62. ஸூரத்துல் ஜுமுஆ (வெள்ளிக் கிழமை)
மதனீ, வசனங்கள்: 11

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
62:1
62:1 يُسَبِّحُ لِلّٰهِ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ الْمَلِكِ الْقُدُّوْسِ الْعَزِيْزِ الْحَكِيْمِ‏
يُسَبِّحُ துதிக்கின்றன لِلّٰهِ அல்லாஹ்வை مَا فِى السَّمٰوٰتِ வானங்களில் உள்ளவர்களும் وَمَا فِى الْاَرْضِ பூமியில் உள்ளவர்களும் الْمَلِكِ பேரரசனாகிய الْقُدُّوْسِ பரிசுத்தவனாகிய الْعَزِيْزِ மிகைத்தவனாகிய الْحَكِيْمِ‏ மகா ஞானவானாகிய
62:1. யுஸBப்Bபிஹு லிலாஹி மா Fபிஸ் ஸமாவாதி வமா Fபில் அர்ளில் மலிகில் குத்தூஸில் 'அZஜீZஜில் ஹகீம்
62:1. வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அல்லாஹ்வைத் தஸ்பீஹு (துதி) செய்துகொண்டிருக்கின்றன; (அவன்தான்) மெய்யான பேரரசன்; பரிசுத்தமானவன்; யாவரையும் மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.
62:2
62:2 هُوَ الَّذِىْ بَعَثَ فِى الْاُمِّيّٖنَ رَسُوْلًا مِّنْهُمْ يَتْلُوْا عَلَيْهِمْ اٰيٰتِهٖ وَيُزَكِّيْهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَاِنْ كَانُوْا مِنْ قَبْلُ لَفِىْ ضَلٰلٍ مُّبِيْنٍۙ‏
هُوَ الَّذِىْ அவன்தான் بَعَثَ அனுப்பினான் فِى الْاُمِّيّٖنَ எழுதப் படிக்கக் கற்காத மக்களில் رَسُوْلًا ஒரு தூதரை مِّنْهُمْ அவர்களில் இருந்தே يَتْلُوْا அவர் ஓதுகிறார் عَلَيْهِمْ அவர்களுக்கு முன் اٰيٰتِهٖ அவனது வசனங்களை وَيُزَكِّيْهِمْ இன்னும் அவர்களை பரிசுத்தப்படுத்துகிறார் وَيُعَلِّمُهُمُ அவர்களுக்கு கற்பிக்கிறார் الْكِتٰبَ வேதத்தை(யும்) وَالْحِكْمَةَ ஞானத்தையும் وَاِنْ كَانُوْا நிச்சயமாக அவர்கள் இருந்தனர் مِنْ قَبْلُ இதற்கு முன்னர் لَفِىْ ضَلٰلٍ مُّبِيْنٍۙ‏ தெளிவான வழிகேட்டில்தான்
62:2. ஹுவல் லதீ Bப'அத Fபில் உம்மிய்யீன ரஸூலம் மின் ஹும் யத்லூ 'அலய்ஹிம் ஆயாதிஹீ வ யுZஜக்கீஹிம் வ யு'அல்லிமுஹுமுல் கிதாBப வல் ஹிக்மத வ இன் கானூ மின் கBப்லு லFபீ ளலாலிம் முBபீன்
62:2. அவன்தான், எழுத்தறிவில்லா மக்களிடம் அவனுடைய வசனங்களை ஓதிக்காட்டி, அவர்களைப் பரிசுத்தமாக்கி, அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்பிக்கும் படியான தூதரை அவர்களிலிருந்தே அனுப்பி வைத்தான்; அவர்களோ, அதற்கு முன்னர் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருந்தனர்.
