தேடல்


7:115
7:115 قَالُوْا يٰمُوْسٰٓى اِمَّاۤ اَنْ تُلْقِىَ وَاِمَّاۤ اَنْ نَّكُوْنَ نَحْنُ الْمُلْقِيْنَ‏
قَالُوْا கூறினார்கள் يٰمُوْسٰٓى மூஸாவே! اِمَّاۤ اَنْ تُلْقِىَ நீர் எறிகிறீரா? وَاِمَّاۤ اَنْ نَّكُوْنَ அவர்கள் நாங்கள் இருக்கவா? نَحْنُ நாங்களே الْمُلْقِيْنَ‏ எறிபவர்களாக
7:115. மூஸாவே! முதலில் நீர் எறிகிறீரா? அல்லது நாங்கள் எறியட்டுமா?” என்று (சூனியக்காரர்கள்) கேட்டனர்.
7:116
7:116 قَالَ اَلْقُوْا‌ ۚ فَلَمَّاۤ اَلْقَوْا سَحَرُوْۤا اَعْيُنَ النَّاسِ وَاسْتَرْهَبُوْهُمْ وَجَآءُوْ بِسِحْرٍ عَظِيْمٍ‏
قَالَ கூறினார் اَلْقُوْا‌ ۚ எறியுங்கள் فَلَمَّاۤ اَلْقَوْا அவர்கள் எறிந்தபோது سَحَرُوْۤا மயக்கினார்கள் اَعْيُنَ கண்களை النَّاسِ மக்களுடைய وَاسْتَرْهَبُوْ இன்னும் திடுக்கிடச் செய்தனர் هُمْ அவர்களை وَجَآءُوْ இன்னும் வந்தனர் بِسِحْرٍ ஒரு சூனியத்தைக்கொண்டு عَظِيْمٍ‏ பெரியது
7:116. அதற்கு (மூஸா), “நீங்கள் (முதலில்) எறியுங்கள்” என்று கூறினார். அவ்வாறே அவர்கள் (தம் கைத்தடிகளை) எறிந்தார்கள்; மக்களின் கண்களை மருட்டி அவர்கள் திடுக்கிடும்படியான மகத்தான சூனியத்தை செய்தனர்.
7:117
7:117 وَاَوْحَيْنَاۤ اِلٰى مُوْسٰٓى اَنْ اَلْقِ عَصَاكَ‌ ۚ فَاِذَا هِىَ تَلْقَفُ مَا يَاْفِكُوْنَ ‌ۚ‏
وَاَوْحَيْنَاۤ வஹீ அறிவித்தோம் اِلٰى مُوْسٰٓى மூஸாவிற்கு اَنْ اَلْقِ எறிவீராக என்று عَصَاكَ‌ ۚ உம் தடியை فَاِذَا هِىَ تَلْقَفُ அப்போது அது விழுங்கிவிட்டது مَا எவற்றை يَاْفِكُوْنَ போலியாக செய்வார்கள்
7:117. அப்பொழுது நாம் “மூஸாவே! (இப்பொழுது) நீர் உம் கைத்தடியை எறியும்” என அவருக்கு வஹீ அறிவித்தோம்; அவ்வாறு அவர் எறியவே (அது பெரிய பாம்பாகி) அவர்கள் (சூனியத்தால்) கற்பனை செய்த யாவற்றையும் விழுங்கி விட்டது.
7:122
7:122 رَبِّ مُوْسٰى وَهٰرُوْنَ‏
رَبِّ இறைவனான مُوْسٰى மூஸா وَهٰرُوْنَ‏ இன்னும் ஹாரூனுடைய
7:122. “அவனே மூஸாவுக்கும் ஹாரூனுக்கும் இறைவனாவான்” என்று கூறினார்கள்.
