தேடல்


18:110
18:110 قُلْ اِنَّمَاۤ اَنَا بَشَرٌ مِّثْلُكُمْ يُوْحٰٓى اِلَىَّ اَنَّمَاۤ اِلٰهُكُمْ اِلٰـهٌ وَّاحِدٌ‌  ۚ فَمَنْ كَانَ يَرْجُوْالِقَآءَ رَبِّهٖ فَلْيَـعْمَلْ عَمَلًا صَالِحًـاوَّلَايُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهٖۤ اَحَدًا‏
قُلْ கூறுவீராக اِنَّمَاۤ اَنَا நானெல்லாம் بَشَرٌ ஒரு மனிதன்தான் مِّثْلُكُمْ உங்களைப் போன்ற يُوْحٰٓى வஹீ அறிவிக்கப்படுகிறது اِلَىَّ எனக்கு اَنَّمَاۤ எல்லாம் اِلٰهُكُمْ உங்கள் கடவுள் اِلٰـهٌ கடவுள் وَّاحِدٌ‌  ۚ ஒரே ஒரு فَمَنْ ஆகவே, எவர் كَانَ இருக்கிறார் يَرْجُوْا ஆதரவு வைப்பார் لِقَآءَ சந்திப்பை رَبِّهٖ தன் இறைவனின் فَلْيَـعْمَلْ அவர் செய்யட்டும் عَمَلًا செயலை صَالِحًـا நல்லது وَّلَايُشْرِكْ இன்னும் இணையாக்க வேண்டாம் بِعِبَادَةِ வணங்குவதில் رَبِّهٖۤ தன் இறைவனை اَحَدًا‏ ஒருவரை
18:110. (நபியே!) நீர் சொல்வீராக: “நிச்சயமாக நான் உங்களைப் போன்ற ஒரு மனிதனே! நிச்சயமாக உங்களுடைய நாயன் ஒரே நாயன்தான் என்று எனக்கு வஹீ அறிவிக்கப்பட்டிருக்கிறது; எவன் தன்னுடைய இறைவனைச் சந்திக்கலாமென ஆதரவு வைக்கின்றானோ அவன் (ஸாலிஹான) நல்ல செயல்களைச் செய்து, தன் இறைவனை வணங்குவதில் வேறெவரையும் இணையாக்காதும் இருப்பானாக.”
19:60
19:60 اِلَّا مَنْ تَابَ وَاٰمَنَ وَعَمِلَ صَالِحًـا فَاُولٰٓٮِٕكَ يَدْخُلُوْنَ الْجَـنَّةَ وَلَا يُظْلَمُوْنَ شَيْــٴًـــا ۙ‏
اِلَّا தவிர مَنْ تَابَ திருந்தியவர்கள் وَاٰمَنَ நம்பிக்கை கொண்டு وَعَمِلَ இன்னும் செய்தவரை صَالِحًـا நல்லது فَاُولٰٓٮِٕكَ அவர்கள் يَدْخُلُوْنَ நுழைவார்கள் الْجَـنَّةَ சொர்க்கத்தில் وَلَا يُظْلَمُوْنَ شَيْــٴًـــا ۙ‏ அறவே அநீதி செய்யப்பட மாட்டார்கள்
19:60. தவ்பா செய்து, (பாவங்களிலிருந்து விலகி) ஈமான் கொண்டு, (ஸாலிஹான) - நல்ல - செயல்களைச் செய்கிறார்களே அவர்களைத் தவிர; அத்தகைய (ஸாலிஹான)வர்கள்; (ஜன்னத்தில்) - சுவர்க்கத்தில் பிரவேசிப்பார்கள்; (அவர்கள் அடைய வேண்டிய நற்பயன்) எதிலும் அவர்களுக்குக் குறைவு செய்யப்பட மாட்டாது.
19:96
19:96 اِنَّ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ سَيَجْعَلُ لَهُمُ الرَّحْمٰنُ وُدًّا‏
اِنَّ நிச்சயமாக الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கை கொண்டவர்கள் وَعَمِلُوا இன்னும் செய்தார்கள் الصّٰلِحٰتِ நன்மைகளை سَيَجْعَلُ ஏற்படுத்துவான் لَهُمُ அவர்களுக்கு الرَّحْمٰنُ பேரருளாளன் وُدًّا‏ அன்பை
19:96. நிச்சயமாக எவர்கள் ஈமான் கொண்டு (ஸாலிஹான) நல்ல செயல்களைச் செய்கின்றார்களோ அவர்களுக்கு அர்ரஹ்மான் (யாவரின்) நேசத்தை ஏற்படுத்துவான்.
20:75
20:75 وَمَنْ يَّاْتِهٖ مُؤْمِنًا قَدْ عَمِلَ الصّٰلِحٰتِ فَاُولٰٓٮِٕكَ لَهُمُ الدَّرَجٰتُ الْعُلٰىۙ‏
وَمَنْ இன்னும் யார் يَّاْتِهٖ அவனிடம்வருவாரோ مُؤْمِنًا நம்பிக்கையாளராக قَدْ عَمِلَ திட்டமாக செய்தார் الصّٰلِحٰتِ நன்மைகளை فَاُولٰٓٮِٕكَ لَهُمُ அவர்களுக்குத்தான் الدَّرَجٰتُ தகுதிகள் உண்டு الْعُلٰىۙ‏ மிக உயர்ந்த
20:75. ஆனால், எவர்கள் முஃமினாக, ஸாலிஹான (நல்ல) செயல்களைச் செய்தவர்களாக அவனிடம் வருகிறார்களோ, அவர்களுக்கு மேலான பதவிகள் உண்டு.
