52. ஸூரத்துத் தூர் (மலை)
மக்கீ, வசனங்கள்: 49

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
52:1
52:1 وَالطُّوْرِۙ‏
وَالطُّوْرِۙ‏ தூர் மலையின் மீது சத்தியமாக!
52:1. தூர் (மலை) மீது சத்தியமாக!
52:2
52:2 وَكِتٰبٍ مَّسْطُوْرٍۙ‏
وَكِتٰبٍ புத்தகத்தின் மீது சத்தியமாக! مَّسْطُوْرٍۙ‏ எழுதப்பட்டது
52:2. எழுதப்பட்ட வேதத்தின் மீது சத்தியமாக!
52:3
52:3 فِىْ رَقٍّ مَّنْشُوْرٍۙ‏
فِىْ رَقٍّ காகிதத்தில் مَّنْشُوْرٍۙ‏ விரிக்கப்பட்டது
52:3. விரித்து வைக்கப்பட்ட ஏட்டில்- 
52:4
52:4 وَالْبَيْتِ الْمَعْمُوْرِۙ‏
وَالْبَيْتِ ஆலயத்தின் மீது சத்தியமாக! الْمَعْمُوْرِۙ‏ செழிப்பான(து)
52:4. பைத்துல் மஃமூர் மீது சத்தியமாக!
52:5
52:5 وَالسَّقْفِ الْمَرْفُوْعِۙ‏
وَالسَّقْفِ முகட்டின் மீது சத்தியமாக! الْمَرْفُوْعِۙ‏ உயர்த்தப்பட்ட(து)
52:5. உயர்த்தப்பட்ட முகட்டின் மீது சத்தியமாக!
52:6
52:6 وَالْبَحْرِ الْمَسْجُوْرِۙ‏
وَالْبَحْرِ கடலின் மீது சத்தியமாக! الْمَسْجُوْرِۙ‏ நீரால் நிரம்பிய(து)
52:6. பொங்கும் கடலின் மீது சத்தியமாக!
52:7
52:7 اِنَّ عَذَابَ رَبِّكَ لَوَاقِعٌ ۙ‏
اِنَّ நிச்சயமாக عَذَابَ தண்டனை رَبِّكَ உமது இறைவனின் لَوَاقِعٌ ۙ‏ நிகழ்ந்தே தீரும்
52:7. நிச்சயமாக உம்முடைய இறைவன் (விதித்திருக்கும்) வேதனை சம்பவிக்கும்.
52:8
52:8 مَّا لَهٗ مِنْ دَافِعٍۙ‏
مَّا لَهٗ இல்லை/அதை مِنْ دَافِعٍۙ‏ தடுப்பவர்
52:8. அதனைத் தடுப்பவர் எவருமில்லை.
52:9
52:9 يَّوْمَ تَمُوْرُ السَّمَآءُ مَوْرًا ۙ‏
يَّوْمَ تَمُوْرُ நாளில்/குலுங்குகின்ற السَّمَآءُ مَوْرًا ۙ‏ வானம்/குலுங்குதல்
52:9. வானம் துடித்துச் சுற்றிக் குமுறும் நாளில்;
52:10
52:10 وَّتَسِيْرُ الْجِبَالُ سَيْرًا ؕ‏
وَّتَسِيْرُ இன்னும் செல்லும் الْجِبَالُ மலைகள் سَيْرًا ؕ‏ செல்வது
52:10. இன்னும், மலைகள் தூள் தூளாகி விடும் போது,
52:11
52:11 فَوَيْلٌ يَّوْمَٮِٕذٍ لِّـلْمُكَذِّبِيْنَۙ‏
فَوَيْلٌ ஆகவே நாசம்தான் يَّوْمَٮِٕذٍ அந்நாளில் لِّـلْمُكَذِّبِيْنَۙ‏ பொய்ப்பிப்பவர்களுக்கு
52:11. (சன்மார்க்கத்தை எதிர்த்து அதைப்) பொய்யாக்கிக் கொண்டிருந்தோருக்கு அந்நாளில் கேடுதான்.
