தேடல்


12:45
12:45 وَقَالَ الَّذِىْ نَجَا مِنْهُمَا وَادَّكَرَ بَعْدَ اُمَّةٍ اَنَا اُنَـبِّئُكُمْ بِتَاْوِيْلِهٖ فَاَرْسِلُوْنِ‏
وَقَالَ கூறினான் الَّذِىْ எவன் نَجَا தப்பித்தான் مِنْهُمَا அவ்விருவரில் وَادَّكَرَ இன்னும் நினைவு கூர்ந்தான் بَعْدَ பின்னர் اُمَّةٍ சில ஆண்டு اَنَا நான் اُنَـبِّئُكُمْ அறிவிப்பேன்/ உங்களுக்கு بِتَاْوِيْلِهٖ அவருடைய விளக்கத்தை فَاَرْسِلُوْنِ‏ ஆகவே அனுப்புங்கள்/என்னை
12:45. அவ்விருவரில் (சிறையிலிருந்து) விடுதலையடைந்திருந்தவர், நீண்ட காலத்திற்குப் பின்னர், (யூஸுஃபை) நினைவு கூர்ந்து “இக்கனவின் விளக்கத்தை நான் உங்களுக்கு அறிவிப்பேன், என்னை (யூஸுஃபிடம்) அனுப்பி வையுங்கள்” என்று சொன்னார்.
12:46
12:46 يُوْسُفُ اَيُّهَا الصِّدِّيْقُ اَ فْتِنَا فِىْ سَبْعِ بَقَرٰتٍ سِمَانٍ يَّاْكُلُهُنَّ سَبْعٌ عِجَافٌ وَّسَبْعِ سُنْۢبُلٰتٍ خُضْرٍ وَّاُخَرَ يٰبِسٰتٍ ۙ لَّعَلِّىْۤ اَرْجِعُ اِلَى النَّاسِ لَعَلَّهُمْ يَعْلَمُوْنَ‏
يُوْسُفُ யூஸுஃபே! اَيُّهَا الصِّدِّيْقُ உண்மையாளரே! فْتِنَا எங்களுக்கு فِىْ سَبْعِ بَقَرٰتٍ ஏழுபசுக்கள்பற்றியும் سِمَانٍ கொழுத்தவை يَّاْكُلُهُنَّ புசிக்கின்றன/அவற்றை سَبْعٌ ஏழு عِجَافٌ இளைத்தவை وَّسَبْعِ இன்னும் ஏழு سُنْۢبُلٰتٍ கதிர்கள் خُضْرٍ பசுமையானவை وَّاُخَرَ இன்னும் மற்றவை يٰبِسٰتٍ ۙ காய்ந்தவை لَّعَلِّىْۤ اَرْجِعُ நான் திரும்பி செல்லவேண்டும் اِلَى النَّاسِ மக்களிடம் لَعَلَّهُمْ يَعْلَمُوْنَ‏ அவர்கள் அறியவேண்டும்
12:46. (சிறையில் யூஸுஃபை கண்ட) அவர், “யூஸுஃபே! உண்மையாளரே! ஏழு கொழுத்த பசுக்களை, ஏழு மெலிந்த பசுக்கள் தின்பதையும்; பசுமையான ஏழு கதிர்களையும் வேறு (ஏழு) காய்ந்து (சாவியாகிவிட்ட) கதிர்களையும் (கனவில் கண்டால் அக்கனவுக்குப் பலன் என்ன என்பதை) எனக்கு அறிவிப்பீராக; மக்கள் அறிந்து கொள்வதற்காக அவர்களிடம் திரும்பிப் போய்(ச் சொல்ல) வேண்டியிருக்கிறது” (என்று கூறினார்).
