தேடல்


22:23
22:23 اِنَّ اللّٰهَ يُدْخِلُ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ جَنّٰتٍ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ يُحَلَّوْنَ فِيْهَا مِنْ اَسَاوِرَ مِنْ ذَهَبٍ وَّلُـؤْلُـؤًا ‌ؕ وَلِبَاسُهُمْ فِيْهَا حَرِيْرٌ‏
اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் يُدْخِلُ நுழைப்பான் الَّذِيْنَ எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டனர் وَعَمِلُوا இன்னும் செய்தார்கள் الصّٰلِحٰتِ நன்மைகள் جَنّٰتٍ சொர்க்கங்களில் تَجْرِىْ ஓடும் مِنْ تَحْتِهَا அவற்றின் கீழ் الْاَنْهٰرُ நதிகள் يُحَلَّوْنَ அணிவிக்கப் படுவார்கள் فِيْهَا அவற்றில் مِنْ اَسَاوِرَ வளையல்களும் مِنْ ذَهَبٍ தங்கத்தினாலான وَّلُـؤْلُـؤًا ؕ இன்னும் முத்து وَلِبَاسُهُمْ இன்னும் அவர்களது ஆடை فِيْهَا அவற்றில் حَرِيْرٌ‏ பட்டாகும்
22:23. ஈமான் கொண்டு யார் (ஸாலிஹான) - நற் - செயல்கள் செய்கிறார்களோ அவர்களை நிச்சயமாக அல்லாஹ் சுவனபதிகளிலே புகுத்துவான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டேயிருக்கும்; அங்கே பொன்னாலான கடகங்களிலிருந்தும், முத்திலிருந்தும் ஆபரணங்கள் அணிவிக்கப்படுவார்கள்; அங்கு அவர்களுடைய ஆடைகளும் பட்டாக இருக்கும்.
22:50
22:50 فَالَّذِيْنَ اٰمَنُوْا وَ عَمِلُوا الصّٰلِحٰتِ لَهُمْ مَّغْفِرَةٌ وَّرِزْقٌ كَرِيْمٌ‏
فَالَّذِيْنَ ஆகவே, எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டனர் وَ عَمِلُوا இன்னும் செய்தார்கள் الصّٰلِحٰتِ நன்மைகள் لَهُمْ அவர்களுக்கு உண்டு مَّغْفِرَةٌ பாவமன்னிப்பு(ம்) وَّرِزْقٌ உணவும் كَرِيْمٌ‏ கண்ணியமான
22:50. “எனவே, எவர்கள் ஈமான் கொண்டு (ஸாலிஹான) - நல்ல - செயல்களைச் செய்கிறார்களோ அவர்களுக்கு மன்னிப்பும், கண்ணியமான உணவும் உண்டு.
22:56
22:56 اَ لْمُلْكُ يَوْمَٮِٕذٍ لِّلّٰهِ ؕ يَحْكُمُ بَيْنَهُمْ‌ ؕ فَالَّذِيْنَ اٰمَنُوْا وَ عَمِلُوا الصّٰلِحٰتِ فِىْ جَنّٰتِ النَّعِيْمِ‏
اَ لْمُلْكُ ஆட்சி يَوْمَٮِٕذٍ அந்நாளில் لِّلّٰهِ ؕ அல்லாஹ்விற்கே உரியது يَحْكُمُ தீர்ப்பளிப்பான் بَيْنَهُمْ‌ ؕ அவர்களுக்கு மத்தியில் فَالَّذِيْنَ ஆக, எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டனர் وَ عَمِلُوا இன்னும் செய்தார்கள் الصّٰلِحٰتِ நன்மைகளை فِىْ جَنّٰتِ சொர்க்கங்களில் النَّعِيْمِ‏ “நயீம்” இன்பமிகு
22:56. அந்நாளில் எல்லா அதிகாரமும் அல்லாஹ்வுக்குத் தான். அவன் அவர்களுக்கிடையில் தீர்ப்பு வழங்குவான்; ஆகவே ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) செயல்களைச் செய்பவர்கள் பாக்கியம் மிக்க சுவனபதிகளில் இருப்பார்கள்.