52:12
52:12 الَّذِيْنَ هُمْ فِىْ خَوْضٍ يَّلْعَبُوْنَ‌ۘ‏
الَّذِيْنَ هُمْ எவர்கள்/அவர்கள் فِىْ خَوْضٍ குழப்பத்தில் இருந்துகொண்டு يَّلْعَبُوْنَ‌ۘ‏ விளையாடுகிறார்கள்
52:12. எவர்கள் (பொய்யானவற்றில்) மூழ்கி விளையாடிக் கொண்டிருக்கின்றனரோ,
52:13
52:13 يَوْمَ يُدَعُّوْنَ اِلٰى نَارِ جَهَنَّمَ دَعًّاؕ‏
يَوْمَ நாளில் يُدَعُّوْنَ அவர்கள் தள்ளப்படுகின்ற(னர்) اِلٰى نَارِ جَهَنَّمَ நரக நெருப்பின் பக்கம் دَعًّاؕ‏ தள்ளப்படுதல்
52:13. அந்நாளில் அவர்கள் நரக நெருப்பின் பால் இழுக்கப்படுவோராக இழுக்கப்படுவர்.
52:14
52:14 هٰذِهِ النَّارُ الَّتِىْ كُنْتُمْ بِهَا تُكَذِّبُوْنَ‏
هٰذِهِ النَّارُ இது/நெருப்பு الَّتِىْ كُنْتُمْ எது/நீங்கள் இருந்தீர்கள் بِهَا تُكَذِّبُوْنَ‏ அதை/பொய்ப்பிப்பவர்களாக
52:14. அந்நாளில்: (அவர்களுக்குக் கூறப்படும்:) “நீங்கள் பொய்யாக்கிக் கொண்டிருந்த (நரக) நெருப்பு இதுதான்.
52:15
52:15 اَفَسِحْرٌ هٰذَاۤ اَمْ اَنْتُمْ لَا تُبْصِرُوْنَ‌ۚ‏
اَفَسِحْرٌ என்ன சூனியமா? هٰذَاۤ இது اَمْ اَنْتُمْ ?/நீங்கள் لَا تُبْصِرُوْنَ‌ۚ‏ பார்க்கவில்லையா
52:15. “இது சூனியம் தானா? அல்லது பார்க்க முடியாது (குருடர்களாக) ஆகிவிட்டீர்களா?
52:16
52:16 اِصْلَوْهَا فَاصْبِرُوْۤا اَوْ لَا تَصْبِرُوْا‌ۚ سَوَآءٌ عَلَيْكُمْ‌ؕ اِنَّمَا تُجْزَوْنَ مَا كُنْتُمْ تَعْمَلُوْنَ‏
اِصْلَوْهَا இதில் எரிந்து பொசுங்குங்கள்! فَاصْبِرُوْۤا பொறுமையாக இருங்கள்! اَوْ அல்லது لَا تَصْبِرُوْا‌ۚ பொறுக்காதீர்கள்! سَوَآءٌ இரண்டும் சமம்தான் عَلَيْكُمْ‌ؕ உங்களுக்கு اِنَّمَا تُجْزَوْنَ நீங்கள் கூலி கொடுக்கப்படுவதெல்லாம் مَا كُنْتُمْ تَعْمَلُوْنَ‏ நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்குத்தான்
52:16. “நீங்கள் அதில் நுழையுங்கள்; பிறகு நீங்கள் (அதன் வேதனையைச்) சகித்துக் கொள்ளுங்கள்; அல்லது சகித்துக் கொள்ளாதிருங்கள்; (இரண்டும்) உங்களுக்குச் சமமே; நிச்சயமாக நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றிற்காகத்தான் நீங்கள் கூலி கொடுக்கப்படுகிறீர்கள்.”
52:17
52:17 اِنَّ الْمُتَّقِيْنَ فِىْ جَنّٰتٍ وَّنَعِيْمٍۙ‏
اِنَّ நிச்சயமாக الْمُتَّقِيْنَ இறையச்சமுடையவர்கள் فِىْ جَنّٰتٍ சொர்க்கங்களிலும் وَّنَعِيْمٍۙ‏ இன்பங்களிலும்
52:17. நிச்சயமாக, பயபக்தியுடையவர்கள் சுவர்க்கச் சோலைகளிலும், (இறையருளில்) இன்புற்றும் இருப்பார்கள்.
52:18
52:18 فٰكِهِيْنَ بِمَاۤ اٰتٰٮهُمْ رَبُّهُمْ‌ۚ وَوَقٰٮهُمْ رَبُّهُمْ عَذَابَ الْجَحِيْمِ‏
فٰكِهِيْنَ அவர்களிடம் பழங்கள் بِمَاۤ اٰتٰٮهُمْ அவர்களுக்கு வழங்கியதால் رَبُّهُمْ‌ۚ அவர்களின் இறைவன் وَوَقٰٮهُمْ இன்னும் அவர்களை பாதுகாப்பான் رَبُّهُمْ அவர்களின் இறைவன் عَذَابَ الْجَحِيْمِ‏ நரக வேதனையை விட்டும்
52:18. அவர்களுடைய இறைவன் அவர்களுக்கு அளித்ததை அனுபவித்தவர்களாகயிருப்பார்கள் - அன்றியும், அவர்களுடைய இறைவன் நரக வேதனையிலிருந்து அவர்களைப் பாதுகாத்துக் கொண்டான்.
