தேடல்


4:125
4:125 وَمَنْ اَحْسَنُ دِيْنًا مِّمَّنْ اَسْلَمَ وَجْهَهٗ لِلّٰهِ وَهُوَ مُحْسِنٌ وَّاتَّبَعَ مِلَّةَ اِبْرٰهِيْمَ حَنِيْفًا‌ ؕ وَاتَّخَذَ اللّٰهُ اِبْرٰهِيْمَ خَلِيْلًا‏
وَمَنْ யார் اَحْسَنُ மிக அழகானவர் دِيْنًا மார்க்கத்தால் مِّمَّنْ எவரைவிட اَسْلَمَ பணியவைத்தார் وَجْهَهٗ தன் முகத்தை لِلّٰهِ அல்லாஹ்விற்கு وَهُوَ அவர் இருக்க مُحْسِنٌ நற்குணமுடையவராக وَّاتَّبَعَ இன்னும் பின்பற்றினார் مِلَّةَ மார்க்கத்தை اِبْرٰهِيْمَ இப்ராஹீமுடைய حَنِيْفًا‌ ؕ உறுதியுடையவராக وَاتَّخَذَ இன்னும் எடுத்துக்கொண்டான் اللّٰهُ அல்லாஹ் اِبْرٰهِيْمَ இப்ராஹீமை خَلِيْلًا‏ நண்பராக
4:125. மேலும், எவர் நன்மை செய்யக்கூடிய நிலையில் அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்டு, இப்ராஹீமுடைய தூய மார்க்கத்தையும் பின் பற்றுகிறாரோ அவரைவிட அழகிய மார்க்கத்தை உடையவர் யார்? இன்னும் அல்லாஹ் இப்ராஹீமை தன் மெய்யன்பராக எடுத்துக் கொண்டான்.
4:163
4:163 اِنَّاۤ اَوْحَيْنَاۤ اِلَيْكَ كَمَاۤ اَوْحَيْنَاۤ اِلٰى نُوْحٍ وَّالنَّبِيّٖنَ مِنْۢ بَعْدِهٖ‌ ۚ وَاَوْحَيْنَاۤ اِلٰٓى اِبْرٰهِيْمَ وَاِسْمٰعِيْلَ وَاِسْحٰقَ وَيَعْقُوْبَ وَالْاَسْبَاطِ وَعِيْسٰى وَاَيُّوْبَ وَيُوْنُسَ وَهٰرُوْنَ وَسُلَيْمٰنَ‌ ۚ وَاٰتَيْنَا دَاوٗدَ زَبُوْرًا‌ ۚ‏
اِنَّاۤ நிச்சயமாக நாம் اَوْحَيْنَاۤ வஹீ அறிவித்தோம் اِلَيْكَ உமக்கு كَمَاۤ போன்றே اَوْحَيْنَاۤ வஹீ அறிவித்தோம் اِلٰى نُوْحٍ நூஹுக்கு وَّالنَّبِيّٖنَ இன்னும் நபிமார்களுக்கு مِنْۢ بَعْدِهٖ‌ ۚ அவருக்குப் பின்னர் وَاَوْحَيْنَاۤ இன்னும் வஹீ அறிவித்தோம் اِلٰٓى اِبْرٰهِيْمَ இப்ராஹீமுக்கு وَاِسْمٰعِيْلَ இன்னும் இஸ்மாயீல் وَاِسْحٰقَ இன்னும் இஸ்ஹாக் وَيَعْقُوْبَ இன்னும் யஃகூப் وَالْاَسْبَاطِ இன்னும் சந்ததிகள் وَعِيْسٰى இன்னும் ஈஸா وَاَيُّوْبَ இன்னும் அய்யூப் وَيُوْنُسَ இன்னும் யூனுஸ் وَهٰرُوْنَ இன்னும் ஹாரூன் وَسُلَيْمٰنَ‌ ۚ இன்னும் ஸுலைமான் وَاٰتَيْنَا இன்னும் கொடுத்தோம் دَاوٗدَ தாவூதுக்கு زَبُوْرًا‌ ஸபூரை
4:163. (நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த (இதர) நபிமார்களுக்கும் நாம் வஹீ அறிவித்தது போலவே, உமக்கும் நிச்சயமாக வஹீ அறிவித்தோம். மேலும், இப்ராஹீமுக்கும், இஸ்மாயீலுக்கும், இஸ்ஹாக்குக்கும், யஃகூபுக்கும் (அவர்களுடைய) சந்ததியினருக்கும், ஈஸாவுக்கும், அய்யூபுக்கும், யூனுஸுக்கும், ஹாரூனுக்கும், ஸுலைமானுக்கும் நாம் வஹீ அறிவித்தோம்; இன்னும் தாவூதுக்கு ஜபூர் (என்னும் வேதத்தைக்) கொடுத்தோம்.