62:3
62:3 وَّاٰخَرِيْنَ مِنْهُمْ لَمَّا يَلْحَقُوْا بِهِمْ‌ؕ وَهُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُ‏
وَّاٰخَرِيْنَ இன்னும் வேறு மக்களுக்காக مِنْهُمْ அவர்களில் لَمَّا يَلْحَقُوْا அவர்கள் வந்து சேரவில்லை بِهِمْ‌ؕ இவர்களுடன் وَهُوَ அவன்தான் الْعَزِيْزُ மிகைத்தவன் الْحَكِيْمُ‏ மகா ஞானவான்
62:3. வ ஆகரீன மின்ஹும் லம்மா யல்ஹகூ Bபிஹிம் வ ஹுவல் 'அZஜீZஜுல் ஹகீம்
62:3. (இவர்களுக்காகவும்), இவர்களுடன் சேராத (பிற்காலத்த)வர்களுக்காகவும், (தூதராக அனுப்பி வைத்தான்) அவன் (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.
62:4
62:4 ذٰ لِكَ فَضْلُ اللّٰهِ يُؤْتِيْهِ مَنْ يَّشَآءُ‌ ؕ وَاللّٰهُ ذُو الْفَضْلِ الْعَظِيْمِ‏
ذٰ لِكَ இது فَضْلُ சிறப்பாகும் اللّٰهِ அல்லாஹ்வின் يُؤْتِيْهِ அதை கொடுக்கின்றான் مَنْ يَّشَآءُ‌ ؕ وَاللّٰهُ தான் நாடுகின்றவர்களுக்கு/அல்லாஹ் ذُو الْفَضْلِ சிறப்புடையவன் الْعَظِيْمِ‏ மகத்தான
62:4. தாலிக Fபள்லுல் லாஹி யு'தீஹி ம(ன்)ய்-யஷா; வல்லாஹு துல் Fபள்லில் 'அளீம்
62:4. அதுவே அல்லாஹ்வின் அருளாகும், தான் விரும்பியவர்களுக்கு அதை அவனளிக்கிறான்; மேலும் அல்லாஹ் மகத்தான அருளுடையவன்.
62:5
62:5 مَثَلُ الَّذِيْنَ حُمِّلُوا التَّوْرٰٮةَ ثُمَّ لَمْ يَحْمِلُوْهَا كَمَثَلِ الْحِمَارِ يَحْمِلُ اَسْفَارًا‌ ؕ بِئْسَ مَثَلُ الْقَوْمِ الَّذِيْنَ كَذَّبُوْا بِاٰيٰتِ اللّٰهِ ‌ؕ وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الظّٰلِمِيْنَ‏
مَثَلُ உதாரணம் الَّذِيْنَ எவர்கள் حُمِّلُوا பணிக்கப்பட்டார்கள் التَّوْرٰٮةَ தவ்றாத்தின் படி ثُمَّ لَمْ يَحْمِلُوْهَا பிறகு/அதன்படி அவர்கள் அமல் செய்யவில்லை كَمَثَلِ உதாரணத்தைப் போல் الْحِمَارِ கழுதையின் يَحْمِلُ சுமக்கிறது اَسْفَارًا‌ ؕ பல நூல்களை بِئْسَ மிகக் கெட்டது مَثَلُ உதாரணம் الْقَوْمِ மக்களின் الَّذِيْنَ كَذَّبُوْا பொய்ப்பித்தவர்கள் بِاٰيٰتِ வசனங்களை اللّٰهِ ؕ அல்லாஹ்வின் وَاللّٰهُ لَا يَهْدِى அல்லாஹ் நேர்வழி செலுத்த மாட்டான் الْقَوْمَ الظّٰلِمِيْنَ‏ அநியாயக்கார மக்களை
62:5. மதலுல் லதீன ஹும் மிலுத் தவ்ராத தும்ம லம் யஹ்மிலூஹா கமதலில் ஹிமாரி யஹ் மிலு அஸ்Fபாரா; Bபி'ஸ மதலுல் கவ்மில் லதீன காத்தBபூ Bபி ஆயாதில் லாஹ்; வல்லாஹு லா யஹ்தில் கவ்மள்ளாலிமீன்
62:5. எவர்கள் தவ்ராத் (வேதம்) சுமத்தப்பெற்று பின்னர் அதன்படி நடக்கவில்லையோ, அவர்களுக்கு உதாரணமாவது: ஏடுகளைச் சுமக்கும் கழுதையின் உதாரணத்திற்கு ஒப்பாகும்; எச்சமூகத்தார் அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்ப்பிக்கிறார்களோ அவர்களின் உதாரணம் மிகக் கெட்டதாகும் - அல்லாஹ் அநியாயக்கார சமூகத்தாரை நேர்வழியில் செலுத்தமாட்டான்.