20:112
20:112 وَمَنْ يَّعْمَلْ مِنَ الصّٰلِحٰتِ وَهُوَ مُؤْمِنٌ فَلَا يَخٰفُ ظُلْمًا وَّلَا هَضْمًا‏
وَمَنْ யார் يَّعْمَلْ செய்வாரோ مِنَ الصّٰلِحٰتِ நன்மைகளை وَهُوَ அவரோ இருக்க مُؤْمِنٌ நம்பிக்கையாளராக فَلَا يَخٰفُ பயப்பட மாட்டார் ظُلْمًا அநியாயத்தை وَّلَا هَضْمًا‏ இன்னும் நன்மைகள் குறைக்கப்படுவதை
20:112. எவர் முஃமினாக இருந்து, ஸாலிஹான- நற்செயல்களைச் செய்கிறாரோ அவர் தமக்கு அநியாயம் செய்யப்படுமென்றோ, (தமக்குரிய) நற்கூலி குறைந்துவிடுமென்றோ பயப்படமாட்டார்கள்.
21:72
21:72 وَوَهَبْنَا لَهٗۤ اِسْحٰقَ ؕ وَيَعْقُوْبَ نَافِلَةً‌  ؕ وَكُلًّا جَعَلْنَا صٰلِحِيْنَ‏
وَوَهَبْنَا நாம் வழங்கினோம் لَهٗۤ அவருக்கு اِسْحٰقَ ؕ இஸ்ஹாக்கையும் وَيَعْقُوْبَ யஃகூபையும் نَافِلَةً‌  ؕ கொடையாக وَكُلًّا அனைவரையும் جَعَلْنَا ஆக்கினோம் صٰلِحِيْنَ‏ நல்லவர்களாக
21:72. இன்னும் நாம் அவருக்கு இஸ்ஹாக்கையும், மேலதிகமாக யஃகூபையும் அளித்தோம்; இவர்கள் ஒவ்வொருவரையும் (ஸாலிஹான) நல்லடியார்களாக்கினோம்.
21:75
21:75 وَاَدْخَلْنٰهُ فِىْ رَحْمَتِنَا‌ ؕ اِنَّهٗ مِنَ الصّٰلِحِيْنَ‏
وَاَدْخَلْنٰهُ இன்னும் அவரை நாம் நுழைத்தோம் فِىْ رَحْمَتِنَا‌ ؕ நமது அருளில் اِنَّهٗ நிச்சயமாக அவர் مِنَ الصّٰلِحِيْنَ‏ நல்லவர்களில் உள்ளவர்
21:75. இன்னும், அவரை நம்முடைய கிருபையில் நாம் புகுத்திக் கொண்டோம்; நிச்சயமாக அவர் (ஸாலிஹான) நல்லடியார்களில் உள்ளவராகவே இருந்தார்.
21:86
21:86 وَاَدْخَلْنٰهُمْ فِىْ رَحْمَتِنَا ؕ اِنَّهُمْ مِّنَ الصّٰلِحِيْنَ‏
وَاَدْخَلْنٰهُمْ இவர்களை நுழைத்துக் கொண்டோம் فِىْ رَحْمَتِنَا ؕ நமது அருளில் اِنَّهُمْ நிச்சயமாக இவர்கள் مِّنَ الصّٰلِحِيْنَ‏ நல்லவர்களில் உள்ளவர்கள்
21:86. இவர்கள் (எல்லோரையும்) நாம் நம் கிருபையில் புகுத்திக் கொண்டோம், நிச்சயமாக இவர்கள் (ஸாலிஹீன்களான) நல்லடியார்களில் நின்றுமுள்ளவர்களே!
21:105
21:105 وَلَـقَدْ كَتَبْنَا فِى الزَّبُوْرِ مِنْۢ بَعْدِ الذِّكْرِ اَنَّ الْاَرْضَ يَرِثُهَا عِبَادِىَ الصّٰلِحُوْنَ‏
وَلَـقَدْ திட்டவட்டமாக كَتَبْنَا நாம் எழுதினோம் فِى الزَّبُوْرِ வேதங்களில் مِنْۢ بَعْدِ பின்னர் الذِّكْرِ எழுதப்பட்டதற்கு اَنَّ நிச்சயமாக الْاَرْضَ பூமி يَرِثُهَا அதை அனந்தரமாக அடைவார்கள் عِبَادِىَ எனது அடியார்கள் الصّٰلِحُوْنَ‏ நல்ல
21:105. நிச்சயமாக நாம் ஜபூர் வேதத்தில், (முந்திய வேதத்தைப் பற்றி) நினைவூட்டிய பின்: “நிச்சயமாக பூமியை (ஸாலிஹான) என்னுடைய நல்லடியார்கள் வாரிசாக அடைவார்கள் என்று எழுதியிருக்கிறோம்.
22:14
22:14 اِنَّ اللّٰهَ يُدْخِلُ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ جَنّٰتٍ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ ‌ؕ اِنَّ اللّٰهَ يَفْعَلُ مَا يُرِيْدُ‏
اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் يُدْخِلُ நுழைப்பான் الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கை கொண்டவர்களை وَعَمِلُوا இன்னும் செய்தார்கள் الصّٰلِحٰتِ நன்மைகள் جَنّٰتٍ சொர்க்கங்களில் تَجْرِىْ ஓடும் مِنْ تَحْتِهَا அவற்றின் கீழ் الْاَنْهٰرُ ؕ நதிகள் اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் يَفْعَلُ செய்கிறான் مَا يُرِيْدُ‏ தான் நாடுவதை
22:14. நிச்சயமாக, அல்லாஹ் ஈமான் கொண்டு (ஸாலிஹான) - நற்செயல் செய்பவர்களை சுவனபதிகளில் பிரவேசிக்கச் செய்கிறான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும் - நிச்சயமாக அல்லாஹ், தான் நாடுவதைச் செய்கிறான்.