6:74
6:74 وَاِذْ قَالَ اِبْرٰهِيْمُ لِاَبِيْهِ اٰزَرَ اَتَتَّخِذُ اَصْنَامًا اٰلِهَةً ‌ ۚ اِنِّىْۤ اَرٰٮكَ وَقَوْمَكَ فِىْ ضَلٰلٍ مُّبِيْنٍ‏
وَاِذْ قَالَ கூறிய சமயத்தை اِبْرٰهِيْمُ இப்றாஹீம் لِاَبِيْهِ தன் தந்தைக்கு اٰزَرَ ஆஸர் اَتَتَّخِذُ எடுத்துக்கொள்கிறீரா? اَصْنَامًا சிலைகளை اٰلِهَةً ۚ வணங்கப்படும் தெய்வங்களாக اِنِّىْۤ நிச்சயமாக நான் اَرٰٮكَ காண்கிறேன்/உம்மை وَقَوْمَكَ இன்னும் உம் சமுதாயம் فِىْ ضَلٰلٍ வழிகேட்டில் مُّبِيْنٍ‏ தெளிவானது
6:74. இப்ராஹீம் தம் தகப்பனார் ஆஜரிடம், “விக்கிரகங்களையா நீர் தெய்வங்களாக எடுத்துக் கொள்கிறீர்? நான் உம்மையும் உம் சமூகத்தாரையும், பகிரங்கமான வழி கேட்டில் இருப்பதை நிச்சயமாக பார்க்கிறேன்” என்று கூறியதை நினைத்துப்பாரும்.
6:75
6:75 وَكَذٰلِكَ نُرِىْۤ اِبْرٰهِيْمَ مَلَـكُوْتَ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَلِيَكُوْنَ مِنَ الْمُوْقِـنِيْنَ‏
وَكَذٰلِكَ இவ்வாறுதான் نُرِىْۤ காண்பித்தோம் اِبْرٰهِيْمَ இப்றாஹீமுக்கு مَلَـكُوْتَ பேராட்சியை السَّمٰوٰتِ வானங்கள் وَالْاَرْضِ இன்னும் பூமியின் وَلِيَكُوْنَ இன்னும் அவர்ஆவதற்காக مِنَ الْمُوْقِـنِيْنَ‏ உறுதியான நம்பிக்கை உடையவர்களில்
6:75. அவர் உறுதியான நம்பிக்கையுடையவராய் ஆகும் பொருட்டு வானங்கள், பூமி இவற்றின் ஆட்சியை இப்ராஹீமுக்கு இவ்வாறு காண்பித்தோம்.
6:83
6:83 وَتِلْكَ حُجَّتُنَاۤ اٰتَيْنٰهَاۤ اِبْرٰهِيْمَ عَلٰى قَوْمِهٖ‌ؕ نَرْفَعُ دَرَجٰتٍ مَّنْ نَّشَآءُ ‌ؕ اِنَّ رَبَّكَ حَكِيْمٌ عَلِيْمٌ‏
وَتِلْكَ இவை حُجَّتُنَاۤ நம் சான்று اٰتَيْنٰهَاۤ கொடுத்தோம்/அவற்றை اِبْرٰهِيْمَ இப்றாஹீமுக்கு عَلٰى எதிராக قَوْمِهٖ‌ؕ அவருடைய சமுதாயம் نَرْفَعُ உயர்த்துகிறோம் دَرَجٰتٍ பதவிகளால் مَّنْ எவரை نَّشَآءُ ؕ நாடுகிறோம் اِنَّ நிச்சயமாக رَبَّكَ உம் இறைவன் حَكِيْمٌ ஞானவான் عَلِيْمٌ‏ நன்கறிந்தவன்
6:83. இவை நம்முடைய ஆதாரங்களாகும், நாம் இவற்றை இப்ராஹீமுக்கு அவருடைய கூட்டத்திற்கு எதிராகக் கொடுத்தோம்; நாம் விரும்புவோருக்கு பதவிகளை (மேலும் மேலும்) உயர்த்துகிறோம்; நிச்சயமாக உம்முடைய இறைவன் பூரண ஞானமும் பேரறிவும் உள்ளவன்.