62:6
62:6 قُلْ يٰۤاَيُّهَا الَّذِيْنَ هَادُوْۤا اِنْ زَعَمْتُمْ اَنَّكُمْ اَوْلِيَآءُ لِلّٰهِ مِنْ دُوْنِ النَّاسِ فَتَمَنَّوُا الْمَوْتَ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ‏
قُلْ கூறுவீராக! يٰۤاَيُّهَا الَّذِيْنَ هَادُوْۤا யூதர்களே! اِنْ زَعَمْتُمْ நீங்கள் பிதற்றினால் اَنَّكُمْ நிச்சயமாக நீங்கள்தான் اَوْلِيَآءُ நண்பர்கள் لِلّٰهِ அல்லாஹ்வின் مِنْ دُوْنِ النَّاسِ மற்ற மக்கள் அல்ல فَتَمَنَّوُا ஆசைப்படுங்கள்! الْمَوْتَ மரணத்தை اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ‏ நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால்
62:6. குல் யா அய்யுஹல் லதீன ஹாதூ இன் Zஜ'அம்தும் அன்னகும் அவ்லியா' உலிலாஹி மின் தூனின் னாஸி Fபதமன்னவுல் மவ்த இன் குன்தும் ஸாதிகீன்
62:6. (நபியே!) நீர் கூறுவீராக: யஹூதிகளே! மற்ற மனிதர்களைவிட நீங்கள் தாம் அல்லாஹ்வுக்குப் பிரியமானவர்கள் என்று எண்ணுவீர்களானால், மேலும் (அவ்வெண்ணத்தில்) நீங்கள் உண்மையாளராக இருப்பின், நீங்கள் மரணத்தை விரும்புங்கள்.”
62:7
62:7 وَلَا يَتَمَنَّوْنَهٗۤ اَبَدًۢا بِمَا قَدَّمَتْ اَيْدِيْهِمْ‌ؕ وَاللّٰهُ عَلِيْمٌۢ بِالظّٰلِمِيْنَ‏
وَلَا يَتَمَنَّوْنَهٗۤ அதை அவர்கள் ஆசைப்பட மாட்டார்கள் اَبَدًۢا بِمَا قَدَّمَتْ ஒரு போதும்/முற்படுத்தியவற்றின் காரணமாக اَيْدِيْهِمْ‌ؕ அவர்களின் கரங்கள் وَاللّٰهُ அல்லாஹ் عَلِيْمٌۢ நன்கறிந்தவன் بِالظّٰلِمِيْنَ‏ அநியாயக்காரர்களை
62:7. வ லா யதமன்னவ் னஹூ அBபதம் Bபிமா கத்தமத் அய்தீஹிம்; வல்லாஹு 'அலீமும் Bபிள் ளாலிமீன்
62:7. ஆனால், அவர்களுடைய கைகள் முற்படுத்தி வைத்த (பாவத்)தின் காரணத்தால், அவர்கள் அதை (மரணத்தை) ஒருக்காலும் விரும்ப மாட்டார்கள். மேலும், அல்லாஹ் அநியாயக்காரர்களை நன்கறிந்தவன்.