52:19
52:19 كُلُوْا وَاشْرَبُوْا هَـنِٓـيـْئًا ۢ بِمَا كُنْـتُمْ تَعْمَلُوْنَۙ‏
كُلُوْا உண்ணுங்கள் وَاشْرَبُوْا இன்னும் பருகுங்கள் هَـنِٓـيـْئًا ۢ மகிழ்ச்சியாக بِمَا كُنْـتُمْ تَعْمَلُوْنَۙ‏ நீங்கள் செய்துகொண்டிருந்த காரணத்தால்
52:19. (அவர்களுக்குக் கூறப்படும்:) “நீங்கள் (நன்மைகளைச்) செய்து கொண்டிருந்ததற்காக, (சுவர்க்கத்தில்) தாராளமாகப் புசியுங்கள், பருகுங்கள்.”
52:20
52:20 مُتَّكِـــِٕيْنَ عَلٰى سُرُرٍ مَّصْفُوْفَةٍ‌ ۚ وَزَوَّجْنٰهُمْ بِحُوْرٍ عِيْنٍ‏
مُتَّكِـــِٕيْنَ சாய்ந்தவர்களாக இருப்பார்கள் عَلٰى سُرُرٍ கட்டில்களில் مَّصْفُوْفَةٍ‌ ۚ வரிசையாக வைக்கப்பட்ட தலையணைகளில் وَزَوَّجْنٰهُمْ அவர்களுக்கு நாம் மணமுடித்துவைப்போம் بِحُوْرٍ عِيْنٍ‏ கண்ணழகிகளான கருவிழிகளுடைய பெண்களை
52:20. அணி அணியாகப் போடப்பட்ட மஞ்சங்களின் மீது சாய்ந்தவர்களாக அவர்கள் இருப்பார்கள்; மேலும், நாம் அவர்களுக்கு, நீண்ட கண்களையுடைய (ஹூருல் ஈன்களை) மணம் முடித்து வைப்போம்.
52:21
52:21 وَالَّذِيْنَ اٰمَنُوْا وَاتَّبَعَتْهُمْ ذُرِّيَّتُهُمْ بِاِيْمَانٍ اَلْحَـقْنَا بِهِمْ ذُرِّيَّتَهُمْ وَمَاۤ اَلَـتْنٰهُمْ مِّنْ عَمَلِهِمْ مِّنْ شَىْءٍ‌ؕ كُلُّ امْرِیءٍۢ بِمَا كَسَبَ رَهِيْنٌ‏
وَالَّذِيْنَ எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டார்களோ وَاتَّبَعَتْهُمْ இன்னும் அவர்களைப் பின்பற்றினார்களோ ذُرِّيَّتُهُمْ அவர்களின் சந்ததிகளும் بِاِيْمَانٍ இறை நம்பிக்கையில் اَلْحَـقْنَا بِهِمْ அவர்களுடன் சேர்த்து வைப்போம் ذُرِّيَّتَهُمْ அவர்களின் சந்ததிகளை وَمَاۤ اَلَـتْنٰهُمْ அவர்களுக்கு நாம் குறைக்க மாட்டோம் مِّنْ عَمَلِهِمْ அவர்களின் அமல்களில் مِّنْ شَىْءٍ‌ؕ எதையும் كُلُّ امْرِیءٍۢ ஒவ்வொரு/மனிதனும் بِمَا كَسَبَ தான் செய்த செயலுக்காக رَهِيْنٌ‏ தடுத்து வைக்கப்பட்டிருப்பான்
52:21. எவர்கள் ஈமான் கொண்டு, அவர்களுடைய சந்ததியாரும் ஈமானில் அவர்களைப் பின் தொடர்கிறார்களோ, அவர்களுடைய அந்த சந்ததியினரை அவர்களுடன் (சுவனத்தில் ஒன்று) சேர்த்து விடுவோம். (இதனால்) அவர்களுடைய செயல்களில் எந்த ஒன்றையும், நாம் அவர்களுக்குக் குறைத்து விட மாட்டோம் - ஒவ்வொரு மனிதனும் தான் சம்பாதித்த செயல்களுக்குப் பிணையாக இருக்கின்றான்.
