوٰٓى அவர் முழுமை பெற்றார் اٰتَيْنٰهُ நாம் அவருக்கு தந்தோம் حُكْمًا ஞானத்தையும் وَّعِلْمًا ؕ அறிவையும் وَكَذٰلِكَ இவ்வாறே نَجْزِى நாம்கூலிதருகிறோம் الْمُحْسِنِيْنَ நன்மை செய்பவர்களுக்கு
28:14. வ லம்மா Bபலக அஷுத்தஹூ வஸ்தவா ஆதய் னாஹு ஹுக்ம(ன்)வ் வ 'இல்மா; வ கதாலிக னஜ்Zஜில் முஹ்ஸினீன்
28:14. இன்னும், அவர் வாலிபமடைந்து பக்குவ நிலை பெற்றபோது, நாம் அவருக்கு ஞானத்தையும், கல்வியையும் அளித்தோம்; நன்மை செய்வோருக்கு இவ்வாறே நாம் (நற்)கூலி வழங்குகிறோம்.
28:15 وَدَخَلَ الْمَدِيْنَةَ عَلٰى حِيْنِ غَفْلَةٍ مِّنْ اَهْلِهَا فَوَجَدَ فِيْهَا رَجُلَيْنِ يَقْتَتِلٰنِ هٰذَا مِنْ شِيْعَتِهٖ وَهٰذَا مِنْ عَدُوِّهٖۚ فَاسْتَغَاثَهُ الَّذِىْ مِنْ شِيْعَتِهٖ عَلَى الَّذِىْ مِنْ عَدُوِّهٖۙ فَوَكَزَهٗ مُوْسٰى فَقَضٰى عَلَيْهِ قَالَ هٰذَا مِنْ عَمَلِ الشَّيْطٰنِ ؕ اِنَّهٗ عَدُوٌّ مُّضِلٌّ مُّبِيْنٌ
وَدَخَلَ இன்னும் நுழைந்தார் الْمَدِيْنَةَ நகரத்தில் عَلٰى حِيْنِ நேரத்தில் غَفْلَةٍ கவனமற்று இருந்த مِّنْ اَهْلِهَا அதன் வாசிகள் فَوَجَدَ கண்டார் فِيْهَا அதில் رَجُلَيْنِ இருவரை يَقْتَتِلٰنِ அவ்விருவரும் சண்டை செய்தனர் هٰذَا இவர் مِنْ شِيْعَتِهٖ அவருடைய பிரிவை சேர்ந்தவர் وَهٰذَا இன்னும் இவர் مِنْ عَدُوِّهٖۚ அவருடைய எதிரிகளில் உள்ளவர் فَاسْتَغَاثَهُ அவரிடம் உதவி கேட்டான் الَّذِىْ مِنْ شِيْعَتِهٖ இவருடைய பிரிவைச் சேர்ந்தவன் عَلَى الَّذِىْ مِنْ عَدُوِّهٖۙ தனது எதிரிகளில் உள்ளவனுக்கு எதிராக فَوَكَزَهٗ مُوْسٰى மூஸா அவனை குத்து விட்டார் فَقَضٰى கதையை முடித்து விட்டார் عَلَيْهِ அவனுடைய قَالَ கூறினார் هٰذَا இது مِنْ عَمَلِ செயலில் உள்ளது الشَّيْطٰنِ ؕ ஷைத்தானின் اِنَّهٗ நிச்சயமாக அவன் عَدُوٌّ எதிரி ஆவான் مُّضِلٌّ வழி கெடுக்கின்றவன் مُّبِيْنٌ தெளிவான
28:15. வ தகலல் மதீனத 'அலா ஹீனீ கFப்லதிம் மின் அஹ்லிஹா Fபவஜத Fபீஹா ரஜு லய்னி யக்ததிலானி ஹாதா மின் ஷீ'அதிஹீ வ ஹாத மின் 'அதுவ்விஹீ Fபஸ்தகாதஹுல் லதீ மின் ஷீ'அதிஹீ 'அலல் லதீ மின் 'அதுவ்விஹீ FபவகZஜஹூ மூஸா Fபகளா 'அலய்ஹி கால ஹாத மின் 'அமலிஷ் ஷய்தானி இன்னஹூ 'அதுவ்வும்ம் முளில்லும் முBபீன்
28:15. (ஒரு நாள் மூஸா) அந்நகரத்தில் - அதிலுள்ளவர்கள் அயர்ந்து (தூக்கத்தில் பராமுகமாக) இருந்தபோது நுழைந்தார்; அங்கு இரண்டு மனிதர்கள் சண்டையிட்டுக் கொண்டிருந்ததைக் கண்டார்; ஒருவன் அவர் கூட்டத்தைச் சேர்ந்தவன்; மற்றொருவன் அவருடைய பகைவனைச் சேர்ந்தவன்; அப்பொழுது அவருடைய கூட்டத்தைச் சார்ந்தவன், அவனுடைய பகைவனைச் சார்ந்தவனுக்கு எதிராக அவரிடம் உதவி தேடினான்; மூஸா அ(ப்பகை)வனை ஒரு குத்துக் குத்தினார்; அவனை முடித்தார்; (இதைக் கண்ட மூஸா:) "இது ஷைத்தானுடைய வேலை; நிச்சயமாக அவன் வழிகெடுக்கக் கூடிய பகிரங்கமான விரோதியாவான்" என்று கூறினார்.
28:16 قَالَ رَبِّ اِنِّىْ ظَلَمْتُ نَفْسِىْ فَاغْفِرْ لِىْ فَغَفَرَ لَهٗؕ اِنَّهٗ هُوَ الْغَفُوْرُ الرَّحِيْمُ
قَالَ அவர் கூறினார் رَبِّ என் இறைவா! اِنِّىْ நிச்சயமாக நான் ظَلَمْتُ அநீதி இழைத்தேன் نَفْسِىْ எனக்கு فَاغْفِرْ لِىْ ஆகவே, என்னை மன்னித்துவிடு فَغَفَرَ ஆகவே அவன் மன்னித்தான் لَهٗؕ அவரை اِنَّهٗ هُوَ நிச்சயமாக அவன்தான் الْغَفُوْرُ மகா மன்னிப்பாளன் الرَّحِيْمُ மகா கருணையாளன்
28:16. கால ரBப்Bபி இன்னீ ளலம்து னFப்ஸீ Fபக்Fபிர் லீ FபகFபரலஹ்; இன்னஹூ ஹுவல் கFபூருர் ரஹீம்
28:16. "என் இறைவா! நிச்சயமாக நான் எனக்கே அநியாயம் செய்துவிட்டேன்; ஆகவே, நீ என்னை மன்னிப்பாயாக!" என்று பிரார்த்தித்தார்; அப்போது அவன் அவரை மன்னித்தான்; நிச்சயமாக அவனே மிகவும் மன்னிப்பவனாகவும், கிருபைமிக்கவனாகவும் இருக்கின்றான்.
28:17 قَالَ رَبِّ بِمَاۤ اَنْعَمْتَ عَلَىَّ فَلَنْ اَكُوْنَ ظَهِيْرًا لِّلْمُجْرِمِيْنَ
قَالَ அவர் கூறினார் رَبِّ என் இறைவா! بِمَاۤ சத்தியமாக اَنْعَمْتَ அருள் புரிந்ததின் மீது عَلَىَّ எனக்கு فَلَنْ اَكُوْنَ ஆகவே நான் ஆகவே மாட்டேன் ظَهِيْرًا உதவுபவனாக لِّلْمُجْرِمِيْنَ குற்றவாளிகளுக்கு
28:17. கால ரBப்Bபி Bபிமா அன்'அம்த 'அலய்ய Fபலன் அகூன ளஹீரல் லில்முஜ்ரிமீன்
28:17. "என் இறைவா! என்மீது நீ அருள் புரிந்ததன் காரணமாக, நான் இனி ஒருபோதும் குற்றவாளிகளுக்கு உதவிசெய்பவனாக இருக்க மாட்டேன்" என்று கூறினார்.
28:18 فَاَصْبَحَ فِى الْمَدِيْنَةِ خَآٮِٕفًا يَّتَرَقَّبُ فَاِذَا الَّذِى اسْتَـنْصَرَهٗ بِالْاَمْسِ يَسْتَصْرِخُهٗ ؕ قَالَ لَهٗ مُوْسٰٓى اِنَّكَ لَـغَوِىٌّ مُّبِيْنٌ
فَاَصْبَحَ காலையில் அவர் இருந்தார் فِى الْمَدِيْنَةِ நகரத்தில் خَآٮِٕفًا பயந்தவராக يَّتَرَقَّبُ எதிர்பார்த்தவராக فَاِذَا الَّذِى اسْتَـنْصَرَهٗ அப்போது/ எவன்/உதவிதேடினான்/அவரிடத்தில் بِالْاَمْسِ நேற்று يَسْتَصْرِخُهٗ ؕ அவரை உதவிக்கு கத்தி அழைத்தான் قَالَ கூறினார் لَهٗ அவனுக்கு مُوْسٰٓى மூசா اِنَّكَ நிச்சயமாக நீ لَـغَوِىٌّ ஒரு மூடன் ஆவாய் مُّبِيْنٌ தெளிவான
28:18. Fப அஸ்Bபஹ Fபில் மதீனதி கா'இFப(ன்)ய் யதரக்கBபு Fப இதல் லதிஸ் தன்ஸரஹூ Bபில் அம்ஸி யஸ்தஸ்ரிகுஹ்; கால லஹூ மூஸா இன்னக லகவிய்யும் முBபீன்
28:18. மேலும், (தமக்கு என்ன நடக்குமோ என்று மறுநாள்) காலையில் பயத்துடன் கவனித்துக் கொண்டு நகரத்தில் இருந்தபோது, நேற்று அவரிடம் உதவி கோரியவன் (மீண்டும்) அவரை (உதவிக்காக) கூச்சலிட்டு அழைத்தான்; அதற்கு, மூஸா "நிச்சயமாக நீ பகிரங்கமான வழிகேடனாக இருக்கிறாய்" என்று அவனிடம் கூறினார்.
28:19 فَلَمَّاۤ اَنْ اَرَادَ اَنْ يَّبْطِشَ بِالَّذِىْ هُوَ عَدُوٌّ لَّهُمَا ۙ قَالَ يٰمُوْسٰٓى اَ تُرِيْدُ اَنْ تَقْتُلَنِىْ كَمَا قَتَلْتَ نَفْسًۢا بِالْاَمْسِ ۖ اِنْ تُرِيْدُ اِلَّاۤ اَنْ تَكُوْنَ جَبَّارًا فِى الْاَرْضِ وَمَا تُرِيْدُ اَنْ تَكُوْنَ مِنَ الْمُصْلِحِيْنَ
فَلَمَّاۤ اَنْ اَرَادَ ஆக, அவர் நாடியபோது اَنْ يَّبْطِشَ தண்டிக்க بِالَّذِىْ எவனை هُوَ அவன் عَدُوٌّ எதிரியாக لَّهُمَا ۙ அவர்கள் இருவருக்கும் قَالَ அவன் கூறினான் يٰمُوْسٰٓى மூஸாவே! اَ تُرِيْدُ நீ நாடுகிறாயா? اَنْ تَقْتُلَنِىْ என்னை கொல்ல كَمَا قَتَلْتَ நீ கொன்றது போன்று نَفْسًۢا ஓர் உயிரை بِالْاَمْسِ நேற்று ۖ اِنْ تُرِيْدُ நீ நாடவில்லை اِلَّاۤ தவிர اَنْ تَكُوْنَ நீ ஆகுவதை جَبَّارًا அநியாயக்காரனாக فِى الْاَرْضِ பூமியில் وَمَا تُرِيْدُ நீ நாடவில்லை اَنْ تَكُوْنَ நீ ஆகுவதை مِنَ الْمُصْلِحِيْنَ சீர்திருத்தவாதிகளில்
28:19. Fபலம்மா அன் அராத அய் யBப்திஷ Bபில்லதீ ஹுவ 'அதுவ்வுல் லஹுமா கால யா மூஸா அதுரீது அன் தக்துலனீ கமா கதல்த னFப்ஸம் Bபில் அம்ஸி இன் துரீது இல்லா அன் தகூன ஜBப்Bபாரம் Fபில் அர்ளி வமா துரீது அன் தகூன மினல் முஸ்லிஹீன்
28:19. பின்னர் மூஸா, தம்மிருவருக்கும் பகைவனாக இருந்தவனைப் பிடிக்க நாடியபோது, (அவர் இனத்தான், தன்னையே அவர் பிடிக்கவருகிறார் என்று எண்ணி) "மூஸாவே! நேற்று ஒரு மனிதனை நீர் கொலை செய்ததுபோல், என்னையும் கொலை செய்ய நாடுகிறீரா? இப்பூமியில் ஆதிக்கம் செலுத்துபவராகவே இருக்க நீர் நாடுகிறீர்; மேலும், சீர்திருத்துவோரில் உள்ளவராவதையும் நீர் நாடவில்லை" என்று கூறினான்.
28:20 وَجَآءَ رَجُلٌ مِّنْ اَقْصَا الْمَدِيْنَةِ يَسْعٰى قَالَ يٰمُوْسٰٓى اِنَّ الْمَلَاَ يَاْتَمِرُوْنَ بِكَ لِيَـقْتُلُوْكَ فَاخْرُجْ اِنِّىْ لَـكَ مِنَ النّٰصِحِيْنَ
وَجَآءَ இன்னும் வந்தார் رَجُلٌ ஓர் ஆடவர் مِّنْ اَقْصَا இறுதியிலிருந்து الْمَدِيْنَةِ நகரத்தின் يَسْعٰى விரைந்தவராக قَالَ கூறினார் يٰمُوْسٰٓى மூஸாவே! اِنَّ நிச்சயமாக الْمَلَاَ பிரமுகர்கள் يَاْتَمِرُوْنَ ஆலோசிக்கின்றனர் بِكَ உமக்காக لِيَـقْتُلُوْكَ அவர்கள் உம்மைக் கொல்வதற்கு فَاخْرُجْ ஆகவே, நீர் வெளியேறிவிடும்! اِنِّىْ நிச்சயமாக நான் لَـكَ உமக்கு مِنَ النّٰصِحِيْنَ நன்மையை நாடுபவர்களில் ஒருவன்
28:20. வ ஜா'அ ரஜுலும் மின் அக்ஸல் மதீனதி யஸ்'ஆ கால யா மூஸா இன்னல் மல அ யா தமிரூன Bபிக லியக்துலூக Fபக்ருஜ் இன்னீ லக மினன் னாஸிஹீன்
28:20. பின்னர், நகரத்தின் ஒரு கோடியிலிருந்து (நல்)மனிதர் ஒருவர் ஓடிவந்து, "மூஸாவே! நிச்சயமாக (இந்நகர்ப்) பிரமுகர்கள் ஒன்றுகூடி உம்மைக் கொன்றுவிட வேண்டுமென ஆலோசித்துக் கொண்டிருக்கிறார்கள்; ஆகவே, நீர் (இங்கிருந்து) வெளியேறிவிடுவீராக! நிச்சயமாக நான் உம் நன்மையை நாடுபவர்களில் ஒருவனாவேன்" என்று கூறினார்.
28:21 فَخَرَجَ مِنْهَا خَآٮِٕفًا يَّتَرَقَّبُ قَالَ رَبِّ نَجِّنِىْ مِنَ الْقَوْمِ الظّٰلِمِيْنَ
فَخَرَجَ ஆக, அவர் வெளியேறினார் مِنْهَا அதிலிருந்து خَآٮِٕفًا பயந்தவராக يَّتَرَقَّبُ எதிர்பார்த்தவராக قَالَ அவர் கூறினார் رَبِّ என் இறைவா! نَجِّنِىْ என்னைப் பாதுகாத்துக்கொள்! مِنَ الْقَوْمِ மக்களிடமிருந்து الظّٰلِمِيْنَ அநியாயக்கார
28:21. Fபகரஜ மின்ஹா கா 'இFப(ன்)ய்-யதரக்கBப்; கால ரBப்Bபி னஜ்ஜினீ மினல் கவ்மிள் ளாலிமீன்
28:21. ஆகவே, அவர் பயத்துடனும், கவனமாகவும் அந்நகரத்தை விட்டுக் கிளம்பிவிட்டார்; "என் இறைவா! இந்த அக்கிரமக்கார சமூகத்தாரை விட்டும் நீ என்னைக் காப்பாற்றுவாயாக!" என்று பிரார்த்தித்தார்.
28:22 وَلَمَّا تَوَجَّهَ تِلْقَآءَ مَدْيَنَ قَالَ عَسٰى رَبِّىْۤ اَنْ يَّهْدِيَنِىْ سَوَآءَ السَّبِيْلِ
وَلَمَّا تَوَجَّهَ மேலும், அவர் முன்னோக்கிச் சென்றபோது تِلْقَآءَ பக்கம் مَدْيَنَ மத்யன் நகரத்தின் قَالَ கூறினார் عَسٰى رَبِّىْۤ என் இறைவன் اَنْ يَّهْدِيَنِىْ எனக்கு வழி காட்டுவான் سَوَآءَ السَّبِيْلِ நேரான பாதையை
28:22. வ லம்மா தவஜ்ஜஹ தில்கா'அ மத்யன கால 'அஸா ரBப்Bபீ அய் யஹ்தியனீ ஸவா'அஸ் ஸBபீல்
28:22. பின்னர், அவர் மத்யன் (நாட்டின்) பக்கம் முன்னோக்கிச் சென்றபோது, "என் இறைவன் நேரான பாதையில் செலுத்தக்கூடும்" என்று கூறினார்.
