ஆவி (உயிர்)
2:87 وَ لَقَدْ اٰتَيْنَا مُوْسَى الْكِتٰبَ وَقَفَّيْنَا مِنْۢ بَعْدِهٖ بِالرُّسُلِ وَاٰتَيْنَا عِيْسَى ابْنَ مَرْيَمَ الْبَيِّنٰتِ وَاَيَّدْنٰهُ بِرُوْحِ الْقُدُسِؕ اَفَكُلَّمَا جَآءَكُمْ رَسُوْلٌۢ بِمَا لَا تَهْوٰٓى اَنْفُسُكُمُ اسْتَكْبَرْتُمْۚ فَفَرِيْقًا كَذَّبْتُمْ وَفَرِيْقًا تَقْتُلُوْنَ
2:87. மேலும், நாம் மூஸாவுக்கு நிச்சயமாக வேதத்தைக் கொடுத்தோம்; அவருக்குப் பின் தொடர்ச்சியாகத் தூதர்களை நாம் அனுப்பினோம்; இன்னும், மர்யமின் குமாரர் ஈஸாவுக்குத் தெளிவான அத்தாட்சிகளைக் கொடுத்து, ரூஹுல் குதுஸ் (என்னும் தூய ஆத்மாவான ஜிப்ரீல்) மூலம் அவரை நாம் பலப்படுத்தினோம்; உங்கள் மனம் விரும்பாததை (நம்) தூதர் உங்களிடம் கொண்டு வந்தபோதெல்லாம், நீங்கள் கர்வம் கொள்ளவில்லையா? சிலரை நீங்கள் பொய்ப்பித்தீர்கள்; சிலரைக் கொன்றீர்கள்.
2:253 تِلْكَ الرُّسُلُ فَضَّلْنَا بَعْضَهُمْ عَلٰى بَعْضٍۘ مِنْهُمْ مَّنْ كَلَّمَ اللّٰهُ وَرَفَعَ بَعْضَهُمْ دَرَجٰتٍؕ وَاٰتَيْنَا عِيْسَى ابْنَ مَرْيَمَ الْبَيِّنٰتِ وَاَيَّدْنٰهُ بِرُوْحِ الْقُدُسِؕ وَلَوْ شَآءَ اللّٰهُ مَا اقْتَتَلَ الَّذِيْنَ مِنْۢ بَعْدِهِمْ مِّنْۢ بَعْدِ مَا جَآءَتْهُمُ الْبَيِّنٰتُ وَلٰـكِنِ اخْتَلَفُوْا فَمِنْهُمْ مَّنْ اٰمَنَ وَمِنْهُمْ مَّنْ كَفَرَؕ وَلَوْ شَآءَ اللّٰهُ مَا اقْتَتَلُوْا وَلٰـكِنَّ اللّٰهَ يَفْعَلُ مَا يُرِيْدُ
2:253. அத்தூதர்கள் - அவர்களில் சிலரைச் சிலரைவிட நாம் மேன்மையாக்கி இருக்கின்றோம்; அவர்களில் சிலருடன் அல்லாஹ் பேசியிருக்கின்றான்; அவர்களில் சிலரைப் பதவிகளில் உயர்த்தியும் இருக்கின்றான்; மேலும், மர்யமுடைய மகன் ஈஸாவுக்கு நாம் தெளிவான அத்தாட்சிகளைக் கொடுத்தோம்; இன்னும், 'ரூஹுல் குதுஸ்' (எனும் பரிசுத்த ஆன்மாவான ஜிப்ரீல்) மூலம் அவரை பலப்படுத்தினோம்; அல்லாஹ் நாடியிருந்தால், அவர்களுக்குப் பின் வந்தவர்கள் தங்களிடம் தெளிவான அத்தாட்சிகள் வந்த பின்னரும், (தங்களுக்குள்) சண்டையிட்டுக் கொண்டிருக்கமாட்டார்கள்; ஆனால், அவர்கள் (தங்களுக்குள்) கருத்து வேறுபாடு கொண்டனர்; அவர்களில் நம்பிக்கை கொண்டோரும் உள்ளனர்; அவர்களில் நிராகரித்தோரும் உள்ளனர்; அல்லாஹ் நாடியிருந்தால், அவர்கள் (இவ்வாறு) சண்டையிட்டுக் கொண்டிருக்கமாட்டார்கள்; ஆனால், அல்லாஹ் தான் நாடியவற்றைச் செய்கின்றான்.