52:22
52:22 وَاَمْدَدْنٰهُمْ بِفَاكِهَةٍ وَّلَحْمٍ مِّمَّا يَشْتَهُوْنَ‏
وَاَمْدَدْنٰهُمْ நாம் இவர்களுக்கு கொடுத்துக் கொண்டே இருப்போம் بِفَاكِهَةٍ பழங்களை(யும்) وَّلَحْمٍ மாமிசங்களையும் مِّمَّا يَشْتَهُوْنَ‏ அவர்கள் விரும்புகின்றவற்றின்
52:22. இன்னும் அவர்கள் விரும்பும் கனிவகைகளையும் இறைச்சியையும், நாம் அவர்களுக்குக் கொடுத்துக் கொண்டிருப்போம்.
52:23
52:23 يَـتَـنَازَعُوْنَ فِيْهَا كَاْسًا لَّا لَغْوٌ فِيْهَا وَلَا تَاْثِيْمٌ‏
يَـتَـنَازَعُوْنَ فِيْهَا அதில் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்வார்கள் كَاْسًا குடிபானம் நிறைந்த குவளைகளை لَّا لَغْوٌ فِيْهَا அதில் பொய் இருக்காது وَلَا تَاْثِيْمٌ‏ பிறரை பாவத்தில் தள்ளுகின்ற செயல்கள் இருக்காது
52:23. (அமுதம் நிறைந்த) ஒருவர் கோப்பையை மற்றொருவர் பறித்துக் கொள்வர்; ஆனால் அதில் வீணுமில்லை, குற்றமிழைப்பதும் இல்லை.
52:24
52:24 وَيَطُوْفُ عَلَيْهِمْ غِلْمَانٌ لَّهُمْ كَاَنَّهُمْ لُـؤْلُـؤٌ مَّكْنُوْنٌ‏
وَيَطُوْفُ சுற்றி வருவார்கள் عَلَيْهِمْ அவர்களை غِلْمَانٌ சிறுவர்கள் لَّهُمْ அவர்களுக்குரிய كَاَنَّهُمْ அவர்களோ இருப்பார்கள் لُـؤْلُـؤٌ முத்துக்களைப் போன்று مَّكْنُوْنٌ‏ பாதுகாக்கப்பட்ட
52:24. அவர்களுக்கு(ப் பணி விடைக்கு) உள்ள சிறுவர்கள், அவர்களைச் சுற்றிக் கொண்டே இருப்பார்கள்; அவர்கள் பதித்த ஆணி முத்துகளைப் போல் (இருப்பார்கள்).
52:25
52:25 وَاَقْبَلَ بَعْضُهُمْ عَلٰى بَعْضٍ يَّتَسَآءَلُوْنَ‏
وَاَقْبَلَ முன்னோக்கி வருவார்கள் بَعْضُهُمْ அவர்களில் சிலர் عَلٰى بَعْضٍ சிலரை يَّتَسَآءَلُوْنَ‏ தங்களுக்குள் கேட்டவர்களாக
52:25. அவர்களில் சிலர் சிலரை முன்னோக்கி விசாரித்துக் கொள்வார்கள்.
52:26
52:26 قَالُـوْۤا اِنَّا كُـنَّا قَبْلُ فِىْۤ اَهْلِنَا مُشْفِقِيْنَ‏
قَالُـوْۤا அவர்கள் கூறுவார்கள் اِنَّا நிச்சயமாக நாங்கள் كُـنَّا இருந்தோம் قَبْلُ இதற்கு முன்னர் فِىْۤ اَهْلِنَا எங்கள் குடும்பங்களில் مُشْفِقِيْنَ‏ பயந்தவர்களாகவே
52:26. “இதற்கு முன் (உலகில்) நாம் நம் குடும்பத்தாரிடையே இருந்த போது (வேதனை பற்றி) நிச்சயமாக அஞ்சியவர்களாகவே இருந்தோம்.
52:27
52:27 فَمَنَّ اللّٰهُ عَلَيْنَا وَوَقٰٮنَا عَذَابَ السَّمُوْمِ‏
فَمَنَّ ஆக, உபகாரம் புரிந்தான் اللّٰهُ அல்லாஹ் عَلَيْنَا எங்கள் மீது وَوَقٰٮنَا இன்னும் எங்களை பாதுகாத்தான் عَذَابَ வேதனையை விட்டும் السَّمُوْمِ‏ நரகத்தின்
52:27. “ஆனால் அல்லாஹ் நம்மீது உபகாரம் செய்து கொடிய வேதனையிலிருந்து நம்மை காப்பாற்றினான்.