6:161
6:161 قُلْ اِنَّنِىْ هَدٰٮنِىْ رَبِّىْۤ اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍۚ دِيْنًا قِيَمًا مِّلَّةَ اِبْرٰهِيْمَ حَنِيْفًا‌ ۚ وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِيْنَ‏
قُلْ கூறுவீராக اِنَّنِىْ நிச்சயமாக நான் هَدٰٮنِىْ நேர்வழி காட்டினான் எனக்கு رَبِّىْۤ என் இறைவன் اِلٰى صِرَاطٍ பாதையின் பக்கம் مُّسْتَقِيْمٍۚ நேரானது دِيْنًا மார்க்கமாகும் قِيَمًا நிலையான مِّلَّةَ கொள்கை اِبْرٰهِيْمَ இப்ராஹீமுடைய حَنِيْفًا‌ ۚ உறுதியுடையவர் وَمَا كَانَ அவர் இருக்கவில்லை مِنَ الْمُشْرِكِيْنَ‏ இணைவைப்பவர்களில்
6:161. (நபியே!) நீர் கூறும்: “மெய்யாகவே என் இறைவன் எனக்கு நேரான பாதையின் பால் வழி காட்டினான் - அது மிக்க உறுதியான மார்க்கமாகும்; இப்ராஹீமின் நேர்மையான மார்க்கமுமாகும், அவர் இணைவைப்பவர்களில் ஒருவராக இருக்கவில்லை.
9:70
9:70 اَلَمْ يَاْتِهِمْ نَبَاُ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ قَوْمِ نُوْحٍ وَّعَادٍ وَّثَمُوْدَ  ۙ وَقَوْمِ اِبْرٰهِيْمَ وَاَصْحٰبِ مَدْيَنَ وَالْمُؤْتَفِكٰتِ‌ ؕ اَتَتْهُمْ رُسُلُهُمْ بِالْبَيِّنٰتِ‌‌ ۚ فَمَا كَانَ اللّٰهُ لِيَظْلِمَهُمْ وَلٰـكِنْ كَانُوْۤا اَنْفُسَهُمْ يَظْلِمُوْنَ‏
اَلَمْ வரவில்லையா يَاْتِهِمْ அவர்களுக்கு نَبَاُ செய்தி, சரித்திரம் الَّذِيْنَ எவர்கள் مِنْ قَبْلِهِمْ இவர்களுக்கு முன்னர் قَوْمِ சமுதாயம் نُوْحٍ நூஹூடைய وَّعَادٍ இன்னும் ஆது وَّثَمُوْدَ  ۙ இன்னும் ஸமூது وَقَوْمِ இன்னும் சமுதாயம் اِبْرٰهِيْمَ இப்றாஹீம் وَاَصْحٰبِ مَدْيَنَ இன்னும் மத்யன் வாசிகள் وَالْمُؤْتَفِكٰتِ‌ ؕ தலைகீழாக புரட்டப்பட்ட ஊர்கள் اَتَتْهُمْ அவர்கள் வந்தார்கள் رُسُلُهُمْ அவர்களுடைய தூதர்கள் بِالْبَيِّنٰتِ‌ ۚ அத்தாட்சிகளைக் கொண்டு فَمَا كَانَ இருக்கவில்லை اللّٰهُ அல்லாஹ் لِيَظْلِمَهُمْ அவர்களுக்கு அநீதியிழைப்பவனாக وَلٰـكِنْ எனினும் كَانُوْۤا இருந்தனர் اَنْفُسَهُمْ தங்களுக்கே يَظْلِمُوْنَ‏ அநீதியிழைப்பவர்களாக
9:70. இவர்களுக்கு முன்னிருந்த நூஹ்வுடைய சமுதாயம், ஆது, ஸமூதுடைய சமுதாயம் இப்ராஹீம் உடைய சமுதாயம் மத்யன் வாசிகள் தலைகீழாய்ப் புரண்டுபோன ஊரார் ஆகியவர்களின் வரலாறு அவர்களிடம் வரவில்லையா? அவர்களுக்கு (நாம் அனுப்பிய) அவர்களுக்குரிய (இறை) தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளை கொண்டு வந்தார்கள்; (தூதர்களை நிராகரித்ததினால் அவர்கள் அழிந்தனர்.) அல்லாஹ் அவர்களுக்கு ஒரு தீங்கும் இழைக்கவில்லை; எனினும் அவர்கள் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்கள்.
