77. ஸூரத்துல் முர்ஸலாத் (அனுப்பப்படுபவை)
மக்கீ, வசனங்கள்: 50

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
77:1
77:1 وَالْمُرْسَلٰتِ عُرْفًا ۙ‏
وَالْمُرْسَلٰتِ عُرْفًا ۙ‏ தொடர்ச்சியாக வீசுகின்ற காற்றுகள் மீது சத்தியமாக!
77:1. வல் முர்ஸலாதி'உர்Fபா
77:1. தொடர்ச்சியாக அனுப்பப்படுபவை (காற்று)கள் மீது சத்தியமாக-
77:2
77:2 فَالْعٰصِفٰتِ عَصْفًا ۙ‏
فَالْعٰصِفٰتِ عَصْفًا ۙ‏ அதிவேகமாக வீசுகின்ற புயல்காற்றுகள் மீது சத்தியமாக!
77:2. Fபல்'ஆஸிFபாதி 'அஸ்Fபா
77:2. வேகமாக வீசுகிறவை (புயல் காற்றுகள்) மீது (சத்தியமாக)-
77:3
77:3 وَّالنّٰشِرٰتِ نَشْرًا ۙ‏
وَّالنّٰشِرٰتِ نَشْرًا ۙ‏ பரப்புகின்ற காற்றுகள் மீது சத்தியமாக!
77:3. வன்னாஷிராதி னஷ்ரா
77:3. (மேகங்களைப்) பரவலாகப் பரப்பும் (மழைக் காற்றுகள்) மீது சத்தியமாக-
77:4
77:4 فَالْفٰرِقٰتِ فَرْقًا ۙ‏
فَالْفٰرِقٰتِ فَرْقًا ۙ‏ தெளிவாக பிரித்துவிடக்கூடியவற்றின் மீது சத்தியமாக!
77:4. Fபல்Fபாரிகாதி Fபர்கா
77:4. (சத்தியத்தையும் அசத்தியத்தையும்) வேறுபடுத்தி காட்டுவோர் (வானவர்கள்) மீதும் (சத்தியமாக)-
77:5
77:5 فَالْمُلْقِيٰتِ ذِكْرًا ۙ‏
فَالْمُلْقِيٰتِ ذِكْرًا ۙ‏ இறக்குகின்றவர்கள் மீது சத்தியமாக!
77:5. Fபல்முல்கியாதி திக்ரா
77:5. (இதயங்களில்) உபதேசத்தைப் போடுவோர் (வானவர்) மீதும் (சத்தியமாக)-
77:6
77:6 عُذْرًا اَوْ نُذْرًا ۙ‏
عُذْرًا ஒரு காரணமாக اَوْ அல்லது نُذْرًا ۙ‏ எச்சரிக்கையாக இருப்பதற்காக!
77:6. 'உத்ரன் அவ் னுத்ரா
77:6. (அந்த உபதேசம்) மன்னிப்பையோ, அல்லது எச்சரிக்கையையோ (உள்ளடக்கியதாகும்)
77:7
77:7 اِنَّمَا تُوْعَدُوْنَ لَوَاقِعٌ ؕ‏
اِنَّمَا تُوْعَدُوْنَ நிச்சயமாக நீங்கள் எச்சரிக்கப்படுவது لَوَاقِعٌ ؕ‏ நிகழ்ந்தே தீரும்
77:7. இன்னமா தூ'அதூன லவாகி'
77:7. நிச்சயமாக உங்களுக்கு வாக்களிக்கப்பட்டது நிகழ்வதேயாகும்.