28:23 وَلَمَّا وَرَدَ مَآءَ مَدْيَنَ وَجَدَ عَلَيْهِ اُمَّةً مِّنَ النَّاسِ يَسْقُوْنَ وَوَجَدَ مِنْ دُوْنِهِمُ امْرَاَتَيْنِ تَذُوْدٰنِ ۚ قَالَ مَا خَطْبُكُمَا ؕ قَالَـتَا لَا نَسْقِىْ حَتّٰى يُصْدِرَ الرِّعَآءُ ٚ وَاَبُوْنَا شَيْخٌ كَبِيْرٌ
وَلَمَّا وَرَدَ அவர் வந்தபோது مَآءَ நீர்நிலைக்கு مَدْيَنَ மத்யனுடைய وَجَدَ கண்டார் عَلَيْهِ அதனருகில் اُمَّةً ஒரு கூட்டம் مِّنَ النَّاسِ மக்களில் يَسْقُوْنَ அவர்கள் நீர் புகட்டுகின்றனர் وَوَجَدَ கண்டார் مِنْ دُوْنِهِمُ அவர்கள் அன்றி امْرَاَتَيْنِ இரண்டு பெண்களையும் تَذُوْدٰنِ ۚ தடுத்துக் கொண்டிருந்தனர் قَالَ அவர் கேட்டார் مَا خَطْبُكُمَا ؕ உங்கள் இருவரின் பிரச்சனை என்ன? قَالَـتَا அவ்விருவரும்கூறினர் لَا نَسْقِىْ நாங்கள் நீர் புகட்ட மாட்டோம் حَتّٰى வரை يُصْدِرَ வெளியேற்றாத الرِّعَآءُ ٚ மேய்ப்பவர்கள் وَاَبُوْنَا எங்கள் தந்தையோ شَيْخٌ வயதான كَبِيْرٌ பெரியவர்
28:23. வ லம்மா வரத மா'அ மத்யன வஜத 'அலய்ஹி உம்மதம் மினன்னாஸி யஸ்கூன வ வஜத மின் தூனிஹிமும் ர அதய்னி ததூதானி கால மா கத்Bபுகுமா காலதா லா னஸ்கீ ஹத்தா யுஸ்திரர் ரி'ஆ'உ வ அBபூனா ஷய்குன் கBபீர்
28:23. இன்னும், அவர் மத்யன் நாட்டுத் தண்ணீர்(த்துறையின்) அருகே வந்தபோது அவ்விடத்தில் மக்களில் ஒரு கூட்டத்தினர் (தம் கால்நடைகளுக்குத்) தண்ணீர் புகட்டிக்கொண்டிருந்ததைக் கண்டார்; அவர்களைத் தவிர, பெண்கள் இருவர் (தங்கள் ஆடுகளுக்குத் தண்ணீர் புகட்டாது) தடுத்துநிறுத்தி வைத்துக் கொண்டிருப்பதைக் கண்டார்: "உங்களிருவரின் விஷயம் என்ன?" என்று (அப்பெண்களிடம்) அவர் கேட்டார்; அதற்கு, "இம்மேய்ப்பவர்கள் (தண்ணீர் புகட்டிவிட்டு) விலகும்வரை நாங்கள் (எங்கள் ஆடுகளுக்குத்) தண்ணீர் புகட்டமுடியாது; மேலும், எங்கள் தந்தை மிகவும் வயது முதிர்ந்தவர்" என்று அவ்விருவரும் கூறினார்கள்.
28:24 فَسَقٰى لَهُمَا ثُمَّ تَوَلّٰٓى اِلَى الظِّلِّ فَقَالَ رَبِّ اِنِّىْ لِمَاۤ اَنْزَلْتَ اِلَىَّ مِنْ خَيْرٍ فَقِيْرٌ
فَسَقٰى ஆகவே, அவர் நீர் புகட்டினார் لَهُمَا அவ்விருவருக்காக ثُمَّ பிறகு تَوَلّٰٓى திரும்பிச் சென்றார் اِلَى பக்கம் الظِّلِّ நிழலின் فَقَالَ அவர் கூறினார் رَبِّ என் இறைவா! اِنِّىْ நிச்சயமாக நான் لِمَاۤ اَنْزَلْتَ நீ எதன் பக்கம் இறக்கினாய் اِلَىَّ எனக்கு مِنْ خَيْرٍ நன்மையின் فَقِيْرٌ தேவை உள்ளவன்
28:24. Fபஸகா லஹுமா தும்ம தவல்லா இலள் ளில்லி Fபகால ரBப்Bபி இன்னீ லிமா அன்Zஜல்த இலய்ய மின் கய்ரின் Fபகீர்
28:24. ஆகையால், அவ்விருவருக்குமாக அவர் (ஆட்டு மந்தைக்குத்) தண்ணீர் புகட்டினார்; பிறகு, அவர் (ஒரு மர) நிழலில் ஒதுங்கி: "என் இறைவா! நீ எனக்கு எந்த நன்மையை இறக்கினாலும் நிச்சயமாக நான் தேவையுள்ளவனாக இருக்கிறேன்" என்று கூறினார்.
28:25 فَجَآءَتْهُ اِحْدٰٮہُمَا تَمْشِىْ عَلَى اسْتِحْيَآءٍ قَالَتْ اِنَّ اَبِىْ يَدْعُوْكَ لِيَجْزِيَكَ اَجْرَ مَا سَقَيْتَ لَـنَا ؕ فَلَمَّا جَآءَهٗ وَقَصَّ عَلَيْهِ الْقَصَصَ ۙ قَالَ لَا تَخَفْ نَجَوْتَ مِنَ الْقَوْمِ الظّٰلِمِيْنَ
فَجَآءَتْهُ அவரிடம் வந்தாள் اِحْدٰٮہُمَا அவ்விருவரில் ஒருத்தி تَمْشِىْ நடந்தவளாக عَلَى اسْتِحْيَآءٍ வெட்கத்துடன் قَالَتْ அவள் கூறினாள் اِنَّ நிச்சயமாக اَبِىْ என் தந்தை يَدْعُوْكَ உம்மை அழைக்கிறார் لِيَجْزِيَكَ உமக்கு தருவதற்காக اَجْرَ கூலியை مَا سَقَيْتَ நீநீர்புகட்டியதற்குரிய لَـنَا ؕ எங்களுக்காக فَلَمَّا جَآءَهٗ போது/அவரிடம்/வந்தார் وَقَصَّ இன்னும் விவரித்தார் عَلَيْهِ அவரிடம் الْقَصَصَ ۙ வரலாற்றை قَالَ அவர் கூறினார் لَا تَخَفْ பயப்படாதே! نَجَوْتَ நீ தப்பித்து விட்டாய் مِنَ الْقَوْمِ மக்களிடமிருந்து الظّٰلِمِيْنَ அநியாயக்காரர்(கள்)
28:25. Fபஜா'அத் ஹு இஹ்தாஹுமா தம்ஷீ 'அலஸ் திஹ்யா'இன் காலத் இன்ன அBபீ யத்'ஊக லி யஜ்Zஜியக அஜ்ர மா ஸகய்த லனா; Fபலம்மா ஜா'அஹூ வ கஸ்ஸ 'அலய்ஹில் கஸஸ கால லா தகFப் னஜவ்த மினல் கவ்மிள் ளாலிமீன்
28:25. (சிறிது நேரத்திற்குப்) பிறகு அவ்விருவரில் ஒருத்தி நாணத்துடன் நடந்து அவரிடம் வந்து, "எங்களுக்காக நீங்கள் தண்ணீர் புகட்டியதற்கான கூலியை உங்களுக்கு வழங்குவதற்காக நிச்சயமாக என் தந்தை உங்களை அழைக்கிறார்" என்று கூறினாள்; இவ்வாறாக (மூஸா) அவரிடம் வந்தபோது, தம் வரலாற்றை எடுத்துச் சொன்னார்; அதற்கவர், "பயப்படாதீர்! அக்கிரமக்கார சமூகத்தாரைவிட்டும் நீர் தப்பித்துவிட்டீர்" என்று கூறினார்.
28:26 قَالَتْ اِحْدٰٮہُمَا يٰۤاَبَتِ اسْتَاْجِرْهُ اِنَّ خَيْرَ مَنِ اسْتَـاْجَرْتَ الْقَوِىُّ الْاَمِيْنُ
قَالَتْ கூறினாள் اِحْدٰٮہُمَا அவ்விருவரில் ஒருத்தி يٰۤاَبَتِ என் தந்தையே اسْتَاْجِرْهُ அவரை பணியில் அமர்த்துவீராக! اِنَّ நிச்சயமாக خَيْرَ சிறந்தவர் مَنِ எவர்கள் اسْتَـاْجَرْتَ பணியில் அமர்த்தினீர் الْقَوِىُّ பலசாலி الْاَمِيْنُ நம்பிக்கையளரான
28:26. காலத் இஹ்தாஹுமா யா அBபதிஸ் தாஜிர்ஹு இன்ன கய்ர மனிஸ்தாஜர்தல் கவிய்யுல் அமீன்
28:26. அவ்விருவரில் ஒருத்தி, "என் அருமைத் தந்தையே! நீங்கள் இவரைக் கூலிக்கு அமர்த்திக் கொள்ளுங்கள்; நிச்சயமாக நீங்கள் கூலிக்கு அமர்த்துபவர்களில் மிகவும் மேலானவர் (இவர்) பலமுள்ளவர்; நம்பிக்கையானவர்" என்று கூறினாள்.
28:27 قَالَ اِنِّىْۤ اُرِيْدُ اَنْ اُنْكِحَكَ اِحْدَى ابْنَتَىَّ هٰتَيْنِ عَلٰٓى اَنْ تَاْجُرَنِىْ ثَمٰنِىَ حِجَجٍۚ فَاِنْ اَتْمَمْتَ عَشْرًا فَمِنْ عِنْدِكَۚ وَمَاۤ اُرِيْدُ اَنْ اَشُقَّ عَلَيْكَؕ سَتَجِدُنِىْۤ اِنْ شَآءَ اللّٰهُ مِنَ الصّٰلِحِيْنَ
قَالَ அவர் கூறினார் اِنِّىْۤ நிச்சயமாக நான் اُرِيْدُ நான் விரும்புகிறேன் اَنْ اُنْكِحَكَ உனக்கு நான் மணமுடித்துத்தர اِحْدَى ஒருத்தியை ابْنَتَىَّ என் இரு பெண் பிள்ளைகளில் هٰتَيْنِ இந்த இரண்டு عَلٰٓى மீது اَنْ تَاْجُرَنِىْ எனக்கு கூலியாக (-மஹராக)த் தரவேண்டும் ثَمٰنِىَ حِجَجٍۚ எட்டு ஆண்டுகள் فَاِنْ اَتْمَمْتَ நீ பூர்த்திசெய்தால் عَشْرًا பத்து ஆண்டுகளை فَمِنْ عِنْدِكَۚ உன் புறத்திலிருந்து وَمَاۤ اُرِيْدُ நான் விரும்பவில்லை اَنْ اَشُقَّ நான் சிரமம் ஏற்படுத்த عَلَيْكَؕ உம்மீது سَتَجِدُنِىْۤ நீ காண்பாய்/என்னை اِنْ شَآءَ நாடினால் اللّٰهُ அல்லாஹ் مِنَ الصّٰلِحِيْنَ என்னை நல்லோரில்
28:27. கால இன்னீ உரீது அன் உன்கிஹக இஹ்தBப் னதய்ய ஹாதய்னி 'அலா அன் தா'ஜுரனீ தமானிய ஹிஜஜ்; Fப இன் அத்மம்த 'அஷ்ரன் Fபமின் 'இன்திக வமா உரீது அன் அஷுக்க 'அலய்க்; ஸதஜிதுனீ இன் ஷா'அல் லாஹு மினஸ் ஸாலிஹீன்
28:27. (அப்போது) அவர் (மூஸாவிடம்) கூறினார்: "நீர் எனக்கு எட்டு ஆண்டுகள் வேலைசெய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் மீது, என்னுடைய இவ்விரு புதல்விகளில் ஒருத்தியை உமக்கு மணமுடித்துக்கொடுக்க நிச்சயமாக நான் நாடுகிறேன்; ஆயினும், நீர் பத்து (ஆண்டுகள்) பூர்த்திசெய்தால் அது உம் விருப்பம்; நான் உமக்குச் சிரமத்தைக் கொடுக்க விரும்பவில்லை; அல்லாஹ் நாடினால் என்னை நல்லவர்களில் உள்ளவராகக் காண்பீர்."
28:28 قَالَ ذٰ لِكَ بَيْنِىْ وَبَيْنَكَ ؕ اَيَّمَا الْاَجَلَيْنِ قَضَيْتُ فَلَا عُدْوَانَ عَلَـىَّ ؕ وَاللّٰهُ عَلٰى مَا نَقُوْلُ وَكِيْلٌ
قَالَ அவர் கூறினார் ذٰ لِكَ இது بَيْنِىْ எனக்கு மத்தியிலும் وَبَيْنَكَ ؕ உமக்கு மத்தியிலும் اَيَّمَا எதை الْاَجَلَيْنِ இரண்டு தவணையில் قَضَيْتُ நான் நிறைவேற்றினாலும் فَلَا عُدْوَانَ வரம்பு மீறுதல் கூடாது عَلَـىَّ ؕ என் மீது وَاللّٰهُ அல்லாஹ் عَلٰى مَا نَقُوْلُ நாம் கூறுவதற்கு وَكِيْلٌ பொறுப்பாளன்
28:28. கால தாலிக Bபய்னீ வ Bபய்னக அய்யமல் அஜலய்னி களய்து Fபலா 'உத்வான 'அலய்ய வல்லாஹு 'அலா ம னகூலு வகீல்
28:28. (அதற்கு மூஸா) கூறினார்: "இதுவே எனக்கும் உங்களுக்குமிடையே உள்ளதாகும்; இவ்விரு தவணைகளில் நான் எதை நிறைவேற்றினாலும் என் மீது குற்றமில்லை; நாம் சொல்வதின் மீது அல்லாஹ்வே சாட்சியாக இருக்கிறான்."
28:29 فَلَمَّا قَضٰى مُوْسَى الْاَجَلَ وَسَارَ بِاَهْلِهٖۤ اٰنَسَ مِنْ جَانِبِ الطُّوْرِ نَارًاۚ قَالَ لِاَهْلِهِ امْكُثُوْۤا اِنِّىْۤ اٰنَسْتُ نَارًا لَّعَلِّىْۤ اٰتِيْكُمْ مِّنْهَا بِخَبَرٍ اَوْ جَذْوَةٍ مِّنَ النَّارِ لَعَلَّكُمْ تَصْطَلُوْنَ
فَلَمَّا போது قَضٰى முடித்தார் مُوْسَى மூசா الْاَجَلَ தவணையை وَسَارَ இன்னும் சென்றார் بِاَهْلِهٖۤ தனது குடும்பத்தினரோடு اٰنَسَ பார்த்தார் مِنْ جَانِبِ அருகில் الطُّوْرِ மலையின் نَارًاۚ நெருப்பை قَالَ கூறினார் لِاَهْلِهِ தனது குடும்பத்தினரிடம் امْكُثُوْۤا நீங்கள் தாமதியுங்கள் اِنِّىْۤ நிச்சயமாக நான் اٰنَسْتُ நான் பார்த்தேன் نَارًا ஒரு நெருப்பை لَّعَلِّىْۤ اٰتِيْكُمْ உங்களிடம் (கொண்டு) வருகிறேன் مِّنْهَا அதிலிருந்து بِخَبَرٍ ஒரு செய்தியை اَوْ அல்லது جَذْوَةٍ கங்கை مِّنَ النَّارِ நெருப்பின் لَعَلَّكُمْ تَصْطَلُوْنَ நீங்கள் குளிர்காய்வதற்காக
28:29. Fபலம்ம்மா களா மூஸல் அஜல வ ஸார Bபி அஹ்லிஹீ ஆனஸ மின் ஜானிBபித் தூரி னாரன் கால லி அஹ்லிஹிம் குதூ இன்னீ ஆனஸ்து னாரல் ல 'அல்லீ ஆதீகும் மின்ஹா BபிகBபரின் அவ் ஜத்வதிம் மினன் னாரி ல 'அல்லகும் தஸ்தலூன்
28:29. ஆகவே, மூஸா (அலை) தவணையை முடித்துக் கொண்டு தம் குடும்பத்துடன் பயணம் செய்து கொண்டிருந்தபோது, தூர் மலையின் புறத்திலிருந்து ஒரு நெருப்பைக் கண்டார்; அவர் தம் குடும்பத்தாரிடம், "நீங்கள் (இங்கு சிறிது) தங்குங்கள்; நிச்சயமாக நான் ஒரு நெருப்பைக் காண்கின்றேன்; நான் உங்களுக்கு அதிலிருந்து ஒரு செய்தியையோ, அல்லது நீங்கள் குளிர்காயும் பொருட்டு ஒரு தீப்பந்தத்தையோ கொண்டு வருகிறேன்" என்று கூறினார்.
28:30 فَلَمَّاۤ اَتٰٮهَا نُوْدِىَ مِنْ شَاطِیٴِ الْوَادِ الْاَيْمَنِ فِى الْبُقْعَةِ الْمُبٰرَكَةِ مِنَ الشَّجَرَةِ اَنْ يّٰمُوْسٰٓى اِنِّىْۤ اَنَا اللّٰهُ رَبُّ الْعٰلَمِيْنَ ۙ
فَلَمَّاۤ اَتٰٮهَا அவர் அதனிடம் வந்தபோது نُوْدِىَ சப்தமிட்டு அழைக்கப்பட்டார் مِنْ شَاطِیٴِ பக்கத்திலிருந்து الْوَادِ பள்ளத்தாக்கின் الْاَيْمَنِ வலது فِى الْبُقْعَةِ இடத்தில் الْمُبٰرَكَةِ புனிதமான مِنَ الشَّجَرَةِ மரத்திலிருந்து اَنْ يّٰمُوْسٰٓى மூசாவே! اِنِّىْۤ اَنَا நிச்சயமாக நான்தான் اللّٰهُ அல்லாஹ் رَبُّ இறைவனாகிய الْعٰلَمِيْنَ ۙ அகிலங்களின்
28:30. Fபலம்மா அதாஹா னூதிய மின் ஷாதி'இல் வாதில் அய்மனி Fபில் Bபுக்'அதில் முஉBபாரகதி மினஷ் ஷஜரதி அய் யா மூஸா இன்னீ அனல் லாஹு ரBப்Bபுல் 'ஆலமீன்
28:30. அவர் அதன் அருகே வந்தபோது, (அங்குள்ள) பாக்கியம் பெற்ற அப்பள்ளத்தாக்கிலுள்ள வலப்பக்கத்தில் இருக்கும் ஓடையில் உள்ள (ஒரு) மரத்திலிருந்து, "மூஸாவே! நிச்சயமாக நானே அகிலத்தாரின் இறைவனாகிய அல்லாஹ்" என்று அழைக்கப்பட்டார்.