52:28
52:28 اِنَّا كُـنَّا مِنْ قَبْلُ نَدْعُوْهُ‌ ؕ اِنَّهٗ هُوَ الْبَـرُّ الرَّحِيْمُ
اِنَّا நிச்சயமாக நாங்கள் كُـنَّا இருந்தோம் مِنْ قَبْلُ இதற்கு முன்னர் نَدْعُوْهُ‌ ؕ அவனை அழைப்பவர்களாக اِنَّهٗ هُوَ நிச்சயமாக அவன்தான் الْبَـرُّ மிகவும் அருளுடையவன் الرَّحِيْمُ‏ மகா கருணையாளன்
52:28. “நிச்சயமாக நாம் முன்னே (உலகில்) அவனைப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தோம்; நிச்சயமாக அவனே மிக்க நன்மை செய்பவன்; பெருங்கிருபையுடையவன்.”  
52:29
52:29 فَذَكِّرْ فَمَاۤ اَنْتَ بِنِعْمَتِ رَبِّكَ بِكَاهِنٍ وَّلَا مَجْنُوْنٍؕ‏
فَذَكِّرْ ஆகவே, நல்லுபதேசம் செய்வீராக! فَمَاۤ اَنْتَ நீர் இல்லை بِنِعْمَتِ அருட்கொடையால் رَبِّكَ உமது இறைவனின் بِكَاهِنٍ குறிசொல்பவராக(வும்) وَّلَا مَجْنُوْنٍؕ‏ பைத்தியக்காரராகவும்
52:29. எனவே, (நபியே! நீர் மக்களுக்கு நல்லுபதேசத்தால்) நினைவுறுத்திக் கொண்டிருப்பீராக! உம்முடைய இறைவனின் அருளால், நீர் குறிகாரரும் அல்லர்; பைத்தியக்காரருமல்லர்.
52:30
52:30 اَمْ يَقُوْلُوْنَ شَاعِرٌ نَّتَـرَبَّصُ بِهٖ رَيْبَ الْمَنُوْنِ‏
اَمْ يَقُوْلُوْنَ அல்லது கூறுகிறார்களா? شَاعِرٌ ஒரு கவிஞர் نَّتَـرَبَّصُ நாங்கள் எதிர்பார்க்கின்றோம் بِهٖ அவருக்கு رَيْبَ அசம்பாவிதங்களை الْمَنُوْنِ‏ காலத்தின்
52:30. அல்லது அவர்கள் (உம்மைப் பற்றி, “அவர்) புலவர்; அவருக்குக் காலத்தின் துன்பத்தைக் கொண்டு நாங்கள் வழி பார்த்துக் இருக்கிறோம்” என்று கூறுகிறார்களா?
52:31
52:31 قُلْ تَرَبَّصُوْا فَاِنِّىْ مَعَكُمْ مِّنَ الْمُتَـرَبِّصِيْنَ ؕ‏
قُلْ கூறுவீராக! تَرَبَّصُوْا நீங்கள் எதிர்பாருங்கள் فَاِنِّىْ நிச்சயமாக நானும் مَعَكُمْ உங்களுடன் مِّنَ الْمُتَـرَبِّصِيْنَ ؕ‏ எதிர்பார்ப்பவர்களில்
52:31. “நீங்களும் வழி பார்த்திருங்கள் - நிச்சயமாக நானும் உங்களுடன் வழி பார்க்கிறேன்” என்று (நபியே!) நீர் கூறும்.
52:32
52:32 اَمْ تَاْمُرُهُمْ اَحْلَامُهُمْ بِهٰذَآ‌ اَمْ هُمْ قَوْمٌ طَاغُوْنَ‌ۚ‏
اَمْ تَاْمُرُهُمْ அவர்களை ஏவுகின்றதா? اَحْلَامُهُمْ அவர்களது அறிவுகள் بِهٰذَآ‌ இதற்கு اَمْ هُمْ அல்லது அவர்கள் قَوْمٌ மக்களா? طَاغُوْنَ‌ۚ‏ வரம்பு மீறுகின்ற(வர்கள்)
52:32. அல்லது, அவர்களுடைய புத்திகள் தாம் அவர்களை இவ்வா(றெல்லாம் பேசுமா)று ஏவுகின்றனவா? அல்லது அவர்கள் வரம்பு மீறிய சமூகத்தாரா?
