தேடல்


43:59
43:59 اِنْ هُوَ اِلَّا عَبْدٌ اَنْعَمْنَا عَلَيْهِ وَجَعَلْنٰهُ مَثَلًا لِّبَنِىْۤ اِسْرَآءِيْلَؕ‏
اِنْ هُوَ அவர் இல்லை اِلَّا தவிர عَبْدٌ ஓர் அடியாராகவே اَنْعَمْنَا அருள் புரிந்தோம் عَلَيْهِ அவர்மீது وَجَعَلْنٰهُ அவரை ஆக்கினோம் مَثَلًا ஓர் அத்தாட்சியாக لِّبَنِىْۤ اِسْرَآءِيْلَؕ‏ இஸ்ரவேலர்களுக்கு
43:59. அவர் (ஈஸா நம்முடைய) அடியாரே அன்றி வேறில்லை; அவருக்கு நாம் அருட்கொடையைச் சொரிந்து இஸ்ராயீலின் சந்ததியாருக்கு அவரை நல்லுதாரணமாக ஆக்கினோம்.
43:61
43:61 وَاِنَّهٗ لَعِلْمٌ لِّلسَّاعَةِ فَلَا تَمْتَرُنَّ بِهَا وَاتَّبِعُوْنِ‌ؕ هٰذَا صِرَاطٌ مُّسْتَقِيْمٌ‏
وَاِنَّهٗ நிச்சயமாக அவர் لَعِلْمٌ அடையாளமாவார் لِّلسَّاعَةِ மறுமையின் فَلَا تَمْتَرُنَّ بِهَا ஆகவே அதில் நீங்கள் அறவே சந்தேகிக்காதீர்கள் وَاتَّبِعُوْنِ‌ؕ இன்னும் என்னை பின்பற்றுங்கள்! هٰذَا இதுதான் صِرَاطٌ நேரான(து) مُّسْتَقِيْمٌ‏ பாதையாகும்
43:61. நிச்சயமாக அவர் (ஈஸா) மறுமை நாளின் அத்தாட்சியாவார்; ஆகவே, நிச்சயமாக நீங்கள் இதில் சந்தேகப்பட வேண்டாம்; மேலும், என்னையே பின்பற்றுங்கள்; இதுவே (ஸிராத்துல் முஸ்தகீம்) நேரான வழி (என்று நபியே! நீர் கூறுவிராக!)
43:63
43:63 وَ لَمَّا جَآءَ عِيْسٰى بِالْبَيِّنٰتِ قَالَ قَدْ جِئْتُكُمْ بِالْحِكْمَةِ وَلِاُبَيِّنَ لَكُمْ بَعْضَ الَّذِىْ تَخْتَلِفُوْنَ فِيْهِ‌ ۚ فَاتَّقُوا اللّٰهَ وَاَطِيْعُوْنِ‏
وَ لَمَّا جَآءَ வந்த போது عِيْسٰى ஈஸா بِالْبَيِّنٰتِ தெளிவான அத்தாட்சிகளுடன் قَالَ அவர் கூறினார் قَدْ جِئْتُكُمْ திட்டமாக நான் உங்களிடம் வந்துள்ளேன் بِالْحِكْمَةِ ஞானத்துடன் وَلِاُبَيِّنَ விவரிப்பதற்காகவும் لَكُمْ உங்களுக்கு بَعْضَ சிலவற்றை الَّذِىْ எதில் تَخْتَلِفُوْنَ கருத்து வேற்றுமை கொள்கிறீர்களோ فِيْهِ‌ ۚ அதில் فَاتَّقُوا اللّٰهَ ஆகவே அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்! وَاَطِيْعُوْنِ‏ இன்னும் எனக்கு கீழ்ப்படிந்து நடங்கள்!
43:63. இன்னும், ஈஸா தெளிவான அத்தாட்சிகளுடன் வந்தபோது: “மெய்யாகவே நான் உங்களுக்கு ஞானத்தைக் கொண்டு வந்திருக்கிறேன்; நீங்கள் கருத்து வேற்றுமையுடன் இருக்கும் சிலவற்றை உங்களுக்கு விளக்கிக் கூறுவேன் - ஆகவே நீங்கள் அல்லாஹ்விடம் பயபக்தியுடன் இருங்கள்; எனக்கும் கீழ்படியுங்கள்” என்று கூறினார்.