4:171 يٰۤـاَهْلَ الْكِتٰبِ لَا تَغْلُوْا فِىْ دِيْـنِكُمْ وَلَا تَقُوْلُوْا عَلَى اللّٰهِ اِلَّا الْحَـقَّ ؕ اِنَّمَا الْمَسِيْحُ عِيْسَى ابْنُ مَرْيَمَ رَسُوْلُ اللّٰهِ وَكَلِمَتُهٗ ۚ اَ لْقٰٮهَاۤ اِلٰى مَرْيَمَ وَرُوْحٌ مِّنْهُ فَاٰمِنُوْا بِاللّٰهِ وَرُسُلِهٖ ۚ وَلَا تَقُوْلُوْا ثَلٰثَةٌ ؕ اِنْتَهُوْا خَيْرًا لَّـكُمْ ؕ اِنَّمَا اللّٰهُ اِلٰـهٌ وَّاحِدٌ ؕ سُبْحٰنَهٗۤ اَنْ يَّكُوْنَ لَهٗ وَلَدٌ ۘ لَهٗ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِؕ وَكَفٰى بِاللّٰهِ وَكِيْلًا
4:171. வேதத்தையுடையோரே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் அளவு கடந்து செல்லாதீர்கள்; அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள்; நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய ஈஸா மஸீஹ் அல்லாஹ்வின் தூதர்தான்; இன்னும், ('ஆகுக' என்ற) அவனுடைய வாக்காக (அதனால் உண்டானவராகவும்) இருக்கின்றார்; அதை அவன் மர்யமின்பால் போட்டான்; (எனவே,) அவரும் அவனிடமிருந்து (வந்த) ஓர் ஆன்மாதான்: ஆகவே, அல்லாஹ்வின் மீதும் அவனது தூதர்கள் மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள்: இன்னும், (வணக்கத்திற்குக்குரிய இறைவன்) மூன்று என்று கூறாதீர்கள் - (இப்படி கூறுவதைவிட்டு) விலகிக் கொள்ளுங்கள்; (இது) உங்களுக்கு நன்மையாகும் - நிச்சயமாக அல்லாஹ் ஒரே இறைவன்தான்; அவனுக்கு எவரும் சந்ததியாக இருப்பதிலிருந்து அவன் தூய்மையானவன்; வானங்களிலும், பூமியிலும் இருப்பவையெல்லாம் அவனுக்கே சொந்தம்; (காரியங்கள் அனைத்துக்கும்) பொறுப்பேற்றுக்கொள்வதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.
5:110 اِذْ قَالَ اللّٰهُ يٰعِيْسَى ابْنَ مَرْيَمَ اذْكُرْ نِعْمَتِىْ عَلَيْكَ وَعَلٰى وَالِدَتِكَ ۘ اِذْ اَيَّدْتُّكَ بِرُوْحِ الْقُدُسِ تُكَلِّمُ النَّاسَ فِىْ الْمَهْدِ وَكَهْلًا ۚوَاِذْ عَلَّمْتُكَ الْـكِتٰبَ وَالْحِكْمَةَ وَالتَّوْرٰٮةَ وَالْاِنْجِيْلَ ۚ وَاِذْ تَخْلُقُ مِنَ الطِّيْنِ كَهَيْـــٴَــةِ الطَّيْرِ بِاِذْنِىْ فَتَـنْفُخُ فِيْهَا فَتَكُوْنُ طَيْرًۢا بِاِذْنِىْ وَ تُبْرِئُ الْاَكْمَهَ وَالْاَبْرَصَ بِاِذْنِىْ ۚ وَاِذْ تُخْرِجُ الْمَوْتٰى بِاِذْنِىْ ۚ وَاِذْ كَفَفْتُ بَنِىْۤ اِسْرَآءِيْلَ عَنْكَ اِذْ جِئْتَهُمْ بِالْبَيِّنٰتِ فَقَالَ الَّذِيْنَ كَفَرُوْا مِنْهُمْ اِنْ هٰذَاۤ اِلَّا سِحْرٌ مُّبِيْنٌ
5:110. "மர்யமுடைய மகன் ஈஸாவே! உம்மீதும் உம் தாயார் மீதும் (நான் அருளிய) அருட்கொடையை நினைவு கூரும்! பரிசுத்த ஆன்மாவைக் கொண்டு உம்மை பலப்படுத்தியபோது நீர் தொட்டிலிலும், வாலிபப் பருவத்திலும் மனிதர்களிடம் பேசியதையும், இன்னும் நான் உமக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இன்ஜீலையும் கற்றுக் கொடுத்ததையும் (நினைத்துப் பாரும்)! இன்னும், நீர் களிமண்ணினால் என் உத்தரவைக் கொண்டு பறவை வடிவத்தைப் போல் உண்டாக்கி அதில் நீர் ஊதியபோது, அது என் உத்தரவைக் கொண்டு பறவையாகியதை; இன்னும், என் உத்தரவைக் கொண்டு பிறவிக் குருடனையும், வெண்குஷ்டக்காரனையும் சுகப்படுத்தியதையும், (நினைத்துப் பாரும்!); இறந்தோரை என் உத்தரவுக் கொண்டு (உயிர்ப்பித்து) வெளிப்படுத்தியதையும், (நினைத்துப் பாரும்!); அன்றியும், (இஸ்ராயீலின் சந்ததியினராகிய) அவர்களிடம் நீர் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தபோது, அவர்களில் நிராகரித்தவர்கள், 'இது தெளிவான சூனியத்தைத் தவிர வேறு இல்லை!' என்று கூறியபோது (அந்த) இஸ்ராயீலின் மக்க(ளின் தீங்குக)ளை உம்மைவிட்டும் நான் தடுத்துவிட்டதையும் நினைத்துப் பாரும்!" என்று (ஈஸாவை அழைத்து) அல்லாஹ் கூறியதை (நபியே! நீர் நினைவு கூர்வீராக)!"
