தேடல்


34:14
34:14 فَلَمَّا قَضَيْنَا عَلَيْهِ الْمَوْتَ مَا دَلَّهُمْ عَلٰى مَوْتِهٖۤ اِلَّا دَآ بَّةُ الْاَرْضِ تَاْ كُلُ مِنْسَاَتَهُ ۚ فَلَمَّا خَرَّ تَبَيَّنَتِ الْجِنُّ اَنْ لَّوْ كَانُوْا يَعْلَمُوْنَ الْغَيْبَ مَا لَبِثُوْا فِى الْعَذَابِ الْمُهِيْنِ ؕ‏
فَلَمَّا قَضَيْنَا நாம் முடிவு செய்தபோது عَلَيْهِ அவருக்கு الْمَوْتَ மரணத்தை مَا دَلَّهُمْ அவர்களுக்கு அறிவிக்கவில்லை عَلٰى مَوْتِهٖۤ அவர் மரணித்து விட்டதை اِلَّا தவிர دَآ بَّةُ الْاَرْضِ கரையானை تَاْ كُلُ தின்ற(து) مِنْسَاَتَهُ ۚ அவருடைய தடியை فَلَمَّا خَرَّ அவர் கீழே விழுந்தபோது تَبَيَّنَتِ தெளிவாக தெரிய வந்தது الْجِنُّ ஜின்களுக்கு اَنْ لَّوْ كَانُوْا يَعْلَمُوْنَ தாங்கள் அறிந்துகொண்டிருந்தால் الْغَيْبَ மறைவானவற்றை مَا لَبِثُوْا தங்கி இருந்திருக்க மாட்டார்கள் فِى الْعَذَابِ வேதனையில் الْمُهِيْنِ ؕ‏ இழிவான
34:14. அவர் (ஸுலைமான்) மீது நாம் மரணத்தை விதித்த போது அவர் இறந்து விட்டார் என்பதை, அவர் (சாய்ந்திருந்த) தடியை அரித்து விட்ட நிலத்தின் பூச்சி (கரையானைத்) தவிர வேறெதுவும் அந்த ஜின்களுக்கு அறிவிக்கவில்லை; அவர் கீழே விழவே; “தாங்கள் மறைவான விஷயங்களை அறிந்திருக்கக் கூடுமானால் (கடின உழைப்பாகிய) இழிவுதரும் வேதனையில் தாங்கள் தரி பட்டிருந்திருக்க வேண்டியதில்லை” என்று ஜின்களுக்கு தெளிவாக தெரிந்தது.
38:30
38:30 وَوَهَبْنَا لِدَاوٗدَ سُلَيْمٰنَ‌ ؕ نِعْمَ الْعَبْدُ‌ ؕ اِنَّـهٗۤ اَوَّابٌ ؕ ‏
وَوَهَبْنَا நாம் வழங்கினோம் لِدَاوٗدَ தாவூதுக்கு سُلَيْمٰنَ‌ ؕ சுலைமானை نِعْمَ الْعَبْدُ‌ ؕ அவர் சிறந்த அடியார் اِنَّـهٗۤ நிச்சயமாக அவர் اَوَّابٌ ؕ அல்லாஹ்வின் பக்கம் அதிகம் திரும்புகின்றவர்
38:30. இன்னும் தாவூதுக்கு(ப் புதல்வராக) ஸுலைமானை வழங்கினோம்; சிறப்பான (நம்) நல்லடியார், நிச்சயமாக அவர் (எதிலும் நம்மையே) நோக்குபவர்.
38:34
38:34 وَلَقَدْ فَتَنَّا سُلَيْمٰنَ وَاَلْقَيْنَا عَلٰى كُرْسِيِّهٖ جَسَدًا ثُمَّ اَنَابَ‏
وَلَقَدْ திட்டவட்டமாக فَتَنَّا நாம் சோதித்தோம் سُلَيْمٰنَ சுலைமானை وَاَلْقَيْنَا போட்டோம் عَلٰى كُرْسِيِّهٖ அவருடை நாற்காலியில் جَسَدًا ஓர் உடலை ثُمَّ பிறகு اَنَابَ‏ அவர் திரும்பிவிட்டார்
38:34. இன்னும் நாம் ஸுலைமானைத் திட்டமாகச் சோதித்தோம்; அவருடைய அரியணையில் ஒரு முண்டத்தை எறிந்தோம் - ஆகவே அவர் (நம்மளவில்) திரும்பினார்.