9:114
9:114 وَمَا كَانَ اسْتِغْفَارُ اِبْرٰهِيْمَ لِاَبِيْهِ اِلَّا عَنْ مَّوْعِدَةٍ وَّعَدَهَاۤ اِيَّاهُ‌ ۚ فَلَمَّا تَبَيَّنَ لَهٗۤ اَنَّهٗ عَدُوٌّ لِّلّٰهِ تَبَرَّاَ مِنْهُ‌ ؕ اِنَّ اِبْرٰهِيْمَ لَاَوَّاهٌ حَلِيْمٌ‏
وَمَا كَانَ இருக்கவில்லை اسْتِغْفَارُ மன்னிப்புக் கோரியது اِبْرٰهِيْمَ இப்றாஹீம் لِاَبِيْهِ தன் தந்தைக்கு اِلَّا தவிர عَنْ مَّوْعِدَةٍ ஒரு வாக்குறுதிக்காக وَّعَدَهَاۤ அதை வாக்களித்தார் اِيَّاهُ‌ ۚ அவருக்கு فَلَمَّا تَبَيَّنَ தெளிவான போது لَهٗۤ அவருக்கு اَنَّهٗ நிச்சயமாக அவர் عَدُوٌّ ஓர் எதிரி لِّلّٰهِ அல்லாஹ்வுக்கு تَبَرَّاَ அவர் விலகிக் கொண்டார் مِنْهُ‌ ؕ அவரிலிருந்து اِنَّ اِبْرٰهِيْمَ நிச்சயமாக இப்றாஹீம் لَاَوَّاهٌ அதிகம் பிரார்த்திப்பவர் حَلِيْمٌ‏ பெரும் சகிப்பாளர்
9:114. இப்ராஹீம் (நபி) தம் தந்தைக்காக மன்னிப்புக் கோரியதெல்லாம், அவர் தம் தந்தைக்குச் செய்திருந்த ஒரு வாக்குறுதிக்காகவேயன்றி வேறில்லை; மெய்யாகவே, அவர் (தந்தை) அல்லாஹ்வுக்கு விரோதி என்பது தெளிவாகியதும் அதிலிருந்து அவர் விலகிக் கொண்டார் - நிச்சயமாக இப்ராஹீம் பொறுமையுடையவராகவும் இரக்கமுள்ளவராகவும் இருந்தார்.
11:69
11:69 وَلَقَدْ جَآءَتْ رُسُلُنَاۤ اِبْرٰهِيْمَ بِالْبُشْرٰى قَالُوْا سَلٰمًا‌ ؕ قَالَ سَلٰمٌ‌ فَمَا لَبِثَ اَنْ جَآءَ بِعِجْلٍ حَنِيْذٍ‏
وَلَقَدْ திட்டவட்டமாக جَآءَتْ வந்தனர் رُسُلُنَاۤ நம் தூதர்கள் اِبْرٰهِيْمَ இப்றாஹீமிடம் بِالْبُشْرٰى நற்செய்தியைக் கொண்டு قَالُوْا கூறினர் سَلٰمًا‌ ؕ ஈடேற்றம் உண்டாகுக قَالَ கூறினார் سَلٰمٌ‌ ஈடேற்றம் உண்டாகுக فَمَا لَبِثَ அவர் தாமதிக்கவில்லை اَنْ جَآءَ வருவதற்கு بِعِجْلٍ ஒரு கன்றுக் குட்டியைக் கொண்டு حَنِيْذٍ‏ சுடப்பட்டது
11:69. நிச்சயமாக நம் தூதர்கள் (வானவர்கள்) இப்ராஹீமுக்கு நற்செய்தி (கொண்டு வந்து) “ஸலாம்” (சொன்னார்கள்; இப்ராஹீமும் “ஸலாம்” (என்று பதில்) சொன்னார்; (அதன் பின்னர் அவர்கள் உண்பதற்காக) பொரித்த கன்றின் (இறைச்சியைக்) கொண்டு வருவதில் தாமதிக்கவில்லை.
11:74
11:74 فَلَمَّا ذَهَبَ عَنْ اِبْرٰهِيْمَ الرَّوْعُ وَجَآءَتْهُ الْبُشْرٰى يُجَادِلُــنَا فِىْ قَوْمِ لُوْطٍؕ‏
فَلَمَّا ذَهَبَ சென்றபோது عَنْ اِبْرٰهِيْمَ இப்றாஹீமை விட்டு الرَّوْعُ திடுக்கம் وَجَآءَتْهُ இன்னும் வந்தது/அவருக்கு الْبُشْرٰى நற்செய்தி يُجَادِلُــنَا தர்க்கித்தார்/நம்மிடம் فِىْ قَوْمِ மக்கள் விஷயத்தில் لُوْطٍؕ‏ லூத்துடைய
11:74. (இது கேட்டு) இப்ராஹீமை விட்டுப் பயம் நீங்கி, நன்மாராயம் அவருக்கு வந்ததும் லூத்துடைய சமூகத்தாரைப் பற்றி நம்மிடம் வாதிடலானார்.