23:51
23:51 يٰۤـاَيُّهَا الرُّسُلُ كُلُوْا مِنَ الطَّيِّبٰتِ وَاعْمَلُوْا صَالِحًـا‌ ؕ اِنِّىْ بِمَا تَعْمَلُوْنَ عَلِيْمٌ ؕ‏
يٰۤـاَيُّهَا الرُّسُلُ தூதர்களே كُلُوْا சாப்பிடுங்கள் مِنَ الطَّيِّبٰتِ நல்லவற்றிலிருந்து وَاعْمَلُوْا இன்னும் செய்யுங்கள் صَالِحًـا‌ ؕ நல்ல செயலை اِنِّىْ நிச்சயமாக நான் بِمَا تَعْمَلُوْنَ நீங்கள் செய்வதை عَلِيْمٌ ؕ‏ நன்கறிந்தவன்
23:51. (நம் தூதர்கள் ஒவ்வொருவரிடத்திலும்:) “தூதர்களே! நல்ல பொருள்களிலிருந்தே நீங்கள் உண்ணுங்கள்; (ஸாலிஹான) நல்லமல்களை செய்யுங்கள்; நிச்சயமாக நீங்கள் செய்பவற்றை நான் நன்கு அறிபவன் (என்றும்)
24:32
24:32 وَاَنْكِحُوا الْاَيَامٰى مِنْكُمْ وَالصّٰلِحِيْنَ مِنْ عِبَادِكُمْ وَاِمَآٮِٕكُمْ‌ ؕ اِنْ يَّكُوْنُوْا فُقَرَآءَ يُغْنِهِمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖ‌ ؕ وَاللّٰهُ وَاسِعٌ عَلِيْمٌ‏
وَاَنْكِحُوا நீங்கள் திருமணம் செய்து வையுங்கள் الْاَيَامٰى ஜோடி இல்லாதவர்களுக்கு مِنْكُمْ உங்களில் وَالصّٰلِحِيْنَ நல்லவர்களுக்கு مِنْ عِبَادِ ஆண் அடிமைகளிலும் كُمْ உங்கள் وَاِمَآٮِٕكُمْ‌ ؕ உங்கள் பெண் அடிமைகளிலும் اِنْ يَّكُوْنُوْا அவர்கள் இருந்தால் فُقَرَآءَ ஏழைகளாக يُغْنِهِمُ அவர்களை நிறைவுறச் செய்வான் اللّٰهُ அல்லாஹ் مِنْ فَضْلِهٖ‌ ؕ தனது அருளால் وَاللّٰهُ அல்லாஹ் وَاسِعٌ விசாலமானவன் عَلِيْمٌ‏ நன்கறிந்தவன்
24:32. இன்னும், உங்களில் வாழ்க்கைத் துணை இல்லா (ஆடவர், பெண்டி)ருக்கும், அவ்வாறே (வாழ்க்கைத் துணையில்லா) ஸாலிஹான உங்கள் (ஆண், பெண்) அடிமைகளுக்கும் விவாகம் செய்து வையுங்கள்; அவர்கள் ஏழைகளாக இருந்தால், அல்லாஹ் தன் நல்லருளைக் கொண்டு அவர்களைச் சீமான்களாக்கி வைப்பான்; மேலும் அல்லாஹ் (கொடையில்) விசாலமானவன். (யாவற்றையும்) நன்கறிந்தவன்.
24:55
24:55 وَعَدَ اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا مِنْكُمْ وَ عَمِلُوا الصّٰلِحٰتِ لَـيَسْتَخْلِفَـنَّهُمْ فِى الْاَرْضِ كَمَا اسْتَخْلَفَ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِيْنَهُمُ الَّذِى ارْتَضٰى لَهُمْ وَلَـيُبَدِّلَــنَّهُمْ مِّنْۢ بَعْدِ خَوْفِهِمْ اَمْنًا‌ ؕ يَعْبُدُوْنَنِىْ لَا يُشْرِكُوْنَ بِىْ شَيْــٴًــــا‌ ؕ وَمَنْ كَفَرَ بَعْدَ ذٰ لِكَ فَاُولٰٓٮِٕكَ هُمُ الْفٰسِقُوْنَ‏
وَعَدَ வாக்களித்துள்ளான் اللّٰهُ அல்லாஹ் الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கை கொண்டவர்கள் مِنْكُمْ உங்களில் وَ عَمِلُوا இன்னும் செய்தார்கள் الصّٰلِحٰتِ நற்செயல்களை لَـيَسْتَخْلِفَـنَّهُمْ இவர்களை பிரதிநிதிகளாக ஆக்குவான் فِى الْاَرْضِ இப்பூமியில் كَمَا போன்று اسْتَخْلَفَ பிரதிநிதிகளாக ஆக்கியது الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ இவர்களுக்கு முன்னுள்ளவர்களை وَلَيُمَكِّنَنَّ இன்னும் பலப்படுத்தித்தருவான் لَهُمْ இவர்களுக்கு دِيْنَهُمُ இவர்களுடைய மார்க்கத்தை الَّذِى எது ارْتَضٰى அவன் திருப்தி கொண்டான் لَهُمْ இவர்களுக்காக وَلَـيُبَدِّلَــنَّهُمْ இன்னும் இவர்களுக்கு மாற்றித்தருவான் مِّنْۢ بَعْدِ பின்னர் خَوْفِهِمْ இவர்களது பயத்திற்கு اَمْنًا‌ ؕ நிம்மதியை يَعْبُدُوْنَنِىْ இவர்கள் என்னை வணங்குவார்கள் لَا يُشْرِكُوْنَ இணைவைக்க மாட்டார்கள் بِىْ எனக்கு شَيْــٴًــــا‌ ؕ எதையும் وَمَنْ யார் كَفَرَ நிராகரிப்பார்களோ بَعْدَ பின்னர் ذٰ لِكَ இதற்கு فَاُولٰٓٮِٕكَ هُمُ அவர்கள்தான் الْفٰسِقُوْنَ‏ பாவிகள்
24:55. உங்களில் எவர் ஈமான் கொண்டு (ஸாலிஹான) - நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களை, அவர்களுக்கு முன்னிருந்தோரை(ப் பூமிக்கு) ஆட்சியாளர்களாக்கியது போல், பூமிக்கு நிச்சயமாக ஆட்சியாளர்களாக்கி வைப்பதாகவும், இன்னும் அவன் அவர்களுக்காக பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை நிச்சயமாக நிலைப்படுத்துவதாகவும், அவர்களுடைய அச்சத்தைத் திட்டமாக அமைதியைக் கொண்டு மாற்றி விடுவதாகவும், அல்லாஹ் வாக்களித்திருக்கிறான்; “அவர்கள் என்னோடு (எதையும், எவரையும்) இணைவைக்காது, அவர்கள் என்னையே வணங்குவார்கள்;” இதன் பின்னர் (உங்களில்) எவர் மாறு செய்(து நிராகரிக்)கிறாரோ அவர்கள் பாவிகள்தாம்.