57:27
57:27 ثُمَّ قَفَّيْنَا عَلٰٓى اٰثَارِهِمْ بِرُسُلِنَا وَقَفَّيْنَا بِعِيْسَى ابْنِ مَرْيَمَ وَاٰتَيْنٰهُ الْاِنْجِيْلَ ۙ وَجَعَلْنَا فِىْ قُلُوْبِ الَّذِيْنَ اتَّبَعُوْهُ رَاْفَةً وَّرَحْمَةً  ؕ وَرَهْبَانِيَّةَ اۨبْتَدَعُوْهَا مَا كَتَبْنٰهَا عَلَيْهِمْ اِلَّا ابْتِغَآءَ رِضْوَانِ اللّٰهِ فَمَا رَعَوْهَا حَقَّ رِعَايَتِهَا‌ ۚ فَاٰتَيْنَا الَّذِيْنَ اٰمَنُوْا مِنْهُمْ اَجْرَهُمْ‌ۚ وَكَثِيْرٌ مِّنْهُمْ فٰسِقُوْنَ‏
ثُمَّ பிறகு قَفَّيْنَا தொடர்ந்து அனுப்பினோம் عَلٰٓى اٰثَارِهِمْ அவர்களின் அடிச்சுவடுகளில் بِرُسُلِنَا நமது தூதர்களை وَقَفَّيْنَا நாம் பின்னால் அனுப்பினோம் بِعِيْسَى ஈஸாவை ابْنِ مَرْيَمَ மர்யமுடைய மகன் وَاٰتَيْنٰهُ அவருக்கு கொடுத்தோம் الْاِنْجِيْلَ ۙ இன்ஜீலை وَجَعَلْنَا ஏற்படுத்தினோம் فِىْ قُلُوْبِ உள்ளங்களில் الَّذِيْنَ எவர்கள் اتَّبَعُوْهُ அவரைப் பின்பற்றினார்கள் رَاْفَةً இரக்கத்தை(யும்) وَّرَحْمَةً  ؕ கருணையையும் وَرَهْبَانِيَّةَ இன்னும் துறவரத்தை اۨبْتَدَعُوْهَا புதுமையாக ஏற்படுத்திக் கொண்டனர்/அதை مَا كَتَبْنٰهَا நாம் அதை கடமையாக்கவில்லை عَلَيْهِمْ அவர்கள் மீது اِلَّا ابْتِغَآءَ நாடியே தவிர رِضْوَانِ பொருத்தத்தை اللّٰهِ அல்லாஹ்வின் فَمَا رَعَوْهَا ஆனால் அதை அவர்கள் பேணவில்லை حَقَّ رِعَايَتِهَا‌ ۚ அதை பேணவேண்டிய முறையில் فَاٰتَيْنَا கொடுப்போம் الَّذِيْنَ எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொள்வார்களோ مِنْهُمْ அவர்களில் இருந்து اَجْرَهُمْ‌ۚ அவர்களின் கூலியை وَكَثِيْرٌ இன்னும் அதிகமானவர்கள் مِّنْهُمْ அவர்களில் فٰسِقُوْنَ‏ பாவிகள்
57:27. பின்னர் அவர்களுடைய (அடிச்) சுவடுகளின் மீது (மற்றைய) நம் தூதர்களைத் தொடரச் செய்தோம்; மர்யமின் குமாரர் ஈஸாவை (அவர்களை)த் தொடரச் செய்து, அவருக்கு இன்ஜீலையும் கொடுத்தோம் - அன்றியும், அவரைப் பின்பற்றியவர்களின் இதயங்களில் இரக்கத்தையும் கிருபையையும் உண்டாக்கினோம்; ஆனால் அவர்கள் தாங்களே புதிதாக உண்டாக்கிக் கொண்ட துறவித்தனத்தை நாம் அவர்கள் மீது விதிக்கவில்லை. அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைய வேண்டியேயன்றி (அவர்களே அதனை உண்டுபண்ணிக் கொண்டார்கள்); ஆனால் அதைப் பேணுகிற அளவுக்கு அவர்கள் அதைச் சரிவரப் பேனவில்லை - அப்பால், அவர்களில் ஈமான் கொண்டவர்களுக்கு அவர்களுடைய (நற்)கூலியை நாம் வழங்கினோம்; எனினும், அவர்களில் பெரும் பாலோர் ஃபாஸிக்குகளாக - பாவிகளாகவே இருக்கின்றனர்.