52:33
52:33 اَمْ يَقُوْلُوْنَ تَقَوَّلَهٗ‌ ۚ بَلْ لَّا يُؤْمِنُوْنَ‌ ۚ‏
اَمْ يَقُوْلُوْنَ அல்லது கூறுகிறார்களா? تَقَوَّلَهٗ‌ ۚ இதை புனைந்து கூறுகிறார் بَلْ لَّا يُؤْمِنُوْنَ‌ ۚ‏ மாறாக/நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்
52:33. அல்லது, இ(வ்வேதத்)தை நீர் இட்டுக் கட்டினீர் என்று அவர்கள் கூறுகின்றனரா? அல்ல. அவர்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள்.
52:34
52:34 فَلْيَاْتُوْا بِحَدِيْثٍ مِّثْلِهٖۤ اِنْ كَانُوْا صٰدِقِيْنَؕ‏
فَلْيَاْتُوْا بِحَدِيْثٍ مِّثْلِهٖۤ இது போன்ற ஒரு பேச்சை அவர்கள் கொண்டு வரட்டும்! اِنْ كَانُوْا صٰدِقِيْنَؕ‏ இவர்கள் உண்மையாளர்களாக இருந்தால்
52:34. ஆகவே, (இவ்வாறெல்லாம் கூறும்) அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால், இ(வ்வேதத்)தைப் போன்ற ஒரு செய்தியை அவர்கள் கொண்டு வரட்டும்.
52:35
52:35 اَمْ خُلِقُوْا مِنْ غَيْرِ شَىْءٍ اَمْ هُمُ الْخٰلِقُوْنَؕ‏
اَمْ خُلِقُوْا இவர்கள் படைக்கப்பட்டார்களா? مِنْ غَيْرِ شَىْءٍ ஏதும் இன்றி اَمْ அல்லது هُمُ இவர்கள்தான் الْخٰلِقُوْنَؕ‏ படைத்தவர்களா?
52:35. அல்லது, அவர்கள் எந்தப் பொருளின்றியும் (தாமாகவே) படைக்கப்பட்டனரா? அல்லது அவர்கள் (எதையும்) படைக்கிற (சக்தியுடைய)வர்களா?
52:36
52:36 اَمْ خَلَـقُوا السَّمٰوٰتِ وَالْاَرْضَ‌ۚ بَلْ لَّا يُوْقِنُوْنَؕ‏
اَمْ خَلَـقُوا இவர்கள்தான் படைத்தார்களா? السَّمٰوٰتِ வானங்களை(யும்) وَالْاَرْضَ‌ۚ பூமியையும் بَلْ மாறாக لَّا يُوْقِنُوْنَؕ‏ நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
52:36. அல்லது, வானங்களையும் பூமியையும் அவர்கள் படைத்தார்களா? அல்ல. அவர்கள் உறுதி கொள்ளமாட்டார்கள்.
52:37
52:37 اَمْ عِنْدَهُمْ خَزَآٮِٕنُ رَبِّكَ اَمْ هُمُ الْمُصَۜيْطِرُوْنَؕ‏
اَمْ عِنْدَهُمْ இவர்களிடம் இருக்கின்றனவா? خَزَآٮِٕنُ பொக்கிஷங்கள் رَبِّكَ உமது இறைவனின் اَمْ هُمُ الْمُصَۜيْطِرُوْنَؕ‏ அல்லது அவர்கள் அடக்கிவிடக் கூடியவர்களா?
52:37. அல்லது, அவர்களிடம் உம்முடைய இறைவனின் பொக்கிஷங்கள் இருக்கின்றனவா? அல்லது இவர்கள் தாம் (எல்லாவற்றையும்) அடக்கியாள்பவர்களா?
52:38
52:38 اَمْ لَهُمْ سُلَّمٌ يَّسْتَمِعُوْنَ فِيْهِ‌ ۚ فَلْيَاْتِ مُسْتَمِعُهُمْ بِسُلْطٰنٍ مُّبِيْنٍؕ‏
اَمْ لَهُمْ ?/அவர்களுக்கு سُلَّمٌ ஓர் ஏணி يَّسْتَمِعُوْنَ செவியுறுகின்றனரா فِيْهِ‌ ۚ அதில் فَلْيَاْتِ வரட்டும் مُسْتَمِعُهُمْ அவர்களில் செவியுற்றவர் بِسُلْطٰنٍ مُّبِيْنٍؕ‏ தெளிவான ஓர் ஆதாரத்தைக் கொண்டு
52:38. அல்லது, அவர்களுக்கு ஏணி இருந்து அதன் மூலம் (வானத்தின் இரகசியங்களை) கேட்டு வருகின்றார்களா? அவ்வாறாயின், அவர்களில் கேட்டு வந்தவர் செவியேற்றதைத் தெளிவான ஆதாரத்துடன் கொண்டு வரட்டும்.