28:31 وَاَنْ اَ لْقِ عَصَاكَ ؕ فَلَمَّا رَاٰهَا تَهْتَزُّ كَاَنَّهَا جَآنٌّ وَّلّٰى مُدْبِرًا وَّلَمْ يُعَقِّبْ ؕ يٰمُوْسٰٓى اَ قْبِلْ وَلَا تَخَفْ اِنَّكَ مِنَ الْاٰمِنِيْنَ
وَاَنْ اَ لْقِ இன்னும் எறிவீராக! عَصَاكَ ؕ உமது கைத்தடியை فَلَمَّا ஆக, அவர் பார்த்தபோது رَاٰهَا அதை تَهْتَزُّ நெளிவதாக كَاَنَّهَا ஒரு போன்று/அது جَآنٌّ பாம்பை وَّلّٰى திரும்பி ஓடினார் مُدْبِرًا புறமுதுகிட்டவராக وَّلَمْ يُعَقِّبْ ؕ அவர் பார்க்கவில்லை يٰمُوْسٰٓى மூஸாவே! اَ قْبِلْ முன்னே வருவீராக! وَلَا تَخَفْ பயப்படாதீர்! اِنَّكَ நிச்சயமாக நீர் مِنَ الْاٰمِنِيْنَ பாதுகாப்பு பெற்றவர்களில் உள்ளவர்
28:31. வ அன் அல்கி 'அஸாக Fபலம் மா ர ஆஹா தஹ்தZஜ்Zஜு க அன்ன்னஹா ஜான்னு(ன்)வ் வல்லா முத்Bபிர(ன்)வ் வ லம் யு'அக்கிBப்; யா மூஸா அக்Bபில் வலா தகFப் இன்னக மினல் ஆமினீன்
28:31. "உம் கைத்தடியைக் கீழே எறியும்" என்றும் கட்டளையிடப்பட்டார். அவ்வாறு எறிந்ததும், அது பாம்பைப் போன்று நெளிவதைக் கண்டு, அவர் திரும்பிப் பார்க்காமல் பின்வாங்கி ஓடினார். அப்பொழுது: "மூஸாவே! முன்னோக்கி வாரும்! இன்னும், அஞ்சாதீர்! நீர் அடைக்கலம் பெற்றவர்களில் உள்ளவர்."
28:32 اُسْلُكْ يَدَكَ فِىْ جَيْبِكَ تَخْرُجْ بَيْضَآءَ مِنْ غَيْرِ سُوْٓءٍ وَّاضْمُمْ اِلَيْكَ جَنَاحَكَ مِنَ الرَّهْبِ فَذٰنِكَ بُرْهَانٰنِ مِنْ رَّبِّكَ اِلٰى فِرْعَوْنَ وَمَلَا۟ٮِٕهٖؕ اِنَّهُمْ كَانُوْا قَوْمًا فٰسِقِيْنَ
اُسْلُكْ நுழைப்பீராக! يَدَكَ உமது கையை فِىْ جَيْبِكَ உமது சட்டைப் பையில் تَخْرُجْ அது வெளிவரும் بَيْضَآءَ வெண்மையாக مِنْ غَيْرِ இன்றி سُوْٓءٍ குறை وَّاضْمُمْ அணைப்பீராக! اِلَيْكَ உம்முடன் جَنَاحَكَ உமது கையை مِنَ الرَّهْبِ பயந்துவிட்டதால் فَذٰنِكَ ஆக,இவைஇரண்டும் بُرْهَانٰنِ இரண்டு அத்தாட்சிகளாகும் مِنْ புறத்திலிருந்து رَّبِّكَ உமது இறைவன் اِلٰى பக்கம் فِرْعَوْنَ ஃபிர்அவ்ன் وَمَلَا۟ٮِٕهٖؕ இன்னும் அவனது பிரமுகர்கள் اِنَّهُمْ நிச்சயமாக அவர்கள் كَانُوْا இருக்கின்றனர் قَوْمًا மக்களாக فٰسِقِيْنَ பாவிகளான
28:32. உஸ்லுக் யதக Fபீ ஜய்Bபிக தக்ருஜ் Bபய்ளா'அ மின் கய்ரி ஸூ'இ(ன்)வ் வள்மும் இலய்க ஜனாஹக மினர் ரஹ்Bபி Fபதானிக Bபுர்ஹானானி மிர் ரBப்Bபிக இலா Fபிர்'அவ்ன வ மல'இஹ்; இன்னஹும் கானூ கவ்மன் Fபாஸிகீன்
28:32. உம் கையை உம் சட்டைக்குள் புகுத்தும்; அது எவ்வித தீங்குமின்றி (ஒளி மிக்கதாய்) வெண்மையாக வெளிவரும்; இன்னும், நீர் அச்சப்படும்காலை உம்முடைய கைகளை உம் விலாவில் சேர்த்துக்கொள்ளும்; இவ்விரண்டும் ஃபிர்அவ்ன் மற்றும் அவனுடைய பிரதானிகள் பக்கம் உம் இறைவனிடமிருந்துள்ள இரு அத்தாட்சிகளாகும்; நிச்சயமாக அவர்கள் பாவம் செய்யும் சமூகத்தாராகவே இருக்கின்றார்கள்" (என்றும் அவருக்குக் கூறப்பட்டது).
28:33 قَالَ رَبِّ اِنِّىْ قَتَلْتُ مِنْهُمْ نَفْسًا فَاَخَافُ اَنْ يَّقْتُلُوْنِ
قَالَ அவர் கூறினார்: رَبِّ என் இறைவா! اِنِّىْ நிச்சயமாக நான் قَتَلْتُ கொன்றுள்ளேன் مِنْهُمْ அவர்களில் نَفْسًا ஓர் உயிரை فَاَخَافُ ஆகவே, நான் பயப்படுகிறேன் اَنْ يَّقْتُلُوْنِ அவர்கள் என்னை கொல்வதை
28:33. கால ரBப்Bபி இன்னீ கதல்து மின்ஹும் னFப்ஸன் Fப அகாFபு அய் யக்துலூன்
28:33. (அதற்கு) அவர், "என் இறைவா! நிச்சயமாக நான் அவர்களில் ஒருவனைக் கொன்றுவிட்டேன்; ஆகையால், அவர்கள் என்னைக் கொலைசெய்துவிடுவார்கள் என்று பயப்படுகிறேன்" என்று கூறினார்.
28:34 وَاَخِىْ هٰرُوْنُ هُوَ اَفْصَحُ مِنِّىْ لِسَانًا فَاَرْسِلْهُ مَعِىَ رِدْاً يُّصَدِّقُنِىْٓ اِنِّىْۤ اَخَافُ اَنْ يُّكَذِّبُوْنِ
وَاَخِىْ எனது சகோதரர் هٰرُوْنُ ஹாரூன் هُوَ அவர் اَفْصَحُ தெளிவான مِنِّىْ என்னைவிட لِسَانًا நாவன்மைஉடையவர் فَاَرْسِلْهُ ஆகவே, அவரைஅனுப்பு! مَعِىَ رِدْاً என்னுடன் உதவியாக يُّصَدِّقُنِىْٓ அவர் என்னை உண்மைப்படுத்துவார் اِنِّىْۤ நிச்சயமாக நான் اَخَافُ நான் பயப்படுகிறேன் اَنْ يُّكَذِّبُوْنِ அவர்கள் என்னை பொய்ப்பிப்பதை
28:34. வ அகீ ஹாரூனு ஹுவ அFப்ஸஹு மின்னீ லிஸானன் Fப அர்ஸில்ஹு ம'இய ரித் அய் யுஸத்திகுனீ இன்னீ அகாFபு அய் யுகத்திBபூன்
28:34. இன்னும், "என் சகோதரர் ஹாரூன் அவர் என்னைவிடப் பேச்சில் மிக்க தெளிவானவர்; ஆகவே, என்னுடன் உதவியாய் நீ அவரை அனுப்பிவைப்பாயாக! என்னை அவர் மெய்ப்பிப்பார்; நிச்சயமாக அவர்கள் என்னைப் பொய்ப்பிப்பார்கள் என்று நான் பயப்படுகிறேன்" (என்றும் கூறினார்).
28:35 قَالَ سَنَشُدُّ عَضُدَكَ بِاَخِيْكَ وَنَجْعَلُ لَـكُمَا سُلْطٰنًا فَلَا يَصِلُوْنَ اِلَيْكُمَا ۛ ۚ بِاٰيٰتِنَاۤ ۛ ۚ اَنْـتُمَا وَمَنِ اتَّبَعَكُمَا الْغٰلِبُوْنَ
قَالَ அவன் கூறினான் سَنَشُدُّ பலப்படுத்துவோம் عَضُدَكَ உமது புஜத்தை بِاَخِيْكَ உமது சகோதரரைக் கொண்டு وَنَجْعَلُ இன்னும் ஆக்குவோம் لَـكُمَا உம் இருவருக்கும் سُلْطٰنًا ஓர் அத்தாட்சியை فَلَا يَصِلُوْنَ ஆகவே அவர்கள் வரமுடியாது اِلَيْكُمَا ۛ ۚ உங்கள் இருவர் பக்கம் بِاٰيٰتِنَاۤ ۛ ۚ நமது அத்தாட்சிகளைக் கொண்டு اَنْـتُمَا நீங்கள் இருவரும் وَمَنِ اتَّبَعَكُمَا உங்கள் இருவரை பின்பற்றினார்(கள்) / எவர்கள் الْغٰلِبُوْنَ மிகைத்தவர்கள்
28:35. கால ஸனஷுத்து 'அளுதக Bபி அகீக வ னஜ்'அலு லகுமா ஸுல்தானன் Fபலா யஸிலூன இலய்குமா; Bபி ஆயாதினா அன்துமா வ மனித் தBப'அகுமல் காலிBபூன்
28:35. (அல்லாஹ்) கூறினான்: "நாம் உம் புஜத்தை உம் சகோதரரைக் கொண்டு வலுப்படுத்துவோம்; நாம் உங்கள் இருவருக்குமே வெற்றியளிப்போம்; ஆகவே, அவர்கள் உங்களிருவரையும் நெருங்கவும் முடியாது; நம்முடைய அத்தாட்சிகளைக் கொண்டு, நீங்களிருவரும் உங்களிருவரைப் பின்பற்றுவோரும் வெற்றி பெறக்கூடியவர்கள்."
28:36 فَلَمَّا جَآءَهُمْ مُّوْسٰى بِاٰيٰتِنَا بَيِّنٰتٍ قَالُوْا مَا هٰذَاۤ اِلَّا سِحْرٌ مُّفْتَـرًى وَمَا سَمِعْنَا بِهٰذَا فِىْۤ اٰبَآٮِٕنَا الْاَوَّلِيْنَ
فَلَمَّا جَآءَ ஆகவே, வந்தபோது هُمْ அவர்களிடம் مُّوْسٰى மூசா بِاٰيٰتِنَا நமது அத்தாட்சிகளுடன் بَيِّنٰتٍ தெளிவான قَالُوْا அவர்கள் கூறினர் مَا இல்லை هٰذَاۤ இது اِلَّا தவிர سِحْرٌ சூனியமே مُّفْتَـرًى இட்டுக்கட்டப்பட்ட وَمَا سَمِعْنَا நாங்கள் கேள்விப்பட்டதில்லை بِهٰذَا இதைப் பற்றி فِىْۤ اٰبَآٮِٕنَا எங்கள் மூதாதைகளில் الْاَوَّلِيْنَ முந்திய(வர்கள்)
28:36. Fபலம்மா ஜா'அஹும் மூஸா Bபி ஆயாதினா Bபய்யினாதின் காலூ மா ஹாதா இல்லா ஸிஹ்ரும் முFப்தர(ன்)வ் வமா ஸமிஃனா Bபிஹாதா Fபீ ஆBபா'இனல் அவ்வலீன்
28:36. ஆகவே, மூஸா அவர்களிடம் நம்முடைய தெளிவான அத்தாட்சிகளுடன் வந்தபோது, அவர்கள், "இது இட்டுக்கட்டப்பட்ட சூனியமே அன்றி வேறில்லை; இன்னும், நம்முடைய முன்னோர்களான நம் மூதாதையர்களிடத்திலும் இதை நாம் கேள்விப்பட்டதில்லை" என்று கூறினார்கள்.
28:37 وَقَالَ مُوْسٰى رَبِّىْۤ اَعْلَمُ بِمَنْ جَآءَ بِالْهُدٰى مِنْ عِنْدِهٖ وَمَنْ تَكُوْنُ لَهٗ عَاقِبَةُ الدَّارِؕ اِنَّهٗ لَا يُفْلِحُ الظّٰلِمُوْنَ
وَقَالَ கூறினார் مُوْسٰى மூசா رَبِّىْۤ என் இறைவன் اَعْلَمُ நன்கறிந்தவன் بِمَنْ جَآءَ வந்தவரை(யும்) بِالْهُدٰى நேர்வழியுடன் مِنْ عِنْدِهٖ அவனிடமிருந்து وَمَنْ இன்னும் எவர் تَكُوْنُ இருக்கும் لَهٗ عَاقِبَةُ அவருக்கு முடிவு الدَّارِؕ மறுமையின் اِنَّهٗ நிச்சயமாக لَا يُفْلِحُ வெற்றி பெறமாட்டார்கள் الظّٰلِمُوْنَ அநியாயக்காரர்கள்
28:37. வ கால மூஸா ரBப்Bபீ அஃலமு Bபிமன் ஜா'அ Bபில்ஹுதா மின் 'இன்திஹீ வ மன் தகூனு லஹூ 'ஆகிBபதுத் தாரி இன்னஹூ லா யுFப்லிஹுள் ளாலிமூன்
28:37. (அப்போது) மூஸா கூறினார்: "என்னுடைய இறைவன் தன்னிடமிருந்து நேர்வழியைக் கொண்டுவந்தவர் யார் என்பதையும், இறுதி(யாக சுவர்க்க) வீடு யாருக்காக உள்ளது என்பதையும் நன்கறிவான்; நிச்சயமாக அக்கிரமம் செய்வோர் வெற்றி பெறமாட்டார்கள்."
28:38 وَقَالَ فِرْعَوْنُ يٰۤـاَيُّهَا الْمَلَاُ مَا عَلِمْتُ لَـكُمْ مِّنْ اِلٰهٍ غَيْرِىْ ۚ فَاَوْقِدْ لِىْ يٰهَامٰنُ عَلَى الطِّيْنِ فَاجْعَلْ لِّىْ صَرْحًا لَّعَلِّىْۤ اَطَّلِعُ اِلٰٓى اِلٰهِ مُوْسٰى ۙ وَاِنِّىْ لَاَظُنُّهٗ مِنَ الْـكٰذِبِيْنَ
وَقَالَ கூறினான் فِرْعَوْنُ ஃபிர்அவ்ன் يٰۤـاَيُّهَا الْمَلَاُ பிரமுகர்களே! مَا عَلِمْتُ நான் அறியமாட்டேன் لَـكُمْ உங்களுக்கு (இருப்பதை) مِّنْ اِلٰهٍ ஒரு கடவுள் غَيْرِىْ ۚ என்னை அன்றி فَاَوْقِدْ ஆகவே, நெருப்பூட்டு لِىْ எனக்காக يٰهَامٰنُ ஹாமானே! عَلَى الطِّيْنِ குழைத்தகளிமண்ணை فَاجْعَلْ உருவாக்கு لِّىْ எனக்காக صَرْحًا முகடுள்ள ஓர் உயரமான கோபுரத்தை لَّعَلِّىْۤ اَطَّلِعُ நான் தேடிப்பார்க்க வேண்டும் اِلٰٓى اِلٰهِ கடவுளை مُوْسٰى ۙ மூஸாவின் وَاِنِّىْ இன்னும் நிச்சயமாக நான் لَاَظُنُّهٗ அவரை கருதுகிறேன் مِنَ الْـكٰذِبِيْنَ பொய்யர்களில் (ஒருவராக)
28:38. வ கால Fபிர்'அவ்னு யா அய்யுஹல் மல-உ மா 'அலிம்து லகும் மின் இலாஹின் கய்ரீ Fப அவ்கித் லீ யா ஹாமானு 'அலத்தீனி Fபஜ்'அல் லீ ஸர்ஹல் ல'அல்லீ அத்தலி'உ இலா இலாஹி மூஸா வ இன்னீ ல அளுன்னுஹூ மினல் காதிBபீன்
28:38. இன்னும், ஃபிர்அவ்ன் சொன்னான்: "பிரமுகர்களே! என்னைத் தவிர உங்களுக்கு வேறொரு கடவுள் இருக்கின்றான் என்பதாக நான் அறியவில்லை; ஆதலின், ஹாமானே! களிமண் மீது எனக்காகத் தீயை மூட்டி (செங்கற்கள் செய்து) பிறகு, எனக்காக ஓர் (உயரமான) மாளிகையைக் கட்டுவாயாக! (அதன் மேல் ஏறி) நான் மூஸாவின் இறைவனை எட்டிப் பார்க்க வேண்டும்; மேலும், நிச்சயமாக நான் இவரைப் பொய்யர்களில் உள்ளவர் என்றே கருதுகிறேன்."
28:39 وَاسْتَكْبَرَ هُوَ وَجُنُوْدُهٗ فِى الْاَرْضِ بِغَيْرِ الْحَـقِّ وَظَنُّوْۤا اَنَّهُمْ اِلَـيْنَا لَا يُرْجَعُوْنَ
وَاسْتَكْبَرَ பெருமையடித்தனர் هُوَ அவனும் وَجُنُوْدُهٗ அவனுடைய ராணுவங்களும் فِى الْاَرْضِ பூமியில் بِغَيْرِ الْحَـقِّ நியாயமின்றி وَظَنُّوْۤا இன்னும் நினைத்தனர் اَنَّهُمْ நிச்சயமாக அவர்கள் اِلَـيْنَا நம்மிடம் لَا يُرْجَعُوْنَ திரும்பக் கொண்டு வரப்பட மாட்டார்கள்
28:39. வஸ்தக்Bபர ஹுவ வ ஜுனூதுஹூ Fபில் அர்ளி Bபிகய்ரில் ஹக்கி வ ளன்னூ அன்னஹும் இலய்னா லா யுர்ஜ'ஊன்
28:39. மேலும், அவனும் அவனுடைய படைகளும் பூமியில் நியாயமின்றிப் பெருமையடித்துக் கொண்டனர்; மேலும், அவர்கள் நம்மிடம் நிச்சயமாகத் திரும்பக்கொண்டு வரப்படமாட்டார்கள் என்றும் எண்ணிக்கொண்டார்கள்.