12:50
12:50 وَقَالَ الْمَلِكُ ائْتُوْنِىْ بِهٖ‌ۚ فَلَمَّا جَآءَهُ الرَّسُوْلُ قَالَ ارْجِعْ اِلٰى رَبِّكَ فَسْـٴَــلْهُ مَا بَالُ النِّسْوَةِ الّٰتِىْ قَطَّعْنَ اَيْدِيَهُنَّ‌ؕ اِنَّ رَبِّىْ بِكَيْدِهِنَّ عَلِيْمٌ‏
وَقَالَ கூறினார் الْمَلِكُ அரசர் ائْتُوْنِىْ வாருங்கள்/என்னிடம் بِهٖ‌ۚ அவரைக் கொண்டு فَلَمَّا جَآءَ வந்த போது هُ அவரிடம் الرَّسُوْلُ தூதர் قَالَ கூறினார் ارْجِعْ நீ திரும்பிச் செல் اِلٰى رَبِّكَ உன் எஜமானனிடம் فَسْـٴَــلْهُ கேள்/அவரை مَا بَالُ விஷயமென்ன? النِّسْوَةِ பெண்களின் الّٰتِىْ எவர்கள் قَطَّعْنَ வெட்டினர் اَيْدِيَهُنَّ‌ؕ தங்கள் கைகளை اِنَّ رَبِّىْ நிச்சயமாக என் இறைவன் بِكَيْدِ சூழ்ச்சியை هِنَّ அவர்களின் عَلِيْمٌ‏ நன்கறிந்தவன்
12:50. (“இவ்விவரம் அரசருக்கு அறிவிக்கப்பட்டதும்) அவரை என்னிடம் அழைத்து வாருங்கள்” என்று அரசர் கூறினார்; (அவருடைய) தூதர் யூஸுஃபிடம் வந்தபோது அவர், “நீர் உம் எஜமானரிடம் திரும்பிச் சென்று, “தம் கைகளை வெட்டிக்கொண்ட பெண்களின் உண்மை நிலை என்ன?” என்று அவரிடம் கேளும். நிச்சயமாக என் இறைவன் அப்பெண்களின் சதியை நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்” என்று கூறினார்.
12:51
12:51 قَالَ مَا خَطْبُكُنَّ اِذْ رَاوَدْتُّنَّ يُوْسُفَ عَنْ نَّـفْسِهٖ‌ؕ قُلْنَ حَاشَ لِلّٰهِ مَا عَلِمْنَا عَلَيْهِ مِنْ سُوْۤءٍ‌ ؕ قَالَتِ امْرَاَتُ الْعَزِيْزِ الْــٰٔنَ حَصْحَصَ الْحَقُّ اَنَا رَاوَدْتُّهٗ عَنْ نَّـفْسِهٖ وَاِنَّهٗ لَمِنَ الصّٰدِقِيْنَ‏
قَالَ கேட்டார் مَا خَطْبُكُنَّ உங்கள்நிலைஎன்ன? اِذْ போது رَاوَدْتُّنَّ ஆசைக்கு அழைத்தீர்கள் يُوْسُفَ யூஸுஃபை عَنْ نَّـفْسِهٖ‌ؕ பலவந்தமாக قُلْنَ கூறினர் حَاشَ பாதுகாப்பானாக لِلّٰهِ அல்லாஹ் مَا عَلِمْنَا நாங்கள் அறியவில்லை عَلَيْهِ அவரிடத்தில் مِنْ سُوْۤءٍ‌ ؕ ஒரு தீங்கை قَالَتِ கூறினாள் امْرَاَتُ மனைவி الْعَزِيْزِ அதிபரின் الْــٰٔنَ இப்போது حَصْحَصَ வெளிப்பட்டு விட்டது الْحَقُّ உண்மை اَنَا நான்தான் رَاوَدْتُّهٗ என் விருப்பத்திற்கு அழைத்தேன்/அவரை عَنْ نَّـفْسِهٖ நிர்பந்தமாக وَاِنَّهٗ நிச்சயமாக அவர் لَمِنَ الصّٰدِقِيْنَ‏ உண்மையாளர்களில்
12:51. (இவ்விவரம் அறிந்த அரசர் அப் பெண்களை அழைத்து) “நீங்கள் யூஸுஃபை உங்கள் விருப்பத்திற்கு இணங்குமாறு அழைத்தபோது உங்களுக்கு நேர்ந்தது என்ன?” என்று கேட்டார்; (அதற்கு) அப் பெண்கள், “அல்லாஹ் எங்களை காப்பானாக! நாங்கள் அவரிடத்தில் யாதொரு கெடுதியையும் அறியவில்லை” என்று கூறினார்கள்; அஜீஸுடைய மனைவி, “இப்பொழுது (எல்லோருக்கும்) உண்மை வெளிப்பட்டு விட்டது. நான் தான் இவரை என் விருப்பத்திற்கு இணங்குமாறு வற்புறுத்தினேன். நிச்சயமாக அவர் உண்மையாளர்களில் உள்ளவர்” என்று கூறினாள்.