77:8
77:8 فَاِذَا النُّجُوْمُ طُمِسَتْۙ‏
فَاِذَا النُّجُوْمُ طُمِسَتْۙ‏ நட்சத்திரங்கள் ஒளி மங்கிவிடும்போது
77:8. Fப இதம் னுஜூமு துமிஸத்
77:8. இன்னும், நட்சத்திரங்கள் அழிக்கப்படும்போது-
77:9
77:9 وَ اِذَا السَّمَآءُ فُرِجَتْۙ‏
وَ اِذَا السَّمَآءُ فُرِجَتْۙ‏ வானம் பிளக்கப்படும் போது
77:9. வ இதஸ் ஸமா'உ Fபுரிஜத்
77:9. மேலும், வானம் பிளக்கப்படும் போது-
77:10
77:10 وَاِذَا الْجِبَالُ نُسِفَتْۙ‏
وَاِذَا الْجِبَالُ نُسِفَتْۙ‏ மலைகள் சுக்கு நூறாக பொசுக்கப்படும்போது
77:10. வ இதல் ஜிBபாலு னுஸிFபத்
77:10. அன்றியும், மலைகள் (தூசிகளைப் போல்) பறக்கடிக்கப்படும்போது-
77:11
77:11 وَاِذَا الرُّسُلُ اُقِّتَتْؕ‏
وَاِذَا الرُّسُلُ اُقِّتَتْؕ‏ தூதர்கள் ஒன்று சேர்க்கப்படும்போது
77:11. வ இதர் ருஸுலு உக்கிதத்
77:11. மேலும், தூதர்களுக்கு(த் தம் சமூகத்தாருக்காகச் சாட்சியம் கூற) நேரம் குறிக்கப்படும்போது-
77:12
77:12 لِاَىِّ يَوْمٍ اُجِّلَتْؕ‏
لِاَىِّ يَوْمٍ எந்த நாளுக்காக? اُجِّلَتْؕ‏ அவர்கள் தாமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்
77:12. லி அய்யி யவ்மின் உஜ்ஜிலத்
77:12. எந்த நாள்வரை (இவையெல்லாம்) பிற்படுத்தப்பட்டிருக்கின்றன?
77:13
77:13 لِيَوْمِ الْفَصْلِ‌ۚ‏
لِيَوْمِ الْفَصْلِ‌ۚ‏ தீர்ப்பு நாளுக்காக
77:13. லி யவ்மில் Fபஸ்ல்
77:13. தீர்ப்புக்குரிய நாளுக்காகத்தான்.
77:14
77:14 وَمَاۤ اَدْرٰٮكَ مَا يَوْمُ الْفَصْلِؕ‏
وَمَاۤ اَدْرٰٮكَ உமக்குத் தெரியுமா? مَا يَوْمُ الْفَصْلِؕ‏ தீர்ப்பு நாள் என்னவென்று
77:14. வ மா அத்ராக மா யவ்முல் Fபஸ்ல்
77:14. மேலும், தீர்ப்புக்குரிய நாள் என்னவென்று உமக்கு எது அறிவித்தது?
77:15
77:15 وَيْلٌ يَّوْمَٮِٕذٍ لِّلْمُكَذِّبِيْنَ‏
وَيْلٌ நாசம்தான் يَّوْمَٮِٕذٍ அந்நாளில் لِّلْمُكَذِّبِيْنَ‏ பொய்ப்பித்தவர்களுக்கு
77:15. வய்லு(ன்)ய் யவ்ம 'இதில்லில்முகத்திBபீன்
77:15. (நம் வசனங்களைப்) பொய்ப்பிப்போருக்கு அந்நாளில் கேடுதான்.
77:16
77:16 اَلَمْ نُهْلِكِ الْاَوَّلِيْنَؕ‏
اَلَمْ نُهْلِكِ நாம் அழிக்கவில்லையா? الْاَوَّلِيْنَؕ‏ முன்னோர்களை
77:16. அலம் னுஹ்லிகில் அவ்வலீன்
77:16. முன்னோர்(களில் குற்றவாளி)களை நாம் அழிக்கவில்லையா?