62:8
62:8 قُلْ اِنَّ الْمَوْتَ الَّذِىْ تَفِرُّوْنَ مِنْهُ فَاِنَّهٗ مُلٰقِيْكُمْ‌ ثُمَّ تُرَدُّوْنَ اِلٰى عٰلِمِ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَيُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ
قُلْ கூறுவீராக! اِنَّ الْمَوْتَ நிச்சயமாக மரணம் الَّذِىْ எது تَفِرُّوْنَ விரண்டு ஓடுகின்றீர்கள் مِنْهُ அதை விட்டு فَاِنَّهٗ நிச்சயமாகஅது مُلٰقِيْكُمْ‌ உங்களை சந்திக்கும் ثُمَّ பிறகு تُرَدُّوْنَ நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள் اِلٰى عٰلِمِ அறிந்தவன் பக்கம் الْغَيْبِ மறைவானவற்றையும் وَالشَّهَادَةِ வெளிப்படையானவற்றையும் فَيُنَبِّئُكُمْ அவன் உங்களுக்கு அறிவிப்பான் بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ‏ நீங்கள் செய்துகொண்டிருந்தவற்றை
62:8. குல் இன்னல் மவ்தல் லதீ தFபிர்ரூன மின்ஹு Fப இன்னஹூ முலாகீகும் தும்ம துரத்தூன இலா 'ஆலிமில் கய்Bபி வஷ் ஷஹாததி Fப யுனBப்Bபி'உகும் Bபிமா குன்தும் தஃமலூன்
62:8. “நீங்கள் எதை விட்டும் விரண்டு ஓடுகிறீர்களோ, அந்த மரணம் நிச்சயமாக உங்களை சந்திக்கும்; பிறகு, மறைவானதையும் பகிரங்கமானதையும் நன்கறிந்தவனிடம் நீங்கள் கொண்டு மீட்டப்படுவீர்கள் - அப்பால், அவன் நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி உங்களுக்கு அறிவிப்பான்” (என்று) (நபியே!) நீர் கூறுவீராக.
62:9
62:9 يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا نُوْدِىَ لِلصَّلٰوةِ مِنْ يَّوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا اِلٰى ذِكْرِ اللّٰهِ وَذَرُوا الْبَيْعَ‌ ؕ ذٰ لِكُمْ خَيْرٌ لَّـكُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ‏
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا நம்பிக்கையாளர்களே! اِذَا نُوْدِىَ அழைக்கப்பட்டால் لِلصَّلٰوةِ தொழுகைக்காக مِنْ يَّوْمِ الْجُمُعَةِ ஜுமுஆ தினத்தன்று فَاسْعَوْا நீங்கள் விரையுங்கள்! اِلٰى ذِكْرِ நினைவின் பக்கம் اللّٰهِ அல்லாஹ்வின் وَذَرُوا இன்னும் விட்டு விடுங்கள்! الْبَيْعَ‌ ؕ வியாபாரத்தை ذٰ لِكُمْ அதுதான் خَيْرٌ மிகச் சிறந்ததாகும் لَّـكُمْ உங்களுக்கு اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் تَعْلَمُوْنَ‏ அறிகின்றவர்களாக
62:9. யா அய்யுஹல் லதீன ஆமனூ இதா னூதிய லிஸ்-ஸலாதி மி(ன்)ய் யவ்மில் ஜுமு'அதி Fபஸ்'அவ் இலா திக்ரில் லாஹி வ தருல் Bபய்'; தாலிகும் கய்ருல் லகும் இன் குன்தும் தஃலமூன்
62:9. ஈமான் கொண்டவர்களே! ஜுமுஆ உடைய நாளில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வைத் தியானிக்க (பள்ளிக்கு) விரைந்து செல்லுங்கள் - நீங்கள் அறிபவர்களாக இருப்பின் இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும்.