15:29 فَاِذَا سَوَّيْتُهٗ وَنَفَخْتُ فِيْهِ مِنْ رُّوْحِىْ فَقَعُوْا لَهٗ سٰجِدِيْنَ
15:29. "அவரை நான் செவ்வையாக உருவாக்கி, அவரில் என் ஆன்மாவிலிருந்து ஊதியதும், 'அவருக்குப் பணிந்துவிடுங்கள்' (என்றும் கூறியதை நினைவுகூர்வீராக)!"
16:102 قُلْ نَزَّلَهٗ رُوْحُ الْقُدُسِ مِنْ رَّبِّكَ بِالْحَـقِّ لِيُثَبِّتَ الَّذِيْنَ اٰمَنُوْا وَهُدًى وَّبُشْرٰى لِلْمُسْلِمِيْنَ
16:102. (நபியே!) "நம்பிக்கை கொண்டோரை உறுதிப்படுத்துவதற்காகவும், (இறைவனுக்கு முற்றிலும் வழிப்பட்டோராகிய) முஸ்லிம்களுக்கு நேர்வழிகாட்டியாகவும், நன்மாராயமாகவும், உம்முடைய இறைவனிடமிருந்து உண்மையைக் கொண்டு 'ரூஹுல் குதுஸ்' (எனும் ஜிப்ரீல்) இதை இறக்கிவைத்தார்" என்று (அவர்களிடம்) நீர் கூறுவீராக!
17:85 وَيَسْــٴَــلُوْنَكَ عَنِ الرُّوْحِ ؕ قُلِ الرُّوْحُ مِنْ اَمْرِ رَبِّىْ وَمَاۤ اُوْتِيْتُمْ مِّنَ الْعِلْمِ اِلَّا قَلِيْلًا
17:85. (நபியே!) உம்மிடம் ரூஹை (ஆத்மாவை)ப் பற்றி அவர்கள் கேட்கிறார்கள்: "ரூஹ் (ஆத்மா) என் இறைவனுடைய கட்டளையிலிருந்தே உள்ளதாகும்; இன்னும், ஞானத்திலிருந்து உங்களுக்கு அளிக்கப்பட்டது மிகச் சொற்பமேயன்றி வேறில்லை" எனக் கூறுவீராக!
19:17 فَاتَّخَذَتْ مِنْ دُوْنِهِمْ حِجَابًا فَاَرْسَلْنَاۤ اِلَيْهَا رُوْحَنَا فَتَمَثَّلَ لَهَا بَشَرًا سَوِيًّا
19:17. அவர் (தம்மை) அவர்களிடமிருந்து (மறைத்துக் கொள்வதற்காக) ஒரு திரையை அமைத்துக் கொண்டார்; அப்போது நாம் அவரிடத்தில் நம் 'ரூஹை' (ஜிப்ரீலை) அனுப்பி வைத்தோம்; அவருக்கு நிறைவான ஒரு மனிதராக அவர் தோற்றமளித்தார்.
21:91 وَالَّتِىْۤ اَحْصَنَتْ فَرْجَهَا فَـنَفَخْنَا فِيْهَا مِنْ رُّوْحِنَا وَ جَعَلْنٰهَا وَابْنَهَاۤ اٰيَةً لِّـلْعٰلَمِيْنَ
21:91. இன்னும், தம் கற்பைக் காத்துக்கொண்ட (மர்யம் என்ப)வரைப் பற்றி (நபியே! நினைவு கூரும்); எனினும், நம் ஆன்மாவிலிருந்து நாம் அவரில் ஊதி அவரையும், அவர் புதல்வரையும் அகிலத்தாருக்கு ஓர் அத்தாட்சியாகவும் ஆக்கினோம்.