77:17
77:17 ثُمَّ نُتْبِعُهُمُ الْاٰخِرِيْنَ‏
ثُمَّ பிறகு نُتْبِعُهُمُ அவர்களுக்கு பின்தொடர வைத்தோம் الْاٰخِرِيْنَ‏ பின்னோர்களை
77:17. தும்ம னுத்Bபி'உஹுமுல் ஆகிரீன்
77:17. பிறகு பின்னுள்ளவர்(களில் குற்றவாளி)களையும் (அழிந்தவர்களைப்) பின் தொடரச் செய்வோம்.
77:18
77:18 كَذٰلِكَ نَفْعَلُ بِالْمُجْرِمِيْنَ‏
كَذٰلِكَ இவ்வாறுதான் نَفْعَلُ நாம் செய்வோம் بِالْمُجْرِمِيْنَ‏ குற்றவாளிகளுக்கு
77:18. கதலிக னFப்'அலு Bபில்முஜ்ரிமீன்
77:18. குற்றவாளிகளை இவ்வாறுதான் நாம் செய்வோம் (தண்டிப்போம்).
77:19
77:19 وَيْلٌ يَّوْمَٮِٕذٍ لِّلْمُكَذِّبِيْنَ‏
وَيْلٌ நாசம்தான்! يَّوْمَٮِٕذٍ அந்நாளில் لِّلْمُكَذِّبِيْنَ‏ பொய்ப்பித்தவர்களுக்கு
77:19. வய்லு(ன்)வ் யவ்ம 'இதில் லில் முகத்திBபீன்
77:19. பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
77:20
77:20 اَلَمْ نَخْلُقْكُّمْ مِّنْ مَّآءٍ مَّهِيْنٍۙ‏
اَلَمْ نَخْلُقْكُّمْ நாம் உங்களை படைக்கவில்லையா? مِّنْ مَّآءٍ ஒரு நீரிலிருந்து مَّهِيْنٍۙ‏ பலவீனமான
77:20. அலம் னக்லுக்கும் மிம்மா'இம் மஹீன்
77:20. அற்ப நீர்த்துளியிலிருந்து உங்களை நாம் படைக்கவில்லையா?
77:21
77:21 فَجَعَلْنٰهُ فِىْ قَرَارٍ مَّكِيْنٍۙ‏
فَجَعَلْنٰهُ அதை வைத்தோம் فِىْ قَرَارٍ ஓர் இடத்தில் مَّكِيْنٍۙ‏ உறுதியான
77:21. Fபஜ'அல்னாஹு Fபீ கராரிம் மகீன்
77:21. பின்னர் அதனைப் பத்திரமான இடத்தில் (கர்ப்பத்தில்) உறுதியாக ஆக்கிவைத்தோம்.
77:22
77:22 اِلٰى قَدَرٍ مَّعْلُوْمٍۙ‏
اِلٰى قَدَرٍ ஒரு தவணை வரை مَّعْلُوْمٍۙ‏ குறிப்பிட்ட
77:22. இல்லா கத்ரிம் மஃலூம்
77:22. ஒரு குறிப்பிட்ட (கால) அளவு வரை.
77:23
77:23 فَقَدَرْنَا ۖ فَنِعْمَ الْقٰدِرُوْنَ‏
فَقَدَرْنَا ۖ நாம் திட்டமிட்டோம் فَنِعْمَ الْقٰدِرُوْنَ‏ நாமே சிறந்த திட்டமிடுபவர்கள்
77:23. Fபகதர்னா Fபனிஃமல் காதிரூன்
77:23. இவ்வாறு நாமே அதை அமைத்திருக்கின்றோம். அமைப்போரில் நாமே மேலானோர்.