52:39
52:39 اَمْ لَـهُ الْبَنٰتُ وَلَـكُمُ الْبَنُوْنَؕ‏
اَمْ لَـهُ ?/அவனுக்கு الْبَنٰتُ பெண் பிள்ளைகளும் وَلَـكُمُ உங்களுக்கு الْبَنُوْنَؕ‏ ஆண் பிள்ளைகளும்
52:39. அல்லது, அவனுக்குப் பெண் மக்களும் உங்களுக்கு ஆண் மக்களுமா?
52:40
52:40 اَمْ تَسْــٴَــلُهُمْ اَجْرًا فَهُمْ مِّنْ مَّغْرَمٍ مُّثْقَلُوْنَؕ‏ ‏
اَمْ تَسْــٴَــلُهُمْ அவர்களிடம் நீர் கேட்கின்றீரா? اَجْرًا கூலி எதையும் فَهُمْ அவர்கள் مِّنْ مَّغْرَمٍ கடன் தொகையினால் مُّثْقَلُوْنَؕ‏ ‏ சுமைக்குள்ளாகி விட்டார்களா?
52:40. அல்லது, நீர் அவர்களிடம் ஏதாவது கூலி கேட்டு, (அதைக் கொடுத்ததினால்) அவர்கள் கடன் பட்டு சுமையேற்றப்பட்டிருக்கின்றார்களா,
52:41
52:41 اَمْ عِنْدَهُمُ الْغَيْبُ فَهُمْ يَكْتُبُوْنَؕ‏
اَمْ عِنْدَهُمُ அவர்களிடம் இருக்கின்றதா الْغَيْبُ மறைவானவற்றின் அறிவு فَهُمْ அதை அவர்கள் يَكْتُبُوْنَؕ‏ எழுதுகின்றார்களா?
52:41. அல்லது, அவர்களிடம் மறைவான செய்திகளிலிருந்து, அவற்றை அவர்கள் எழுதுகின்றார்களா,
52:42
52:42 اَمْ يُرِيْدُوْنَ كَيْدًا‌ؕ فَالَّذِيْنَ كَفَرُوْا هُمُ الْمَكِيْدُوْنَؕ‏
اَمْ ? يُرِيْدُوْنَ நாடுகின்றனர் كَيْدًا‌ؕ சூழ்ச்சியை فَالَّذِيْنَ كَفَرُوْا ஆனால், நிராகரித்தவர்கள்தான் هُمُ الْمَكِيْدُوْنَؕ‏ சூழ்ச்சி செய்யப்பட்டவர்கள்
52:42. அல்லது, அவர்கள் (உமக்கு எதிராக) ஏதாவது சூழ்ச்சி செய்ய நாடுகிறார்களா, அப்படியானால், அந்த காஃபிர்கள் தாம் சூழச்சிக்குள்ளாவார்கள்.
52:43
52:43 اَمْ لَهُمْ اِلٰهٌ غَيْرُ اللّٰهِ‌ؕ سُبْحٰنَ اللّٰهِ عَمَّا يُشْرِكُوْنَ‏
اَمْ لَهُمْ அவர்களுக்கு உண்டா? اِلٰهٌ (வேறு) கடவுள் غَيْرُ اللّٰهِ‌ؕ அல்லாஹ்வை அன்றி سُبْحٰنَ மகா பரிசுத்தமானவன் اللّٰهِ அல்லாஹ் عَمَّا يُشْرِكُوْنَ‏ அவர்கள் இணைவைப்பதை விட்டும்
52:43. அல்லது, அவர்கள் அல்லாஹ் அல்லாமல் (வேறு) நாயன் இருக்கின்றானா, அவர்கள் இணை வைப்பதை விட்டும் அல்லாஹ் மிகத் தூயவன்.
52:44
52:44 وَاِنْ يَّرَوْا كِسْفًا مِّنَ السَّمَآءِ سَاقِطًا يَّقُوْلُوْا سَحَابٌ مَّرْكُوْمٌ‏
وَاِنْ يَّرَوْا அவர்கள் பார்த்தால் كِسْفًا துண்டுகளை مِّنَ السَّمَآءِ வானத்திலிருந்து سَاقِطًا விழக்கூடிய(து) يَّقُوْلُوْا அவர்கள் கூறுவார்கள் سَحَابٌ மேகங்கள் مَّرْكُوْمٌ‏ ஒன்று சேர்ந்த(வை)
52:44. வானத்திலிருந்து ஒரு துண்டு விழுவதை அவர்கள் கண்டார்களானால், அதை அடர்த்தியான மேகம் என்று அவர்கள் கூறிவிடுவார்கள்.