26:193 نَزَلَ بِهِ الرُّوْحُ الْاَمِيْنُۙ
26:193. (அல்லாஹ்வின் கட்டளைப்படி) நம்பிக்கைக்குரிய ஆன்மா (வானவர் ஜிப்ரீல்) இதைக் கொண்டு இறங்கினார்.
42:52 وَكَذٰلِكَ اَوْحَيْنَاۤ اِلَيْكَ رُوْحًا مِّنْ اَمْرِنَا ؕ مَا كُنْتَ تَدْرِىْ مَا الْكِتٰبُ وَلَا الْاِيْمَانُ وَلٰـكِنْ جَعَلْنٰهُ نُوْرًا نَّهْدِىْ بِهٖ مَنْ نَّشَآءُ مِنْ عِبَادِنَا ؕ وَاِنَّكَ لَتَهْدِىْۤ اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍۙ
42:52. (நபியே!) இவ்வாறே நாம் நம்முடைய கட்டளையில் ஆன்மாவானதை (-குர்ஆனை) வஹீ மூலமாக உமக்கு அறிவித்திருக்கிறோம்; (அதற்கு முன்னர்) வேதம் என்றால் என்ன? நம்பிக்கை என்றால் என்ன? என்பதை நீர் அறிபவராக இருக்கவில்லை; எனினும், நாம் அதை ஒளியாக ஆக்கி, நம் அடியார்களில் நாம் விரும்புவோருக்கு இதைக்கொண்டு நேர்வழி காட்டுகிறோம்; நிச்சயமாக நீர் (மக்களுக்கு) நேரான பாதையில் வழிகாண்பிக்கின்றீர்.
66:12 وَمَرْيَمَ ابْنَتَ عِمْرٰنَ الَّتِىْۤ اَحْصَنَتْ فَرْجَهَا فَنَفَخْنَا فِيْهِ مِنْ رُّوْحِنَا وَصَدَّقَتْ بِكَلِمٰتِ رَبِّهَا وَكُتُبِهٖ وَكَانَتْ مِنَ الْقٰنِتِيْنَ
66:12. மேலும், இம்ரானின் புதல்வியான மர்யமையும் (அல்லாஹ் உதாரணமாக்கினான்); அவர் தம் கற்பைக் காத்துக்கொண்டார்; நாம் அதில் நம் ரூஹிலிருந்து (ஆத்மாவிலிருந்து) ஊதினோம்; மேலும், அவர் தம் இறைவனின் வார்த்தைகளையும், அவனுடைய வேதங்களையும் மெய்ப்பித்தார்; இன்னும், அவர் (அல்லாஹ்வை வணங்கி) முற்றிலும் கீழ்ப்படிந்தவர்களில் ஒருவராகவும் இருந்தார்.
70:4 تَعْرُجُ الْمَلٰٓٮِٕكَةُ وَ الرُّوْحُ اِلَيْهِ فِىْ يَوْمٍ كَانَ مِقْدَارُهٗ خَمْسِيْنَ اَلْفَ سَنَةٍۚ
70:4. ஒரு நாள் வானவர்களும், (ஜிப்ரீலாகிய) அவ்வான்மாவும், அவனிடம் ஏறிச் செல்வார்கள்; அத்தினத்தின் அளவு ஐம்பதினாயிரம் ஆண்டுகளாகும்.
78:38 يَوْمَ يَقُوْمُ الرُّوْحُ وَالْمَلٰٓٮِٕكَةُ صَفًّا ؕۙ لَّا يَتَكَلَّمُوْنَ اِلَّا مَنْ اَذِنَ لَهُ الرَّحْمٰنُ وَقَالَ صَوَابًا
78:38. (ஜிப்ரீலாகிய) ரூஹும், வானவர்களும் அணிவகுத்து நிற்கும் நாளில், அளவற்ற அருளாளன் எவருக்கு அனுமதி கொடுக்கிறானோ அவரைத் தவிர வேறெவரும் பேசமாட்டார்கள்; அ(த்தகைய)வரும் நேர்மையானதையே கூறுவார்.
97:4 تَنَزَّلُ الْمَلٰٓٮِٕكَةُ وَالرُّوْحُ فِيْهَا بِاِذْنِ رَبِّهِمْۚ مِّنْ كُلِّ اَمْرٍ ۛۙ
97:4. அதில் வானவர்களும், ஆன்மாவும் (ஜிப்ரீலும்) தம் இறைவனின் கட்டளையின்படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர்.