77:24
77:24 وَيْلٌ يَّوْمَٮِٕذٍ لِّلْمُكَذِّبِيْنَ‏
وَيْلٌ நாசம்தான் يَّوْمَٮِٕذٍ அந்நாளில் لِّلْمُكَذِّبِيْنَ‏ பொய்ப்பித்தவர்களுக்கு
77:24. வய்லு(ன்)ய் யவ்ம 'இதில் லில்முகத்திBபீன்
77:24. பொய்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
77:25
77:25 اَلَمْ نَجْعَلِ الْاَرْضَ كِفَاتًا ۙ‏
اَلَمْ نَجْعَلِ நாம் ஆக்கவில்லையா? الْاَرْضَ பூமியை كِفَاتًا ۙ‏ ஒன்று சேர்க்கக்கூடியதாக
77:25. அலம் னஜ்'அலில் அர்ள கிFபாதா
77:25. பூமியை உங்களை அணைத்து (இடம் தந்து)க் கொண்டிருப்பதாக நாம் ஆக்கவில்லையா?
77:26
77:26 اَحْيَآءً وَّاَمْوَاتًا ۙ‏
اَحْيَآءً உயிருள்ளவர்களையும் وَّاَمْوَاتًا ۙ‏ இறந்தவர்களையும்
77:26. அஹ்யா'அ(ன்)வ் வ அம்வாதா
77:26. உயிருள்ளோருக்கும், மரித்தோருக்கும் (அது இடம் அளிக்கிறது).
77:27
77:27 وَّجَعَلْنَا فِيْهَا رَوَاسِىَ شٰمِخٰتٍ وَّ اَسْقَيْنٰكُمْ مَّآءً فُرَاتًا ؕ‏
وَّجَعَلْنَا நாம் ஆக்கினோம் فِيْهَا அதில் رَوَاسِىَ மலைகளை شٰمِخٰتٍ மிக பிரமாண்டமான وَّ اَسْقَيْنٰكُمْ இன்னும் உங்களுக்கு புகட்டினோம் مَّآءً நீரை فُرَاتًا ؕ‏ மதுரமான
77:27. வ ஜ'அல்னா Fபீஹா ரவாஸிய ஷாமிகாதி(ன்)வ் வ அஸ்கய்னாகும் மா'அன் Fபுராதா
77:27. அன்றியும், அதில் உயர்ந்த மலைகளையும் நாம் ஆக்கினோம்; இனிமையான தண்ணீரையும் நாம் உங்களுக்குப் புகட்டினோம்.
77:28
77:28 وَيْلٌ يَّوْمَٮِٕذٍ لِّلْمُكَذِّبِيْنَ‏
وَيْلٌ நாசம்தான் يَّوْمَٮِٕذٍ அந்நாளில் لِّلْمُكَذِّبِيْنَ‏ பொய்ப்பித்தவர்களுக்கு
77:28. வய்லு(ன்)ய் யவ்ம 'இதில் லில்முகத்திBபீன்
77:28. பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
77:29
77:29 اِنْطَلِقُوْۤا اِلٰى مَا كُنْتُمْ بِهٖ تُكَذِّبُوْنَ‌ۚ‏
اِنْطَلِقُوْۤا செல்லுங்கள் اِلٰى مَا எதன் பக்கம் كُنْتُمْ இருந்தீர்களோ بِهٖ அதை تُكَذِّبُوْنَ‌ۚ‏ பொய்ப்பிப்பவர்களாக
77:29. இன்தலிகூ இலா மா குன்தும் Bபிஹீ துகத்திBபூன்
77:29. “நீங்கள் எதைப் பொய்ப்படுத்திக் கொண்டிருந்தீர்களோ, அதன் பால் நடப்பீர்களாக” (என்று அவர்களுக்குக் கூறப்படும்).
77:30
77:30 اِنْطَلِقُوْۤا اِلٰى ظِلٍّ ذِىْ ثَلٰثِ شُعَبٍۙ‏
اِنْطَلِقُوْۤا செல்லுங்கள் اِلٰى ظِلٍّ புகையின் பக்கம் ذِىْ உடைய ثَلٰثِ மூன்று شُعَبٍۙ‏ கிளைகளை
77:30. இன்தலிகூ இலா ளில்லின் தீ தலாதி ஷு'அBப்
77:30. மூன்று கிளைகளுடைய (நரகப் புகை) நிழலின் பால் நடப்பீர்களாக.