12:54
12:54 وَقَالَ الْمَلِكُ ائْتُوْنِىْ بِهٖۤ اَسْتَخْلِصْهُ لِنَفْسِىْ‌ۚ‌ فَلَمَّا كَلَّمَهٗ قَالَ اِنَّكَ الْيَوْمَ لَدَيْنَا مَكِيْنٌ اَمِيْنٌ‏
وَقَالَ கூறினார் الْمَلِكُ அரசர் ائْتُوْنِىْ வாருங்கள்/என்னிடம் بِهٖۤ அவரைக் கொண்டு اَسْتَخْلِصْهُ பிரத்தியேகமாக நான் ஆக்கிக்கொள்வேன்/அவரை لِنَفْسِىْ‌ۚ‌ எனக்கென மட்டும் فَلَمَّا போது كَلَّمَهٗ பேசினார்/அவருடன் قَالَ கூறினார் اِنَّكَ நிச்சயமாக நீர் الْيَوْمَ இன்று لَدَيْنَا நம்மிடம் مَكِيْنٌ தகுதியுடையவர் اَمِيْنٌ‏ நம்பிக்கையாளர்
12:54. இன்னும், அரசர் கூறினார்: “அவரை என்னிடம் அழைத்து வாருங்கள்; அவரை நான் என் நெருங்கிய - (ஆலோசக)ராக அமர்த்திக் கொள்வேன்” (இவ்வாறு அரசரிடம் யூஸுஃபு வந்ததும்) அவரிடம் பேசி (அவர் ஞானத்தை நன்கறிந்த பொழுது) “நிச்சயமாக நீர் இன்றிலிருந்து நம்மிடம் பெரும் அந்தஸ்துள்ளவராகவும் நம்பிக்கைக்குரியவராகவும் (உயர்ந்து) இருக்கிறீர்” என்று கூறினார்.
12:55
12:55 قَالَ اجْعَلْنِىْ عَلٰى خَزَآٮِٕنِ الْاَرْضِ‌ۚ اِنِّىْ حَفِيْظٌ عَلِيْمٌ‏
قَالَ கூறினார் اجْعَلْنِىْ ஆக்குவீராக/என்னை عَلٰى மீது خَزَآٮِٕنِ கஜானாக்கள் الْاَرْضِ‌ۚ நாட்டின் اِنِّىْ நிச்சயமாக நான் حَفِيْظٌ பாதுகாப்பவன் عَلِيْمٌ‏ நன்கறிந்தவன்
12:55. (யூஸுஃப்) கூறினார்: “(இந்த) பூமியின் களஞ்சியங்களுக்கு என்னை (அதிகாரியாய்) ஆக்கிவிடுவீராக; நிச்சயமாக நான் (அவற்றைப்) பாதுகாக்க நன்கறிந்தவன்.”
12:56
12:56 وَكَذٰلِكَ مَكَّنَّا لِيُوْسُفَ فِى الْاَرْضِ‌ۚ يَتَبَوَّاُ مِنْهَا حَيْثُ يَشَآءُ‌ ؕ نُصِيْبُ بِرَحْمَتِنَا مَنْ نَّشَآءُ‌ۚ وَلَا نُضِيْعُ اَجْرَ الْمُحْسِنِيْنَ‏
وَكَذٰلِكَ இவ்வாறே مَكَّنَّا வசதியளித்தோம் لِيُوْسُفَ யூஸுஃபுக்கு فِى الْاَرْضِ‌ۚ அந்நாட்டில் يَتَبَوَّاُ தங்கிக்கொள்வார் مِنْهَا அதில் حَيْثُ இடம் يَشَآءُ‌ ؕ நாடுகின்றார் نُصِيْبُ நாம் தருகிறோம் بِرَحْمَتِنَا நம் அருளை مَنْ எவர் نَّشَآءُ‌ۚ நாடுகின்றோம் وَلَا نُضِيْعُ வீணாக்க மாட்டோம் اَجْرَ கூலியை الْمُحْسِنِيْنَ‏ நல்லறம் புரிபவர்களின்
12:56. யூஸுஃப் தான் விரும்பிய விதத்தில் காரியங்கள் செய்து வர அந்த நாட்டில் யூஸுஃபுக்கு நாம் இவ்வாறே வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தோம்; இவ்வாறே நாம் நாடியவருக்கு நமது அருள் கிடைக்கும் படிச் செய்கின்றோம். நன்மை செய்பவர்களின் கூலியை நாம் வீணாக்க மாட்டோம்.