7:123
7:123 قَالَ فِرْعَوْنُ اٰمَنْتُمْ بِهٖ قَبْلَ اَنْ اٰذَنَ لَـكُمْ‌ۚ اِنَّ هٰذَا لَمَكْرٌ مَّكَرْتُمُوْهُ فِى الْمَدِيْنَةِ لِتُخْرِجُوْا مِنْهَاۤ اَهْلَهَا‌ ۚ فَسَوْفَ تَعْلَمُوْنَ‏
قَالَ கூறினான். فِرْعَوْنُ ஃபிர்அவ்ன் اٰمَنْتُمْ நம்பிக்கை கொண்டீர்கள் بِهٖ அவரை قَبْلَ முன்னர் اَنْ اٰذَنَ நான் அனுமதியளிப்பதற்கு لَـكُمْ‌ۚ உங்களுக்கு اِنَّ நிச்சயமாக هٰذَا இது لَمَكْرٌ சூழ்ச்சிதான் مَّكَرْتُمُوْهُ சூழ்ச்சிசெய்தீர்கள்/அதை فِى الْمَدِيْنَةِ நகரத்தில் لِتُخْرِجُوْا நீங்கள் வெளியேற்றுவதற்காக مِنْهَاۤ அதிலிருந்து اَهْلَهَا‌ ۚ அதில் வசிப்போரை فَسَوْفَ تَعْلَمُوْنَ‏ அறிவீர்கள்
7:123. அதற்கு ஃபிர்அவ்ன் (அவர்களை நோக்கி) “உங்களுக்கு நான் அனுமதி கொடுப்பதற்கு முன்னரே நீங்கள் அவர் மேல் ஈமான் கொண்டு விட்டீர்களா? நிச்சயமாக இது ஒரு சூழ்ச்சியாகும் - இந்நகரவாசிகளை அதிலிருந்து வெளியேற்றுவதற்காக மூஸாவுடன் சேர்ந்து நீங்கள் செய்த சூழ்ச்சியேயாகும் - இதன் விளைவை நீங்கள் அதிசீக்கிரம் அறிந்து கொள்வீர்கள்!
7:127
7:127 وَقَالَ الْمَلَاُ مِنْ قَوْمِ فِرْعَوْنَ اَتَذَرُ مُوْسٰى وَقَوْمَهٗ لِيُفْسِدُوْا فِى الْاَرْضِ وَيَذَرَكَ وَاٰلِهَتَكَ‌ ؕ قَالَ سَنُقَتِّلُ اَبْنَآءَهُمْ وَنَسْتَحْىٖ نِسَآءَهُمْ‌ ۚ وَاِنَّا فَوْقَهُمْ قَاهِرُوْنَ‏
وَقَالَ கூறினார்(கள்) الْمَلَاُ தலைவர்கள் مِنْ قَوْمِ சமுதாயத்திலிருந்து فِرْعَوْنَ ஃபிர்அவ்னுடைய اَتَذَرُ நீ விட்டுவிடப்போகிறாயா? مُوْسٰى மூஸாவை وَقَوْمَهٗ இன்னும் அவருடைய சமுதாயத்தை لِيُفْسِدُوْا அவர்கள் விஷமம் செய்வதற்கு فِى الْاَرْضِ பூமியில் وَيَذَرَكَ இன்னும் விட்டுவிடுவதற்கு/உன்னை وَاٰلِهَتَكَ‌ ؕ இன்னும் உன் தெய்வங்களை قَالَ கூறினான் سَنُقَتِّلُ கொன்று குவிப்போம் اَبْنَآءَ ஆண் பிள்ளைகளை هُمْ அவர்களுடைய وَنَسْتَحْىٖ இன்னும் வாழவிடுவோம் نِسَآءَهُمْ‌ ۚ அவர்களுடைய பெண் (பிள்ளை)களை وَاِنَّا நிச்சயமாக நாம் فَوْقَهُمْ அவர்களுக்கு மேல் قَاهِرُوْنَ‏ ஆதிக்கம் வகிப்பவர்கள்
7:127. அதற்கு, ஃபிர்அவ்னின் சமூகத் தலைவர்கள் (அவனை நோக்கி) “மூஸாவும் அவருடைய சமூகத்தாரும் பூமியில் குழப்பம் உண்டாக்கி, உம்மையும் உம் தெய்வங்களையும் புறக்கணித்து விடும்படி நீர் அவர்களை விட்டு வைப்பீரா?” என்று கேட்டார்கள். அதற்கு அவன், “(அவ்வாறன்று!) நாம் அவர்களுடைய ஆண் மக்களை வெட்டிக் கொன்றுவிட்டு, (அவர்களைச் சிறுமைப் படுத்துவதற்காக) அவர்களுடைய பெண் மக்களை மட்டும் உயிருடன் வாழவிடுவோம் - நிச்சயமாக நாம் அவர்கள் மீது பூரண ஆதிக்கம் பெற்றுள்ளோம்” என்று கூறினான்.