28:40 فَاَخَذْنٰهُ وَجُنُوْدَهٗ فَنَبَذْنٰهُمْ فِى الْيَمِّۚ فَانْظُرْ كَيْفَ كَانَ عَاقِبَةُ الظّٰلِمِيْنَ
فَاَخَذْنٰهُ ஆகவே, அவனை(யும்) ஒன்றிணைத்தோம் وَجُنُوْدَهٗ அவனுடைய ராணுவங்களையும் فَنَبَذْنٰهُمْ அவர்களை நாம் எறிந்தோம் فِى الْيَمِّۚ கடலில் فَانْظُرْ ஆக, பார்ப்பீராக! كَيْفَ எப்படி كَانَ இருந்தது عَاقِبَةُ முடிவு الظّٰلِمِيْنَ அநியாயக்காரர்களின்
28:40. Fப அகத்னாஹு வ ஜுனூ தஹூ FபனBபத்னாஹும் Fபில் யம்மி Fபன்ளுர் கய்Fப கான 'ஆகிBபதுள் ளாலிமீன்
28:40. ஆகையால், நாம் அவனையும் அவன் படைகளையும் பிடித்தோம்; பிறகு, அவர்களைக் கடலில் (மூழ்கி விடுமாறு) எறிந்துவிட்டோம்; ஆகவே, அக்கிரமக்காரர்களின் முடிவு என்ன ஆயிற்றென்று (நபியே!) நீர் கவனித்துக்கொள்ளும்.
28:41 وَجَعَلْنٰهُمْ اَٮِٕمَّةً يَّدْعُوْنَ اِلَى النَّارِۚ وَيَوْمَ الْقِيٰمَةِ لَا يُنْصَرُوْنَ
وَجَعَلْنٰهُمْ அவர்களை ஆக்கினோம் اَٮِٕمَّةً முன்னோடிகளாக يَّدْعُوْنَ அழைக்கின்றனர் اِلَى النَّارِۚ நரகத்தின் பக்கம் وَيَوْمَ الْقِيٰمَةِ மறுமை நாளில் لَا يُنْصَرُوْنَ அவர்கள் உதவி செய்யப்பட மாட்டார்கள்
28:41. வ ஜ'அல்னாஹும் அ'இம்மத(ன்)ய் யத்'ஊன இலன் னாரி வ யவ்மல் கியாமதி லா யுன்ஸரூன்
28:41. மேலும், (மக்களை) நரகத்தின்பால் அழைக்கும் தலைவர்களாகவே நாம் அவர்களை ஆக்கியிருந்தோம்; இன்னும், மறுமை நாளன்று அவர்கள் உதவி செய்யப்படமாட்டார்கள்.
28:42 وَاَتْبَعْنٰهُمْ فِىْ هٰذِهِ الدُّنْيَا لَـعْنَةً ۚ وَيَوْمَ الْقِيٰمَةِ هُمْ مِّنَ الْمَقْبُوْحِيْنَ
وَاَتْبَعْنٰهُمْ அவர்களுக்குத் தொடர வைத்தோம் فِىْ هٰذِهِ الدُّنْيَا இவ்வுலகத்திலும் لَـعْنَةً ۚ சாபத்தை وَيَوْمَ الْقِيٰمَةِ மறுமையிலும் هُمْ அவர்கள் مِّنَ الْمَقْبُوْحِيْنَ அசிங்கப்படுத்தப்பட்டவர்களில் உள்ளவர்கள்
28:42. வ அத்Bபஃனாஹும் Fபீ ஹாதிஹித் துன்யா லஃனத(ன்)வ் வ யவ்மல் கியாமதி ஹும் மினல் மக்Bபூஹீன்
28:42. இன்னும், இவ்வுலகில் அவர்களைச் சாபம் தொடருமாறு நாம் செய்தோம்; மறுமை நாளில் அவர்கள் இகழப்பட்டவர்களாகவே இருப்பார்கள்.
28:43 وَلَقَدْ اٰتَيْنَا مُوْسَى الْكِتٰبَ مِنْۢ بَعْدِ مَاۤ اَهْلَكْنَا الْقُرُوْنَ الْاُوْلٰى بَصَآٮِٕرَ لِلنَّاسِ وَهُدًى وَّرَحْمَةً لَّعَلَّهُمْ يَتَذَكَّرُوْنَ
وَلَقَدْ திட்டவட்டமாக اٰتَيْنَا நாம் தந்தோம் مُوْسَى மூஸாவிற்கு الْكِتٰبَ வேதத்தை مِنْۢ بَعْدِ பின்னர் مَاۤ اَهْلَكْنَا நாம் அழித்த الْقُرُوْنَ தலைமுறையினர்களை الْاُوْلٰى முந்திய(வர்கள்) بَصَآٮِٕرَ ஒளியாகவும் لِلنَّاسِ மக்களுக்கு وَهُدًى நேர்வழியாகவும் وَّرَحْمَةً கருணையாகவும் لَّعَلَّهُمْ يَتَذَكَّرُوْنَ அவர்கள் நல்லுணர்வு பெறவேண்டும்
28:43. வ லகத் ஆதய்னா மூஸல் கிதாBப மிம் Bபஃதி மா அஹ்லக்னல் குரூனல் ஊலா Bபஸா'இர லின்னாஸி வ ஹுத(ன்)வ் வ ரஹ்மதல் ல'அல்லஹும் யத தக்க்கரூன்
28:43. இன்னும், முந்தைய தலைமுறையினர்களை நாம் அழித்தபின் திடமாக மூஸாவுக்கு (தவ்ராத்) வேதத்தைக் கொடுத்தோம்; அது மனிதர்களுக்குப் படிப்பினைகளைத் தரக்கூடியதாகவும், நேர்வழி காட்டியாகவும், அருளாகவும் இருந்தது; அவர்கள் உபதேசம் பெறுவதற்காக.
28:44 وَمَا كُنْتَ بِجَانِبِ الْغَرْبِىِّ اِذْ قَضَيْنَاۤ اِلٰى مُوْسَى الْاَمْرَ وَمَا كُنْتَ مِنَ الشّٰهِدِيْنَۙ
وَمَا كُنْتَ நீர் இருக்கவில்லை بِجَانِبِ பக்கத்தில் الْغَرْبِىِّ மேற்கு اِذْ قَضَيْنَاۤ நாம் ஒப்படைத்த போது اِلٰى مُوْسَى மூஸாவிடம் الْاَمْرَ சட்டங்களை وَمَا كُنْتَ நீர் இருக்கவில்லை مِنَ الشّٰهِدِيْنَۙ இருந்தவர்களில்
28:44. வமா குன்த BபிஜானிBபில் கர்Bபிய்யி இத் களய்னா இலா மூஸல் அம்ர வமா குன்த மினஷ் ஷாஹிதீன்
28:44. மேலும், நாம் மூஸாவுக்குக் கட்டளையைக் கடமையாக்கிய சமயம் நீர் (தூர் மலைக்கு) மேற்குத்திசையில் இருக்கவில்லை; (அந்நிகழ்வைப்) பார்ப்பவர்களில் ஒருவராகவும் நீர் இருக்கவில்லை.
28:45 وَلٰـكِنَّاۤ اَنْشَاْنَا قُرُوْنًا فَتَطَاوَلَ عَلَيْهِمُ الْعُمُرُۚ وَمَا كُنْتَ ثَاوِيًا فِىْۤ اَهْلِ مَدْيَنَ تَـتْلُوْا عَلَيْهِمْ اٰيٰتِنَاۙ وَلٰـكِنَّا كُنَّا مُرْسِلِيْنَ
وَلٰـكِنَّاۤ என்றாலும் اَنْشَاْنَا நாம்உருவாக்கினோம் قُرُوْنًا பல தலைமுறையினரை فَتَطَاوَلَ நீண்டு சென்றது عَلَيْهِمُ அவர்களுக்கு الْعُمُرُۚ காலம் وَمَا كُنْتَ இன்னும் நீர் இல்லை ثَاوِيًا தங்கியவராக فِىْۤ اَهْلِ مَدْيَنَ மத்யன் வாசிகளுடன் تَـتْلُوْا நீர் ஓதியவராக عَلَيْهِمْ அவர்கள் மீது اٰيٰتِنَاۙ நமது வசனங்களை وَلٰـكِنَّا என்றாலும் நாம்தான் كُنَّا இருந்தோம் مُرْسِلِيْنَ தூதர்களை அனுப்பக்கூடியவர்களாக
28:45. வலாகின்னா அன்ஷ'னா குரூனன் Fபததாவல 'அலய்ஹிமுல் 'உமுர்; வமா குன்த தாவியன் Fபீ அஹ்லி மத்யன தத்லூ 'அலய்ஹிம் ஆயாதினா வ லாகின்னா குன்னா முர்ஸிலீன்
28:45. எனினும், (அவர்களுக்குப் பின்) நாம் அநேக தலைமுறையினரை உண்டாக்கினோம்; அவர்கள் மீது காலங்கள் பல கடந்துவிட்டன; அன்றியும், நீர் மத்யன் வாசிகளிடம், அவர்களுக்கு நம் வசனங்களை ஓதிக்காண்பிக்கும் நிலையில் வசிக்கவுமில்லை; எனினும், நாம் தூதர்களை அனுப்பிவைப்போராகவே இருந்தோம்.
28:46 وَمَا كُنْتَ بِجَانِبِ الطُّوْرِ اِذْ نَادَيْنَا وَلٰـكِنْ رَّحْمَةً مِّنْ رَّبِّكَ لِتُنْذِرَ قَوْمًا مَّاۤ اَتٰٮهُمْ مِّنْ نَّذِيْرٍ مِّنْ قَبْلِكَ لَعَلَّهُمْ يَتَذَكَّرُوْنَ
وَمَا كُنْتَ நீர் இருக்கவில்லை بِجَانِبِ அருகில் الطُّوْرِ மலைக்கு اِذْ نَادَيْنَا நாம் அழைத்தபோது وَلٰـكِنْ எனினும் رَّحْمَةً அருளினால் مِّنْ رَّبِّكَ உமது இறைவனின் لِتُنْذِرَ ஏனெனில், நீர் எச்சரிக்க வேண்டும் قَوْمًا ஒரு மக்களை مَّاۤ اَتٰٮهُمْ அவர்களிடம் வரவில்லை مِّنْ نَّذِيْرٍ எச்சரிப்பாளர் எவரும் مِّنْ قَبْلِكَ உமக்கு முன்னர் لَعَلَّهُمْ يَتَذَكَّرُوْنَ அவர்கள் நல்லுணர்வு பெறுவதற்காக
28:46. வமா குன்த BபிஜானிBபித் தூரி இத் னாதய்னா வ லாகிர் ரஹ்மதம் மிர் ரBப்Bபிக லிதுன்திர கவ்மம் மா அதாஹும் மின் னதீரிம் மின் கBப்லிக ல'அல்லஹும் யததக்கரூன்
28:46. இன்னும், நாம் (மூஸாவை) அழைத்தபோது நீர் தூர் மலையின் பக்கத்தில் இருக்கவுமில்லை; எனினும், ஒரு கூட்டத்தினருக்கு - உமக்கு முன்னர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் வராத (இச்) சமூகத்தாருக்கு நீர் அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும் அவர்கள் படிப்பினை பெறுவதற்காகவும் உமக்கு உம் இறைவனிடமிருந்து அருட்கொடையாக (இவை கூறப்படுகிறது).
28:47 وَلَوْلَاۤ اَنْ تُصِيْبَـهُمْ مُّصِيْبَةٌۢ بِمَا قَدَّمَتْ اَيْدِيْهِمْ فَيَقُوْلُوْا رَبَّنَا لَوْلَاۤ اَرْسَلْتَ اِلَـيْنَا رَسُوْلًا فَنَـتَّبِعَ اٰيٰتِكَ وَنَـكُوْنَ مِنَ الْمُؤْمِنِيْنَ
وَلَوْلَاۤ اَنْ تُصِيْبَـهُمْ அவர்களுக்கு ஏற்பட்டு مُّصِيْبَةٌۢ ஒரு சோதனை بِمَا قَدَّمَتْ முற்படுத்தியதால் اَيْدِيْهِمْ அவர்களின் கரங்கள் فَيَقُوْلُوْا அவர்கள் கூறாதிருப்பதற்காக رَبَّنَا எங்கள் இறைவா! لَوْلَاۤ اَرْسَلْتَ நீ அனுப்பி இருக்கக்கூடாதா? اِلَـيْنَا எங்களிடம் رَسُوْلًا ஒரு தூதரை فَنَـتَّبِعَ நாங்கள் பின்பற்றி இருப்போமே! اٰيٰتِكَ உனது வசனங்களை وَنَـكُوْنَ நாங்கள்ஆகியிருப்போமே مِنَ الْمُؤْمِنِيْنَ நம்பிக்கையாளர்களில்
28:47. வ லவ் லா அன் துஸீBபஹும் முஸீBபதும் Bபிமா கத்தமத் அய்தீஹிம் Fப யகூலூ ரBப்Bபனா லவ் லா அர்ஸல்த இலய்னா ரஸூலன் Fபனத்தBபி'அ ஆயாதிக வ னகூன மினல் மு'மினீன்
28:47. அவர்களுடைய கைகள் செய்து முற்படுத்திய (தீ)வினை காரணமாக, அவர்களுக்கு ஏதேனும் சோதனை வரும்போது அவர்கள்: "எங்கள் இறைவா! நீ எங்களுக்குத் தூதர் ஒருவரை அனுப்பி வைத்திருக்க வேண்டாமா? அப்போது நாங்கள் உன் வசனங்களைப் பின்பற்றி நாங்களும் நம்பிக்கையாளர்களில் உள்ளவர்களாகியிருப்போமே!" என்று கூறாதிருக்கும் பொருட்டு (உம்மை அவர்களிடையே தூதராக அனுப்பினோம்).
28:48 فَلَمَّا جَآءَهُمُ الْحَـقُّ مِنْ عِنْدِنَا قَالُوْا لَوْلَاۤ اُوْتِىَ مِثْلَ مَاۤ اُوْتِىَ مُوْسٰى ؕ اَوَلَمْ يَكْفُرُوْا بِمَاۤ اُوْتِىَ مُوْسٰى مِنْ قَبْلُ ۚ قَالُوْا سِحْرٰنِ تَظَاهَرَا وَقَالُوْۤا اِنَّا بِكُلٍّ كٰفِرُوْنَ
فَلَمَّا جَآءَ வந்த போது هُمُ அவர்களுக்கு الْحَـقُّ சத்திய தூதர் مِنْ عِنْدِنَا நம்மிடமிருந்து قَالُوْا கூறினர் لَوْلَاۤ اُوْتِىَ வழங்கப்பட்டிருக்க வேண்டாமா! مِثْلَ போன்ற مَاۤ اُوْتِىَ வழங்கப்பட்டதை مُوْسٰى ؕ மூஸாவிற்கு اَوَلَمْ يَكْفُرُوْا இவர்கள் மறுக்கவில்லையா? بِمَاۤ اُوْتِىَ வழங்கப்பட்டதை مُوْسٰى மூஸாவிற்கு مِنْ قَبْلُ ۚ இதற்கு முன்னர் قَالُوْا கூறினர் سِحْرٰنِ இரண்டு சூனியங்களாகும் تَظَاهَرَا தங்களுக்குள் உதவி செய்தனர் وَقَالُوْۤا அவர்கள் கூறினர் اِنَّا நிச்சயமாக நாங்கள் بِكُلٍّ அனைத்தையும் كٰفِرُوْنَ மறுப்பவர்கள்தான்
28:48. Fபலம்மா ஜா'அஹுமுல் ஹக்கு மின் 'இன்தினா காலூ லவ் லா ஊதிய மித்ல மா ஊதியா மூஸா; அவலம் யக்Fபுரூ Bபிமா ஊதிய மூஸா மின் கBப்லு காலூ ஸிஹ்ரானி தளாஹரா வ காலூ இன்னா Bபிகுல்லின் காFபிரூன்
28:48. எனினும், (இப்பொழுது) நம்மிடமிருந்து சத்திய (மார்க்க)ம் அவர்களிடம் வந்தபோது, "மூஸாவுக்குக் கொடுக்கப்பட்டது போன்று இவருக்கு ஏன் கொடுக்கப்படவில்லை" என்று கேட்கிறார்கள்; இதற்கு முன்னர் மூஸாவுக்குக் கொடுக்கப்பட்டதையும் அவர்(களின் மூதாதையர்)கள் நிராகரிக்கவில்லையா? இன்னும், அவர்கள் கூறுகிறார்கள்: "(குர்ஆனும், தவ்ராத்தும்) ஒன்றையொன்று உறுதிப்படுத்தும் இரண்டு சூனிய (மந்திர)ங்களே!" என்று; இன்னும், அவர்கள் கூறுகிறார்கள்: "நிச்சயமாக நாங்கள் (இவை) அனைத்தையும் நிராகரிக்கிறோம்" என்று.