12:58
12:58 وَجَآءَ اِخْوَةُ يُوْسُفَ فَدَخَلُوْا عَلَيْهِ فَعَرَفَهُمْ وَهُمْ لَهٗ مُنْكِرُوْنَ‏
وَجَآءَ வந்தார்(கள்) اِخْوَةُ சகோதரர்கள் يُوْسُفَ யூஸுஃபுடைய فَدَخَلُوْا இன்னும் நுழைந்தார்கள் عَلَيْهِ அவரிடம் فَعَرَفَهُمْ அறிந்தார்/அவர்களை وَهُمْ அவர்கள் لَهٗ அவரை مُنْكِرُوْنَ‏ அறியாதவர்களாக
12:58. (பின்னர் யூஸுஃபுடைய சகோதரர்கள் (மிஸ்ரு நாட்டுக்கு) வந்து, அவரிடம் நுழைந்த போது யூஸுஃப் அவர்களை அறிந்து கொண்டார்; ஆனால் அவர்களோ அவரை அறியாதவர்களாக இருந்தனர்,
12:59
12:59 وَ لَمَّا جَهَّزَهُمْ بِجَهَازِهِمْ قَالَ ائْتُوْنِىْ بِاَخٍ لَّكُمْ مِّنْ اَبِيْكُمْ‌ۚ اَلَا تَرَوْنَ اَنِّىْۤ اُوْفِی الْكَيْلَ وَاَنَا خَيْرُ الْمُنْزِلِيْنَ‏
وَ لَمَّا போது جَهَّزَ தயார்படுத்தினார் هُمْ அவர்களுக்கு بِجَهَازِ சாமான்களை هِمْ அவர்களுடைய قَالَ கூறினார் ائْتُوْ வாருங்கள் نِىْ என்னிடம் بِاَخٍ ஒரு சகோதரனைக் கொண்டு لَّكُمْ உங்களுக்குள்ள مِّنْ மூலமாக اَبِيْكُمْ‌ۚ உங்கள் தந்தை اَلَا تَرَوْنَ நீங்கள் கவனிக்கவில்லையா? اَنِّىْۤ நிச்சயமாக நான் اُوْفِی முழுமையாக்குவேன் الْكَيْلَ அளவையை وَاَنَا خَيْرُ நான் சிறந்தவன் الْمُنْزِلِيْنَ‏ விருந்தளிப்பவர்களில்
12:59. (யூஸுஃப்) அவர்களுக்கு வேண்டிய பொருள் (தானியங்களைச்) சித்தம் செய்து கொடுத்த போது, (அவர்களை நோக்கி) “உங்கள் தந்தை வழிச் சகோதரனை (மறுமுறை நீங்கள் இங்கு வரும்போது) என்னிடம் அழைத்து வாருங்கள். நிச்சயமாக நான் உங்களுக்கு (தானியங்களை நிரப்பமாக) அளந்து கொடுத்ததையும், விருந்துபசாரம் செய்வதில் நான் “சிறந்தவன்” என்பதையும் நீங்கள் பார்க்கவில்லையா?
12:62
12:62 وَقَالَ لِفِتْيٰنِهِ اجْعَلُوْا بِضَاعَتَهُمْ فِىْ رِحَالِهِمْ لَعَلَّهُمْ يَعْرِفُوْنَهَاۤ اِذَا انْقَلَبُوْۤا اِلٰٓى اَهْلِهِمْ لَعَلَّهُمْ يَرْجِعُوْنَ‏
وَقَالَ கூறினார் لِفِتْيٰنِهِ தன் வாலிபர்களிடம் اجْعَلُوْا வையுங்கள் بِضَاعَتَهُمْ அவர்களுடைய கிரயத்தை فِىْ رِحَالِهِمْ அவர்களுடைய மூட்டைகளில் لَعَلَّهُمْ அவர்கள் அறியவேண்டும் يَعْرِفُوْنَهَاۤ அதை اِذَا انْقَلَبُوْۤا அவர்கள் திரும்பினால் اِلٰٓى اَهْلِهِمْ தங்கள் குடும்பத்திடம் لَعَلَّهُمْ يَرْجِعُوْنَ‏ அவர்கள் திரும்பி வரவேண்டும்
12:62. (பின்னர் யூஸுஃப்) தம் பணியாட்களை நோக்கி, “அவர்கள் கிரயமாகக் கொடுத்த பொருளை அவர்களுடைய மூட்டைகளிலே வைத்து விடுங்கள்; அவர்கள் தம் குடும்பத்தாரிடம் சென்ற பிறகு இதை அறிந்தால், (நம்மிடம் அதைச் சேர்ப்பிக்க) அவர்கள் திரும்பி வரக்கூடும்” என்று கூறினார்.