7:128
7:128 قَالَ مُوْسٰى لِقَوْمِهِ اسْتَعِيْنُوْا بِاللّٰهِ وَاصْبِرُوْا‌ ۚ اِنَّ الْاَرْضَ لِلّٰهِ ۙ يُوْرِثُهَا مَنْ يَّشَآءُ مِنْ عِبَادِهٖ‌ ؕ وَالْعَاقِبَةُ لِلْمُتَّقِيْنَ‏
قَالَ கூறினார் مُوْسٰى மூஸா لِقَوْمِهِ தன் சமுதாயத்திற்கு اسْتَعِيْنُوْا உதவி தேடுங்கள் بِاللّٰهِ அல்லாஹ்விடம் وَاصْبِرُوْا‌ ۚ இன்னும் பொறுத்திருங்கள் اِنَّ நிச்சயமாக الْاَرْضَ பூமி لِلّٰهِ ۙ அல்லாஹ்வுக்குரியதே يُوْرِثُهَا வாரிசாக்குவான்/அதற்கு مَنْ எவரை يَّشَآءُ நாடுகிறான் مِنْ عِبَادِهٖ‌ ؕ தன் அடியார்களில் وَالْعَاقِبَةُ முடிவு لِلْمُتَّقِيْنَ‏ அல்லாஹ்வை அஞ்சுகிறவர்களுக்கே
7:128. மூஸா தம் சமூகத்தாரிடம்: “அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள்; இன்னும் பொறுமையாகவும் இருங்கள்; நிச்சயமாக (இந்த) பூமி அல்லாஹ்வுக்கே சொந்தம் - தன் அடியார்களில், தான் நாடியவர்களுக்கு அவன் அதை உரியதாக்கி விடுகின்றான் - இறுதி வெற்றி, பயபக்தியுடையவர்களுக்கே கிடைக்கும்” என்று கூறினார்.
7:131
7:131 فَاِذَا جَآءَتْهُمُ الْحَسَنَةُ قَالُوْا لَـنَا هٰذِهٖ‌ ۚ وَاِنْ تُصِبْهُمْ سَيِّئَةٌ يَّطَّيَّرُوْا بِمُوْسٰى وَمَنْ مَّعَهٗ‌ ؕ اَلَاۤ اِنَّمَا طٰٓٮِٕرُهُمْ عِنْدَ اللّٰهِ وَلٰـكِنَّ اَكْثَرَهُمْ لَا يَعْلَمُوْنَ‏
فَاِذَا جَآءَتْهُمُ அவர்களுக்குவந்தால் الْحَسَنَةُ இன்பம் قَالُوْا கூறுவார்கள் لَـنَا எங்களுக்கு هٰذِهٖ‌ ۚ இது وَاِنْ تُصِبْهُمْ அவர்களை அடைந்தால் سَيِّئَةٌ ஒரு துன்பம் يَّطَّيَّرُوْا துர்ச்சகுணமாக எண்ணுவார்கள் بِمُوْسٰى மூஸாவையும் وَمَنْ இன்னும் எவர்கள் مَّعَهٗ‌ ؕ அவருடன் اَلَاۤ அறிந்துகொள்ளுங்கள்! اِنَّمَا எல்லாம் طٰٓٮِٕرُهُمْ துர்ச்சகுணம்/அவர்களுடைய عِنْدَ اللّٰهِ அல்லாஹ்விடம்தான் وَلٰـكِنَّ எனினும் اَكْثَرَهُمْ அவர்களில் அதிகமானவர்கள் لَا يَعْلَمُوْنَ‏ அறியமாட்டார்கள்
7:131. அவர்களுக்கு ஒரு நன்மை வருமானால், “அது நமக்கு (உரிமையாக) வரவேண்டியது தான்” என்று கூறினார்கள்; ஆனால் அவர்களுக்கு ஒரு கெடுதி ஏற்படுமானால், அது மூஸாவினாலும், அவருடனிருப்பவர்களாலும் வந்த பீடையென்பார்கள்; அறிந்து கொள்ளுங்கள்: அவர்களுடைய இந்த துர்பாக்கியமெல்லாம் அல்லாஹ்விடமிருந்தே வந்துள்ளது - எனினும் அவர்களில் பெரும்பாலோர் இதனை அறிந்து கொள்வதில்லை.