28:49 قُلْ فَاْتُوْا بِكِتٰبٍ مِّنْ عِنْدِ اللّٰهِ هُوَ اَهْدٰى مِنْهُمَاۤ اَتَّبِعْهُ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ
قُلْ கூறுவீராக فَاْتُوْا بِكِتٰبٍ ஒரு வேதத்தைக் கொண்டு வாருங்கள் مِّنْ عِنْدِ اللّٰهِ அல்லாஹ்விடமிருந்து هُوَ அது اَهْدٰى மிக்க நேர்வழி مِنْهُمَاۤ அவ்விரண்டை விட اَتَّبِعْهُ நான் அதை பின்பற்றுகிறேன் اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் صٰدِقِيْنَ உண்மையாளர்களாக
28:49. குல் Fபா'தூ Bபி கிதாBபிம் மின் 'இன்தில் லாஹி ஹுவ அஹ்தா மின்ஹு மா அத்தBபிஃஹு இன் குன்தும் ஸாதிகீன்
28:49. ஆகவே, "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், இவ்விரண்டையும்விட அதிக நேர்வழி காட்டக்கூடிய ஒரு வேதத்தை அல்லாஹ்விடமிருந்து நீங்கள் கொண்டுவாருங்கள்; நானும் அதைப் பின்பற்றுகிறேன்" என்று (நபியே!) நீர் கூறும்.
28:50 فَاِنْ لَّمْ يَسْتَجِيْبُوْا لَكَ فَاعْلَمْ اَنَّمَا يَـتَّبِعُوْنَ اَهْوَآءَهُمْ ؕ وَمَنْ اَضَلُّ مِمَّنِ اتَّبَعَ هَوٰٮهُ بِغَيْرِ هُدًى مِّنَ اللّٰهِ ؕ اِنَّ اللّٰهَ لَا يَهْدِى الْقَوْمَ الظّٰلِمِيْنَ
فَاِنْ لَّمْ يَسْتَجِيْبُوْا அவர்கள் பதிலளிக்கவில்லை என்றால் لَكَ உமக்கு فَاعْلَمْ நீர் அறிவீராக! اَنَّمَا يَـتَّبِعُوْنَ நிச்சயமாக அவர்கள் பின்பற்றுவதெல்லாம் اَهْوَآءَ மன இச்சைகளைத்தான் هُمْ ؕ தங்கள் وَمَنْ யார்? اَضَلُّ பெரும் வழிகேடன் مِمَّنِ اتَّبَعَ பின்பற்றியவனை விட هَوٰٮهُ தனது மன இச்சையை بِغَيْرِ هُدًى நேர்வழி அன்றி مِّنَ اللّٰهِ ؕ அல்லாஹ்வின் اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் لَا يَهْدِى நேர்வழி செலுத்த மாட்டான் الْقَوْمَ மக்களை الظّٰلِمِيْنَ அநியாயக்கார
28:50. Fப இல் லம் யஸ்தஜீBபூ லக Fபஃலம் அன்னமா யத்தBபி'ஊன அஹ்வா'அஹும்; வ மன் அளல்லு மிம்மனித் தBப'அ ஹவாஹு Bபிகரி ஹுதம் மினல் லாஹ்; இன்னல் லாஹ லா யஹ்தில் கவ்மள் ளாலிமீன்
28:50. உமக்கு அவர்கள் பதில் கூறாவிட்டால், நிச்சயமாக அவர்கள் தம் மனோ இச்சைகளையே பின்பற்றுகிறார்கள் என்று நீர் அறிந்துகொள்ளும்; இன்னும், அல்லாஹ்விடம் இருந்து நேர்வழி காட்டியின்றித் தன் மனோ இச்சையைப் பின்பற்றுபவனை விட மிக வழிகெட்டவன் எவன் இருக்கின்றான்? நிச்சயமாக அல்லாஹ் அக்கிரமக்கார சமூகத்தாருக்கு நேர்வழி காட்டமாட்டான்.
28:51 وَلَقَدْ وَصَّلْنَا لَهُمُ الْقَوْلَ لَعَلَّهُمْ يَتَذَكَّرُوْنَؕ
وَلَقَدْ திட்டவட்டமாக وَصَّلْنَا நாம் சேர்ப்பித்தோம் لَهُمُ அவர்களுக்கு الْقَوْلَ செய்தியை لَعَلَّهُمْ يَتَذَكَّرُوْنَؕ அவர்கள் நல்லுணர்வு பெறுவதற்காக
28:51. வ லகத் வஸ்ஸல்னா லஹுமுல் கவ்ல ல'அல்லஹும் யததக்கரூன்
28:51. இன்னும், அவர்கள் படிப்பினைப் பெறுவதற்காக நாம் அவர்களுக்கு (அவ்வப்போது வேத) வாக்கையைத் தொடராகச் சேர்ப்பித்தோம்.
28:52 اَلَّذِيْنَ اٰتَيْنٰهُمُ الْـكِتٰبَ مِنْ قَبْلِهٖ هُمْ بِهٖ يُؤْمِنُوْنَ
اَلَّذِيْنَ اٰتَيْنٰهُمُ நாம் கொடுத்தவர்கள் الْـكِتٰبَ வேதத்தை مِنْ قَبْلِهٖ இதற்கு முன்னர் هُمْ அவர்கள் بِهٖ இதையும் يُؤْمِنُوْنَ நம்பிக்கை கொள்வார்கள்
28:52. அல்லதீன ஆதய்னாஹு முல் கிதாBப மின் கBப்லிஹீ ஹும் Bபிஹீ யு'மினூன்
28:52. இதற்கு முன்னர் எவர்களுக்கு நாம் வேதத்தைக் கொடுத்திருக்கிறோமோ அவர்களும் இதன் மீது நம்பிக்கை கொள்கிறார்கள்.
28:53 وَاِذَا يُتْلٰى عَلَيْهِمْ قَالُوْۤا اٰمَنَّا بِهٖۤ اِنَّهُ الْحَـقُّ مِنْ رَّبِّنَاۤ اِنَّا كُنَّا مِنْ قَبْلِهٖ مُسْلِمِيْنَ
وَاِذَا يُتْلٰى ஓதப்பட்டால் عَلَيْهِمْ அவர்கள் முன் قَالُوْۤا அவர்கள் கூறுவார்கள் اٰمَنَّا நாங்கள் நம்பிக்கை கொண்டோம் بِهٖۤ இதை اِنَّهُ நிச்சயமாக இது الْحَـقُّ உண்மையான வேதம் مِنْ رَّبِّنَاۤ எங்கள் இறைவனிடமிருந்து اِنَّا كُنَّا நிச்சயமாக நாங்கள் இருந்தோம் مِنْ قَبْلِهٖ இதற்கு முன்னரும் مُسْلِمِيْنَ முஸ்லிம்களாகவே இருந்தோம்
28:53. வ இதா யுத்லா 'அலய்ஹிம் காலூ ஆமன்னா Bபிஹீ இன்னஹுல் ஹக்கு மிர் ரBப்Bபினா இன்னா குன்னா மின் கBப்லிஹீ முஸ்லிமீன்
28:53. மேலும், (இது) அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால் அவர்கள், "நாங்கள் இதை நம்புகிறோம்; நிச்சயமாக இது நம்முடைய இறைவனிடமிருந்து வந்துள்ள சத்திய(வசன)மாகும்; இதற்கு முன்னரே, நாங்கள் (இறைவனுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாகவே இருந்தோம்" என்று கூறுகிறார்கள்.
28:54 اُولٰٓٮِٕكَ يُؤْتَوْنَ اَجْرَهُمْ مَّرَّتَيْنِ بِمَا صَبَرُوْا وَيَدْرَءُوْنَ بِالْحَسَنَةِ السَّيِّئَةَ وَمِمَّا رَزَقْنٰهُمْ يُنْفِقُوْنَ
اُولٰٓٮِٕكَ அவர்கள் يُؤْتَوْنَ வழங்கப்படுவார்கள் اَجْرَهُمْ தங்கள் கூலியை مَّرَّتَيْنِ இருமுறை بِمَا صَبَرُوْا அவர்கள் பொறுமையாக இருந்ததால் وَيَدْرَءُوْنَ இன்னும் அவர்கள் தடுப்பார்கள் بِالْحَسَنَةِ நன்மையைக்கொண்டு السَّيِّئَةَ தீமையை وَمِمَّا رَزَقْنٰهُمْ இன்னும் நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து يُنْفِقُوْنَ தர்மம் செய்வார்கள்
28:54. உலா'இக யு'தவ்ன அஜ்ரஹும் மர்ரதய்னி Bபிமா ஸBபரூ வ யத்ர'ஊன Bபில் ஹஸனதிஸ் ஸய்யி'அத வ மிம்ம்மா ரZஜக் னாஹும் யுன்Fபிகூன்
28:54. இவர்கள் பொறுமையை மேற்கொண்டமைக்காக இருமுறை நற்கூலி அளிக்கப்படுவார்கள்; மேலும், இவர்கள் நன்மையைக் கொண்டு தீமையைத் தடுத்துக்கொள்வார்கள்; நாம் அவர்களுக்குக் கொடுத்தவற்றிலிருந்து (தான தர்மங்களில்) செலவும் செய்வார்கள்.
28:55 وَاِذَا سَمِعُوا اللَّغْوَ اَعْرَضُوْا عَنْهُ وَقَالُوْا لَنَاۤ اَعْمَالُنَا وَلَـكُمْ اَعْمَالُـكُمْ سَلٰمٌ عَلَيْكُمْ لَا نَبْتَغِى الْجٰهِلِيْنَ
وَاِذَا سَمِعُوا அவர்கள் செவிமடுத்தால் اللَّغْوَ வீணானவற்றை اَعْرَضُوْا புறக்கணித்து விடுவார்கள் عَنْهُ அதை وَقَالُوْا இன்னும் கூறுவார்கள் لَنَاۤ எங்களுக்கு اَعْمَالُنَا எங்கள் செயல்கள் وَلَـكُمْ இன்னும் உங்களுக்கு اَعْمَالُـكُمْ உங்கள் செயல்கள் سَلٰمٌ ஸலாம் உண்டாகட்டும் عَلَيْكُمْ உங்கள் மீது لَا نَبْتَغِى நாங்கள் விரும்ப மாட்டோம் الْجٰهِلِيْنَ அறியாதவர்களிடம்
28:55. வ இதா ஸமி'உல் லக்வ அஃரளூ 'அன்ஹு வ காலூ லனா அஃமாலுனா வ லகும் அஃமாலுகும் ஸலாமுன் 'அலய்கும் லா னBப்தகில் ஜாஹிலீன்
28:55. அன்றியும், இவர்கள் வீணானதைச் செவியுற்றால் அதைப் புறக்கணித்து, "எங்களுக்கு எங்களுடைய செயல்கள்; உங்களுக்கு உங்களுடைய செயல்கள்; உங்களின் மீது சாந்தி உண்டாகுக! அறியாமைக்காரர்களை நாங்கள் விரும்புவதில்லை" என்று கூறுவார்கள்.
28:56 اِنَّكَ لَا تَهْدِىْ مَنْ اَحْبَبْتَ وَلٰـكِنَّ اللّٰهَ يَهْدِىْ مَنْ يَّشَآءُؕ وَهُوَ اَعْلَمُ بِالْمُهْتَدِيْنَ
اِنَّكَ நிச்சயமாக நீர் لَا تَهْدِىْ நீர் நேர்வழி செலுத்த மாட்டீர் مَنْ اَحْبَبْتَ நீர் விரும்பியவரை وَلٰـكِنَّ என்றாலும் اللّٰهَ அல்லாஹ் يَهْدِىْ நேர்வழி செலுத்துகின்றான் مَنْ يَّشَآءُؕ தான் நாடியவரை وَهُوَ அவன்தான் اَعْلَمُ மிக அறிந்தவன் بِالْمُهْتَدِيْنَ நேர்வழி செல்பவர்களை
28:56. இன்னக லா தஹ்தீ மன் அஹ்BபBப்த வ லாகின்னல்லாஹ யஹ்தீ மய் யஷா'; வஹுவ அஃலமு Bபில் முஹ்ததீன்
28:56. (நபியே!) நீர் நேசிப்பவர்களை (யெல்லாம்) நிச்சயமாக நேர்வழியில் செலுத்திவிட முடியாது; ஆனால், அல்லாஹ்தான் நாடியவர்களை நேர்வழியில் செலுத்துகிறான்; மேலும், நேர்வழி பெற்றவர்களை அவன் நன்கறிகிறான்.
28:57 وَقَالُوْۤا اِنْ نَّـتَّبِعِ الْهُدٰى مَعَكَ نُـتَخَطَّفْ مِنْ اَرْضِنَا ؕ اَوَلَمْ نُمَكِّنْ لَّهُمْ حَرَمًا اٰمِنًا يُّجْبٰٓى اِلَيْهِ ثَمَرٰتُ كُلِّ شَىْءٍ رِّزْقًا مِّنْ لَّدُنَّا وَلٰـكِنَّ اَكْثَرَهُمْ لَا يَعْلَمُوْنَ
وَقَالُوْۤا அவர்கள் கூறினர் اِنْ نَّـتَّبِعِ நாம் பின்பற்றினால் الْهُدٰى நேர்வழியை مَعَكَ உம்முடன் نُـتَخَطَّفْ நாங்கள் வெளியேற்றப்பட்டிருப்போம் مِنْ اَرْضِنَا ؕ எங்கள் பூமியிலிருந்து اَوَلَمْ نُمَكِّنْ நாம் ஸ்திரப்படுத்தித் தரவில்லையா? لَّهُمْ அவர்களுக்கு حَرَمًا புனித தலத்தை اٰمِنًا பாதுகாப்பான يُّجْبٰٓى கொண்டு வரப்படுகின்றன اِلَيْهِ அங்கு ثَمَرٰتُ கனிகளும் كُلِّ எல்லா شَىْءٍ வகையான رِّزْقًا உணவாக مِّنْ لَّدُنَّا நம் புறத்திலிருந்து وَلٰـكِنَّ என்றாலும் اَكْثَرَ அதிகமானவர்கள் هُمْ அவர்களில் لَا يَعْلَمُوْنَ அறியமாட்டார்கள்
28:57. வ காலூ இன் னத்தBபி'இல் ஹுதா ம'அக னுதகத்தFப் மின் அர்ளினா; அவலம் னுமக்க்கில் லஹும் ஹரமன் ஆமின(ன்)ய் யுஜ்Bபா இலய்ஹி தமராது குல்லி ஷய்'இர் ரிZஜ்கம் மில் லதுன்னா வ லாகின்ன அக்தரஹும் லா யஃலமூன்
28:57. இன்னும் அவர்கள், "நாங்கள் உம்முடன் (சேர்ந்து) இந்நேர்வழியை (குர்ஆனை) பின்பற்றுவோமானால் எங்கள் நாட்டைவிட்டு நாங்கள் தூக்கி எறியப்படுவோம்" என்று கூறுகிறார்கள்: அபயமளிக்கும் சங்கையான இடத்தில் அவர்களுக்கு நாம் இடமளிக்கவில்லையா? அ(வ்விடத்)தின் பக்கம் ஒவ்வொரு வகைக் கனிவர்க்கமும் நம்மிடமிருந்துள்ள உணவாகக் கொண்டுவரப்படுகிறது; எனினும், அவர்களில் பெரும்பாலோர் இதை அறியமாட்டார்கள்.
28:58 وَكَمْ اَهْلَـكْنَا مِنْ قَرْيَةٍۢ بَطِرَتْ مَعِيْشَتَهَا ۚ فَتِلْكَ مَسٰكِنُهُمْ لَمْ تُسْكَنْ مِّنْۢ بَعْدِهِمْ اِلَّا قَلِيْلًا ؕ وَكُنَّا نَحْنُ الْوٰرِثِيْنَ
وَكَمْ எத்தனையோ اَهْلَـكْنَا நாம் அழித்தோம் مِنْ قَرْيَةٍۢ ஊர்களை بَطِرَتْ வரம்பு மீறி நிராகரித்தனர் مَعِيْشَتَهَا ۚ தங்களது வாழ்க்கை (வசதியால்) فَتِلْكَ இதோ مَسٰكِنُهُمْ அவர்களது இல்லங்கள் لَمْ تُسْكَنْ வசிக்கப்படவில்லை مِّنْۢ بَعْدِ பின்னர் هِمْ அவர்களுக்கு اِلَّا தவிர قَلِيْلًا ؕ குறைவாகவே وَكُنَّا இருக்கின்றோம் نَحْنُ நாமே الْوٰرِثِيْنَ வாரிசுகளாக
28:58. வ கம் அஹ்லக்னா மின் கர்யதிம் Bபதிரத் ம'ஈஷதஹா Fபதில்க மஸாகினுஹும் லம் துஸ்கம் மிம் Bபஃதிஹிம் இல்லா கலீலா; வ குன்னா னஹ்னுல் வாரிதீன்
28:58. தங்களுடைய வாழ்க்கை வசதிகளால் அழிச்சாட்டியம் செய்த எத்தனையோ ஊர்களை நாம் அழித்திருக்கிறோம்; இவை யாவும் அவர்களின் குடியிருப்புகளேயாகும்; அவர்களுக்குப்பின் குறைவாகவே தவிர அங்கு (யாராலும்) குடியிருக்கப்படவில்லை; மேலும், நாமே (அவற்றிற்கு) வாரிசுகளாகினோம்.
28:59 وَ مَا كَانَ رَبُّكَ مُهْلِكَ الْقُرٰى حَتّٰى يَبْعَثَ فِىْۤ اُمِّهَا رَسُوْلًا يَّتْلُوْا عَلَيْهِمْ اٰيٰتِنَا ۚ وَمَا كُنَّا مُهْلِكِى الْقُرٰٓى اِلَّا وَاَهْلُهَا ظٰلِمُوْنَ
وَ مَا كَانَ இல்லை رَبُّكَ உமது இறைவன் مُهْلِكَ அழிப்பவனாக الْقُرٰى ஊர்களை حَتّٰى يَبْعَثَ அனுப்புகின்ற வரை فِىْۤ اُمِّهَا அதனுடைய தலைநகரில் رَسُوْلًا ஒரு தூதரை يَّتْلُوْا அவர் ஓதுவார் عَلَيْهِمْ அவர்கள் முன் اٰيٰتِنَا ۚ நமது வசனங்களை وَمَا كُنَّا நாம் இல்லை مُهْلِكِى அழிப்பவர்களாக الْقُرٰٓى ஊர்களை اِلَّا தவிர وَاَهْلُهَا அதன் வாசிகள் இருந்தே ظٰلِمُوْنَ அநியாயக்காரர்களாக
28:59. வமா கான ரBப்Bபுக முஹ்லிகல் குரா ஹத்தா யBப்'அத Fபீ உம்மிஹா ரஸூல(ன்)ய் யத்லூ 'அலய்ஹிம் ஆயாதின; வமா குன்னா முஹ்லிகில் குரா இல்லா வ அஹ்லுஹா ளாலிமூன்
28:59. (நபியே!) நம் வசனங்களை அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கும் தூதர் ஒருவரை அவர்களுடைய தலைநகருக்கு அனுப்பி வைக்காதவரையில், எந்த ஊர்களையும் உம்முடைய இறைவன் அழிப்பவனாக இல்லை; மேலும், அந்த ஊர்களையும் அதன் மக்கள் அக்கிரமக்காரர்களாக இல்லாத வரையில் நாம் அழிப்போராகவும் இல்லை.