61:6
61:6 وَاِذْ قَالَ عِيْسَى ابْنُ مَرْيَمَ يٰبَنِىْۤ اِسْرَآءِيْلَ اِنِّىْ رَسُوْلُ اللّٰهِ اِلَيْكُمْ مُّصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَىَّ مِنَ التَّوْرٰٮةِ وَمُبَشِّرًۢا بِرَسُوْلٍ يَّاْتِىْ مِنْۢ بَعْدِى اسْمُهٗۤ اَحْمَدُ‌ؕ فَلَمَّا جَآءَهُمْ بِالْبَيِّنٰتِ قَالُوْا هٰذَا سِحْرٌ مُّبِيْنٌ‏
وَاِذْ قَالَ கூறியதை நினைவு கூர்வீராக! عِيْسَى ஈஸா ابْنُ مَرْيَمَ மர்யமுடைய மகன் يٰبَنِىْۤ اِسْرَآءِيْلَ இஸ்ரவேலர்களே! اِنِّىْ நிச்சயமாக நான் رَسُوْلُ தூதர் اللّٰهِ அல்லாஹ்வின் اِلَيْكُمْ உங்களுக்கு مُّصَدِّقًا நான் உண்மைப்படுத்துகின்றேன் لِّمَا بَيْنَ يَدَىَّ எனக்கு முன்னுள்ளதை مِنَ التَّوْرٰٮةِ தவ்றாத்தை وَمُبَشِّرًۢا இன்னும் நற்செய்தி கூறுகின்றேன் بِرَسُوْلٍ ஒரு தூதரை يَّاْتِىْ வருகின்றார் مِنْۢ بَعْدِى எனக்குப் பின் اسْمُهٗۤ அவரது பெயர் اَحْمَدُ‌ؕ அஹ்மத் فَلَمَّا جَآءَ அவர் வந்த போது هُمْ அவர்களிடம் بِالْبَيِّنٰتِ அத்தாட்சிகளுடன் قَالُوْا கூறினார்கள் هٰذَا இது سِحْرٌ சூனியமாகும் مُّبِيْنٌ‏ தெளிவான
61:6. மேலும், மர்யமின் குமாரர் ஈஸா: “இஸ்ராயீல் மக்களே! எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை மெய்ப்பிப்பவனாகவும்; எனக்குப் பின்னர் வரவிருக்கும் “அஹமது” என்னும் பெயருடைய தூதரைப் பற்றி நன்மாராயம் கூறுபவனாகவும் இருக்கும் நிலையில் அல்லாஹ்வின் தூதனாக உங்களிடம் வந்துள்ளேன்” என்று கூறிய வேளையை (நபியே! நீர் நினைவு கூர்வீராக!) எனினும், அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளை அவர் கொண்டு வந்த போது, அவர்கள் “இது தெளிவான சூனியமாகும்” என்று கூறினார்கள்.
61:14
61:14 يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا كُوْنُوْۤا اَنْصَارَ اللّٰهِ كَمَا قَالَ عِيْسَى ابْنُ مَرْيَمَ لِلْحَوٰارِيّٖنَ مَنْ اَنْصَارِىْۤ اِلَى اللّٰهِ‌ؕ قَالَ الْحَـوٰرِيُّوْنَ نَحْنُ اَنْصَارُ اللّٰهِ‌ فَاٰمَنَتْ طَّآٮِٕفَةٌ مِّنْۢ بَنِىْۤ اِسْرَآءِيْلَ وَكَفَرَتْ طَّآٮِٕفَةٌ ۚ فَاَيَّدْنَا الَّذِيْنَ اٰمَنُوْا عَلٰى عَدُوِّهِمْ فَاَصْبَحُوْا ظٰهِرِيْنَ‏
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கையாளர்களே! كُوْنُوْۤا நீங்கள் ஆகிவிடுங்கள் اَنْصَارَ உதவியாளர்களாக اللّٰهِ அல்லாஹ்வின் كَمَا قَالَ கூறியதைப் போன்று عِيْسَى ஈஸா ابْنُ مَرْيَمَ மர்யமுடைய மகன் لِلْحَوٰارِيّٖنَ உற்ற தோழர்களை நோக்கி مَنْ யார் اَنْصَارِىْۤ எனது உதவியாளர்கள் اِلَى اللّٰهِ‌ؕ அல்லாஹ்விற்காக قَالَ கூறினார்(கள்) الْحَـوٰرِيُّوْنَ உற்றதோழர்கள் نَحْنُ நாங்கள் اَنْصَارُ உதவி செய்பவர்கள் اللّٰهِ‌ அல்லாஹ்விற்கு فَاٰمَنَتْ ஆகவே நம்பிக்கை கொண்டது طَّآٮِٕفَةٌ ஒரு பிரிவு مِّنْۢ بَنِىْۤ اِسْرَآءِيْلَ இஸ்ரவேலர்களில் وَكَفَرَتْ இன்னும் நிராகரித்தது طَّآٮِٕفَةٌ ۚ ஒரு பிரிவு فَاَيَّدْنَا ஆகவே, நாம் பலப்படுத்தினோம் الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கை கொண்டவர்களை عَلٰى عَدُوِّهِمْ அவர்களின் பகைவர்களுக்கு எதிராக فَاَصْبَحُوْا ஆகவே ஆகிவிட்டார்கள் ظٰهِرِيْنَ‏ வெற்றியாளர்களாக
61:14. ஈமான் கொண்டவர்களே! மர்யமின் குமாரர் ஈஸா (தம்) சீடர்களை நோக்கி, “அல்லாஹ்வுக்காக எனக்கு உதவி செய்வோர் யார்?” எனக் கேட்க, சீடர்கள், “நாங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக இருக்கின்றோம்” என்று கூறியதுபோல், நீங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக ஆகிவிடுங்கள் - எனினும், இஸ்ராயீல் மக்களில் ஒரு கூட்டம் ஈமான் கொண்டது; பிறிதொரு கூட்டமோ நிராகரித்தது; ஆகவே ஈமான் கொண்டவர்களுக்கு, அவர்களுடைய பகைவர்களுக்கு எதிராக உதவி அளித்தோம் - அதனால் அவர்கள் வெற்றியாளராய் ஆகிவிட்டார்கள்.