77:31
77:31 لَّا ظَلِيْلٍ وَّلَا يُغْنِىْ مِنَ اللَّهَبِؕ‏
لَّا ظَلِيْلٍ நிழல்தரக் கூடியது அல்ல وَّلَا يُغْنِىْ அது தடுக்காது مِنَ اللَّهَبِؕ‏ ஜுவாலையை
77:31. லா ளலீலி(ன்)வ் வலா யுக்னீ மினல் லஹBப்
77:31. (அது) நிழலளிப்பதுமல்ல; (நரகின்) தீச்சுவாலையை விட்டுக் காப்பாற்றுவதுமல்ல.
77:32
77:32 اِنَّهَا تَرْمِىْ بِشَرَرٍ كَالْقَصْرِ‌ۚ‏
اِنَّهَا நிச்சயமாக அது تَرْمِىْ எறியும் بِشَرَرٍ நெருப்பு கங்குகளை كَالْقَصْرِ‌ۚ‏ மாளிகையைப் போல் உள்ள
77:32. இன்னஹா தர்மீ Bபிஷரரின் கல்கஸ்ர்
77:32. நிச்சயமாக அது பெரிய மாளிகைகளைப் போன்ற நெருப்புப் பொறிகளைக் கொண்டு வீசி எறிந்து கொண்டு இருக்கும்.
77:33
77:33 كَاَنَّهٗ جِمٰلَتٌ صُفْرٌ ؕ‏
كَاَنَّهٗ போல்/அவையோ جِمٰلَتٌ ஒட்டகைகளை صُفْرٌ ؕ‏ கரு மஞ்சள் நிற
77:33. க அன்னஹூ ஜிமாலதுன் ஸுFப்ர்
77:33. நிச்சயமாக அது மஞ்சள் நிறமுள்ள ஒட்டகைகள் போல் இருக்கும்.
77:34
77:34 وَيْلٌ يَّوْمَٮِٕذٍ لِّلْمُكَذِّبِيْنَ‏
وَيْلٌ நாசம்தான் يَّوْمَٮِٕذٍ அந்நாளில் لِّلْمُكَذِّبِيْنَ‏ பொய்ப்பித்தவர்களுக்கு
77:34. வய்லு(ன்)ய் யவ்ம 'இதில் லில்முகதிBபீன்
77:34. பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
77:35
77:35 هٰذَا يَوْمُ لَا يَنْطِقُوْنَۙ‏
هٰذَا இது يَوْمُ நாளாகும் لَا يَنْطِقُوْنَۙ‏ அவர்கள் பேசாத
77:35. ஹாதா யவ்மு லா யன்திகூன்
77:35. இது, அவர்கள் (எதுவும்) பேச முடியாத நாள்.
77:36
77:36 وَلَا يُؤْذَنُ لَهُمْ فَيَـعْتَذِرُوْنَ‏
وَلَا يُؤْذَنُ அனுமதி தரப்படாது لَهُمْ அவர்களுக்கு فَيَـعْتَذِرُوْنَ‏ அவர்கள் காரணம் கூறுவதற்கு
77:36. வ லா யு'தனு லஹும் Fப யஃததிரூன்
77:36. அன்றியும் (தப்புவிப்பதற்காகப்) புகல் கூறவும் அவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
77:37
77:37 وَيْلٌ يَّوْمَٮِٕذٍ لِّلْمُكَذِّبِيْنَ‏
وَيْلٌ நாசம்தான் يَّوْمَٮِٕذٍ அந்நாளில் لِّلْمُكَذِّبِيْنَ‏ பொய்ப்பித்தவர்களுக்கு
77:37. வய்லு(ன்)வ் யவ்ம 'இதில் லில்முகத்திBபீன்
77:37. பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
77:38
77:38 هٰذَا يَوْمُ الْفَصْلِ‌ۚ جَمَعْنٰكُمْ وَالْاَوَّلِيْنَ‏
هٰذَا இது يَوْمُ நாளாகும் الْفَصْلِ‌ۚ தீர்ப்பு جَمَعْنٰكُمْ உங்களை(யும்) ஒன்று சேர்த்துள்ளோம் وَالْاَوَّلِيْنَ‏ முன்னோரையும்
77:38. ஹாத யவ்முல் Fபஸ்லி ஜம 'னாகும் வல் அவ்வலீன்
77:38. இது தீர்ப்புக்குரிய நாளாகும். உங்களையும், (உங்களுக்கு) முன் இருந்தோரையும் நாம் ஒன்று சேர்க்கும் (நாள்).