28:60 وَمَاۤ اُوْتِيْتُمْ مِّنْ شَىْءٍ فَمَتَاعُ الْحَيٰوةِ الدُّنْيَا وَزِيْنَـتُهَا ۚ وَمَا عِنْدَ اللّٰهِ خَيْرٌ وَّاَبْقٰى ؕ اَفَلَا تَعْقِلُوْنَ
وَمَاۤ اُوْتِيْتُمْ நீங்கள் எது கொடுக்கப்பட்டீர்களோ مِّنْ شَىْءٍ பொருளில் فَمَتَاعُ இன்பமும் الْحَيٰوةِ الدُّنْيَا உலக வாழ்க்கையின் وَزِيْنَـتُهَا ۚ அதன் அலங்காரமும் وَمَا عِنْدَ اللّٰهِ அல்லாஹ்விடம் உள்ளதுதான் خَيْرٌ சிறந்ததும் وَّاَبْقٰى ؕ நிலையானதும் اَفَلَا تَعْقِلُوْنَ நீங்கள் சிந்தித்து புரிய மாட்டீர்களா?
28:60. வ மா ஊதீதும் மின் ஷய்'இன் Fபமதா'உல் ஹயாதித் துன்யா வ Zஜீனதுஹா; வமா 'இன்தல் லாஹி கய்ரு(ன்)வ் வ அBப்கா; அFபலா தஃகிலூன்
28:60. மேலும், உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருப்பவையெல்லாம் (அற்பமாகிய) இவ்வுலக வாழ்க்கையின் சுகமும், அதனுடைய அலங்காரமும்தான்; ஆனால், அல்லாஹ்விடத்தில் இருப்பவை மிகவும் மேலானவையாகவும், நிலையானவையாகவும் இருக்கின்றன; (இதை) நீங்கள் அறிந்துகொள்ளமாட்டீர்களா?
28:61 اَفَمَنْ وَّعَدْنٰهُ وَعْدًا حَسَنًا فَهُوَ لَاقِيْهِ كَمَنْ مَّتَّعْنٰهُ مَتَاعَ الْحَيٰوةِ الدُّنْيَا ثُمَّ هُوَ يَوْمَ الْقِيٰمَةِ مِنَ الْمُحْضَرِيْنَ
اَفَمَنْ எவருக்கு وَّعَدْنٰهُ நாம் வாக்களித்தோம் وَعْدًا வாக்கை حَسَنًا அழகிய فَهُوَ அவர் لَاقِيْهِ அதை சந்திப்பாரோ كَمَنْ مَّتَّعْنٰهُ நாம் இன்பமளித்தவர் போன்று ஆவாரா? مَتَاعَ இன்பத்தைக்கொண்டு الْحَيٰوةِ வாழ்க்கையின் الدُّنْيَا இவ்வுலக ثُمَّ பிறகு هُوَ இவர் يَوْمَ الْقِيٰمَةِ மறுமை நாளில் مِنَ الْمُحْضَرِيْنَ ஆஜர்படுத்தப்பட்டவர்களில் இருப்பார்
28:61. அFபம(ன்)வ் வ'அத்னாஹு வஃதன் ஹஸனன் Fபஹுவ லாகீஹி கமம் மத்தஃனாஹு மதா'அல் ஹயாதித் துன்யா தும்ம ஹுவ யவ்மல் கியாமதி மினல் முஹ்ளரீன்
28:61. எவனுக்கு நாம் அழகான வாக்காக வாக்குறுதியளித்து, அதை அவனும் அடையப்போகிறானோ அ(த்தகைய)வன், எவனுக்கு நாம் இவ்வுலக வாழ்க்கையின் (அற்ப) சுகங்களை மட்டும் கொடுத்துப் பின்னர், மறுமைநாளில் (தண்டனை பெறுவதற்காக நம்முன்) கொண்டுவரப்படுவானோ அவனைப் போலாவானா?
28:62 وَيَوْمَ يُنَادِيْهِمْ فَيَـقُوْلُ اَيْنَ شُرَكَآءِىَ الَّذِيْنَ كُنْتُمْ تَزْعُمُوْنَ
وَيَوْمَ இன்னும் நாளில் يُنَادِيْهِمْ அவன் அவர்களை அழைப்பான் فَيَـقُوْلُ அவன் கேட்பான் اَيْنَ எங்கே என்று شُرَكَآءِىَ எனது இணைகள் الَّذِيْنَ كُنْتُمْ تَزْعُمُوْنَ நீங்கள் சொல்லிக்கொண்டிருந்த
28:62. வ யவ்ம யுனாதீஹிம் Fப-யகூலு அய்ன ஷுரகா 'இயல் லதீன குன்தும் தZஜ்'உமூன்
28:62. இன்னும், அவன் (அல்லாஹ்) அவர்களை அழைக்கும் நாளில்: "எனக்கு இணையானவர்கள் என்று நீங்கள் எண்ணிக்கொண்டிருந்தீர்களே, அவர்கள் எங்கே?" என்று கேட்பான்.
28:63 قَالَ الَّذِيْنَ حَقَّ عَلَيْهِمُ الْقَوْلُ رَبَّنَا هٰٓؤُلَاۤءِ الَّذِيْنَ اَغْوَيْنَا ۚ اَغْوَيْنٰهُمْ كَمَا غَوَيْنَا ۚ تَبَـرَّاْنَاۤ اِلَيْكَ مَا كَانُوْۤا اِيَّانَا يَعْبُدُوْنَ
قَالَ கூறுவார்(கள்) الَّذِيْنَ எவர்கள் حَقَّ கடமையாகிவிட்டது عَلَيْهِمُ அவர்கள் மீது الْقَوْلُ வாக்கு رَبَّنَا எங்கள் இறைவா! هٰٓؤُلَاۤءِ இவர்கள்தான் الَّذِيْنَ எவர்கள் اَغْوَيْنَا ۚ நாங்கள் வழிகெடுத்தோம் اَغْوَيْنٰهُمْ அவர்களை நாங்கள் வழிகெடுத்தோம் كَمَا போன்றே غَوَيْنَا ۚ நாங்கள் வழிகெட்டது تَبَـرَّاْنَاۤ நாங்கள் விலகி விட்டோம் اِلَيْكَ உன் பக்கம் مَا كَانُوْۤا அவர்கள் இல்லை اِيَّانَا எங்களை يَعْبُدُوْنَ அவர்கள் வணங்குகின்றனர்
28:63. காலல் லதீன ஹக்க 'அலய்ஹிமுல் கவ்லு ரBப்Bபனா ஹா'உலா'இல் லதீன அக்வய்னா அக்வய்னாஹு கமா கவய்னா தBபர்ரானா இலய்க மா கானூ இய்யானா யஃBபுதூன்
28:63. எவர்கள் மீது (அல்லாஹ்வின் தண்டனைப் பற்றிய) வாக்கு உறுதியாகிவிட்டதோ அவர்கள், "எங்கள் இறைவா! நாங்கள் எவர்களை வழி கெடுத்தோமோ அவர்கள் இவர்கள்தாம்; நாங்கள் வழிகெட்டது போன்றே, இவர்களையும் நாங்கள் வழிகெடுத்தோம்; உன்னிடம் நாங்கள் (அவர்களை விட்டும்) விலகிக்கொள்கிறோம்; அவர்கள் எங்களை வணங்கிக்கொண்டிருக்கவில்லை" என்று கூறுவார்கள்.
28:64 وَقِيْلَ ادْعُوْا شُرَكَآءَكُمْ فَدَعَوْهُمْ فَلَمْ يَسْتَجِيْبُوْا لَهُمْ وَرَاَوُا الْعَذَابَۚ لَوْ اَنَّهُمْ كَانُوْا يَهْتَدُوْنَ
وَقِيْلَ இன்னும் சொல்லப்படும் ادْعُوْا அழையுங்கள் شُرَكَآءَ தெய்வங்களை كُمْ உங்கள் فَدَعَوْهُمْ அவற்றை அவர்கள் அழைப்பார்கள் فَلَمْ يَسْتَجِيْبُوْا ஆனால், அவை பதில் தரமாட்டா لَهُمْ அவர்களுக்கு وَرَاَوُا இன்னும் காண்பார்கள் الْعَذَابَۚ தண்டனையை لَوْ اَنَّهُمْ كَانُوْا நிச்சயமாக தாங்கள் இருந்திருக்க வேண்டுமே! يَهْتَدُوْنَ நேர்வழி பெற்றவர்களாக
28:64. வ கீலத் 'ஊ ஷுரகா'அகும் Fபத'அவ்ஹும் Fபலம் யஸ்தஜீBபூ லஹும் வ ர அவுல் 'அதாBப்; லவ் அன்னஹும் கானூ யஹ்ததூன்
28:64. "உங்கள் இணை(த் தெய்வங்)களை அழையுங்கள்" என்று (அவர்களுக்குச்) சொல்லப்படும்: அவைகளை இவர்கள் அழைப்பார்கள், ஆனால் அவைகள் இவர்களுக்குப் பதிலளிக்கமாட்டா; மேலும், அவர்கள் வேதனையைக் காண்பார்கள்; அவர்கள் நேர்வழியில் சென்றிருந்தால் (இந்நிலைக்கு ஆளாகியிருக்கமாட்டார்கள்).
28:65 وَيَوْمَ يُنَادِيْهِمْ فَيَـقُوْلُ مَاذَاۤ اَجَبْتُمُ الْمُرْسَلِيْنَ
وَيَوْمَ இன்னும் நாளில் يُنَادِيْهِمْ அவன் அவர்களை அழைக்கின்றான் فَيَـقُوْلُ அவன் கேட்பான் مَاذَاۤ என்ன اَجَبْتُمُ நீங்கள் பதிலளித்தீர்கள் الْمُرْسَلِيْنَ தூதர்களுக்கு
28:65. வ யவ்ம யுனாதீஹிம் Fப யகூலு மாதா அஜBப்துமுல் முர்ஸலீன்
28:65. மேலும், (அல்லாஹ் விசாரணைக்காக) அவர்களைக் கூப்பிடும் நாளில், "உங்களை நேர்வழிக்கு அழைத்த நம் தூதர்களுக்கு என்ன பதில் கொடுத்தீர்கள்?" என்றும் கேட்பான்.
28:66 فَعَمِيَتْ عَلَيْهِمُ الْاَنْۢبَآءُ يَوْمَٮِٕذٍ فَهُمْ لَا يَتَسَآءَلُوْنَ
فَعَمِيَتْ மறைத்து விடும் عَلَيْهِمُ அவர்கள் மீது الْاَنْۢبَآءُ செய்திகள் يَوْمَٮِٕذٍ அந்நாளில் فَهُمْ ஆகவே, அவர்கள் لَا يَتَسَآءَلُوْنَ கேட்டுக்கொள்ள மாட்டார்கள்
28:66. Fப'அமியத் 'அலய்ஹிமுல் அம்Bபா'உ யவ்ம'இதின் Fபஹும் லா யதஸா'அலூன்
28:66. ஆனால், அந்நாளில் அவர்களுக்கு எல்லா விஷயங்களும் மூடலாகிப் போகும்; ஆகவே, அவர்கள் ஒருவரையொருவர் கேட்டுக்கொள்ளவும் மாட்டார்கள்.
28:67 فَاَمَّا مَنْ تَابَ وَاٰمَنَ وَعَمِلَ صَالِحًـا فَعَسٰٓى اَنْ يَّكُوْنَ مِنَ الْمُفْلِحِيْنَ
فَاَمَّا ஆக, مَنْ யார் تَابَ திருந்தினார் وَاٰمَنَ இன்னும் நம்பிக்கைகொண்டார் وَعَمِلَ இன்னும் செய்வார் صَالِحًـا நற்செயலை فَعَسٰٓى اَنْ يَّكُوْنَ அவர் ஆகக்கூடும் مِنَ الْمُفْلِحِيْنَ வெற்றியாளர்களில்
28:67. Fப அம்மா மன் தாBப வ ஆமன வ 'அமில ஸாலிஹன் Fப'அஸா அய் யகூன மினல் முFப்லிஹீன்
28:67. ஆனால், எவர்கள் பாவமன்னிப்புக் கோரி நம்பிக்கை கொண்டு, நற்செயலைச் செய்தாரோ அவர் வெற்றியாளர்களில் உள்ளவராகிடலாம்.
28:68 وَرَبُّكَ يَخْلُقُ مَا يَشَآءُ وَيَخْتَارُؕ مَا كَانَ لَهُمُ الْخِيَرَةُ ؕ سُبْحٰنَ اللّٰهِ وَتَعٰلٰى عَمَّا يُشْرِكُوْنَ
وَرَبُّكَ உமது இறைவன் يَخْلُقُ படைக்கிறான் مَا يَشَآءُ தான் நாடுவதை وَيَخْتَارُؕ இன்னும் தேர்ந்தெடுக்கிறான் مَا كَانَ இல்லை لَهُمُ அவர்களுக்கு الْخِيَرَةُ ؕ விருப்பம் سُبْحٰنَ மகா பரிசுத்தமானவன் اللّٰهِ அல்லாஹ் وَتَعٰلٰى மிக உயர்ந்தவன் عَمَّا يُشْرِكُوْنَ அவர்கள் இணைவைப்பவற்றை விட்டு
28:68. வ ரBப்Bபுக யகுலுகு மா யஷா'உ வ யக்தார்; மா கான லஹுமுல் கியரஹ்; ஸுBப்ஹானல்லாஹி வ த'ஆலா 'அம்ம்மா யுஷ்ரிகூன்
28:68. மேலும், உம்முடைய இறைவன், தான் நாடியதைப் படைக்கிறான்; (தூதராக, தான் நாடியோரைத்) தேர்ந்தெடுத்துக்கொள்கிறான்; (எனவே, இத்தகு) தேர்ந்தெடுத்தல் இவர்களு(க்கு உரிமையு)டையதல்ல; அல்லாஹ் மிகத்தூய்மையானவன்; இவர்கள் இணைவைப்பதை விட்டும் அவன் மிகவும் உயர்ந்தவன்.
28:69 وَرَبُّكَ يَعْلَمُ مَا تُكِنُّ صُدُوْرُهُمْ وَمَا يُعْلِنُوْنَ
وَرَبُّكَ உமது இறைவன் يَعْلَمُ நன்கறிவான் مَا تُكِنُّ மறைக்கின்றவற்றையும் صُدُوْرُ நெஞ்சங்கள் هُمْ அவர்களது وَمَا يُعْلِنُوْنَ அவர்கள் பகிரங்கப்படுத்துபவற்றையும்
28:69. வ ரBப்Bபுக யஃலமு மா துகின்னு ஸுதூருஹும் வமா யுஃலினூன்
28:69. மேலும், உம்முடைய இறைவன் அவர்களுடைய நெஞ்சங்கள் மறைத்து வைப்பதையும், அவர்கள் வெளிப்படுத்துவதையும் நன்கறிகிறான்.
28:70 وَهُوَ اللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَؕ لَـهُ الْحَمْدُ فِى الْاُوْلٰى وَالْاٰخِرَةِ وَلَـهُ الْحُكْمُ وَاِلَيْهِ تُرْجَعُوْنَ
وَهُوَ அவன்தான் اللّٰهُ அல்லாஹ் لَاۤ அறவே இல்லை اِلٰهَ வணக்கத்திற்குரியவன் اِلَّا தவிர هُوَؕ அவனை لَـهُ அவனுக்கே الْحَمْدُ புகழ் فِى الْاُوْلٰى وَالْاٰخِرَةِ இவ்வுலகிலும் மறுமையிலும் وَلَـهُ அவனுக்கே الْحُكْمُ தீர்ப்பளிப்பது وَاِلَيْهِ இன்னும் அவனிடமே تُرْجَعُوْنَ நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்
28:70. வ ஹுவல் லாஹு லா இலாஹ இல்லா ஹுவ லஹுல் ஹம்து Fபில் ஊலா வல் ஆகிரதி வ லஹுல் ஹுக்மு வ இலய்ஹி துர்ஜ'ஊன்
28:70. மேலும், அவனே அல்லாஹ்! அவனை அன்றி (வேறு) தெய்வம் இல்லை; இம்மையிலும், மறுமையிலும் எல்லாப் புகழும் அவனுக்கே உரியது; தீர்ப்புக் கூறும் அதிகாரமும் அவனுக்கே உரியது; ஆதலின், அவனிடத்திலேயே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.
28:71 قُلْ اَرَءَيْتُمْ اِنْ جَعَلَ اللّٰهُ عَلَيْكُمُ الَّيْلَ سَرْمَدًا اِلٰى يَوْمِ الْقِيٰمَةِ مَنْ اِلٰـهٌ غَيْرُ اللّٰهِ يَاْتِيْكُمْ بِضِيَآءٍؕاَفَلَا تَسْمَعُوْنَ
قُلْ கூறுவீராக! اَرَءَيْتُمْ நீங்கள் அறிவியுங்கள் اِنْ جَعَلَ ஆக்கிவிட்டால் اللّٰهُ அல்லாஹ் عَلَيْكُمُ உங்கள் மீது الَّيْلَ இரவை سَرْمَدًا நிரந்தரமானதாக اِلٰى வரை يَوْمِ الْقِيٰمَةِ மறுமை நாள் مَنْ எந்த اِلٰـهٌ (வேறு) ஒரு கடவுள் غَيْرُ اللّٰهِ அல்லாஹ்வை அன்றி يَاْتِيْكُمْ உங்களுக்கு கொண்டு வருவார் بِضِيَآءٍؕ ஒளியை اَفَلَا تَسْمَعُوْنَ செவிமடுக்க மாட்டீர்களா?