7:132
7:132 وَقَالُوْا مَهْمَا تَاْتِنَا بِهٖ مِنْ اٰيَةٍ لِّـتَسْحَرَنَا بِهَا ۙ فَمَا نَحْنُ لَكَ بِمُؤْمِنِيْنَ‏
وَقَالُوْا இன்னும் கூறினார்கள் مَهْمَا எவ்வளவோ تَاْتِنَا எங்களிடம் வந்தாலும் بِهٖ அதைக் கொண்டு مِنْ اٰيَةٍ அத்தாட்சியை لِّـتَسْحَرَنَا நீர் எங்களை ஏமாற்றுவதற்காக, திசை திருப்புவதற்காக بِهَا ۙ அதன் மூலம் فَمَا نَحْنُ நாங்கள் இல்லை لَكَ உம்மை بِمُؤْمِنِيْنَ‏ நம்பிக்கை கொள்பவர்களாக
7:132. அவர்கள் மூஸாவிடம், “நீர் எங்களை வசியப்படுத்த எவ்வளவு அத்தாட்சிகளைக் கொண்டு வந்த போதிலும், நாங்கள் உம்மை நம்பக்கூடியவர்களாக இல்லை” என்று கூறினார்கள்.
7:134
7:134 وَلَمَّا وَقَعَ عَلَيْهِمُ الرِّجْزُ قَالُوْا يٰمُوْسَى ادْعُ لَـنَا رَبَّكَ بِمَا عَهِدَ عِنْدَكَ‌ۚ لَٮِٕنْ كَشَفْتَ عَنَّا الرِّجْزَ لَـنُؤْمِنَنَّ لَكَ وَلَـنُرْسِلَنَّ مَعَكَ بَنِىْۤ اِسْرَآءِيْلَ‌ۚ‏
وَلَمَّا போது وَقَعَ நிகழ்ந்தது عَلَيْهِمُ அவர்கள் மீது الرِّجْزُ வேதனை قَالُوْا கூறினர் يٰمُوْسَى மூஸாவே! ادْعُ பிரார்த்திப்பீராக لَـنَا எங்களுக்காக رَبَّكَ உம் இறைவனிடம் بِمَا عَهِدَ அவன் வாக்குறுதி கொடுத்ததைக் கொண்டு عِنْدَكَ‌ۚ உம்மிடம் لَٮِٕنْ كَشَفْتَ நீர் நீக்கினால் عَنَّا எங்களை விட்டு الرِّجْزَ வேதனையை لَـنُؤْمِنَنَّ நிச்சயமாக நம்பிக்கைகொள்வோம் لَكَ உம்மை وَلَـنُرْسِلَنَّ நிச்சயமாக அனுப்புவோம் مَعَكَ உம்முடன் بَنِىْۤ اِسْرَآءِيْلَ‌ۚ‏ இஸ்ரவேலர்களை
7:134. தங்கள் மீது வேதனை ஏற்பட்ட போதெல்லாம் அவர்கள் “மூஸாவே! உம் இறைவன் உமக்கு அளித்திருக்கும் வாக்குறுதியின்படி எங்களுக்காகப் பிரார்த்தனை செய்வீராக! எங்களை விட்டும் இவ் வேதனையை நீர் நீக்கி விட்டால், நிச்சயமாக நாங்கள் உம்மீது நம்பிக்கை கொண்டு இஸ்ரவேலர்களை உம்முடன் மேலும் நிச்சயமாக அனுப்பி விடுகிறோம்” என்று கூறினார்கள்.