77:39
77:39 فَاِنْ كَانَ لَـكُمْ كَيْدٌ فَكِيْدُوْنِ‏
فَاِنْ كَانَ இருந்தால் لَـكُمْ உங்களிடம் كَيْدٌ ஒரு சூழ்ச்சி فَكِيْدُوْنِ‏ எனக்கு சூழ்ச்சி செய்யுங்கள்
77:39. Fப இன் கான லகும் கய்துன் Fபகீதூன்
77:39. எனவே, (தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ள) உங்களிடம் சூழ்ச்சியிருக்குமானால், சூழ்ச்சி செய்து பாருங்கள்.
77:40
77:40 وَيْلٌ يَّوْمَٮِٕذٍ لِّلْمُكَذِّبِيْنَ
وَيْلٌ நாசம்தான் يَّوْمَٮِٕذٍ அந்நாளில் لِّلْمُكَذِّبِيْنَ‏ பொய்ப்பித்தவர்களுக்கு
77:40. வய்லு(ன்)ய் யவ்ம'இதில் லில்முகத்திBபீன்
77:40. பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
77:41
77:41 اِنَّ الْمُتَّقِيْنَ فِىْ ظِلٰلٍ وَّعُيُوْنٍۙ‏
اِنَّ நிச்சயமாக الْمُتَّقِيْنَ இறையச்சமுடையவர்கள் فِىْ ظِلٰلٍ நிழல்களிலும் وَّعُيُوْنٍۙ‏ ஊற்றுகளிலும்
77:41. இன்னல் முத்தகீன Fபீ ளிலாலி(ன்)வ் வ 'உயூன்
77:41. நிச்சயமாக, பயபக்தியுடையவர்கள் (குளிர்) நிழல்களிலும், நீர்ச் சுனைகளிலும் இருப்பார்கள்.
77:42
77:42 وَّفَوَاكِهَ مِمَّا يَشْتَهُوْنَؕ‏
وَّفَوَاكِهَ பழங்களிலும் مِمَّا يَشْتَهُوْنَؕ‏ அவர்கள் விரும்புகின்ற
77:42. வ Fபவாகிஹ மிம்மா யஷ்தஹூன்
77:42. இன்னும், அவர்கள் விரும்பும் கனிவகைகளும் உண்டு.
77:43
77:43 كُلُوْا وَاشْرَبُوْا هَنِيْٓئًا ۢ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ‏
كُلُوْا உண்ணுங்கள் وَاشْرَبُوْا இன்னும் பருகுங்கள் هَنِيْٓئًا ۢ இன்பமாக بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ‏ நீங்கள் செய்துகொண்டிருந்தவற்றுக்கு பகரமாக
77:43. குலூ வஷ்ரBபூ ஹனீ 'அம் Bபிமா குன்தும் தஃமலூன்
77:43. “நீங்கள் செய்து கொண்டிருந்த (நற்) செயல்களின் காரணமாக, சிரமமின்றி, தாராளமாக புசியுங்கள்; இன்னும் பருகுங்கள்” (என்று கூறப்படும்).