28:71. குல் அர'அய்தும் இன் ஜ'அலல் லாஹு 'அலய்குமுல் லய்ல ஸர்மதன் இலா யவ்மில் கியாமதி மன் இலாஹுன் கய்ருல் லாஹி யா தீகும் Bபிளியா'இன் அFபலா தஸ்ம'ஊன்
28:71. (நபியே!) நீர் கூறுவீராக: "மறுமை நாள் வரை அல்லாஹ் உங்கள் மீது இரவை நிரந்தரமாக இருக்கும்படிச் செய்துவிட்டால் அல்லாஹ்வையன்றி உங்களுக்கு (பகலின்) வெளிச்சத்தைக் கொண்டுவரக்கூடிய கடவுள் யார்? என்பதை நீங்கள் (சிந்தித்துப்) பார்த்தீர்களா? (இவ்வுண்மையை) நீங்கள் செவியேற்க வேண்டாமா?"
28:72 قُلْ اَرَءَيْتُمْ اِنْ جَعَلَ اللّٰهُ عَلَيْكُمُ النَّهَارَ سَرْمَدًا اِلٰى يَوْمِ الْقِيٰمَةِ مَنْ اِلٰـهٌ غَيْرُ اللّٰهِ يَاْتِيْكُمْ بِلَيْلٍ تَسْكُنُوْنَ فِيْهِؕ اَفَلَا تُبْصِرُوْنَ
قُلْ கூறுவீராக! اَرَءَيْتُمْ நீங்கள் அறிவியுங்கள் اِنْ جَعَلَ ஆக்கிவிட்டால் اللّٰهُ அல்லாஹ் عَلَيْكُمُ உங்கள் மீது النَّهَارَ பகலை سَرْمَدًا நிரந்தரமாக اِلٰى வரை يَوْمِ الْقِيٰمَةِ மறுமை நாள் مَنْ எந்த اِلٰـهٌ (வேறு) ஒரு கடவுள் غَيْرُ اللّٰهِ அல்லாஹ்வை அன்றி يَاْتِيْكُمْ உங்களுக்கு கொண்டு வருவான் بِلَيْلٍ இரவை تَسْكُنُوْنَ فِيْهِؕ அதில் நீங்கள் ஓய்வு எடுக்கின்றீர்கள் اَفَلَا تُبْصِرُوْنَ நீங்கள் பார்க்க மாட்டீர்களா?
28:72. குல் அர'அய்தும் இன் ஜ'அலல் லாஹு 'அலய்குமுன் னஹார ஸர்மதன் இலா யவ்மில் கியாமதி மன் இலாஹுன் கய்ருல் லாஹி யாதீகும் Bபிலய்லின் தஸ்குனூன Fபீஹி அFபலா துBப்ஸிரூன்
28:72. "மறுமை நாள்வரை உங்கள்மீது அல்லாஹ் பகலை நிரந்தரமாக இருக்கும்படிச் செய்துவிட்டால், நீங்கள் எதில் ஓய்வு பெறுகிறீர்களோ அந்த இரவை அல்லாஹ்வையன்றி உங்களுக்குக் கொண்டுவரும் கடவுள் யார்? என்பதை நீங்கள் (சிந்தித்துப்) பார்த்தீர்களா? (இவ்வுண்மையை) நீங்கள் நோக்கவேண்டாமா?" என்று கூறுவீராக!
28:73 وَمِنْ رَّحْمَتِهٖ جَعَلَ لَـكُمُ الَّيْلَ وَالنَّهَارَ لِتَسْكُنُوْا فِيْهِ وَلِتَبْتَغُوْا مِنْ فَضْلِهٖ وَلَعَلَّكُمْ تَشْكُرُوْنَ
وَمِنْ رَّحْمَتِهٖ அவன் தனது கருணையினால் جَعَلَ ஆக்கினான் لَـكُمُ உங்களுக்கு الَّيْلَ இரவை وَالنَّهَارَ இன்னும் பகலை لِتَسْكُنُوْا நீங்கள் ஓய்வு எடுப்பதற்காக فِيْهِ அதில் وَلِتَبْتَغُوْا இன்னும் நீங்கள் தேடுவதற்காக مِنْ فَضْلِهٖ அவனுடைய அருளை وَلَعَلَّكُمْ تَشْكُرُوْنَ இன்னும் நீங்கள் நன்றி செலுத்துவதற்காக
28:73. வ மிர் ரஹ்மதிஹீ ஜ'அல லகுமுல் லய்ல வன்னஹார லிதஸ்குனூ Fபீஹி வ லிதBப்தகூ மின் Fபள்லிஹீ வ ல'அல்லகும் தஷ்குரூன்
28:73. இன்னும், அவன் தன் அருளினால் உங்களுக்கு இரவையும் பகலையும் உண்டாக்கினான்; நீங்கள் அதில் (- இரவில்) ஓய்வு பெறும் பொருட்டும், நீங்கள் அதில் (- பகலில்) அவன் அருளைத் தேடும் பொருட்டும், (உண்டாக்கினான்; இதற்காக அவனுக்கு) நீங்கள் நன்றி செலுத்துவீர்களாக!
28:74 وَيَوْمَ يُنَادِيْهِمْ فَيَـقُوْلُ اَيْنَ شُرَكَآءِىَ الَّذِيْنَ كُنْتُمْ تَزْعُمُوْنَ
وَيَوْمَ நாளில் يُنَادِيْهِمْ அவன் அவர்களை அழைப்பான் فَيَـقُوْلُ அவன் கேட்பான் اَيْنَ எங்கே? شُرَكَآءِىَ எனது இணைகள் الَّذِيْنَ كُنْتُمْ تَزْعُمُوْنَ எவர்கள்/நீங்கள் சொல்லிக் கொண்டிருந்தீர்கள்
28:74. வ யவ்ம யுனாதீஹிம் Fப யகூலு அய்ன ஷுரகா'இயல் லதீன குன்தும் தZஜ்Zஜ்'உமூன்
28:74. இன்னும், அவன் (அல்லாஹ்) அவர்களை அழைக்கும் நாளில்: "எனக்கு இணையானவர்கள் என்று நீங்கள் எண்ணியிருந்தீர்களே அவர்கள் எங்கே?" என்று கேட்பான்.
28:75 وَنَزَعْنَا مِنْ كُلِّ اُمَّةٍ شَهِيْدًا فَقُلْنَا هَاتُوْا بُرْهَانَكُمْ فَعَلِمُوْۤا اَنَّ الْحَـقَّ لِلّٰهِ وَضَلَّ عَنْهُمْ مَّا كَانُوْا يَفْتَرُوْنَ
وَنَزَعْنَا நாம் கொண்டு வருவோம் مِنْ كُلِّ ஒவ்வொரு اُمَّةٍ சமுதாயத்திலிருந்து شَهِيْدًا ஒரு சாட்சியாளரை فَقُلْنَا பிறகு, கூறுவோம் هَاتُوْا கொண்டு வாருங்கள் بُرْهَانَكُمْ உங்கள் ஆதாரங்களை فَعَلِمُوْۤا அறிந்துகொள்வார்கள் اَنَّ நிச்சயமாக الْحَـقَّ உண்மை لِلّٰهِ அல்லாஹ்விற்கே وَضَلَّ தவறிவிடும் عَنْهُمْ அவர்களை விட்டு مَّا كَانُوْا يَفْتَرُوْنَ அவர்கள் பொய்யாக கற்பனைசெய்து கொண்டிருந்தவை
28:75. வ னZஜஃனா மின் குல்லி உம்மதின் ஷஹீதன் Fபகுல்னா ஹாதூ Bபுர்ஹானகும் Fப'அலிமூ அன்னல் ஹக்க லில்லாஹி வ ளல்ல 'அன்ஹும் மா கானூ யFப்தரூன்
28:75. இன்னும், நாம் ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் ஒரு சாட்சியை வெளிப்படுத்துவோம்; பிறகு (நிராகரிப்பாளர்களை நோக்கி) "உங்கள் ஆதாரத்தைக் கொண்டுவாருங்கள்" என்று கூறுவோம்; அப்பொழுது அவர்கள் சத்தியமென்பது அல்லாஹ்வுக்கே சொந்தமென்றும், அவர்கள் இட்டுக்கட்டியவையெல்லாம் அவர்களை விட்டும் மறைந்துவிடும் என்றும் அறிந்து கொள்வார்கள்.
28:76 اِنَّ قَارُوْنَ كَانَ مِنْ قَوْمِ مُوْسٰى فَبَغٰى عَلَيْهِمْ وَاٰتَيْنٰهُ مِنَ الْكُنُوْزِ مَاۤ اِنَّ مَفَاتِحَهٗ لَـتَـنُوْٓاُ بِالْعُصْبَةِ اُولِى الْقُوَّةِ اِذْ قَالَ لَهٗ قَوْمُهٗ لَا تَفْرَحْ اِنَّ اللّٰهَ لَا يُحِبُّ الْفَرِحِيْنَ
اِنَّ நிச்சயமாக قَارُوْنَ காரூன் كَانَ இருந்தான் مِنْ قَوْمِ சமுதாயத்தில் مُوْسٰى மூஸாவின் فَبَغٰى அநியாயம் புரிந்தான் عَلَيْهِمْ அவர்கள் மீது وَاٰتَيْنٰهُ அவனுக்கு நாம் கொடுத்தோம் مِنَ الْكُنُوْزِ பொக்கிஷங்களிலிருந்து مَاۤ எவை اِنَّ நிச்சயமாக مَفَاتِحَهٗ அவற்றின் சாவிகள் لَـتَـنُوْٓاُ சிரமத்தோடு சுமக்கும் بِالْعُصْبَةِ اُولِى الْقُوَّةِ பலமுள்ள கூட்டம் اِذْ அந்த சமயத்தை (நினைவு கூறுங்கள்) قَالَ கூறினர் لَهٗ அவனுக்கு قَوْمُهٗ அவனுடைய மக்கள் لَا تَفْرَحْ பெருமிதம் கொள்ளாதே! اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் لَا يُحِبُّ நேசிக்க மாட்டான் الْفَرِحِيْنَ பெருமிதப்படுவோரை
28:76. இன்ன காரூன கான மின் கவ்மி மூஸா FபBபகா 'அலய்ஹிம் வ ஆதய்னாஹு மினல் குனூZஜி மா இன்ன மFபாதி ஹஹூ லதனூ'உ Bபில்'உஸ்Bபதி உலில் குவ்வதி இத் கால லஹூ கவ்முஹூ லா தFப்ரஹ் இன்னல் லாஹா லா யுஹிBப்Bபுல் Fபரிஹீன்
28:76. நிச்சயமாக, 'காரூன்' மூஸாவின் சமூகத்தைச் சேர்ந்தவனாக இருந்தான்; எனினும், அவர்கள் மீது அவன் அட்டூழியம் செய்தான்; அவனுக்கு நாம் ஏராளமான கருவூலங்களைக் கொடுத்திருந்தோம்; நிச்சயமாக அவற்றின் சாவிகள் பலமுள்ள ஒரு கூட்டத்தாருக்கும் பளுவாக இருந்தன; அப்பொழுது அவனுடைய கூட்டத்தார் அவனிடம், "நீ (இதனால் பெருமைகொண்டு) ஆணவம் கொள்ளாதே! நிச்சயமாக அல்லாஹ் (அவ்வாறு) ஆணவம் கொள்பவர்களை நேசிக்கமாட்டான்" என்று கூறினார்கள்.
28:77 وَابْتَغِ فِيْمَاۤ اٰتٰٮكَ اللّٰهُ الدَّارَ الْاٰخِرَةَ وَلَا تَنْسَ نَصِيْبَكَ مِنَ الدُّنْيَا وَاَحْسِنْ كَمَاۤ اَحْسَنَ اللّٰهُ اِلَيْكَ وَلَا تَبْغِ الْـفَسَادَ فِى الْاَرْضِؕ اِنَّ اللّٰهَ لَا يُحِبُّ الْمُفْسِدِيْنَ
وَابْتَغِ தேடிக்கொள்! فِيْمَاۤ اٰتٰٮكَ உமக்கு வழங்கியவற்றில் اللّٰهُ அல்லாஹ் الدَّارَ வீட்டை الْاٰخِرَةَ மறுமை وَلَا تَنْسَ மறந்து விடாதே! نَصِيْبَكَ உனது பங்கை مِنَ الدُّنْيَا உலகத்திலிருந்து وَاَحْسِنْ நீ நன்மை செய்! كَمَاۤ போன்று اَحْسَنَ நன்மை செய்தான் اللّٰهُ அல்லாஹ் اِلَيْكَ உனக்கு وَلَا تَبْغِ இன்னும் விரும்பாதே الْـفَسَادَ கலகம் செய்வதை, குழப்பத்தை فِى الْاَرْضِؕ பூமியில் اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் لَا يُحِبُّ நேசிக்க மாட்டான் الْمُفْسِدِيْنَ குழப்பம் செய்வோரை
28:77. வBப்தகி Fபீமா ஆதாகல் லாஹுத் தாரல் ஆகிரத வலா தன்ஸ னஸீBபக மினத் துன்யா வ அஹ்ஸின் கமா அஹ்ஸனல் லாஹு இலய்க வலா தBப்கில் Fபஸாத Fபில் அர்ளி இன்னல் லாஹ லா யுஹிBப்Bபுல் முFப்ஸிதீன்
28:77. மேலும், "அல்லாஹ் உனக்குக் கொடுத்த (செல்வத்)திலிருந்து மறுமை வீட்டைத் தேடிக்கொள்! எனினும், இவ்வுலகத்தில் உன் பங்கை நீ மறந்துவிடாதே! அல்லாஹ் உனக்கு நல்லதைச் செய்திருப்பதைப் போல் நீயும் நல்லதை செய்! இன்னும், பூமியில் குழப்பம் செய்ய விரும்பாதே! நிச்சயமாக அல்லாஹ் குழப்பம் செய்பவர்களை நேசிப்பதில்லை" (என்றும் கூறினார்கள்).
28:78 قَالَ اِنَّمَاۤ اُوْتِيْتُهٗ عَلٰى عِلْمٍ عِنْدِىْؕ اَوَلَمْ يَعْلَمْ اَنَّ اللّٰهَ قَدْ اَهْلَكَ مِنْ قَبْلِهٖ مِنَ الْقُرُوْنِ مَنْ هُوَ اَشَدُّ مِنْهُ قُوَّةً وَّاَكْثَرُ جَمْعًاؕ وَلَا يُسْـٴَــلُ عَنْ ذُنُوْبِهِمُ الْمُجْرِمُوْنَ
قَالَ அவன் கூறினான் اِنَّمَاۤ اُوْتِيْتُهٗ இதை நான் வழங்கப்பட்டதெல்லாம் عَلٰى عِلْمٍ அறிவினால்தான் عِنْدِىْؕ என்னிடம் உள்ள اَوَلَمْ يَعْلَمْ அவன் அறியவில்லையா? اَنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் قَدْ اَهْلَكَ அழித்திருக்கிறான் என்பதை مِنْ قَبْلِهٖ இவனுக்கு முன்னர் مِنَ الْقُرُوْنِ பல தலைமுறையினர்களில் مَنْ யார்? هُوَ அவர் اَشَدُّ மிக்க கடினமானவர் مِنْهُ இவனைவிட قُوَّةً பலத்தால் وَّاَكْثَرُ மிக அதிகமானவர் جَمْعًاؕ சேகரிப்பதில் وَلَا يُسْـٴَــلُ விசாரிக்கப்பட மாட்டார்கள் عَنْ ذُنُوْبِهِمُ தங்கள் குற்றங்களைப் பற்றி الْمُجْرِمُوْنَ குற்றவாளிகள்
28:78. கால இன்னமா ஊதீ துஹூ 'அலா 'இல்மின் 'இன்தீ; அவலம் யஃலம் அன்னல் லாஹ கத் அஹ்லக மின் கBப்லிஹீ மினல் குரூனி மன் ஹுவ அஷத்து மின்ஹு குவ்வத(ன்)வ் வ அக்தரு ஜம்'ஆ; வலா யுஸ்'அலு 'அன் துனூBபிஹிமுல் முஜ்ரிமூன்
28:78. (அதற்கு) அவன் கூறினான்: "எனக்குள்ள அறிவின் காரணத்தால்தான் இதனைக் கொடுக்கப்பட்டிருக்கிறேன்!" இவனுக்கு முன் இவனைவிட மிக்க வலிமையுடையவர்களும், இவனைவிட அதிகப்பொருள் சேகரித்து வைத்திருந்தவர்களுமான (எத்தனையோ) தலைமுறையினரை அல்லாஹ் அழித்திருக்கின்றான் என்பதை இவன் அறியவில்லையா? ஆனால், குற்றவாளிகள் - அவர்கள் செய்த பாவங்கள்பற்றி (உடனுக்குடன்) கேள்வி கேட்கப்படமாட்டார்கள்.
28:79 فَخَرَجَ عَلٰى قَوْمِهٖ فِىْ زِيْنَتِهٖؕ قَالَ الَّذِيْنَ يُرِيْدُوْنَ الْحَيٰوةَ الدُّنْيَا يٰلَيْتَ لَـنَا مِثْلَ مَاۤ اُوْتِىَ قَارُوْنُۙ اِنَّهٗ لَذُوْ حَظٍّ عَظِيْمٍ
فَخَرَجَ அவன் வெளியில் வந்தான் عَلٰى قَوْمِهٖ தனது மக்களுக்கு முன் فِىْ زِيْنَتِهٖؕ தனது அலங்காரத்தில் قَالَ கூறினார்கள் الَّذِيْنَ يُرِيْدُوْنَ விரும்புகின்றவர்கள் الْحَيٰوةَ வாழ்க்கையை الدُّنْيَا உலக يٰلَيْتَ இருக்க வேண்டுமே! لَـنَا நமக்கு مِثْلَ போன்று مَاۤ اُوْتِىَ வழங்கப்பட்டது قَارُوْنُۙ காரூனுக்கு اِنَّهٗ நிச்சயமாக அவன் لَذُوْ حَظٍّ பேருடையவன் عَظِيْمٍ பெரும்
28:79. Fபகரஜ 'அலா கவ்மிஹீ Fபீ Zஜீனதிஹ்; காலல் லதீன யுரீதூனல் ஹயாதத் துன்யா யாலய்த லனா மித்ல மா ஊதிய காரூனு இன்னஹூ லதூ ஹள்ளின் 'அளீம்
28:79. அப்பால், அவன் (கர்வத்துடன்) தன் அலங்காரத்தில் தன் சமூகத்தாரிடையே சென்றான்; (அப்போது) இவ்வுலக வாழ்க்கையை எவர்கள் விரும்புகிறார்களோ அவர்கள்: "ஆ! காரூனுக்குக் கொடுக்கப்பட்டதைப் போன்று நமக்கும் இருந்திருக்க வேண்டுமே! நிச்சயமாக அவன் மகத்தான பாக்கியமுடையவன்" என்று கூறினார்கள்.