25:70
25:70 اِلَّا مَنْ تَابَ وَاٰمَنَ وَعَمِلَ عَمَلًاصَالِحًـا فَاُولٰٓٮِٕكَ يُبَدِّلُ اللّٰهُ سَيِّاٰتِهِمْ حَسَنٰتٍ‌ ؕ وَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِيْمًا‏
اِلَّا எனினும், مَنْ யார் تَابَ திருந்தினார்(கள்) وَاٰمَنَ இன்னும் நம்பிக்கை கொண்டார்(கள்) وَعَمِلَ இன்னும் செய்தார் عَمَلًا செயலை صَالِحًـا நன்மையான فَاُولٰٓٮِٕكَ அவர்கள் يُبَدِّلُ மாற்றி விடுவான் اللّٰهُ அல்லாஹ் سَيِّاٰتِهِمْ அவர்களுடைய தீய செயல்களை حَسَنٰتٍ‌ ؕ நல்ல செயல்களாக وَكَانَ இருக்கிறான் اللّٰهُ அல்லாஹ் غَفُوْرًا மகா மன்னிப்பாளனாக رَّحِيْمًا‏ பெரும் கருணையாளனாக
25:70. ஆனால் (அவர்களில் எவர்) தவ்பா செய்து ஈமானுங் கொண்டு, ஸாலிஹான (நற்) செய்கைகள் செய்கிறார்களோ - அவர்களுடைய பாவங்களை அல்லாஹ் நன்மையாக மாற்றிவிடுவான். மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், மிக்க கிருபையுடையோனாகவும் இருக்கின்றான்.
25:71
25:71 وَمَنْ تَابَ وَعَمِلَ صَالِحًـا فَاِنَّهٗ يَتُوْبُ اِلَى اللّٰهِ مَتَابًا‏
وَمَنْ யார் تَابَ திருந்துவார் وَعَمِلَ இன்னும் செய்வார் صَالِحًـا நன்மை فَاِنَّهٗ நிச்சயமாக அவர் يَتُوْبُ திரும்பி விடுகிறார் اِلَى اللّٰهِ அல்லாஹ்வின் பக்கம் مَتَابًا‏ திரும்புதல்-முற்றிலும்
25:71. இன்னும், எவர் தவ்பா செய்து ஸாலிஹான (நற்) செய்கைகள் செய்கின்றாரோ, அவர் நிச்சயமாக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடியவராவார்.
26:83
26:83 رَبِّ هَبْ لِىْ حُكْمًا وَّاَلْحِقْنِىْ بِالصّٰلِحِيْنَۙ‏
رَبِّ என் இறைவா! هَبْ வழங்கு! لِىْ எனக்கு حُكْمًا தூதுத்துவத்தை وَّاَلْحِقْنِىْ இன்னும் என்னை சேர்ப்பாயாக! بِالصّٰلِحِيْنَۙ‏ நல்லவர்களுடன்
26:83. “இறைவனே! நீ எனக்கு ஞானத்தை அளிப்பாயாக. மேலும், ஸாலிஹானவர்களுடன் (நல்லவர்களுடன்) என்னைச் சேர்த்து வைப்பாயாக!”
26:142
26:142 اِذْ قَالَ لَهُمْ اَخُوْهُمْ صٰلِحٌ اَلَا تَتَّقُوْنَ‌ۚ‏
اِذْ قَالَ கூறிய சமயத்தை நினைவு கூருங்கள் لَهُمْ அவர்களுக்கு اَخُوْهُمْ அவர்களது சகோதரர் صٰلِحٌ ஸாலிஹ் اَلَا تَتَّقُوْنَ‌ۚ‏ நீங்கள் அஞ்சிக் கொள்ள வேண்டாமா?
26:142. அவர்களிடம் அவர்களுடைய சகோதரர் ஸாலிஹ்: “நீங்கள் (இறைவனை) அஞ்ச மாட்டீர்களா?” எனக் கூறியபோது