77:44
77:44 اِنَّا كَذٰلِكَ نَجْزِى الْمُحْسِنِيْنَ‏
اِنَّا நிச்சயமாக நாம் كَذٰلِكَ இவ்வாறுதான் نَجْزِى கூலி கொடுப்போம் الْمُحْسِنِيْنَ‏ நல்லறம் புரிபவர்களுக்கு
77:44. இன்னா கதாலிக னஜ்Zஜில் முஹ்ஸினீன்
77:44. நிச்சயமாக, இவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் கூலி கொடுப்போம்.
77:45
77:45 وَيْلٌ يَّوْمَٮِٕذٍ لِّلْمُكَذِّبِيْنَ‏
وَيْلٌ நாசம்தான் يَّوْمَٮِٕذٍ அந்நாளில் لِّلْمُكَذِّبِيْنَ‏ பொய்ப்பித்தவர்களுக்கு
77:45. வய்லு(ன்)ய் யவ்ம 'இதில் லில்முத்கத்திBபீன்
77:45. பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
77:46
77:46 كُلُوْا وَتَمَتَّعُوْا قَلِيْلًا اِنَّكُمْ مُّجْرِمُوْنَ‏
كُلُوْا உண்ணுங்கள் وَتَمَتَّعُوْا இன்புறுங்கள் قَلِيْلًا கொஞ்ச காலம் اِنَّكُمْ நிச்சயமாக நீங்கள் مُّجْرِمُوْنَ‏ குற்றவாளிகள்
77:46. குலூ வ தமத்த'ஊ கலீலன் இன்னகும் முஜ்ரிமூன்
77:46. (பொய்யாக்குவோரே உலகில்) இன்னும் கொஞ்ச (கால)ம் நீங்கள் புசித்துக் கொண்டும், சுகித்துக்கொண்டும் இருங்கள் - நிச்சயமாக நீங்கள் குற்றவாளிகளே.
77:47
77:47 وَيْلٌ يَّوْمَٮِٕذٍ لِّلْمُكَذِّبِيْنَ‏
وَيْلٌ நாசம்தான் يَّوْمَٮِٕذٍ அந்நாளில் لِّلْمُكَذِّبِيْنَ‏ பொய்ப்பித்தவர்களுக்கு
77:47. வய்லுன்(ன்)ய் யவ்ம 'இதில் லில்முகத்திBபீன்
77:47. பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
77:48
77:48 وَاِذَا قِيْلَ لَهُمُ ارْكَعُوْا لَا يَرْكَعُوْنَ‏
وَاِذَا قِيْلَ சொல்லப்பட்டால் لَهُمُ அவர்களுக்கு ارْكَعُوْا தொழுங்கள் لَا يَرْكَعُوْنَ‏ தொழ மாட்டார்கள்
77:48. வ இதா கீல லஹுமுர் க'ஊ லா யர்க'ஊன்
77:48. “நீங்கள் குனிந்து வணங்குங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் குனிந்து வணங்கமாட்டார்கள்.
77:49
77:49 وَيْلٌ يَّوْمَٮِٕذٍ لِّلْمُكَذِّبِيْنَ‏
وَيْلٌ எந்த குர்ஆனை يَّوْمَٮِٕذٍ அந்நாளில் لِّلْمُكَذِّبِيْنَ‏ பொய்ப்பித்தவர்களுக்கு
77:49. வய்லுன்(ன்)ய் யவ்ம 'இதில் லில்முகத்திBபீன்
77:49. பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
77:50
77:50 فَبِاَىِّ حَدِيْثٍۢ بَعْدَهٗ يُؤْمِنُوْنَ
فَبِاَىِّ حَدِيْثٍۢ எந்த குர்ஆனை بَعْدَهٗ இதற்குப் பின்னர் يُؤْمِنُوْنَ‏ இவர்கள் நம்பிக்கை கொள்வார்கள்
77:50. FபBபி அய்யி ஹதீதிம் Bபஃதஹூ யு'மினூன்
77:50. எனவே, இதன் பின்னர் எந்த விஷயத்தின் மீதுதான் அவர்கள் ஈமான் கொள்வார்கள்?