28:80 وَقَالَ الَّذِيْنَ اُوْتُوا الْعِلْمَ وَيْلَـكُمْ ثَوَابُ اللّٰهِ خَيْرٌ لِّمَنْ اٰمَنَ وَعَمِلَ صَالِحًـا ۚ وَلَا يُلَقّٰٮهَاۤ اِلَّا الصّٰبِرُوْنَ
وَقَالَ கூறினார்(கள்) الَّذِيْنَ اُوْتُوا வழங்கப்பட்டவர்கள் الْعِلْمَ கல்வி وَيْلَـكُمْ உங்களுக்கு நாசம் உண்டாகட்டும் ثَوَابُ நற்கூலி اللّٰهِ அல்லாஹ்வின் خَيْرٌ மிகச் சிறந்ததாகும் لِّمَنْ யாருக்கு اٰمَنَ நம்பிக்கை கொண்டு وَعَمِلَ செய்பவருக்கு صَالِحًـا ۚ நன்மை وَلَا வாய்ப்பளிக்கப்பட மாட்டார்(கள்) يُلَقّٰٮهَاۤ இதற்கு اِلَّا தவிர الصّٰبِرُوْنَ பொறுமையாளர்களை
28:80. வ காலல் லதீன ஊதுல் 'இல்ம வய்லகும் தவாBபுல் லாஹி கய்ருல் லிமன் ஆமன வ 'அமில ஸாலிஹா; வலா யுலக் காஹா இல்லஸ் ஸாBபிரூன்
28:80. கல்வியறிவு கொடுக்கப்பட்டவர்களோ, உங்களுக்கென்ன கேடு! நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்பவர்களுக்கு அல்லாஹ்வுடைய வெகுமதி (இதைவிட) மேன்மையானது; எனினும், அதைப் பொறுமையாளர்களைத் தவிர (வேறு) எவரும் அடையமாட்டார்கள்" என்று கூறினார்கள்.
28:81 فَخَسَفْنَا بِهٖ وَبِدَارِهِ الْاَرْضَ فَمَا كَانَ لَهٗ مِنْ فِئَةٍ يَّـنْصُرُوْنَهٗ مِنْ دُوْنِ اللّٰهِ وَمَا كَانَ مِنَ الْمُنْتَصِرِيْنَ
فَخَسَفْنَا ஆகவே, சொருகிவிட்டோம் بِهٖ அவனையும் وَبِدَارِهِ அவனுடைய இல்லத்தையும் الْاَرْضَ பூமியில் فَمَا كَانَ ஆக, ஏதும் இல்லை لَهٗ அவனுக்கு مِنْ فِئَةٍ கூட்டம் يَّـنْصُرُوْنَهٗ அவனுக்கு உதவுகின்ற مِنْ دُوْنِ اللّٰهِ அல்லாஹ்வையன்றி وَمَا كَانَ இன்னும் அவன் இல்லை مِنَ الْمُنْتَصِرِيْنَ உதவி செய்துகொள்பவர்களில்
28:81. FபகஸFப்னா Bபிஹீ வ Bபிதாரிஹில் அர்ள Fபமா கான லஹூ மின் Fபி'அதி(ன்)ய் யன்ஸுரூ னஹூ மின் தூனில் லாஹி வமா கான மினல் முன்தஸிரீன்
28:81. ஆகவே, நாம் அவனையும் (காரூனையும்) அவன் வீட்டையும் பூமியில் புதையச் செய்தோம்; அல்லாஹ்வையன்றி அவனுக்கு உதவி செய்கிற கூட்டத்தார் எவருமில்லை; இன்னும், அவன் உதவி பெறுபவர்களிலும் இருக்கவில்லை.
28:82 وَاَصْبَحَ الَّذِيْنَ تَمَـنَّوْا مَكَانَهٗ بِالْاَمْسِ يَقُوْلُوْنَ وَيْكَاَنَّ اللّٰهَ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَّشَآءُ مِنْ عِبَادِهٖ وَيَقْدِرُۚ لَوْلَاۤ اَنْ مَّنَّ اللّٰهُ عَلَيْنَا لَخَسَفَ بِنَا ؕ وَيْكَاَنَّهٗ لَا يُفْلِحُ الْكٰفِرُوْنَ
وَاَصْبَحَ காலையில் الَّذِيْنَ تَمَـنَّوْا ஆசைப்பட்டவர்கள் مَكَانَهٗ அவனுடைய இடத்தை بِالْاَمْسِ நேற்று يَقُوْلُوْنَ கூறினர் وَيْكَاَنَّ பார்க்கவில்லையா!/நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் يَبْسُطُ விசாலமாக்குகின்றான் الرِّزْقَ வாழ்வாதாரத்தை لِمَنْ يَّشَآءُ தான் நாடியவர்களுக்கு مِنْ عِبَادِهٖ தனது அடியார்களில் وَيَقْدِرُۚ இன்னும் சுருக்கிவிடுகிறான் لَوْلَاۤ اَنْ مَّنَّ அருள் புரிந்திருக்கவில்லையென்றால் اللّٰهُ அல்லாஹ் عَلَيْنَا நம்மீது لَخَسَفَ அவன் சொருகியிருப்பான் بِنَا ؕ நம்மையும் وَيْكَاَنَّهٗ பார்க்கவில்லையா!/நிச்சயமாக لَا يُفْلِحُ வெற்றி பெறமாட்டார்கள் الْكٰفِرُوْنَ நிராகரிப்பாளர்கள்
28:82. வ அஸ்Bபஹல் லதீன தமன்னவ் மகானஹூ Bபில் அம்ஸி யகூலூன வய்க அன்னல் லாஹ யBப்ஸுதுர் ரிZஜ்க லிம(ன்)ய் ய ஷா'உ மின் 'இBபாதிஹீ வ யக்திரு லவ் லா அம் மன்னல் லாஹு 'அலய்னா லகஸFப Bபினா வய்க அன்னஹூ லா யுFப்லிஹுல் காFபிரூன்
28:82. நேற்றைய தினம் அவனுடைய (செல்வ) நிலையை விரும்பியவர்களெல்லாம், "அந்தோ நாசமே! அல்லாஹ் தன் அடியார்களில், தான் நாடியவர்களுக்கு ஆகார வசதிகளைப் பெருக்குகிறான்; சுருக்கியும் விடுகிறான்; அல்லாஹ் நமக்குக் கிருபை செய்யவில்லையாயின் அவன் நம்மையும் (பூமியில்) புதையச் செய்திருப்பான்; அந்தோ நாசமே! நிச்சயமாக நிராகரிப்பாளர்கள் வெற்றியடைய மாட்டார்கள்" என்று கூறினார்கள்.
28:83 تِلْكَ الدَّارُ الْاٰخِرَةُ نَجْعَلُهَا لِلَّذِيْنَ لَا يُرِيْدُوْنَ عُلُوًّا فِى الْاَرْضِ وَلَا فَسَادًا ؕ وَالْعَاقِبَةُ لِلْمُتَّقِيْنَ
تِلْكَ அந்த الدَّارُ இல்லமானது الْاٰخِرَةُ மறுமை نَجْعَلُهَا அதை ஆக்குவோம் لِلَّذِيْنَ لَا يُرِيْدُوْنَ விரும்பாதவர்களுக்கு عُلُوًّا அநியாயத்தையோ فِى الْاَرْضِ பூமியில் وَلَا فَسَادًا ؕ குழப்பத்தையோ وَالْعَاقِبَةُ முடிவான நற்பாக்கியம் لِلْمُتَّقِيْنَ இறையச்சமுடையவர்களுக்குத்தான் உண்டு
28:83. தில்கத் தாருல் ஆகிரது னஜ்'அலுஹா லில்லதீன லா யுரீதூன 'உலுவ்வன் Fபில் அர்ளி வலா Fபஸாதா; வல் 'ஆகிBபது லில்முத்தகீன்
28:83. அந்த மறுமையின் வீட்டை, இப்பூமியில் (தங்களைப்) பெருமைப்படுத்திக் கொள்ளவும், குழப்பத்தை உண்டாக்கவும் விரும்பாதவர்களுக்கே நாம் (சொந்தமாய்) ஆக்கி வைப்போம்; ஏனெனில், (நல்ல) முடிவு (நம்மை) அஞ்சுவோருக்குத்தான்.
28:84 مَنْ جَآءَ بِالْحَسَنَةِ فَلَهٗ خَيْرٌ مِّنْهَا ۚ وَمَنْ جَآءَ بِالسَّيِّئَةِ فَلَا يُجْزَى الَّذِيْنَ عَمِلُوا السَّيِّاٰتِ اِلَّا مَا كَانُوْا يَعْمَلُوْنَ
مَنْ எவர் جَآءَ வருவாரோ بِالْحَسَنَةِ நன்மையைக்கொண்டு فَلَهٗ அவருக்கு خَيْرٌ நற்கூலி கிடைக்கும் مِّنْهَا ۚ அதனால் وَمَنْ எவர்கள் جَآءَ வருவார்களோ بِالسَّيِّئَةِ தீமையைக் கொண்டு فَلَا يُجْزَى கூலி கொடுக்கப்பட மாட்டார்(கள்) الَّذِيْنَ عَمِلُوا செய்தவர்கள் السَّيِّاٰتِ தீமைகளை اِلَّا தவிர مَا كَانُوْا يَعْمَلُوْنَ அவர்கள் செய்து கொண்டிருந்ததற்கே
28:84. மன் ஜா'அ Bபில்ஹஸனதி Fபலஹூ கய்ரும் மின்ஹா வ மன் ஜா'அ Bபிஸ்ஸய்யி'அதி Fபலா யுஜ்Zஜல் லதீன 'அமிலுஸ் ஸய்யிஆதி இல்லா மா கானூ யஃமலூன்
28:84. எவரேனும் நன்மையைக் கொண்டுவந்தால் அவருக்கு அதைவிட மேலானது உண்டு; எவன் தீமையைக் கொண்டுவருகிறானோ (அப்போது) தீமைகளைச் செய்தோர் - அவர்கள் செய்து கொண்டிருந்ததைத் தவிர (வேறெதுவும்) கூலியாக வழங்கப்படமாட்டார்கள்.
28:85 اِنَّ الَّذِىْ فَرَضَ عَلَيْكَ الْقُرْاٰنَ لَرَآدُّكَ اِلٰى مَعَادٍ ؕ قُلْ رَّبِّىْۤ اَعْلَمُ مَنْ جَآءَ بِالْهُدٰى وَمَنْ هُوَ فِىْ ضَلٰلٍ مُّبِيْنٍ
اِنَّ நிச்சயமாக الَّذِىْ فَرَضَ இறக்கியவன் عَلَيْكَ உம்மீது الْقُرْاٰنَ குர்ஆனை لَرَآدُّكَ உம்மை திரும்பக்கொண்டு வருவான் اِلٰى مَعَادٍ ؕ வழமைக்கு قُلْ கூறுவீராக! رَّبِّىْۤ என் இறைவன் اَعْلَمُ மிக அறிந்தவன் مَنْ جَآءَ கொண்டு வந்தவரையும் بِالْهُدٰى நேர்வழியை وَمَنْ هُوَ இருப்பவரையும் فِىْ ضَلٰلٍ வழிகேட்டில் مُّبِيْنٍ தெளிவான
28:85. இன்னல் லதீ Fபரள 'அலய்கல் குர்ஆன லராத்துக இலா ம'ஆத்; குர் ரBப்Bபீ அஃலமு மன் ஜா'அ Bபில் ஹுதா வ மன் ஹுவ Fபீ ளலாலிம் முBபீன்
28:85. (நபியே!) நிச்சயமாக எவன் இந்தக் குர்ஆனை உம்மீது விதியாக்கினானோ, அவன் நிச்சயமாக உம்மைத் திருப்பிக் கொண்டுவந்து (மக்கா என்னும்) அம்மீளுமிடத்தில் சேர்ப்பிப்பான்; "என் இறைவன், நேர்வழியைக் கொண்டுவந்திருப்பவர் யார்? இன்னும், வெளிப்படையான வழிகேட்டில் இருப்பவர் யார்? என்பதை நன்கறிந்தவன்" என்று நீர் கூறுவீராக!
28:86 وَمَا كُنْتَ تَرْجُوْۤا اَنْ يُّلْقٰٓى اِلَيْكَ الْكِتٰبُ اِلَّا رَحْمَةً مِّنْ رَّبِّكَ فَلَا تَكُوْنَنَّ ظَهِيْرًا لِّـلْكٰفِرِيْنَ
وَمَا كُنْتَ تَرْجُوْۤا நீர் எதிர்பார்த்திருக்கவில்லை اَنْ يُّلْقٰٓى இறக்கப்படுவதை اِلَيْكَ உமக்கு الْكِتٰبُ இந்த வேதம் اِلَّا என்றாலும் رَحْمَةً கருணையினால்தான் مِّنْ رَّبِّكَ உமது இறைவனின் فَلَا تَكُوْنَنَّ ஆகவே நீர் அறவே ஆகிவிடாதீர் ظَهِيْرًا உதவியாளராக لِّـلْكٰفِرِيْنَ நிராகரிப்பாளர்களுக்கு
28:86. வமா குன்த தர்ஜூ அய் யுல்கா இலய்கல் கிதாBபு இல்லா ரஹ்மதன் மிர் ரBப்Bபிக Fபலா தகூனன்ன ளஹீரல் லில் காFபிரீன்
28:86. இன்னும், உம்முடைய இறைவனிடமுள்ள அருளினாலன்றி இவ்வேதம் உமக்குக் கொடுக்கப்படும் என்று நீர் எதிர்பார்க்கவில்லை; எனவே, நிராகரிப்பவர்களுக்கு உதவியாளராக நிச்சயமாக நீர் இருக்காதீர்.
28:87 وَلَا يَصُدُّنَّكَ عَنْ اٰيٰتِ اللّٰهِ بَعْدَ اِذْ اُنْزِلَتْ اِلَيْكَ وَادْعُ اِلٰى رَبِّكَ وَلَا تَكُوْنَنَّ مِنَ الْمُشْرِكِيْنَۚ
وَلَا يَصُدُّنَّكَ உம்மை அவர்கள் திருப்பி விடவேண்டாம் عَنْ اٰيٰتِ வசனங்களை விட்டு اللّٰهِ அல்லாஹ்வின் بَعْدَ பின்னர் اِذْ اُنْزِلَتْ அவை இறக்கப்பட்டதன் اِلَيْكَ உமக்கு وَادْعُ அழைப்பீராக اِلٰى பக்கம் رَبِّكَ உமது இறைவன் وَلَا تَكُوْنَنَّ இன்னும் நீர் ஒருபோதும் ஆகிவிடாதீர் مِنَ الْمُشْرِكِيْنَۚ இணைவைப்பவர்களில்
28:87. வ லா யஸுத்துன்னக 'அன் ஆயாதில் லாஹி Bபஃத இத் உன்Zஜிலத் இலய்க வத்'உ இலா ரBப்Bபிக வலா தகூனன்ன மினல் முஷ்ரிகீன்
28:87. இன்னும், அல்லாஹ்வின் வசனங்கள் உமக்கு அருளப்பட்டதன் பின், எதுவும் அவற்றைவிட்டும் நிச்சயமாக அவர்கள் உம்மைத் தடுத்துவிட வேண்டாம்; மேலும், நீர் உம்முடைய இறைவன்பால் (அவர்களை) அழைப்பீராக! நிச்சயமாக நீர் இணைவைப்போரில் ஒருவராகிவிட வேண்டாம்.
28:88 وَلَا تَدْعُ مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَۘ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ كُلُّ شَىْءٍ هَالِكٌ اِلَّا وَجْهَهٗؕ لَـهُ الْحُكْمُ وَاِلَيْهِ تُرْجَعُوْنَ
وَلَا تَدْعُ இன்னும் அழைத்துவிடாதீர் ! مَعَ اللّٰهِ அல்லாஹ்வுடன் اِلٰهًا ஒரு கடவுளை اٰخَرَۘ வேறு لَاۤ இல்லவே இல்லை اِلٰهَ வணக்கத்திற்குரிய கடவுள் اِلَّا தவிர هُوَ அவனை كُلُّ எல்லா شَىْءٍ பொருள்களும் هَالِكٌ அழியக்கூடியவையே اِلَّا தவிர وَجْهَهٗؕ அவனது முகத்தை لَـهُ அவனுக்கே உரியது الْحُكْمُ அதிகாரம் وَاِلَيْهِ அவனிடமே تُرْجَعُوْنَ நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்
28:88. வ லா தத்'உ ம'அல் லாஹி இலாஹன் ஆகர்; லா இலாஹ இல்லா ஹூ; குல்லு ஷய்'இன் ஹாலிகுன் இல்லா வஜ்ஹஹ்; லஹுல் ஹுக்க்மு வ இலய்ஹி துர்ஜ'ஊன்
28:88. அல்லாஹ்வுடன் வேறொரு தெய்வத்தையும் அழைக்காதீர்; அவனைத் தவிர வேறு கடவுள் இல்லை; அவனது முகத்தைத் தவிர எல்லாப் பொருட்களும் அழிந்துவிடுபவையேயாகும்; அவனுக்கே எல்லா அதிகாரமும் உரியது; இன்னும், அவனிடமே நீங்கள் (யாவரும்) திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.