62:10
62:10 فَاِذَا قُضِيَتِ الصَّلٰوةُ فَانْتَشِرُوْا فِى الْاَرْضِ وَابْتَغُوْا مِنْ فَضْلِ اللّٰهِ وَاذْكُرُوا اللّٰهَ كَثِيْرًا لَّعَلَّكُمْ تُفْلِحُوْنَ‏
فَاِذَا قُضِيَتِ முடிந்துவிட்டால் الصَّلٰوةُ தொழுகை فَانْتَشِرُوْا பரவிச் செல்லுங்கள் فِى الْاَرْضِ பூமியில் وَابْتَغُوْا இன்னும் தேடுங்கள் مِنْ فَضْلِ அருளை اللّٰهِ அல்லாஹ்வின் وَاذْكُرُوا இன்னும் நீங்கள் நினைவு கூருங்கள்! اللّٰهَ அல்லாஹ்வை كَثِيْرًا அதிகம் لَّعَلَّكُمْ تُفْلِحُوْنَ‏ நீங்கள் வெற்றி அடைவீர்கள்
62:10. Fப-இதா குளியதிஸ் ஸலாது Fபன்தஷிரூ Fபில் அர்ளி வBப்தகூ மின் Fபள்லில் லாஹி வத்குருல் லாஹ கதீரல் ல'அல்லகும் துFப்லிஹூன்
62:10. பின்னர், (ஜுமுஆ) தொழுகை நிறைவேற்றப்பட்டு விட்டதும், (பள்ளியிலிருந்து வெளிப்பட்டு) பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக் கொள்ளுங்கள்; அன்றியும், நீங்கள் வெற்றியடையும் பொருட்டு, அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யுங்கள்.
62:11
62:11 وَاِذَا رَاَوْا تِجَارَةً اَوْ لَهْوَا۟ اۨنْفَضُّوْۤا اِلَيْهَا وَتَرَكُوْكَ قَآٮِٕمًا‌ ؕ قُلْ مَا عِنْدَ اللّٰهِ خَيْرٌ مِّنَ اللَّهْوِ وَمِنَ التِّجَارَةِ‌ ؕ وَاللّٰهُ خَيْرُ الرّٰزِقِيْنَ
وَاِذَا رَاَوْا அவர்கள் பார்த்தால் تِجَارَةً ஒரு வர்த்தகத்தையோ اَوْ அல்லது لَهْوَا۟ ஒரு வேடிக்கையையோ اۨنْفَضُّوْۤا அவர்கள் பிரிந்து சென்று விடுவார்கள் اِلَيْهَا அதன் பக்கம் وَتَرَكُوْكَ இன்னும் உம்மை விட்டு விடுவார்கள் قَآٮِٕمًا‌ ؕ நின்றவராக قُلْ கூறுவீராக! مَا عِنْدَ اللّٰهِ அல்லாஹ்விடம் உள்ளதுதான் خَيْرٌ மிகச் சிறந்ததாகும் مِّنَ اللَّهْوِ வேடிக்கையை விடவும் وَمِنَ التِّجَارَةِ‌ ؕ வர்த்தகத்தை விடவும் وَاللّٰهُ அல்லாஹ்தான் خَيْرُ மிகச் சிறந்தவன் الرّٰزِقِيْنَ‏ உணவளிப்பவர்களில்
62:11. வ இதா ர'அவ் திஜாரதன் அவ் லஹ்வனின் Fபள்ளூ இலய்ஹா வ தரகூக கா'இமா; குல் மா 'இன்தல் லாஹி கய்ரும் மினல் லஹ்வி வ மினத் திஜாரஹ்; வல்லாஹு கய்ருர் ராZஜிகீன்
62:11. இன்னும், (நபியே!) அவர்களில் (சிலர்) ஒரு வியாபாரத்தையோ, அல்லது ஒரு வேடிக்கையையோ, கண்டால், அதன்பால் அவர்கள் சென்று விடுகின்றனர். மேலும், நின்ற வண்ணமே உம்மை விட்டுவிடுகின்றனர்; “அல்லாஹ்விடத்தில் இருப்பது, வேடிக்கையை விடவும் வியாபாரத்தை விடவும் மிகவும் மேலானதாகும்; மேலும் அல்லாஹ் உணவளிப்பவர்களில் மிகவும் மேலானவன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.