52:45
52:45 فَذَرْهُمْ حَتّٰى يُلٰقُوْا يَوْمَهُمُ الَّذِىْ فِيْهِ يُصْعَقُوْنَۙ‏
فَذَرْهُمْ ஆகவே, அவர்களை விட்டுவிடுவீராக! حَتّٰى வரை يُلٰقُوْا அவர்கள் சந்திக்கின்ற يَوْمَهُمُ அவர்களுடைய நாள் الَّذِىْ எது فِيْهِ அதில் يُصْعَقُوْنَۙ‏ அழிந்துவிடுகின்ற
52:45. ஆகவே அச்சத்தால் அவர்கள் உணர்விழக்கும் நாளைச் சந்திக்கும்வரை, அவர்களை விட்டு விடுவீர்களாக.
52:46
52:46 يَوْمَ لَا يُغْنِىْ عَنْهُمْ كَيْدُهُمْ شَيْـٴًـــا وَّلَا هُمْ يُنْصَرُوْنَؕ‏
يَوْمَ அந்நாளில் لَا يُغْنِىْ தடுக்காது عَنْهُمْ அவர்களை விட்டும் كَيْدُهُمْ அவர்களின் சூழ்ச்சி شَيْـٴًـــا எதையும் وَّلَا هُمْ يُنْصَرُوْنَؕ‏ அவர்கள் உதவியும் செய்யப்பட மாட்டார்கள்
52:46. அந்நாளில், அவர்களுடைய சூழ்ச்சிகள் எதுவும் அவர்களுக்குப் பயன் அளிக்காது; அன்றியும் (எவராலும்) அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.
52:47
52:47 وَاِنَّ لِلَّذِيْنَ ظَلَمُوْا عَذَابًا دُوْنَ ذٰلِكَ وَلٰـكِنَّ اَكْثَرَهُمْ لَا يَعْلَمُوْنَ‏
وَاِنَّ لِلَّذِيْنَ ظَلَمُوْا நிச்சயமாக அநியாயம் செய்தவர்களுக்கு عَذَابًا வேதனை دُوْنَ ذٰلِكَ அதற்கு முன்னரே وَلٰـكِنَّ என்றாலும் اَكْثَرَهُمْ அவர்களில் அதிகமானவர்கள் لَا يَعْلَمُوْنَ‏ அறியமாட்டார்கள்
52:47. அன்றியும், அநியாயம் செய்து கொண்டு இருந்தவர்களுக்கு நிச்சயமாக மற்றொரு வேதனையும் (இம்மையில்) உண்டு எனினும் அவர்களில் பெரும்பாலோர் இதை அறிய மாட்டார்கள்.
52:48
52:48 وَاصْبِرْ لِحُكْمِ رَبِّكَ فَاِنَّكَ بِاَعْيُنِنَا‌ وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ حِيْنَ تَقُوْمُۙ‏
وَاصْبِرْ பொறுமையாக இருப்பீராக! لِحُكْمِ தீர்ப்புக்காக رَبِّكَ உமது இறைவனின் فَاِنَّكَ நிச்சயமாக நீர் بِاَعْيُنِنَا‌ நமது கண்களுக்கு முன்னால் وَسَبِّحْ நீர் துதிப்பீராக بِحَمْدِ புகழ்ந்து رَبِّكَ உமது இறைவனை حِيْنَ நேரத்தில் تَقُوْمُۙ‏ எழும்
52:48. எனவே (நபியே!) உம்முடைய இறைவனின் தீர்ப்புக்காகப் பொறுத்திருப்பீராக; நிச்சயமாக நீர் நம் கண்காணிப்பில் இருக்கின்றீர்; மேலும் நீங்கள் எழுந்திருக்கும் சமயத்தில் உம் இறைவனின் புகழைக் கூறித் தஸ்பீஹு செய்வீராக,
52:49
52:49 وَمِنَ الَّيْلِ فَسَبِّحْهُ وَاِدْبَارَ النُّجُوْمِ
وَمِنَ الَّيْلِ இன்னும் இரவில் فَسَبِّحْهُ அவனை துதிப்பீராக! وَاِدْبَارَ இன்னும் மறைந்த பின்னர் النُّجُوْمِ‏ நட்சத்திரங்கள்
52:49. இன்னும், இரவின் ஒரு பாகத்திலும், நட்சத்திரங்கள் அடையும் நேரத்திலும் அவனைத்(துதி செய்து) தஸ்பீஹு செய்வீராக!